gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:22

முக்குற்றம்! முப்பதம்!

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

முக்குற்றம்!

2435. காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்கள் உள்ளன. அவையாவும் உயிர்களுக்குத் துன்பத்தை தருவன. அதனால் உயிர்கள் தங்களின் உண்மை வடிவத்தை அறியாமல் மாயா காரியமான இருளில் ஆழ்ந்து மயங்கியுள்ளன. காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களிலிருந்தும் விடுபட்டவர் பிறப்பு இறப்புகளை நீக்கினவர் ஆவர். அங்ஙனம் நீங்காதவர் அம் முக்குற்றங்களின் காரியமான மாயையில் துன்புற்று அழிவர்.

2436. காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிப் பாதுகாவலான திருவடி பற்றியிருக்கும் எனக்கு மணியோசை பொன்ற பிரணவத் தொனியினும் பொருந்துவதான ஒளியைத் தலைப்படுதல் இயலும்.

####$

முப்பதம்!

2437. தோன்றிய தீ என்ற பதம் அது என்ற பதத்தை சூழ்ந்திருக்க ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஆகிறாய் என்ற பதமும் என்ற இம்மூன்றோடும் பொருந்தியவன் பிறவி நீங்க அகண்டப் பொருள ஆவான். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பட்டவன் இவ்வுடல் ஒழியச் சிவன் ஆவான்.

2438. திருவருளால் பெறும் நாத உபாசனையில் நின்று பூதம் முதலாகப் பேசப்படும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி வேதம் உணர்த்திய நீ என்ற பதமாதல் உண்மையான நிலையாகும்.

2439. தத்பதம் என்பதும் துவம் பதம் என்பதும் திருவருளால் பொருந்தியிருப்பதும் அசிபதம் ஆகும். எல்லாவற்றாலும் அளவினால் அளவிட்டுக் கூற முடியாத சிவபெருமான், பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்தருளுகின்றான்.

2440. உயிரும் பரமும் அசிபதத்தில் பொருந்தித் தங்கு தடையற்ற சிவமும் கலந்தால் உவமம் கட்ட இயலத பாலும் தேனும் அமுதமும் போன்று அந்த இன்பப் பொருளால் வாய் பேசா மௌனத்தில் திகழ்வதாகும்.

2441. தொம்பதம்- சீவன் தத்பதமாக- பரமாக மாறுவது அசிபத நிலையில் உள்ளது. சிவனை நம்பிய சீவன் சிவத்தன்மை விட்டு பரன் என்ற பேரைப் பெற்றுச் சிவன் ஆகின்றான். மேலான உண்மையுடைய பெருவாக்கியத்தில் அழகிய அசி என்ற பதத்தின் செம்பொருளை உணர்த்திச் சிறப்பு மிக்க நந்தியின் சிவபெருமான் எங்களை ஆண்டருளினான்.

2442. ஐம்பது எழுத்துக்களும் வாக்கின் வடிவான சத்திகள் என்பதை மக்கள் அறியாதவர் ஆவர். அவருள் அறிந்தவர் சிலர் சத்திகளைக் கொண்டே இறைவனை நாடி உரைக்கப்படும் முப்பதத்தால் உணர்த்தப்படும் பொருளில் உணர்வைச் செலுத்தி விந்து நாதமாய்ச் சிவமாய் விளங்குவர்.

2443. நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலைநழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். ஐம்பொறிகள் ஐந்தும் சத்தம் முதலியவற்றை விடப் பரம் ஆகும். இந்த ஐம்பொறி அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே சிவன் அநாதியான நின்மலச் சாத்திரம் முதலியவற்றைக் கூட்டி உயிர்களைப் பக்குவப் படுத்துகின்றான்.

2444. ஆன்மா மேலான நின்மலத் துரியத்தில் நனவு நிலையில் விரியாத காலத்து நின்மலக் கனவு அமையும். இதில் அலையில்லாத கடல் போன்று அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்திடம் பொருந்திய போது அதுவும் நீங்கிய நின்மலத்துரியமே அசிபதமாகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:20

அடிதலை அறியும் நிறம் கூறுதல்!

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

அடிதலை அறியும் நிறம் கூறுதல்!

2425. கால் எது தலை எது என்பதை வீணர்கள் உணர்ந்து கொள்வதில்லை. கால் என்பது குண்டலினி சத்தி. மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்பர். ஒளிவிளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமான சிவத்தைக் காட்ட உயிர் வீடுபேறு அடையும்.

2426. உடலில் அடியானது தலையில் வந்து பொருந்துவதை வீணர்கள் அறியவில்லை. தலை உச்சியிலும் அடி மூலாதாரத்திலும் இருக்கின்றன. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி தலையை அடைந்து பொருந்தும் அறிவை அறிந்த ஞானியர் சிற்றறிவு நீங்கிப் பேரறிவு உடையவராக இருப்பர்.

2427. நிலத்திலும் வானத்திலுமாய் உள்ளும் புறமுமாய்க் கலந்து நின்றவன் எம்பெருமான். அவன் அவ்வவ்வண்டங்களின் வாழும் வன்மை மிக்க அசுரரும் தேவரும் உய்யும்படிதான் பின்னே உலகத்தைப் படைத்தான். அவனது பெயர் நந்தி என்பது. அவன் தன் இரு திருவடிகளையும் என் தலையில்மீது சூட்டினான்.

2428. என் மனத்துள்ளே சிவத்தின் திருவடியுள்ளது. என் உள்ளமும் தன் செயல் அற்று அவனது திருவடியை வணங்கிக் கொண்டிருக்கின்றது. மனத்தின் உள்ளும் வெளியிலும் பரவியிருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தா விட்டால் என் தந்தையை நானும் உணராதவன் ஆவேன்.

2429 .சொல்ல அரிய ஆறு ஆதார ஒளிக்குமேல் பரமாகாயத்தில் என் தலைவனான சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியுள்ளான். உள்ளத்தினாலே எண்ணிக் காண் முடியாத பிரணவத் தெளிவையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவன் திருவடிகளான விந்து நாதங்களை என் தலையில் அணிந்து நின்றேன்.

2430. பதியின் பொருள் விளங்கும் தலையின்மேல் உள்ளத்தை வையுங்கள். திங்கள் கலை விளங்குமாறு செய்து அந்த திருவடியை எண்ணித் துதி செய்யுங்கள். கங்கையாற்றைச் சடையில் அணிந்த உமையொரு பாகன் முத்தியை அளிப்பான். அப்பெருமானை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழுபடுங்கள்.

2431 .சிவனது திருவடிக்கமலங்களை இடைவிடாமல் நினைப்பவரின் உள்ளத்தில் அப்பெருமான் விளங்கித் தன்னை நினையாதவரின் மனத்தில் அவனும் வெறுப்பு அடைந்து ஒளிந்திருந்தான். அங்ஙனம் பக்குவம் செய்பவனே ஆன்மாக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவன்.

2432. உடலில் சிவன் விளங்கும் சகசிரதள்மான தாமரை மலர் ஒன்று இருக்கின்றது. அங்கு வழிபடத் திங்கள் கதிரவன் அக்கினியான மூன்று கண்மலர்க்ள் உண்டு. அவ்வழிபாட்டால் இறைவன் திருவடியாகிய விந்து நாதம் விளங்குவன். அங்கு நிலைத்து நின்று திருவடிகளை வணங்கும் திறம் உடையவர்க்கு இப்பொழுது சிவப்பே/று அடைவர்.

2433. விந்து நாதன் என்ற திருவடியை என் தலையின் மீது வைத்தவனும் ஆணவ மலக்கட்டு நீங்கவே உலகப் பொருளை விரும்பும் மயக்கம் பொருந்திய ஊள்ளத்தில் தளர்ச்சி கெடப் பால்போன்ற வெண்மையான ஓலியைப் பற்றிக் கொண்ட என்னைச் சிவபெருமான் அடிமையாய்க் கொள்ள எண்ணினான். அதன்மேல் அடையும் மேலான பலனகளை என்னால் சொல்ல முடியாது.

2434. தாங்கள் பெற்று வளர்த்த மக்களிடம் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாமல் குணத்தைக் கொள்ளும் பெற்றோரைப் போல் இறைவனும் உயிரின் தன்மைக்கு ஏற்ப வெறுப்பற்ற செயலுக்குப் பொருந்தும்படி ஏற்றுக் கொண்டு தக்கபடி அருள் செய்வான்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:19

பதி பசு பாசம் வேறின்மை!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

பதி பசு பாசம் வேறின்மை!

2405. அறிவு அறிவு என்று கூறப்படும் உயிர் மிகவும் பழமையானது. உயிர்க்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. உயிரைப் பிணித்துள்ள பாசம் பழமையானது. பேரறிவுப் பொருளான சிவம் உயிரிடம் விளங்குமானால் பாசமானது நீங்கிப் பிறவி இராது.

2406. நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் முதலிய் பெருந் தேவர்கள் முதலாக உயிர்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்கள் மூன்று. உயிர்கள் தம் அறிவை விட்டு மலங்களை அகற்றினால் பதியினைப் பற்றி விடாமல் நிற்கும்.

2407. பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடையும் சாலோக சாமீப சாருபம் ஆகிய பயன்கள் மூன்று. அவற்றின் முடிவான ஞானத்தைப்பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் விருப்பம் இன்றி வணங்குங்கள், அங்ஙனம் வணங்கினால் குடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த விளக்கைக் குன்றின்மீது வைத்ததைப் போல் ஒளிபெற்று விளங்குவீர்கள்.

2408. சிவன் ஆன்மாக்களின் ஆணவமல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையும் பொருந்தியவன். பரந்த கதிர்களையுடையவன். இத்தகையவனைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் எண்ணுவர். அங்ஙனம் நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எப்படி. பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் மீண்டும் சீவனை விடுவது எப்படி.

2409. மந்திர ஆற்றலால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாது. அது போன்று ஞானத்தின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் விட்டு மெய்மையைக் கண்டான் மீண்டும் அவற்றை பொருந்தான். தன்னைக் கேவலாவத்தையிலும் சகலாவத்தையிலும் பிணைந்திருந்த பாசத்தை சுட்டழித்து நின்மல் துரியாதீதத்தில் விழிப்பு நிலையில் அந்த உண்மையான ஞானியர் காண்பர்.

2410. ஆராயப்படும் பதியுடன் நன்மை பெறும் பசுவும் பாசமும் எக்காலத்தும் நிலையாய் இருப்பவையாம். எனினும் நித்தியப் பொருளான சிவத்தின் தன்மை இன்னவாறு என்று அறிபவர் ஒருவரும் இல்லை. பசு பாசங்களின் நித்தியத் தன்மையும் அவற்றின் நீக்கமும் அருட்கண்ணால் நாடிய சைவர்க்கு விளங்குமாறு சிவன் அருள் செய்வான்.

2411. கோயிலுள் மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கம் ஆகும். அங்குள்ள வலிய காளை பசுவாகும். அங்கு இடபத்துக்குப் பின்னே உள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.

2412. பதி, பசு, பாசம், என்பனவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ந்து உணர்பவர்க்கு நெறியைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும், பாச ஞானத்தையும் பற்று நீங்கக் கெடுக்கும். பதி, பசு, பாசம் என்பனவற்றைக் குறியீடாகக் கொண்டு தியானித்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறமாட்டா.

2413. பதிப் பொருளான சிவத்தையும் பசுவான உயிரையும் பாசமான மலத்தையும் முத்தி நிலையையும் பசு பாசம் நீங்கும் வகையையும் காட்டி சந்திர கலையில் விளங்கும் சிவம் அறியும்படி துதிக்கும் நூல்களையும் தூய சைவத்தில் வைத்துள்ளான்.

2414. அறிவு வயப்பட்ட விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்று மூன்றுவகைப் பட்டவர்கள் எங்கும் உள்ளனர். இத்தகைய உயிர்கள் எங்கும் இருக்க எல்லாம் அறிந்த சிவன் அவற்றில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறீந்த சிவம் அவ்வற்றின் பக்குவத்துக்கு ஏற்பப் படைகின்றான்.

2415. படைப்பில் தொடக்கம் என்பது பரம் சிவம் சத்தி என்பவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களிடையே பொருந்தி உறக்கத்தில் வைப்பதாகும். பின்பு படைப்புக்குரிய தற்பொருளான சிவம் சங்கற்பத்தினால் செய்யப் படைப்பில் முதல் நிலை சுத்த மாயையிலே அந்த பரத்தில் ஆகும்.

2416. இத்தகைய தூய்மையான உடலை விந்து நாதம் சத்தி சிவம் பரம் ஆகிய அருவுருவத்தில் உள்ள ஐந்தினால் சூக்குமமாகிய ஐந்து தொழிலைச் செய்பவன் சதசிவ முகத்திலான தூய ஈசான மூர்த்தியாகும்..

2417. பொருந்தும் பரசிவம் சத்தி நாதமும் மேலும் பரவிந்து சதாசிவன் மகேசனும் இன்னும் உருத்திரன் திருமால் நான்முகன் ஆகிய ஒன்பது நிலைகளும் உலகத்தில் விளங்கும்படி படைப்பவன் அரன் என்னும் சிவமே.

2418. படைத்தலும் காத்தலும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழ்கின்ற போது விளங்க அருளாலும் உட்லை விட்டபின்பு நிகழும் அருளாலும் எனச் சிவபெருமான் சகலர்க்கு இணைந்த அநாதியான தொழிலை ஐந்து எனக் கூறலாம்.

2419. முப்பத்தாறு தத்துவங்களையும் குண்டலினி சத்தியில் தொடர்பாக்கி மேலான மாயையில் சிவ தத்துவம் வித்தியாத் தத்துவம் ஆன்ம தத்துவம் என மூன்று பகுதியாக்கி இறுதியாய் ஆனம தத்துவத்தில் உயிர்களுக்கு கருவிகளையும் வகுத்து தன்மையால் வேறான பதிப் பொருளால் பசு பாசத்தினின்று மீளும்.

2420. பதியானது பசுவிடம் பாச பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும். அதனால் இரு வினைகளைச் செய்யும் படி ஆழ்த்தும் அங்குச் செய்யும் வினையின் பயன்களாகிய பாவபுண்னியங்களான நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் அனுபவிக்கும்படி செலுத்தும் நாள் ஆக் ஆக நான் என்னும் ஆணவம் மட்டும் பொருந்தி நிற்கும்.

2421. பொருந்திய பாசமான மாயையில் தனுகரணங்களுடன் கூடி அவற்றையே தான் என்று எண்ணியிருப்பது ஆணவம் அத்தகைய மயக்கம் கெடவே இறைவன் உயிர்களை மாயையுடன் பொருந்தி வைத்தான். ஆணவ வலி குன்றிட அறிவுடைய ஆன்மாவின் புலப்பட்ட நாதசத்தியே சிவபொருமானின் திருவடிகளை அடைவதற்கு உரிய வழிகளாகும்.

2422. நாத வழிபாடு உயிர்களுக்கு வினைகளை ஊட்டிக் கழித்துச் சிவபோகத்தை அனுபவிக்கும் உபாயம் அல்லாமல் ஆணவ மலமான உயிர்குற்றம் நீங்கி அவா நீங்கித் தூய்மையன ஆவதற்கும் இதுவே மூலமாகும். அழுக்குத் துணியை மேலும் அழுக்காகவுள்ள உவர் மண் முதலியவை தூய்மை செய்வது போல் இறைவன் உயிர்களுக்குப் பாசத்தைச் சேர்ப்பதெல்லாம் பாசத்தைப் போக்குவதற்கே ஆகும்.

2423. பாசத்திலே உள்ள உயிர் கூட்டமே பரம் முதலாகும். பாசத்தில் கட்டுப்பட்டிருக்கும் உயிரே பசு எனச் சொல்வர். பாசத்தைப் பயிலும் போது சிவமே தற்பரமாகிய நாதமாக விளங்குவதால் அந்த வழிபாட்டால் பசு பதியாக ஆகும்.

2424. சனகர் முதலிய முனிவர் நால்வரும் வேதப் பொருளின் உண்மைக் குறித்து தட்சிணாமூர்த்தியை வினவினர். அவர்க்கு அருள் மேனியை உடைய பெருமான் சுட்டுவிரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி அவர் கேட்டவற்றின் பொருளை ஞான முத்திரைகளால் உணர்த்தினர். சின் முத்திரையின் நுண்பொருளை அம்முனிவர்கள் உணரவில்லை. ஆதலால் அவரது தலையைத் தீண்டி தீட்சை செய்தாய். அவர்கள் அம்முத்திரையை உணர்ந்து தம் உண்மையான ஒளிவடிவில் நிலை பெற்றுத் திகழ்ந்தனர்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:17

ஆறந்தம்!

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#####

ஆறந்தம்!

2370. மறையின் வடிவான உபநிடதங்களின் கூற்றும் மேன்மையான சித்தாந்தமான சிவாகம முடிவும் நாத தத்துவத்தின் முடிவும் கூறத்தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும் முதலாவதான நிவிருத்தி முதலிய கலைகளின் முடிவும் என்ற இவை ஆறு அந்தங்கள் ஆகும்.

2371. ஆறு அந்தங்களையும் தம்மில் கொண்டு அறிபவர் மேலான சுத்த தத்துவத்தை உணர்ந்தவர் ஆவார். மலம் அற்றவர் தாம் ஆறு அந்தங்களையும் அறிய இயலும். இவ்விதம் கூறப்பெற்ற ஆறு அந்தங்களையும் அறியாதவர்க்கு உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிய முடியாது.

2372. நான் முழுமுதற்பொருள் என்னும் வேதாந்தமும் நான் சிவம் என்னும் சித்தாந்தமும் நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது உண்மை வடிவான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம் அபரமாக விளங்கும் சிவத்துடன் சேர்வதாய் ஆன்மா தன் மலங்கள் அகற்றி எட்டுப் பேரும் சித்திகள் அடைவது பயனாகும்.

2373. உயிரானது சிவத்துடன் பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும், சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்ற புலன்களின் உண்மையை அறிந்திட்டுச் சுத்தமாயை அசுத்த மயைகள் பற்றாவகை நினைத்துத் தலைவனான முழுமுதற் பொருளை அடைவதே சித்தாந்த நெறியாம்.

2374. பொருந்தும் நானமுகன் திருமால் உருத்திரன் ஆகியவருக்கு மறைப்பையும் அருளையும் செய்யும் மகேசன் சதாசிவன் ஆகியோருக்கும் அப்பால் மிக்கு விளங்கும் பரவிந்து பரநாதம் முதலிய நீங்காத முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு நீங்கும்போது ஆன்மா ஒன்றே இருப்பதாகும்.

2375. முப்பத்தாறு தத்துவங்களால் பிணிப்பைத் தெளிந்து அழித்து நாதாந்தத்தைக் கடந்து மேல் உள்ள ஆணவம் என்ற இருளும் நீங்கிடச் சிவத்துடன் ஒன்றிய உணர்வாகப் பொருந்தி நிற்பின் இகழ்வு இல்லாத நாதமுடிவில் அறிவு பொருந்தும்.

2376. ஞானியரால் உணர்த்தப்படும் இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புக்களை உடைய அட்டாங்க யோக நெறியில் சென்று நீங்கி சமாதியில் பொருந்தி அங்குள்ள சிவத்துடன் பொருந்திடச் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுகளை நீங்கிய போது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும்.

2377. சித்தாந்தக் கொள்கையில் கூறப்பெறும் கலாந்தத்தை ஆராயின் நீங்குகின்ற நிவிருத்தி முதலிய கலைகள் உள்ளனவாகிய விந்து சத்தியில் ஒடுங்கியிருத்தலும் தெளிவாய் ஆராய்ந்து அதைத் தெளிவு பெறுதலும் ஆகும்.

2378. முன்பு தெளிந்த நிவிருத்தி முதலிய கலைகள் மேதை முதலிய சோடசக் க;லைகள் அன்றி ஆராயும் ஐங்கலைகள் வேறு ஒளியில் அமைந்திருப்பனவற்றை அறியவல்லார்க்கு அருளையுடைய சிவனது மந்திர தந்திரமும் தெளிவு உபதேசமும் ஞானத்துடன் ஐந்து பிரிவில் அடங்கும் என்பதை உணர்க.

2379. ஆகமங்களும் வேதங்களும் பழமையானவை. தந்திரக்கலை அந்நூல் கூறும் சடங்குகளைச் செய்து அவற்றின் பயனை எதிர் நோக்கியிருப்பது உடல் அல்லாத பழைய மந்திரத்தை விளக்க முடியாததாகும். இதுவே சிவத்தை விளக்கும் அறிவும் உபதேசமும் ஆகும்.

2380. சிவஞானக் கலை என்பது பேரொளியில் பிழம்பாய் உள்ள சிவம். எனவே இதுகாறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கமும் அன்பும் மறையும் சிவகலையின் இறுதியில் தன்னை வேறாகக் காணும் உண்ர்வை விட்ட ஞானியர் சொல்லுக்கும் உள்ளத்துக்கும் எட்டாத சிவம் ஆவார்.

2381. சீவன் சிவமாகும் தன்மையை அடைந்தால் பயிற்சியாலான கலாந்த நாதாந்த யோகாந்தமும் மற்றப் போதாந்த வேதாந்த சித்தாந்தமும் ஞானமாக அமைய அந்தச் சிவமே சீவனாய் விளங்கும்.

2382. ஆறு அந்தங்களும் நேயப் பொருளில் போய் அடங்கி விடும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் பொருளான சிவத்தில் காண்பவனான சீவன் அடங்கும். மற்றத் தத்துவங்களை விட்டு நிற்க. தெளிந்து பிரணவ யோகத்தில் உண்மையான சிவானந்தம் ஏற்படும்.

2383. உண்மையான ஆறு அந்தமான கலைகளும் பிரணவத்தின் உருப்புகளான அ, உ, ம, விந்து, நாதம் என்பவனவற்றுள் அடங்கும்.. உண்மையான கலாந்தமான இரண்டுல் சிவ தத்துவம் ஐந்துடன் வித்தியாதத்துவம் ஏழும் முடியும். உண்மையான சிவகலை ஒருமித்து முடிவான நாதாந்தத்தில் உண்மைக் கலையைச் சொன்னால் அஃது முடிவை அடையும்.

2384. ஆன்மாக்களை இயக்கும் சத்தியான குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின் அநேகமானவரை நடத்தும் எம்பெருமையுடைய அச்சிவனின் திருவடிகளை முடிமேல் சூட்டி அழிவில்லாது வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதாந்தத்தால் உணர்த்தியருளிய சிவ குருநாதனை எண்ணியிருங்கள்.

2385. வணங்குபவரின் வழிபாட்டுக்கு ஏற்பச் ச்வபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறும் உண்மைச் சமயத்துக்கு ஏற்பப் புறம்பாய் இருக்கும் மாயை மகாமாயை என்பனவற்றைச் கடந்ததே வேதாந்தம் சித்தாந்தத்தால் உணர்த்தப்படும் உண்மையாகும்.

2386. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் வேற்றுமை இல்லாத ஒரு தன்மை உடையவை. ஆன்ம அறிவே முடிவான ஞானம். யோகாந்தம் பொதுவாக ஞேயப் பொருளைக் காட்டும். நாதாந்தம் ஆனந்தமாய் இன்பத் தோற்றம் தருகின்ற ஒளி ஏற்படும். பழமையான முத்திரையானது பிரணவ சமாதியில் பொருந்தியிருக்கத் தக்கது.

2387. வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்க நாதாந்தத்தின் பசுத்தன்மை கெடும்படியான தொம்பதம் (உயிர்) பொருந்தும். மேல் உள்ள காரண உபாதிகளான ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவான தற்பதம் (சிவன்) ஆகும். பின்பு இவ்விரண்டான தன்மைகளும் நீங்கி ஒன்றான அசிபதம் பொருந்தும்.

2388. ஏழு அண்டங்களையும் நீங்கி அப்பால் விளங்கும் பேரொளிக்குள் இருக்கும் ஒளியினை பழமையாய்ப் பொருத்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தன் வடிவ நிலையில் தனியாய் விளங்கும் எம் தலைவன் ஆவான்.

2389. சிவத்தை உணர்த்தும் நாதத்தை இலட்சியமாகக் கொண்டு தெய்வத்தால் அருளப்பட்ட செயலையே தம் செயலாய்க் கொண்டு செய்து தோத்திரப் பாடலைக் கொண்டு வழிபட பிரணவத்தின் உறுப்புகளாகிய அகர உகர மகர விந்து நாதங்களைக் கடந்து இவற்றை அடக்கிய சிவம் அமையும்.

2390. ஒருவனாக உள்ள சிவத்தை நினைக்கமாட்டார். உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்தமாயை என்னும் காரணம் இவற்றால் கட்டுண்டிருப்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெருமானே இவை யாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை அழியும்படி செய்து அருவமாய் நின்று யாவற்ருக்கும் ஆதாரமாய் உள்ளான்.

2391. சிவபெருமான் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான். அவர்கள் பக்குவம் அடையப் பலசத்திகளை அவர்களின் ஆன்மாவிடம் பொருந்துகின்றான். வன்மையுள்ள சிவ சங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாத போது அந்தச் சத்தியின் செயல் நீங்கச் சிவானந்தம் உண்டாகச் செய்வான்.

2392. வேதாந்தத்தில் சொல்லப்படும் தொம்பதம் பசு என்னும் ஆன்மாவைக் குறிக்கும் என்பர். நாதாந்தத்தின் பசுத்தன்மை இயல்பாய் நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவான தத் என்ற் சொல்லாகும். சீவன் சிவன் என்னும் இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாய்ச் சிவசாயுச்சியம் என்ற அசிபதமாகும்.

2393. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் சீவன் சிவமாதலைப் பற்றி உரைக்கும். நன்மையற்ற நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் என்ற நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவ மூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தல் முதலிய தொழில்கள் முடிவுற்று ஒன்றாகுமானால் வியப்புக்குரிய வேதாந்தாம் ஞானம் தரும் சித்தாந்தம் ஆகும்.

2394. சித்தாந்த சைவத்தில் சீவன் முத்தி நிலை கை கூடுவதால் சித்தாந்த சைவ நெறியில் நிலைத்து நிற்பவர் முத்திநிலை –சிவப்பேறு பெற்றவர் ஆவார். சித்தாந்தம் வேதாந்தம் இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தலே. ஆதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும்.

2395. சிவத்தை பரமாகவுள்ள சீவனின் உள்ளாகவும் வெளியாகவும் விளங்கும் குற்றம் அற்ற வேதாந்த நெறியும் சித்தாந்த நெறியும் என்று ஆனால், தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமேயாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைபிடிப்பவர் சிறந்த தத்துவ உணர்வுடையோர் ஆவர்.

2396. ஆன்மா நிறைந்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவம் உடையவனவாயும் உருவம் அற்றவனவாயும் உள்ளன். இவற்றுள் விந்து நாதம் ஆகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவர். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப்பொருளாகும். இந்த நிலையை அடைவதே சிவ சாயுச்சியம் ஆகும்.

2397. வேதங்களும் ஆகமங்களும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்ற உண்மையை விளக்கும் நூல்களாகும். வேதம் பொதுவாகவும் ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப்பட்ட அவற்றின் முடிவுகள் வெவ்வேறானவை எனச் சிலர் மொழிவர். தத்துவத்தால் உணர்ந்த சான்றோர்க்கு இவற்றுள் வேறுபாடின்மை விளங்கும்.

2398. பரமான சீவன் பெறும் சிவானந்தம் எல்லாம் மேலான ஆனந்தமாகும். மேல் மூன்றாயுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மாவும் சாம்பவி கேசரி முதலான முத்திரைகளால் அடையும் ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தமும் ஆகியவற்றைப் பெற்ற உள்ளம் அழகுடையதாகும்.

2399. கலாத்தமாவது மேதை முதலிய பதினாறு கலைகளும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளுமாகும். நாதந்த நிலையில் அகர் உகர மகர விந்து நாதம் என்ற ஐந்தாகும். ஆதலில் அரனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை முடிவு செய்வதனால் பற்றிப் பஞ்சாந்தகன் அவன் என்று அவனே வேதங்கலிலும் ஆகமங்கலிலும் மொழிந்துள்ளான்.

2400. பஞ்ச கலைகளின் முடிவு வேறாகும் என எண்ணாது எல்லாம் ஒரே முடிவை உடையன என்று சித்தாந்த வேதாந்த நெறிகளில் தலைப்பட்டு நின்றால் யோகத்தின் முடிவுகள் சமாதி அமையும். அங்ஙனம் அமைந்தால் வானத்தை இடமாகக் கொண்டு நடிக்கும் கூத்தப் பெருமான் திருவடியை அடைவான்.

2401. சிவனின் திருவடியைப் பொருந்தும் பழமையான சீவன் ஐந்து மலங்களும் கெட்டு அநாதியாய் உள்ள ஆன்மாவின் சுட்டநிலை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவ வடிவு கொள்ளும். தன் ஆதி மலமான ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருப்பதைப் போன்று சீவன் சிவமாதல் வேதாந்தம் கூறும் உண்மையாகும்.

2402. உயிரையும் பரனையும் மேன்மையான சிவனையும் மய்க்கம் நீங்கிய நான் அதுவானேன் என்னும் வாக்கியப் பொருளாக உணர்க. அதனால் சுட்டியறியும் தன்மை கெட்டு அறிவாகிப் பேரறிவுடன் அடங்கி நிற்பதே மயக்கம் அற்ற சித்தாந்தம் என்க.

2403. நிலையான் அகண்டப் பொருளான அது நான் என்ற பாவனை அந்தணர் சிறந்ததாகக் கொண்டு ஒழுகும் சிவயோகம். இதனையே தான் சித்தாந்தம் பாவிக்கச் சொன்னது. ஆதலால் சிறந்த வேதத்தால் ஆராயப்பட்ட பொருள் செறிவு உடையது ஆகமநூல் ஆகும் என்பது விளங்கும்.

2404. வேதம் காலத்தால் ஏற்பட்டது. ஆகமம் முழுமைத் தன்மையுடையது, ஆன்மாக்களுக்குத் தலைவனான இறைவன் அருளியவை இரண்டுமே ஆகும். பழமையான வேதம் படிப்படியாக வந்து மிக மேம்பட்ட வேதாந்தமும் சித்தாந்தமும் ஆகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:15

அறிவுதயம்!

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#####

அறிவுதயம்!

2355. ஆன்மாவான தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களுடன் பொருந்தி மயங்க வேண்டிய நிலை வராது. தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களுடன் பொருந்திப் பிறவியில் சிக்கி வருந்துகின்றது. கருவி கரணம் இல்லாமல் தானே எல்லாவற்றையும் அறிய வல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகவர் வணங்கும் படியான சீவ வடிவமாகத்தான் இருந்தான்.

2356. அறிவு பெற்ற ஆன்மா அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க நான்முகன் அரி முதலான தேவர்கள் அனைவரும் வணங்க அரியணையில் சிவபெருமானே வீற்றிருக்கின்றான் எனக் கருதி சங்கால் ஆன வளையலும் கால் சிலம்பும் ஓசை எழுப்ப மிக்க கூந்தலை உடைய பராசத்தியும் தேவர்க்கும் பிறர்க்கும் அருளுவாயாக என சொன்னாள்.

2357. எதையும் கருவி கரணம் இல்லாமல் அறியும் ஆற்றல் எனக்கு உண்டு என்பதை நான் அறியாதிருந்தேன்.. இத்தகைய என்னை என்னுடைய இயல்பான வடிவம் அறிவு தவிர வேறு இல்லை என்று அவன் அருளால் உணர்த்தினான். நான் அறிவு வடிவானவன் என்பதை அவனது சத்தியால் உணர்த்தப்பட்டபோது உணர்ந்து நான் அறிவு வடிவை உணர்ந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.

2358. அறிவு வான் மண்டலத்தில் நுண்மையாய் உள்ளது. ஆதலால் அது எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப்படுவது இல்லை. அதனால் அதற்கு வளர்ச்சியும் இல்லை. ஆன்மா என்ற அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையே அல்லாமல் வேறே ஆதாரம் இல்லை. ஆதலால் அருவுருவான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகின்?றது என்று வேதமுடிவுகளான உபநிடதங்கள் கூறுகின்றன.

2359. ஆதார் கமலங்களில் சிறந்த அனாகதச் சக்கரத்தின் மீது பரந்த விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன. தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி விசுத்தி சக்கரத்தை கடந்து பேரறிவாய் அதனுடன் கலந்து விளங்கும்.

2360. சிவ சிந்தனையில் இடைவிடாமல் நிற்பவரிடம் வந்து சுத்த மாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படும் அவனை நினைத்தேன். அந்த முதல்வனும் பொன்னொளியில் சிறந்து விலங்கினான். அப்பெருமானின் நிகர் அற்ற புகழையுடைய பொன்னார் மேனியனைக் கூடி நின்றேன். அவனும் நீ பெரியவன் என்று அருள் கூர்ந்தான்.

2361. ஆன்ம அறிவு என்பது பேரறிவின் வயமானது என்று ஊர்ந்து அதனிடம் அன்பு காட்டுங்கள். அப்போது அகண்டகாரப் பேரறிவுப் பொருளான சிவமும் உங்கள் அறிவில் பொருந்துவான். உங்களது அறிவு அவனது அறிவால் அறிந்தால் அணிமா முதலிய சித்திகள் யாவும் கைகூடப்பெறும். அப்போது சிவன் உங்கள அறிவைத் தன் அறிவாகக் கொண்டவன் என்பது புலனாகும்.

2362. உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை. பாச அறிவைக் கடந்து சிவஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.

2363. அறிவையும் அறியாமையும் நீங்கியவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றான போது அவ்வறிவாய் அவ்வறிவுள் அடங்குபவனாகச் சிவ அறிவில் நீக்கம் இல்லாமல் நிறைந்தவன் சிவனே ஆவான்.

2364. ஞானியரின் உள்ளமே பரந்த உலகம். அவ்வுள்ளமே செயற்கரிய தவம் நிறையப் பெற்றது. அவர்களின் உள்ளத்தில் ஆதி மூர்த்தி சிவனும் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.

2365. திருமால், நான்முகன், உருத்திரன் என்ற மூன்று வடிவமாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான் தொலைவில் இருப்பவனாகவும் அண்மையில் உள்ளவனாகவும் சுவையான கரும்பானவனாகவும் அமுதமாகவும் நின்று இனிப்பவனாயும் உள்ளான்.

2366. நான் பாச நிலையில் பொருந்தியபோது என் உண்மைச் சொரூபம் ஒளியேயாகும் என்பதை அறியாமல் இருந்தேன். நான் ஒளி வடிவினன் என்று அறிந்த பின்பு என்னை முன்னம் தளைப் படுத்தியிருந்த தத்துவங்களை - இருளை நான் அறியவில்லை. அவ்வாறு நான் என் உண்மை வடிவத்தை அறிந்திருந்தும் என் முதல்வன் என்னுடன் இருந்தே என் நிலையைக் கேட்டுக் கொண்டு உள்ளான்.

2367. பெத்த (மலத்தால் கட்டப்பட்ட) நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தியிருந்தும் விளங்காதபடி மறைந்திருக்கும் ஞான நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் விளங்கி ஒளி பெற்று நிற்கும். அஃது உடம்பிலே இருந்து சூட்டைத் தந்து கொண்டிருக்கும். அத்தகைய செம்மையான சோதிமயமான விளக்கினைத் தேடுகின்றேன்,

2368. சிவம் என்கிற விளக்கை எட்டுத் திக்குகளிலும் மேல் கீழ் என்ற இடங்களிலும் தேடுகின்றேன். இன்பமே வடிவான இறைவனின் திருவடிக் கரணங்களைத் தேடுகின்றேன். பரம்பொருளே தக்க துணை என அதைப் பாடுகின்றேன். நிறைந்த மனத்தால் அந்தப் பரம் பொருளைக் கூடுகின்றேன்.

2369. நான்முகன் படைப்பில் முதலில் படைக்கப் பெற்ற உயிர்கள் பெரிய ஆணவ மலச் சார்புடையவனாக இருந்தனர். அத்தகையவர் அரன் அருளால் அதனை நீக்கி ஆன்மாவான தன்னை அறிந்து பழமையான தலைவனின் திருவடியைப் பொருந்திச் சிவமாம் பெருநிலையை அடையின் பிறப்பு வராது.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:12

நின்மலாவத்தை!

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#####

நின்மலாவத்தை!

2304. வானமான வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியுள் நழுவாது அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வர்.

2305. காற்று தீ நீர் நிலம் வானம் என்ற ஐந்தையும் மகேசன் உருத்திரன் திருமால் நான்முகன் உருவச் சதாசிவர் ஆகியவர் முறையே இயக்குபவர் ஆவார். இவர்களை விட்டு இவர்களுக்குமேல் உள்ள அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி சிவம் அன்னும் ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையவர்க்கு இயமனும் இல்லை. உலகம் பற்றிய எண்ணம் இல்லாமல் திருவடிச் சார்பில் பொருந்தி விளங்குவர்.

2306. ஆன்மாவே சிவகுமாரன் ஆனான் என்று பெரிய மறையானது கூறும் உண்மையை உலக்த்தவர் அறியவில்லை. ஆனால் ஆன்மாவே சிவகுமாரன். நின்மல அவத்தையில் ஆன்மா என்று ஒன்று இல்லை. ஆதலால் இவன் சிவனுக்கு மகன் என்று கூறலாம். அந்நிலையில் இருபத்தைந்து தத்துவங்களும் இல்லை.

2307. ஒளி தோன்றுதல், உலக சிந்தனையற்று அதில் அழுந்துதல் ஐம்பொறிகள் ஓய்ந்து அடங்குதல் என்ற மூன்றும் முறையே நின்மல சாக்கிரம், நின்மலக் கனவு, நின்மல உறக்கத்தில் ஆகும். இவை பொருந்திய சித்துப் பொருளை ஆன்மா தனக்குப் பற்றுக்கோடாக விளங்கும் பேர் உறக்க நிலையில் மிக்க மங்கல வடிவாய் அழியாத பேறு அடையும்.

2308. மாயேயம் ஆகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்கத் தத்துவங்களில் உள்ளும் வெளியுமாகிய சீவ ஒளி தானாய் அது நன்மையைத் தரும் துரியநிலை மேற்கொண்டால் சுத்த ஆன்மா ஆகும். அப்போது அது தீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாமல் தனித்துவிடும். ஆன்மா ஞான வடிவாய்ப் போய் அடைவதற்கு அரிய சிவசத்தியை அடையும்.

2309. தீயிலே காய்ந்த இரும்பு தீயை விட்டு நீங்கினாலும் தீயினது தன்மை இரும்பில் இருக்கும். அதுபோல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிர்கும் நின்மலத் துரியத்தின் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு நீங்காமல் இருக்கும்.

2310. ஞானத்தை அளிப்பதான மறைக்கு ஆதியான நாதம் வெளிப்பட்டு வந்து பிறவற்றைப் புலப்படுத்தும் நனவு நிலையில் இந்த வகையான நாதத்தை கடந்து நாதந்த நிலையில் பொருந்திய போது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மா பரமாகும் என்பதாம்.

2311. நாத வெளிப்பாடு பெற்றுச் சகலநிலையில் நின்மல துரியாதீதத்தில் பொருந்தினால் அத்தகையவரை விட்டு சிவத்தின் அருட்சத்தி நீங்குவது இல்லை. அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு மனம் விரும்பும் உலக போகத்தின் வழிப் போகாது நாதாந்தத்தில் போய்ச் சமாதி அடைந்து சிவத்துடன் பொருந்துவதற்கு திருவருட்சத்தியே முதல் காரணம்.

2312. சிவன் உமை,யொருபாகனாக விளங்குவதால் உல்க உயிர்கள் ஆனும் பெண்ணுமாக இருகூறு செய்தான். அர்த்தநாரியாக ஒன்றாக இருக்கும்போது அவனே என்னை உலக கவர்ச்சியினின்று மீட்டான். அகண்ட வடிவம் ஆக்கினான். எங்கும் போகும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன் என்னை விட்டு நீங்காத அருட் கோலத்தில் தந்தையாய் இருந்தான்.

2313. காற்றாடியின் ஓலையும் கொள்ளிக் கட்டையின் வட்டமும் கடலின் அலையும் அழகு நிறைந்த தயிரின் மத்தும்போல் உயிர் மலத்தால் சுழன்று அங்ஙனம் தத்த, புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் கூடிப் பூமியை அடைந்து வருந்தி இறைவன் அருளை அடைந்தால் பின்பு இறப்பு நீங்கும்.

2314. ஆன்மாவில் சிவம் என்னும் தன்மை வெளிப்பட்டால் பழமையான மலமும் அதனால் அமையும் பாச வேறுபாடும் அதனால் ஆன குணமும் மேலான ஆன்மா தன் உண்மை அறியாது அடையும் தடையும் கதிரவன் ஒளியின் முன் சந்திர ஒளீபோன்று ஒளிராமல் அகன்று விடும்.

2315. நின்மலத் துரியத்தில் சிவ ஒளியால் நுட்ப நிலையில் தீயும் நீரும் காற்றும் உண்டு. கதிரவன் திங்கள் கலைகளும் அங்கே அடங்கியிருக்கும். படைப்புத் தொழிலை ஆற்றும் நான்முகனும் காக்கும் திருமாலும் அழிவைச் செய்யும் உருத்திரனும் தொழில் அற்று அங்கே இருப்பர்.

2316. ஐந்து பொறிகள் என்னும் யானைகளை அடக்கி அறிவாகிய ஞானத் தீயை தூண்டி காணும் ஒளியுள் புகுந்து ஊனால் ஆன உடலைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவவுலகம் ஏற வழி மிக எளிதாம்/

2317. சந்திர கலையில் இயக்கம் பெறும் பிராணனும் அதுபோல போவதால் உண்டாகும் சிறுபறை ஒலியும், ஒலிக்கின்ற வேத ஆகமங்களால் உண்டாகும் ஒலியும் என இடைகலை நாடியில் சகசிரதளத்தில் நான் கண்டு கொண்டேன்.

2318. முன் பிறவியில் ஜானத்தால் பயிற்சி செய்த நல்வினை காரணமாக இப்போது உண்டாகிய பிறவியில் அந்த அறிவு ஒளிபெற்று விளங்கில் தன் இயலபான அண்ட வடிவை அறிய முடியும். இவ்வாறு அறிவதே தன்னை அறிவதாகும். அங்ஙனமின்றிப் பிற அறிவைப் பெற்றால் பேய் போல சொர்க்க நரகங்களிலே அலைந்து பின்பு பிறவி எடுக்க வேண்டியதாகி விடும்.

2319. நின்மலத் துரியத்தில் ஆன்மா உட்கருவிகளின் குறும்பு இல்லாமல் இருந்தால் சிவானந்தம் ஏற்படும். இந்நிலை கைவரப் பெற்றவர் பிரசாதம் முதலிய சிவயோக நெறியைச் செய்யமாட்டார். இவ்விதம் செயல் அறுதலைப் பெற்றவர் உலகத்துடனும் சேர மாட்டார். இவ்வாறு செயல் இல்லாமல் வாளா இருப்பவர்க்கே சிவனருள் கிட்டும்.

2320. ஆன்மா தான் சிவமாம் தன்னை எய்திச் சமாதியிலிருக்கையில் ஆன்மாவைப் பிணித்துள்ள மலம் நீங்கும். அதன் கட்டுப்பட்ட இயல்பு நீங்கும். பிறப்பைத் தரும் புரியட்டக உடலையும் ஒழித்துச் சிவத்துடன் ஒன்றுபவர்க்கு மேலான நிலத்தில் குற்றமற்ற ஒளியுடன் அழியாதிருக்கும்.

2321. ஆன்மாவை விட்டு நீங்காத சிவத்தின் அருட்சத்திப் பதிவால் நாதம் ஏற்படும். அந்நிலையில் ஆன்மாவை விட்டு நீங்காத இருளும் ஒளியும் விளங்க முறையே அவ்வான்மாவும் நீங்காத கிரியையிலும் ஞானத்திலும் தங்கி மாளாத பெத்த நிலையிலும் முத்தி நிலையிலும் அருட்சத்தியுடன் தோய்ந்து விளங்கும்.

2322. இங்ஙனம் பெத்தத்திலும் முத்தியிலும் தொடர்ந்து உதவும் சத்தியை உயிரானது முறையே மயங்கியும் விளங்கியும் உணரும். அவ்வாறு அந்த உயிர்களுகுச் சத்தியால் அளீக்கப்படும் அறிவே ஆன்மசத்திக்கு நல்ல துணையாகும் அப்போது அந்தச் சக்தியே நிலையில்லாத சீவர்களின் ஒளிக்கு ஒளியைத் தருவதாகும்.

2323. முப்பத்தாறு தத்துவங்கள் அறிவற்றவையாம். அவற்றுடன் பொருந்தி அவையாகவே இருந்த போது நான் எல்லாவற்றையும் அறியும் அறிவு வடிவம் என்பதை அறியாமல் இருந்தேன். சிவத்தை நாடினபோது நீ அறிவின் வடிவம் சடம் அன்று என்பதை நாத சத்தி வழியாக நந்தி எனக்கு அறிவித்தனன். பின்பு நான் வான்மயமாய் என்னையும் தத்துவங்களையும் அறிந்தவன் ஆனேன்.

2324. சிவன் என்னை அவனாகச் செய்த ஞானத்தலைவன். வானவ்ர் கூட்டத்துக்கு முதன்மையானவன். மட்சிமை பொருந்திய சிவந்த ஒளிக் கூட்டமானவன். இத்தகைய சிவனையும் குற்றம் இல்லாத மெய்ஞானத்தின் அருட்சத்தியான நாத சத்தியும் உடல் வடிவு இல்லாதவளுமான சத்தியையும் எனது உடலில் நான் கண்டேன்.

2325. ஒளி என்பதும் இருள் என்பதும் பரை என்பதும் பரையுள் விளங்கும் அருளாகும். ஆன்ம பேதம் சுழன்று அந்த அருளைச் செய்யும் அருட்சத்தியும் தெளிவான அறிவையும் நாத சத்தி உண்டாகிச் சிவானந்தம் உண்டாகும்.

2326. சிவத்தின் அருட்சத்தியில் ஆன்மா தன்வயம் அற்று அழுந்தினால் ஆனந்தம் ஏற்படும். உடம்பைக் கடந்து சாமாதி செய்து உணர்வு மயமாய் உள்ளுணர்வு மய்மாய் உள் உணர்வில் கலந்து அகண்டமாய் விளங்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான ஆன்மாவின் சுட்டறிவு முடிந்துவிடும். இது பெருவாக்கியத்தின் பொருளாகும்.

2327. ஆன்ம ஞானம் இல்லாது தாமத குணம் பொருந்தியவர்களுக்கு ஞானோதயம் செய்ய வேண்டாம். முன்பிறவி காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவ்ர்க்கும் அறிவிக்க வேண்டாம். ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும் அனுபவம் கூடமல் அறியாமையில் உள்ளவர்க்கே தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனுபவம் பெற்றுத் தமது உண்மை வடிவை அறிவார்.

2328. சத்து அசத்து சத சத்து என்னும் மூன்று பொருள்களில் தான் எனப்படும் ஆன்மா மற்றப் பொருளகளுடன் கூடிய அறிவுப் பொருளாகவும் அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் விளங்கும் தன்மை உடையது.

2329. ஆன்மா தானாகவே தனது உண்மை வடிவத்தை அறியாது. ஆனால் அறிவு அற்றவனும் அல்லன் தன் அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்று வடிவத்தை அறிந்த பின்பு அறிவான். ஆனால் இந்த இருநன்மைகளும் அருட்சத்திப் பதிவால் உண்டாக ஆன்மா தன்னையும் அறிந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பத்தை அடையும்.

2330. முப்பத்தாறு தத்துவங்களையும் அவை செயல்படும் தன்மையையும் அறிந்து வாழ்பவர்க்கே தத்துவ ஞானம் வாழ்க்கையில் அமைந்து விளங்கும். அவ்வன்னம் தத்துவ ஞானம் பெற்று ஆன்மா சிவமானால் தத்துவ ஞானத்தவர்க்கு சிவானந்தம் உண்டாகும்.

2331. ஆன்மா தனது பரந்த நிலையை உணர்ந்து அதனின்றும் விடுபட்டுச் சிவத்தை நினைத்து சிவமாகும் பேற்றை அடைந்தால் ஆன்மாவிடம் நின்ற மலமும் அதனால் ஆன குணமும் அழியும் மேல்வரும் பிறவி நீங்கும். பின்பு அந்த ஆன்மா நல்ல மூத்தியும் சன்மார்க்க ஞானமும் நன்மையைத் தரும் ஞானத்தின் அடையாளமும் பொருந்தும்.

2332. சிவனின் திருமேனி ஞானம் ஆகும். கிரியையில் அவன் நடு அங்கமாயுள்ள இதயத்தில் உறைபவனாக இருக்கின்றான். உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருந்த்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்திப் படைப்பு முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமாய் உள்ளதால் பிரணவ யோகம் செய்தவர் அவன் அறிவுடன் பொருந்தி தம் இச்சை கிரியங்களை விட்டு ஞான முத்திரையைப் பெற்றனர்.

2333. உயிர்க்கு உரிய அறிவு சத்தியப் பொருள் உடையது. உயிருக்கு அபிமானம் அதன் விருப்பம் ஆகும். உயிரின் செயல் உயிருடன் பிணிக்கப்பட்ட மாயையின்.அளவாகும். இவை எல்லாம் பரவிந்துவில் நுண்மையாய் இலங்குவன. இவற்றை உயிருடன் புணர்த்தியவன் யாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும். ஆதலால் உயிரின் செயல் அவற்றின் செயலாகாது. உள்ளத்தில் உள்ள சிவத்தின் செயலாகும்.

2334. முன்பு சிவமாம் தன்மை அடைந்து சீவரின் இச்சா ஞானச் செயல்கள் நீங்காத சுத்தாசுத்த மாயை செயல்களால் உண்டாவன. அச்சீவன் பழியற்ற கார்ண காரிய தத்துவங்கள் பாழாக நிலைபேறான சாந்தியாதீதக் கலைகள் விளங்குபவனான சிவம் ஆவான்.

2335. சிவன் நிலையற்ற காரியப் பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான கரணமான பரவிந்துவிலும் யாவற்றிலும் கலந்து தானாகிப் பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதும் அப்பொருள்களின் வேறாயும் உள்ளவன். ஆக அப்பெருமானை வாக்குக்கு அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்கு உயிராய்த் திகழ்பவன் ஆவான்.

2336. உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாய்ப் பொருந்தும்படி செய்யும் சத்தி ஞானமானபோது உயிரின் விருப்பத்தை அழித்து விளங்கும். உயிர்களுக்கு இறைவனிடம் அன்பு ஏற்படச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக் விருப்பங்களை அழித்து மேலான் சிவபதம் பெறும்.

2337. உயிர் விருப்பத்தை வாட்டிச் சிவமாம் பேற்றை பெற்றவர் உயிர்க் குற்றங்களுக்குரிய ஐந்து மலங்களையும் நீக்கியவர் ஆவார். அவ்வாறு சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்குற்றமான ஐந்து மலக் குற்றங்களையும் பொருந்தி இருள் உடையவராய் இருப்பர். இத்தன்மையுடையவர் புவியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராக உள்ளனர். இப்படிப் பிறந்து உழல்வது சிவசத்தியால் என்பதை யாரும் உணர்வதில்லை.

2338. தூய மாயை துவா மாயைகளைப் பொருந்தி அதனதன் இயல்புக்கு ஏற்பப் போக போக்கியங்களை எய்தினர். பெருமையான ஞான சத்தியை அடைந்து அதன் பேறான ஞானத்தைப் பெற்றனர். பெரிய புவி சத்தியின் கவர்ச்சியில் ஈடுபட்டு அதனால் ஆன நன்மைகளை அடைந்தனர். இவ்வாறு பொருந்துவது சிவத்தின் அருளால் ஆகும்.

2339. திருவடி ஞானத்தால் திருந்திய உயிர்கள் இன்பம் அல்லாத நரகத்தை விட்டனர். அவர் இன்பமயமான சொர்க்கத்தையும் விட்டனர். அவர் தம்மோடு பொருந்தியுள்ள மலக் கூட்டத்தையும் விட்டனர். அவர் சிவமாய்ப் பயன் அற்ற பிறவியையும் விட்டவர் ஆவர்.

2340. நல்ல அறிவு இல்லாதவர் எது பயனற்றது எது பயனுள்ளது என்பனவற்றை அறியமாட்டார். அறிவுடையவர் பயனற்றதையும் பயன் உள்ளதையும் பிரித்து உணர்வார். அவ்வாறு பிரித்து அறிவால் தெளிந்தால் சீவர்களுக்கு உண்டான கேடும் நன்மையும் அவனது அருளால் ஆகும் என்பதை உணர்வர்.

2341. அருள் என்ற சிவசத்தி தீயும் அதனை விட்டு அகலாத வெம்மையும் போல் அவன் பொருளாய்த் தான் ஞானமாய்ப் பொருந்தும். ஆன்மாவில் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும்மலங்களாக விரியும். சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவம் ஆகும்.

2342. கதிரவன் தோன்ற வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ வேறுபாட்டுக்கு ஏற்ப அவ்வற்றின் இயல்பு மாறுபட்டு கதிரவனது ஒளிக் கதிர்களால் அம்மலர்கள் தொழிற்பட மலர்ந்தும் மலர்ச்சி புலப்படாதது போல் சத்தியின் அருள் பதவியினால் உண்டாகும் மாறுபாடும் ஆகும்.

2343. கண்டகளில் காணப்படும் உலகை வேற்றுமையாகவும் ஒற்றுமையாகவும் வேற்றுமையும் ஒற்றுமையாகவும் காணும் இயல்பும் இயற்ஐ அறிவும் கல்வி கேள்விகளால் ஆன அறிவும் ஞானமும் நாதமும் நாதத்தை தொடர்ந்து ஆதிநாதம் என்ற நாதாந்த நிலை பெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சாசத்தியின் கருணையாகும்.

2344. பொய்யான யானைப் பதுமையை மனிதன் பொருத்தி ஆட்டும் செயலைப் போன்று பரந்த ஐம்பூதங்களைக் கொண்டு ஆடச் செய்து படைப்பு முதலிய தொழில்களால் புவி சொர்க்கம் நரகம் முதலியவற்றுடன் கூடச் செய்து ஞானம் உண்டாக்ச் செய்தல் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனருட்சத்தியால் ஆகும்.

2345. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மா எல்லா உயிர்களிடம் போக வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடத்தே காட்டுபவனாயும் அவற்றின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான். முன்பு இருந்த மய்க்கம் தேறித் தெளிவுற்று அருட்சத்தி பதியின் சிவம் ஆவான்.

2346. தற்பேதத்தால் அடைவதற்குரிய அரிய திருவடியை முப்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட உணர்ந்து அந்த நெறியிலே போஉ மூலாதாரத்திலிருந்து மேல் ஏறும் வாசி என்ற குதிரையில் ஏறி ஆறு ஆதாரங்கள் கடந்து நிராதாரம் போய்ச் சிவனுடன் அடைதல் கூடும்.

2347. சிவபெருமானைச் சார்ந்தவ்ர்கள் சாரணர்கள் சித்தர்கள் சமாதி பொருந்தியவர்கள். உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவரே. சிவத்திடம் அன்பு பூண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவர்களும் சார்ந்தவரே. நாதமாகிய அருளில் திகழ்பவரும் சார்ந்தவரே.

2348. ஆன்மாவான தான் என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மைப் பொருள் இரண்டு என்று உரைப்பர் சகலர். தான் என்று அவன் என்று இல்லாமல் ஒன்றான தன்மையை அருட் கேவலத்தில் இருப்பவர் தன்னைச் சிவத்துக்கு வேறான பொருள் என நினைக்க மாட்டார். அவாறு ஆன்மா தற்பேதம் கெட்டுச் சிவமேயாகத் தத்துவம் தூய்மை ஆகும்.

2349. தத்துவ தூய்மையுடைய ஆன்மா தன் உண்மையில் தன் தலைவனான சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும். அங்ஙனம் தன்னிடத்தே அதன் உண்மையை அறிந்து பொருந்தின் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைதற்கு அரிதாகும்.

2350. சிவனருள் கிட்ட வில்லையே என்று நீ கவலை கொள்ளாதே. ஞான் நெறியில் நின்று திருவருளைப்பெறும் வாய்ப்புக் கிடைத்தபின்பு கதிரவன் திங்கள் கலை என்று நடத்தியவன் என் உள்ளத்தில் மிகப் பெரிய திங்கள் மண்டல ஒளியாக விலங்குவது போல் உன்னிடமும் விளங்கும்.

2351. மண் என்னும் ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பண்டங்களாக ஆகின்றது. அதுபோல் இறைவன் ஒருவனே எல்லா உயிர் இனங்களிலும் நிறைந்துள்லான். கண் ஒரு பொருளாக இருந்தாலும் உடல் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா. அதுபோல் உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாயும் இருக்கின்றான்.

2352. இறைவன் இந்த எழு உலகங்களையும் உயிர்க்கு உயிராய் நின்று காத்து வருகின்றான்,. மனம் குவிந்த மெய்ஞ்ஞானியர் இந்த உண்மையை அறிந்து உயிர்க்கு உயிராய் எடுத்துச் சொல்வர். சிவபெருமானைப் பற்றி எண்ணாதவர் அவனை அறியமாட்டாது புலம்புகின்றனர். மன ஒருமைப் பாடு இல்லாதவர் சிவனை அடைய முடியாது.

2353. உயிருக்கு உயிராய் இருக்கும் சிவத்தைத் தன் உண்மை எனும் பரவிந்து மண்டலம் வெளிப்படாதபோது அறியமாட்டார். இவ்வாறு தன் உண்மை அறியாதவர் உடம்புடன் கூடிப் பலப் பிறப்பெடுப்பர். சிவன் வேறு தாம் வேறு என்று நினைக்காமல் சிவத்துடன் பிரிவின்றி இறைவனுடன் நில்லுங்கள். அவ்வாறு கூடிச் சுட்டி அறிதல் இல்லாது அதுவே ஆக இருந்தும் அம்சம் ஆகுவீர்.

2354. சிவானந்தத்தை அடைவது எது. உடம்போ. உயிரோ. இவ்விரண்டில் எது. வான் ரூபினியான சத்தியுடன் பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருக்கத் தாம் மிகவும் அறிகின்றோம் எனக் கூறும் மக்கள் மேலும் மேலும் உண்டாகின்ற் பிறப்பு இறப்புகளில் பொருந்தி அவற்றை நீக்க அறிய மாட்டார்.

#####

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

பதினோராம் தானமும் அவத்தை எனக் கானல்!

2299. ஐந்தாம் கலையான் அர்த்த சந்திரனுக்குரிய இடம் புருவ நடு.. விழிப்பு அடைந்தால் அமுத மயமான சந்திரன் ஒளிபெருகும் தலையில் ஆறாம் கலையான நிரோதினி கலையை உணர்ந்தபோது ஆனந்தம் உண்டாகும். விந்து வெற்றி பெறுவதே பிரணவம் ஆகும். பன்னிரண்டாம் கலையாகிய உன்மனையை விளங்கச் செய்யாமல் ஆன்மாவை உடல் பொறிகளின் வழிச் செலுத்தும் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள குண்டலினி சத்தியேகேட்டு அருள் செய்வாயாக.

2300. புருடனுடன் அருவமான சிவதத்துவம் ஐந்துமாக அறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதம் ஆகும். உறக்க நிலையில் புரியட்டக உடல் நுண்னுடல் விரிந்து விளங்கும்.. கனவு நனவு நிலைகளில் அரிய வித்த்யா தத்துவம் எழும். அந்தக் கரணம் நான்கும் பொருந்திய நிலையில் அமையும்.

2391. பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும். இவற்றைச் செய்ல் படமல் அழித்திட்டால் சிவம் விளங்கும். அந்தக் கரணங்களின் வழியாகச் சென்று அலையாது நிற்பதே முறையாகும். என நீ உணர்வாய். பின்பு சிவத்தின் வழி நிற்பதே உறுதி தரும் என எண்ணுதல் நன்மை தருவதாகும்..

#####

கலவு செலவு!

2302. கேவலாவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களுடன் கலந்தால் அது சகலாவத்தையைப் பொருந்தும். கருவி கரணங்களை விட்ட போது அச்சகலம் பிரிதலைப் பொருந்தும். இந்த இரண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட வடிவத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதலில்லாத தீமை நீங்கும் சாக்கிராதீதத்தில் ஆன்மா பொருந்தியிருத்தலே தூய நிலையாகும்.

2303. மூன்று குற்றங்களில் ஒன்றான சினத்தை முடிகின்றவரையில் அடக்கிக் கொண்டிருங்கள். உங்கள் உள்ளத்தை இயன்றவரை இறைவன் நினைவில் நிறுத்துங்கள் இரவும் பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தின் கல்போல் உறுதியான பசமான இருள் அகலும். பரமாகாய மண்டல ஒளியில் இருப்பீர்கள்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:08

முக்குண நிர்க்குணம்! அண்டாதிபேதம்!

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!

#####

முக்குண நிர்க்குணம்!

2296. பல நிலைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவிகக்குணம் பொருந்தும். கனவு எனப்படுவது அதற்குரிய இராசத குணம் பொருந்துவதாம். கருவி கரணங்களையும் செயற்படாது வைத்திடுதல் தாமதகுணம் பொருந்திய உறக்கம் ஆகும். ஐம்பொறிகளையும் உபகர்ணங்களையும் செயற்படாமல் அழித்திடும் நிலையே குற்றம் இல்லாத துரியம் ஆகும்.

#####

அண்டாதிபேதம்!

2297. அண்டத்தை இருக்கையாகக் கொண்டு அதன்மேல் வீற்றிருக்கின்றான் தேவர் தலைவன் சிவன். விரும்பிப் பெரும் பேரண்டத்தில் வேறு வேறாக உள்ள அண்ட கோசங்களில் அலை வீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் ஒளிர்வான்.

2298. அண்ட கோசத்துக்குரிய ஆன்மா அண்டத்தை இருக்கையாககொண்டு ஆனந்தமாகத் தத்துவம் கடந்து உள்ளான். அந்த ஆன்மனுக்கு உதவும் பொருட்டாகச் சத்தியானவள் ஐந்தாக அண்டத்துள்ளே முப்பத்து ஆறு தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தில் எட்டு மடங்கு அளவு கொண்டதாகவும் விளங்குகின்றது.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:07

பராவத்தை!

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி

#####

பராவத்தை!

2269. ஐந்து சிவதத்துவத்தையும் கடந்த நிலையில் உள்ள அநாதியான பரமே தெய்வம் ஆகும். இதுவே எல்லாரின் மனமண்டலத்தில் பொருந்துவதாய் மலம் அற்றதாய் பிறப்பில்லாததாய் உள்ளது. இஃது அகண்டப் பொருளான படியால் உடலினுள் இருந்த உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.

2270. பராசத்தியே அசுத்தமாயை. அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்தி கலையில் உள்ளது. மேலான ஆனந்த நிலையில் அந்தச் சத்தி ஒளிமயமாய் உள்ளது. அந்தச் சத்தியே அசுத்த மாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளான ஐந்துடன் சீவன் உடலால் பெறும் பயனுக்கு காரணமாகவும் இருக்கின்றது.

2271. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிபவரே அறிபவர். அவ்வாறு கடந்த நிலையில் அவர் சத்தியில் அருளைப் பெறுபவர். அதனால் அவர்களுக்கு அங்கு எல்லா அறிவும் உண்டாகும். அப்போது அவர் சிவனோடு இனிதாகப் பொருந்தி யிருப்பார்.

2272. ஞனேந்திரியம் ஐந்தும் அந்தக் கரணம் நான்கும் தத்தம் செயல் மடங்கி உள்ளத்தில் அடங்க ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடையும் ஆறிவுமயமான ஆன்மா சிற்சத்தியுடன் நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிறபதில் இன்பத்தை அனுபவிக்கும்.

2273 நின்மல சாக்கிரத்தில் அமைகின்ற துரியமே சீவனது சுத்த நிலையாம். அத்தகைய பெருமைமிக்க தூய நிலையில் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றையும் விரைவாய் கடக்கவே நின்மலத்துரியத்தில் சீவன் பரனாகும். சீவன் எனவும் சிவன் எனவும் என்றும் அறியாத மேல் நிலையில் அச்சீவன் சிவம் ஆவான்.

2274. நின்மலச் சாக்கிரதத்தில் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும். இவ்வகையான அதிதீதத்தில் பலகால் பழகப் பழகப் பரம் பொருந்தும். இங்ஙனம் நிட்டையில் பொருந்தி அதிதீததை அடையாதவர் பரம் ஆகமாட்டார். அத்தகையவரை விட்டுப் பாசமும் அதனால் ஆன பற்றும் நீங்கமாட்டா.

2275. ஆராய்ச்சியினால் அறியப் பட்டபோது மாயை உடலில் உள்ளும் புறமுமாய் பொருந்தியிருக்கும் நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மய்க்கம் நீங்கினபோது தூய அறிவு சிவானந்தமாய் மேலே நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைந்தது தானே.

2276. துரியம் என்ற குதிரைமீது இருந்த சீவனை மென்மையான பரவத்தையில் புகும்படி செய்து இந்திரியங்களான நரிகளை விரட்டிய நாதத்தைத் தரிசனம் செய்த அடியார்க்கு உரிய வினைகள் தளைப்படுத்தப் பட்டமையால் நின்று ஓலம் இட்டன.

2277. சாக்கிரத்தில் அதிதீதம் செய்யும்போது பரந்த பூத நாயகனான இறைவன் சீவனுடன் கலந்து நிற்பான். இறைவன் சீவனுடன் பொருந்தி விளங்கும் போது மாயையான இருளானது விலகி விடும். அப்போதே சீவனும் சிவனைப் போல் அகண்ட வடிவை அடைவான்.

2278. விழிப்பு நிலையில் உலக நோக்கில் மனம் விரியின் மாயா காரியமான உலகம் விளங்கும். அப்போது வன்மை மிகுந்த மாயை இருந்த இடத்தில் இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரைப் பற்றிக் கொள்ளும். ஆனால் சீவன் சிவப்பேற்றை அடையும் வகையில் சிவத்தைப் பற்றி மேலே செல்லின் சிவமாகும். மாயையுடன் கூடிய துரியத்தில் மாயையின் தீமை அகலாது.

2279. நீ ஆன்ம ஒளியை அறியாமல் உடல் அறிவுடன் முன்பு நின்றாய். பின்பு ஆன்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய். தன் இயலபை அறிந்தும் சிவப் பரப்பில் பொருந்த வில்லை என்றால் பிறவியானது நீங்காது. அவ்வாறு சிவத்தின் பரப்பில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.

2280. கருவில் எல்லைக்கு கட்டுப்பட்டது துரியத்தில் உள்ள நுண்ணிய வித்தியா தேகம். பிறப்புக்கு உரிய காரணம் அகற்றப்படாதவரை நுண்மையும் பருமையும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் அகப்பட்டு பொருந்தும் அருளைக் கூடியவர் நுண்மையான வித்தியா உடலையும் பருவுடலையும் விட்டுச் சிவதத்துவத்தில் சிவத்துடன் ஒன்றாவர்.

2281. ஆன்மாவில் நின்மல சாக்கிரம் என்ற நனவு நிலையும் அதன்வழி ஏற்படும் கனவும் அதைக் கடந்து அதிகமான ஒளியில் அழுந்தித் தன்னை மறந்த நிலை உறக்கம் ஆகும். அந்தச் சுழுத்தியும் கடந்தவர் மேலான துரியத்தில் ஆன்ம தத்துவங்களைக் கைவிட்டுப் பரம் என்ற பெயரை அடைவர்.

2282. பரை ஒளியான சாக்கிரம் பரவி விரிந்த தூல நிலை கெட்ட கனவும் உண்மையான் சாந்தியில் ஏற்படும் பரை உறக்கமும் நீங்கில் சிவதுரியனாக உயிர் விளங்கும்.

2283. பராவத்தையில் அமையும் நின்மல சாக்கிரத்தின் பின்னான உலகம் காட்சிப்படாது ஒளியில் நிலைப்பெற்றுப் பொருந்தும் கனவும் அதன்பின் உண்டாகும் நின்மல சுழுத்தியில் சுட்டறிவும் நீங்கி உபசாந்தம் பொருந்துவதே துறவு நிலை. அதன்பின் தான் அந்த நிலையில் தங்கியிருப்பவனே சிவத்துடன் கலந்திருப்பான்.

2284. சீவன் துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் இறுதியாக பத்து நிலைகளும் நீங்கும். மேலான சிவத்தின் நிறைவில் அடங்கியிருந்து அந்தக் கரணம் நான்கையும் அமைந்த வித்தியா தத்துவம் ஏழையும் விட்டு நின்ரான்.

2285.. எல்லாவற்றிலும் மேலாக விளங்குபவன் சிவன் அதனைவிட மேலானது பரமம். இது மேலானவற்றுக்கெல்லாம் மேலானது. அந்த இறையானது நினைவாக விரிந்து காட்சி தந்த சுகத்தை சூக்குமமாகப் பெற்ற கனவு நிலையை விட்டுப் பொருந்தும் பிரமரந்திரம் சீவனுக்குப் பற்றுக்கோடாக உபசாந்தம் அளிக்கும். இதன் மேல் மேலான சிவம் உண்மைக் காட்சியாம்.

2286. ஆராய்வோமானால் உயிர்களுக்குப் பற்றுக் கோடாக அருகில் நிலைகளான பரம், சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும் உருவ மூர்த்திகளான நான்முகன், திருமால், தேவர் தலைவனான உருத்திரன், மகேசனும் எனப் பத்துபேர் உள்ளனர்.

2287. சொல்லப்பட்ட திருமேனிகள் உயிருடன் ஒன்றியிருந்து இயங்குவதை உலகத்தார் அறிய மாட்டார். கடலால் சூழப்பட்ட எல்லா உலகங்களும் அழிந்து விடுவதையும் இவர்கள் அறியமாட்டார்கள். உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் இயல்பை அறிந்து இங்கு மேன்மை அடைய மாட்டாதவர் மேலே கண்ட திருமேனிகளைத் தியானிப்பது வலிமை கொண்டது ஆகாது.

2288. குருவின் உபதேசத்தில் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய பரவிந்து மண்டல்த்தை உணர்ந்தால் கருணை வடிவினனான எம் தலைவன் பழமையான சுட்டறிவு நீங்கும் காலத்தில் என் அகண்ட கலப்பை உணரும்படி செய்து நான் இன்பம் அடைந்து உய்ந்தேன்.

2289. பொன்னால் இயற்றப்பட்ட அணியைக் கணும்போதும் பொன்னைப் பற்றிய காட்சி இல்லை. பொன்னின் தன்மையை நோக்கும்போது பொன்னால் செய்யப்பட்ட அணியின் காட்சி பொன்னில் மறைந்து விடும். அது போன்று அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்தபோது ஆன்மாவின் காட்சி இல்லை. ஆன்மாவின் இயல்பை உணர்ந்த போது அந்தக் கரணங்களின் பரப்பு இயல்பு ஆன்மாவில் ஒடுங்கி விடும்.

2290. மரத்தால் செய்யப்பட்ட யானை சிற்பத்தைப் பார்க்கும்போது மரத்தை பற்றிய உணர்வு அறிவு இருப்பதில்லை. மரத்தின் நிறங்களை அகற்றிப் பார்க்கும்போது யானைக் காட்சி மரத்தில் மறைந்து விடுகின்றது. அதுபோல் பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும்போது பரமானது உணர்வுக்கு வருவதில்லை. குருவருளால் பார்க்கும்போது பரமே காட்சி தந்து பார் முதலிய பூதங்கள் பரத்தில் மறைந்து விடும்.

2291. முப்பதாறு தத்துவங்களைக் கடந்து திருவைந்தெழுத்தில் நம என்பதை விட்டு பேரறிவாகித் தத்துவங்களுக்கு வேறாய் ஆன்மா யகாரமாய் விளங்கிய போது பரையில் இறுதியில் உள்ள ஒளியான தற்பரனான சிவத்தில் பேறு நிறைத்த சிவய என ஆன்மா சிவசத்தியுடன் அடங்கி நிற்பதே வீடுபேறாகும்.

2292. பராவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்தும் பின்கண்டவாறு ஆகும். பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதமானது தோன்றும். கனவில் நாதம் ஒடுங்க பரையில் நின்மல் சுழுத்தியான உறக்கம் அமையும். நின்மல் சுழுத்தியில் அழுந்தாது மேல் விளங்கும். மேல் விளங்கவே மேலான சிவதுரியம் உண்டாகும்.

2293. பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருள்கொண்டு பந்தம் நீங்கச் செய்து சுத்த அவத்தையில் பொருந்துமாறு செய்யும். இந்த நிலையில் பொருந்தும் பிரம்ரந்திரத் துடிப்பால் மனம் பதியச் சிவத்தை அடைவதற்குரிய விருப்பம் உண்டாக மாலைக் காலத்தில் நில ஒளியின் முன் இருள் நீங்குவது போன்று தலையின் முன்பு உள்ள வெண்மையான ஒளியில் ஐந்து மல்ங்களும் நீங்கி விடும்.

2294. துவா மாயையில் இருக்கும் புருடனுடன் சேர்ந்த ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகும்படி மாமாயையில் உடலுக்குரிய ஆன்மன் கண்டு எல்லாப் பொருளும் அறியும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்ற்று விலகி இருக்கவும் உய்தியைத் தரும் பராவத்தையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.

2295. முன்னைய நல்ல தவத்தால் ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் தான் ஆன்மாக்களிடம் செய்யும் அருளும் பரமும் அவர்கள் தன்மீது செலுத்துகின்ற அன்புமாய் இருந்தான். ஆன்மாக்களுடன் பிரிவின்றிக் கலந்து வடிவத்தில் பொருந்தியிருக்கும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் விளங்கினான். என்னைப் பருவுடல் நுண்ணுடல் ஆகியவற்றின் பிடிப்பினின்று விடுவித்தும் என்னைவிட்டு அகலாதனவாகவும் உள்ளான்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:04

கேவல சகல சுத்தம்!

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

கேவல சகல சுத்தம்!

2227. தன் உண்மையை அறிந்த தூயன், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலன். இவர்களின் வேறான பலவகைப் பட்ட பரிப்பாகம் உள்ள சகலன் ஆகியோர்கள் முறையே சத்தையும் அசத்தையும் சதசத்தையும் உடனாகத் தத்தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்பப் பொருந்தி நிற்பர்.

2228. த்னக்கு பகைவனும் நண்பனும் தானே ஆவான். அங்ஙனம் தனக்கு உரிய மறுமைப் பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும். தான் செய்த புண்னியப் பாவச் செய்ல்களின் பயனை அனுபவிப்பவனும் தானே ஆவான். தனக்கு தலைவனும் தானே ஆவான்.

2229. கேவல நிலையில் கிடக்கும் உயிர் சுத்தமாயையில் பொருந்தி பின் பக்குவமாகின்ற உயிர் மாயையின் தொடர்பால் விளக்கம் பெற அறிவு உற்று முந்தைய வினைகளும் அவற்றை அடைவதற்குரியவைகளும் பெற்றுத் தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.

2230. சகல நிலையில் கருவிகளுடனே வந்தவர் சகலர் ஆவார். அவர்கள் ஆகமங்களால் சொல்லப் பெறும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று வகையான மலங்களும் பொருந்தியவர்கள். நிகர் இல்லாத நான்முகன் திருமால் முதலாகவுள்ள தேவர்கள் இந்த உலகில் வாழும் மக்கள் புழு ஈறாகச் சகலர் ஆவர்.

2231. தூவா மாயையில் தங்கியிருக்கும் பிரளயகலர் பொருந்திய அந்த அசுதத மாயையே உடலாய் மற்ற மாயேயங்களை விட்ட தன்மையுடையவர். அவர்கள் சிவபெருமானைப் போன்ற சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரரும் ஆவார்கள்

2232. விஞ்ஞான கலர் கேவல நிலையின் ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர். அங்ஙனம் விளங்கும் அனந்தர் முதலிய வித்தியேசுரர் எண்மரும் சப்தகோடி மகா மந்திரர்களும் மந்திரேசர் பலரும் விஞ்ஞான கலர் ஆவர்.

2233. விஞ்ஞானகலரில் மிக்க பக்குவத்தைப் பெற்றுச் சிவத்தின் அருளுக்குப் பாத்திரமானவர் வலிமை ஒடுங்கிப் போகும் ஆணவ காரியமான விந்து நாதங்களைக் க்டந்து பிரணவ வடிவான சிவத்தில் இலயமாவர். அங்ஙனமாதலால் மலக் குற்றம் அற்ற சுத்த நிலையை எய்துவர்.

2234. ஆன்மாக்கள் மூன்று வகையாகவும் நான்கு வகையாகவும் உள்ளன. ஆராயும் போது இவை மாயையுடன் பொருந்தி விருப்பத்தைச் சார்கின்ற தன்மையால் ஆனவை என்றாலும் பக்குவம் அடைந்தபோது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்குபவை. அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தை நீக்கி அருளினான்..

2235 .நிலை இல்லாத மண் முதல் நாதம் இருதியாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டு நீங்கி அவற்றுள் பற்றுச் சிறிதும் இல்லாது நீங்கவே எய்தப்பெறும் பொருளான சிவமே தானாகி நித்தியமாய் சரம் அசரம் என எங்குமாய்ப் பரவெளியுள்ளும் கலந்து சென்று அடையாமல் தானே வந்து அடையும் நிலை சுத்தாவத்தை ஆகும்.

2236. தொன்று தொட்டே பசு தத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை அனாதியாயுள்ள ஐந்து மலங்களில் வருத்தும்படி செய்து அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீக்கிச் சகல நிலையில் பொருந்தச் செய்து தொன்று தொட்டு பற்றிவரும் பிறவி நீங்க அந்த ஆன்மா தூயநிலையைப் பொருந்தியவன் ஆவான்.

2237. ஞானம் பற்றிப் பரவெளியைச் சென்று அடைந்தவர் தம் சுத்த கேவல நிலையில் கடந்த தற்பர சிவத்திடம் சுத்த துரிய்த்தே நம் அறிவு பொருந்த ஆன்மாவான தன்னிடம் சிவமாகிய பொருளை அறியும் உண்மையானவன்.

2238. நிலம் முதல் புருடன் ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் தூய நிலை அடைந்து தன் உண்மையை உணர்ந்து வீட்டை அடையும். சிவ தத்துவத்தில் உள்ள சுத்த வித்தை ம்கேசுரம் சதாக்கியம் என்னும் மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனான சிவத்திலும் ஒடுங்கும். படைப்பு முறையில் சிவனிடமிருந்து சத்தியும் பிறவும் அங்ஙனமே தோன்றும்.

2239. தூய நிலையில் ஆன்ம தத்துவம் 24, புருடன் 1, வித்தியாதத்துவம் 6, ஆக 31 தத்துவங்களும் ஆன்மாவில் அடங்கும். உண்மையில் கண்டத்தில் விளங்கும் தூய வித்தையும் புருவ நடுவில் விளங்கும் மகேசுவரமும் தலைவரை விளங்கும். சதாசிவமும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்தி சிவ பகமாய்க் காணும்படி இருபத்தெட்டுத் தத்துவங்களும் அடங்கும்

2240. ஆணவ மலம் ஒன்று மட்டும் உடையவராய் மாயை கன்மங்களை அறியாதவர் விஞ்ஞான கலர் ஆவார். ஆணவத்துடன் மாயை உடையவர் பிரளயகலர். காணும் வடிவம் உடையவராய் உள் நோக்கம் இல்லாமல் வெளி நோக்கம் உடையவராய் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் பொருந்தியவர் சகலர்.

2241. விஞ்ஞான கலரிடை இருக்கும் குற்றம் ஆணவமலம். மாயையைப் பற்றிக் கொண்டு நிற்பது பிரளயகலரின் குற்றம். ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் பற்றிக் கொண்டிருப்பது சகலரின் மலக்குற்றம்.

2242. ஞான வடிவு நிலையில் கிளர்ச்சியுடைய விஞ்ஞானகலர் ஞனவடிவம் கிளர்ந்து எழும் நிலையில் விந்து சத்தியால் அங்குக் கேவலநிலையில் எல்லாச் சகல நிலையையும் பிரணவடிவ சத்தியை அறிந்து நிற்றல் உண்மையே ஆகும்.

2243. துவா மாயையில் பொருந்தியுள்ள பிரளயகலர் அம்மாயையும் அவரை வந்து தளைப்படுத்தாத வகையில் இருக்க ஆணவத்தோடு கூடிய நிலையில் விருப்பத்தை ஏற்படுத்தும் தூமாயை பொருந்த நிலைபேறுடைய நுற்றெட்டு ருத்திரர் ஆவார்.

2244. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களுடன் கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் உண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர். அவர்கள் தேவர் அசுரர் மனிதர் மெய்ம்மை இல்லாத நான்முகன் விரிந்து மிதந்து கிடக்கும் புழு ஈறாக அம்முறையில் பிறவிக் குழியில் சிக்கிக் கட்டுப்படும் சகலர் ஆவர்.

2245. தூய நிலையில் பொருந்திய ச்கல இன ஆன்மாக்கள் மும்மலங்களில் நித்தமாகிய ஆணவமும் அநித்தமாகிய மாயை கனிமங்களும் நீங்க இவற்றில் தனித்தனியாய் நிலைபெற்ற ஆசையும் மயக்கம் உடைய இருளும் சிவக்கதிரவன் ஒளியால் தொடர்ந்து நீங்கிடத் தூயர் ஆவார்கள்.

2246. ஆன்மா பிரமம் ஆன சிவத்தின் ஞான வடிவாய் பொருந்துவதில் தனித்துள்ள வீடுபேற்றை அடையும். பிறப்ட்ட சகல நிலையில் கலை முதலிய தத்துவங்கள் பிரிவது அமையும். பிரணவத்தில் நின்று ஞானவடிவ தரிசனம் செய்வது தூய நிலையில் நின்மல சாக்கிரம் ஆகும். இம்முறையில் பிரமத்திடம் பொருந்துவது தன்னைத் தூய்மை செய்து கொள்வதாகும்.

2247. கேவல் நிலையில் உள்ள ஆன்மா அறிவில்லாமலும் உடம்பு இல்லாதவனாகவும் அராகாதி குணங்களுடன் பொருந்தாதன்வாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும் என்றும் உள்ளவனாகவும் கலை முதலிய அசுத்த மாயையைக் கூடாதவனாயும் தத்துவங்களுடன் பொருந்தி செயல் செய்யாதவனாகவும் இன்பம் அனுபவிக்க அறியாதவனாகவும் இருந்தும் இல்லாதவன் ஆகவும் ஆணவ மலத்தால் கூடப் பெற்றவனாகவும் உள்ளான்.

2248. ஒளி மண்டலமும் அதை மறைக்கும் மாயையும் அதை வெளிப்படுத்தும் கிரியையும் அதனால் விளையும் ஞானமும் உடலில் உள்ள சத்திக்கேற்ப அமையும் விந்து மண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப் பொருந்த்தும் பிரளயகலர் உலகில் பிறவிக்கு வந்த தூய ஆன்மாக்கள் ஆவர்.

2249. கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொன்னால், கேவலகேவலம், கேவலசகலம், கேவலதூய்மை என மூன்றும் கிளர்ச்சியுடைய ச்கலத்தில் சகலகேவலம், சகலசகலம், சகலதூய்மை என மூன்றும் மேலான தூய்மையில் தூயகேவலம், தூயசகலம், தூயதூய்மை என மூன்றுடன் ஆராய்பவர்க்கு நீங்காத ஒன்பது வகையாகும்.

2250. கேவலத்தில் கேவலம் கருவிகளை விட்டு உறங்குவது.போல் உள்ள நிலை. கேவலத்தில் சகலம் ஒளி மண்டலத்தில் அறிவு குன்றாதிருத்தல், கேவலத்தி;ல் தூய்மை கேடற்ற அகன்ற ஞானம் உடையவர்க்கு தன்னையும் உலகத்தையும் அறியும் நிலை. அந்நிலையில் சிவம் இவர்களுக்கு அருள் செய்வான்.

2251. சகலர்க்கு அறிவு ஆராய்ச்சியால் விழிப்பில் கருவி கரணங்கள் செயற்படாமல் உறங்குபவனைப் போல் விளங்கும். இது சகலத்தில் கேவலம் ஆகும். சகலர்க்கும் பொருந்தும் விழிப்பு நிலையே சகலத்தில் சகலம் ஆகும். விழிப்பு நிலையில் ஞானேந்திரியங்கள் பிரணவ ஒலியில் இலயமடையும். இது சகலத்தில் தூய்மை ஆகும். இவ்வாறு சகலத்தில் மூன்று இயல்பு பொருந்தும்.

2252. துய்மையில் தூய்மையவது ப்ழமையாய் உள்ள அனைத்துக் குற்றங்களையும் நீக்கும் மலம் ஆகும். தூய்மையில் கேவலமானது கரணங்களை விட்டு மலங்களைப் போக்குவிப்பதற்கு இறைவனது வியாபகத்தில் அலையில்லாத நீர்போல அடங்கி யிருத்தல். சுத்தத்தில் சகலம் தன்னையும் தலைவனையும் அறிந்து அவன் அருளில் நிற்றல் இவ்வாறு தூய்மை நிலையில் இம்மூன்று நிலைகள் உள்ளன.

2253. விழிப்பு சாக்கிரத்திலே புருவ நடுவில் சிவ தத்துவம் ஐந்தும் தொழிற்படும் நனவில் உண்டாகும் கனவில் பின் மூலையில் மகேசுரம் சதாக்கியம் சத்தி சிவம் என்னும் நான்கும் தொழிற்படும். விழிப்பு உறக்கத்தில் தலையின்மீது சதாக்கியம் சத்தி சிவம் என்னும் மூன்றும் தொழிற்படும். விழிப்பு பேர் உறக்கத்தில் நிராதாரத்தில் சத்தியும் சிவமும் என்ற இரண்டும் தொழிற்படும். விழிப்பு உயிர்படங்கலில் துவ்த சாந்த வெளியை அடைந்தபோது சிவம் ஒன்று மட்டுமே தொழிற்படும். இவ்வாறு மறைகளுக்கு ஆதியான சிவம் ஐம்மலம் பாசங்களினின்?றும் ஆன்மாக்களைப் பிரித்து ஆக்கம் தருவான்.

2254. ஆன்மா சாக்கிரததில் சிவத்துடன் பொருந்துகின்றது. அதனால் ஆன்மாவில் ஆணவ மலக்குற்றம் நீங்கும். சக்கிராதீதம் நாதாந்தமாகையால் நாத தத்துவம் தங்காமல் போகும். பரோபதியானால் உபாசாந்தமான நிறைவான அமைதி கிட்டும். நாததத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும் அவற்றால் விளையும் குணங்களை நோக்காது.

2255. மலங்களில் கட்டுண்ட பெத்த நிலையும் அவற்றினின்று நீங்கிய முத்தி நிலையும் தன் இருப்பை உணரும் துரியமும் சுத்தாவத்தையில் உள்ள துரியாதீதமும் தோன்றாதபடி சிவன் சீவனை விழுங்கி விடும். என்று அவன் அருளால் உணர்ந்த பின்பு சீவனிடம் உள்கருவிகளின் செயலும் வெளிக் கருவிகளின் செயலும் இல்லாமல் போகும்.

2256. உயிர்கள் அடையும் கட்டுண்னும் நிலையும் முத்தியும் என்பவை சிவபெருமானின் அருளால் அமையும். அச் சிவபெருமானின் அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்த நிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என அடையும். இவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த் திகழும்.

2257. ஆணவம் முதலிய ஐந்து மலங்களயுடைய சீவர்க்ள் தம்மைத் தாமே மதித்த சகலர் ஆவார். அன்னார் ஐந்து மலப் பாசங்களால் கட்டுண்டவராய்க் கொடிய வினைகளை துய்க்க வேண்டியவராய் விளங்குகின்றார்.. இவர்கள் வீட்டுலகை விரும்பாவல் தேவவுலகை விரும்பி அடைவர். இவர்கள் சிவத்தை அறியாதிருப்பினும் இவர்களைச் சிவம் அறிந்தே உள்ளார்.

2258. கேவல அதிதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்த சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்பு துரிய நிலையில் அந்த ஆனமாவுக்கு விருப்பம்மானவற்றை உண்ணும் ஆசை ஏற்படும். அந்த ஆன்மாவின் விருப்புக்கேற்ப பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமமாய்ப் பொருந்தும். பின்பு குணம் என்ற மனோமய கோசம் இணைக்கபபட்ட போது நனவு நிலை ஏற்படும்.

2259. கேவல துரியாதீதத்தில் ஆணவ மலம் அகலாமல் நிற்கும். பின்பு துரியத்தில் மாயை பொருந்தும். கேவல சுழுத்தியில் பொய்யான கன்மங்கள் பிணிந்து நிற்கும். கேவல கனவில் மயேயங்கள் பொருந்தி. காணப்படும் நனவில் நிரோதாயி மற்றும் இங்ஙனம் ஐந்து மலங்களும் இவ்விதமாக ஆன்மாவைப் பற்றும்.

2260. அதீதத்தில் உள்ள சுத்த ஆன்மா சிவத்தை முதலாக அறிபவன் ஆகின்றான். அந்த ஆன்மாக்கள் படைப்புக்கு வரும் போது சுத்த மாயையில் தங்கிப் பிரமப் புழை விளங்கும் சுழுமுனையில் தங்கித் தவம் செய்ய வேண்டிய கருமத்தை உண்ர்ந்து எப்போதும் பராவத்தையில் பொருந்திய்வர் இவ்வுலகில் உள்ளவர்க்கு அருளைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் சகலத்தார்.

2261. மாயையில் காரியமான உடலைப் பெற்று எடுத்த உடம்புக்கு ஏற்றவாறு இன்பப் பொருள்களை அனுபவித்துப் பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அந்தக் கரணங்களைப் பொருத்தி சத்தம் முதலிய தன்மாத்திரைகளீல் தங்கிக் கருவை அடைந்த சீவன் சகல அவத்தையில் தோன்றும்.

2262. ஞானம் கிரியை என்பவை ஒத்து விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சத்தி பொருந்தி ஞானவடிவான தூய நிலை பொருத்தவே, அச்சமயம் தக்க குருவினால் உணர்த்தும்படி செய்து திருவருட் சத்தி பொருந்தி மூலம் நீங்கும். மீளவும் பிறவியை அடையாமல் இருப்பதே துரிய நிலை ஆகும்.

2263. முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் இறுதியான நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடையச் சுத்த தத்துவத்துக்குரிய சுத்தவித்தை மகேசுவ்ரம் சதாசிவம் விந்து நாதம் என்னும் ஐந்தும் நீங்கும் ஒளியினை உடைய சீவன் பரமாகும் சிவத்திடம் உள்ளதாகும்.

2264. உடம்பில் வேறானது ஆன்மா. அத்தகைய ஆன்மா தான் ஒருவன் உளன் என்பதை அறியாமல் தன் உடம்பியே தான் என்று மயங்கி இருந்தான். நிராதரத்தில் உணர்வு சென்றபோது தான் ஒர் எளிய வடிவினன் என்பதை அறிந்தான். இந்த உடம்பைத் தாங்கி நிற்பதும் ஒளி என்று கண்டனன். அவ்வாறு உள்ள ஒளி உடல் சிவத்துடன் ஒன்றாவிடின் திரும்பவும் வந்து தன் வினைக்கீடாக அந்த ஆன்மா பிறப்பான்.

2265. நின்மல் சாக்கிராதீதம் கூடுமானல் அதைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை ஏற்படுத்தும். எதிர் நோக்கியுள்ள பிறவி நீங்கும். பெருமையுடைய வீடுபேறு கிட்டும். அந்த அதீத நிலையில் நுண்மையான வாக்கும் மனமும் பொருந்த மாட்டா.

2266. நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் குணமான ஒளியும் அகண்ட வானத்துள் விளங்கும். ஆனால் அவற்றின் நெகிழ்ச்சியும் சுடும் தன்மையும் அவ்விடத்தில் இராது. விரிந்த வானத்தில் நீரும் நெருப்பும் எது என்று வினவினால் நீரின் தன்மையும் தீயின் தன்மையும் கலந்து அவ்வாறு ஆகும்.

2267. முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்தம் மிசிர மாயையோடு கூடிய வித்தயா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம் உடன் ஆன சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும். இம்மூன்றையும் ஆன்மா அடையும்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்து பிரகிருதிமாயை அசுத்தமாயை சுத்தமாயை ஆன்மாவிடம் பொருந்தும்.

2268. அசுத்த மாயை செவிலித்தாயாகவும் சுத்தமாயை தாயாகவும் ஆக இவைபொருந்தும் வகையில் சிவம் தந்தையாய் அமைய ஆன்மா சகல நிலைகளைக் அடைந்து ஆராய்ந்து தெளிவு பெற்றபோது சுத்தமாயைப் பொருந்தி சுத்த மலத்தை அடையும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27065358
All
27065358
Your IP: 18.118.140.108
2024-04-24 00:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg