gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:00

திருநாவுக்கரசுநாயனார் (அப்பரடிகள்)

41. திருநாவுக்கரசுநாயனார் (அப்பரடிகள்)

திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார்.

வேளான் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தனர். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.

கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.

தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கிய காலம். நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமணசமயம் சார்ந்தார். சமண சமய வேத நூல்களைக் கற்று ‘தருமசேனர்’ என்றபெயரோடு மடாதிபதியானார். தலையிடமான கடலூர் சென்று கொள்கை விளக்கி மக்களை சமண சமயத்தின் பால் ஈர்த்தார். இதைக் கண்ட திலகவதியார் மணம் நொந்தார். அதிகை வீரட்டானம் சென்று தினமும் அலகிட்டு, மெழுக்குமிட்டு, பூமாலை புனைந்து ஏத்தி அப்பெருமானைப் புகழ்ந்து பாடினார். பெருமானே’ ‘நீ என்னை ஆட்கொள்வதானால் அது உண்மையானால் என் தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும். தாங்கள் கருணை புரிய வேண்டும்’ என வழிபட்டார்.

ஒருநாள் தருமசேனருக்கு வயிற்றில் சிறு வலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் மருந்து கொடுத்தும், மந்திரங்கள் ஓதியும் ஒன்றும் குணமாகவில்லை. வலி அதிகரித்தது. அப்போது தமக்கையாரின் நினைவு வந்தது. நம்பிக்கைக்குரிய சமையல்காரர் ஒருவரை தமக்கையிடம் அனுப்பிவத்தார். அவர் சமண மதம் சார்ந்த தம்பியை பார்க்க மறுத்துவிட்டதை கூற, இந்த சூலை நோயை நீக்க முடியாத சமணத்தால் பயன் இல்லை. தன் தமக்கை திருவடியே சரணம் என உறுதி பூண்டார்.

சமண சமயத்தின் சொத்தாக இருந்தன எல்லாம் விட்டு வெள்ளாடை தரித்து வேண்டிய ஒருவரின் கைபிடித்து திருவதிகை அடைந்தார். தமக்கையின் பாதங்களில் வீழ்ந்தார். மருள் நீக்கியே இச்சூலைநோய் இறைவனின் திரு அருளே, நீ இறைபணி செய்வாய் என கூறினார். தமக்கை முன் செல்ல பின் தொடர்ந்து திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவிலை நோக்கி சென்றார். கோவிலை வலம் வந்து பதிகம் பாடினார். அருள் பெற்று சூலை நோய் ஒழிந்தது. வானில் ஓர் ஒலி ‘செந்தமிழ் சொல் மலர்களால் ஆன பாமாலை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக’ என்று எழுந்தது.

ஆலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்தது. கோவில்களில் புல்லும் பூண்டும் முள்செடியும் வளர்ந்து மக்கள் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டது. திருநாவுக்கரசு அவர்கள் உழவாரம் என்ற கருவிகொண்டு திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவில் ஆலயத் திருப்பணிகளைச் செய்தார். அதைக் கண்டு வெகுண்ட சமண துறவிகள் பல்லவ மன்னனிடம் தரும சேனர் பற்றி கூறி கோபமூட்ட மன்னர் தருமசேனரை கைது செய்ய சொன்னார்.

திருஅதிகை சென்ற வீரர்களிடம் நான் பல்லவ நாட்டுக் குடிமகன் அல்லன். நாம் யார்க்கும் குடி அல்லோம். சிவனைத் தவிர யாருக்கும் பணிய மாட்டோம் என்றார். அமைச்சர்களும் மற்றவரும் நீங்கள் மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும் எம் பொருட்டு வரவேண்டும். உம்மை விட்டுச் சென்றால் எம்மைத் தண்டிப்பான். என்றதை ஏற்று பல்லவன் அரண்மனை சென்றார். தருமசேனர் வருவது கண்ட மன்னன் அவரை சந்தியாமலே ‘அவரை நீற்றரை- சுண்ணாம்பு கொதிக்கவைக்கும் அறையில் இடுங்கள்’ என ஆணையிட்டார். உள்ளே சென்றவர் தில்லை கூத்தபெருமான் திருவடி நினைத்து வழிபாடு செய்தார். சுண்ணாம்பு கொதிக்கும்போது உண்டகும் ஓசை வீணையின் நாதமாகவும், வீசும் துர்நாற்றம் மனம் வீசும் தென்றலாகவும், கொதிக்கும் நீர் தாமரைக்குளம்போன்று குளிர்ந்தும் இருக்க திருநாவுக்கரசர் எட்டு நாள் கழிந்து இன்பமுடன் வருவதைக்கண்டோர் அவருக்கு நஞ்சு கலந்த பால் சோறு தர அது அமுதமானது.

நஞ்சுண்டும் இன்பமாய் இருந்தவரைக்கண்ட சமணர்கள் பட்டத்து யாணையை கொண்டு மிதிக்க ஏற்பாடு செய்தனர். யானை தன்னை நோக்கி வருவது கண்ட திருநாவுக்கரசர் சிவனை நோக்கி அச்சம் தவிர்க்கும் பாடலைப் பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கியது. நெஞ்சம் கலங்கிய சமணர்கள் ‘கல்லிலே கட்டி கடலிலே போட’ ஆணையிட்டார். நாவுக்கரசர் பாட்டால் கல்லும் கரைந்து மிதந்து கரையேறவிட்ட குப்பம் அடைந்தார்.  உண்மையறிந்த பல்லவ மன்னன் சமணம் விட்டு சைவம் சார்ந்தான். திருஞான சம்பந்தர் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

அதிகை வீர்ட்டாதினத்தில் சிலகாலம் தொண்டு புரிந்து சிவத்திருத்தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சீர்கெட்ட நிலைகளை மாற்றப் புறப்பட்டு வெண்ணெய்நல்லூர், திருவாமத்தூர், திருக்கோவலூர், வழிபட்டு பெண்ணாகடம் வந்தார். அப்போது அவர் மனத்தினுள் தான் சமணராய் இருந்து அவர்தம் சோற்றைப் புசித்ததால் உடல் மாசு பட்டது என்றும் அதை நீரால், நெருப்பால் போக்கவேண்டும் என நினைத்தார். அதிகாலை எழுந்து திருக்கெடில நதியில் குளித்து மகிழ்ந்தார். எஞ்சிய மாசும் பாவமும் சுட்டெரிக்க வேண்டுமென என்னினார்

தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர் கொழுந்தீசரைப்பார்த்து, என் உயிர் உடம்பில் இருக்க வேண்டுமானால் எனது தோளில் இடபச் சூலக்குறி- முத்திரை பொறிக்க வேண்டும் என்றார். வேண்டுகோள் ஏற்கப்பட்டு சிவகணம் அதை பொறித்தது. திருநாவுக்கரசர் அகம் குளிர்ந்தார். தில்லைசென்று கருநட்ட கண்டனை, பத்தனாய்ப் பாடமாட்டேன், அன்னம் பாலிக்கும் தில்லை, அரியாணை அந்தணர் தம் சிந்தையானை முதலிய பல பதிகங்கள் பாடி களிப்புற்றார்.

தில்லையிலிருந்து ஞானசம்பந்தப் பெருமானின் பெருமை கேட்டு சீர்காழி நோக்கிச் சென்றார். நாவுக்கரசர் பெருமை அறிந்த சம்பந்தர் அவர் வருவதை அறிந்து அவரை எதிர்கொண்டழைத்து ‘’அப்பரே வாருங்கள் ‘’ என்றார். அதுமுதல் அப்பரடிகள் எனப்பட்டார். சில நாட்களுக்குப்பின் சோழநாட்டுத்தலங்களை வழிபட விரும்பி ஞானசம்பந்தரிடம் விடைபெற்று பலதலங்கள் வழியாக திருச்சக்தி முற்றம் வந்தடைந்தார். அங்கு சிவக்கொழுந்தீசரிடம் ‘உன் அழகிய பொன் போலும் திருவடியை என் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்று தன் ஆசையைச் சொல்ல பெருமான் நல்லூருக்கு வரப்பணித்தார்.

நல்லூரில் பெருமான் பாதம் பணிந்த அப்பரடிகளுக்கு உம்முடைய நினைப்பை முடித்து வைக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான். நல்லூரிலிருந்து புறப்பட்டு திருப்பழன நாதரை வழிபட நினைத்து திங்களூர் வந்தார். அந்த ஊரில் அப்பூதியார் திருநாவுக்கரசு என்றபெயரால் தண்ணீர்பந்தல், சோலைகள், குளங்கள், சாலைகள் முதலிய அறங்களைச் செய்து வந்தார். அவர்தம் இல்லத்தில் உணவு அருந்த இசைந்தார். இலை அறுக்கச் சென்ற அவர் மூத்தமகன் பாம்பு கடித்து இறந்தார். ‘ஒன்று கொலாம்’ என்ற பதிகம் பாடி உயிர்பித்து பயணம் தொடர்ந்தார்.

திருப்பழனத்திலிருந்து திருவீழிமிழலை சென்றார். அங்கு அப்பரடியாருடன் சம்பந்தரும் சேர்ந்து தங்கியிருந்த சமயம் மழையின்மையால் ஏற்படும் சோகங்கள் ஏற்பட்ட. மக்கள் துன்பம் மிகுந்தனர். அடியவர் இருவரும் இந்நிலை நினைந்து பெருமானை நினைந்து கண்ணயர்ந்திருந்தனர். ‘உம்பால் நிலவும் சிவநெறி சார்ந்தோர் வாட்டம் அடையாவாண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மெற்குமாக அமைந்த பலிபீடத்துத் தருவோம்’ என அருளினார். அவ்வண்ணம் கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு மடம் அமைத்து அடியவர்களுக்கு தொண்டாற்றினர்.

நாவுக்கரசர் மடத்தில் எல்லோரும் உணவு உண்டபின்தான் சம்பந்தர் மடத்தில் தொடங்கும். காலதாமதத்திற்கு காரணம் காசு மாற்று குறைவாக இருப்பதால் என்பதை அறிந்த சம்பந்தர் மாசில்லாப் பெருமானே நீவழங்கும் காசு மாசுடையதாக இருக்கலாமோ, நான் கைத்தொண்டு செய்ய வில்லை என்றாலும் நீ வழங்கும் காசில் குறையிருக்கக் கூடாதல்லவா, உன்னையாரும் ஏச மட்டார்கள், வேதத்தினைக்கொண்ட இறைவனே கறையுடைய காசினை நீக்கி நல்ல காசினை தருவாயாக எனப் பாடி பெற்றார். நாடு செழித்து வளாம் பெற்றபின் இருவரும் திருமறைக்காடு சென்றனர்.

முன்னொரு காலத்தில் வேதம் மறைக்காடரை வணங்கிக் கதவினை மூடியதாம். அக்கதவு திறக்கப்படாமலேயே இருக்க மக்கள் மாற்று வழியில் சென்று வழிபடு வந்தனர். அங்கு சென்றவுடன் ஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து தாங்கள் தீந்தமிழில் பாடி கதவைத்திறங்கள் என வேண்டினார். அப்பர் ‘பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரே’ எனத் தொடங்கி 9 பாடல்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. வேதனைபட்டு ‘அரக்கனை விரலாற் கொன்ற பெருமானே, இரக்க மென்றிலீர்’ எனப் பத்தாவது பாடல் பாடியவுடன் கதவு திறந்தது. வழிபாடு முடிந்து இருவரும் வாயிலை அடைந்தனர். அப்பரடிகள் சம்பந்தரைப்பார்த்து இக்கதவு மூடவும் பின்னர் திறக்கவும் பாடுங்கள் என்றார். சம்பந்தர் ‘சதுரம் மறைதான் துதிசெய்து’ என்ற பாடல் பாடியதும் கதவு மூடியது. இருவறும் மகிழ்வுடன் மடம் வந்தனர்.

அப்பரடிகள் தான் 10 வது பாடல் பாடியதும்தான் கதவு திறந்தது, சம்பந்தர் முதல் பாட்டு பாடியவுடன் கதவு மூடியதே, இறைவன் உளக்குறிப்பை அறியாமல் யாதேனும் தவறு செய்தோமா என வருத்துடன் படுத்தார். அப்போது சிவ பெருமான் சைவ வேடத்துடன் தோன்றி வாய்மூரில் இருப்போம் என்னை பின் தொடர்ந்து வருக எனப் பணிக்க நாவுக்கரசர் அவர் பின் சென்றார். அண்மையில் இருப்பதுபோல் இருந்து மறைந்தார்.

சம்பந்தர் எழுந்து அப்பரடிகள் எங்கே என்றார். வாய்மூர் சென்றார் என்பதை அறிந்து வாய்மூர் வந்தார். சம்பந்தரைக் கண்ட அப்பர் வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டமெல்லாம் என்னிடம்தான் செல்லும். மறைக்கதவம் திறக்கப் பாடிய என்னை விடவும் உறுதிப் பொருள் பாடி அடைப்பித்த அருட்செல்வர் எதிரே நிற்கிறார் இப்போது உம்மை மறைத்துக் கொள்ளும் வல்லமை உண்டோ. உன் அருட் காட்சியைக் காட்டு என்றார். திருவாய்மூர் பெருமான் ஞானப் பிள்ளயார் திருமுன் தோன்றி ஆடல் காட்டியருளினான். தாம் கண்ட காட்சியை அப்பரடிகளுக்கு காட்டி மகிழ்ந்தார் சம்பந்தர், திருவாய்மூரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிப்பட்டு திருவாரூர் சென்றடைந்தார்.

திருவாருக்கு அருகில் ஏமாப்பூர் என்ற ஊரில் நமிநந்தி அடிகள் எனும் அந்தணர் வாழ்ந்துவந்தார். தினமும் ஆரூர் சென்று புற்றிடங்கொண்டானை வழிபட்டு வருவார். ஓர்நாள் ஆருரில் உள்ள அரநெறி தலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய விரும்பினார். மாலைப் பொழுதாகையால் ஊர் சென்று நெய் கொண்டு வரமுடியாது. அருகில் உள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் கிண்டலாக உன் சிவன் கையில் நெருப்பு வைத்திருக்கின்றானே பின் ஏன் விளக்குக்கு நெய் தேடுகிறீர்கள். தேவையானல் குளத்து நீரில் விளக்கு வைக்கலாமே என்றனர். வேதனையோடு ஆண்டவனிடம் முறையிட விண்ணொலி, அன்பனே, இக்குளத்து நீரைக் கொண்டே விளக்கேற்று’ என எழுந்தது. நமிநந்தியடிகள் குளத்தின் நடுவே சென்று நீரில் மூழ்கி நீர் கொணர்ந்து விளக்கில் ஊற்றி விடியும் வரை எரித்தார். அனுதினமும் நீரால் விளக்கேற்றி வழிபட்டார். இச்செய்தி எங்கும் பரவியது. இதை நாவுக்கரசர் ‘தொண்டர் ஆணி; எனக் குறிபிட்டார். பின் நாவுக்கரசர் ஆருரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிபடு பழையாறை வந்தார்.

அங்கிருந்து தூரத்தே தெரிந்த கோபுரத்தை கையைமேலே தூக்கி வணங்கினார். அருகிலிருந்தோர் அவரைப் பார்த்து நகைத்து அங்குள்ள சிவன் கோவிலை சமணர்கள் ஆக்கிரமித்து சிவனை மறைத்துள்ளார்கள் என்றனர். நாவுக்கரசர் அங்கேயே அமர்ந்து பெருமானே, சமணர் வஞ்சனையால் மறைக்கப்பட்ட உன் திருமேனி காணாமல் இவ்விடம் அகலமாட்டேன் என உண்ணாமலும் இருந்தார். சிவபெருமான் பழையாறை மன்னன் கனவில் தோன்றி சமணர்களால் நாம் வடதளியில் மறைக்கப்பட்டிருக்கின்றோம், உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாக வழிபடும் வகையாக ஆவன செய் எனகூறி மறைந்தார்,

மன்னன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி தடைகளை நீக்கி பெருமானை வெளிக் கொணர்ந்தான். அப்பரடிகள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவருடன் சென்று வடதளிநாதனை வணங்கி கோவிலுக்கு புதிய கோபுரம் எழுப்பினான். நாவுக்கரசர் இங்கிருந்து கிழம்பி திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை தலங்களை வழிபட்டு திருப்பைஞ்ஞீலியை நோக்கி சென்றார். வழியில் தாகத்தினாலும் களைப்பினாலும் இளைப்புற்றார். அவர் வரும் வழியில் ஓர் அந்தணர் வடிவுடன் பெருமான், பசியால் மிகவும் களைத்துள்ளீர், இப்பொது சோற்றை உண்டு இனிய நீரும் பருகிச் சோலையில் ஓய்வு எடுத்து செல்லுங்கள் என்றார். நாவுக்கரசருடன் திருப்பைஞ்ஞீலிவரை வந்தவர் மறைந்தார். இறைவன் கருணையை நினைத்து பதிகம் பாடினார்.

திருப்பைஞ்ஞீலியிலிருந்து புறப்பட்டு பலதலங்களைக் கடந்து அண்ணாமலை தலம் வணங்கி திருவோத்தூர் சென்று அங்கிருந்து காஞ்சி சென்றார். காஞ்சி ஏகம்பத்துறைப் பெருமானை வணங்கி மகிழ்ந்தார். கச்சிப்பெருமானை வழிபட்டு திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவாலங்காடு, திருக்காரித்துறை, மயிலாப்பூர் முதலிய தலங்களை வழிபட்டு பொன்முகலி ஆற்றில் மூழ்கி திருக்காளத்தி குடுமித்தேவரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது கயிலைநாதரை வணங்க ஆவல் கொண்டார். கயிலை நோக்கி புறப்பட்டார்.

காடு, மலை கடந்து ஆந்திராவின் திருப்பருப்பதத்தை- ஸ்ரீசைலம் அடைந்தார். அங்கிருந்து ஆறு, மலைகளைக் கடந்து காசி சென்று விசுவநாதரை வணங்கினார். அங்கிருந்து புறப்பட்டு மலைகளைக் கடந்தார் நதிகளைக் கடந்தார். காய் கனி கிழங்கு முதலியன உன்பதையும் தவிர்த்து இரவு பகல் பாராது சென்றார். கையும் காலும் தேய்ந்து சதை பிய்ந்து உதிரம் பெருகியது. அதனுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அயர்ச்சியில் மயங்கினார்.

பெருமான் நாவுக்கரசர் முன் அடியவராகத் தோன்றி, பெரியவரே, சதையெழிய, எழும்பு நொறுங்க இப்பனிக்காட்டில் தாங்கல் செல்லும் காரணம் என்ன என்றார். நவுக்கரசர் எம்பெருமான் கயிலைநாதனை தரிசிக்க செல்கின்றேன் என்றதற்கு அடியவர், அங்கு மானுடர் செல்வது கடினம் உம்முயற்சி வீண், திரும்பிப்போவதே மேல் என்றார். நாவுக்கரசர் என்றைக்கிருந்தாலும் ஒர்நாள் அழியும் இவ்வுடல். இதைகொண்டு அழியாத நாதனைக் காண்பேன் என்றார்.

அப்பரடிகளின் நெஞ்சத்துணிவினை அறிந்த அண்ட நாயகன் விண்ணிடை மறைந்து நின்று ஓ, நாவுக்கரசரே எழுந்திரு என உறைத்து அருளினார். உடலில் வீழ்ந்த சதையெலாம் ஒட்டியது. உறுப்புகளெல்லாம் முன்போல் ஆனது. நாவரசர் வானத்தில் மறைந்து குரல் கொடுத்த பெருமானை நோக்கிப் பணிந்தார். ‘இங்குள்ள பொய்கையில் மூழ்கி நாம் கையிலையில் இருக்கும் காட்சியினை திருஐயாற்றில் கண்டு மகிழ்வாயாக’ என அருளினான்.

நாவரசர் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கி திருஐயாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். பெருமான் கருணையை நினைந்து உருகிக் கண்ணில் நீர் சொரிய இறைவனை வணங்கச் செல்ல அங்கு இருப்பதெல்லாம் கயிலையில் இருப்பது போன்று உணர்ந்தார். நந்தியைக் கண்டார் சிவபெருமான் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டார். ஆனந்தத்தில் திளைத்தார். சிறிது நேரத்தில் அக்கயிலை காட்சி மறைந்து திருவையாறு அமர்ந்த பழைய நிலையினை உணர்ந்தார். திருப்பதிகம் பாடியருளினார். ‘முன்னே கண்டேன் அவர் திருப்பாதம், அதன்பின் கண்டறியாதன் கண்டேன்’ என்றார்.

அப்பரடிகள் சைவம் தழைக்கத் தொண்டர்களை உருவாக்க தாமே திருப்பூந்துருத்தி எனும் ஊரில் மடம் அமைத்தார். அங்கு தங்கி பல பதிகங்கள் பாடினார். ஞானசம்பந்தர் பாண்டிநாடு சென்று சோழநாடு வந்தார். அப்பரடிகளைத்தேடி திருப்பூந்துருத்தி சென்றார். சம்பந்தர் வருவதை அறிந்த அப்பரடிகள் எதிர்சென்று கூட்டத்தில் கலந்து சம்பந்தர் பல்லக்கை தாங்கினார். அப்பரடிகள் எங்கே என்று கேட்டபொழுது அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பேறு பெற்று இங்குள்ளேன் என்றதைக்கேட்ட சம்பந்தர் பதறி பல்லக்கில் இருந்து கீழே குதித்து அப்பரடிகளை வணங்கினார்.

சிலநாட்கள் கழித்து சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டிநாடு சென்றார். நெடுமாறான் மங்கையர்கரசி, குலச்சிறையார் ஆகியோர் விருந்தினராகத் தங்கி தல யாத்திரை மேற்கொண்டார். திருப்புகலூர் வந்து உழவாரப்பணி செய்து தங்கினார். அங்கு நின்ற தாண்டவம், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆரூயிர் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடினார். அங்கு உழவாரப்பணி செய்தபோது பொன்னும் நவமணியும் வந்தது. ஓடும் செம்பொன்னும் ஒன்றாக கருதிய அப்பரடிகள் அவைகளை தூர எறிந்தார்.

புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு காரணமாக, ‘புண்ணியத்தின் வடிவமாக விளங்கும் பெருமானே, உன் திருவடிக்கு வர நான் விரும்பினேன். என பதிகம் பாடினார், கருவறையில் சோதி எழ அதிற் கலந்து பேறு பெற்றார். 81 ஆண்டுகள் வாழ்ந்த அப்பரடிகள் இறைவன் திருவடியை பணிவதுதான் அவரை அடிய முக்கிய வழியேயன்றி சாதியும் சாத்திரமுமல்ல என்றார்.

                          ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:58

திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

வயல் வழம் கொழிக்கும் மாட மாளிகைகள் நிறைந்த ஆதனூரில் பிறந்தார் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். சிவன்பால் சிந்தை கொண்டிருந்தார். செம்மையான சிந்தனையில் வேறு நினைப்பின்றி ஈசன் திருப்பணியை தமக்கு ஏற்ற வகையில் செய்து வந்தார்.

வைதீஸ்வர கோவிலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் திருப்புன்கூர் சிவலோக நாதரை வணங்க ஆர்வம் கொண்டார். கோவிலைச் சுற்றி வலம் வந்தார். அப்போதிருந்த சமுதாய அமைப்பின் காரணமாக கோவில் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்றார். நந்தி பெரிய நந்தியாகையால் பெருமானை தரிசிக்க முடியவில்லை. காட்சி கிடைக்கவில்லை என மனம் நொந்தார். அவரின் அன்பைக் கண்ட சிவலோகநாதர் நந்தியை விலகச் சொல்லிக் காட்சி தந்தார்,

அவ்வூரில் அடியவர் பயன் பாட்டிற்கும் ஆண்டன் திருமுழுக்கிற்கும் ஓர் குளம் வெட்டினர். சிவத் தலங்களை வழிபடுவதோடு தேவையான தோல், வார், நரம்பு கோரோசனை முதலிய வற்றைத் தந்தும் தொண்டு செய்து வந்தார். என்ன செய்தும் கோவில் உள் சென்று வழிபட முடியவில்லை.

தில்லையில் கூத்தரை வழிபட வேண்டும் என்பது அவருடைய நீண்டகால அவா. அந்த உணர்வு வரும் போதெல்லாம் நம்மால் அது முடியுமா என மாய்ந்து போவார். சந்திப்போரிடம் சிதம்பரம் போவேன் நாளைப் போவேன் என்பார். எப்போதும் இதையே கூறிக் கொண்டிருந்ததால் மக்கள் அவரை திருநாளைப்போவார் என்றனர். ஒருநாள் மிகச்சிந்தித்து இப்பிறவி எப்போது முடியும் எனத் தெரியாது எனவே செய்யும் அறப்பணியை உடனே செய்ய வேண்டும் என்று உடன் புறப்பட்டார் தில்லை நோக்கி.

இந்த உடலோடு புனிதமான தில்லைக்குள் எப்படிச் செல்வது என வருந்தினார். எல்லையிலிருந்தே அழகு தமிழில் பாடி பரவசமானார். கண்ணீர் மல்க தன் நிலை குறித்து வருத்தப்பட்டார். பலநாள் அங்கிருந்தபடியே வழிபட்டார் நந்தனார். ஒருநாள் இரவு கூத்தபிரான் தோன்றி நந்தனே உன் விருப்பப்படி முப்பரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் புரிந்தார், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி உண்மைத் தொண்டன் ஊரின் எல்லையில் தன் உடம்பு கீழானது எனக் கூறி தங்கியுள்ளான். நீங்கள் எரியமைத்து அதில் மூழ்கச் செய்யுங்கள். தூய உடம்பு பெற்ற அவரை நம் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் என்றார்.

அடுத்த நாள் தில்லைவாழ் அந்தணர்கள் இறை சொன்னவாறே சென்று நந்தனாரை தூய்மைப்படுத்தி அழைத்து வந்தனர். கோபுரதரிசனம் கண்டார். இறைவனைக் காண ஓடினார். மூல கருவறையில் சென்று மறைந்தார். நந்தனாரை யாரும் அதன்பின் காணவில்லை.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:55

திருநீலகண்ட நாயனார்

43. திருநீலகண்ட நாயனார்

தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்- திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது நீலகண்டம் எனச் சொல்லித் திருவோடு வழங்குவது வழக்கம். தெய்வ நலமே சிறந்த நலம் என வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்வு இனிது நடைபெற்றது.

திடீரென்று நீலகண்டர் ஒரு பரத்தைபால் சென்று மீண்டார். வாழ்வில் புயல் மையம் கொண்டது. கணவன் மனைவி இருவருக்குமிடையே பெரும் தடைச் சுவர் ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை. ஆனால் நீலகண்டரின் பூசைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அலட்சியமில்லாமல் பாங்குடன் செய்தார். குறிப்பறிந்து பக்குவமாக செய்தார். ஆனால் உடலுறவுக்கு மட்டும் இசைய வில்லை.

பிரச்சனை நாளுக்குநாள் நீண்டு கொண்டே போக அதை முடிவுக்கு கொண்டுவர நினைத்தார் நீலகண்டர். ஒரு நள்ளிரவு நேரம். கணவன் மனைவி இருவர் மட்டும். தனிமையைப் பயன்படுத்தி மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தார். எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை யாகையால் மனைவிதானே என்ற உரிமையில் பலவந்தமாக அணைக்க முற்பட்டார். அதுவரை அமைதிகாத்த அம்மையார் “எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்றார்.

திருநீலகண்டம் என்ற மந்திரச் சொல்லான இறைவன் நாமத்தைக் கேட்ட நீலகண்டர் இடி கேட்ட நாகம் போல் ஆகி மனைவி என்பதனை மறந்து இதுகாறும் காணாத ஒரு பெண்ணைப்போல் நோக்கினார். அம்மையே, இனி உங்களை மட்டுமல்ல பெண் குலத்தையே இனி என் உடலால் மட்டுமல்ல மனத்தாலும் தீண்டேன் என்றார்.

ஆண்டுகள் பல ஆயின. இருவரும் சத்ய வாழ்வு வாழ்ந்தனர். முதுமையை அடைந்தனர். பெருமான் இவர்களின் சத்திய வாழ்வினை உலகறியச் செய்ய நினைத்தான். நாடகம் நடத்த அடியவர் வடிவில் வந்து திரு நீலகண்டரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து இதை பாதுகாத்துவரும்படிக் கூறினார். இதுவரை ஓடு கொடுத்தவர் அடியவரின் வேண்டுகோளினை ஏற்று ஓட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல நினைத்தபோது அவ்வடியவர், நீலகண்டரே இது சாதாரண ஓடு இல்லை. இதில் போடும் பொருள்களை தூய்மை செய்யும் அற்புதமான ஓடு. கவனமாக பாதுகாக்க என்றார். அவ்வண்ணமே அதை மிகவும் பாதுகாப்பாக வீட்டில் வைத்தார்.

சிறிது காலத்திற்குப்பின் அவ்வடியவர் வந்து ஓட்டைத் திருப்பிக் கேட்க உள்ளே சென்றுபார்த்த நீலகண்டர் தான் வைத்த இடத்தில் அது இல்லாததால் குழம்பினார். வீடு முழுவதும் தேடி இல்லை என்றபின் அடியவரிடம் நீங்கள் கொடுத்த ஓட்டைக் காணவில்லை அதற்கு மாறாக வேறு ஓடு தருகிறேன் ஏன்றார். அப்படியென்றால் நான் கூறுவது உண்மை என உன் புதல்வன்மேல் சத்தியம் செய் என்றார் அடியார். ஐயா தாங்கள் சொல்லியவாறு உறுதி செய்ய எனக்கு புத்திரப் பாக்யமில்லை என்றார். அப்படியானால் உன் அன்பு மனைவியின் கையைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார். அடியவரே எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சபதத்தால் என் மனைவியை தீண்டி உடன் மூழ்க முடியாது. நான் வேண்டுமானால் தனியே மூழ்கி உறுதி செய்கிறேன் என்றார். இதை ஏற்காத அடியவர் வழக்கு மன்றம் சென்றார்.

அடியவர் தான் ஒடு கொடுத்தது. நீலகண்டர் அது காணாமற் போய்விட்டது என சொல்லியதால் மகன் அல்லது மனைவி உடன் சத்தியம் செய்யச் சொன்னது அதற்கு அவர் கூறும் காரணம் ஆகியவற்றைக் கூறினார். நடுவர்கள் நீலகண்டரின் வாக்கு மூலம் கேட்டனர். வைத்த இடத்திலிருந்து ஓடு காணாமற்போனது மாயமாய் உள்ளது என்ற நீலகண்டரிடம் நடுவர்கள் உன்மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்குவதுதான் முறை எனத் தீர்ப்பளித்தனர்.

அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும்போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர்.

‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.

*****

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:54

திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

44. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை அடைந்தனர். நீலகண்டயாழ்ப்பாணர் தம்பிறப்பால் உள்ளே சென்று பாடமுடியாத நிலையில் கோவிலின் வாயிலிலே யாழிசைத்து மெய்யுருக பாடினார். அந்த இசை கேட்டு மகிழ்ந்த இறைவன் இரவு தொண்டர் கனவில் தோன்றி யாழ்ப்பாணரை தமது திருமுன் கொண்டுவந்து பாட பணித்தான். பாணர் கணவிலும் தோன்றி பணித்தான். இறைவன் புகழை பண்ணிசைத்து பாடினான். தரை ஈரமாயிருந்தது. இறைவன் அசரீரியாக தரையில் கீதம் தாக்குமானால் சந்தயாழ் நரம்பு தளர்ந்து நெகிலும் எனவே பாணர்க்கு பலகையிடுமாறு கூறினான்.

பலதலங்களில் யாழிட்டு புகழ்பாடி வணங்கி இசைத்தொண்டு செய்து இருவரும் சீர்காழி வந்தனர். சம்பந்தப்பெருமான் தன் பாடல்களுக்கு யாழில் இசை கூட்டச் சொன்னார். அவருடன் இருந்து தம் தொண்டினை செய்து ஞானசம்பந்தருடன் நல்லூர் பெருமனத்தில் சிவ ஜோதியில் கலந்தார்கள்,

                                  *****

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:52

திருநீலநக்கநாயனார்

45. திருநீலநக்கநாயனார்

நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் உள்ள சாத்தமங்கையில் நீலநக்கர் பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இறைவன் அயவந்திநாதர், அம்பிகை மலர்கண்அம்மை. அடியவர்களை போற்றுவதும் பெருமானை அர்ச்சிப்பதுமே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்தார்.

திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்கு உரிய நாள். 27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருஆதிரை இரண்டும் சிறப்பானது. சிவனுக்கும் அடியவர்க்கும் உகந்தநாள் ஆதிரை. இந்த நாளில் சிவபூஜை செய்ய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு கோவிலில் பூஜை செய்தார். இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வலம் வந்தார். அப்போது இறைவன் மேல் ஓர் சிலந்தி விழுந்தது. அதைக் கண்ட அம்மையார் சிலந்தியினால் இறவனுக்கு பங்கம் எனநினைத்து வாயினால் ஊதித் தள்ளினார். சிலந்தி கீழே விழுந்தது. இதைக் கண்ட நீலநக்கர் அறிவில்லாமல் நீ இப்படி செய்து இறைவன் மேனியை எச்சில் செய்தாயே என வருந்தி இனி உன்னை நான் துறந்தேன். இனி உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்றார். சென்றார். மாலையாயிற்று. அம்மையார் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. கோவிலிலேயே தங்கினார். நீலநக்கருக்கு உறக்கத்தில் ஓர் கனவு தோன்றியது. அவந்திநாதர் தோன்றி நீல நக்கரே, உன்மனைவி ஊதி அவள் எச்சில் பட்ட இடம் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. எனக்கூறி திருமேனி காட்டி உண்மையைக் கூறினார். விடிந்தது. நீலநக்கர் பெருமானை வணங்கினார், அம்மையாரை விட்டிற்கு கூட்டிவந்தார்.

ஞானசம்பந்த பெருமான் காலத்தவர். அவருடன் நெருங்கிப் பழகியவர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தைக் கண்டு களிக்க திருப்பெருமணநல்லூர் அடைந்து திருமணத்தை நடத்திவைத்தார்.

ஞானசம்பந்த பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்து ஐக்கியமானார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 00:00

திருமூலநாயனார்

46. திருமூலநாயனார்

கயிலைவாழ் சித்தர்களில் நந்திதேவரருள் பெற்ற மாணாக்கர் சுந்தரநாதன். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சிறந்த சிவயோகி. அவரின் நண்பர் அகத்தியர். அவர் பொதிய மலையில் எழுந்தருளியுள்ளதால் அவரோடு சில நாள் தங்கியிருக்க எண்ணம் கொண்டு கயிலையிலிருந்து புறப்பட்டார். திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி(அவிமுத்தம்) விந்தியமலை, ஆகிய தலங்களில் வழிபாடு செய்து திருப்பருப்பதம், திருக்காளத்திநாதர், காஞ்சி ஏகாம்பரநாதர் ஆகிய தலங்களிலும் முப்புரமெறிந்த திருவதிகை நாதரை வழிபட்டு திருபெரும்பற்றப்புலியூரில் சிவானந்த திருக்கூத்தினை கண்டு களித்து காவிரியில் நீராடி தென்கரையில் உள்ள திருவாவடுதுறை அடைந்தார்.

அங்கு காவிரிக்கரையில் இடையர்குல மூலன் விடம் தீண்டி உயிர் துறக்க பசுமாடுகள் அவன்மேல் கொண்ட அன்பால் அவனைச் சுற்றிவந்து அழுது கொண்டிருந்ததை பார்த்தவர் தன் மேனியை ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் மூலம் மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தார். பசுக்கள் சந்தோஷமடைந்தன. மாலை வந்ததும் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூர் நோக்கி செல்ல மூலரும் பின் தொடர்ந்தார். பசுக்கள் யாவும் அதனதன் வீட்டிற்கு சென்றன. வீதியில் நின்ற அவரை பசுக்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் மூலன் வரவில்லை என்பதால் அவனைத் தேடிவந்த அவன் மனைவி அவன் வீதியில் நின்றிருப்பதைக் கண்டு அவன் அருகில் வர விலகி நின்றார். அவளை நோக்கி நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக்கூறி வீட்டிற்கும் செல்லாமல் மண்டபத்தில் யோகத்தில் இருந்தார். அவர் மனைவி அவர் வீட்டிற்கு வரமறுப்பதை ஊர் பெரியவர்களிடம் கூற யோகியரைக் கண்டு வந்தவர்கள் உண்மையறிந்து அப்பெண்ணைக் கூட்டிச் சென்றனர். அடுத்த நாள் காலை யோகி பசுக்கள் வந்தவழி சென்று தாம் மறைத்துவைத்த இடத்தில் தன் உடம்பு இல்லாதது கண்டு சிவபெருமான் உடலை மறைத்தது கண்டு அவர் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருளை எல்லாம் தமிழ் ஆக்க எம்பெருமான் இவ்வுடல் தந்துள்ளார் என்பதை முற்றுணர்வினால் உணர்ந்தார். பின் தொடர்ந்த ஆயர் குலத்திற்கும் தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என உணர்த்தினார்.

திருவாவடுதுறையை அடைந்து பெருமானை வணங்கி கோவிலின் மேற்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் அமர்ந்து சிவயோகத்தில் இறையுடன் ஒன்றினார். இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையாக விரிந்து மலரும் நல்ல திருமந்திரமாலை என்ற நூலை ஆண்டுக்கு ஒருமுறை ஒருபாடல் வீதம் 3000 பாடல்கள் அருளினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சொற்தொடரை தந்தவர் திருமூலரே. சைவ சித்தாந்தங்களுக்கு முன்னோடி திருமந்திரம்.

திருவாவடுதுறை- கோமுக்தீஸ்வரர்- திருமூலர் பசுக்களுக்கு உதவி செய்ததைக் குறிப்பிட பெயர் பெற்றது.     

******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

                                                                                                                             

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:48

நமிநந்தியடிகள்நாயனார்

47. நமிநந்தியடிகள்நாயனார்

திருவாரூருக்கு தெற்கே எழு கி,மீ, தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின் அந்தணர் குலத்தில் நமிநந்தி பிறந்தார். அந்த ஊர் மக்கள் சத்திய வாழ்வு வாழந்து வருபவர்கள். வேதநூல்களின் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பவர்கள். திருநீறே மெய்ப்பொருள் என்ற அறிவுடையவர்கள். நமிநந்தி நாளும் அருகில் உள்ள ஆரூர் சென்று புற்றிடங் கொண்டாரை வழிபட்டு வந்தார்.

ஒருநாள் ஆரூர் சென்ற நமிநந்தி புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு முடிந்ததும் மதிலுக்கு வெளியில் வந்தார். அங்குள்ள ஆரூர் அறநெறி கோவிலில் வணங்க நினைத்தார். கோவிலின் உள் சென்று பெருமானை வழிபட்டார். அப்போது விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்றாயிருக்கும் என நினைத்ததால் ஊருக்குச் சென்று நெய் கொண்டுவந்து விளக்கு எரிக்க முடியாது என்பதால் அருகிலுள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் அந்த வீட்டின் பெரியவர் உங்கள் சிவன் கையில் நெருப்பை ஏந்தி இருக்கும்போது விளக்குக்குப் பஞ்சம் ஆகிவிட்டதா, இங்கு நெய் இல்லை என்றார். அப்படி உனக்கு விளக்கு எரிக்க வேண்டு மென்றிருந்தால் தண்ணீர் ஊற்றி எரியும் என்று ஏளனம் செய்தார்.

அந்த ஏளனம் கேட்டு வருத்தத்துடன் குளக்கரை வந்தார். அப்போது வானில் ,அடிகளே கவலையை விடு, உன் திருவிளக்குப்பணி நிகழ நெய்தானே வேண்டும், குளத்தின் நீரை விட்டு விளக்கு எரிப்பாயாக’ என்று ஒலித்தது. நமிநந்து உள்ளம் மகிழ்ந்து குளத்தில் மூழ்கி நடுக் குளத்திலிருந்து நீர் கொண்டு விளக்கில் ஊற்றி எரித்தார். பெருமானின் அருள் கண்டு மகிழ்வுற்றார். உலகம் வியக்க அது சுடர்விட்டு எரிந்தது. ஏளனம் செய்த சமணர் வெட்கப் படும் படியாக விடியும் வரை விளக்கு எரித்தார், தினமும் இப்பணியைத் தொடர்ந்தார். “நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே” என நாவுக்கரசு பாடினார்.

திருவாருக்கு அருகில் உள்ள மணலியில் ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப்பெருமான் எழுந்தருள்வார். நமிநந்தியடிகளும் சென்று வழிபட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவியிடம் வெந்நீர் வை பல ஜாதியரும் வந்திருந்தனர், நான் குளித்துவிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்றார். அப்படியே திண்ணையில் படுத்துறங்கினார். கனவில் ‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்,’ என்றார் பெருமான். நமிநந்தி தான் செய்த பெருந்தவறை எண்ணி வருந்தினார், திருக்கோவிலுக்கு வந்தவர் யாராயிலும் அவர்கள் அடியார்கள் எனக் கருதவேண்டும் என உணர்ந்தார். குளிக்காமல் எழுந்து வழிபாடு செய்து மீண்டும் திருவாரூர் சென்றார்.

திருஆரூரில் பிறந்து வாழும் எல்லோரும் அடியார்களாகவும் ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சி கண்டார். எம்பெருமான் முன் வீழ்ந்து மன்னிக்க வேண்டினார். திருவாரூரையே இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டுகள் செய்தார், அங்கு பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்தது நமிநந்தியாரே, பலகாலம் தொண்டு செய்து இறைவன் அடிசேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:46

நரசிங்கமுனையரைய நாயனார்

48. நரசிங்க முனையரைய நாயனார்

நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாருரில் வாழும் ஆருரரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம். அன்று வழிபடுதல் சிறந்த பலனாகும். மார்கழி திருவாதிரையில் கூத்தபிரான் சிறப்பு வழிபாட்டுடன் வீதியுலா வருவது சிறப்பானது.

நரசிங்க முனையரையர் ஆதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்து பொற்காசு கொடுத்து தொண்டு செய்தார். நாட்டில் வளம் பெருகியது. மக்கள் குறையின்றி வாழ்ந்தனர். எப்போதும்போல் அந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடினர். அடியார் திருக்கூட்டத்தில் ஒரு காமுக வேடம் கொண்ட ஒருவனும் கலந்து கொண்டான். மற்றவர்கள் அவரைக்கண்டு ஒதுங்கினார்கள்.

நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி நீங்கள் அவரை இகழக்கூடாது. திருநீறு அணிந்தால் யாராயிருந்தாலும் அவரை நாம் போற்றி பூசிக்க வேண்டும் என்று கூறி அக்காமுகருக்கு இருமடங்கு பொன் கொடுத்து அனுப்பினார். பல ஆண்டுகள் அடியார் தொண்டும் இறைதொண்டும் செய்து இறையடியை அடைந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:44

நின்றசீர்நெடுமாறநாயனார்

49. நின்றசீர்நெடுமாறநாயனார்

கூன் பாண்டியன் மதுரையை அரசு புரிந்து வந்தார். துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார். நின்ற சீர் நெடுமாறன் சமணத்தை தழுவியிருந்தார், துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவத்தைப் போற்றினர். மன்னன் சமணத்தை சார்ந்திருந்ததால் சமணர்கள் கை ஓங்கியிருந்தது.

இதை சரிசெய்ய மங்கையர்கரசியார் குலச்சிறையர் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அவர் தங்கியிருந்த மாளிகையை மன்னர் விருப்புடன் சமணர்கள் தீக்கிரையாக்கினர். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. தன்னுடன் வந்த அடியர்களையும் துன்புறத்த காரணமாகிய சமணர்களுக்கு ஊக்கம் கொடுத்த கூன் பாண்டியனை அந்த வெப்பம் சாரட்டும் என ஞானசம்பந்தர் பாட வெப்ப நோயால் அவதிப்பட்டான் மன்னன். நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.

ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய் சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குண்மடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அவர்களின் மந்திரநீர் சுட்டது.

வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மை சமயம் என்றனர்.

மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்றபாட்டினை தீயில்பொட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.

ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான்.குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இனைந்து திருத்தொண்டுகள் பல செய்தான். கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என அழைக்கப்பட்டான்.

வடபுலத்து பகை மன்னர் திருநெல்வேலியில் நால்வகைச் சேனையுடன் போர் தொடுக்க வெற்றி பெற்று ஆலயப்பணிகளில் தன் முழுகவனத்தைச் செலுத்தினார். திருநீற்றின் பெருமையை விளக்கி அனைவரும் திருநீறு பூசச்செய்தார். பல ஆண்டுகள் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

மதுரை- மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில்- பொற்றாமரைக்குளம்- கூன்பாண்டியன் சன்னதி

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:42

நேசநாயனார்

50. நேசநாயனார்

காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும் கொடுத்து சிவனடியார்களுக்கு உதவி செய்து வந்தார். இறுதியில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

கொரநாடு மாயவரம்- புணுகீஸ்வரர் சாத்த நாயகி- நேச நாயனார் கோவில்

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952414
All
26952414
Your IP: 3.81.184.170
2024-03-29 19:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg