gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:41

புகழ்ச்சோழநாயனார்

51. புகழ்ச்சோழநாயனார்

திருச்சி அருகிலுள்ள உறையூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழர். சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுபித்து நாளும் வழிபாடுகள் சிறப்புற நடைபெற வழி வகுத்தான். புகழ்ச் சோழர் கொங்கு நாட்டிலும் ஏனைய சிற்றரசர்களும் கப்பம் கட்டவேண்டும் என எதிர்பார்த்தார். கருவூர் சென்று பல நாட்கள் தங்கி பசுபதீசுவரரை வழிபட்டார்.

அங்கு சிற்றரசர்கள் கொண்டுவந்த திறைப் பொருட்களைப் பார்த்தார். தமது ஆட்சிக்கு கட்டுப்படாமல் இருப்பவர் யாரென விசாரித்து அது மன்னன் அதிகன் என அறிந்து அவன் மேல் படையெடுக்க உத்தரவிட்டார். நால்வகைப் படைகளும் சென்று அதிகனை வென்று நவநிதிகளையும் மாண்ட வீரர்கள் தலையையும் கொணர்ந்தனர்.

நவநிதிகளைப்பார்த்த மன்னன் அதனிடையில் சடைமுடியும் திருநீறும் அணிந்த தலையைக் கண்டு மனம் நடுங்கினார். கண்ணில் நீர் வழிந்தது. சிவனடியாரை என் ஆட்சியில் வெட்டியும் என் இதயம் வெடிக்காமல் இருக்கின்றது. அடியாரை கொன்ற பாவத்திற்கு ஆளானேன். அமைச்சர்களை நோக்கி இனி இந்த ஆட்சியை நீங்கள் அறநெறி தவறாது நடத்தி உரிய வேளை வந்ததும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள் என்று கூறினார்.

ஆநிலையப்பர் கோவிலுக்குமுன் தீமூட்டி உடல் முழுக்க திருநீறு பூசி சிவனடியாரின் தலையை ஒரு தட்டில் தலைமேல் வைத்துக்கொண்டு குண்டத்தை வலம்வந்து நெருப்பில் புகும்போது மலர்மழை பொய்து வானில் தேவ துந்துபிகள் முழங்கியது. புகழ்ச்சோழர் இறையடி சேர்ந்தார்.

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:40

புகழ்த்துணைநாயனார்

52. புகழ்த்துணைநாயனார்

அரிசில்பரைப்புத்தூர்- அழகாப்புத்தூரில் புகழ்துணையர் பிறந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார்.

ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விக்கும்போது பசியின் மிகுதியால் உடலில் சோர்வு ஏற்பட்டு தண்ணீர் குடத்தை தாங்க முடியாமல் இறைவன் திருமுடி மேல் விழுந்தது. வேதனையடைந்து மயங்கி வீழ்ந்தார். அப்படியே மயக்கத்தில் அயர்ந்துவிட்டார். இறைவன் அவர் கனவில் தோன்றி பஞ்சம் நீங்கும் வரை உனக்கு ஓர் காசு நாள்தோறும் வைப்போம் என அருள் செய்தார்.

கண்விழித்தார். இறைவன் கருணையை எண்ணி உருகினார். பீடத்தின் கீழ் ஓர் காசு இருந்தது. அதைக் கொண்டு தினமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 00:00

பூசலார்நாயனார்

53. பூசலார்நாயனார்

திருநின்றவூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் பூசல் பிறந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது என்ற தன் முடிவு வீணாகாமல் புறத்தே கட்ட முடியவில்லை என்றாலும் அகத்தே கட்டத் தொடங்கினார்.

தன் மனத்திலே நிதி சேர்த்தார். செங்கல், சுண்ணாம்பு, மரங்கள் எல்லாவற்றையும் நினைத்து மனத்திலே தேடிக்கொண்டார். அடிக்கல் நாட்டுவது முதல் அடுத்தடுத்து கட்டடங்களை தன் மனத்திலே கட்டினார். பல நாட்கள் சிந்தித்து புறக்கோவிலை விட அகக்கோவிலை சிறப்பாக வடிவமைத்தார்.

இதே சமயத்தில் காஞ்சியில் காடவர்கோன் மன்னன் திருக்கோயில் கல்லிலே அமைத்தான். கயிலாயநாதர் கோவில் என்று அழைத்தான். அற்புதமான சிற்ப வேலையும் கலை நுணுக்கமும் கொண்டதாக அமைந்தது கோவில். கோவில் பணிகள் முடிந்ததும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுக்கு நாள் குறித்தான். அதே நாளில் பூசலார் தன் மனக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த எண்ணியிருந்தார்.

அன்று இரவு மன்னன் கனவில் பெருமான் தோன்றி, ’நீ கட்டிய கற்கோவிலுக்கு அன்று நான் வரமுடியாது, என் அன்பிற்கினிய திருநின்றவூர் பூசலார் திருக்கோவிலுக்கு அந்த வேளையில் செல்ல வேண்டி யிருப்பதால் நீ இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்’ என்றார்.

கண் விழித்த மன்னவன் பெருமானே வலிந்துபோய் அருள் செய்கின்ற திருக்கோவிலைக் கட்டிய அடியாரை நான் வணங்க வேண்டும் என திருநின்றவூருக்குச் சென்றான். பூசலார் அமைத்த அருள் கோவில் எங்கே என மறையவர்களைக் கேட்டான். அப்படி ஒரு கோவிலும் இல்லை என்றனர். மன்னரே இருங்கள் பூசலாரை வரச்சொல்கிறோம் என்றனர். மன்னவன் பூசலார் இருக்குமிடம் சொல்லுங்கள். அவரை அழைக்ககூடாது. அவர் ஈசனின் அன்பர். அவரை நாம் வணங்க வேண்டும். நான் அங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு அங்கு சென்றார்.

ஊர்மக்கள் பூசலாரைக் காட்ட மன்னர் நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். நீங்கள் பெருமான் எழுந்தருள கட்டிய கோவில் ஏது அக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்து அருள தெரிந்து உம்மைக் கண்டு பணிவதற்கு வந்தேன் என்றார். மன்னர் கூறியதைக்கேட்டு அச்சத்தினால் பூசலார், என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு எம்பெருமான் அருள் செய்தார் என்றால் என்னால் பொருள் சேர்க்க இயலாமையால் மனத்தினால் அமைத்த கோவில் அது என்று அந்த அமைப்பினை விரிவாக மன்னனுக்கு கூறினார். மன்னவன் அடியவரின் பக்தி என்னே என்று மீண்டும் தரையில் வீழ்ந்து வணங்கினான். காஞ்சி திரும்பினான். பூசலார் தன் மனக்கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டு அவனடி சேர்ந்தார்.

திருநின்றவூர்- இருதயலீஸ்வரர் கோவில்- உள் சன்னதியில் இறைவன் அருகிலே பூசலார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:35

பெருமிழலைக்குறும்ப நாயனார்

54. பெருமிழலைக்குறும்ப நாயனார்

தன்னால் பிடிக்க முடியாது போன காட்டுமுயலை பிடிக்க காலையில் சென்ற சிறுவன் கல் ஆயுதம் கொண்டு முயல் பதுங்கிய இடத்தை தோண்ட ஓர் நிலையில் கல் ஆயுதம் சிக்கிக் கொள்ள அதை சிரமத்துடன் ஆட்டி வெளியில் எடுத்தான் அங்கு ஓர் கல் தென்பட்டது. கல் ஆயுதத்தால் குத்தியபோது அது கல்லோடு மோதிய சத்தம் கேட்கவில்லை. அப்போது அக்கல்லிருந்து ஓர் ஒளி வெளிவந்து சிறுவனைச் சுற்றி அவனுள் மறைந்தது. தன்னிடமிருந்த மாட்டுக் கொம்பை எடுத்து ஊத ஊர் மக்கள் அங்கு திரண்டனர். பெரியவர் ஒருவர் உள்நோக்கி அது குன்றவில்லி சடைசாமி என்றார். உடன் அனைவரும் வணங்கி அந்த இடத்தைத் தோண்டினர். லிங்கம் தெரிந்தது. சிறுவன் தன் மீது பட்ட ஒளியால் தியானத்தில் அமர்ந்தான். பல வருடங்கள் சென்றன. சிவனடியாரன அவரை பெருமிழலைக் குறும்பர் என்று வணங்கினர். தமிழகத்தில் உள்ள cஇவாலயங்களை தரிசிப்பதும் பின் மிழலையூர் தங்குவதுமாக இருந்தவர் திருவீழிமிழலை திருத்தலத்தில் தங்கி சிவத் தொண்டு செய்து வந்தர். சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாகவும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தி எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்து அட்டமா சித்திகள் கை வரப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரம். அதற்கு முந்தைய நட்சத்திரமான சித்திரையில் பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை நடக்கின்றது.மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடி ஒரு சிறுவனை பூசாரியாக தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் மீண்டும் கூடி வேறு ஒரு சிறுவனை பூசாரியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்ட பெருமிழலைக் குறும்பர் இங்கு வீரபத்திரராக வழிபடுகின்றனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாக கட்டப்பட்டது. பிற்காலத்தில் இச்சோழன் பெருமிழலை என்று ஓர் ஊரை மிழலை நாட்டில் புதுக்கோட்டையிலிருந்து பேறையூர் செல்லும் வழியில் உருவாக்கி பெருமிழலை குறும்நாயனாரின் புகழ் பரவ வழி செய்துள்ளான். பெருமிழலை குறும்நாயனார் அவதரித்த முக்தியடைந்த ஊர் மிழலையூர்.

குருவே சிவம் என்ற கொள்கையுடையவர். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும் மனத்தால், குருவை நினைத்து வழிபட்டு பெறவேண்டியதைப் பெறலாம். இவர் நம்பி ஆரூரர் (சுந்தர மூர்த்தி நாயனார்) என்பவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். கையாற் தொழுது வாயாற் புகழ்ந்து கருத்தால் எண்ணி வழிபடுபவர்.

நம்பியாருடைய நாமத்தை ஜெபித்து வந்ததால் அட்டமாசித்திகள் கைவரப்பெற்றார். இறைவனுடைய திருநாமம் ஐந்தெழுத்து. அதைப் போன்றே குரு பஞ்சாட்சாரமாகிய அப்பரடிகள், திருநாவுக்கரசு என்ற குரு நாமத்தை எழுதி சொல்லி தியானித்து சித்திகள் பெற்றார். அனிமா, மகிமா, லகிமா, கறிமா, பிராத்தி, பிறாகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்ற எட்டும் அட்டமா சித்திகளாகும்.

குறும்பர் அடியவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். அப்போது நம்பிஆரூரர் கொடுங்கோலூரை அடைந்தார். அஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடியபோது பெருமான் வெள்ளையானையை அனுப்பி ஆரூரரை கயிலை சேர்த்தார். நாளை தன் குருநாதர் ஆரூரர் கயிலை செல்வார் என தன் யோக நெறியால் முதல் நாளே உணர்ந்தார். கண்ணில் மணியிழந்து ஒளியிழந்து வாடுகின்ற சில குருடர்களைப்போல் நான் குருநாதர் கயிலை சென்றபின் வாழமாட்டேன். கண் நான். ஒளி குருநாதர். என் அகக்கண் ஒளி இழந்துவிடும். எனவே சிவன்தாள் இன்றே சென்று அடைவேன் என்றார்.

யோகமுறை கற்றதனால் பிரமநாடிவழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதி மண்டலத்தில் செலுத்தி பிரவணத்தால் திறக்கப்பட்ட கபால நடுவாயிலின் மூலம் முதல்வன் திருப்பாதங்களை ஒளிவடிவாக சென்று அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:33

மங்கையர்க்கரசி நாயனார்

55. மங்கையர்க்கரசி நாயனார்

மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற் பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை சார்ந்தவரானார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது.

திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அவரை அழைத்து பாண்டிய நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தை போக்கவும் தன் கணவர் கூன் பாண்டியனை சமணத்தில் இருந்து மாற்றவும் சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவேண்டினர்.. ஞான சம்பந்த பெருமான் மதுரைக்குவந்து ஆலவாய் பெருமானை பார்க்க விழைகிறார். அம்பிகையைக்கூடப்பாடாத சம்பந்தர் அங்கு பாடிய பதிகத்தில் மங்கையர்கரசியரைப்பற்றி இரண்டு வரிகள் பாடினார். வளவர் திருக்கொழுந்து என்ற பாராட்டைப் பெற்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்த்து அவனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்.

பாண்டிய நாட்டில் சைவம்தழைக்க பாடுபட்டவர். பல ஆண்டு சைவம் தழைக்கசெய்து இறையடி சேர்ந்தார்.

மதுரை- மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில்- பொற்றாமரைக்குளம்- மங்கையர்கரசி சன்னதி

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:31

மானக்கஞ்சாறநாயனார்

56. மானக்கஞ்சாறநாயனார்

காஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். அந்தக் குலத்தின் தலைவர். மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்மை யுடையவர்.

அவருக்கு ஒரே ஒரு குறை. அது மகவு இல்லை என்பதாகும். தவம் மேற்கொண்டு பெருமான் கருணையினால் பெண் குழந்தையை அடைந்தார். அப்பெண் வளர்ந்து பருவமடைந்தார். நீலகண்டபெருமான்மேல் அளவுகடந்த பக்திகொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பெரியோர்களால் மணம் பேசி முடிக்கப்பட்டது.

மகிழ்ச்சி வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. மணமகள் வீடு திருமணக்கோலம் பூண்டது. மானக்கஞ்சாறனார் தன் ஒரே செல்ல மகளின் மணத்தை ஊர் போற்ற சிறப்புற நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். பெருமான் தொண்டர்கள் விருப்பம் எதுவாயினும் குறிப்பறிந்து கொடுத்து மகிழும் மானக்கஞ்சாறனார் பண்பை உலகறியச் செய்ய முடிவு செய்தார். மாவிரதியர் கோலத்தில் கஞ்சாறு நோக்கிப் புறப்பட்டார். அடியாரை மானக்கஞ்சாறனார் வரவேற்று உபசரித்தார்.

மானக்கஞ்சாறனார் இல்லத்தில் உள்ள அனைவரையும் அடியாரை வணங்கி ஆசி பெறச் சொன்னார். மணப்பெண்ணையும் வணங்கச் சொன்னார். அவரும் வணங்கினார். தவமாவிரதியர் கோலம் கொண்ட அடியவர் மணப்பெண்ணின் மயில் போன்ற சாயலும் மேகம் போன்ற கருத்த அடர்ந்த நீண்ட கூந்தல் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். அடியவர் தம் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையுடைய மானக்கஞ்சாறனார் மகளின் திருமணநாள் என்றும் பாராமல், மணமகன் வீட்டார் என்ன சொல்வார் என்றும் பாராமல், மணமகன் என்ன நினைப்பார் என்றும் பாராமல், அடியவர் குறிப்பறிந்து ஈயும் பண்பு தலைதூக்க ஒரு கத்தியை எடுத்து வந்து மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியுடன் அறுத்து அடியவரின் கையில் கொடுத்து வணங்கினார்.

அதை வாங்குவதுபோல் நின்ற அடியவர் அம்பிகையுடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்தார். மணமகள் கூந்தல் பெருமான் கருணையினால் வளர்ந்தது. அன்பனே ‘நம்பாலும் நம் அடியர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். உமக்கு நம் புவனத்தில் இடம் கொடுத்தோம்” என அருள் செய்தார்,

மணக்கோலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் வந்தார். நிகழ்வுகளைக் கேட்டு மாவிரதியாய் வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என வருந்தினார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:29

முருகநாயனார்

57. முருகநாயனார்

திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் பிறந்தார் முருகர். மறையவர் குலத்தில் பிறந்தவர். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர்.

நால்தோறும் நால்வகை மலர் கொய்து வண்ணவகையாக்கி பெருமானுக்கு அணிவித்து மகிழுவார். இத் தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாக நினைத்தார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பு, நிலப்பூ என்ற நான்வகை மலர்களால் அறுவகை மாலைகளை தொடுத்து அணிவித்து வழிபடுவது வழக்கம்.

ஞான சம்பந்தரை தம் நண்பராகப் பெற்றார். முருகர் பெருமானை அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்டு கண்குளிர களிப்பாரம். நாளும் தொண்டு செய்து வந்தவர் ஞான சம்பந்தப் பெருமான் திருமணநாளில் அப்பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்தார்.

திருப்புகலூர்- அக்னீஸ்வரர் திருக்கோவில்- முருகநாயனார் கோவில்

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 10:15

விறன்மிண்டர்

63. விறன்மிண்டநாயனார்

சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார். பெருமானை வழிபட்டு அடியார்களோடு தேவாசிறிய மண்டபத்தில் கூடி சிவ நெறி தழைக்க பணிபுரிந்து வந்தார்.

ஒருநாள் மண்டபத்தில் எல்லோரும் பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆரூரர் இவர்களைத் தொந்திரவு பண்ணக்கூடாது என ஒதுங்கி இறைவனை வழிபடச் சென்றார். இந்த அடியவர்களுக்கு சேவை செய்யும் நாள் என்றோ என நினைத்தார். ஒரு அடியார் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போவதைக் கண்ட விறன் மிண்டர் அவர் யார் என்றார். இறைவன் ஒலையைக்காட்டி அடிமை கொண்ட ஆரூரர் என்றனர். யாரானல் என்ன. அடியார் திருக்கூட்டத்தை மதியாரை இக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். உடனே மற்றவர்கள் என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். அவர் புற்றிடம் கொண்டாருக்கு வேண்டியவர். அவர் தம்பிரான் தோழர் என்றனர். அப்படியானால் அந்த ஆண்டவரையும் இக்கூட்டத்திலிருந்து விலக்குகின்றேன் என முழக்க மிட்டார். ஆண்டனையே ஒதுக்கி வைத்த வீரத்திருத்தொண்டர் விறன்மிண்டர்.

அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே ‘”தில்லைவாழ் அந்தணர்” என்றார்.

ஆரூரர் திருவொற்றியூரில் தொண்டு செய்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த சங்கிலியரை மணம் முடிக்க சிவன் தூது சென்றது விறன்மிண்டருக்கு மிகுந்த வெறுப்பை ஆரூரர்மேல் ஏற்பட வைத்தது. அது இறைவனின் திருவிளையாடல் என்பதை அறியவில்லை. ஆனால் ஆரூரர் திருவாரூரில் இருப்பதால் அவருக்கு திருவாரூர் என்றாலே ஒருவித கசப்புணர்வு கொண்டிருந்ததால் ஆரூரர் இருக்கும்வரை இம்மண்ணை மிதிக்கமாட்டேன் என சபதம் செய்து விறன்மிண்டர் சிறிதுகாலம் கலிக்காமர் விருந்தினராக பெருமங்கலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே சிவத்தொண்டு செய்து வந்தார்.

திருவாரூரைச் சேர்ந்த எந்த ஒரு சிவனடியாரோ தம்மிடம் அருளோ பொருளோ கேட்க வந்தால் அவரை பரசாயுதம் கொண்டு கொன்றுவிடுவது என்று முடிவு கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு உதவி செய்யும்போது வலது பக்கம் பரசாயுதமும் இடது பக்கம் விபூதியையும் இருக்க அமர்ந்து சிவனடியார்களை வரவேற்பார். பரசாயுதத்தையும் விபூதியையும் அவர் மனைவிதான் கொண்டுவந்து வைப்பார். விறன்மிண்டரின் தணியாத கோபத்தை நீக்க பெருமான் முடிவு செய்தார்.

சிவபெருமான் அடியாரைப்போல் வேடம் கொண்டு விறன்மிண்டரின் வீடு சென்றார். அவர் துணைவியார் அடியாரைப் பார்ந்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்க அடியவர் திருவாரூர் என்றார். அதைக்கேட்டதும் என் கணவருக்கு திருவாரூர் அடியார்களை பிடிக்காது. அவர்களை கொன்றுவிட பரசாயுதத்தை வலது பக்கத்திலும் விபூதியை இடது பக்கத்திலும் வைத்திருக்கின்றார். நீங்கள் ஊரை மாற்றிச் சொல்லுங்கள் என்றார். அன்னையே சிவனடியாராக இருந்து பொய் உரைப்பது இறைத்தொண்டிற்கு ஏற்றது அல்ல. நீங்கள் ஒரு புண்ணியம் செய்யுங்கள். பரசாயுதத்தை இடது பக்கமும் விபூதியை வலது பக்கமும் மாற்றி வையுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அந்த அம்மையாரும் அவ்வண்ணமே செய்தார்.

விறன்மிண்டரிடம் அடியார்வேடம் கொண்ட சிவன் வந்தபோது நீர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றீர் எனக் கேட்டபோது திருவாரூர் என்றதும் விறன்மிண்டருக்கு அளவில்லா கோபம் வந்தது. அவர் பரசாயுதத்தை வலதுபக்கம் எடுக்க முயற்சித்தார். அது கையில் கிடைக்காமல் போகவே குனிந்து அது எங்கே எனப் பார்த்தார். இதைப் பயன் படுத்தி இறைவன் ஒடத் தொடங்கினார். அதற்குள் இடப்பக்கமிருந்த பரசாயுதத்தை எடுத்துக் கொண்டு அடியவரை துரத்தத் தொடங்கினார். இருவரும் திருவாரூர் எல்லையைத் தாண்டியிருந்தனர்.

விறன்மிண்டர் திருவாரூர் எல்லை மண்ணை மிதித்ததும் ஓடிக்கொண்டிருந்த அடியவர் நின்றார். திரும்பிய அவர் விறன்மிண்டரைப் பார்த்து இது திருவாரூர் மண் என்று கூற திகைத்த மிண்டர் தவறு செய்த காலை வெட்டிக்கொண்டார். இறைவன் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

பெருமங்கலம்- இறைவன் பெயர் விறன் மிண்டீஸ்வரர் அன அருள் புரிந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:10

முனையடுவார்

58. முனையடுவார்நாயனார்

நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார்.

அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால் வந்து வேண்டி நின்றால் நடுவு நிலையுடன் பொருள் பெற்று அவர்பால் பகைவரை எதிர்த்து வெற்று பெறுவார். அந்த பொருளைக் கொண்டு அடியார்க்கு உதவிகள் செய்து தொண்டு புரிந்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து சிவதொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 11:09

மூர்க்கர்

59. மூர்க்கநாயனார்

சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் வேளான்குலத்தில் பிறந்தார் மூர்க்கர். திரு நீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அமுது படைத்தபின்னரே தான் அமுது உன்னும் பழக்கமுடையவர். ஒவ்வொருநாளும் இப்பணி தொடர அடியவர்கள் நிறைய வர தன் உடைமைகளை விற்று தொண்டு செய்தார். மேலும் விற்பதற்கு ஏதுமில்லாததால் முன்பு அவர் அறிந்திருந்த சூதாட்டத்தின் மூலம் வரும் பெருளைக்கொண்டு அமுதுதொண்டு செய்தார். ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று அமுது படைத்தார். ஒவ்வொரு ஊரிலும் சிவனை வழிபட்டு பின் சூதாடி அதனால் வரும் வருவாயை அமுது தொண்டு செய்ய பயன்படுத்தினார்.

குடந்தை நகரம் சென்றார். சூது ஆடி ஈன்ற பொருளில் அடியவர்களுக்கு அமுது ஊட்டி வந்தார். சூதாட்டத்தின் போது இவரை ஏமாற்றினாலோ, தகராறு செய்தாலோ தன்னிடமுள்ளவாளால் குத்திவிடுவதால் மூர்க்கர் என்றனர். சூதாட்டத்தில் வெற்றி பெற்று தனக்கென்று எதையும் இவர் வைக்கவில்லை. மேலும் தான் நல்ல நிலையில் இருக்கும்போது தன் சொத்தை விற்று அமுது படைத்தார். தன் கொள்கை நிறைவேற எடுத்துக் கொண்ட கடைசி வழி. தொண்டுக்கு இடைஞ்சல் என்றால் உயிரைத் தருபவர்கள் அடியார்கள். சூதாடி அதனால் தொண்டு செய்வதால் ஏற்படும் பாவத்தை ஏற்க தயாராக இருந்தார். எல்லோருக்கும் அமுதூட்டி கடைசி ஆளாக மீதம் இருப்பதையே தான் உண்டு தொண்டு செய்து சிவனடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27033547
All
27033547
Your IP: 3.144.102.239
2024-04-18 12:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg