gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

துன்பத்தால் இகழக்கூடாது!

மன்னன் ஒருவன் தன் நம்பிக்கைக்கு உகந்த பணியாளுடன் தினமும் வேட்டைக்குச் செல்வது வழக்கம். ஒருமரத்தில் ஒரே ஒரு கனிமட்டும் இருப்பது கண்டு அதை பறித்துவர ஆணையிட்டார். கனி கைக்குவந்ததும் அதை துண்டக்கி ஒரு பகுதியை பணியாளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தான் உண்டார். அந்தக் கனி மிகவும் சுவையாக இருந்தது.
தினமும் வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தமரத்தில் உள்ள ஒரே ஒரு கனியைப் பறித்து ஒரு துண்டை பணியாளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தானே உண்டார். ஒருநாள் அவ்வண்ணம் கனியைப் பறித்து துண்டாக்கி பணியாளிடம் கொடுத்தவுடன் அவன் அதைச் சாப்பிட்டுவிட்டு இன்னொரு துண்டு கேட்க, மன்னன் அளிக்க அதையும் உண்டவுடன் மீண்டும் கேட்க, மன்னன் அளிக்க, அதையும் விரைவாக உண்டபின் மீண்டும் துண்டு கேட்க மன்னனுக்கு கோபம் வந்தது. என்ன இன்று பழம் அவ்வளவு சுவையா! எனக்கு கொஞ்சமாவது வேண்டாமா என மீதமிருந்ததை சுவைக்க வாயில் வைத்தார். உடனே அதைத் துப்பினார். மடையா! இவ்வளவு கசக்கிறது. எப்படி இன்னும் வேண்டும் என்று கேட்கிறாய் என்றார்.
மன்னா! இத்தனை காலமாக மரத்தில் பறித்த சுவைமிக்க கனியை தங்களின் கரத்தில் வாங்கி உண்டேன். இன்று உங்கள் கையில் வாங்கி தின்னும் ஒரு கசப்பான கனிக்காக குறைபட்டுக் கொள்ளக்கூடாது, மேலும் தாங்கள் அந்த கனியை தின்னக்கூடாது என்பதற்காகவும்தான் என்ற பணியாளனை இறுகத் தழுவிக்கொண்டார் மன்னன்.
இதைப்போலத்தான் மற்ற ஆத்மாக்களால் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களை அடைந்து ஆனந்தித்த நீங்கள் இடையிடையே ஏற்படும் துன்பத்திற்காக யாரையும் நிந்திக்கக்கூடாது. சற்றே சிந்தியுங்கள்!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

எதிர்பார்ப்புகள்!

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னன், ஒரு குருவும் அவரது சீடர்களும் பிட்சை எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களிடம் சென்று நான் உங்களுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன் என்றார்.
அப்படியா! நாளை வருகின்றோம் என குரு சொன்னார். அரசன் மகிழ்வுடன் சென்றான். சீடர்கள் நாளை அரண்மனையில் கிடைக்கும் அறுசுவை விருந்தைப்பற்றிய கற்பனையில் மிதந்தனர். அதைபற்றி பேசிக்கொண்டிருந்தும் இருந்தனர்.
அடுத்த நாள் குருவுடன் அனைவரும் அரண்மனையை நெருங்கும்போது உள்ளே இருந்து வந்த மந்திரி, அரசர் வெளியூர் சென்றுள்ளார் என்றார். குரு தன் சீடர்களுடன் வந்தவுடன் விருந்து ஏற்பாடு பண்ணலாம் என நினைத்த மன்னன், அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருந்ததால் விருந்தைபற்றி மந்திரியிடமும் சொல்லவில்லை.
அப்படியா! இன்னொருநாள் வருகின்றோம் என்றார் குரு. சீடர்கள் அனைவரும் மிகவும் வருத்தமுற்றனர். நல்ல விருந்தை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு ஏமாற்றம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது என்ன செய்வது என முணுமுணுத்தார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு கவலையை ஏற்படுத்தியது.
இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டோம்! அப்படியேதான் இன்றும்! ஒரு எதிர்பார்ப்பு ஆசை செய்யும் விளையாட்டை பார்த்தீர்களா! வாருங்கள், வழக்கம்போல் பிட்சைக்குச் செல்வோம் என்றார் குரு.
எதிர்பார்ப்புகள் எங்கே இருக்கின்றதோ அங்கேதான் கவலைகள் தோன்றும்! எதையும் அளவிற்கு அதிகமாக எதிர்பாராதீர்கள்! எதிர்பார்த்து ஏமாற்றம் அடையாதீர்கள்!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

பீஷ்மரின் விதி!

காசிராஜன் மகள்கள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரின் சுயம்வரத்திற்கு வருகை தந்த பீஷ்மரை, அங்கிருந்த வாலிபர்கள் ஏளனப்படுத்தியதால் இளவரசர்கள் அனைவரையும் வென்று மூன்று பெண்களையும் அஸ்தினாபுரத்திற்கு கூட்டி வந்தார். அஸ்தினாபுர அரசன் விசித்ர வீர்யனுக்கு மூவரையும் மணமுடிக்க ஏற்பாடு செய்தார்.
பீஷ்மரைப் பார்க்க வந்த அம்பை, அவரிடம் தோற்ற சால்வ மன்னனை மணக்க விரும்புவதாகக் கூறி, அவரின் அனுமதியுடன் சால்வ மன்னனைச் சந்தித்தாள். பீஷ்மரால் தூக்கிச் செல்லப்பட்டு அஸ்தினாபுர அரண்மணையில் இதுகாறும் இருந்த அவளை மணக்க சால்வ மன்னன் விரும்பாததால் மீண்டும் அஸ்தினாபுரம் வந்தாள்.
வேறுவழியில்லாமல் விசித்ரவீர்ய மன்னனை மணக்கமுடிவு செய்தபோது, எப்போது அவள் சால்வமன்னனை மனதால் விரும்பிவிட்டாளோ அதன்பின் அவளை நான் என் மனைவியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என விசித்ர வீர்யன் உறுதியாக கூறிவிட்டான்.
மீண்டும் சால்வ மன்னனிடம் சென்று நான் மனதால் உங்களை காதலித்த குற்றத்திற்காக அஸ்தினாபுர மன்னன் என்னை மணக்க மறுத்துவிட்டார். என்றாள். நான் உன்னை மணந்து கொள்ள மறுத்ததும் நீ விசித்ர வீர்யனை மணக்க விரும்பிதானே அஸ்தினாபுரம் சென்றாய். அதனால் உன்னை மனைவியாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான்.
அம்பை இப்போது பீஷ்மரிடம் வந்தாள். என் விருப்பமின்றி என்னை கடத்திவந்து எனக்கு அவமானம் ஏற்படுத்தி என்னை யாரும் மணக்க முடியாநிலை ஏற்படுத்திய தாங்கள் தான் என்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள். பீஷ்மர் தன் தந்தையிடம் செய்த பிரம்சாரிய சத்யத்தை அவளுக்குகூறி மறுத்தார்.
அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு இந்த நிலைக்கு காரணமான பீஷ்மரை கொன்று பழிதீர்க்க தவம் செய்தாள். முருகன் அவள்முன் தோன்றி ஓர் மாலையை கொடுத்து அதை அணிந்து கொள்பவர் பீஷ்மரை கொல்வார் என்றார். எல்லா இளவரசர்களும் பீஷ்மருக்குப் பயந்து மாலையை ஏற்க முன்வராததால் மீண்டும் தவம் செய்து, அடுத்த பிறவியில் தாமே பீஷ்மரைக் கொல்ல சிவனிடம் அருள் பெற்றாள்.
துருபதனின் மகளாக சிகண்டினி பிறந்து திருநங்கையாக ‘சிகண்டி’ ஆகி பாரதப் போரில் பீஷ்மரைக் கொன்றாள். உணர்ச்சி கோபம் கொண்டு புரியாமல் அம்பைக்கு செய்த பாவம்! விதி வலியது!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

தெய்வ வேறுபாடு வேண்டாம்!

      ஒரு சிலர் ஒரு கடவுளைத்தான் கும்பிடுவர். சிலர் சில கடவுள்களைக் கும்பிடுவர். சிலர் கடவுள் என்ற எல்லோரையும் வணங்குவர். இவர்களுள் முருக பக்தன் ஒருவன். அவன் தீவிர பக்தன். அவன் முருகனைத் தவிர வேறு யாரையும் தெய்வமாக நினைப்பதில்லை. வழிபடுவதும் இல்லை.

     அவன் ஒருநாள் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் அவன் பேச்சிலிருந்து அவன் மனதிலிருப்பதை புரிந்து கொண்டார். அவன் மனதில் இருந்த கடவுள்கள் பற்றிய வேற்றுமைகளை அகற்ற நினைத்தார்.
    அவனிடம், ‘நீ யாரை தினமும் வணங்குகின்றாய்’ என்றவரை நோக்கி, ‘என் இஷ்டதெய்வமான முருகனை மட்டும் நான் வணங்குகிறேன்’ என்றான்.
    சரி, உன் இஷ்ட தெய்வமான முருகனின் வெவ்வேறு வடிவங்கள்தான், சிவன், பைரவர், கிருஷ்ணர், ராமர், பிரம்மா என்பது உனக்குத் தெரியதா    ! முருகனை விட்டு மற்ற தெய்வங்களை கும்பிடு என்று நான் சொல்லவில்லை. உன் இஷ்ட தெய்வமே மற்ற தெய்வங்களாகவும் இருப்பதை புரிந்துகொள். இறை சக்தி ஒன்றுதான். அது பல ரூபங்களில் நம்மால் வணங்கப்படுகிறது. உன் மனதில் வேறுபாட்டை களைந்தால் நீ உயர்வடைவாய் என்றார்.
    இது அவனுக்குப் புரியவில்லை! அப்போது ஞானி சொன்னார், ஒரு பெண் திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கின்றாள். அங்கு அவளுக்கு மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்று இன்னும் பல உறவுகள் இருக்கும். அந்த பெண் அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவளின் இல்லறம் சிறக்கும். ஆனால் கணவனிடம் தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்கின்றாள். கணவன் மூலமாகத்தான் எல்லோரும் அவளுக்கு உறவு. அது அவளுக்கு இஷ்டமான ஒன்று.
    அதைப்போலவே நீயும் உன் இஷ்டதெய்வத்தை வழிபடு. மற்ற தெய்வங்களையும் மதித்து வழிபடு. அதில் தவறில்லை. வேறுபாடு பார்க்காதே! இஷ்ட தெய்வத்துடன் தொடர்பு கொள்வது மூலமாக மற்ற தெய்வங்களையும் தொடர்பு கொள்ள வேண்டும். அது நன்மை பயக்கும்.
    வெறுப்பையும் வேற்றுமையும் அகற்றி மனத்தெளிவுடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடுகொள் என்றார்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

எது இடைஞ்சல்! செயலில் கவனம்!

     அது ஓர் காட்டில் இருக்கும் பர்ணசாலை. அதில் பயின்று வந்த சீடருக்கெல்லாம் இறைவழிபாடு, தியானம் பற்றி வகுப்புகள் நடத்தினார். காலையும் மாலையும் வழிபாடும், தியானமும் செய்ய சொன்னார் குரு.
   ஒவ்வொருவரும் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து தங்களின் இறைவழிபாட்டையும், தியானத்தையும் தொடர்ந்தனர். பலரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவர்கள் குருவிடம் சென்று, நாங்கள் வழிபடும்போதும், தியானிக்கும் போதும் சுற்றியிலுமிருந்து தவளைகளும் பூச்சிகளும் பிற உயிர்களும் சப்தங்களை எழுப்புவதால், சரியாகச் செய்யமுடியவில்லை என்றனர்.
    குரு சொன்னார். நீ உன் மொழியில் இறைவனை துதிக்கிறாய். தியானம் செய்கிறாய். அதைப்போலவே ஏன் அந்த உயிர்களும் அவற்றின் மொழியில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கக் கூடாது. அதைத் தடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. இறவன் எல்லா ஓசைகளையும் படைத்து அதை இயக்குகின்றான். அதை இடைஞ்சல் என எண்ணாதீர்கள். உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்வதாக நினையுங்கள். அது இடைஞ்சலாக இருக்காது. கவனம் சிதராது. உங்கள் செயலில் முழுகவனம் வைப்பீர்கள். நன்மையடைவீர் என்றார்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

யார் காப்பாற்றுவது!

    ஓர் கோவிலின் புகழ் பரவ பக்தர்கள் சுவாமிக்கு அணிகலன்களை அவரவர் விருப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ப செய்து கொடுத்தனர். ஆலயக் காப்பாளர் அந்நகைகளுக்கு பாதுகாப்பும் செய்திருந்தார்.
    என்ன பாதுகாப்பு செய்திருந்தும் அந்த நகைகளின் மேல் கண்வைத்த திருடன் அவைகளை அபகரித்துவிட்டான். ஊர் மக்கள் காணிக்கையாக உனக்கு அணிவித்த நகைகளையே உன்னால் காப்பாற்ற முடியவில்லியே! நீ எப்படி இந்த மக்களைக் காப்பாற்றுவாய் என புலம்பினார் ஆலய காப்பாளர்.
    அப்போது அங்கே வந்த யோகி ஒருவர் நகைகள் உனக்கும், திருடனுக்கும் தான் உயர்வானவை அன்றி கடவுளுக்கு அல்ல! சில பக்தர்கள் தந்தபோது ஏற்றுக்கொண்ட கடவுள், இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக நினைக்கும் நீதான் அதைக் காப்பாற்றியிருக்க வேண்டுமேயன்றி, எதையும் பெரியதாக எண்ணாத பரம்பெருள் அல்ல! என்றார்.

    குடும்பத்தின் அனைவரும் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் தன் அருகில் இருந்தவரிடம் ஏதோ கூறமுயன்றான். அதைக்கவனித்த ஒருவர் சாப்பிடும்போது பேசுவது நல்ல பழக்கம் இல்லை, எதுவாக இருந்தாலும் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என அந்தச் சிறுவனை அடக்கிவிட்டார்.
    எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின் அவர் அந்தச் சிறுவனை கூப்பிட்டு, சப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே, அதை இப்போது சொல் என்றார். அந்தச் சிறுவன் அதை இப்போது சொல்வதில் பயன் இல்லை என்றான். ஏன்? என்றார்.
அதற்கு அந்தச் சிறுவன், நீங்கள் சாப்பிடும்போது உங்கள் சாப்பாட்டில் ஒரு பூச்சி இருந்தது. அதை சொல்லவந்தபோது அதைச் சொல்ல விடாமல் தடுத்துவிட்டீர்கள் என்றான். அதை இப்போது சொல்லி என்ன பயன், நீங்கள் அதை சப்பிட்டுவிட்டீர்கள் என்றான்.
எதற்கும் விதிவிலக்கு உண்டு. சொல்ல வந்ததை, நினைத்ததை அப்போதே சொல்லி விடுங்கள்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

மாற்றம் நிச்சயம்! அவை லீலைகள்!

   அரசிளங்குமரன் சித்தார்த்தன் பிறந்ததும் ஜோதிடர்கள், ‘இந்தக்குழந்தை சக்ரவர்த்தியாக அல்லது சன்னியாசியாக மாறி உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றனர். மன்னர் அதிர்ச்சியானார். சக்ரவர்த்தியானல் சரி, சன்னியாசியானல் எப்படி! அதற்குப் பரிகாரம் தேட ஆரம்பித்தார். உலக வாழ்வில் துறவறம் பூணாமல் இருக்க அக்குழந்தையின் கண்ணில் ஏழ்மை, மூப்பு/வயோதிகம், இறத்தல் போன்றவை படாமல் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் விதிக்கு துணை போனார்கள், பக்தர்களுக்கு ஆதரவு தந்துதவும் மும்மூர்த்திகள்.
    ஓர் மாபெரும் ஞானி பூவுலகிற்கு கிடைக்காமல் போய்விடக்கூடும் என்ற கவலையில் பிரம்மன் பிச்சைகாரனாகவும், விஷ்ணு முதியவராகவும், சிவன் பிணமாகவும் சித்தார்த்தன் கண்களுக்கு வாழ்க்கையின் கோலத்தைக் காட்டி மறைந்தனர். சித்தார்த்தனுக்கு வாழ்வு கசந்தது, துறவியானன். ஞானம் பெற்று புத்தரானார்.
    வேண்டினால் விதியிலிருந்து காப்பாற்ற உதவி செய்யும் மூர்த்திகளே இங்கு விதிக்கு ஆதரவாக செயல்பட ஓர் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கும் நிலைமாறி புதிய மிகப் பெரிய ஒன்று நடக்க சோதனைக்காக வறுமை சூழலாம், முதுமை வரலாம், மரணபயம் தோன்றலாம்.
     உண்மையை உணர்வீர்! எல்லாம் இறையின் லீலைகள்!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

தர்மம் - கைவிடலாகாது!

    காட்டில் வேட்டைக்குச் சென்ற வேடனை புலி துரத்த ஆரம்பிக்க அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறினான். மரத்தின் உச்சியில் ஒரு கரடி இருந்தது. புலிக்கும் கரடிக்கும் இடையில் வேடன் அகப்பட்டுக் கொண்டான்.
   வேடன் மிருக குலத்தின் பகைவன், எனவே அவனைக் கீழே தள்ளிவிடு எனக் கரடியிடம் கூறியது புலி. நான் இருந்த மரத்தில் உயிருக்காக அண்டியதால் என்னிடம் சரண் அடைந்ததாக அர்த்தம். அவனை நான் கீழே தள்ளமாட்டேன் எனக் கூறி உறங்க ஆரம்பித்தது.
    சிறிது நேரம் கழித்து புலி வேடனைப் பார்த்து எவ்வளவு நேரமானாலும் நான் உனக்காக காத்திருப்பேன், உன்னை உண்டுதான் என் பசியை போக்க வேண்டும் என்றது. வேடன் மிகவும் கலக்க மடைந்தான். அப்போது புலி அவனிடம் கூறியது, நீ அந்த கரடியை கீழே தள்ளிவிடு, அதை உண்டு உன்னை விட்டு விடுகிறேன் என்றது.
    உயிர்மேல் பற்றால் தன்னை காப்பாற்றிய கரடியை கீழே தள்ளினான் வேடன். மரத்தின் கீழ்க் கிளையைப் பிடித்து கீழே விழாமல் தப்பியது கரடி. அப்போது புலி சொன்னது, மனிதன் நன்றி கெட்டவன். காப்பாற்றிய உன்னையே கீழே தள்ளிவிட்டான். அவனுக்கு தர்மம் பார்க்காதே! அவனைத் தள்ளிவிடு! என்றது.
    ஒருவன் தன் ஒழுக்கத்திலிருந்து மாறி செயல்பட்டன் என்பதற்காக நான் என் தர்மத்தை கைவிடமாட்டேன்! என்றது. புலி தன்னுடைய சூழ்ச்சிகள் பலிக்காததால் ஏமாற்றம் அடைந்தது.
    துன்பம் இழைத்தவனுக்கு துன்பம் கொடுத்து பழி வாங்குவது நல்ல எண்ணம் இல்லா ஒருவனின் செயல். பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் செயல்படாமல் இருத்தலே ஒருவனுக்குச் சிறப்பு.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27017697
All
27017697
Your IP: 13.59.36.203
2024-04-16 14:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg