gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

எல்லாம் மோகமே!

   வெளியூர் சென்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவர் தன் வீடு தீப்பற்றி எரிவது கண்டு கதறினார், புலம்பினார். அருகில்வந்த அவர் நண்பர், ஏன் அழுகிறாய்! உன் மகன் வீட்டை விற்றுவிட்டான் என்பதைக் கேட்டதும் நிம்மதி பெருமூச்சு வந்தது. ஆனால் வீடு எரிந்து கொண்டிருந்தது. அழுகை மாறி புன்னகை தோன்றியது.
    இப்போதும் வீடு எரிகின்றது. ஆனால் கண்ணீர் இல்லை. ஏனெனில் வீடு என்னுடையதாக இல்லை. வீட்டின் மேல் இருந்த என்னுடைய என்ற மோகம் கலைந்துவிட்டது. மனதில் தோன்றிய கவலை வீடு எரிவதாலா ஏற்பட்டது. இல்லை! என்னுடையது எரிவதால் ஏற்பட்டது. என்னுடையது இப்போது எரியவில்லை. அதனால் கண்ணீர் இல்லை. பதற்றம் இல்லை.
  நண்பர் சொன்னார். ஆனது ஆகிவிட்டது. இனிநடப்பதை பார்ப்போம் என்றார். இவரும் ஆமோதித்தார். அப்போது ஓடிவந்த அவரின் மகன் பேச்சுவார்த்தை முடிந்து நாளை முன்பணம் வாங்க இருந்தேன். அதற்குள் இப்படி வீடு எரிந்துவிட்டதே! எனப் புலம்பியதைக் கேட்டவருக்கு மீண்டும் துக்கம் அடைத்தது. கண்ணீர் வர ஆரம்பித்தது. வீடு இப்போதும் தொடர்ந்து எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. பெரியவரிடம் ஏற்பட்ட மாற்றம் அதற்கு தெரியாது. இங்கே மீண்டும் அந்த என்னுடைய வீடு எரிய ஆரம்பித்து விட்டது.
    ‘என்’ னுடைய ஆசை மோகமே இங்கு எரிகிறது. அதுவே கவலையில் ஆழ்த்துகிறது. கலக்கத்தை ஏற்படுத்துகிறது. துக்கத்தை உண்டுபண்ணுகின்றது. அதுவே வாழ்வின் வேதனை. இதைத்தான் ஆசை, தாகம், மோகம் என்பர். அதை படிப் படியாக விட்டுவிட முயற்சியுங்கள்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

வழிகாட்டிய புண்ணியம்!

    யாத்திரை சென்ற நால்வரும் மிகுந்த அசதியில் இருந்தனர். அன்று அந்த ஊரில் நடைபெறும் உபன்யாசம் கேட்க ஆவல் கொண்டனர். ஒருவனுக்கு மிகவும் முடியாத நிலை. அவனைவிட்டு மற்றவர்கள் சென்றுவர முடிவு கொண்டனர். ஆனால் அந்த இடம் எங்கிருக்கின்றது எனத் தெரியவில்லை.
    உடல் நிலை சரியில்லாதவன் தனக்கு அந்த இடம்பற்றி தான் கேட்டுவைத்திருந்த தகவல்களைக்கூறி வழிகாட்டினான். சந்தோஷத்துடன் புறப்பட்டுச் சென்றனர். உபன்யாசம் கேட்டு வந்து உறங்கினர். அப்போது பெய்த கனமழையில் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து நால்வரும் மாண்டனர்.
    மாண்ட நால்வரும் சொர்க்கம் சென்றனர். நேற்று இறைவனைப்பற்றி உபன்யாசம் கேட்ட பலனால் நீங்கள் இறந்ததும் சொர்க்கம் வந்துள்ளீர்கள் என சொர்க்கத்தில் வரவேற்றார்கள். நாங்கள் மூவர்தான் உபன்யாசம் கேட்டோம், ஆனால் நால்வரும் வந்துள்ளோம்! எப்படி! என்றனர்.
    நீங்கள் உபன்யாசம் கேட்டு அதன் பலனாக இங்கு வர, உங்களுக்கு வழி சொன்ன பலனால் அவனும் வந்துள்ளான் என்றார்.
    ஒரு நல்ல செயலுக்கு வழிகாட்டுதலும் சிறப்பான பலனைத் தரும்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

சனி பற்று!

    சனி கிரக பலனால் சிவனை பற்ற சென்றார். சனி வருவதை அறிந்த சிவன், பார்வதியிடம் தான் தவம் செய்வதாகக்கூறி கயிலையில் ஒரு குகையுள் சென்று வாயிலை அடைத்தார். ஆழ்ந்த நிஷ்டையில் ஆழ்ந்தார். வருடங்கள் கழிந்தன. ஏழரை ஆண்டுக்குப்பின் யோகநிலை கலைந்து வெளியில் வந்தார்.
   சனியின் பார்வையிலிருந்து தப்பிய மகிழ்வு அடைந்தவர் அவர் எதிரில் சனி நிற்கக் கண்டு திடுக்கிட்டார். அவரை நோக்கிய சனி, ஐயனே! எனது கடமை முடிந்து விட்டது, தங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என்றதை கேட்ட சிவனாருக்கு சனியின் ஆதிக்கத்தினால்தான் தாம் பார்வதியைப் பிரிந்து இவ்வளவு காலம் இருக்க வேண்டியிருந்திருக்கின்றது என்ற உண்மை புரிந்தது.
    தன்னையே பற்றி தனது கடமையை செய்த சனிக்கு ‘சனீஸ்வரன்’ என்ற பட்டம் அளித்தார்.
    உனது கடமையைச் சரியாகச் செய், உயர்வடைவாய்!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

குருவைத் தேடி!

    குரு ஒருவரிடம் ஞானம் பெற, சரியான குருவைத்தேடி அலைந்தான். ஞானி ஒருவரைக் கண்டான். அவர் அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எப்படி எந்த சூழலில் இருப்பார் எனக் கூறினார். அவரைத் தேடி அலைந்தான். நாட்கள் மாதங்களாகி வருடங்களாயின. பல வருடங்களுக்குப்பின் அவர் சொன்ன குறிப்புகளுடன் ஒருவரைக் கண்டான்.
அவர் காலில் விழுந்து வணங்கினான். நிமிர்ந்து நோக்கியபோது அது முதன் முதலில் தான் சந்தித்த ஞானிதான் எனப் புரிந்தான். அவர் சொன்ன குறிப்புகளை அப்போது அங்கிருந்தே சரியாக கவனிக்காமல் பல வருடங்களை வீணடித்து தேடியதை நினைத்து வருந்தினான்.
    குரு சொன்னார், நீ இருக்கும் இடத்தை கவனிக்காமல் வெளியே தேட ஆரம்பித்தாய்! ஒரு விநாடி கவனமுடன் செயல் பட்டிருந்தால் அப்போதே உணர்ந்திருப்பாய் நீ தேடியது எங்கே இருக்கிறது என்பதை!
    தேடல் என்றால் முதலில் நம்முள்ளே, பின் நம் அருகாமையில் தேடு, வெற்றி நிச்சயம்.

    ஒரு ஞானிக்கு ஏற்பட்ட, யார் உயர்ந்தவர் என்ற தன் சந்தேகத்தை இன்னொரு ஞானியிடம் கேட்க, அவர் கேள்வி கேட்ட ஞானியை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நாட்டிற்குச் சென்றார். அங்கு அந்த நாட்டு இளவரசிக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது.
    இளவரசிக்கு எந்த இளவரசரையும் பிடிக்கவில்லை. அங்கிருந்த இளம்துறவியை பிடிக்கவே தன் கையிலிருந்த மாலையை அவருக்குச் சூட்டினாள். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த துறவி காட்டிற்குச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்த இளவரசி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டியும் மறுத்த துறவி காட்டினுள் மறைந்தார்.
   தனியாக விடப்பட்டு காட்டில் வழிதெரியாமல் திணரிய இளவரசியை ஞானிகள் இருவரும் சந்தித்து ஆறுதல் கூறி காட்டில் இருந்து வெளியேற உதவுவதாக கூறினர். இருட்டி விட்டதால் ஒரு மரத்தடியில் தங்கினர்.
    மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்த குருவிக்குடும்பத்தின் தலைவன் தங்கள் இருப்பிடத்திற்கு வந்த அவர்கள் குளிரில் வருந்துவதைக் கண்டு சிறுகணல் ஒன்றை கொண்டு வந்து அவர்கள் அருகே போட்டது. அதனால் அவர்கள் மூவரும் குளிர் காய்ந்தனர். அவர்கள் பசிக்கு உதவ விருந்தோம்பல் கொண்டதனால் தானே உணவாக முடிவு செய்து அந்த தனலில் பாய்ந்தது. தலைவன் செயலில் பங்கு கொள்ளவேண்டி அந்த குருவிக் குடும்பத்தின் தலைவியும் அந்த தீயில் பாய்ந்து மாண்டது.
    இதை பார்த்துக் கொண்டிருந்த குஞ்சு, மூவருக்கும் தன் தாய், தந்தையர் படைத்த உணவு போதாது எனக்கருதி தானும் தீயில் பாய்ந்தது. சிறுது நேரத்தில் நடந்த இந்த நிகழ்வினால் மனம் நெகிழ்ந்த மூவருக்கும் அந்த குருவிக்குடும்பம் அளித்த விருந்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உணவை உட்கொள்ளாமல் வருத்தத்துடன் இரவைக் கழித்தனர்.
    பொழுது புலர்ந்தது. இளவரசிக்கு வழிகாண்பித்து அனுப்பினர். பின்னர் அழைத்துச்சென்ற ஞானி மற்றவரிடம் சொன்னார், இல்லறம் மேற்கொண்டால் பறவைகள் போல் தியாகம் செய்யும் மனப்பாங்கு வேண்டும். மற்றவர்கள் நன்மைக்காக செயல்கள் இருக்கவேண்டும். துறவறம் மேற்கொண்டால் அழகான பெண்ணையும், பேரரசையும் உதறிய இளம் துறவிபோல் இரு. பணத்திற்கும் பதவிக்கும் அடிமையாகாதே.
    அவரவர் இடத்தில், நிலையில் அவரவர் உயர்ந்தவர்கள். ஒவ்வொருவரின் கடமையும் வேறு! வேறு!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

ஞானம்பிகை சொல்லிய ஞானம்!

    ஒரு மரத்தடியில் மதியவேளையில் தன்கையையே தலையணையாக வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் சதாசிவர். அப்போது அவ்வழிச் சென்ற விவசாய பெண்மணி, ‘என்னமோ முற்றும் துறந்த முனிவர் மாதிரி தெரிகிறார். தலைக்கு உயரமாக தன்கையை வைத்து வசதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றாரே’ என கூறிச்சென்றாள்.
    இதைக்கேட்ட சதாசிவர் திடுக்கிட்டார். உடனே தலைக்கு வைத்துக்கொண்டிருந்த கையை எடுத்துவிட்டு வெறுமையாகப் படுத்துக்கொண்டார். மாலை வந்தது. வேலை முடிந்து அந்த பக்கம் வந்த அந்த விவசாயப்பெண், ‘சாமியார்னா சொந்தமா புத்தி வேணாமா? போறவ, வரவ பேச்சையெல்லாமா கேட்பாங்க! அப்படி என்ன ஞானி இவர்! எனக் கூறிச்சென்றாள்.
    அதிர்ந்துபோன சதாசிவர் அன்றுமுதல் எப்போதும் தவத்தில் இருந்தார். அதாவது சதா, தவத்தில், பிரமத்தில் இருந்தார். அதனால் அவர் சதாசிவ பிரம்மேந்திரர் என அழைக்கப்பட்டார்.
ஞானமானவருக்கு விவசாயபெண்ணாக வந்து ஞானத்தை நினைவுபடுத்தியவர் ஞானம்பிகை.
    யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் எதிலும் ஞானம் தோன்றலாம்!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

ஞானிக்கு ஞானம்!

   பத்ரகிரி மன்னனுக்கு ஞானம் ஏற்பட்டு தன் சொத்து, சொந்தங்களைத் துறந்து பட்டினத்தாரை குருவாக கொண்டு திருவிடைமருதூர் கோவிலில் இருந்தார். தான் இருக்கும் வாயிலில் குருவிற்கும் சேர்த்து பிச்சை எடுத்து வந்தார். பிச்சை எடுப்பதற்கு வசதியாக ஒரு திருவோடு மட்டும் வைத்திருந்தார். பிச்சை எடுத்தபின், தன் குருவிற்கு அளித்துவிட்டு தன்னை நாடியிருக்கும் ஒரு நாய்க்கு சிறிது அளித்து மீதியை தான் உண்டு வந்தார்.
    ஒருநாள் பட்டினத்தாரிடம் வந்து பிச்சை கேட்டான் ஒருவன். ஞானி என்னிடம் ஒன்றுமில்லை. அடுத்த கோபுர வாயிலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான் அவனிடம் போய் நான் சொன்னதாகச் சொல்லி கேள் எனச் சிரித்தார்.  அந்த பிச்சைக்காரன் அடுத்த வாயிலுக்குச் சென்று ஞானி சொன்னதை அப்படியே கூறினான். பதறிப்போன சீடர் தன்னுடன் திருவோடு வைத்திருப்பதைத்தான் தன் குருநாதர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்பதைப் புரிந்து அந்த திருவோட்டை கீழேபோட்டு உடைத்தார். பின்னாளில் பெரும் ஞானியாக திகழ்ந்த பத்திரிகிரியார்தான் அவர்.
    பத்ரிகிரியாருக்கு ஈசன் நடத்த விரும்பிய ஞானம் இது.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

அவன் செயல்!

   தன் அந்தப்புரத்திற்கு ஓர் காவலாளி வேண்டும் என நினைத்த பார்வதி தன் உடலில் உள்ள மஞ்சள், குங்குமத்தை எடுத்து உருகொடுத்து உயிர் கொடுத்தாள். காவலுக்கு அவரை வைத்துவிட்டு குளிக்கச் சென்ற சமயம் சிவன் வந்து தன் மனைவியின் அறைமுன் ஒருவன் நிற்கிறான் என்று அவனைச் சிரச்சேதம் செய்து விடுகின்றார்.
   கஜமுகாசுரன் என்ற அரக்கன், தாயின் வயிற்றில் பிறக்காத யானைத்தலைக் கொண்ட ஒருவனால்தான் தன் உயிர் போகவேண்டும் என வரம் வாங்கியிருந்தான், இதை ஒட்டியேதான் சிவனின் செயல் இருந்தது.
    திரும்பி வந்த பார்வதி விபரம் புரியாமல் தான் உயிர்கொடுத்தவன் இறந்து கிடப்பதைப் பார்த்து வருந்த, சிவன் வடக்கே படுத்துக் கிடந்த யானைக்கு மோட்சம் கொடுத்து அதன் தலையை பிள்ளைக்கு வைக்க பிள்ளையார் தோற்றம்.
    கஜகாசுரனின் வரத்திற்கு பரிகாரம் பிள்ளையார் தோற்றம். அது சிவனுக்கு தெரிந்தது.
  இதிலிருந்து நடப்பது எல்லாம் காரணகாரியமாகவே என்பது புரியும். எனவே உங்களுக்கு தலை போகும் பிரச்சனையாக இருந்தாலும் கலக்கமடையாதீர். எல்லாம் அந்த இறவனுக்குத் தெரியும் உங்களுக்கு என்ன வேண்டுமென்று.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

தேவை எது! தேவையற்றது எது!

    ஒருவன் காலை குளித்து அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தன் தேவைகளையும், குறைகளையும் சொல்லி முறையிடுவான். இதை தொடர்ந்து தினமும் செய்து வருவதை கவனித்த ஓர் ஞானி அவனிடம் ஓரு நிகழ்வை சொன்னார்.
    நண்பர் ஒருவர் எளிமையான வாழ்வை மேற்கொள்பவர். செருப்பு கூட அணியமாட்டார். அவர் தினசரி கடைவீதிக்குச் சென்று அங்கு என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகின்றது என கவனிப்பார். ஒருநாள் கூட ஒரு பொருளை வாங்கியதில்லை.
    இதை நன்கு கவனித்த ஞானி நண்பரிடம், நீங்கள் தினமும் கடைவீதி சென்று, ஒரு பொருள்கூட வாங்காமல் திரும்பி வருகின்றீகள், என்ன காரணம் என கேட்டார். அதற்கு நண்பர், அங்கு விற்பனையாகும் பொருள்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பதை புரிந்து கொள்வதற்காக சென்று வருகின்றேன் என்றார்.
   இதைக் கேட்டவன், என்னிடம் எதற்கு கூறுகின்றீர்கள் என்றான். ஞானி சொன்னார்,   “பக்தி என்பது ஒருவன் தனக்கு என்ன தேவை என்பதை அறிவதற்கோ அல்லது வேண்டிவதற்கோ அல்ல, உனக்குத் தேவையற்றது எது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதற்குத்தான்” என்பதை நீ உணரவேண்டும் என்ற ஒரு காரணத்துடன்தான் என்றார்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

செயலில் கவனம் சிறப்பு!

    மன்னன் ஒருவன் காட்டில் வேட்டைக்குச் சென்றான். அன்று இரவு அங்கேய கூடாரமிட்டு தங்கினான். காலைக்கடன்களை முடித்தபின் தன் வழக்கப்படி உணவு அருந்துமுன் கடவுளை வணங்க விரும்பினான். காட்டில் வழிதெரியாததால் அங்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து மண்ணை குவியலாக்கி அதையே இறையாக பாவித்து மலர்கள் கொண்டு பூஜிக்கத் தொடங்கினான்.
    ஓர் மானைத் துரத்திக்கொண்டு வந்த வேடன் ஒருவன் அரசனையோ அரசன் இறையாக பாவித்து பூஜித்துக்கொண்டிருந்த மண்மேட்டையோ கவனிக்காமல் ஒடினான். அப்போது அவனின் கால் அந்த மண்மேட்டில் பட்டு கலைந்துவிட்டது. அரசனின் கோபம் எல்லைமீறியது. காவலாளிகளைக்கொண்டு வேடனை பிடிக்க முயற்சித்தான். வேடனைக் காணவில்லை. சிறிது நேரத்தில் அதே வேடன் அவன் துரத்திய மானை தோளில் போட்டுக்கொண்டு அந்த வழி திரும்பி வந்தான். வீரர்கள் வேடனைப்பிடித்து மன்னர் முன் நிறுத்தினர்.
    அப்போது மன்னரை பார்த்த வேடன், எங்கள் இருப்பிடம் வந்த வேந்தனே உங்களுக்கு வணக்கம் என்றான். மன்னன் கோபத்துடன் நான் பூஜை செய்யும்போது அதை கலைத்து ஒடிவிட்டு இப்போது மாட்டிக்கொண்டதும் நடிக்கின்றாயா என்றார். அதற்கு வேடன், என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா, நான் வேட்டையில் கவனுத்துடன் ஈடுபட்டதால் என்னால் மானைத்தவிர வேறு எதையும் கவனிக்க முடியவில்லை. தங்களை கவனியாமல் சென்றதற்கு மிகவும் வருத்தப்படுகின்றேன் என்றான்.
    அதைகேட்ட அரசனுக்கு திடீரென்று ஞானம் பிறந்தது. தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறைமீது குவியவில்லை. அதனால்தான் வேடன் கால்பட்டு கலைந்தது தெரியவந்தது என்று உணர்ந்தான். கோபம் தவிர்த்து வேடனை விடுவித்தான்.
    இலட்சியப்பாதையிலிருந்து மனம் விலகாமல் இருக்க பழகுங்கள். செயலில் கவனம் சிதறாமல் இருத்தல் சிறப்பு.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27019940
All
27019940
Your IP: 3.145.201.71
2024-04-16 19:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg