gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

ஞானியின் நிறைவு!

     ஒருவன் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார்.
    ஓர் தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார்.
    அவருடைய நண்பர் நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் எனக் ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள் விற்கின்றன என்பதைப் பார்க்க என்றார். நீங்கள் அந்த பொருள்களிலிருந்து எதையும் வாங்கி வந்ததாக இதுவரை தெரியவில்லையே என்பதற்கு ஞானி, “அங்கு விற்கப்படும் பொருட்கள் இல்லாமல் நான் எவ்வளவு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எனச் சொன்னார்.”
    இந்தக் கதையை கேட்ட இளைஞன் இதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு பெரியவர் பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை சொல்லிக் கொண்டிருக்க அல்ல. பக்தியின் மூலம் உனக்கு தேவையற்றதை தெரிந்து ஒதுக்குவதற்குத்தான் என்ற உண்மை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

வெற்றிக்கு பொறுமை வேண்டும்!

     துன்பத்தில் உழன்று கொண்டிருந்தவன் கோவிலுக்குச் சென்றான். தன் குறைகளை புலம்பிக் கொண்டே வழிபட்டான். அப்போது சுற்றுச்சுவற்றில் ஓர் விக்ரகம் இருந்ததைப் பார்த்தான். அதன் அடியில் தமிழ் மொழியின் படிவம் இருக்க அதை சிரமப்பட்டு படித்தான். அதில் ‘இந்த விக்ரகத்திற்கு ஒரே தடவையில் 100 குடம் தண்ணீர் ஊற்றி வழிபட்டால் அவனுக்கு ராஜயோகம் கிட்டும்’ என்ற வாசகத்தை கண்டதும் தன் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைத்து விட்டது என நம்பி செயல்படலானான்.
    பக்கத்திலிருந்த குளத்திலிருந்து நீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். கவனமாக எத்தனையாவது குடம் அபிஷேகம் என்பதைக் கணக்கிட்டுக்கொண்டான். 95 குடம் நீர் அபிஷேகம் ஆனது. அவனுக்கு ஓர் சந்தேகம். இவ்வளவு அபிஷேகம் ஆகியும் இன்னும் ராஜயோகத்திற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையே என்று கவலையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து அபிஷேகம் செய்தான். 98 ஆயிற்று, 99 ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. வருத்தமடைந்தான். கோபம் கொண்டான். பொறுமை இழந்தான். 100 வது குட நீரை கொண்டுவந்து விக்ரகம் முன் போட்டு உடைத்தான்.
    அப்போது அந்த விக்ரகம் பேசியது. ‘பக்தா..99 குடம் அபிஷேகம் செய்தது மகிழ்ச்சி. ஆனால் 100 வது குடம் வரை பொறுமையின்றி கடைசி குடத்தை பாதத்தில் போட்டு உடைத்து அபசாரம் செய்துவிட்டாய். இந்த அபசாரத்திற்கு பொறுமைக்கு அடையாளமாக 7கழுதைபிறவி எடுத்து பின் மீண்டும் மனித ஜென்மம் கிடைக்கும் போது 100 குடம்நீர் அபிஷேகம் செய்வாயானால் உனக்கு ராஜயோகம் என்று கூறி மறைந்தது. “கடைசி நிமிடம் வரை பொறுமையுடன் செயல்பட்டால்தான் காரிய சித்திகிடைக்கும்.”

                                                                                                              

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

சரியாகச் செயல்படுத்துங்கள்!

    வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டின் ஆர்வத்தில் விளையாடிக் கொண்டே அருகில் இருந்த காட்டிற்குள் சென்றுவிட்டனர். தாங்கள் வந்த வழி மறந்து, தாங்கள் செல்லும் வழி வீட்டிற்குச் சென்றுவிடும் என நினைத்து செல்ல இறுதில் அடர்ந்த காட்டின் உட்பகுதியை அடைந்தனர். வழி தெரியவில்லை. நேரம் கடந்தது. காட்டின் உயிர்ப்பு ஓசைகள் அச்சத்தை ஏற்படுத்தியது.
    கொடிய மிருகங்களின் ஓசை மிக அருகில் கேட்க பதறிய சிறுவர்களில் ஒருவன் நம்மை கடவுளிடம் ஒப்படைத்து விடுவோம். அவர் காப்பாற்றுவார் என்றான். அடுத்தவன் எல்லாவற்

றிற்கும் அவரை ஏன் கஷ்டப்படுத்தவேண்டும். அவர் கொடுத்த ஆற்றலில் நம் அறிவை உபயோகப்படுத்துவோம். இறுதியில் அவரிடம் உதவி கேட்போம் என்றான்.
    இருவரும் அருகில் இருந்த மரத்தில் எந்த உயரத்திற்கு செல்ல முடியுமோ அந்த உயரத்திற்கு சென்றார்கள். மரத்தின் அருகில் வந்த மிருகங்கள் அந்த உயரம் ஏறமுடியாமல் திரும்பியது. உச்சியில் இருந்து பார்த்தபோது அவர்களின் வீடு தெரிந்தது. அப்போது அவர்களிருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியும் புலப்பட்டது. இதுவரை அவர்கள் வீடு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சென்றுவிட்டதை புரிந்தார்கள்,
     மரத்திலிருந்து கீழிறங்கி வீட்டை அடைந்தார்கள். நம்மை படைத்த கடவுள் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க நமக்குள் திறனை வைத்துள்ளார், அதை சரியாக நாம் உணர்ந்து செயல் படுத்தவேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் நாம் யாரையும் தொந்திரவு செய்யக்கூடாது என்பதை புரிந்து கொண்டனர்.

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

மகிழ்வுடன் வாழப் பழகுக!

    குருதட்சணை கொடுக்க நினைத்த மாணவர்கள் குருவின் விருப்பிற்கு ஏற்றபடி பரிசு அளிக்க விரும்பினர். குருவின் விருப்பை தெரிய அவரை அனுகினர். எனக்கு ஒன்றும் வேண்டாம். ஒருமூட்டை காய்ந்த இலைகளை சேகரித்து வாருங்கள் என்றார். அந்த குருகுலம் மரங்கள் நிறைந்த பகுதி. எனவே சுலபமாக இலைகளை சேகரிக்க மாணவர்கள் விரைந்தனர்.
    மரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்றபோதுதான் தெரிந்தது சற்று முன் யாரோ இலைகளை கூட்டி அள்ளி சென்று விட்டனர் என்பது. அருகில் இருந்த வீட்டில் விசாரித்தபோது தினமும் இந்த இலைகளை வைத்து புகை போடுவோம் என்றனர். ஒருவர் தான் இலைசேகரித்து அடுப்பு எரிக்க உபயோகித்துவிட்டேன் என்றார். ஒரு வியாபாரி பெரிய இலைகளை சேர்த்து தைத்து சாப்பிடும் இலை தயாரித்துவிட்டேன் என்றார். ஒருவர் அவைகளில் தரம் பிரித்து மருந்துக்கு பயன்படுத்திவிட்டேன் என்றார்.
    அப்போதுதான் குரு கேட்ட காய்ந்த இலைகள் அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்பதை உணர்ந்தனர். சுலபமாக கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள் பலவாறாக பயன் பட்டுள்ளதை அறிந்தனர். குருவிடம் தங்கள் அனுபவத்தை சொன்னார்கள்.
   குரு சொன்னார் நீங்கள் தரும் தட்சணை நீங்கள் கற்ற பாடம்தான். காய்ந்த இலைகூட பலவாறாகப் பயன்படுகிறது. இதை நினைவு கொண்டு உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் முக்கியமானவரே. ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். எனவே எல்லோரையும் மதித்து புரிந்து மகிழ்வுடன் வாழப் பழகுங்கள் என்றார்.

     ஆற்றின் கரையில் காலைகடன்களை முடித்து தன் சீடர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார் ஓர் ஞானி. அப்போது ஓர் சீடனுக்கு சந்தேகம் எழவே அதைபற்றி விளக்கம் கேட்டான். அவன் கேட்டது, மகிழ்ச்சி, துக்கம் இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் என்ன என்பதாகும்.
    ஞானி அங்கிருந்த தன் சீடர்களை நோக்கி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றார். சிலர் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுராண்டு வருகின்றது. வயல்களுக்கு நீர் கிடைக்கும் விவசாயம் நன்றாக இருக்கும். மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது. இது ஓடும் நிலங்கள் செழிப்பாக இருக்கும் என்றனர்.
    சில சீடர்கள் இந்த திடீர் மழை வெள்ளத்தால் எவ்வளவு தாவரங்கள், மரங்கள் அழிந்திருக்கும். கால்நடைகள் மனிதர்கள் எவ்வளவு துன்பப் பட்டிருப்பார்கள் என வருத்தப்பட்டனர்.
    ஞானி சொன்னார். மழை பெய்ததால் ஏற்படும் வெள்ளத்தினால் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். ஒரே வெள்ளக்காட்சி உங்கள் ஒவ்வொருவரையும் வேறு வேறாக நினைக்கவைத்துள்ளது. இந்த வித்தியாசமான எண்ணங்கள் உங்களின் மனதைப் பொருத்தது. ஒரே நிகழ்வு ஒரு மனதில் இன்பத்தையும், வேறுஒருமனதில் துன்பத்தையும் தோற்றுவிக்கக் கூடியது என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நிழல் மாயை!

    ஒருவர் ஒரு அரேபியக் குதிரை வாங்கினார். குதிரையை விற்றவன் அதன் செயல் பழக்க வழக்கங்களை விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தான். அதை பராமரிக்க ஒருவனை ஏற்பாடு செய்திருந்தான்.  எனோ தெரிய வில்லை அவனால் பல சமயங்களில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்து குதிரை நம் பழக்கத்திற்கு கொண்டு வருவது என புரியாமல் தவித்தார் சொந்தக்காரர்.
    குதிரையை பழக்கும் வேறு ஒரு நிபுணரை வரவழைத்தனர். அவர் சோத்தித்துப் பார்த்து குதிரை மிகவும் நல்ல குதிரை எனச் சான்று வழங்கினார். பின்னர் தன் முன் குதிரைக்கு சொந்தக்காரரை அதன் மீது ஏறச் சொன்னார். அவர் ஒரு பக்கம் இருந்து முயற்சி செய்ய அந்தக் குதிரை முரண்டு பிடித்தது. அப்போது அந்த நிபுனர் அந்தக் குதிரை அதன் நிழலைப் பார்த்து மிரள்வதைக் கண்டார்.
    உடனே குதிரையின் சொந்தக்காரரை மறுபக்கம் குதிரையை திருப்பி அதன் மீது ஏறச் சொன்னார். அவர் ஏறும் போது குதிரை பணிவுடன் இருந்தது. சொந்தக்காரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
    குதிரையை நீங்கள் சூரியதிசைக்கு எதிராக நிறுத்தி ஏறமுயற்சிக்கும்போது அது தன் நிழலை கண்டு பயம் கொளகின்றது. சூரியதிசையில் அது தன் நிழலை கானமுடிவதில்லை. அது அமைதியாக இருக்கின்றது.
    மனதை ஆன்மாவின் பக்கம் செலுத்தினால் அமைதி கிடைக்கும். அதைவிடுத்து நிழல் போன்ற மாயையின் பக்கம் செலுத்தினால் அமைதியிருக்காது. துயரங்கள் தோன்றும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆதாரம்! அரவணப்பு!

    மூன்று நபர்கள் ஆற்றைக்கடக்க படகில் சென்றனர். வெள்ளத்தின் வேகம் அதிமாக படகு தாறுமாறாக போய்கொண்டிருந்தது. ஒருவன் தேவையில்லாமல் பயத்தினால் பிதற்ற, அந்த பயமானது மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து மற்றவர்கள் பயம் அதிகரிக்கும் வண்ணம் உளறிக் கொண்டிருந்தவன் தானும் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.
    அவன் தொடர்ந்து படகில் இருந்தால் மற்றவர்களையும் பீதியில் ஆழ்த்தி படகின் பயணம் நிலைதடுமாறிடச் செய்வான் என்பதால் ஒருவன் அவனை ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றில் விழுந்தவன் என்னை காப்பாற்றி படகில் ஏற்றிவிடுங்கள் எனக் கூச்சலிட்டான். படகில் இருந்தபோது படகின் போக்கை பயமுறுத்தும் வகையில் கூறிக் கொண்டிருந்தவன், தற்போது படகினுள் வந்தால் போதும் என்ற நினைவுகளை அடைந்துள்ளான்.
    படகில் இருந்தவரை அதன் பாதுகாப்பை உணரமுடியாத அவனுக்கு, படகிலிருந்து ஆற்றில் விழுந்தவுடன் படகின் அருமை புரிய ஆரம்பித்துவிட்டது. எது ஆதாரம் என்பதை புரிந்து கொண்டான். இதுபோன்றே துன்பத்தில் துயருற்று இருக்கும்போதுதான் மனம் கடவுளின் அருளே ஆதாரம் அரவணைப்பு எனப் புரிந்து கொள்கின்றது.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கடை-சரணாகதி!

    ஓர் வியாபாரி கலப்படம் செய்து தொழில் புரிந்து வந்தான். கலப்படம் செய்த குற்றத்திற்காக பிடிபட்டு நீதியின்முன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு நீதிபதி மூன்று தண்டனைகளைக்கூறி அவற்றில் அவன் எதை விரும்புகின்றானோ அதை நிறைவேற்ற ஆனை வழங்கினார்.
  முதலாவது-அவைக்கு கொண்டுவந்திருந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இரண்டாவது-நூறு கசையடிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். மூன்றாவது- ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டவேண்டும். பணஆசை கொண்டவனுக்கு அபராதம் கட்டவும் கசையடிகள் பெற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை. நெய்யை குடிக்க ஒப்புக் கொண்டான்.
    நாற்றம் வீசும் கலப்பட நெய்யை முழுவதும் குடிக்க முடியவில்லை. அதனால் பண ஆசை குறையாதலால் கசையடிக்கு ஒப்புக் கொண்டான். ஆனால் பத்து கசையடிகள் கூட அவனால் தாங்க முடியவில்லை. எனவே அபராதம் கட்ட ஒப்புக் கொண்டான்.
    முதலில் அபராதம் கட்ட ஒப்புக் கொண்டிருந்தால் நாற்றமெடுத்த நெய்யைக் குடித்தும், கசையடிகள் பெற்றும் உடலை வருத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பணம் ஈட்டுவது என்பது, நாம் நம்மை நலமுடன் பேனுவதற்காக என்பதை புரியாதவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.
    இதுபோன்றுதான் துன்பங்களினால் துயர்படும்போது, முதலிலேயே கடவுளின் அனுக்கிரகம் பெற முயற்சிக்காமல் பலப்பல செயல்கள் புரிந்து துன்பம் தாங்கா தோற்ற நிலையில் பக்தி கொள்கின்றார்கள். இது கடை சரணாகதி.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

வாழ்க்கை ரகசியம்!

    ஒரு ஊரில் மண்பாண்டம் செய்யும் குயவனுக்கு தினமும் இந்த மண்ணைப் பிசைந்து மண்பாண்டங்களை செய்வதில் சலிப்பு ஏற்ப்பட்டது. அதே ஊரில் உள்ள வைரக் கரிகளைத் தீட்டி வைரமாக்குபவனுக்கும் தன் தொழிலில் வெறுப்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். அப்போது தான் தினமும் சேற்றில் உழலுவதும், பின் மண்பாண்டங்களைச் சுட தீயில்வாடி அவற்றை விற்க அலைவது என தன் தொழிலின் குறைகளை கஷ்டங்களைக்கூறி குயவன் புலம்பினான். அதேபோன்று பட்டை தீட்டுபவனும் பட்டை தீட்டும்போது அடிக்கடி கையில் அறுத்துக்கொள்கின்றேன் என நண்பனிடம் புலம்பினான்.
    இருவரும் உலகின் மகிழ்ச்சியான வேலைபற்றி தெரிந்து கொள்ள விரும்பி அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்றனர். தங்கள் கஷ்டங்களை, குறைகளை சொல்லித் தீர்த்தனர். ஞானி சொன்னார் உங்களுக்கு இந்த வேலையைத் தவிர வேறுவேலை தெரியுமா என்றதற்கு தெரியாது என்றனர். மண்பாண்டங்களும், தீட்டப்பட்ட வைரங்களும் இயற்கையாக கிடைத்தால் என்ன ஆகும் என்றார். இருவரும் எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அந்நிலையில் அவர்களது ஜீவாராதத்திற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை ஞானி உணர்த்தினார்.
     இந்த தொழிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும் திறமை உங்களிடம் உள்ளது. அதற்காக பெருமைபட வேண்டும். எவனொருவன் தன் தொழிலில் மிகுந்த கவனம் செலுத்துபவன் மகிழ்வுடன் வாழ்கின்றான். தொழிலில் சலிப்பு ஏற்படுபவனுக்கு வாழ்க்கை சோகமாகிறது. துன்பங்கள் தெரிகின்றது. இதுதான் தொழிலின் வாழ்க்கை ரகசியம்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

காலம்காலமாக தொடரும் வன்மம்!

   ஞானி ஒருவர் தனது உரையின் போது ஓர் நகைச்சுவை சொல்ல அனைவரும் சிரித்தனர். இடையிடையே அதே நகைச்சுவையைக்கூற சிரிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக சொன்னபோது யாரிடமிருந்தும் சிரிப்பு வரவில்லை. இதை உணர்ந்த ஞானி சொன்னார், அன்பர்களே! உங்களை மகிழ்வூட்டும் ஓர் சுவையான செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்களால் சிரிக்க முடியவில்லை. ஆனால் என்றோ எங்கோ நடந்த துயர சம்பவங்களை அடிக்கடி நினைத்து நினைத்து வேதனைப் படுகின்றீர்கள்! அந்த ஒரே விஷயத்தை பல காலமாக நினைவில் கொண்டு வன்மம் பாரட்டுவது சரியா! அதனால் உங்கள் மனமும் எண்ணங்களும் நிலை மாறுவதைப் புரிந்துகொள்ளுங்கள். துன்பங்களை துயரங்களை விட்டுவிட பழகிக்கொள்ளுங்கள் என்றார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26942907
All
26942907
Your IP: 3.238.254.78
2024-03-29 12:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg