gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

    இளைஞன் ஒருவன் உழைக்காமல் செல்வம் சேர்க்க விரும்பினான். அருகிலிருந்த ஞானியிடம் அவரைப்போல் கல்லை தங்கமாக்கும் வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டினான். ஞானி சொன்னார். அது தனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதைக் கொடுக்க முடியாது. வேறு வழி ஒன்று இருக்கின்றது, அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஓர் கல் இருக்கின்றது அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும் என்றார்.
    சிறிதும் யோசனையின்றி ஆற்றங்கரை சென்றான். அங்கு நிறைய கற்கள் இருக்க அதில் எது அந்த கல் எனப்புரியாமல் குழம்பினான். மீண்டும் ஞானியிடம் வந்து சேர்ந்தான். ஞானி வந்து அதை தேர்வு செய்து தரவேண்டும் என்றான்.
    ஞானி சொன்னார், அதை நான் தொட்டால் அது உனக்கு பயன்படாது. நீதான் தேடி எடுக்க வேண்டும் என்றார், ஆற்றங்கரையில் உள்ள கற்களில் எந்த கல் கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கின்றதோ அந்த வெண்மையானக்கல் கைபட்டதும் இளம் மஞ்சளாக மாறும் தன்மையுடையது, இதுதான் அதன் அடையாளம் என்றார்.
    ஆற்றங்கரைக்கு சென்றவன் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அவைகள் வெப்பமின்றி குளிர்ச்சியாக இருக்க கீழே போட்டான். அவனுக்கு திடீரென்று ஓர் சந்தேகம். எடுத்த கல்லையே எடுத்து பார்கின்றோமோ என்ற சந்தேகம் வர, எடுத்து பார்த்த கற்களை ஆற்றில் வீசத்தொடங்கினான். எடுத்தான், குளிர்ச்சிகண்டான், வீசினான் ஆற்றில், காலம் கரைந்தது. அன்று முழுவதும் செயல்பட்டும் அவனால் அந்தக் கல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
    அடுத்தநாள், அடுத்தநாள் என அவன் செயல் தொடர்ந்தது. பல நாட்கள் ஆகியபின் ஓர்நாள் ஒர்கல்லைக் எடுத்தான் அது வெப்பமாக இருந்தது. அதன் நிறமும் இளம் மஞ்சள் நிறமாக மாறத்தொடங்கியது. சற்றும் யோசிக்காமல் அந்த கல்லை முன்பு செய்ததுபோல பழக்கத்தில் ஆற்றினுள் வீசிவிட்டான். அதன்பிறகு யோசித்தான். அடடா! நாம் வீசிய கல் நிறம் மாறியதே, வெப்பமாகவும் இருந்ததே என்று. என்ன பயன். பழகிய மனம் அந்த பாதையில் இருந்து உடனடியாக மாறி செயல்படாது. மீண்டும் ஆற்றினுள் இறங்கி அதை தேடமுடியுமா? தேடினாலும் கிடைக்குமா! எவ்வளவு காலம் விரையமாகும்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

எது சரி! எது தவறு!

   ஒரு ஞானியிடம் எந்த நிகழ்வையும் எப்படி சரி என்றும் தவறு என்றும் கண்டுபிடிப்பது என ஒர் சீடன் கேட்டான். ஞானி சொன்னார். ஒருவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒவ்ரொருவரும் ஒரு பதிலைச் சொல்வர். அதில் எது சரி, தவறு என கண்டுகொள்வது உன் திறமை என்றார். மேலும் அவர் எல்லா சீடர்களையும் வரவழைத்து, இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டார்.

  ஒருவர், ராமயணத்தில் 4சகோதரர்களும், மகாபாரதத்தில் 5சகோதர்கள் இருக்கின்றனர் என்றார். அடுத்தவர், ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரனுக்கும் தனித்தனி மனைவிகள். மகாபாரதத்தில் ஐவருக்கும் ஒரே மனைவி என்றார். இன்னொருவர், ராமன் 14ஆண்டுகள் வனவாசம் செய்தான். பாண்டவர்கள் 13ஆண்டுகள் வனவாசமும் 1ஆண்டு அஞ்ஞாத வாசம் மேற்கோண்டார்கள் என்றார். மற்றொருவர், ராவணன் பெண்ணாசையாலும், துரியோதனன் மண்ணாசையாலும் அழிந்தனர் என்றார்.
    ஒரு கேள்விக்கு ஒரே பதில் கிடைக்கவில்லை. அவர்களின் கவனத்தை ஈர்த்த பகுதியிலிருந்து பதில்கள் கிடைத்துள்ளது. எல்லாமே ஏறக்குறைய சரியான சுருக்கமான பதில்களே. இதில் எது சரி, எது தவறு என்பதை நீங்கள் எந்தகோணத்தில் இருந்து பார்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து பதில் அமையும் என்றார். எது சரி என்று யோசித்து முடிவு செய்யவேண்டும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தியானம்!

    தியானத்தைப் பற்றி தன் குருவிடம் விளக்கம் கேட்ட சீடனுக்கு, நீ இறந்துகொண்டே பிறந்து கொண்டிருக்கிறாய் என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குரு சீடனைப்பார்த்து நீ பிறந்த போது என்ன செய்தாய் என்று கேட்க ‘மூச்சு வாங்கினேன்’ என்றான். இறக்கும்போது என்ன நடக்கும் என்றதற்கு மூச்சை விடுவேன் என்றான்.
    நீ, தொடர்ந்து மூச்சை வாங்கிக் கொண்டு, விட்டுக் கொண்டுதான் இருக்கின்றாய். ஒவ்வொருமுறையும் மூச்சு வாங்கும்போது நீ பிறக்கின்றாய். நீ மூச்சை விடும்போது இறக்கின்றாய். எனவே ‘நீ பிறந்து கொண்டே இறக்கின்றாய், இறந்துக்கொண்டே பிறக்கின்றாய். உன் மனதை அமைதிப்படுத்து. சுவாச ஓட்டத்தைக் கவனி. சீரான சுவாசமே தியானம்’ என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கீழே போடு!

    அந்த பகுதிக்கு ஓர் ஞானி வந்தார். அவரைக் காண அந்த ஊர்மக்கள் திரண்டனர். அந்த ஊரின் செல்வந்தர் எதையும் சிறப்பாக தன்னால் செய்ய முடியும் என்ற எண்ணம் உடையவன். ஆரவார குணமிகுந்த அவனுக்கு பக்தியும் உண்டு. அவன் அந்த ஞானி யைக்காண விரும்பினான். அவருக்கு அந்த ஊரில் யாரும் கொடுக்காத அளவிற்கு விலையுயர்ந்த ஆடைகளும், பணமும் கொடுக்க விரும்பினான். அப்போது அவரின் மனைவி பணத்துடன் கொஞ்சம் மலர்களையும் வாங்கி கொண்டு போகச் சொன்னார்.

    ஞானியைப் பார்த்ததும் பெருமையுடன் தான் கொண்டுவந்த ஆடைகளையும், பணத்தையும் அவர்முன் நீட்டினான். ஞானி உரத்த குரலில் கீழே போடு என்றார். ஆடைகளையும் பணத்தையும் கீழே வீசினான். மனைவி சொல் நினைவிற்குவர மலர்களை எடுத்துக்கொடுத்தான். அப்போதும் ஞானி  கீழே போடு என்று கூறினார். அந்த செல்வந்தருக்கு லேசான பயம் வந்தது. ஞானிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தான். அப்போது மீண்டும் கீழேபோடு என்று உரத்தகுரலில் யோகி சொல்ல, செல்வந்தருக்கு எதை கீழே போடுவது என்பது புரியவில்லை, விழித்தார். அருகில் இருந்த ஞானியின் சீடர், அவர் உங்களிடமிருந்த ஆடைகளையும், பணத்தையும் கீழே போடச் சொல்லவில்லை. ‘உங்கள் ஆணவத்தை கீழேபோடு’ என்பதுதான் அவர் சொன்னதின் அர்த்தம் என்றார்.

    புரிந்த செல்வந்தருக்கு புதிய வானம் தெரிந்தது. ஞானியின் பாதத்தை வணங்கினார். ஞானி சொன்னார் உன் கர்வத்தை, ஆணவத்தை இங்கேயே என்னிடம் விட்டுச்செல், அதை திரும்பவும் எடுத்துச் சென்று துன்பத்திற்கு ஆளாகாதே. வாழ்வில் வளம் பெறுவாய் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கோவில் இருக்கும் இடம்!

   ஞானி ஒருவர் புனித பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஓர் மடத்தில் தங்கினார். அன்று இரவு குளிர் அதிமாக இருந்தது. அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த மரத்திலான சிலையை எடுத்து தீ மூட்டி குளிர் காயலானார். தீயின் ஒளியைக் கண்ட மடத்தின் பாதுகாவலர், ஞானி மரச்சிலையை எரிப்பதைக் கண்டு கோபமடைந்து, அவறை திட்டினார். தங்குவதற்கு இடம் கொடுத்தது தவறு எனப் புலம்பினார்.
    ஞானி சிலை எரிந்ததும் அதில் எதையோ தேடினார். எரித்துவிட்டு என்ன தேடுகின்றீர்கள் என்றான் பாதுகாவலர். சாம்பலில் எலும்புகள் இருக்கின்றதா எனத் தேடுகின்றேன் என்று கூறியதைக் கேட்டதும், கடுங்கோபம் கொண்ட பாதுகாவலர், நீங்கள் ஒரு முட்டாள். மரச்சிலையில் எப்படி எலும்புகள் இருக்கும் என்றார். அப்படியானால் மற்ற மரச்சிலைகளையும் எடுத்து வாருங்கள், என்னுள்ளே இருக்கும் இறைவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றார் என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கடுங் கோபம் கொண்ட பாதுகாவலர் அந்த ஞானியை வெளியில் துரத்தி விட்டார்.
    மறுநாள் காலை பாதுகாவலர் மடத்திற்கு வெளியில் வந்தபோது அந்த துறவி சாலை ஓரத்தில் இருந்த ஒரு கல்லை மலர்களைக் கொண்டு பூசித்துக் கொண்டிருந்தார். பாதுகாவலர் ஆச்சரியமடைந்து பைத்தியகாரனைய்யா நீ, நேற்றிரவு மரச்சிலைகளை எரித்தாய். இப்போது வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார்.
    ‘பிரார்த்திக்கும் கலை உண்மையாக உங்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் எந்த கோயிலையும் தேடிப்போக வேண்டியதில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் கோவில் இருக்கும். கோவில் அதிர்வுகள் உங்களைச் சுற்றி இருக்கும். அது உங்களுக்கு என ஓர் ஒளி வட்டமாக, மண்டலமாக மாறிவிடும். மனதுக்குள் கடவுள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் சக்தி உங்களுக்குப் புலப்படும். உண்மையான பக்தியுடன் ஒருவன் இருந்தால் அவன் செல்லுமிடமெல்லாம் இறை இல்லம் உருப்பெறும்’ என்று புன்னகையுடன் கூறினார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

சொர்க்கமும் நரகமும் நீங்களே!

  தெய்வீகமான ஓர் முகத்தை வரைய விரும்பினான் ஓவியன். பல நாட்கள் தேடி ஒரு சிறுவனைக் கண்டான். ஓவியம்வரையப் பட்டு முழுமையடைந்தது. பார்ப்பதற்கு தெய்வாம்சம் மிகப்பெருந்தியிருந்தது அந்த ஒவியம். நிரைய பிரதிகள் எடுக்கப்பட்டு விற்றது.
    பலவருடங்கள் கழிந்தது. ஒவியனுக்கு தற்சமயம் சாத்தானைப் போல் ஓர் ஓவியம் வரைய ஆசை பிறந்தது. பல இடங்களில் தேடி கடைசியாக ஒர் சிறையில் இளைஞன் ஒருவனைக் கண்டான். அவனே தன் எண்ணத்திற்கு பொருத்தமானவன் என்று அவன் ஒவியத்தை வரைந்தான். முடிவில் அந்தபடம் ஒவியன் எதிர்பார்த்ததுபோல சிறப்பாக அமைந்தது. அந்தபடத்தைப் பார்த்ததும் மாடலாக நின்றவன் கதறி அழுதான். விசாரித்தபோது நீங்கள் முதலில் தெய்வாம்சம் என வரைந்ததும் என் உருவத்தைதான். காலம் என்னை சீரழித்துவிட்டது எனப் புலம்பினான்.
    இதிலிருந்து மனிதனுக்குள் கடவுள், சாத்தான் இரண்டும் உள்ளது. அதிலிருந்து சொர்க்கம் அல்லது நரகத்தை கண்டுகொள்வது மனிதனுக்கு சிறப்பு. என்னவாக வேண்டும் என்பதை மனமே நீ தேர்ந்தெடு.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கோபம் வேண்டம்-ஆறாவது அறிவு!

    அந்த ஞானிக்கு கோபமே வராது. அதை நன்றாகப் புரிந்துகொண்ட சீடனுக்கு அது எப்படி சாத்தியம் என்று அவரிடம் விளக்கம் கேட்டான். ஞானி சொன்னார், நான் அடிக்கடி படகில் அமர்ந்து தியானிப்பது வழக்கம். அப்போது நான் இருந்த படகை யாரோ முட்டினார்கள். எனக்கு சரியான கோபம், என் தியானத்தைக் கலைத்துவிட்டார்களே என்று. கண்திறந்து பார்த்தபோது என்படகை முட்டியது ஓர் வெறும் தளையறுந்த படகு. அதன் மேல் எப்படி கோபம் கொள்வது. அன்றுதான் புரிந்தது ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதோ ஓர் கரணம். அது புரியாமல் நாம் கோபப்பட்டு என்ன பயன். என்னை கோபப்படுத்தும் நிகழ்வுகள் ஓர் தளையறுந்த படகு என நினைத்துக் கொள்வேன். கோபம் வராது என்றார்.
    சீடனுக்கு ஓரளவு புரிந்தது. ஓர்நாள் சீடர்களுடன் வெளியில் சென்று கொண்டிருந்த போது ஞானியின்மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர்மீது கல்லை எறிந்து ஓடப்பார்த்தான். சீடர்கள் விரைந்து அவனைப்பிடித்து அடிக்க முயன்றனர். ஞானி சீடர்களிடம் அவன் ஓர் தளையறுந்த வெற்றுப் படகு. அவனை துன்புறுத்தாதீர்கள். அவனை அழைத்துவாருங்கள் என்று அருகில் அழைத்து தன்னிடம் உள்ள பழங்களில் ஒன்றைக் கொடுத்தார். தன்மீது எதாவது சாபம் இட்டுவிடுவார் எனப் பயந்தவனுக்கு பழ ம்கிடைத்தது. அன்பின் வயப்பட்டான். அதுகாறும் கொண்டிருந்த வெறுப்பு மறைந்தது.
    சீடர்கள் அவன்மீது நீங்கள் கோபம் கொள்ளவில்லை. அதுசரி. எதற்காக பழம் தந்து உபசரிக்கின்றீர்கள் என்றனர். ஞானி சொன்னார் தன் மீது கல் எறிந்தவனுக்கு ஐந்தறிவுடைய மரம் பழம் தரும்போது, மனிதநேயத்துடன் நான் கனி தருவது தப்பாகாது என அறிவுரை பகர்ந்தார். கல்வீசியவன் மனிதனான். மகானின் காலில் விழுந்தான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

யார் தவறு!

     தன் பின்னால் வந்துகொண்டிருந்த சீடன் திடீரென்று அலற நின்றார் சாது. கல் ஒன்று காலை இடித்துவிட்டது என்று வருத்தத்துடன் கூறினான். சாது உடனே அவன் காட்டிய கல்லைப்பார்த்து, ‘கல்லே ஏன் சீடனின் காலை இடித்தாய்?’ எனக் கோபமுடன் கேட்டார்.
    கல்லிற்கு உயிரேது, அது எப்படி பதில் கூறும்! என திகைப்புடன் சொன்னான் சீடன். சாது சொன்னார், சீடனே அந்த உயிரற்ற கல் உன்னை இடிக்கும்போது ஏன்பேசாது. நீயாக அதன்மேல் கவனமின்றி இடித்துக் கொண்டு, கல் இடித்துவிட்டது எனக் கூறினாய், பலர், இதைப்போன்று தவறுகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டு பிறர்மீது சுமத்துகின்றார்கள். தான் கல்லின்மீது குற்றம்போல் சொன்ன சொல்லிற் உள்ளதவறுக்கு சரியான பாடம் புரிந்தான் சீடன்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அன்புடன் கலந்தது!

    பண்பு நிறைந்த ஓர் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்த ஒலி கேட்டதும் வீட்டின் உள்ளே இருந்த கணவன் மனைவி இருவரும் கதவைதிறக்க வந்தனர். திறக்குமுன் வந்திருக்கும் தாங்கள் யார் எனக் கேட்டனர். வந்தவர்கள் நாங்கள் செல்வம், வெற்றி, அன்பு. உங்கள் பண்பு கண்டு வந்துள்ளோம். எங்களில் யார் ஒருவர் உங்கள் வீட்டிற்குள் வர அனுமதி கொடுப்பீர்கள் எனக் கேட்டனர்.
    கணவன் மனைவி இருவரும் சிறிது யோசனை செய்து, உங்களில் யார் அன்போ, அவர் வரலாம் என்றனர். அன்பு நுழைய, தொடர்ந்து வெற்றி, செல்வம் இரண்டும் அன்பு இன்றி நாங்களில்லை எனக்கூறி உள்ளே வந்தது. எனவே எல்லோரிடமும் எல்லாவற்றின் மேலும் அன்பு கொள்ளுங்கள். எல்லா இன்பங்களும் அடைவீர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

நீங்கள் ஒளியாகுங்கள்!

    தன் ஸ்தூல வாழ்க்கையின் இறுதியில் படுக்கையில் இருந்த குருவை நோக்கி அவரின் சீடர்கள் நீங்கள் இது காறும் எங்களை நல்வழி நடாத்திக் கொண்டிருந்தீகள். உங்கள் அறிவுறையில் நல்வழி கண்டோம். நீங்கள் இல்லா வாழ்வு எங்களுக்கு ஒர் ஒர் இருண்டவானம். அந்த இருளில் நாங்கள் தடுமாருவோமே. எங்கள் கதி என்ன ஆவது என பேதலித்தனர்.
    அன்புடையவர்களே! எல்லா மானுடல்களும் ஓர் நாள் அடையவேண்டிய நிலையைத்தான் நான் அடையப்போகின்றேன். இதுகாறும் நீங்கள் சென்ற நல்வழியை நினைவு கூறுங்கள். என்றும் எப்போதும் இருட்டு எனக்கலங்காதீர்கள். அங்கே நீங்களே விளக்காக, விளக்கின் ஒளியாக மாறுங்கள். நல்வழி, நல்வாழ்வு, நலவாழ்வு பெறுவீர்கள் என்றார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27078057
All
27078057
Your IP: 3.139.86.56
2024-04-25 17:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg