gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

    ஓர் ஞானி ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஒருவர் சாமி நான் வேண்டுவது எனக்கு கிடைக்க அருளவேண்டும் என்றார். உன் மனம் விரும்பும் எல்லாம் கிடைக்கும், உனக்கு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார்.
    மனிதர்கள் விருபத்தில் மிகச்சிறந்த ஒன்றான சந்தோஷம் வேண்டும், மன அமைதி வேண்டும், யமபயம் நீங்கவேண்டும், ஞானம் கிடைக்க வேண்டும் என்றார்.
    அந்த ஞானி சொன்னார், அன்பனே! இங்கும் சரி, வேறு எங்கும் சரி எல்லோரும் ஞானிகளையும், யோகிகளையும் தவறாக புரிந்து கொள்கின்றனர். எங்களிடம் பழங்கள் கிடையாது. நாங்கள் விதைகள்தான் விதைக்க முயற்சிக்கின்றோம். அதிலிருந்து நீங்கள்தான் உங்கள் உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பறந்த பஞ்சு! கரைந்த பாவம்!

    ஒருவன், மற்றொருவனை தன் எதிரி என நினைத்து அவனைப் பற்றி பார்த்தவர், தெரிந்தவர் என்று எல்லோரிடமும் தப்புத் தப்பாக எவ்வளவு அவதூறு கூறமுடியுமோ அவ்வளவு அவதூறு பிரச்சாரம் செய்தான். ஒருநாள் அவனுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டது. தான் ஏன் இப்படி அவதூறு பிரச்சாரம் செய்கின்றேன் என வருந்தி அந்த ஊரில் உள்ள பெரியவரிடம் சென்று தான் இதுநாள் வரை செய்ததை கூறி, தன் பாவத்திற்கு பரிகாரம் ஏதாவது கூறச் சொன்னான்.
    பெரிவர் அவனது வீட்டில் உள்ள இலவம் பஞ்சு தலையணையை நடுத்தெருவில் கொண்டு சென்று கிழித்து பஞ்சையெல்லாம் பறக்கவிட்டு வா என்றார். அவ்வாறு செய்தால் தன் பாவம் பஞ்சாக பறந்துவிடும் என நினைத்து அவ்வாறே செய்து திரும்பினான். பெரியவரிடம் அவர் சொல்லியபடி தான் செய்ததைக் கூறினான்.
    பெரியவர் இப்போது அங்கே சென்று அந்த பஞ்சையெல்லாம் சேர்த்து மீண்டும் தலையணையில் அடைத்து வா என்றார். அங்கே சென்றவனுக்கு கொஞ்சம் பஞ்சு கூட தென்படவில்லை. எல்லாம் காற்றில் பறந்து அங்கும் இங்குமாக கலந்து மறைந்து போயிற்று. காற்றில் நாற்புறமும் பறந்த பஞ்சை பொறுக்கமுடியாமல் பெரியவரிடம் வந்து சேர்ந்தான்.
    பெரியவர் சொன்னார் பஞ்சு காற்றில் பறந்தது போல நீ இலகுவாக செய்த பாவங்களும் காற்றில் கலந்துவிட்டது. அதன் பலனை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் அதன் பாதிப்புகள் குறைய நீ இனிமேலாவது பாவங்கள் செய்யாமல் புண்ணியமான காரியங்களைச் செய் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அன்பே இன்பம்!

    ஒர் இளைஞனுக்கும் இளைஞிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்வில் அன்புடன் இனைந்து இன்பங்களை அடைந்தனர். இனிய இல்லறவாழ்வின் அடையாளமாக குழந்தைகளைப் பெற்றனர். கடமைவுணர்வுடன் சிறப்பாக வளர்த்து அவர்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகளைக் காண்பித்து திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். வயதானது. வாழ்வில் அனைத்தும் பெற்ற திருப்தி நிம்மதி கொண்டு இருந்தனர். வயதானதால் வேலை செய்ய முடியாததால் கிடைத்தைக் கொண்டு சந்தோஷத்துடன் வாழ்ந்தனர்.
    எப்போதும் வரும் சுபதினங்கள் வந்து போயின. முடிந்தளவிற்கு கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வருடம் வரவிருக்கும் திருமணநாளை கொண்டாட நினைத்தனர். இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவருக்கு அன்பு பரிசு கொடுக்க நினைவு கொண்டனர். தன் அன்பு மனைவிக்கு பரிசு கொடுக்க தன்னிடம் நிதியில்லை என்பதால் வேறு வழியின்றி தன் ஒவ்வொரு திருமணத்தன்றும் இனியநினைவுகளுடன் அணியும் தன் திருமண ஆடையை விற்று அந்தப் பரிசை வாங்கிட முடிவு செய்து அதன்படி மகளிர் கொண்டையில் அணியும் ஓர் அழகிய ஆபரணத்தை வாங்கிவந்தார்.
    அதைப்போலவே தன் அன்புக் கணவருக்கு பரிசு கொடுக்க தன்னிடம் நிதியில்லை என்பதால் வேறு வழியின்றி தன் ஒவ்வொரு திருமணத்தன்றும் இனியநினைவுகளுடன் அலங்காரம் செய்து கொள்ளும் தன்சிகையை விற்று, தன் கணவர் திருமணத்தன்று அணியும் ஆடையை அழகுபடுத்த ஓர் அழகிய வண்ணக் கற்கள் பதித்த ஆபரணம் ஒன்றை வாங்கி வந்தார்.
இருவரும் அந்த அன்பு இல்லத்தில் சந்தித்துபோதுதான் உண்மை தெரிந்தது. தன் மனைவி அவள்தன் சிகைவிற்று தன் திருமண ஆடைக்கு ஆபரணம் வாங்கி வந்ததும், தான் அவளின் சிகையை அழகுபடுத்த ஆடையை விற்று ஆபரணம் வாங்கி வந்ததும். அன்பு பரிசுகளை இருவரும் உபயோகிக்க முடியா நிலை. இருப்பினும் இருவரின் அன்பு அளவிடமுடியாதது. எவரின் அன்பு சிறப்பு! ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் பண்பே சிறந்த அன்பு, அதுவே வாழ்வின் நிறைவான இன்பம்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

செடியில் காய்க்கும் பணம்!

    ஒரு மந்திரியின் வீட்டில் களவு போயிருந்தது. காவலர்கள் தேடினார்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. பல நாட்களாகியும் எந்த தடயங்களும் இல்லை. காவலர் தலவன் பதவிக்கு ஆபத்து வரும் போலிருந்தது. அவர் ஏழை ஒருவனின்மேல் திருட்டுப்பட்டம் கட்டினார். மந்திரி அவனுக்கு தண்டனை வழங்கினார். அப்போது அந்த ஏழை தன் திறமை அநியாயமாக இப்படி வீனாகப் போகிறதே என்றான். காவலர் தலைவன் அப்படி என்ன உன்னிடம் திறமை இருக்கின்றது என்றான்.
    ‘நான் பணத்தை நொடியில் காய்க்க வைப்பேன்’ என்றான். தகவல் மந்திரிக்குச் சென்றது. தண்டனை ரத்து செய்யப்பட்டது, நீ சொன்னது உண்மைதானா! என மந்திரி கேட்டார். ஆம். சத்தியம் என்றான். உடனடியாக அப்படி ஒருச் செடியை வளர்ப்பதற்கு, விதைக்கு, மூலதணத்திற்கு அந்த ஏழைக்குப் பணம் தரப்பட்டது. பணத்துடன் சில இளைஞர்களைக் கேட்க அதுவும் தரப்பட்டது.
    உரமிட, விதைக்க கொஞ்சம் நாட்கள் ஆகும் எனக்கூறி பணம் மற்றும் இளஞர்களுடன் அந்த ஏழை புறப்பட்டான். பல மாதங்கள் கழித்து மூட்டையாக கட்டி பணம் கொண்டுவந்தான். உடன் சென்ற இளைஞர்களும் வந்தனர். அனைவரும் அந்த பணம் காய்க்கும் செடியைப் பார்க்க ஆவலோடு இருந்தனர். மன்னரும் மந்திரியும் அந்தச் செடியைப் பார்க்கப் புறப்பட்டனர். அந்த இளைஞன் அந்தச் செடியை நீங்கள் யாரும் இப்போது பார்க்க முடியாது என்றான்.
    என் மனதில் இருந்த அந்தச் செடியின் விதையை நீங்கள் அனுப்பிய இளைஞர்கள் மனதில் இட்டு வளர்த்து விட்டேன். பணம் சம்பாதிக்க முடியும். அதை மேலும் மேலும் பெருகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பணம் காய்க்கும் செடியாக இவர்கள் மனதில் விதைத்து விட்டேன், இவர்களும் தங்களது கடும் உழைப்பினால் நீங்கள் தந்த முதலீட்டை வைத்து உழைத்தார்கள் அதன் பலன்தான் இந்த பணம். அது இனிமேலும் அவர்களது உழைப்பால் வளரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்து விட்டது என்றான்.
   இந்த நம்பிக்கை வார்த்தைகளை அரசனாலும் மந்திரியாலும் மறுக்க முடியவில்லை. மன்னர் அவனுக்கு அரசவையில் பதவி கொடுத்தார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பகைமை வெல்ல!

     மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்குட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பார். இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம்.
  அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார். தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார்.
   விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார்.
  மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்திருந்தனர். சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார்.
   அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கிவிட்டேன். ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்ததுள்ளது’ என்றார்.
   பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்றுதான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மனம் உருகி நன்றி கூறுதல்!

    மீன் பிடிக்கச் சென்றவன் துடுப்பை விட்டு விட்டான் படகு திசை மாறியது, வழியில் வீசிய காற்றால் படகு சேதமாயிற்று. உடைந்த மரத்தினைப் பிடித்து கரை சேர்ந்தான். அங்கு யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை. எனினும் மனம் தளராமல் இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் அந்த தீவில் தென்னை ஒலையால் ஒர் குடில் அமைத்துக் கிடைத்ததைக் கொண்டு நாட்களைத் தள்ளினான்.
    ஓர் நாள் உணவு சேகரிக்க வெளியில் சென்றிருந்தபோது அவன் குடிசை தீப்பற்றி எரிந்தது. இந்த யாருமில்லாத் தீவில் அநாதையாக வாழ்ந்த எனக்கு வழிகாட்டுவாய் என நம்பியிருந்தேன். இறைவா! நான் தங்கியிருந்த குடிலும் எரிந்து விட்டதே என்று வேதனைப் பட்டான். கரையோரம் புலம்பியபடி நடந்தான். அப்போது தூரத்தில் ஓர் பெரிய படகு தெரிந்தது. தன்னால் இயன்றமட்டும் சப்தத்துடன் குரல் கொடுத்தான். படகு கரைக்கு வந்தது.
   அவர்களிடம் நல்லவேளை நான் போட்ட சப்தம் உங்கள் காதிற்கு கேட்டதால் பரவாயில்லை. என் படகு உடைந்ததால், நான் பல மாதங்களாக இத்தீவில் மாட்டிக் கொண்டேன் என்றான். அதற்கு படகிலிருந்து வந்தவர்கள், உன்குரல் கேட்டு வரவில்லை. தீவில் நெருப்புடன் புகைவரவே யாராவது இருப்பார்கள் என்று வந்தோம் என்றனர்.
  அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தன் குடில் எரிந்ததைப் பார்த்து வந்திருக்கின்றார்கள். இறைவனுக்குத் தெரிந்திருக்கின்றது அது இனிமேல் நமக்குத் தேவையில்லை என்று. அது புரியாமல் புலம்பியுள்ளேன். இறைவா என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என மனமுருக வேண்டினான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

பட்டினிபோட்ட பாவம்!

     ஓர் வியாபாரி வெளியூர் சென்று திரும்ப நேரம் ஆகிவிட்டது. எப்படியும் ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நடந்தவருக்கு திடீரென்று பெய்த மழை தடையை ஏற்படுத்த அந்த கிராமத்தில் இருந்த ஓர் குடிசை வீட்டின் கதவைத் தட்டி மழைக்கு ஒதுங்க இடம் கோரினார். இடம் தரப்பட்டது. அது உணவு வேளையாததால், மழையில் நனைந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தவருக்கு உணவு தரப்பட்டது. அப்போது அந்த குடிசைவாசி உணவு தந்த இறைவனுக்கு நன்றி கூறினார்.
    வியாபாரியோ நான் உங்களுக்குத் தான் நன்றி கூறுவேன் ஏனெனில் எனக்கு கடவுளிடம் நம்பிக்கை கிடையாது என்றான். அன்புடனிருந்த குடிசைவாசி இதைகேட்டதும் கோபங்கொண்டு கொடுத்த உணவை பிடுங்கி அந்த வியாபாரியை வெளியில் அனுப்பிவிட்டார். அது அந்த குடிசைவாசியின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
    அன்று இரவில் அந்தக் குடிசைவாசிக்கு ஓர் கனவு வந்தது. அதில் ஓர் சந்யாசி, இவ்வளவு காலமும் கடவுளை இல்லை என்று சொன்னவனுக்கு பட்டினி என்று இல்லாமல் உணவு கிடைக்க இறைவன் அருள் புரிந்திருக்கின்றான். ஆனால் நீ இன்று அந்த இறைவனைக் காரணம் காண்பித்து பட்டினி போட்டாய், பாவத்தை தேடிக்கொண்டாய் என்றார். திடுக்கிட்டு முழித்த குடிசைவாசி தன் தவறை உணர்ந்தான்.
    கொடுத்த உணவை திரும்ப பெற்றதற்காக வருந்தினான். கடவுள் இல்லை என்றால் அது அவன் கர்மம். பலன்களை அவன் அனுபவித்துப் போகட்டும். அதற்கு நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும் என தன் எண்ணங்களைத் திருத்திக் கொண்டான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கோபத்திற்கு காது!

    ஒரு மனநல டாக்டரிடம் வந்தவன் தனக்கு மனோ வியாதி இருப்பதாக கூறினான். பார்த்தால் தெரியவில்லை. எதை வைத்து நீ அப்படி கூறுகிறய் என்றார். நோயாளி, பார்த்தால் தெரியாது டாக்டர், பழகினால்தான் தெரியும் என்றான். சரி, கவலைப்படாதே, நான் உன்னை குணப்படுத்தி விடுகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசினார். உனக்கு என்ன பிரச்சனை என்றார்.
    எனக்கு திடீர் என்று கோபம் வருகின்றது. அப்படி வந்தகோபம் சும்மா போவதில்லை என்றான். டாக்டர், எல்லோருக்கும் தான் கோபம் வருகின்றது. சிறிது நேரத்தில் போய்விடும் என்றார். அவன் ஆமாம் சார், அந்தகோபம் ஒரு காதோடு போகின்றது. என்றான்.
    டக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார். யார் எனக்கு கோபத்தை உண்டு பண்ணுகின்றார்களோ அவர்களது காதை நான் கடித்து விடுகிறேன் என்றான். டாக்டர் அது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா என்றார். அவன் கடித்தபின்புதான் அது எனகுப் புரிகின்றது என்றான்.
     அதுசரி இதற்கு முன் யாரைக் கடித்தாய், ஏன் கடித்தாய் என்றார். ஒருமனநல டாக்டர் என்னைக் குணப்படுத்த பணம் கேட்டார். எனக்கு கோபம் வந்தது அவர் காதைக் கடித்து துப்பிவிட்டுதான் இங்கே வந்திருக்கின்றேன் என்றான். இதைக் கேட்டபின் அந்த டாக்டர் தன்காதைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவ மணையிலிருந்த ஓடினார். கோபங்கள் ஒருவரது மனநிலையை, செயல்களை முற்றிலும் மாற்றும் தன்மை கொண்டது.

                                    

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

ஆலோசனைக்கு பில்!

    நண்பர் ஒருவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு சென்ற வக்கீல், தனது டாக்டர் நண்பனைத் தேடிக் கண்டுபிடித்து அவர் அருகில் அமர்ந்தர். இருவரும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி மகிழ்ந்திருந்தனர். அப்போது ஒருவர், டாக்டர் எனக்கு தொடர் தலைவலி எனக்கூறி அதற்கு மருந்துகேட்டுச் சென்றார். சிறிது நேரத்திற்குள் இன்னொருவர் எனக்கு வயிற்றுவலி என்று மருந்து கேட்டார். அவர்கள் சென்றதும் டாக்டர் சலிப்புடன் பொது நிகழ்ச்சியில்கூட நிம்மதியா கலந்து கொள்ள முடிவில்லை என்றார்.
    வக்கில் இது போன்று என்னிடமும் அவ்வப்போது பொதுஇடங்களில் ஆலோசனைகள் கேட்பார்கள் என்றதும், அதை எப்படி சமாளிக்கின்றீர்கள் என்று டாக்டர் கேட்டார். அதைத்தான் உனக்கு இப்போ ஆலோசனையாகச் சொல்கின்றேன் கேள் என்று, ஆலோசனை சொல்லிவிட்டு அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு பில் அனுப்பி விடுவேன் என்றார்.
    ஆர்வத்துடன் கேட்ட டாக்டர் இது நல்ல யோசனை என்று பாராட்டினார். இருவரும் கல்யாண விருந்து அருந்தி வீட்டிற்குச் சென்றனர். அடுத்தநாள் காலை டாக்டர் வீட்டிற்கு நேற்றைய ஆலோசனைக்கு ஓர் பில் வந்திருந்தது வக்கீல் நண்பரிடமிருந்து. நண்பரிடமிருந்து இப்படியொரு ஆலோசனைக்கு பில் வரும் என நினைக்காத டாக்டர் அசந்து நின்றார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

மகிழ்ச்சி, நிம்மதி!

    ஞனியிடம் வந்த செல்வந்தர் தனக்கு நிம்மதியில்லை என்றார். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கலாமே என்றார் ஞானி. செல்வந்தர் எனக்குத் தேவை மகிழ்ச்சி அதை எப்படி வாங்கமுடியும் என்றார்.
   ஞானி அவரை ஓர் விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தார். பலர் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஞானி ரசித்தார். செல்வந்தர் பந்து என்னைப்போல உதை படுகின்றது எனக் கவலை கொண்டார்.
   ஞானி, செல்வந்தரை ஓர் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார் அங்கு புல்லாங்குழலின் நாதம் இசையாக அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தது. சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. நிகழ்ச்சி முடிந்தது இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். ஞானி செல்வந்தரைப் பார்த்து பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் என்ன வித்தியாசம் என்றார். செல்வந்தர் அது பந்து, இது புல்லாங்குழல் என்றார்.
   பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் தேவை காற்றுதான். பந்தின் உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் அது உதை படுகின்றது. புல்லாங்குழலில் அது அவ்வப்போது வெளியே வந்து விடுவதால் அது இனிமையைத் தருகிறது. மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது என்றார்.
     செல்வந்தருக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. செல்வந்தர் நினைத்தார். பந்தின் காற்றுபோல் செல்வம் நம்மிடம் இருந்தால் அதில் இன்பங்களைவிட துன்பங்கள்தான் அதிகம். புல்லாங்குழல் காற்றுபோல் செல்வம் அவ்வப்போது வெளியேறினால் அது நிம்மதியும் இன்பமும் தரும் என்பதை உணர்ந்தார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930226
All
26930226
Your IP: 44.222.212.138
2024-03-28 19:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg