gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

கடந்தது கடந்ததுதான்!

Written by

      அழகான ஓர் பெண். அவளை பலர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஏதாவது ஓர்குறை கண்டு தவிர்த்துவிட்டாள். தான் மிகவும் புத்திசாலி. தான் செய்தது சரி என்றும் நினைத்தாள். காலம் கரைந்தது. அழகு குறைந்தது. உலகில் தனித்து இருப்பதாக உணர்ந்தாள். ஓர்காலத்தில் அழகால் எல்லோரையும் வசீகரப் படுத்தியிருந்த அவளுக்கு, தற்போது தனக்கு மட்டுமே அழகாகத் தோன்றினாள். அவளுக்குத் தெரிந்த அவள் அழகோ, புத்திசாலித்தனமோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை. மற்றவர்களிடமிருந்து பிரித்துதான் வைத்துவிட்டது.
       ஓர்நாள் அவள் தோழியை சந்தித்தாள். கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது கண்டு அதிசயப்பட்டாள். அதுபற்றி அவள் தோழியிடம் கேட்க, ‘உன் வாழ்வில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் நிறைவுகளைப் பார். குறைகளைத் தேடாதே! அவர்களிடம் அன்பு கொண்டு நட்புடன் பழகு! மற்றவர்களை வசீகரிப்பாய்! வாழ்வு ஆனந்தமயமாகும்,’ என்றாள்! அதன் பிறகு அவளை அவள் திருத்திக் கொண்டாள்! ஆனால் அவள் இழந்தது இழந்ததுதான்! கரைந்த காலம் இறந்தகாலம், அது நிகழ்காலமாகாது! இனிவராது!

பிரமாண்டம்!

Written by

      பிரமாண்டம் என்றால் அளவிடமுடியாத அளவிற்கு பெரியது. எந்தவித அளவுகோளும் இதற்கு இல்லை. நீங்கள் நினைப்பது போல பலமடங்கு பெரியது. பிரமாண்டம்- பிரம்மம்+ அண்டம். அண்டம்- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பிரம்மம்- ஆண்டவன்- கடவுள். எதிலிருந்து இந்த உலகம் உண்டானதோ, எதற்குள் இந்த உடலும் உயிரும் சங்கமிக்கின்றதோ அதுவே பிரம்மம்.
      ஓர் விதையுனுள் ஓர்மரம் அடங்கியிருப்பதால் விதையே பெரியது, மரத்தைவிட. ஆனால் ஓர் மரத்தில் இது போன்று எத்தனை விதைகள் உருவாகின்றது. உற்பத்தியாகின்றது. எனவே விதையைவிட மரமே பெரியது. புரியாத ஆனால் உணரும் பெரிய தத்துவம் இது. இந்த வித்தையை புரிந்தவன், அறிந்தவன் கடவுள். அதனால்தான் பிரமாண்டவனாய் இருக்கின்றான்.

ஆன்மீகம்!

Written by

       ஒருவர் நாய்க்கு உணவிடும்போது தடியால் அதை அடிப்பது வழக்கம். அந்த நாய் வலியின் மிகுதியால் நாளை உணவருந்தக்கூடாது எனநினைத்தாலும், அடுத்தநாள் அந்த நேரம் வந்தவுடன் வாலையாட்டி அங்குவந்து அடியுடன் உணவருந்தி செல்கின்றது. அடியின்றி உணவில்லையா என நாய் சிந்திப்பதில்லை. அதுபோல வாழ்வும் துக்கத்திற்குப்பின் இன்பம் என மாறிமாறி வரும் தன்மையுடையது. துயரமில்லா ஆனந்தவாழ்விற்கு ஏங்கும் மனம் கடைசியில் தான் ‘ஆன்மீக வாழ்கை’ என்ற உண்மையை உணருகின்றது.

பாதிப்புகளை விட்டு விடு!

Written by

    நம் காலில் முள் குத்தினால் அதன் பாதிப்பு, வலி நம்மை உணரவைக்கின்றது. முள்ளை எடுத்துவிட்டு அப்படியே நடக்கின்றோம். தேவையானால் வீட்டிற்குச் சென்று மருந்திடுகின்றோம். நம் முன்னாள் நடக்கும் நிகழ்வுகள், பிரச்சனைகளை வெளியில் விட்டுவிட வேண்டும் குத்திய முட்களை தூக்கி எறிவது போல்.
    அதைவிடுத்து நிகழ்வுகளின் தாக்கங்களை சுமந்து கொண்டிருந்தோமானால் மனம் அமைதியடையாது. மனம் அமைதிபடும்வரை அடுத்த நிகழ்வுகளில் நம் இயலாமை, கோபம் எல்லாம் வெளிப்படும். அது நம் வளமான வாழ்வின் அடுத்த செயல்களுக்கு எதிரி. எனவே பாதிப்புகளை நிகழ்வுகளை அங்கேயே களைந்து விட்டு விடுங்கள். மிகமிகத்தேவை என்றால் மட்டும் அதற்கு தீர்வு கானும்வரை நினைவில் கொண்டிருங்கள்.

மன அமைதி!

Written by

       மனம் அமைதியாக இருக்கும்போது அது உள்வாங்கும் நிகழ்வுகள் அபரிதமானவை. அதன் செயல் பாடுகள் அளவிட முடியாதவை. சிவபிரான் தட்சினாமூர்த்தியாக சனகர், சனந்தர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு சனாகதி முனிவர்களின் சந்தேகங்களை நான் எப்படி சொல்கிறேன் என்று பாராமல், எப்படி என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என ‘சின்முத்திரை’ காட்டி அமர அவர்கீழே அந்த நால்வரும் மௌனமாக அமர்ந்தனர்.
     சிவன் மனதால் நினைத்தார் அம்முனிவர்களுக்கு அது வேண்டுமென்று. அந்த முனிவர்களும் அதை எதிர்பார்த்து இருந்தனர். அது அந்த அலைகள், காந்தசக்தி அலைகள், அலை அலையாக முனிவர்களின் மனதே சென்றடைந்தது. இதுவே தத்துவமாகும். இதை புரிந்து கொண்டு செயல்படவே தட்சிணாமூர்த்தி- ஞானகுரு சிலைகள் கோவில் வளாகத்தில்.

மனம் நிறைந்த அன்பு!

Written by

     புராணகாலத்தில் காடவர்கோன் என்ற மன்னன் சிவ ஆலயம் அமைக்க ஆசைப்பட்டு ஏற்பாடுகள் செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.  அதே ஊரில் வசதியில்லா பூசலர் என்ற ஏழை, தனக்கு வசதியில்லையே கோவில் கட்ட என நினைத்து, நிதியிருந்தால் எப்படி கட்டலாம் என மனதிலேயே கோவிலை படிப்படியாக் கட்டிமுடித்து அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் நினைத்தான். அரசன் கனவில் வந்த ஈசன், பூசலர் கட்டிய கோவிலுக்கு தான் செல்வதாகவும், அரசன் கட்டிய கோவிலுக்கு வெறொருநாள் கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளவும் கூறினார். திடுக்கிட்ட அரசன் காலை ஊர் முழுவதும் தேடியும் கோவில் கானாமல், கடைசியில் பூசலரைக்கண்டு அவர் கட்டிய கோவில் எங்குள்ளது என வியப்புடன் வினவ, பூசலர் தான் கோவில் கட்டியதும் அதற்கு குடமுழுக்கு செய்ய நினைத்ததும் தன் மனதில் என்றரைத்தார். அரசன் பூசலரின் அருள் நிறைந்த அன்பைக் கண்டுகொண்டான்.
   ஜெகத்தில் தெரியும் கோவில்தான் சிறந்தது, எல்லோரும் அதைக் கட்ட முடியாது. ஆனால் அகத்திலே கோவில் கட்டி கும்பாவிஷேகம் நடத்தி பூஜை செய்த கோவிலுக்குத்தான் முதல் மரியாதை- அருள் கிடைத்துள்ளது. மனம் அமைதியாக இருந்து அருள் நிறைந்ததால்தான் நிகழ்வுகள் சிறப்படையும்.

குழப்பம்!

Written by

      காற்றில்லா ஒன்றை பலூன் என நாம் சொல்வதில்லை. ஆனால் உலகில் பரவியுள்ள காற்றை அதனுள் நாம்தான் செலுத்துகிறோம். அதன்பின் அதை பலூன் என்கின்றோம். நம்மைச்சுற்றியுள்ள பிரச்சனைகளையும், நாம்தான் காற்றை பலுனில் செலுத்துவது போல் நம்முள் செலுத்திவிட்டு, நம்மை குழப்பிக் கொள்கின்றோம். அந்தப் பிரச்சனைகளை வெளியே விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாதவர்களாய் இருந்து பாருங்கள், அந்த பிரச்சனையால் உங்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு எளிமையாக கண்டு கொள்வீர்.
   நிற்கும் ரயிலில் இருப்பவர்களுக்கு அடுத்த தண்டவாளத்தில் இருக்கும் ரயில் நகரும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் ரயில் நகருவதுபோல் தோன்றும். அதேபோன்றுதான் பிரச்சனைகளுடன் உள்ளத்தை நிறைத்தவர்களுக்கு உலகில் எல்லாம் பிரச்சனையாகத் தோன்றும்.

மனிதநேயம்-அன்பு!

Written by

       கிருஷ்ணர் பாண்டவதூதராக துரியோதனை சந்திக்க வந்தபோது அவரை துரோணர், திருதராஷ்டிரன், திரியோதணன் முதலானோர் தங்களின் மாளிகையில் வைத்து உபசரிக்க விரும்பினர். ஆனால் தர்மவானும், அன்பு மிகக்கொண்டவனுமாகிய திருதரஷ்டிரனின் தம்பி விதுரனின் குடில் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் சென்று தங்கி தான் தூது வந்த செயலை செய்ததாக வரலாறு பகர்கின்றது. அன்பு கொண்ட இடத்தில் தான் மனித நேயம் இருக்கும். அது எல்லோராலும் பாராட்டி போற்றப்படும். மதிக்கப்படும்.

பிரிவு-அதிக அன்பு!

Written by

      இராமாயண காவியத்தில், கானகத்தில் ராமரின் நண்பனான குகன், ராமணைவிட்டுப் பிரியமனமில்லாமல், ராமா! நீ எங்களுடனே தங்கிவிடு, அல்லது என்னையும் உன்னுடன் அழைத்துபோ, என மன்றாட ராமர், “பிரிவுதான் அன்பை அதிகமாக்கும். நாம் மீண்டும் சந்திக்கும் நேரம் வரும், அப்போது இதை நீ உணர்வாய்” என்றார்.
கோபியர்களுடன் குரவைக்கூத்து ஆடும் கன்னன் விளையாட்டாக திடீரென்று மறைந்து விடுவாராம். அப்போது அந்த கோபியர்களுக்கு கன்னன்மேல் இதுகாறும் இருந்த அன்பு பலமடங்கு அதிகமாகி விட்டதாக ஸ்ரீமத்பகவதம் கூறுகிறது.

அன்பின் அனுபவம்!

Written by

      ஓர் பஞ்சதந்திரக் கதையில் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பிற்கு இலைகளைப் பறித்து போட்ட பறவைதனை வேடன் தன் அம்பால் குறிவைக்கும்போது, கரைக்கு வந்த அந்த எறும்பு வேடன் காலைக் கடித்ததால் குறிதப்ப பறவை பறந்ததாக் கூறப்பட்டுள்ளது. எறும்பு எதேச்சையாகக் கடித்தது என்றாலும், எறும்பு பெற்ற இலை என்ற அன்பிற்கு உதவி என்ற இந்தக்கதை, அந்த பறவையின் எந்த பிறவி அன்பின் கர்மபலனோ! அது வேடனின் கணையிலிருந்து தப்ப உதவியது.
      இந்தக் கதையினால் நமது உள்ளத்திற்குள் ஓர் எண்ணம் உறுவாகி பதிவாகவேண்டும். நாம் துயரப்படும்போது நம்மை, நம்மிடம் அன்பு காட்ட ஆளில்லை, நாம் தனி மனிதன், ஆதரவற்ற ஓர் அநாதை என்று வருத்த முறும் நிலையில், என்றோ, எங்கோ, எப்படியோ, யாருக்கோ, எந்தவடிவிலோ காட்டிய அன்பின் அடையாளம், உதவிக்கு வருமானால், மனம் எவ்வளவு ஆறுதல் அடையும் என்பதை அனுபவம்தான் கூறும்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071757
All
27071757
Your IP: 3.16.81.94
2024-04-24 20:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg