gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மூர்த்தியார்

Written by

60. மூர்த்திநாயனார்

மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் மூர்த்தியார் பிறந்தார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான். கருநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்தவன். சிவனடியார்களுக்குத் துன்பம் தொடர்ந்து கொடுத்துவந்தான்.

அவ்வூரில் இருந்த மூர்த்தியாருக்கும் பல இடர்கள் செய்தான். அவற்றையெல்லாம் பொறுத்து தன் திருத்தொண்டினை குறைவரச் செய்து வந்தார். இருப்பினும் சந்தனக் காப்பு செய்ய சந்தனம் கிடைக்காமலிக்க எல்லா வகையிலும் தடை செய்தான். மூர்த்தியார் எங்கெங்கோ சந்தனக் கட்டைக்கு அலைந்தார். கிடைக்கவில்லை. சேர்ந்து கோவிலை அடைந்தார்.

நாள்தோரும் சொக்கலிங்கப் பெருமானுக்கு சந்தனம் அறைக்கும் கல்லைப் பார்த்தார். அறைக்கும் கரத்தைப் பார்த்தார். சந்தனக் கல் உள்ளது. அறைக்கும் கரம் உள்ளது. கட்டைதானே இல்லை. எம்பெருமானே என் கரத்தையே சந்தனக் கட்டையாக கருதி சந்தனக் கல்லில் அறைகின்றேன் என கையை கல்லில் அறைத்தார். சதை கிழிந்தது. நரம்புகள் துண்டிக்கப் பட்டது. ரத்த வெள்ளம் கல் முழுவதும் பரவியது.

அப்போது வான் வழி ஒலித்தது. ’மெய்யன்பனே என்பால் கொண்ட அன்பால் இப்படிச் செய்யாதே, உனக்கு துன்பம் தந்தவன் வலிய கொண்ட நாடு உன் வசமாகும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி செய்வாயாக, முறையாக முட்டாமல் திருத்தொண்டு செய்து நம் சிவலோகம் வருவாயாக’ என்று ஒலித்தது. கை முன்போல் ஆயிற்று. அவர் மேனி ஒளி பெற்றது.

அடியார்க்கு தீங்கு செய்த மன்னன் இரவு உயிர் துறந்தான். மன்னருக்கு வாரிசுகள் இல்லாததால் ஒரு யானையிடம் மலர் மாலை தந்து அது யார் கழுத்தில் அதைப் போடுகிறதோ அவரே மன்னன் என்ற வழக்கத்தின்படி மூர்த்தியார் கழுத்தில் மாலை விழ மன்னரானார். திருநீறே திருமுழுக்காகவும், உத்திராட்சம் அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க அமைச்சர்கள் உடன்பட அனைவரும் ஒத்துக் கொண்டதால் மணிமகுடம் சூட்டப்பெற்று நெடுங்காலம் நீதி வழுவாது ஆட்சிபுரிந்து எம்பெருமான் திருவடி சேர்ந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

மெய்ப்பொருளார்

Written by

61. மெய்ப்பொருள்நாயனார்

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அவர்தம் வழியில் தோன்றியவர் மெய்பொருளார். அவர் சிவ வேடம் தரித்தவர் யாவராயினும் அவர்தம் கருத்தின் வழி பணி செய்யும் பண்பு கொண்டவர். உலகப் பொருள்களெல்லாம் இன்றிருந்து நாளை அழியும் பொய்ப் பொருள்கள். இவ் அழிகின்ற பொய்ப் பொருள்களை பொருளாக கருதாமல் திருநீறும் கண்மணியுமே மெய்ப் பொருள் என கருத்துக் கொண்டவர். சிவ வேடம் தரித்தவர்களை அவர்கள் குற்றம் குறை காணாது அவர் சிவ வேடத்தை அன்புடன் போற்றி வந்தார்.

திருக்கோயிலில் நடைபெற வேண்டிய எல்லா விழாக்களையும் சிறப்புற நடத்தியும் அடியவர்க்கு வேண்டியன நல்கியும் வாழ்ந்து வந்தார். முத்தநாதன் என்ற சிற்றரசன் சேதி நாட்டை வெல்ல பலமுறைப் படையெடுத்து தோற்று விட்டான். போர்வழியில் வெல்ல முடியாது எனக்கருதி வஞ்சகவலை விரித்து மெய்ப்பொருளாரை வெற்றிபெற திட்டம் தீட்டி செயல் பட்டான். நடு நாட்டின் மன்னனின் சிவபக்தியை அறிந்து அந்த சிவவேடத்தினாலேயே மன்னரை வீழ்த்த முடிவு செய்தான்.

முத்தநாதன் தன் மேனியெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். சடைமுடியினை பொருத்திக் கொண்டான். கையிலே கத்திவைத்த ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மெய்ப்பொருளார் அரண்மணை நோக்கி சென்றான். சிவனடியார் என்றதால் அனைவரும் வழிபட்டு வழிவிட மன்னன் உறங்கும் எல்லைவர சென்றான். அங்கு மன்னரின் மெய்க்காப்பாளர் தத்தன் மன்னர் உறங்குகின்றார். தாங்கள் காண இதுவல்ல நேரம் என்பதைக் கேட்ட முத்தநாதன் கோபத்தால் சப்தமிட்டு தத்தனை மீறி உள்ளே நுழைந்து விட்டான். மன்னன் உறங்க அவர் துணைவி கால் பகுதியில் அமர்ந்திருந்தார். அடியவரைக்கண்ட துணைவியர் அரசரை எழுப்பிவிட மன்னர் அடியாரை வணங்கியபடி எழுந்தார்.

மங்களம் பெருக எனக் கூறிய அடியவரிடம் மன்னர் அவர் இங்கு எழுந்தருளிய காரணத்தைக் கேட்டார். மண்மேல் இல்லாத ஆகமநூல் இது என்றார். மெய்பொருளார் அந்த ஆகமத்தைப் படித்து கடைத்தேற அருள் புரிய வேண்டி அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி தான் பணிவுடன் தலைகுணிந்து உபதேசிக்க வேண்டினார். முத்தநாதன் இதுதான் சமயம் என்று புத்தகத்தைப் பிரித்து வாளை எடுத்து அவர் முதுகில் குத்தினான்.

தன்னை மீறி அடியார் உள்ளே சென்றதிலிருந்து கவனித்து வந்த தத்தன் தன் வாளை உறுவி முத்தநாதனை வெட்டப் பாய்ந்தான். ‘தத்தா நமர்’ என்று தடுத்த மன்னன் தரையில் நிலை குலைந்தான். தத்தா அவர் நம் உறவினர். நீ இவருக்கு எந்த துன்பமும் இல்லாமல் ஊர் எல்லையில் கொண்டு விடவேண்டும் அதுவே நீ எனக்கு செய்யும் உதவி ஆகும் என்றார். மன்னர் ஆணைப்படி ஊர் எல்லையில் முத்தநாதனை விட்டுவிட்டு தத்தன் திரும்பிவரும்வரை தன் உயிர் போகமல் வைத்திருந்தார் மெய்ப்பொருளார். என் கொள்கை வெற்றிபெறச் செய்த தத்தா நீ உயர்ந்த மேலோய் என்றார்.

தன் அரண்மணையில் உள்ள அரசியல் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து “பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்துய்ப்பீர்” எனக்கூறி தரையில் சாய்ந்தார். இறைவன் தோன்றி அருள் புரிந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

வாயிலார்

Written by

62. வாயிலார்நாயனார் (தபோதனர்)

சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது.

இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேறி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து அன்பு எனும் அமுதை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டார். பல ஆண்டுகள் அகப்பூசை செய்து இறவனை மகிழ்வித்து இறையடி சேர்ந்தார்.

மைலாப்பூர்- கபாலீஸ்வரர் திருக்கோவில்- கற்பகாம்பாள் சன்னதி எதிராக வாயிலார் நாயனார்சந்நிதி.                ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

                                                                                                          

அறுபத்துமூவர்

Written by

ஓம்நமசிவாயநமக!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்

சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!

மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!

செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்

0=0=0=0=0=0

என் உரை:-

அறுபத்து மூவர் நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இப்பகுதியினை இனைத்துள்ளேன். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைபோரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.

நாயன்மார்களின் உன்னத வாழ்க்கை வரலாற்றைக்கூறும் நூல் பெரியபுராணம் ஆகும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பண்டைய தமிழர் அரசியல் அமைப்பு, நடத்தை விதிகள், பண்பாடுச் சிறப்பு ஆகியன பற்றி அறிய முடிகிறது. ஆயிரம் ஆயிரமாண்டுகளாக அருளாளர்கள் தோன்றி பக்தி விதை விதித்து அன்பு நீர் பாய்ச்சி கருணை வேலியிட்டு செம்மையாக இந்த தமிழ் மண்ணின் பெருதனை வளர்த்து வந்துள்ளார்கள். சேக்கிழார் அவர்கள் 63 அடியார்களையும் 9 தொகை அடியார்களையும் பற்றி செய்யுளாக எழுதியுள்ளார்.

இந்த வாழ்க்கை வரலாற்றின் அடிப்படைக் குறிக்கோள் என்னவென்றால் இறையடியார்களை வணங்குவதும் அவரின் சொல்படி செயல் படுவதுமேயாகும். தமிழ் மக்களின் மனத்தில் தொண்டு மனப்பான்மையை வளர்ந்திட இந்த வரலாறு உதவி செய்யும் என்பதாகும். உயர்ந்த நாகரீகம் பெற்றிருந்த ரோமானியப் பேரரசு இருந்த இடம் தெரியாமல் அழிந்ததற்கு அந்த மக்கள் காமக் களியாட்டத்திலும் இன்ப போகங்களிலும் ஈடுபட்டு குறிக்கோள் இல்லா வாழ்வுதனை வாழ்ந்ததுதான் என ஆராய்சியாளர் கருதுகின்றனர். சோழப்பேரரசனாகிய அனபாயயச் சோழனும் அவன் காலத்து மக்களும் சிற்றின்பத்தை மிகுந்து கூறும் சிந்தாமணியை படித்து மயங்கியிருந்த காலத்தே தம் தமிழ் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படவிருந்த அழிவினை முன்கூட்டியே அறிந்து சேக்கிழார் பெருமான் தொண்டு, தியாகம், தூய்மை, சத்தியம் ஆகிய நெறிகளில் மக்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இதை வெளிப்படுத்தினார்.

இந்த தொண்டர் வரலாற்றை பாடப்பணிந்த அனபாய மன்னனிடம் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகல் கடிதம் அளித்து தில்லைவந்து அம்பலவாணரைப் பணிந்து உலகெலாம்’ என சிவன் அடியெடுத்துக் கொடுக்க 4286 பாடல்களைப் பாடி முடித்துள்ளார். மன்னன் ஆர்வமுடன் அவ்வப்போது நூல் பற்றிய விவரங்களைத் தெரிந்து முற்றுப் பெற்றதும் எல்லா புலவர்களையும் பண்டிதர்களையும் சாத்திர வல்லுநர்களையும் தில்லைக்கு வரவழைத்து சித்திரை திருவாதிரை நாளில் ‘திருத்தொண்டர் புராணத்தை’ அரங்கேற்ற ஆரம்பித்து அடுத்த சித்திரை திருவாதிரை நாளில் முடிவுற்றது.

தொகை அடியார்கள்- 9 பேர்

1.தில்லை வாழ் அந்தனர்கள்

ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச்

சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்

பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்

போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி

கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்

சிற்பரவியோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

திருத்தொண்டர் புராணத்தின் முதலில் பேசப்படுபவர் தில்லையில் உள்ள தீட்சிதர்கள். உலகெலாம் நிறைந்தும், அறிவித்தும் ஐந்தொழில் கூத்து போற்றப் பெறுவது திருநடனம். அந்நடனம் புரியும் பூங்கழல்கள் எனப் போற்றப்பெறுவது, போற்றி வாழ்பவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். திருவடித்தொண்டு செய்பவர்கள். மூன்று எரி விதிப்படி வளர்ப்பவர்கள். துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும், சிவனின் அன்பே பேறு எனவும் நினைப்பவர்கள். ஞானம் முதலிய நான்கும் உணர்ந்தவர்கள்.

2. பொய்யடிமையில்லாத புலவர்

அடியார்களும், சிவனருட் செல்வர்களும் ஆவர். மெய்யன்புடன் சிவனடிக்கே தொண்டு பூண்டு திருவருள் நெறி நின்றவர்கள். கயிலைப் பெருமானுக்கே உரியவர்கள். பாடல்களின் சொற்களுக்கு நன்கு தெளிவாக பொருள் கூருவர். அறிவு நிறைந்தவர்கள். நூல் பல கற்று நுண்மதி படைத்தோர் மெய்யுணர்வு கொண்டவர்கள் பெருமானையன்றி ஒருபொருளை பெரிதாக நினையாதவர்கள். அடிமை பூண்டு நூல்களை ஓதி உணர்ந்து உருகி ஒருமைப்பட்டு நிற்பவர்கள்.

3. பத்தராய்ப் பணிவார்

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்

மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்

மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை

குன்றாத உணர்வுடையார் தொண்டராக் குணமிக்கார்.

பத்தராய்ப் பணிவார்என்பார்கள் தாய்ப் பசுவினைக் கண்ட கன்றுபோல் இறைவனை அனைந்து இனியவே பேசுவார். சிவன் வழிபாட்டை விழாக்களைக் கண்டு இன்புறுவர். சிவனையும் அடியார்களையும் சிந்தை களிப்படைய வணங்குவர். செய்யும் தொண்டுகளின் பலன்களை சிவனுக்கே அர்ப்பளிப்பார்கள். சிவன் புகழ் கேட்டு சிந்தை மகிழ்வர். நின்றாலும், நடந்தாலும், உறங்கினாலும், இமைத்தாலும் சிவனடிகளை ஒருபோதும் மறவாதவர்.

4. பரமனையே பாடுவார்

புரமூன்றுஞ் செற்றானைப் பூணாகம் அணிந்தானை

உரணில்வரும் ஒரு பொருளை உலகனைந்தும் ஆளானைக்

கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நிறைந்தானைப்

பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்

பரமனையே பாடுவர் என்பவர்கள் ஓரு கூட்டத்தார் தொகையடியார். அவர்கள் வடமொழி, தென் திசை மொழிகளைக் கற்றறிந்தவர்கள். அளவற்ற அன்பினை ஆண்டவன்பால் கொண்டவர்கள். இறைவன் புகழை பாடுபவர்கள். உள்ளம் நைந்துருகி பாடுவார்கள். தங்களுடைய கருவி கரணங்களை ஒடுங்கச் செய்து பக்தியுடன் பாடுவார்கள்.

5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்

சித்தத்தை சிவன்பாலே வைத்தார் என்பவர்கள் இடைபிங்கலை வழியே உச்வான நிச்வாணமாகச் சென்று மீளும் பிராணவாயுவை அடக்கி, முதுத்தண்டின் இடையே ஒடும் தாமரை நூல் போன்ற நுண்ணிய சுழுமுனை நாடி வழியே அதைச் செலுத்தி, நிறுத்தி குரங்குபோல் ஓடி அலைகின்ற மனத்தை அடக்கி மூலாதாரம், சுவதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களையும் மனத்தினால் கண்டு அவற்றில் வீற்றிருக்கின்ற அதி தேவதைகளான விநாயகர், பிரம்மா, திருமால், உருத்திரர், மகேசுரர், சதாசிவர் ஆகிய மூர்த்திகளைத் தரிசித்து பிரமந்திரம் சென்று ஜெப நிலை கடந்த அஜபா நலமுற வேண்டி அதன்மேல் கீழ்நோக்கியுள்ள ஆயிரம் இதழ் தாமரையை சகஸ்ரராமை சோதிபத உச்சரிப்பால் தோன்றும் சிவ சூரியனால் மலரச்செய்து அதன் நுனியில் உள்ள சந்திர மண்டலத்தை சுருக்குதலில் மூலாக்கினியை அக்கினி பீஜமந்திரத்தால் எழுப்பி நாடி சக்கரத்தைப் பிளந்து கொண்டு அவ்வக்கினியாலே சந்திரமண்டலத்தை இளகச் செய்து பொங்கி வரும் அமிர்தத்தை எல்லா நாடிகளிலும் நிரப்பி ஞானாமிர்தம் உண்டு அந்த சிவஞான ஒளியில் சூரிய சந்திர ஒளி அடங்க கடலாடி அச்சிவ ஒளியில் நிற்றலே நாயன்மார் ஆவர்.

6. திருவாருர் பிறந்தார்

அருவாகி உருவாகி அனைத்துமாய் னின்றபிரான்

மருவாங் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும்

திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துணர

ஒருவாயால் சிறியேனால் உரைக்காலாம் தகைமையதோ

திருவாருர் பிறந்தார் என்பார் சிவலோகத்தில் பிறந்தவர்கள் போன்றவர்கள். அது ஞான வயல். கயிலை சிவகணங்கள் உலகை உய்விக்கும் பொருட்டு இவ்வூரில் பிராந்தார்கள். அங்கு பிறந்தவர்களது பெருமையை யார் ஒருவராலும் உரைக்க முடியாது என்பதாகும்.

7. முழுநீறு பூசிய முனிவர்

முழுநீறு பூசிய முனிவர் என்பார்கள் விதிப்படிச் செய்த திருநீற்றைத் திருமுறைகளைக் கூறி அணிவதால் பிணி, இடர், முதலியன நீங்குவதுடன் பூசுவோர் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுவர். திருநீறு அணியும்போது சிவாயநம என ஐந்தெழுத்தை ஓத வேண்டும். திருநீறு அகற்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் என நான்குவகை. அகற்ப திருநீற்றினை அணியக்கூடாது. விதிப்படி திருநீறு அணிந்தால் காமம் முதலிய அறுபகை நீங்கும்.கன்றையுடைய பசுஞ்சாணத்தை ஏற்றுப் பஞ்ச கவ்யம் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகச் செய்து உலர்த்திச் சிவமந்திர ஓம மந்திர ஓம நெருப்பிலுள்ள அக்கினியால் சிவ சிந்தையுடன் எரித்து எடுத்த திருநீறு கற்பகம். காட்டில் உலர்ந்த பசிவின் சாணத்தைக் கொணர்ந்து பொடித்துக் கோநீர் விட்டுப் பிசைந்து அஸ்திர மந்திரம் கூறி உருட்டி உலர்த்தி ஓம் நெருப்பினால் எரித்து அநுகற்பம். காட்டுத் தீயில்வெந்த நீறும், பசுந்தொழுவத்தில் வெந்த நீறும், வேள்வியில் வெந்த நீறும் எடுத்து கோநீர் விட்டுப் பிசைந்து மந்திரம் கூறி உருட்டி உலர்த்தி திருமடங்களில் சிவாக்கினியால் எரித்து எடுத்தது உபகற்பம்.இப்படி அல்லாது எல்லாம் அகற்பம்.

8. முப்போதும் திருமேனி தீண்டுவார்- ஆதிசைவர்

முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பார்கள் சிருஷ்டிக் காலத்தில் அநாதி சைவராகிய சதாசிவ மூர்த்தியின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்களினின்று கௌசிகர், காசிபர், பரத்துவாசர், கௌதமர், அகத்தியர் என்ற ஐந்து முனிவர்கள் தோன்ற அவர்கள் மரபில் வந்தவர்கள் ஆதிசைவர் எனப்படுவர்.

சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை ஆசார்ய அபிஷேகங்களைப் பெற்றவர்கள். சிறந்த இவர்கள் பூஜை செய்ய பெரிதும் உதவியவர்கள். பரார்த்தப் பிரதிட்டை, பரார்த்த பூஜை செய்ய உகந்தவர்கள். வேகாமங்களை ஓதி சிவலிங்கப் பெருமானை செல்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முப்போதும் தீண்டிப் பூசிக்க உரியவர்கள்.

9. அப்பாலும் அடிசேர்ந்தார்

அப்பாலும் அடிசேர்ந்தார் என்பார்கள் இங்கு குறிப்பிட்ட அடியார்கள், நாயன்மார்கள் காலத்திற்கு முன்னேயும் பின்னேயும் வாழ்ந்து தொண்டு செய்தவர்கள். சைவ சமயம் பரந்தது காலத்தால் மூத்தது. தொன்மையானது. தழிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் அல்லாமல் சைவ தொண்டு செய்தவர்கள் மற்றவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட அடியவர்கள் எல்லாம் இந்த திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாமையால் இருந்ததனால் அவர்களையும் போற்றவேண்டும் வணங்கவேண்டும் என்ற முறையில் அப்பாலும் அடிசேர்ந்தார் அடியார்க்கும் அடியேன் என்றார்.

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

எண் ஒன்று (சூரியன்)

Written by

1.எண் ஒன்று (சூரியன்)

பிறவிஎண்-1

ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 1, 10, 19, 28 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-1

எண்ணின் அதிபதி-

சூரியபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

1, 10, 19, 28

அதிர்ஷ்ட கிழமைகள்-

ஞாயிறு, திங்கள் வெற்றி தரும். இந்த நாட்களில் ஒன்று எண் தேதிகள் வந்தால் மிகுந்த நன்மை தரும்.

ஒற்றுமையான எண்கள் –

ஒன்று எண்ணுள்ளவர்களுக்கு 2, 4, 7 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையானதேதிகள்

2, 4, 7 வரக்கூடிய 2,4,7,11,13,16,20,22,25,29,31 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

30 வயதிற்குமேல் வாழ்வில் அந்தஸ்து அடைந்து புகழ் அடைவார்கள்

கூட்டு சேரஎண்-

நட்பு- 2,3,4,7,9 பகை- 6,8 சமம்- 5 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்.

பொது பலன்-

இந்த எண் தலைசிறந்த ஆண்மைச் சக்தி வாய்ந்தது. தனித்தன்மையுள்ள செயல்களையும் தலை சிறந்த சாதனைகளையும் புத்தம் புதிய நிகழ்ச்சிகளையும் புதுமை அனுபவங்களையும் குறிப்பதாகும். இவர்கள் சூரியனைப் போல் சுயமாகப் பிரபலமடையக் கூடியவர்கள். நல்ல பண்புடையவர்கள். சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால் மற்றவர் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். சுதந்திரத் தொழிலில் விரைவில் முன்னுக்கு வருவர், எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலோடு புதிது புதிதாக எதையேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் உடையவர்கள். இவர்கள் முன்னேற்றத்திற்கு கற்பனையும் கலையும் கலந்த தொழில்களே சிறந்தவை. நாற்பது வயதிற்குமேல் நிலையான தொழில் அமையும். எல்லோருடன் பழகினாலும் சிலரையே நட்பாக கொள்வர். அவர்களுக்கு நன்மை புரிவார்கள். எப்போதும் பிறர் சொத்துக்களுக்கு ஆசைப் படமாட்டார்கள். இவர்கள் கையில் பணம் சேர்வது கடினம். அதிர்ச்சியான, துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்குப்பின் பணத்தைப்பற்றி சிந்தனை தோன்றி சேமிப்பர். மனம் தூய்மையானது. வஞ்சனை, பொய், சூது, வாது வராது. தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் 40 வயதிற்குமேல் பீடிக்கப்படலாம். பெரும்பாலும் இதய, பித்த சம்பந்தப்பட்ட நோய்களே வரும். சிறுவயதுமுதல் கண் பார்வை கெட்டு பெரும்பான்மையோர் கண்ணாடி அணிந்தவராக இருப்பர்.

உடை-

இவர்களுக்கு மங்களத்தையும் திரு அருளையும் குறிக்கும் மஞ்சள் நிறமே மிகுந்த அதிர்ஷ்டமானது. பொன்னிற ஆடைகள் பொலிவையும், வெற்றியையும் தரும். பொதுவாக தூய வெண்மை நிற ஆடை அணிவர்.

பெயர் எண் ஒன்று- பலன்கள்

பெயர் எண் ஒன்று வரும் இவர் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வார். பிறர் யோசனையின்றி தன் சுய அறிவைக் கொண்டே சாதிக்கும் திறன் உள்ளவர். பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்வார். புதிய சிந்தனை புதிய திட்டமிடும் தலைவராக இருப்பாரேயன்றி தொண்டராக இருக்கமாட்டார். விஞ்ஞான கணித ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி அதன் நுணுக்கங்களை மற்றவர்களுக்குப் போதிப்பார். தன்னுடைய திட்டங்களுக்கு பிறர் உதவி செய்யும் வகையில் இவர் பழக்கம் இருக்கும். தான் ஆரம்பித்த தொழில் மற்றும் திட்டங்களை மற்றவர் ஆரம்பித்து முடிக்குமுன் வெற்றிகரமாக முடிப்பர். இவரின் குறிக்கோள் பொது நலமாகவே இருக்கும்.  மற்றவர்கள் மீது பழி சுமத்தமாட்டார்கள். குற்றம் செய்தவரை அன்புடன் கண்டித்து நல்வழிப்படுத்துவார். எந்நிலையிலும் சத்தியத்தையும் நியாயத்தையும் கடைபிடிப்பார். இவர்களது வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். மற்றவர்களிடம் நன்மதிப்பும் மரியாதையும் பெறுவார். கஷ்ட நஷ்ட காலங்களில் நண்பர்கள் உதவி கிட்டும். நல்ல சற்குணமுள்ள மனைவி அமைவாள். நண்பர்களின் பெயரை எழுதி அதன் கூட்டுத்தொகை ஒன்று வந்தால் அவரே உற்ற நண்பராவார்

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-.

மேலே 1, 10, 19, 28 உள்ள தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். இந்த தேதிகளில் வசீகர விருத்தியும் சந்தோஷமும் தரும் சம்பவங்கள் நிகழும் என்பதால் இந்த தேதிகளில் எல்லா காரியங்களையும் செய்தால் நன்மை அதிகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஒன்றுக்குரிய திசை- கிழக்கு. கிழமை- ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட நவரத்தினம்-

மாணிக்கம். இது நான்கு வகைப்படும்.1.பத்மராஜம்- தாமரைநிறம், 2.குருவிந்தம்- நல்ல சிவப்புநிறம், 3.சௌகாந்தம்- மஞ்சள் கலந்த சிவப்பு, 4. நீலகாந்தி- நீலவான நிறம். பதவிகள் உயரும். மனவலிமை அற்றவர்கள் மனோவலிமை அடைவர். எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

உடல் பாதிப்பு வயது-

9, 18, 27, 35, 45, 54, 63, 72, 81 உடலில் பாதிப்புக்கள் வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

மஞ்சள், கிராம்பு, ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிச்சம்பழம், இஞ்சி, பார்லி, தேன் முதலியன. தினசரி தேன் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நன்று.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்றுவரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

எண் இரண்டு (சந்திரன்)

Written by

2.எண் இரண்டு (சந்திரன்)

பிறவிஎண்-2

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 2, 11, 20, 29 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-2

எண்ணின் அதிபதி-

சந்திரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

2, 11, 20, 29

அதிர்ஷ்ட கிழமைகள்-

ஞாயிறு, திங்கள், வெள்ளி.

ஒற்றுமையான எண்கள் –

இரண்டு எண்ணுள்ளவர்களுக்கு 1, 4, 7 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,4,7 வரக்கூடிய 1,4,7,10,13,16,22,25,28 நாட்கள் சிறப்பானவை.

சிறப்புபலன்-

இவர்களுக்கு 11,20,29,38,47,56,65,74,16,25,34,43,52,61,70 வயதில் அதிர்ஷ்டம்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,4 பகை-இல்லை சமம்-3,6,8,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்.

பொது பலன்-

இவர்கள் உணர்ச்சி வேகத்தையும், கற்பனையும், இரசனையும் உடையவர்கள். சேர்ந்து தொழில் செய்பவர்களுடன் ஒத்துப்போய் நிதானமாகச் செயல்படுவார்கள். பொது விசஷயங்களில் சாணக்கியத்துடனும் இங்கிதத்துடனும் நடந்து வெற்றி காண்பார்கள். எந்த ஒரு வேலையையும் அவசரத்தில் தொடங்கிப் பாதியில் விட்டு விடுவார்கள். எல்லோரும் இவர்களைப் பற்றி பேசியவண்ணம் இருப்பார்கள். மிகப் புகழ் பெற்றவர்களும், மிகக் கெட்டவர்களும் இவர்களே. இவர்களின் காதல் வெற்றியடையும். கீழ்படிந்து நடப்பார்கள். பொதுத் தொடர்பு அதிகம் உடையவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். பிறரையும் நம்பமாட்டார்கள். தானே செய்தால்தான் திருப்தி ஏற்படும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வர். தான் செய்யும் காரியத்திற்கு யோசித்து யோசித்து குழம்புவார்கள். தன்னைக் கண்டு பயப்படாதவர்களிடம் நயத்துடன் பழகுவார்கள். பயப்படுபவர்களை எப்போதும் விரட்டியவாறு இருப்பார்கள். சிறுவயது முதல் வியாபாரத்தில் பெரும்பாலோனோர் ஈடுபடுவர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மூத்திரக்காய் சம்பந்தமான நோய்கள் வரவாய்ப்புண்டு. கண்ணில் நீர் வடிந்து கண்நோய்கள் ஏற்படும்.

உடை-

பச்சை வண்ணம் மிகவும் அதிர்ஷ்டமானது. வெளிர் மஞ்சள், வெண்மை, பச்சை கலந்த வண்ணங்கள் நன்மை அளிக்கும்.

 

பெயர் எண் இரண்டு- பலன்கள்

இவர்கள் எந்த காரியத்தையும் யூகத்தால் அறிந்து கொள்வார்கள். பரந்த மனோபாவம் உடையவர்கள். குறுகிய சிந்தனை இல்லா தன்னலமற்றவர்கள். பிறருக்கு உதவுவதில் இடது கை செய்வது வலது கை அறியா உத்தமர். இராஜதந்திரம் மிக்கவர்கள். சிக்கல்களைத் தீர்ப்பதிலும் பகைமைகளைச் சமாதானப்படுத்துவதிலும் சிறந்தவர். சிறந்த நீதிபதிகளாய் திகழ்வர். பெரிய நிறுவனங்களை திறம்பட நிர்வகிப்பர். எந்த கரியத்தையும் உடனே ஆரம்பிக்காமல் நன்றாக யோசனைசெய்து திட்டம்போட்டு சிறப்பாக நடத்தி முடிப்பார். பிறர் கூறுவதை ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்வார். சிறிய கஷ்ட நஷ்டங்களைக்கூட பெரிதாக நினைத்து வருத்த மடைவார். கேளிக்கை நிகழ்வுகளை தன்னை மறந்து ரசிப்பார். திடீரென்று யோகமடைந்து பண வருமானம் அடைவர். லாட்டரி, பந்தயம் போன்றவைகளில் அடிக்கடி பரிசுகள் கிடைக்கும். இவர்கள் நல்லவர்கள் அதிர்ஷ்டசாலிகளும் ஆவர்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-.

மேலே உள்ள 2, 7, 11, 20, 25, 29 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். அவைகள் ஞாயிறு, திங்கள், வெள்ளி கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் இரண்டிற்கு உரிய திசை- வடமேற்கு. கிழமை- ஞாயிறு, திங்கள், வெள்ளி

அதிர்ஷ்ட நவரத்தினம்-

முத்து- நல்முத்துக்கள் ஒளிதாக்கி மின்னும். ஊடுறுவாது. பால் அல்லது மங்கிய நிறம்.உடல் ஆரோக்கியமாய் இருக்கும். முகம் வசீகரம் ஏற்படும். திருமணம் கைகூடும். தூய்மையான உள்ளத்தையும் பணிவையும் ஏற்படுத்தும். கணவன், மனைவி நெருக்கம் அதிகமாகும்.

உடல் பாதிப்பு வயது-

11, 20, 29, 37, 46, 55, 64, 73, 82 உடலில் பாதிப்புக்கள் வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

முட்டைக்கோஸ், கீரைவகைகள், வெள்ளரிப் பிஞ்சு, முலாம்பழம் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி உணவில் சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் இரண்டு வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 11, 20, 29, 38, 47, 56, 65, 74, 83, 92, 101 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

எண் மூன்று (குரு)

Written by

3.எண் மூன்று (குரு)

பிறவிஎண்-3

டிசம்பர்15முதல் ஜனவரி 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 3, 12, 21, 30 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-3

எண்ணின் அதிபதி-

குருபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

3, 12, 21, 30

அதிர்ஷ்ட கிழமைகள்-

வியாழன், வெள்ளி, செவ்வாய்

ஒற்றுமையான எண்கள் –

மூன்று எண்ணுள்ளவர்களுக்கு 6, 9 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

6, 9 வரக்கூடிய 6, 9, 15, 18, 24, 27 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

20 வயதில் மகிழ்வான நிகழ்வுகள் நடக்கும். 30 லிருந்து 39 வரை வாழ்க்கை சிறப்படையும் நல்ல வருடங்களாக அமையும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,2,4,7,9 பகை-5,6 சமம்-8 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொதுபலன்-

குருபகவான் அன்பிற்கும் ஆதரவுற்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவராதலால் மக்கள்தொடர்பு, குடும்பமாட்சி, சமூக உறவு ஆகியவற்றில் சிறந்து விளங்குவர். பாராட்டுதல்களைப் பெறும் காந்தசக்தி இவர்களுக்கு உண்டு. உழைப்பையும் ஊக்கத்தையும் அளித்து பரோபகார சிந்தையுடன், தேசபக்தி உடையவராக இருப்பார்கள். துன்பங்களையும் துயரங்களையும் விரைவில் மறந்து விடுவார்கள். தாக்குதல்களை மனோ வலிமையுடன் எதிர்த்து நிற்பார்கள், சபலங்கள் ஏற்பட்டாலும் தவறான வழிக்குச் செல்லமாட்டார்கள். பேச்சினால் மற்றவர்களை மயக்கிவிடுவர். இவர்களுடன் பழகியவர்களுக்கு இவர்களைப் பிரிய மனம் வராது. காதலில் வெற்றி தோல்வி கலந்துவரும். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

ஆரோக்யம் குறைந்தால் தோல் நோய்கள் ஏற்படும். கீழ்வாதமும் வரலாம்.

உடை-

கத்திரிப்பூ வண்ணமும், மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த வண்ணங்கள் சிறப்பானவை. ஆரஞ்சு, ரோஸ் வண்னங்கள் நன்மை தரும்.

 

பெயர் எண் மூன்று- பலன்கள்

இவர்கள் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மிக்கவர்கள். மற்றவரை மயக்குவதில் திறமைசாலியானவர். கவர்ச்சியான தோற்றம், கலகலப்பான சுபாவம் ஆகியவற்றால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். கல்நெஞ்சக்காரனும் இவரின் பேச்சை கேட்டு உருகுவான். கலாரசனை மிக்கவர்கள். சிந்தனையாளர், சிறந்த எழுத்துலகச் சிற்பி. சமூகசேவை என்பது இவர் மூச்சு. உடல் உழைப்பின்றி முன்னேற்றம் காண்பர். நேர்மையும் ஒழுக்கத்தையும் இவர்கள் கடைபிடிக்கவில்லை எனில் மிகவும் துன்பத்திற்குள்ளாவார்கள். எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் மேலும் மேலும் வருமாணம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். மனசாட்சிப்படி நடப்பர். யார் செய்யினும் குற்றம் குற்றமே என்பார். பலர் இவர்களை கெட்டவர் என்பர். நல்ல அதிர்ஷ்டசாலி பணவசதியுடன் வாழ்வார்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-.

மேலே உள்ள 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். விவாகம் தொழில் ஆகிய காரியங்களைத் தொடங்கும்போது அந்த தேதி, மாதம் வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால் 3,9 வந்தால் அந்த தினம் மிகச் சிறப்பானது. அவைகள் வியாழன், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் மூன்றிற்கு உரிய திசை- வடகிழக்கு. கிழமை- வியாழன், வெள்ளி, செவ்வாய்

அதிர்ஷ்ட நவரத்தினம்-

புஷ்பராகம்-பல நிறங்களில் பிரகாசிக்கும். வெள்ளையாக இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக சிறிது மஞ்சள் கலந்து இருக்கும். சற்று கடினமானது. அணிந்தால் சத்ருக்களை வெல்வர். கோபதாங்கள் குறையும். சந்தான பாக்யம் ஏற்படும்.பதவி உயரும். விபத்துக்களிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி.

உடல் பாதிப்பு வயது-

நரம்பு பாதிப்புகள் வரும். 18, 37, 45, 59 வயதில் உடலில் கீழ்வாயு பாதிப்புக்கள் வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கிராம்பு, இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, ஜாதிக்காய், ஆப்பிள், நெல்லி, அண்ணாசி, கோதுமை ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி உணவில் சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் மூன்று வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 3, 12, 15, 18, 21, 30, 39, 75, 84, 93, 102 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

எண் நான்கு (இராகு,சுக்கிரன்)

Written by

4.எண் நான்கு (இராகு,சுக்கிரன்)

பிறவிஎண்-4

பிப்ரவரி 15 முதல் மார்ச் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 4, 13, 22, 31 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-4

எண்ணின் அதிபதி-

இராகுபகவான், சுக்கிரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

1, 10, 19, 28

அதிர்ஷ்ட கிழமைகள்-

ஞாயிறு, திங்கள்

ஒற்றுமையான எண்கள் –

நான்கு எண்ணுள்ளவர்களுக்கு 1, 2, 7 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையானதேதிகள்

1,2,7 வரக்கூடிய 1,10,19,28,2,11,20,29,7,16,25 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

20 வயதிலிருந்து 29 வரை நண்பர்கள் உதவி. 22,24,27 வயதில் ஆதாயம் இருக்கும். 40 லிருந்து 49 வரை மகிழ்ச்சியான காலம்.40,44,47,49 வயதில் அதிர்ஷ்டம். 60 லிருந்து 69 அதிர்ஷ்டமான காலம்.

கூட்டு சேரஎண்-

நட்பு-2,3,7,9 பகை-6,8 சமம்-5 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

இரண்டு வித குணாதிசயங்கள் உண்டு. இராகுவின் தன்மையில் இயங்கும்போது எதிர்பாராத மாறுதல்களும் யாரும் கனவில் நினைக்கா சாதனைகளும் நிகழும். மன அழுத்தத்துடன் கொடூரமான செயல்களில் ஈடுபடுவர். சுக்கிரத் தன்மையில் லௌகீக சம்பந்த சுகானுபவங்கள் சிருங்கார ரசனைகள் மேலோங்கி பொருள்கள் சேரும் வாய்ப்பு. சுகத்தை நாடுபவர்கள். கலைத்துறையில் சாதனை படைப்பர். விவாதத்திற்கு அஞ்சமாட்டார்கள். பேச்சுத்திறமையால் பொருள் ஈட்டுபவாரயிருப்பர்.தெய்வபக்தி நிரம்பியவர்கள். பிறந்த குலத்தின் கட்டுபாடுகளை மதிப்பவர்கள். யாரையும் வசப்படுத்திவிடுவீர்கள். சுய கௌரவத்தைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். மான மரியாதையைப் போற்றுபவர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

நாற்பது வயதுக்குமேல் சோகை, பசியின்மை, குடல், பின்தலையில் ஒருவிதவலி அல்லது பித்த சம்பந்தமான நோய்கள் தோன்றும்

உடை-

வெளிர் நீலம், நீலக்கோடுகள் போட்ட பகட்டில்லாத ஆடைகள் சிறந்தவை.

 

பெயர் எண் நான்கு- பலன்கள்

இவர் சற்று நேரம் சோம்பி இருக்கமாட்டார். தொழில் செய்வதில் விருப்பம் உடையவர். சமூக சேவை செய்யும் செய்தால் புகழ் கிடைக்கும். நம்பிக்கையும் நாணயமும் உடையவர். கைத்தொழில் நிர்மாண வல்லுநராக இருப்பார். சிறந்த கட்டிடங்கள் கட்டுபவராகவும், பொறியியல் அறிஞர்களாகவும், நகர அமைப்பாளர்களாகவும் இருப்பர். தான் சொல்வதை பிறர் கேட்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். அப்படி அவர்கள் கேட்டால் மிக்க மகிழ்வடைவார்கள். மென்மையான மனம் கொண்டவர்கள். மனம் நோகும்படி பேசினால் அதையே நினைத்து நினைத்து வருந்துவார். காரிய தோல்வியும் இவரை வருத்தும். நடக்க முடிந்தவைகளையே செய்ய முடிந்தவைகளையே செய்வார். கற்பனை செய்யமாட்டார். தாய்நாடு, குடும்பம், உற்றார் உறவினர் அனைவரையும் நேசிப்பார். அதிர்ஷ்டசாலி. சீரான முன்னேற்றம் அடைவார், பொறுப்புகளை கடமை உணர்ச்சியுடன் செய்வார். அதில் மகிழ்வு காண்பார். 40 வயதிற்குமேல் நன்மையான மாற்றம் ஏற்படும்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 1,10,19,28 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். அவைகள் ஞாயிறு, திங்கள் சனிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் நான்கிற்கு உரிய திசை- தென்மேற்கு. கிழமை- திங்கள், சனி, ஞாயிறு

அதிர்ஷ்ட நவரத்தினம்-

கோமேதகம்- பழுப்பு கலந்த சிவந்த நிறத்துடனும், மஞ்சள் பொன்னிறத்துடனும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக இருக்கும். பிரகாசமான ஒளியுடையது. அணிந்தால் மனமகிழ்ச்சியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். வருமானம் பெருகும். கணவன் மனைவி உறவு மேம்படும். நோய்களுக்கு பாதுகாப்பாகும்.

உடல் பாதிப்பு வயது-

தலைசம்பந்தமான மூளை. கண், காது, மூக்கு, தொண்டை, வாய், நாக்கு, பல் சம்பந்தமான நோய்கள் வரும். இரத்தசோகை வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

சாரைப்பருப்பு, வாழைக்காய், மாதுளம்பழம், எலுமிச்சை, கல்யாணப் பூசணிக்காய், நாரத்தம் பழம், வாழைப்பழம், முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி உணவில் குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிகமாகவும் சேர்க்கவும். உப்பு குறைக்கவும். ஊறுகாய் தவிர்த்தல் நன்று

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்று வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆக இருக்கலாம்.

துரதிர்ஷ்டம்

பிறவிஎண் அல்லது பெயர் எண் 4 உள்ளவர்கள் அதிக துன்பங்கள் அடைவார்கள் என்பது பொது விதி. எண் 4 உள்ளவர்களின் மனைவி, வீடு, அலுவலக தொழிற்சாலை, தொலைபேசி, முக்கிய நிகழ்வுகள் எண் 8 ஆக இருத்தல் நன்றன்று. எனவே அதைப் பார்த்துக்கொள்ளவும். மேலும் 4 எண்காரர்களுக்கு 2,7,9 நல்லவை அல்ல. எனவே இவர்களுக்கு 1,3,5,6 ஆகிய எண்களுடன் தொடர்பு வைத்தல் நல்லது.

பொதுவாக 4ல் பிறந்தவர் தன் பெயரை 1 க்கு மாற்றவும். பெயர் எண் 10,19,37,46, என்றிருத்தல் நன்மை அதன்பின் பிறந்ததேதி 4ஐ எதற்கும் பயன்படுத்தக்கூடாது. குடியிருக்கும்வீட்டுஎண் 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆக இருக்கவேண்டும்.

திருமணம் துரதிர்ஷ்டநாளில் நடந்தால் கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் துன்ப படவேண்டியிருக்கும். குறிப்பாக 4 எண் உள்ளவர்கள் 4,8 வரும் 4,13,22,31,8,17,26 தேதிகளில் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் மகிச்சியே இருக்காது. இருபாலரில் ஒருவருக்கு மரண கண்டம் ஏற்படும்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

எண் ஐந்து (புதன்)

Written by

5.எண் ஐந்து (புதன்)

பிறவிஎண்-5

ஜூன் 15 முதல் ஜூலை 14 வரையிலும், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரையிலும் எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 5, 14, 23 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

எண்ணின் அதிபதி-

புதபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

5, 14, 23 

அதிர்ஷ்ட கிழமைகள்-

புதன், வெள்ளி

ஒற்றுமையான எண்கள் –

ஐந்து எண்ணுள்ளவர்களுக்கு 1, 6 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,5,6 வரக்கூடிய 1,5,6,10,14,15,23,24 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

19,21,25,26,28,32,34,35,37,41,43,44,46,50,59,70,79 அதிர்ஷ்ட வயதாகும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,4,6 பகை-7 சமம்-3,8,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், ஆராய்ச்சியாளராகவும், புதியன கண்டுபிடிப்பவராகவும், பேச்சால் வாணிபம் விருத்தி செய்பவராகவும், மேடை பேச்சுகளில் வசப்படுத்துபவராகவும் விளங்குவர். எல்லோரையும் மோகிக்கச்செய்யும் சக்தியான அன்பைக் கொண்டவர்கள். எல்லோருக்கும் அறிமுகமான பிரமுகராக வாழ்வர். தங்கள் உழைப்பின்மூலமே மேன்மையடைய வேண்டும். மற்றவர்களில் உதவி கிடைப்பது அரிது. எளிதில் எதையும் கற்பர். எதிலும் புகழ் அதிகரிக்கவும் நேர்மையை நிலைநாட்டவும் பாடுபடுவர். தனிமையே இவர்கள் விருப்பமாக இருக்கும். பணம் ஓரளவுதான் தங்கும். கிடைத்த பணத்தை மனமகிழ்வுக்காக செலவழிப்பர். நாளைக்கு என சேமிப்பு இருக்காது. அதற்காக வருத்தப்படமாட்டார்கள். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு இன்பம் குதிரைக்கொம்பாக இருக்கும். மனம் சதா ஓர்நிலை இல்லாமல் இருப்பதால் தூக்கம் கெடும். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

நரம்பு பலவீனம், பாரிசவாயு போன்ற வாத சம்பந்தமான நோய்கள் வரும்.

உடை-

சாம்பல் நிற ஆடைகள் அதிர்ஷ்டமானது. லேசான நிற ஆடைகள் எல்லாம் அணியலாம்.

 

பெயர் எண் ஐந்து- பலன்கள்

இவர் தன் அறிவைக்கொண்டே சூட்சமமான முறையில் எடுக்கும் எல்லா காரியங்களையும் முடிப்பர். சுறுசுறுப்பானவர்கள். எந்த வழியிலும் பணம் சம்பாதிக்க எண்ணமுடையவர்கள். கால அட்டவனைப்படி ஒரே இடத்தில் வேலை செய்யாமல் புதுப் புது திட்டங்களில் நாட்டமாயிருப்பர். துணிவுடன் தொழில்கள் செய்வார். அதில் பாதுகாப்பும் லாபமும் கிடைக்காது. சொந்தமில்லாமல் தொழில் நிறுவனங்களில் வேலை செய்திடின் அமைதியான வாழ்க்கை கிட்டும். மற்றவர்கள் அறிவுரை பிடிக்காது. சாந்த குணம் உடையவர்கள். ஈவு இரக்கமுடையவர்கள். குடும்பத்தில் அமைதி இருக்காது. பிறர் கஷ்டப்படுவதைக் கண்டு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். பிறர் ஏச்சுக்களை சகித்துக் கொள்வார். நல்லவர்கள். உண்மையுடன் உழைக்கக் கூடியவர்கள். பிறருக்கு தீங்கு இழைக்கமாட்டார்கள். வாழ்நாளில் லாட்டரி பந்தயம் போன்றவைகளில் பெரும் அதிர்ஷ்டம் கிடைத்து பணம் வரவுண்டு.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 5, 14, 23 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். 1, 9 ம் பொருந்தும். இந்த தேதிகள் புதன் வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஐந்திற்கு உரிய திசை- வடக்கு. கிழமை- புதன், வெள்ளி,

அதிர்ஷ்ட நவரத்தினம்-

வைரம்-நவரத்தினங்களில் தனி மதிப்புடையது. நீரோட்டமுள்ள நல்ல வைரத்தில் ஜீவ சக்தி உண்டு. ஆயுள் விருத்தி உண்டு. சத்துருக்களை பணிய வைக்கும். வைரக்கல்லில் நீர் பட்டு உடம்பில் பட்டு வந்தால் ஆரோக்யத்துடன் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ் அனைத்தும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். ஒத்துவராத ராசிகளும் உண்டு அவை அழிவை ஏற்படுத்தும் பார்த்து சோதித்து அணியவும்.

உடல் பாதிப்பு வயது-

நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும்.

உடலுக்குகந்த பொருள்கள்-

காரட், ஓட்ஸ், வால்நட், ஹேசல்நட் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஐந்து வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 5,14,23,41,50,68,77,86,95,104 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

எண் ஆறு (சுக்கிரன்)

Written by

6.எண் ஆறு (சுக்கிரன்)

பிறவிஎண்-6

மே 15 முதல் ஜூன் 14 வரையிலும், அக்டோபர் 15 முதல் நவம்பர் 14 வரையிலும் எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 6, 15, 24 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

எண்ணின் அதிபதி-

சுக்கிரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

6, 15, 24 

அதிர்ஷ்ட கிழமைகள்-

செவ்வாய், வியாழன், வெள்ளி

ஒற்றுமையான எண்கள் –

ஆறு எண்ணுள்ளவர்களுக்கு 3, 9 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

3,6,9 வரக்கூடிய 3,6,9,12,15,18,21,24,27,30 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

20 லிருந்து 29 வரையிலும், 40 லிருந்து 49 வரையிலும், 60 லிருந்து 69 வரையிலும் அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உண்டு.

கூட்டு சேரஎண்-

நட்பு-5,8 பகை-1,2,3,4,7 சமம்-3,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

அழகு, ஒழுங்கு, நிதானம், கலைச்சிறப்பு, சுகமான குடும்ப வாழ்க்கை, மனோ உல்லாசம் நிரம்ப பெற்றவர்கள். தீவிர சிந்தனைச் சக்தியும் உணர்ச்சி வேகத்தையும் கொண்டவர்கள். வாணிபம் மற்றும் கலை துறைகளில் மேன்மை அடைவர். சுக்கிரன் பூர்ண பலத்துடன் இருந்தால் தங்க தாம்பாளத்தில் உணவு உண்பர். மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்துவர். பொதுவாழ்வில் அதிகம் ஈடுபாடு கொள்வார்கள். பிறரைக் கவரும் சக்தியுடையவர்கள். பிறருக்காக போராடி அவர்களுக்கு உதவிகள் செய்வார்கள். ஆனால் மற்றவர் உதவியுடன்தான் மேன்மையடைவர். சலியாத உழைப்பினால் மக்களின் நன்மதிப்பைப் பெற்று தலைவர்களாகவும், தொழில்துறை அதிபர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. வாழ்வின் தேவையான ஊண், உடை, உறக்கம் மூன்றிற்கும் பங்கம் வராது. யாராவது உதவி செய்து கொண்டிருப்பர். படிப்பதிலும் கேட்பதிலும் எல்லா சுகங்களை அனுபவிப்பதில் ஆர்வமுடையவர்கள். ஜீவ சக்தியை அதிகம் விரயம் செய்பவராக இருப்பார்கள். தெய்வசக்தி வாழ்வில் பிரகாசிக்கச்செய்யும். சிலர் உலகியல் இன்பங்களில் நாட்டம் வைப்பர். சிலர் சோதிடம், வைத்தியம், மந்திரம் மூலம் வாழ்வர். காவியம், ஓவியம், சங்கீதம், நடனம் ஆகியவைகளில் ஈடுபட்டால் மேன்மையடைவர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

இருதயகோளறு நோய்கள், இரத்த ஓட்டக் கோளாறு நோய்கள் வரும். ஜனனேந்திரிய சம்பந்தமான நோய்களும், மலச்சிக்கலும் வரும் வாய்ப்புண்டு.

உடை-

ஆழ்ந்த பச்சை கலந்த நீலம், மற்ற நீலம் பச்சை சிவப்பு கலந்த நிறங்கள் அதிர்ஷ்டமானவை.

 

பெயர் எண் ஆறு- பலன்கள்

சிறந்த லட்சியவதியாவர். சாந்தமான அடங்கிப்போகும் தன்மையுடையவர். ஆசிரியராக பணியாற்றி அதிகம் உழைப்பார். மற்றவர் ஆலோசனையை நாடுவார். அன்பினை வெல்ல முடியாது என்ற கொள்கை உடையவர். அரசியலில் ஈடுபாடு உடையவர். தலைமைப் பொருப்புகள் தேடிவரும். பிறரை மகிழ்விப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்கள் பலர் உண்டு. இவர் செயலை பிறர் புகழ்வர். பிடிவாதகுணமுள்ளவர். பிறர் போதனை பிடிக்காது. ஏற்றுக் கொண்ட காரியத்தை செவ்வனே செய்வார். சொன்ன சொல் தவறமாட்டார். நீதி தவறாது நடக்க வேண்டும் என்பதில் தீவிர நாட்டம் உடையவர். நம்பிக்கையும் நேர்மையும் உடையவர்கள். சிரிக்க சிரிக்க பேசுவதில் வல்லவர்கள். ராணுவத்தில் இருந்தால் நல்ல பதவி வகிப்பர். வியாபாரம், கைத்தொழில் நன்றாயிருக்கும். லாட்டரி சூதாட்டம் நல்ல பயன் உண்டு. காதல் விவகாரங்கள் வெற்றி தோல்வி கலந்து இருக்கும். சிற்றின்பத்தில் அளவு மீறிய விருப்பம் கொளவர்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 6, 15, 24 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். 1, 9 ம் பொருந்தும். இந்த தேதிகள் செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஆறிற்கு உரிய திசை- தென்கிழக்கு. கிழமை- செவ்வாய், வியாழன், வெள்ளி,

அதிர்ஷ்ட நவரத்தினம்-

மரகதம்- பச்சை நிறத்துடன் ஒளிவிட்டுப்பிரகாசிக்கும். அணிந்தால் வழ்வில் ஒரு குறையுமின்றி புகழும் உயர்பதவியும் அடைவர். ஆரோக்யம் கெடாது. மணவாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும்.

உடல் பாதிப்பு வயது-

தொண்டை மூக்கு நுரையீரல் நோய்கள் வரும். பொதுவாக நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும். நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகநல்ல ஆரோக்கியம். இரத்த ஓட்ட சம்பந்தமான நோய் வரலாம்

உடலுக்குகந்த பொருள்கள்-

பாதம் பருப்பு, பீன்ஸ், ரோஜா இதழ் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஆறு வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 6,15,24,33,42,51,60,69,78,96,105 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931692
All
26931692
Your IP: 184.72.135.210
2024-03-28 23:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg