Print this page
வியாழக்கிழமை, 30 April 2020 10:33

நவகுண்டம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

####


நவகுண்டம்!

1015. நவகுண்டம் பற்றி சொல்லின் அந்த குண்டங்களுள் பேரொளி எழுந்து நிற்கும். அத்தகைய நவகுண்ட சோதி எல்லா நன்மைகளையும் தரும். அதுபற்றி சொல்லப்போகின்றேன்.

1016. சொல்லும் அக்குண்டத்தில் எப்போதும் சிவக்காதலால் பிருதுவி மயமான நாற்கோணம் மகிழ்ச்சியைத் தரும்.. படைப்பு முதலிய ஐந்தொழில்களும் நன்மையாகும். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் கெடும். மூலாதாரத்து அக்னி மேல்முகமாகி மண்டலங்களைக் கடந்து நிற்பதைத் தவிர அதன் பயன் சொல்ல அறியேன்.

1017. மேல்நிலையை அறிந்து உள்ளே வான்மயமாகிய அப்பொருள் அதைப் பற்றாகக் கொண்டபோது எண்ணத்தில் பொருந்திய செம்மையான சுடர் பிருதுவி முதலான புவனங்களையும் அண்டப் புறங்களையும் கடந்து நிற்பதை நான் அறிந்தேன் அஃது எழுவதை உணர்ந்தேன்.

1018. அகத்தே பொருந்திய குண்டத்தில் தோன்றும் ஒளிவடிவாய் திகழ்வர். ஈரேழு மண்டலங்காளையும் படைத்து துடைக்கலாம். பழைய வேதம் குண்டத்தின் பெருமையாகச் சொன்னவை எல்லாம் இந்நூலில் சொல்கின்றேன்.

1019. எடுக்கப்பட்ட அக்குண்டத்தில் சோடச கலைகள் விளங்கும். மூலாக்கினி காம செயத்துடன் சுழுமுனை நாடி வழியாய் மேல் எழுவதைக் கண்டு கொள்ளலாம். அவ்வாறு கண்டு கொள்பவர்க்கு வெம்மையை அளிக்கும் வலிய வினைகள் பொருந்தாது.

1020. முக்கோண வடிவமாக மூலாதாரமான குண்டத்தில் விளங்கும் நான்முகன், திருமால், முதலிய ஐவரும் சத்தியோசதம், வாமதேவம், தத்புருடம், அகோரம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாக உடலின் உள்ளேயும் வெளியேயும் விளங்குவர். தலையின்மீது சூரிய வட்டம் முழுமையடைந்து பன்னிரண்டு இராசிகளும் அமையும்படி தியானத்தில் உறுதி உடையவர்க்கு சிரசில் சிவசூரியன் விளங்குவான்.

1021. நவகுண்ட வழிபாடு செய்தால் தலையும் முகமும் நல்ல ஒளியைப் பெறும். இடைகலை, பிங்கலை ஆகிய இரு கலைகளின் சுழுமுனை ஒளியாய் விளங்கும். அன்னத்தால் ஆன அன்னமய கோசத்தில் வேகத்துடன் கூடிய இலிங்கம் ஒளியுடன் உள்ளேயும் வெளியேயும் தோன்றும். இதுவே நனமை அளிப்பது என அம்மை சக்தி உரைத்தாள்.

1022. திவ்விய இலிங்கம் நன்மையை அளிக்கும் என்ற பராசக்தியே ஆன்மாக்கள் கடைத்தேறுவதற்கு உரிய சொல் பிரணவம் என்றாள். முடிமுதல் அடிவரை ஒளியாக எல்லாவற்றையும் ஆக்கி நிற்கும் சக்தியை நல்ல குருவிடம் சென்று கேட்டறியாதவர் கற்ற கல்வி கல்வியாகாது.

1023. இளம்பிறை பொருந்திய ஒளியுடைய சுவாதிட்டானத்தில் இடைகலை பிங்கலை என்ற இரண்டு ஒளிகள் பாம்பைப் போன்று எல்லா திசைகளுக்கும் செல்லும். நான்கு இதழ்களையுடைய பாம்பு வடிவான வானக் கூற்றில் முன்னர் பரவும் மேலான பேரொளி என் உள்ளத்துள்ளே இடம்கொண்டு விளங்கும்.

1024. மூலாதாரத்தை இடமாகக் கொண்ட சிவாக்கினி ஊன்றிய கால் சூரியன் என்ற பிங்கலை ஆகும். நீர்ப்பகுதியான் மணிப்பூரகத்தை நோக்கித் தூக்கி ஆடும் கால் இடைகலை ஆகும். ஊடல் என்ர மண்டலத்தை இடைகலை பிங்கலை என்ற இரண்டு கலைகளால் ஆறு ஆதாரங்களையும் செழிப்படையச் செய்து முகத்தின்முன் சிவாக்கினி வந்து தோன்றும்.

1025. சந்திரன், சூரியன் அக்கினி ஆகியவற்றைக் கண்களாக கொண்ட சிவனே முழுச்சுடராக விளங்கியது. அந்தச் சிவனே எல்லாத் தத்துவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டான். சிவனே திசையெல்லாம் கணகளாக்கித் தன்னை சுற்றியுள்ள எட்டுத் திசைகளையும் கண்டான். எல்லா கணங்களுக்கும் பெருமானே தலைவன்.

1026. தலைவனான சிவனிடத்து ஆறு சுடர்கள் ஆறு வட்டங்களாக தந்தையின் முன் ஆறுமுகம் தோன்றி. அதில் கூத்தனாகச் சிவன் கலந்திருந்ததால் கந்தன் சிவனுக்கு மகன் முறையாக ஆயினான் என்பதை தெரிந்து கொள்வீர்.

1027. மூலாதார குண்டமாக பொருந்திய நான்கு இதழ் சக்கரத்தில் இருக்கும் சுழுமுனை நாடி இடைகலை நாடி பிங்கலை நாடியின் இயலபை விரியச் செய்யும். இரு நாடிகளும் பக்குவம் பெற்றுச் சுழுமுனையில் இருக்கும் அக்கினிக்கலை விரைவாக எழுவதால் இத்தன்மையுடையோர் தேவர் ஆவார்.

1028. ஒளி உடல் பெற்றவர் நம் ஒளியுடலில் உலகம் முழுவதும் உலவியும் நிலையான ஒளி பெற்று திகழ்வர். பிரவத்ட்தை அடைய முற்படுபவர் எல்லார்க்கும் நிலையான் ஒளியை வழங்கும் அருட்கண் உடையவராக விளங்க அவர் கண்களில் சக்தி இருப்பாள்.

1029. ஒளிக்கு இருப்பிடமான பிரண்வ குண்டம் தான் இருந்த ஆறு ஆதாரங்களிலும் இச்சக்கரங்கள் பற்றிய முப்பத்தாறு தத்துவங்களையும் தன்னுடன் இருத்திக் கொண்டதாகும். பிரணவம் உள்ளும் வெளியேயும் உள்ளது. வியோம ரூபினி வியாபினி முதலிய கலைகளில் தொடர்பு கொண்டு பூத உடலை எங்கும் எடுத்துச் செல்லலாம்.

1030. எல்லையில்லாத பிரணவத்திற்கு எடுக்கும் பாதங்கள் மூன்று. கூரிய முகங்கள் இரண்டு. ஆறு கண்களும் கற்று எண்ணும் நாக்குகள் ஏழும் கொம்புகள் நான்குமாக இக்குண்டம் பொருந்தி விளங்கும் இடம் ஆகும்.

1031. எல்லை இல்லாத ஆன்மாவான பிரணவத்திற்உ இருப்பிடம் இல்லை. அதை ஆள்ந்து வரயரை செய்பவரும் இல்லை. அதைச் சொல்லும் சொல்லும் இல்லை.ஆன்மாவை பத்து என்ற எண்ணின் வடிவமான ய கர்மாக அறியலாம்.

1032. இரு கண்களில் இருக்கும் அ கர உ கரங்களை புருவத்தின் நடுவில் ஒன்றாக்கி அவ்விடம் எட்டான அ கரமான சந்திரக்கலையைக் கொண்டு தொடங்கி சுவாதிட்டமான ஆறு இதழ்களும் மூலாதார நான்கு இதழ்களும் மாற்றம் பெற தேன்போன்ற சுவாதிட்டான சக்கரம் மலர விந்து வேற்றியடைந்து உண்ர்வாகக் கலந்த ஆறு ஆதாரங்களும் ஒன்றுபட்டு மேல் நோக்கி சக்தியான பார்வதியிடம் சேர்ந்து நிற்கும்.

1033. பார்வதியின் கணவனான சதாசிவமூர்த்திக்கு மூலாதரச்சக்கரத்தில் உள்ள வ,ஷ,ய,ஸ, கலைகள் நான்கு, பஞ்சப்பிராணனுக்கு தலைவர் ஐம்பூதங்களில் சிவமும் சக்தியாய் விளங்குவதில் பத்துமுகங்களும் அவற்றில் ஒளிமயமாய் உள்ளதை அறீயும் பத்துக் கண்களும் சுவாதிட்டானத்தில் இருக்கும் கால்கள் இடைகலை பிங்களை இரண்டு ஒளிமயமான முடி ஒன்று இடைகலை பிங்கலையாகியவை பூதங்களில் உண்டாக்கும் நாதம் பத்து ஆகத் தத்துவங்கள் இருபத்தைந்து.

1034. ஆன்மாவிற்கு அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம், என ஐந்து கோசங்கள். மற்றவரால் அளவிட்டுச் சொல்லக்கூடிய தத்துவங்கள் இருபத்தைந்து கொண்டது உடல். பனிப்படலம் போன்ற சகசிரதளம் குண்டம் விரிவடைந்து விளங்கும்போது பஞ்சு பறப்பது போன்ற கதிர்களையுடைய ஒளி பொருந்த மேலான சுடரும் நாதமும் ஆன அக்னியைக் கூடுதல் முக்தி அடைவதாகும்.

1035. மல முத்தரான சுடராய் விளங்கும் பரம்பொருள், கற்று அவற்றில் மயங்காது நிற்பவர் கருத்தில் எழும் அப்பொருளை உலகப்பற்று நீங்கி பரந்துள்ள குண்டலியான ஒளியின் துணையால் கடந்து சென்று பகை நீக்கி அசையாதிருந்தவர்கள் அந்தப் பொருளுடன் இனைந்திருப்பர்.

1036. சேர்ந்த ஐந்து கலைகளும் பொருந்தும் பிரணவம் இருக்கும் குண்டத்தில் நிலைபெறும்படி அதன் திசைகளும் பொருந்தும். கீழ் நோக்க்குவதுடன் பாய்ந்து போகும் பூதங்களை இயக்கும் மூலத்தீயை வெறுத்தவர் என்றும் பிரணவத்துடன் கலந்தவர் ஆவார்.

1037. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் நிலைபெறும்படி செய்த ஒப்பற்றவனை நினைந்து சேருங்கள். பலனை எதிர்பார்த்துச் செய்த யாகத்தைக் கைவிட்டு பலனை எதிர்பாராது இறைவனை அடைவதே முடிவு என்ற ஞானம் பெற்ற தேவர்கள் மெய்யான சிவத்துடன் பிரிவில்லாமல் இருப்பவர்கள் ஆவார்கள்.

1038. தாமரைப் போன்ற மலர்ந்துள்ள சகசிரதளாத்தில் இருக்கும் இறைவனுக்கு இடைகலை, பிங்கலை நாடிகளே இரு திருவடிகள். சுழுமுனையோ மூக்கு. மலர்ந்து எழும் சிவந்த ஒளியே முகம். சந்திரன் சூரியன் ஆகியவற்றுடன் இருக்கும் அக்னியே நெற்றிக்கண். குடுமிக்குமேல் உள்ள இடத்தில் இதை உணர்ந்திருக்க.

1039. உத்தம சிவன் மூலாதாரத்தில் இருக்கும்போது ஒரு பாலன். நடுத்தர வயது என்ற இளமைப் பருவம்பெறும் போது சக்சிர தளத்தில் ஈசான் மூர்த்தி, அப்போது தலையின் பின்பக்கத்தில் உள்ள சிறு மூளையின் ஆற்றல் பெருகி உச்சிக் குழியை அடையும். ஆறு ஆதாரங்களையும் தாண்டிச் சென்ற அக்கினி கலை ஆன்மாவைத் த்ழைக்கச் செய்யும்.

1040. சித்திரணி என்ற நாடி வழி சென்று விளங்கும் பிரணவம் என்ற குண்டம் மூலாதாரம் முதல் சகசிரதளம் வரை ஒன்றாய் விளங்கி முறையாக ஏழு ஆதாரங்களிலும் விரிந்த ஒளியைச் சோம்பல் இல்லாது கண்டல் மிகுந்த செல்வம் பெற்றவர் ஆவார்.

1041. செல்வமாய் வளர்கின்ற மூலாக்கினியை கற்கும் சாதனமாய்க் கொண்ட குரு எப்போதும் உபதேசம் செய்யும் ஆற்றல் பெறுவர். உலகை நடத்தும் அருட்செல்வராக திகழ்ந்து அந்த தீயை அன்பு கொண்டு விரும்புவர்.

1042. எல்லா இடத்திலும் பரவியுள்ள சோதியான சிவனை அன்புடன் ஆய்ந்து அறிபவர் இல்லை. அந்தப் பேரொளியை உடலான ஓம குண்டத்திலே காத்து உள்ளே தியானம் செய்பவர் அறிவால் முதிர்ந்தவராய் கோடி யுகங்கள் காண்பர்.

1043. பழைய ஒன்பது குண்டங்களையும் ஒருசேர அகத்தில் கண்ட யோகி ஒளிமயமாய் எழும்படி செய்வான். யோனி குண்டத்தைக் கண்டு பாயும் கருவைப்போல உலகைத் த்னக்குள்ளே காண்பதே சிறந்த சாதனம்.

1044. நாற்கோணம், முக்கோணம், அர்ந்த்த சந்திரன், வட்டம், அறுகோணம், எண்கோணம், பதுமம், யோனி, நீள்வட்டம் ஆகிய ஒன்பதும் குண்டங்களாகும்.

#####

Read 1870 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 May 2020 09:56
Login to post comments