gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 06 May 2020 16:51

ஆதார வாதேயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#####


ஆதார வாதேயம்!

1155. நான்கு இதழ்களைய்டைய மூலாதாரத்திலிருந்து ஆறாம் ஆதாரமான ஆஞ்ஞைக்கும் இடையே தொண்ணூறு உணர்வு சத்தி நரம்புகள் உள்ளன். இடையில் உள்ள சுவதிட்டானம்-6 மணிபூரகம்-10 அநாகம்-12, விசுக்தி-16 ஆக நாற்பத்தி நான்கு இதழ்கள் உள்ளன. ஆணாகவும் பெண்னாகவும் திகழும் ஆஞ்ஞை சக்கரத்தில் அருளம்மை மற்ற ஆதாரங்களில் இருந்தும் தாங்கியும் உள்ளாள். சிவன் ஆஞ்ஞையில் இருக்கும்போது ஒன்று செயலைச் செய்வது மற்றது அச்செயலை அறிவது என செய்லபடுவதால் நான்கு வகை ஆதாரங்களின் தொகுதி88+ஆஞ்ஞாஇயில் இரண்டு=90.

1156. தன்கீழ் உள்ள ஆதாரங்களின் அறிவை அறிய சக்தி தன் திருமேனியில் ஆறு ஆதாரங்களையிம் கொண்டிருக்கின்றாள். தன் அறிவைச் செலுத்த மூலாதாரம் வரை நரம்புத் தொகுதிகளை விரித்திருந்தாள். அவள் கண்டத்திற்கு கீழ் உள்ள ஐந்து சக்கரங்கள் இயக்கத்தை கவனித்தபடி இருக்கின்றாள். மேல் நோக்கு உடையார்க்கு இவை செயல்படாமல் தடுத்து இருப்பாள்.

1157. அறிவானது கண்டத்திற்கு கீழேயுள்ளவற்றை அறிய்வேண்டும் என்ற விருப்பம் சிவத்திற்கு இல்லாதபோது சத்தியும் சிவனுடன் அறியும் சிற்சத்தியாய் சம்மாய் திகழ்வாள். இப்படி சம்மான நிலையில் உள்ளபோது ஒளி வடிவான அந்த அன்னையைத் தியானித்தாள் செயல்வழியான சத்தி நிலை கெட்டு துன்பம் விலகும். உடலைத் தாண்டி வெளியில் வந்து விளங்குவீர்.

1158. வெளி வானத்தில் நிகழும் சிவத்திடன் பொருந்தியவன் இரண்டு பிரபைகளீனால் சசிகரதளத்தில் ஏற்படும் இன்பம் பொருந்த மண்முடைய மலர்களை அணிந்த மங்கையர் உள்ளத்தில் இடம் பெறாதவன படடைப்புச் செயல் முடிந்தபின் இறைவனுடன் சமமான சத்தியை விரும்பியபோது அவளைப் போன்றே பெண் தன்மையை அடைவான்.

1159. ஒரு பெண் மற்றொறு பெண்ணை விரும்பி ஆசையினால் சேர்வது அறியாமை. பராசக்தியான பெண்ணுக்கு ஆண்மையும் உண்டு. பெண்ணும் ஆணுமாய் இருப்பவளே பிறவியின் இஅயலபை அறிந்து பெண்ணுடன் ஆணும் கூடியபோது பேச்சின்றி நிற்பர்.

1160. சொல்லைக் கடந்த குற்றமற்ற ஒளி வடிவான பொருள் மனோன்மணி மங்கையான சினம் இல்லாத ஒளியுடன் கூடி என் மனத்துள் தானே ப்குந்து மகிழ்ச்சியை தந்தது.

1161.மூலாதாரத்திலிருந்து சீவன்களுக்கு மகிழ்வைத்தரும் வாலை சிவத்திற்கு வேறாக இருந்து உலகத்தை விளக்கும். பார்வதி மனோன்மணி சத்தியானபோது எல்லா உயிர்களையும் காத்து உலகில் எங்கும் பரந்த பெண் வடிவமாய் ஐந்தொழில் தலைவியும் பிராணவ வடிவுமான சத்தியை மகிழ்வூட்ட்ச் சிவன் மகிழ்ந்து நின்றான்.

1162. சிவன் நெற்றிக்கண்ணுடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆன்மாக்களாகிய நம்மிடம் எழுந்தருள விரும்பி இருந்ததால் உலகங்களில் விரும்பி இருந்தான். சத்தியின் தோளைத் தழுவி போகியாய் நின்றான்.

1163. பெருத்த கொங்கைகளையும் மென்மையான இடையையும் புள்ளிகள் பரவிய தேமலையும் உடையவள். தூய மொழி பேசுபவள் மயில் தோகை போன்ற அழகிய திருவடியை உடையவள் பாலை போன்ற பராசத்தீயை அடைந்தமையால் ஏற்பட்ட சிறப்பை சொல்லமுடியாது.

1164. தீ மண்டலமாய் இருக்கும் காமபீடத்தின் வல்லபத்தை எவராலும் அளவிடமுடியாது. அளந்து அறிய முடியாமலேயேமக்கள் திகைப்புடன் இருக்கின்றனர். வினை போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்றவளாய் விளங்கும் ஆற்றல் வாய்ந்த சத்தியான் மனோன்மனியைப் செயல்படாது நிறுத்த இயலது.

1165. மனோன்மணியே பெரிய பூதங்களைத் தாங்கி வானமாய் நிற்பவள். அவளே சந்திரனாகவும் சூரியனாகவும் கடும் தீயாகவும் இருக்கின்றாள். அவளே அருள் பொழியும் சத்தி கயிலாயம் என்ற சிரசில் வடபாகமாவும் குளிர்ந்த கடல்நடுவே உள்ள வடவைத்தீயான காம்மாகவும் இருக்கின்றாள்.

1166. நெற்றியில் கண் உடைய சத்தியை கூடி மதி மண்டலத்திற்கு அளீத்த ஞானியர் பூ உலகத்தவர் ஆனாலும் தெய்வ குணம் பொருந்தியவர். தெய்வத் தன்மை பொர்நுதியவர் ஆவர்.பதைப்பு ஏதுமின்றி அவர்கள் வான்மண்டலத்தவரை சூக்குமப் படைப்பினால் கண்டு இருப்பர்.

1167. வாலை என்ற பெயருடன் குண்டலின் எல்லா திசைகளிலும் பரந்து நிற்பவள். உடல் உற்பத்திக்கு முன் எல்லா திசைகளிலும் இருக்கும் பராசக்தி ஆவாள். கிழேயிருந்து குண்டலினி மேலே சென்ற போது உயிரைப் பிரித்து சசிகரதளத்தை இடமாகக் கொண்டு எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழும்படி செய்தாள்.

1168. கன்னி ஒளி போன்று விளங்கிய சந்திரன் பொருந்தியுள்ள இடம் செந்நிறம் வாயந்த சுவதிட்டானம். சந்திர பதினாறு கலைகள் நிரம்பிய போது இருக்கும் இடம் சிரசாகும் பராசக்தி போற்றியிருக்கும் இடம் இதுவே.

1169. சத்தி எல்லாவகையிலும் எல்லாவற்றையும் தாங்கி நிற்பவள். முதன்மை அளவாய் இருப்பவள் இரவில் இருக்கும் சத்தியாய் உருத்திர ஆகமத்தால் தெரிவிக்கப் படுபவள். குருவாய் வரும் அவள் வடிவங்கள் எல்லாம் உணர்ந்தேன்.

1170. ஏழு ஆதாரங்களிலும் யோகினி சக்திகளை உணர்ந்து உயிர்களுக்கு உணர்த்துபவர். மனத்தில் உள்ள ஈசன் இவர்களைக் கூடி பெண் போகம் உலக போகம் வித்தியா போகம் பொருந்திப் பரம் என்ற பெயரை உடையதாய் இருக்கும்.இந்த சக்திகளின் தொகுப்பே பராசக்தி.

1171. சத்தியும் சிவபெருமனும் வான்கலப்பில் சேருவதால் அதனால் விளையும் யோகமும் போல் இருந்தனர். இன்பம் பொருந்திய சுழுமுனையில் இருக்கின்/ற மங்கையே அக்கலவியும் யோகமும் ஆகும்.

1172. யோகத்தை விளக்கும் நல்ல சத்தி ஒளியை பீடமாகக் கொண்டு திகழ்வாள். யோகசக்தி பெற்ற முகம் தென்பகுதி என்ற வலக்கண் ஆகும். யோக நற்சத்தி சந்திரனாக இருப்பது வடக்கான இடக்கண் என்க.

1173. தேர்ந்து எழும் மேலான சிவாக்கினியைத் தூண்டி ஒளி பீடத்திற்குச் சென்றால் ஒழுகும் இயல்புடைய மாயை முடிவு பெறும். அறியப்படும் விந்து நாதங்கள் பெருகச் சுழுமுனை நாடியில் வளைந்து செல்லும் குண்டலினியும் முளைத்து எழுவாள்.

1174. ஆறு ஆதாரங்களிலும் பராசக்தியே அகரக்கலை பதினாறையும் பொருத்தி இருப்பவள். ஆறு ஆதாரங்களும் அவளாய் இருந்தாலும் ஒன்பதாம் கலை வரையில் அதிக விரிவு பெற்று விளங்காத நிலை. கலை வடிவாய் அமைத்து விரிந்த உலகத்திலும் பரத்திலும் கலந்திருக்கும் நிலையே பரவாதனை எனச் சொல்லப்படும்.

1175. திருவருளின் கலையைப் பயில்வதர்கு பராசக்தியே இருபத்தேழு விண்மீன்களாய் விளங்குவதை அறிந்து அதற்கேற்றவாறு சிரசில் அசைவு வடிவாய் இருக்கும். சிறிது சிறிதாக அசைவானது மிகுந்து எட்டு வகைச் சக்திகளும் பராசக்தியிடம் வெளிப்படும். அவளே பழமையான முதல் நிலையை உடையவள்.

1176. தீக்கண்டம், சூரியன் கண்டம், சந்திரன் கண்டம் அகியவை முடிந்து இருப்பதில் பராசக்தி விளங்குவாள். தத்துவமாயு,ம் தத்துவங்கள் இல்லாதவளாயும் சிறந்து நிற்பவள். பராபரனை தன்னிடம் உடைய பராபரை. சக்தி பேரானந்தத்தை அளிப்பவள் சிற்றின்பத்தையும் அளிப்பவள்.

1177. தேன் போன்று விருப்பத்தை தரும் வீணாத்தண்டின் அடியில் புற்றாஞ் சோற்றைப் போல் சக்திகளை கொண்டவள். குங்கும நிறத்தை உடையவள். அங்குசமாகவும் பாசமாகவும் உள்ள நிலமானது அவள் விரும்பித் தங்கும் இடம்.

1178 .உயிர்களின் மூச்சினையும் மனத்தையும் கடந்து இருக்கும் மனோன்மணி பேய்களையும் பூதங்களையும் தமக்குப் படையாக ஏவலாக உடையவள். அறிவைக் கடந்த சிவனுக்கு அவள் தாய், மகள், மனைவி.

1179. சிவனின் மனைவி ம்னோன்மணி. சக்தி தத்துவமாய் நின்று நாத விந்துக்களை தோற்றுவிக்கச் செய்வாள் சிவத்துடன் கூடிய நிலையில் அனைத்திற்கும் காரணியாகவும் படைப்பை எண்ணிப் பிரிந்த போது சிவத்தின் காரியமாகவும் ஆவாள். இத்தகைய புண்ர்ப்பை உடையவள் விந்து சத்தி பெருந்தியுள்ள பழமைக்கெல்லாம் பழமையானவள். அண்டங்களின் அளவாகப் பிரிந்திருக்கும் பத்து திசைகளுக்கும் அதிபதி.

1180. சத்தி பத்து முகங்களை உடையவள் ஆறு இதழ்கள் பொருந்திய சுவதிட்டானாத்தை அங்கமாகவும் நாலு இதழ்களை உடைய மூலாதாரத்தை வேதமாக அமைத்தவள். சகசிரத் தளத்தில் சிவத்துடன் பொருந்தும் போது சமமாய் நிற்பாள். நிலையான பொருள ஆவாள்.

1181. குண்டலியான ச்க்தி சக்தி கூட்டங்களுடன் புருவத்திடை இருப்பாள். மேலான அவள் சூரியன் சந்திரன் கொங்கைகளை உடையவள். நான்முகனை ஆள்பவள். நான்முகனுக்கு அன்னியனாய் இருப்பாள்.

1182. சிவனுடன் பிரிதல் இல்லாமல் இருக்கும் பெரு மங்கை. தியானத்தில் புருவ நடுவுக்கு மேல் பொருந்தி விளங்கும் அழகிய கொம்பு போன்றவள். அறிவுக்கு அறிவாய் பொருந்தி அரிய உயிர்க்கு அறிவாய் கலந்து நின்றாள்.

1183. கொடைக்குணம் உல்ல பராசக்தி மனத்தில் இருந்து ஐம்பொறிகள் செய்யும் கள்ளத்தனத்தை ஒழித்து உயிருடனே ஒன்றி நவநெறி மேற்கொள்ளக் கூடிய இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.

1184. விரும்பி உயிர்களுக்கு அருளைச் செய்யும் போக சக்தி மனதில் இன்பம் அளிக்கின்றாள் என்பதை யாரும் அறியார். அந்த புதல்வி சக்தி மலரும் மணமும் போல் சிவத்துடன் பொருந்தி இனிமையாய் இருப்பாள்.

1185. சக்தி என் உள்ளத்தை விரும்பி இருந்தாள். திருத்தமான புணர்ச்சியில் நெளிந்து அறிந்து தியானித்து இடையீடு இல்லாத வியப்பில்லாத நிலையில் பொருந்தி இருக்கத் தடையானவற்றை எல்லாம் விலக்கி இருந்தாள். அதுவே சுத்த கலப்பு எனப்படும்.

1186. அது இது தேவை என ஆசையை விட்டு அவளைப் புகழ்ச்சி செய்து பிரமரந்திரத்தில் தியானைத்தால் விதிக்கப்பட்ட வினைகளையும் வெற்றி கொள்ளலாம். சந்திர மண்டலத்து வழ்பவளான அவள் சொன்ன மண்டலங்கள் மூன்று.

1187. மோகினியான்வள் சேரும் மண்ட்லங்கள் அக்கினி, சூரியன், சந்திரன். பன்னிரு கலைகளை உடைய சூரிய மண்டலத்தின் உச்சியில் இருக்கும் நோக்கில் பொருந்துதல் சுத்த மாயையாகும். நன்மை அளிக்கும் பராசக்தி சந்திர மண்டலத்தில் இருப்பாள்.

1188. சந்திர மண்டலத்தில் தோன்றும் நாதம் மலை போன்று ஓங்கும். பின்நாக்கு ஆகிய சிறு மூளை பகுதியில் படரும். கண்டத்தினின்று மேல் எழும். சோதியாக அநாகத்தில் உள்ள இதயத் துடிப்பு ஒலி சந்திர கலைமேல் போய் இறுதியை சேறும்.

1189. சந்திர கலை பதினாறின் முடிவே படைபிற்கு முதலாவது. ஆயிரக்கணக்கான் மாற்றங்கள் இல்லாது மனம் சம்நிலையைப் பெற்று எழிழ் மிகுந்து இருக்கும் நறுமணமுடைய இடமாகத் திகழும். அதை தனக்கு ஒரு பேறாக் கருதி சக்தி விளங்குவாள்.

1190. சக்தி மங்கை சந்திர கலையில் இறுதியாக இருப்பாள். நுட்ப வாக்குகளாலான அயல் உடலில் வீற்றிருக்கின்றனள். மேலான ஆனந்தத்தைப் பெறுவதற்கான நன்னெறியை அடைந்து உலகங்களில் உள்ளவர் அவளது புகழைச் சொல்லி வழிபட்டு இருக்க அவள் நன்மையை அளிக்கும் சத்தியாய் இருக்கின்றாள்.

1191. சிவனும் சத்தியும் பொருந்தி நின்று யானையின் துதிக்கை போன்ற பிரணவத்தின் உச்சியிலிருந்து படைக்க சீவர்களுக்கு உடம்பிற்கும் உயிருக்கும் வேண்டியதை மதிப்பிடுவர். சந்திர சூரிய கொங்கைகளையுடைய பார்வதி ஐந்து மக்களுடன் தம் சக்தியும் சேர்த்து உலகத்திற்குரிய படைத்தல் தொழிலைச் செய்தனள்.

1192. வெளிச் செயல்கள் செய்து தவம் செய்யும் உயிர்கள் உள்ளத்தில் உள்ள சிவசக்தியைத் தியானம் செய்தால் மூலாதாரத்திலிருந்து மூண்டு எழும் மூலாக்கினி ஆறு ஆதாரங்கள் வழி பிரமப் புழையில் உயர்ந்து அன்புடன் சக்தியிடம் அடங்கும்.

1193. சந்திரக்கலை ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி தன் சக்தியை வெளிப்படுத்தும். அவற்றுள் அது பொருந்திக் களிப்பூட்டும். அதனது இயலபை மற்ற ஒளி பெற்று மூலாதாரத்தினின்?று மேலே தோன்ற பிரணவம் உதவும். முத்துப்போன்ற நிறத்தை உடையது வீரியமாம்.

1194. முத்துப்போன்ற சுக்கில நாடியில் முகத்தைக் கொண்டு தீ, சூரியன், சந்திரன் என மூன்று கண்களுடன் பத்து முகத்தினையும் உடையவள் ஆற்றலும் திறமையும் வாய்ந்தவள். பத்து நாடிகளில் செயல் செய்பவள். சிவத்தின் தேவி பைரவி. இத்தன்மையுடன் என் மனத்தில் உள்ளாள்.

1195. மூன்று மண்டலங்களுள் தீ மண்டலத்தில் திருவடி பொருந்தி நிற்பவள். சந்திர மணடலத்தை முகமாகவும் சூரிய மண்டலத்தை உடலாகவும் கொண்டு மூன்று மண்ட்லத் தலவியானாள். உயிர்கள் விலகினும் மனத்தை விட்டு விலகாத ஒளியாய் பொருந்துவர்.

1196. உள்ளொளியான குண்டலினி ஆறு ஆதாரங்களில் வெண்மை ஒளியாகச் சிவத்துடன் கூடி எல்லா ஆதார தெய்வங்களுடன் சத்தி கலந்து மேலே போவாள். அநாதகச் சக்கரம் அடங்க விசுத்திச் சக்கரத்திற்குமேல் அமுத மண்டலம் தொடங்கும் நிலையாகும்.

1197. விசுத்திக்கு மேல் நெற்றியின் நடு முதல் பிரமரந்திரம் முடிய இருக்கும் சகசிரதளத்தின் இருக்கும் சதாசிவமென்ற பரமகுரு வெளிப்படுத்துவது ஆனந்த கள் ஆகும். அந்த ஆனந்தமே இறைவனது திருவடிக?ள். அவன் வடிவம் ஆனந்தம். மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் அங்கமாக உடைய சத்தி ஆனந்தத்தை அளிப்பாள்.

1198. குண்டலினி நான்முகன் முதலிய தேவர்கள் அஞ்ஞானக் காடான ஆறு ஆதாராங்களையும் சந்திரக் கலை பதினாறும் சதாசிவ பத்தினியும் மந்திர இறைவனான ஈசானவரும் சேர்ந்து பற்றிட பராசத்தி எழுந்தருளினாள்.

1199. பயிற்சியாளருக்கு வாலை வடிவில் சத்தி இருப்பாள். அந்த இயல்பை அறிந்து மேல் எழச் செய்தால் அவள் வீடு பேற்றைத் தருவாள். உண்மை அறியாமல் வீண் பக்தியை செலுத்தியவர்கள் ஆரவாரம் செய்யும் நாய் போன்று கதறுவார்கள்.

1200. திருவான பராசக்தியின் திருவடியைக் காண்பவர் யார். ஒளியில் பார்த்து தியானம் செய்பவர்க்கு கரிய நிறமுள்ள சுழுமுனையின் அடிப்பகுதியில் சிவந்த தாமரைபோன்ற பெருமை வாய்ந்த திருவடியை அருளும்படி செய்வாள்.

1201. சிந்தனையில் சத்தி பற்றிய கருத்தை நீங்காமல் வைத்திருந்து சிரத்தில் ஆதியான புருவ நடுவில் ஆரம்பித்து ஒளிமுகமாக முன்னே சென்று ஆருமஞ்சனம் கூர்மாசனம் ஆகியவற்றால் குண்டலினியின் முகத்தை மாற்றி மேல் எழும்படி செய்து உலக நடப்புகளை நினைக்காமல் அவளை நினைத்து ஐம்பொ/றிகள் கூடும் இடமான நாத ஒலியில் பொருந்தி சமாதியில் இருங்கள்.

1202. சமாதியை மேற்கொண்டால் சத்தி தானே முதலாய் இருந்து சிவனை முதலாக் கொண்டு இருக்கும் மந்திரத்தால் அனுபவிக்கப்படும் அவளை நன்மை தரும் பேதமாய் உள்ள நிலையை எண்ணிச் சிந்திக்கும்போது சந்திர கலையின் உச்சியே அவளுக்கு உறைவிடம்..

1203. சக்தி இருக்கும் மூலாதாரம் முதலான இடங்களை முறையாய் அடைந்து இன்பத்தை அளிக்கும் மங்கையை நாள்தோறும் விரும்பியபடி இருந்தால் மூலாதாரத்துள் உடன் உள்ள சுவாதிட்டானம் மணிபூரகம் அநாதகம், விசுக்தி என்ற நான்கு சக்கரங்களும் சிறு நேரத்திற்குள் இறையை அடைவர்.

1204. மேலான பயனை அடைய இளைய தளிர் பொன்ற மேனியையும் கூட்டத்தையும் உடைய குண்டலினியையும் குவளை போன்ற கண்ணை உடைய பராசத்தியையும் இன்பமான முறையில் வஞ்சமில்லாது வழிபடும் மு?றையாகும்

1205. இன்பம் உண்டாகும் நேரத்தில் மனதால் வழிபடு. மூலாதாரத்தில் இருக்குமவளை சுவாதிட்டானம் வழி போகாமல் பிரம்ரந்திரம் நோக்கிய உள்ளத்துடன் சக்தியை உணர்வாய். நிலத்தில் நீண்டநாள் வாழச் செய்வாள். தன்வயத்தனாதல் ஆகிய எட்டு குணங்களும் கிட்டும்.

1206. ஆமை தன் ஐந்து உறுப்புகளை அடக்கிக் கொள்வதைப்போல் ஐம்பொறிகளை அடக்கி செருக்கு இல்லாதவன் என பிரண்வ மந்திரத்தில் உள்ள சுரமான ம காரத்தை தொண்டைக்குமேல் நினைத்தால் மூலாதாரத்தில் சோதி விளங்கும். சக்தியைக் கண்டபின் சந்திர மண்டலத்தில் நிக்ழ்வதைக் காணலாம்.

1207. மூலாதரம் முதல் பிரமரந்திரம் வரை செல்லும் சித்திரணி என்ற நாடியில் தோட்டியையும் பாசத்தையும் கையில் கொண்டிருப்பாள். அதில் பெரிய சங்கமும் அமுத கலசமும் பொருந்தும். இரு பதங்களான சிவ என நீண்டு உச்சரிக்கப்படும் மந்திரத்தை விரும்பும் பொன் அம்பலத்துள் ஆடுவாள்.

1208. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகியோர் சத்தியின் திருவடியைச் சூடி தன் பதவியினைப் பெற்றனர். காமனும் அவனுடைய தம்பியான சாமனும் சூரியனும் சந்திரனும் அக்கினியுடன் திருவடியில் பொருந்தும்படி மூலாதாரம் முதல் ஒரே பேரொளியாய் இருப்பாள்.

1209. சத்தி சுவதிட்டானத்தில் இன்பத்தைப் பெருக்கும் பிறைச்சந்திரனை சிரசில் சூடியவள். சுழுமுனை நாடியும் அதன் மீது இருக்கும் சந்திரன் சூரியன் அக்கினி என்ற சூலத்தை தன் வடிவாய் கொண்டவள். சிரசில் இருக்கும் சந்திர மண்டலத்தை உடையவள். மூலாதாரம் முதல் பிரரந்திரம் வரை கொடிபோல் சிதிரணி நாடியில் செல்பவள். மலம் அற்றவள். இத்தகைய இயல்புடன் நடுநாடி வழி ஞானம் கொண்டு நடனம் ஆடுவதால் அண்டத்தின் தலைவி என அழைக்கப்படுவாள்.

1210. வான் கூறான அண்டம் முஹ்டல் பூமிவரை பொன் காதணியை உடைய பராசத்தியைவிட நிலையான இடம் பெற்றவர் யாரும் இல்லை. சிவனும் சத்தியும் ஆகிய காரணம் ஆணும் பெண்னுமாகப் படைப்பதன் பொருட்டே ஆகும்.

1211 .நஞ்சுண்டனுக்கு பராசக்தி அமுதம் ஆவாள். தவத்தால் பொருந்தி உண்டாகும் இன்பமாகத் தானே வருவாள். அந்த சத்தி ஆதாரங்கள் தோறும் எல்லாம் அடையும் குவிந்த வ்ழியான சுழுமுனையுடன் பொருந்த செறிவுடன் உச்சியில் திகழ்வாள்.

1212. சிறப்பான அருந்தவம் மென்மேலும் சிறக்கும் என்பதை உயிர்வளியின் இயக்கத்தால் அழிகின்ற மக்கள் அறிவதில்லை.. விரைவில் கெடுவர். அன்னமயமான உடலில் உள்ள நான்கு இதழ் தாமரையின்று வழிபட்டு உச்சி நடுவில் சிறப்பான பிரணவமாய் அம்மை விளங்குவாள்.

1213. அன்னமய கோசத்திற்கு உண்ணும் உணவைச் சத்தி வழங்குபவளாய் இருப்பாள். யோனியான குண்டத்தில் தன்னை சிவார்ப்பணம் செய்பவர்க்கு பேரொளியாய் விளங்குவாள். சிவத்திற்கு வடிவம் என்று இருப்பவர்க்கு வேரிடம் –மூலாதாரத்திடமே பொருந்தி இருப்பாள்.

1214. சந்திரனைப்போன்ற வெண்பளிங்கில் முத்துபோன்று சிலைமயமாய் இருப்பாள் சத்தி. சுருண்ட குழல்போன்ற சுழுமுனையில் இருந்து ஒளிரும் தன்மையுடையவள். மூலாதாரச் சத்தியால் மாற்றப்பட்டபோது நிவிருத்தி எனப்படும் நீக்கல், நிலை பெறுதல், நுகரச் செய்தல், அமைதியாக்கல் அப்பாலாக்கல் முதலிய ஐந்து கலைகளாக இருப்பாள்.

1215. மூலாதாரத்து உருத்திரனுடன் பொருந்தி நின்றாள். உள்ளத்தின் கற்பனைகளுக்கு அவளே காரணம். பாச அறிவுகளில அவளே இருப்பாள். பாச அறிவு அழியும் உடம்புடன் தொடர்புடையவை ஆதலால் குண்டலினியுடன் கால தத்துவத்துடன் கலந்துவிடுவாள்

1216. சத்தி உயிர்களுக்கு கால தத்துவமாய் இருப்பவள். எண்ணங்களை நிறைவு செய்யும் அனுகூலம் உடையவள். பிரிவு அற்ற கலப்பைச் செய்தவள். மூலாதாரச் சத்தியான குண்டலினி சண்டிகை மந்திரத்தில் இருப்பவள். காப்பவளாய் சிவத்திற்கு ஒரு பாகமாக்வும் இருப்பவள்..

1217. பசும் பொன் மயமான கதிர்களை முடியாய் உடையவள். உடம்பு ஒன்று பத்து தின்மையான தோள்கள் ஐந்து முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். அஞ்ஞான மயமான இருட்டைப் பிளந்து செல்லும் பிரணவத்தில் இருக்கும் சிவனுக்கு பாகமாய் இருப்பவள்.

1218. ஆன்மாவுடன் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தி செயல்படும் கொத்துக்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன். அவற்றுள் வேதனும் பதினென் கணத்தவரும் பொருந்த முதலாகவும் முடிவாகவும் தேவி இருப்பாள்.

1219. படைக்கும்போது ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களும் அவளுடையை சத்தியை பொருந்தியுள்ளன. அவைகளுக்கு பராசக்தி உயிராய் இருப்பாள். அவளுடன் சிவன் பொருந்த எல்லாவற்றிலும் கலந்து நின்றாள்

1220. சக்தியுடன் சிவத்திற்கு இடமான சக்கரம் தலையின் மேல் உள்ள எட்டு இதழ் தாமரை. உள்ளம் பற்றி நிற்கும் குறிப்பிற்கு ஏற்ப அந்த ஆதாரங்களீல் போய் பொருந்தி சத்தி அருள் கொண்டு இருப்பாள்.

1221. அம்மை என்னுள்ளே சுழுமுனையில் மேல் நோக்கியபடி இருந்தாள். ஏழு ஆதாரச் சக்கரங்களிலும் உயிர்வழி உந்தப் பெற்று சகசிர தளாம் இருக்கும். உயிர்வழி ஒன்பது வாயுக்களுடன் மேல் சென்று உயர்வு என அறிவித்து தானும் அதில் நிற்பாள்.

1222. உயிர்வளி மேல் நோக்கிய முகமாக உணர்வாக எழும்போது மந்திரமான பிரணவத்துள் சேர்த்து எழுகின்றது. மேலான வீடுபேறு நெறியாகும். சத்தி சிவத்தை நோக்க் அகண்டத்தில் செல்ல விரும்பிச் சீவனுடன் கலந்து எழும். இது சிவத்தின்பால் விரும்பிப்போகும் காதலி நிலையாகும்.

1223. மேல் நோக்கிய சகசிரதளம் அக்கினியாயும் ஆதிசத்தியாயும் உள்ளது. மகேசுவரன் இருக்கும் மண்டலமாகவும் வாயு முதலான மேலுள்ள வானம் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவையும் அங்கு இருக்கும். கவசமாய் உயிர்க்குள்ள சிகை மந்திரம் உடம்பறிவு கடந்து செயலாற்ற பராச்த்த் அரசன் வாழும் வீணாத்தண்டில் இருப்பாள்.

1224. மனோன்மணி நடுநாடியில் இருந்து ஐம்பத்தோர் எழுத்துகளுள் அடங்குவாள். பேரறிவு பேராற்றலுடன் பெரும் பொருளாய் இருப்பாள். படைத்தல், காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழிலையும் செய்பவள்.

1225. தானே நிகழ்வதான மோகினியும் அதை சேர்ந்த யோகினியும் இவற்றைக் கடந்து சென்று சத்தி மயமுடையவராய் திருவடியைப் போற்றுவர். உயிரில் இருக்கும் சிவன் மேலான பரமசிவம்.

1226. சிரசில் இருக்கும் சகசிரதளத்தில் மோகினிபான பராசத்தி பொனொளியில் இருக்கும் சிவத்துடன் மேன் நிலையில் இருந்து கூறுவது அ கார உ கார ம கார நாதங்களாகிய உயிர் சேரும் பிரணவ வழிபாடாகும்.

1227. உலகத்தார் உய்யும் பொருட்டு சமய் நெறிகளை வகுத்தவள் மனோன்மணி. தன் பதியுடன் பிரிவு இல்லாது வீற்றிருக்கின்றாள் எல்லோரும் அறிவதற்கு அரியவள். வாக்கும் மனமும் ஒன்றானபோது அந்த நுட்பமான அறிவில் இருக்கும் பெருமை பெற்றவள்.

1228. கூர்மையான புலன்களைக் கொண்டு அறியும் அறிவானது சிவம் அக்கருவிகளுடன் பொருந்தியிருப்பதால் உண்டானது.. இது பின்னறிவாகும். அக்கருவிகள் இல்லாது பதியுடன் ஒன்றி அறியும் அறிவைப் பெறுவது செந்நெறி. சிவத்துடன் கூடி அடையப்படுவதே ஆன்மா அடைய வேண்டிய வழியாகும். இது சன்மார்க்க நெறி.

1229. சன்மார்க்கமாகப் பொருந்திய நெறி தூய்மை அற்ற நெறிகள் யாவற்றையும் விலக்கிடும்.. நல்ல நெறியால் நல்லொழுக்கம் வரும். அந்த நல்ல நெறியைக் காட்டிய தேவியும் பராசத்தியாவாள்

1230. சத்தியும் ஆன்மாவும் இவற்றை உடைய சிவமும் இல்லாமல் வீடு பேற்றின் முடிவை அறிபவர் எவரும் இல்லை. பிரணவத்திற்கு மேல் அர்த்த மாத்திரை சுரமான ம கரத்தை இட்டுப் பிரண்வம் பக்குவமானால் சிவ சக்தியின் நடுவில் இருக்க வழி உண்டாகும்.

1231. நெறி ஒன்றில் நில்லாது அது சிறந்தது இது சிறந்தது என்று வாழ்நாளை வீணாகக் கழிக்காமல் இன்பம் மிகும் சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினியை அவளுடைய கண்வனுடன் பொருந்தி சந்திர மண்டல அமுதத்தைப் பருகி வழிபட தகுதி உடையவர் ஊழ் வழி செல்லாமல் அருள் வழியில் ஊழினை வெல்லும் ஆற்றலை அடைவர்.

1232. வெற்றியுடன் இருக்கும் பராசத்தியை உண்மையாய் உணர வல்லவர்க்கு ஊழை வெல்ல முடியும். வினைக் கூட்டங்களை எல்லாம் வெல்லலாம். சுவை ஒளி, ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தையும் வெல்லலாம்.

1233. ஐம்பத்தோர் எழுத்துக்களுடன் கலப்புற்று இருக்கும் மரபின் வழி வந்த பரம் பொருளாகும். விருப்பத்தைத் தரும் அ காரப் பொருளான சிவமும் முதலாய் சேரும் இடம் இதுவே. இத்வே உண்மையாகும்.

1234. சத்தியுடன் சிவன் சேர்ந்து மூலப்பொருள் இல்லாமலே சங்கல்பத்தால் எல்லாம் தோன்றின. இந்த இயல்பு கொண்டஅ ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சத்திகளும் சீவர்களின் அறிவில் பொருந்தி அவர்களது கருத்துக்கு ஏற்பப் பிரபஞ்சம் அமையும்.

1235. ஆஞ்ஞையின்மேல் இருக்கும் சத்தியும் சிவனும் தேவர்கள் வந்து வழிபட அருந்திட அரிய அமுதமாகப் பிறைச்சந்திரன் போன்று அவள் இருந்தாள்.

1236. மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுச்சியை உடையவர் குழலில் இருக்கும் சத்தியின் தன்மையை அடைவர். இடை நாடியில் இருக்கும் சந்திர மண்டல்த்தில் பொருந்திய தவம் உடையவர் ஆன்ம ஒலியாகவும் இருப்பாள்..

1237. பராசத்தியுடன் பொருந்திய சந்திரமண்டல ஒலியால் உணர்ந்து அதில் பொருந்திய உயிர்களின் சிந்தையில் அவரவர்க்கு வேண்டிய உள்ளத்தில் மறைந்திருந்த ஞானங்கள் தோன்றும்.

1238. விரும்பும் உருவை அடைவதற்கு தூய வழி பராசத்தி அடைவதற்கேற்ற பல கலை ஞானங்களை அளிப்பாள். மான் விழி போன்ற கண்களையுடைய பராச்த்தி காமனைப் போன்ற சிவனும் எதிரில் தோன்றி ஆன்மாவிடம் போதமின்றி நிற்பதை உணர்த்த சான்றாக வெளிப்படுவர்.

1239. ஆராயப்படும் அறிவின் எல்லையையும் கடந்து பரவாக்கு வடிவான பிரண்வ வடிவான சத்தியாகவும் மயக்கத்தை உடையதாகி மிக்க ஆனந்தம் உடையவள் சிவந்த ஒளியில் இருப்பவள். சிவத்தால் விரும்பப்படும் அழகி . அறியப்படும் பொருளாகவும் அறிகின்ற வழியாகவும் அவள் இருப்பாள்.

1240. நெறியாய் நின்ற பராசத்தியை ஒரு கணமும் பிரியாது பரவாக்கு வடிவன சிவத்துடன் அவளது கு/றியைக் கொண்டு வழிபடுபவர் அறிவு குன்றாது பொருந்தியிருப்பர்.

1241. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஆகியோர் மயக்கத்தை உண்டாக்கும் நிலையில் உள்ளனர். பிரணவ வடிவான சிவத்தில் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீண் ஆகிய ஒன்பதும் ஒடுங்கிடத் தேனை அருந்திக் களித்த் வண்டைப்போல் சிவசக்தி உருவமாய் திகழும் நிலையை அடையலாம்.

1242. சகசிர தளத்தில் இருக்கும் பராச்த்தியுடன் கூடிய சிவத்தை வணங்கும் நெறியை உலகத்தவரே அறிந்து கொள்ளுங்கள். இந்திரன் முதலாக உள்ள எண் திக்குக் காவலர்களும் மற்றத் தேவரும் அசுரரும் வந்து உங்கள் அடிகளை வணங்குவர்.

1243. இடைவிடாமல் கூறப்படும் மந்திரமும் நறுமணப் பூவும், தூபமும் கவர்ச்சியைத் தரும் நறுமணப் பொருளும் இருளைப் போக்கும் தீபமும் கொண்டு சத்தியை வழிபடும் பூசை வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அருச்சனையாக அமையும்.

1244. சத்தியை ஒரு பக்கத்தில் கொண்டு உலகத்தை தாங்கிய சிவன் அவளாள் உண்டான ஆக்கத்தால் உலகத்தில் நிலை பெற்று நிகர் இல்லாதவனாகவும் அழிவு அற்றவனாகவும் இருக்கின்றான். அழகிய கிளியை ஏந்திய சுருண்ட கூந்தலையுடைய பார்வதி பரமனை ஒரு பக்கம் கொண்ட பராசத்தி ஆனதால் அவளை வழிபடுக.

1245. கரிய கொடி போன்ற மாதான உமையும் அன்பர்க்கு உதவும் தலைவியாய் ந்ல்ல கொடி போன்ற மாதும் மூச்சுடர்களை மூன்று கண்களாய் கொண்டு ஆஞ்ஞை சக்கரத்தில் இருப்பவளும் ஆன சத்தியை வழிபடுக. பொற்கொடி போன்ற பெண்கள் உன்னை போற்றித் துதிப்பர்

1246. பராசத்தியின் விரிந்த சுடர் மாலை போன்ற ஆதாரச் சக்கரங்களின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாது இருக்க பத்தினியுடன் கூடி மூலாதாரத்தில் ஏற்படும் நாதத்தை கண்டத்தின் வழியாக உண்ணாக்கிற்கு செல்லுமாறு கீழ் நோக்கும் அசைவை மேல் முகமாக ஆக்குக.

1247. ஒளிமயமான இறைவன் எனக்குள் அடங்கியிருப்பது என் அன்பின் பெருமையாகும். நஞ்சாகிய காமக்கழிவுகளைச் செய்யாமல் மேலே கொண்டு தலையில் மேல் உள்ள ஒளிமண்டலத்தில் அடக்கிச் சத்தியுடன்ரிவு இன்றி ஒன்றாக அமையும்.

1248. ஆண்டவன் எல்லா உயிர்களையும் வடிவாக கொண்டு இருக்கின்றான். இதை ஆராய்ந்தால் ஒலிக்கின்ற வளையலை அணிந்த பொன் ஒளியில் திகழும் மங்கையை இறைவன் மகிழ்வுடன் பொருந்தி உலகைப் படைத்தான் என்பது கற்பனையாகும்.

1249. மாயையுடன் சேர்த்து வைக்கும் சடையுடைய சிவன் தன் பொற்பாதத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் ஒளி மண்டலத்தில் இருக்கும் சிவனை தன் களவியால் நுண்மை மண்டலத்தில் திருமேனியைச் செய்வான். உடம்பான கலவியுள் பொருந்தி மகா சத்தி கூட்டத்துடன் சேர்ந்து அந்தந்த உடலாக இருப்பான்.

1250. சிவன் வேறு நான் வேறு அன்று என்பதை நான் அறிந்தேன். உலக்த்தின் தலைவன் ஈசனை என் தனித்தன்மையை விட்டு ஒன்றியபோது பரந்த நிலையை அடைந்தேன். சிவனை உணர்ந்தபோது கீழ் உலகங்களின் தொடர்பை நீக்கினேன். ஆதி சத்தியின் அடியைப் பற்றி அதன் பிரிவான விருப்பு ஞானக் கிரியைகளை விட்டு நீங்கி அருளை அடைந்தேன்.

1251. மனோன்மணி ஒன்பது சத்திகளுள் மேலானவள். அவளைத் துணையாய் கொண்டவர் இறைவனின் அடிகளையே அழிவற்ற நல்ல பயன் உடையது என்பர். கற்ற கல்வியின் பயனை அறிவார்க்கு அவள் திருவடியான பொன்னொளி திகழும் மண்டலத்தை அடைவது பெறும் பேறாகும்.

1252. ஒப்பில்லா தலைவனுடன் என் உள்ளத்தை விரும்பி உறையும் சத்தியின் இனிய இருப்பிடம் ஏழு உலகங்கள் என சொல்லுவர். பணி மண்டலத்தைப்போல் திகழும் சகசிர தளத்தின் உச்சியில் கனிவுடன் என்னை நினைப்பது என்ன காரணமோ அவளே கூறுவாள்.

1253. ஏழாம் உலகு என்ற சகசிரதள நாயகியான மனோன்மணி நல்ல வீட்டுலகைச் செய்து ஞானச் செல்வியாய் இருப்பவள். எடுத்த உடலைப் பக்குவப்படுத்திய குண்டலினியும் அந்த வீட்டில் ஒன்றாய் இருந்தாள்.

1254. உடம்பின் தோற்றத்திற்குக் காரண்மான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கு ஒருவர் உறவு கொண்டதே தவிர அன்னை அவர்கள் அறியமாட்டார்கள்.. சிவனும் சத்தியும் ஆன்மாவும் ஒன்றுபட இருந்ததில் என்னை எப்போதும் பிரியத அம்மையும் அத்தனையும் வணங்கி உய்வு அடையுங்கள்.

#####

Read 1405 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25555734
All
25555734
Your IP: 44.200.101.84
2023-09-26 14:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg