gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
வியாழக்கிழமை, 07 May 2020 11:24

ஏரொளிச் சக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

ஏரொளிச் சக்கரம்!

1255. மூலாதாரத்தில் எழும் நான்கு இதழ்களையுடைய் தாமரை மிக்க ஒளிவுடையது. தூல விந்து மாற்றி அமைக்கப் படுவதால் எழும் ஓளி தலையில் நாதமாக அமையும். எழும் அக்கலை எங்கும் நிறைந்தபின் அதன் மையத்தில் தீ மயமான சிவம் நிற்கும்.

1256. மூலாதாரத்தில் உள்ள வ ச ஷ ஸ ஆகியன பெருவ்ல்லமை கொண்ட எழுத்துக்கள். மண் முதல் எழுந்து வான் வரை வளரும். அவை பெருமையுள்ள சக்கரமாய் அமைந்ததால் அது அமைக்கின்ற விதத்தை சொல்வோம்.

1257. வீரியமாய் கீழே இருந்ததை மாற்றி அமைக்கப்பட்டு பன்னிரு கலைகளையுடைய சூரியன் சிரசில் இருக்கும்.. அக்கினியாகிய வ ச ஷ ஸ என்பவை இங்கு ஒலிகளாகப் பொருந்தும். மூலாதாரம் முதல் இடைகலை பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகளில் பொருந்தி மேலேறும். ஆதனால் நூற்று நாற்பத்தி நான்கு கலையாற்றலாக சிரசில் வட்டமாக தோன்றும்.

1258. அம் என்பதை விளக்க சந்திரமண்டலம் மேலே அமைந்து அந்த ஒளியுடன் நாதமும் ஓங்கி நிற்கும். சிரசில் சந்திரமண்ட்லம் சிறப்புடன் இருந்தால் பூமி தத்துவம் நுட்பமாய் அங்கு அமையும்.

1259 மேலே இருக்கும் மண்டலம் உலகமாய் விரிய அங்கிருக்கும் நாதங்கள் உலகமாய் விரியும். அதற்குள் இருக்கும் இறைவன் சங்கற்பமே உலகமாய் விரியும். சந்திரன் சூரியன் மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒளியே பருவுலகமாய் விரியும்.

1260. அகரக் கலை விரிந்து விந்துவும் நாதமாய் விரிந்து அதில் சக்கரம் விரிந்து இருக்கும். முதலில் காணப்படுவது பூமி தத்துவம். மேலும் விரிந்தால் நீர்மண்டலம் அமையும்.

1261. சக்கரம் நீராய் விரிந்து அதில் தீ தத்துவம் இருந்தது. நீருக்குப்பின் காற்றுத் தத்துவம் அமைந்து அதன்பின் வான் தத்துவம் தோன்றியது.

1262. ஆகாசத்திற்குரிய அடையாள எழுத்தை சொன்னால் வான் பீச எழுத்தானது. அ கரமான கலையாகி அதனால் சிவானந்தம் உண்டாகும் என்பதை உணர்க.

1263. சக்கரம் பத்து ஒளிவட்டத்தால் ஆன இச்சக்கரத்தை நாதம் முதலாகக் கொண்டு அறியலாம். அந்தந்த மண்டலத்திற்குரிய தலைவர்கள் அங்கே உள்ளனர். இறுதியில் சிவசூரியன் உள்ளது என்பதை அறிவாய்.

1264. ஆறு சக்கரங்களில் உள்ளது பிரணவமான ஆதி எழுத்தாகும். மேல் உள்ள நான்கு சக்கரங்களிலும் சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஆத்ம சோதி மண்டலத்திலிருந்து எழுத்து வடிவம் தோன்றும்.

1265. மூலாதாரம் முதலாக உள்ள சக்கரங்கள் நூற்று நாற்பத்து நான்கு கலைகளாக விரியும் ஆறு ஆதாரங்களுக்கும் நடுவில் தோன்றி எழுவது தீ இருக்கும் அக்னி நாடியாகும். வன்னி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களுடன் சேர்ந்து முதலாகவும் முடிவாகவும் திகழும்.

1266. அந்தமான எழுத்துக்கள் முடிவாகிய சூக்குமம் முதலிய தூலமும் நீங்க விசுத்தி அஞ்ஞை சக்கரங்களும் முடிகின்றன. பதி மூன்றாம் எழுத்தான ஓ கரத்தில் அமைந்தபின் அதன் மேல் உள்ள மண்டலத்தில் ஏறிக் கடப்பதே முடிவு.

1267. அத்தகைய காலம் முந்நூற்று அறுபது நாள்கள். பதினைந்து நாட்கள் பட்சமாகும். ருது ஆறு. மாதம் பன்னிர/ண்டு.இவை சிவ சூரியன் இயக்கத்தால் வந்தவை.

1268. பகல் இரவு காலங்கள் ஆறு ஆறு நாழிகைகளாக இருக்கும். இராசியும் முப்பது கலைகளாக வரும். ஆண்டுக்கு முந்நூற்றறுபது கலைகள். இதை வகுத்துப் பார்த்தால் சூரியன் செல்லும் பன்னிரண்டு ஓரைகள் இருக்கும்.

1269. அந்த இனம் மூன்றும் மேடவிதி. மேல் ஓங்கிய மூன்றும் இடப வீதி. மற்ற இன்மான மூன்றும் த்ழைக்கின்ற தண்டுடன் கூடிய மிதுன வீதி. ஒரைகள் எல்லாம் இம்மூன்று வகையாகும்.

1270. சூரியன் வீதியாய் இருக்கும் சகசிரதளம் நிறைந்து விரிந்த பின் அது விந்துவாகி ஒளிமயமானது. நாத இயக்கம் ஒத்து அமைந்தபோது அதுவே சகசிரதளம் நிற்கும் இடம்.

1271. தீ சூரியன், சந்திரன் கண்டத்தில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப அசைவை கீழே தூலத்தில் அமைத்து சூக்குமத்திலும் அமையும். இதுபோன்று சிரசில் அமையும் சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் ஒப்ப வளர்ந்த பின் ஆன்மா என்ற தாரகை முழுவடிவமாம்.

1272. சகசிரதளம் நாள்மீன்களின் ஒளிகளால் ஆனது. நாள்மீன் ஒளிகளுக்கு மேல் பேரொளியின் பிழம்பாய் சிவம் இருக்கும். நாள்மீன் ஒளியில் சந்திரன் அறிவும் சூரியன் அறிவும் சேர்ந்து இருக்கும் .இது தாரகையின் சமஷ்டி அறிவு ஆன்மா ஆகும்.

1273. சக்கரம் இவ்வாறு ஒளி வளர்ந்து ஆனது ஆகும். ஒளிக்குப் புற எல்லையில் நாதம் தோன்றும். தீக் கொழுந்து தீபத்தைப்போல் ஒன்றாகி இருக்கும் பின் கருமையான ஒளியாய் மாறும்.

1274. எல்லா உயிரிலும் சூழ்ந்த அண்டமே பிரபஞ்சத்தில் கலந்துள்ளது. ஊழி முடிய இவை நிலையாக இருப்பதைக் கண்டால் இந்த அண்டகோசமே சீவர்களின் மூலம் போன்றது. அண்டம் ஒளிமயமாய் ஆவதால் அதற்கு வலிமை கிட்டும்.

1275. எல்லா உயிர் பொருளிலும் சூழ்ந்திருக்கும் அண்டமே உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. ஊழி முடிய நிலையாக உள்ளத்தைக் காணும்போது இந்த அண்டகோசமே உயிர்களின் மூலம் போன்றது. இந்த அண்டம் ஒளிமயமாக ஆவது அதற்கு வலிமை சேர்ப்பதாகும்.

1276. விந்துவும் நாதமும் ஒத்து இருந்தால் வான் கூற்றான அண்ட கோசத்திற்கு விதையைப் போல் இருக்கும் ஒளி குறைந்து நாதம் மட்டும் எழுந்து நின்றால் ஒளியைவிட ஒலி எட்டு மடங்கு கூடுதலாகும்.

1277. ஒளி அணுக்கள் இரண்டு வகை. ஒன்று மேலே போய் அண்ட கோசத்தில் விந்து நாத மண்டலங்களை அமைக்கும். இந்த ஒளி அணுக்களும் நாத அணுக்களும் ஒன்றான பின்பு அண்ட கோசமானது விரிவாகி விந்து மண்டலங்கள் ஆகும்.

1278. விந்து விரிந்தால் வீசம் அளவு ஒளி அணுக்கள் மறையும். விந்து விரியும் தன்மைக்கு ஏற்ப நாதமும் அமையும். விந்துவைக் கட்டுப்படுத்தினால் எட்டும் எட்டுமான சந்திரக்கலை அமையும். ஒளி மண்டலத்தில் விரிந்து ஒளி பீஜங்களாய் இருக்கும்.

1279. தோன்றும் எல்லாம் ஒளியைக் கார்ணமாய்க் கொண்டவை. விந்துவால் விளைந்த உயிர் இந்த உலகம் எல்லாம் விந்துவைக் காரண்மாய்க் கொண்டே உண்டாயின. விந்துவின் காரண்மாகவே சிவத்தின் திருவடி இருக்கும்.

1280. எல்லா எழுத்துக்களுக்கும் மூலமான பிரணவம் விந்து நாதத்தால் ஆனது.. சிரசில் சக்கரமாக அமைந்து பிரணவம் உடம்பினுள் நிற்கும். எல்லா எழுத்துக்களும் சேர்ந்த மந்திரமாகும்.

1281. மந்திரம் சக்கரம் ஆகியவைப்பற்றி சொன்னால் உள்ளே காணப்படும் பிரணவ ஒளிவட்டமே உபாயங்களாகும். கண்டத்தில் வைகரியாய் நிறுத்தி எண்ணுவதிலும் தகடுகளில் ரேகை கீறி காண்பதிலும் பயன் இல்லை.அசைவாக் இருக்கும் பிரணவத்த்டை முதன்மையாகக் கொண்டு தியானம் செய்யவும்.

1282. அகவழிபாடாகச் செய்யப்படும் பிரண்வ வட்டத்தில் பொருந்தி விளங்கும் மந்திரம் பிறகு இடப்பட்ட சக்கர கோடுகளை விட்டுத் தவறுவது இல்லை. தன் பொருட்டு உண்டான தடைகளான அஞ்ஞானம் சேர்ந்திடச் சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தல் ஆகும்.

1283. பிறப்பு இறப்பு பகையை அறுக்கும் தன்மை கொண்ட சக்கரத்தை பார்க்ககூடும் உள்ளத்தில் எங்கும் காக்கவும் கூடும். நுட்பமானவற்றுக்கெல்லாம் நுட்பமான சிவத்தை அன்புடனே பார்த்து உள்ளபடி உணர்பவர்க்கு அதை அடையவும் முடியும்.

1284. சொன்ன ஏரொளிச்சக்கரத்திற்கு முதல் எழுத்து அ காரமாகும். அதன் மேல் எழுத்துக்கள் அம்மை எழுத்து உ காரம் ஆகும். இந்தச் சக்கரத்தில் மாயா செயலான நிலம், நீர், நெருப்பு, காற்று எனும் நான்கு பூதங்களும் பொருந்தும். எல்லாம் கூடி நிற்கும் சக்கரத்தை பற்றி சொல்ல முடியுமோ.

1285. ஐந்தெழுத்துடன் கூடியது மாரணம். மாறுபட்ட இயல்புடையதாய் மதிப்பவருக்கு சொல்லப்பட்ட சக்கரத்துடன் எழும் மந்திரமனது ஆறு செயல்க்ளை செய்து விரியும்.

1286. எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவள் எனப்படும் அம்மை குறித்த சக்கரத்தின் முதன்மையானவள். பயிற்சி செய்பவருக்கு பகையை வெல்லத் துணை செய்ய அன்னை ஒத்து வருவாள். அம்மை காரணமாக உடன் வரும் ஐம்[பூதங்களும் தொழில் செய்யும். அவளது ஆணையின்றி அவை எதுவும் செய்யாது.

1287.தேடித் தெளிவு கொண்ட அடியார்க்கு உண்டான தம்பனம், மாரணம், வசியம் ஆகியன இயல்பாகவே வந்து பொருந்தும். அவர்கள் இருப்பிடத்தில் பகைவரும் வந்து இருக்க மாட்டார்.

1288. மூலாதாரத்தில் இருக்கும் சக்கரத்தை தெளிந்தி அறிந்து கொண்டால் கனிந்த குழைவான அ காரத்தை அந்நடுவில் குளிர்ந்த குண்டலினியின் சுற்று வட்டத்தில் வைத்து மூலவாயுவை அங்கிருந்து சுழுமுனை வழியாக உயர்த்தி கொணரலாம்.

1289. கால் அரை முக்கால் முழு என்னும் பிரணவம் சுழுமுனை மார்க்கமாய் பொருந்தி எழுவதாய் பரந்து விரிந்து காமம் முதலான ஆறு பகைகளும் கெடும்படி நிலைத்தபின் விருப்பைத் தரும் இம்மந்திரம் மாறிக் கொள்வார்க்கு ஆகும்.

1290. கூத்தனின் எழுத்தான பிரண்வ மந்திரம் முன்பு வெளிப்படாது நின்று உள் நாக்குப் பகுதியிலிருந்து அதன் பகைவர்களை மாற்றி வெளிப்பட்டுத் தலையை நோக்கிச் சென்று சகசிரதளம் விரியுமாறு ஒளியுடன் இருக்கும். அவ்விடத்தில் இருப்பது சிவன் என்பதை உணர்க.

#####

Read 1957 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25555906
All
25555906
Your IP: 44.200.101.84
2023-09-26 15:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg