Print this page
வியாழக்கிழமை, 07 May 2020 11:25

வயிரவச் சக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!

#####


வயிரவச் சக்கரம்!

1291. வளர்பிறை ஒன்று முதல் ஆறு வரை ஆறு ஆதாரங்களிலும் காணப்படும். திதிகள் ஆகும். இதை அறிந்து மேலே எழாம்பிறை முதல் பொருந்தும் பிறைகளை ஒன்றுவிட்டு ஒன்றாய் எண்ணி எழு என்பதை விட்டு எட்டும் ஒன்பதை விட்டு பத்தும் பதினொன்றைவிட்டு பன்னிரண்டும் பதிமூன்றைவிட்டுப் பதனான்கும் ஆகிய நான்கும் முதலில் சொல்லப்பட்ட ஆறும் மொத்தம் பத்து ஆகும். பகை வெல்வார் புறப்பட்டுச் செல்கின்?ற புலத்தை தம் வலப்பக்கம் அமையும்படி தியானம் செய்தால் பலன்.

1292. வயிரவரைத் தியானம் செய்பவரின் மனத்தில் தோன்றுவார். அவர் சூலத்தையும் கபாலத்தையும் ஏந்தியவராக் இருப்பார். பகைவனை வென்று அவன்மீது அருள் காட்டாது உயிரை தோண்டி எடுக்கும்போது அப்பகைவரது உடலைப் பந்தாடலாம்.

1293. உயிர்களின் பக்தியை மேற்கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் செய்பவர் பைரவர். இரண்டு கைகளில் கபாலமும் சூலமும் ஏந்தி தமருகத்தையும் பாசத்தையும் மற்ற இரண்டு கைகளில் தண்டிப்பதற்காக கொண்டிருப்பவர். ஐந்து ஆறாம் கைகளில் தலையும் வாளும் உடையவர்ரய் இருப்பார்.

1294. ஆறு கைகளயும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தி தியானிக்க பெருமான் செந்நிறமாக காட்சி தருவார். தூயவர் மனத்தில் விளங்குவார். ஒளியைப் பொருந்தி நிற்கும் அவரை உடலைக் கடந்து பூஜை செய்க.

1295. பெருமானை ஆயிரம் உரு செய்து வழிபடுக. பூசைக்கு நல்ல தேனை விரும்பி படைக்க பூசைக்கு சாந்து புனுகு சாத்தி பகை நீக்கம் செய்க.

1296. விரும்பும் வண்ணம் பகைவர்களுக்குள் கலகம் உண்டாகும். விரும்பிய அறு செயல் கலையை உண்மையாய் பெற்ற பின்பு விரும்பியபடி நடக்கலாம். வேண்டிய எல்லாம் கிடைக்கும்.

#####

Read 1636 times
Login to post comments