Print this page
திங்கட்கிழமை, 11 May 2020 11:00

கடுஞ்சுத்த சைவம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#####

கடுஞ்சுத்த சைவம்!

1438. வெளி வேடங்களில் விருப்பம் இல்லாது இறைவனைச் சேர்ந்து உலகியல் ஆடம்பரம் இல்லாமல் ஆசையையும் பற்றையும் நீத்து பிறவித் துன்பத்தை அளிக்கும் பாசமும் சில போதமும் பாழாகச் செய்யும் சிவஞானம் பெற்றவரே சுத்த சைவர்.

1439. உடல் எனச் சொல்லப்படுகின்ற அன்னமயக் கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும் மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் ஆறையும் ஐந்து பிரிவாய் இருக்கும் சுத்த மாயை முதலிய சிவ தத்துவத்தையும் இவற்றின் சார்பானவற்றயும் நீக்கி தன் உண்மை நிலையை அறிந்து அதில் நிற்றலே சித்தாந்த நெறி.

1440. இறைவனால் அருளப்பட்ட ஆகமங்களில் சொல்லப்பட்ட பரமுத்திகளில் சாராமல் முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப்படுவதே மேன்மை அடைந்த பரமுத்திக்கு மூலம். அதை உணர்ந்து ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டு நீங்கினால் சுத்த சிவமாகும் பேறு பெறுவர். அவரே சுத்த சைவர்.

1441. அறிபவன் நான் என்றும் அறியப்படும் பொருள் சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தைச் சேரவே சிவன் சீவன் என்ற இரண்டு நிலையில்லா நற்சிவம் தானே நான் என்ற உண்மையை உணர்ந்து அதனால் அறியப்படும் பொருள் எனவும் அறிபவன் எனவும் பிரிந்து அறிதற்கு இயலாத பெருநிலையை அடைந்தேன்,

1442. இன்னதென்று கூறுவதற்கு அரிய அந்த நெறியை அடையப் பெற்றவர் பொருத்துதற்கு அரிய கண் முதலிய ஐம்பொறிகளும் செயல் அற்று அடங்கிவிடும். மேல் இருக்கும் ஞானம் விளக்கொளி போன்று ஓளிரும் பின் சாயுச்சிய நிலையில் இறைவனுடன் ஒன்றியவனாகி ஏகனாகி நிற்றல்
பொருந்தும்.

#####

Read 1566 times
Login to post comments