Print this page
திங்கட்கிழமை, 11 May 2020 11:02

சரியை! கிரியை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

#####

சரியை!

1443. வீடுபேற்றை அடைவதர்உ முதல் அங்கமான சரியை நெறி இது என் வேத ஆகமங்களை ஆய்கின்ற காலாஞ்கி, கஞ்ச மலையமான், கந்துரு, ஆகியவர்களே கேளுங்கள். இந் நிலவுலகத்தில் சுத்த சைவர்க்கு உயிரைப் போன்ற நெறி சரியையாகும்.

1444. இறைவன் உயிர்க்கு உயிராக நிற்பதை அறிதல் சிறந்த ஞானமாகும். உயிருக்கு ஓலியை அளிக்கும் பொருளாக இறைவனைக் காண்பது மேலான யோக் பூசை. வெளியே பிராணப் பிரதிட்டையாக ஆவாகனம் செய்தல் வெளிப் பூசையாகும். வெளியே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கிய வாயில் ஆதலால் கடைப்பட்ட அன்பாகும்.

1445. நாடுகள் நகரங்கள் நல்ல கோவில்கள் என்பனவற்றைத் தேடி அங்கு சிவன் வீற்றிருக்கின்றான் எனப் பாடுங்கள். வணங்குங்கள். ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தன் கோயிலாகக் கொள்வான்.

1446. கோவில் வழிபாட்டைச் செய்யும் பக்தர் சரியை வழியில் நிற்பவர். கிரியை வழியில் நிற்பவர் திருநீறு முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவ வேடம் தாங்கி நிற்பவர். தூய இமயம் முதலிய அட்டாஅங்க யோக உறுப்புகளை உணர்ந்து அவ்வழியில் நிற்பவர் தூய யோகியர். சித்தர் சிவத்தை தன்னில் கண்டு தான் அதில் ஒன்றி நிற்பவர்.

1447. உண்மையான ஞானம் உடையவர் தாமே இறைவனாக ஆனவர். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி அடைந்தவர் யோகியர். கிரியை உடையவர் சிவபூசையை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் பல பதிகளுக்குப் பயணம் செய்வார்.

1448. கிரியைக் கிளர்ச்சியைத் தரும். ஞானம் என்ற பூசை முறையை அறிவதற்கு அரிய சிவன் உருவத்தையும் அருவத்தையும் பொருந்தி வழிபடுபவரின் பக்குவத்திற்கு ஏற்ப தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேசப்பொருளுக்கு உரிய உயர்ந்த பூசை.

1449. சரியை கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறும் ஞானம் நான்கும் விரிவாயுள்ள வேதாந்தச் சித்தாந்தத்தால் அடையப் பெறும் ஆறு முடிவைக் கொண்டவை. உன்மைப் பொருளான நந்தியம் பெருமான் குருமண்டலத்தில் பொன்நகர் அடைந்து மயக்க அறிவைக் கொண்ட ம்க்கள் வணங்கி அறிவைப் பெறும்படி வைத்தான்.

1450. சமய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள மலக் குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தினது சக்தியைக் குறைத்தல். சிறப்பான தீட்சையால் சிவத்தின் துணையைக் கொண்டு அமையப் பெற்ற மந்திரங்களால் ஆன்வம், கன்மம், மாயை என்ற மூன்றின் வன்மைகளைக் குறைத்தல். சமயத்தில் அமைந்திருக்கும் நிர்வாண தீட்சையான நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீத கலைகளில் மலக்குற்ரங்களைப் போக்கி ஆன்மாக்களின் மேல் உள்ள கலைகளுக்கு தகுதிப்படுத்தலாகும். திருமுழுக்காட்டு என்பது சத்தி நிலைபெறப் போதித்து நிலை பெறுதலே.

#####

கிரியை!

1451. ஒப்பற்ற சிவம் பத்து திசைகைளிலும் பரவியுள்ளது. எந்த திக்கில் இலை. எப்போது இல்லை. எங்கும் எப்போதும் உள்ளார். அத்தகைய மலம் அற்றவர்க்குப் பணிந்து திருவடியை அடைக்கலன் என உறுதியாய் பற்ற மென்மேலும் தாவி வரும் வினையாகிய கடல் ஆன்மாவைச் சாராது என்பதை அறிந்து கொள்க.

1452. காட்டில் நிறைந்து மணம் கமழும் சந்தனமும் வான் அளவ நிறையும் வண்ண மலர்களும் சாத்தி வணங்கினாலும் உடல் பற்றை விட்டுத் தியானிப்பவர் அன்றி தேன்போல் இன்பத்தை தரும் சகசிரதளத்தில் இருக்கும் திருவடியைச் சேரமுடியாது.

1453. பசுங்கன்றைப்போல ஒலிக்கின்ற கழலை உடைய திருவடியை வணங்குங்கள். ஞானத்தைத் தரும் சுழுமுனை நடுவே தோன்றும் தேவர் உலகக் கன்றான வானவர் வந்து உம்மை வழிபடுவர். பெருமையுடைய காளையூர்தியையுடைய பெருமான் திருவருளைத் தாங்கும் பாத்திரம் ஆவீர்.

1454. வணங்கி எட்டு திக்குகளில் உள்ள மண்டலங்களில் எல்லாம் அவன் பணியைச் செய்யும் சத்தியை ஒரு பாகத்தில் உடைய இறைவன் பெருமையை உணர்ந்து வழிபடுவதே மக்கள் பணி. வல்ல பெருமானை போற்றுவது அன்பினால் ஆகும்.

1455. பக்தன் தூய்மையான மந்திரத்தை எண்ணி அவ்வாறு நடந்து பழகி சுத்த மாயை என்ற அருள் ஆற்றலை குற்றம் இல்லத உண்மை யோகத்தில் அமைந்த நெறியில் பொருந்தி தன்னையும் பெருமானையும் உணரும் ஞானத்தினால் சித்தம் குருமண்டல பிரவேசத்தால் சிவமாய் அமையும்.

1456. சிவன்மேல் கொண்ட இடையறாத அன்பினால் உருகித் தினந்தோறும் நாத வழிபாடு செய்வேன். செம்பொன் போன்ற சகசிரதளத்தில் இருக்கும் விந்து நாதமான திருவடியை வணங்கி நின்று துதிப்பது எனக்கு அருள்வாய என்பதற்கே.இறைவன் தலையில் சோதியாய் நின்று அருள்வான்.

#####

Read 1718 times
Login to post comments