gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
சனிக்கிழமை, 06 June 2020 10:28

நிஜானந்த போதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

நிஜானந்த போதம்!

நல்லார் பிறர் குற்றம் நாடார். நலந்தெளிந்து கல்லார் பிறர் குற்றம் காண்பர். ஆதலினாலே இந்நூல் கண்நோக்குறும் அன்பர்கள் இதிலடங்கிய தன்னிலையுண்மையினை அனுபவம் பெற்று அஷ்ட மூர்த்தமாயும் சத்து சித்தானந்தமாயும் விளங்கும் பெரும்பொருளின் திருவருள் விலாசமுற்று மார்க்கண்டர் மதியின் கலை சோடசமும் குறைவிலா நிலைபெற்று என்றும் 16 வயது பெற்றது போலச் சிரஞ்சீவிகளாய் இருப்பார்கள் எனக்கருதி அப்படி நடக்க கடவுளை நாம் பிரார்த்திக்கின்றோம். கற்றதனால் தொல்லைவினை கட்டறுமோ! நல்ல நேரம் பெற்றதனால் போகுமா பிறவி நோய்! போகாது! சாதி பேதம் சமய பேதம் பொருள் பேதமெனக் குதர்க்க மொழிகளைப் பாராட்டுவதை நீக்கி முன்னோர்கள் நின்ற நிலை ஈதென்றுணரும் சித்தசுத்தி பெற்ற மானிடப் பிறவிகளே பிறவிகள் என யாவராலும் புகழப்படுவரென்பதால் அப்புகழை உயிர்கள் அனைத்தும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ வாழ்த்தும் குருஸ்ரீ
பிரமன் விண்டு என்கிற விஷ்ணு ருத்திரர், மகேசர், சதாசிவமான பஞ்ச மூர்த்திகள் மூலாதார கணபதியோடு ஆறு ஆதாரங்களிருப்பதாக மறை கூறுகின்றது. மண், நீர், அக்கினி, காற்று, ஆகாயம் சர்வ நால்வகை யோனி வடிவச் சீவர்களும் ஆதாரமாயிருப்பன, அனைவருக்கும் நாசியில் உஸ்வாச நிஸ்வாசமாய் உலவிவரும் இடைகலை பிங்கலையாகச் சுழுமுனை ஆதாரத்தில் மாறி நடந்துவரும் சத்தி சிவ சந்திர சூரியனெனும் சுவாசமான வாசியானது நாளொன்றிற்கு 21600 சுவாசமாய் நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருவது மனமாகவும் வாசியாகவுமிருப்பதில் நாள் ஒன்றிற்கு 12 வட்டமாய் சந்திர பாகத்திலும் சூரிய பாகத்திலும் ஐம்பூதப் பிரிவாய்ப் பிரிந்து கட்டுகின்றது. இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்கள் அந்தக் காரண வியாபாரத்தால் அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளையும் க்ஷீணப்படுத்தி நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்து விடுகின்றன.
பிராண வாயுவானது தச வாயுவாய் நாவிதத் தொழிலை நடத்தி முடிவில் பிராண வாயுவாய் நிற்கும். மன அசைவால் பிராணாதி வாயுகளுக்க் உதிப்பு, மன அசைவில்லாதிருந்தால் வாயுகளுக்கு தொழிலில்லை. மனமாகிய வாசியே மனம். மனமானது சலம், கனல், வாயு இம்மூன்றும் கூடியது. இதை குருவால் சுவானுபவம் பெற்று வாழ்வதே நற்பயனாகும்.
இரேசகம், வன்னி, பூரகம், அப்பு, பிராணவாயு அமிசம், வாசி, தச நாடிகள் இருதயத்தின் அசைவு, அறிவு, நேத்திரக் கருமணி, ஒளிவு, நாசி மூலமாக வெளிக் கழிவது, விடம் பொருந்திய சூரியகலை, ஆகாய சந்திர கிரகணங்கள் முன்னிலையில் அமுதம் உள் புகுவது சந்திரகலையென்றும், உள் செல்லும் சுவாசம் தோறும் அமுதம் உள் புகுவது சந்திர கலையென்றும் உள் செல்லும் சுவாசந்தோறும் அமுதம் உள் சென்று உதிரத்தில் கலந்து உதிர சுத்தியும் செய்து சீவனுக்கு ஆதாரமாயிருகின்றன
இவ்வமுத பலத்தால் தவசிகள் தேகத்தைப் போஷித்து நெடுங்காலம் இருப்பதற்காக மதியமுதம் உட்கொள்ளும்படி செப்பியிருக்கின்றன்ர். கைலாயமென்னும் சுழுமுனை வீட்டில் ஓங்காரித்துக் கொண்டு தலையெழுத்தாக இருப்பது உண்ர்வு. அவை அசைவற நிற்கில் சிவமாம். அசைவுறில் சீவனாம். மூச்சாகவும் பேச்சாகவும் சப்திப்பது சத்தி. இவையே பேசுமெழுத்து பேசாவெழுத்தெனப் புகல்வர்..
பேசுமெழுத்து மனம் பேசாவெழுத்து வாசி. சாகா வேகா தலைபோகப் புணர்ப்பென மறை கூறும் வாசியாகிய வாயுவையும் ஆகாய வெளியையும் ஆவியாகிய வன்னியையும் எச்சமய மகான்களும் அடைய வேண்டும்.
கால் என்பது பிருதிவி, தலையென்பது ஆகாயம், மத்தி- அப்பு, உடல்- வாயு,-உயிர், அக்கினி-அறிவு மயமாய் நின்றன.
ஆகாய ரவியினிடத்து உஷ்ணக் கிரணமும் மழைக் கிரணமும், பனிக் கிரணமும் உண்டாகியது போல் அறிவினிடத்தில் இடைகலை, பிங்கலை, சுழுமுனையென்று மூன்று கிரணமுண்டாயின.

மணி மந்திர ஒளஷத.
மணி மந்திர ஒளஷத பரிகார்மாகிய மூன்றில் சாரமாகிய வாசியின் லக்ஷியம் தெரிந்து அவ்வனுபவத்திலிருந்து பிணியாளன் வியாதியை நேத்திரத்தால் கண்டு வாசியினால் ஆகருஷணம் செய்வதே மணி மந்திர பரிகாரமாகும்.
ஒளஷத்தினால் வியாதியை நிவர்த்திப்பதாயிருந்தாலும் வைத்தியனுக்கும் மற்றவர்களுக்கும் சர அப்பியாசம் வேண்டியிருப்பதால் அதற்குரிய அனுபவிகளை அடைந்து இரேசக பூரக குப்பகம் இன்னவை என்றுணர்ந்து அடைதலே நன்மார்க்க நிலையாகும்.

சரியை கிரியை யோக ஞானமாவன.
மன்னுயிரும் தன்னுயிர்போல எண்ணுவது சரியை.
மனு நீதியும் குரு மொழியும் தப்பாதிருப்பது கிரியை.
ஒன்றாமே அலையும் மனமொடுங்குவது யோகம்.
எப்போதும் தற்பரமாய் நின்றதுவே ஞானம்.

நான்கு பதமாவன.
கடவுள் சிருஷ்டித்த உலகில் வசிப்பதே சாலோக பதம்.
கடவுளை எதிரிட்டுப் போற்றி வாழ்தலே சாமீப பதம்.
குரோதாதி குணங்களை நீக்கிச் சத்துவ குணமாயிருப்பதே சாரூப பதம்.
துவித பாவணை நீக்கி ஆத்தும விசாரணை செய்து கடவுளோடு இரண்டறக் கூடி அது தானாய், தானதுவாய் நிற்பதே சாயுச்சிய பதமாகும்.

அஷ்டகர்மமாவன.
பிராணாயாமத்தால் வாசியை வசப்படுத்திக் கடவுள் திருவருள் மீது மோகித்து நித்திரையை நீக்கிக் கண் பார்வையைப் பகிர்முகப்படுத்தாமல் ஐம்பொறிகளை வித்து வேஷித்து நானென்னும் அகங்காரத்தைப் பேதித்தும் பூரணத்தில் மனத்தை ஐக்கியஞ் செய்து சஞ்சித வினைகளை மாரணம் செய்வதாகும்.

அஷ்டாங்க யோகமாவன.
காமமாகிய இச்சையை தோன்றாது செய்து தக்க ஆசனத்திலிருந்து நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயாம்பரத்திலிருத்தி புறவிடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தத்சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து நிருவி கற்பமாகுதலாம்.

அணிமா சித்தியின் விபரம்.
அணிமா- குஷ்மகாரண மகாகரண சரீரமென்பதில் மகாகரண சரீரமாக அனுவிலசைவாக நுழைவது.
மஹிமா- விஸ்வ ரூபமாவது தோன்றல்,
ஹரிமா- அதிக பளுவாயிருத்தல்.
லஹிமா- தக்கையைப் போல் இலேசாய் காட்டல்,
பிராப்தி- இரவி மதியோரை வசப்படுத்துதல்
பிராகாமியம்- பிறர் காயத்தில் நுழைந்து நினைத்தவரிடம் அக்கணமே தோன்றல்.
ஈசத்துவம்- பஞ்சகிர்த்தியத் தொழிலை நடத்துதல்,
வாசித்துவம்- அண்ட முதலிய அனைவரையும் தன் வசமாக இருக்கச் செய்தல்

தேகமைந்தின் விபரம்.
இருள் தேகம்- ஸ்தூல தேகத்தில் அபானத்தில் மலகுற்றம். நாவில் நாடிக்குற்றம், கண்டத்தில் கபக் குற்றம், மேல் மூக்கில் திரைக் குற்றம், மனத்தில் ஆணவ மலம் பொருந்தி நானெனும் அக்கியான குற்றம்,
மருள் தேகம்- மாயா சந்ம்பந்தமாய்த் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரங் கொள்வது.,
சுத்த தேகம்,-கருவி கரணாதிகளிறந்து அறிவு அருள் வடிவாய் பார்வைக்குத் தேகம் தோன்றுவது.
பிரணவ தேகம்* தேகம் தோன்றினும் கைக்குப் புலப்படாததும் நிழல் சாயை இல்லாததுமாம்.
ஞான தேகம்- கண்ணிற்குத் தோன்றாமல் அறிவிற்குத் தோன்றுவது.

திருக்கு திருசியமாவன்!
நாமரூபப் பிரபஞ்சம் இந்திரியங்களுக்கு விஷயம்
கரணங்களுக்கு விஷயம் கரணங்கள்
சீவனுக்கு விஷயம் சீவன்
சீவ சாட்சிக்கு விஷயம் சீவ சாட்சி
விவேக ஞானத்திற்கு விஷயம் விவேக ஞானம்.
பரிபூரண சைதன்னியமென்னும் அறிவொன்றுக்கும் விஷயமாகாது. இந்தச் சொரூப நிலையே தானென்றுணர்ந்து அதுவாய் விளங்குவர் ஞானியர்.

ஞானியர் தேக சித்திக்கு தச தீட்சை விபரம்!

முதல் தீட்சையில் ரோம துவாரங்கள் வழியாக கெட்ட நீர்கள் வியர்வையாகக் கசியும்.
இரண்டாவதில் முத்தோஷமாகிய வாத பித்த சிலேத்தும தோஷம் நீங்கும்.
மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
நான்காவதில் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்
ஐந்தாவதில் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்ச மூர்த்திகள் கோரியதை தருவார்கள்
ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து துரதிருஷ்டி தெரியும்.
ஏழாவதில் சட்டை வெளுப்பாய் கழன்று தேகம் தீபம்போல் பிரகாசிக்கும்.
எட்டாவதில் சடத்தை உயரத்தூக்கும் இலாகிரியுமாகும். கூடுவிட்டு கூடு பாயும்
ஒன்பதாவதில் தேகம் சூரியப் பிரகாசமாய் அஷ்டமா சித்திகளும் கைவல்யமாய்த் தேவர் ஏவல் புரிவர்
பத்தாவதில் தேகம் தீபம்போல் பிரகாசித்து தேகத்தை வெட்டக் கத்தியோடும். சொரூப சித்தியாம். அண்டத்தில் மௌனம் நரை திரை மூப்புப் பிணி மரணம் ஏற்படா.

தவசிகளுக்கு ஆதாரம் வாசி. வாசி என்பது பிராண வாயு. இதைக் கொண்டு சகல சித்திகளையும் பெற்றனர்.
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும்.
இரவி சேரில் ஐம்புலனும் அறிவும் பெருகும்.
இரவி மதி ஒன்றாய் கூடிச் சுழுமுனையிடம் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும்.
வாசி நடு நிலையிலும் மூலத்திலும் நாசியிலும், கண்டத்திலும் சுழியிடமும் சதா நிறகப் பெற்றவர்கள் தாம் மெய்ஞ் ஞானிகள்.

சாகா காலையும் வேகாத தலையையும் மணியாடும் கோணத்தையும் ஆசான் முன்னிலையில் தெரிந்து மும்மூலமாகிய உந்தி மார்பு நெற்றிக் கண்ணிடமிருப்பர்.
அமாவாசை அன்னந்தண்ணீர்றங்குமிடம்,
பருவம் அன்னரசம் பிரிக்குமிடம்.
நாதமென்பது தீ மனம்
வித்தென்பது வாசி
தீயானது வாசிமீதேறி விளையாடும்.
சாகாக்கால் வாசி வாயு வேகாத்தலை ஆகாசவெளி போகாப்புனர் ஆவியான வன்னி ஆக மூன்றும் கூடியது நாதமென்றும் பசந்த மண்ணும் தண்ணீருமான இரண்டும் விந்துவென்றும் விளங்கும்.

இரவி மதி சுடர் முன்றும் ஒன்றானால் நவ நீத கிருஷ்ணனென புகலும்
சந்திரனை நோக்க வெட்ட வெளிபோலக் காணும் அது சிவபதமாகும்
இரவியைப் பார்க்க இருதயத்தில் ரவிபிரகாசம் தோன்றும். அது சக்தி பாதமாகும்.

ஸ்தூல தேகத்தைப் போஷிக்க ஆகாரம் கொடுப்பது போல சூஷ்ம தேகமாகிய ஆவியாகிய வன்னிக்கு ஆகாரம் சந்திர கிரணங்களின் அமுதத்தைக் கொடாததால் மூல அனலுக்கு ஆவி குறைந்து ஆயுள் ஷீணப்படுகின்றது.

குலம் என்பதும் சாதி என்பதும் முடிவாகப் பார்க்கில் மானிடப் பிறவியில் ஆண் பென்ணாக விளங்குவதில் கொலை, களவு, கள், காமம், பொய்யாகிய ஐந்து பாதகத் தொழிலை நிக்கிரத்துச் சத்துவ குணத்தோடு பரமமெனும் பொருள் யாதோ காரணம் விவரமறிந்தது தானே சூசனையென ஆத்தும விசாரணை செய்து முடிவை நாடி நிற்பவரே மேலாம் குலமெனப்படுபவர்.
காமாதிகலைக் கைக்கொண்டு நன்று தீதென்று தெரிந்து நடவாமல் புலால் மதுபானங்களையுண்டு ஊன் உறக்க மைதுனமே பெரும் போகமென வாட்நாட்களை மிருகாதிகளின் பாவமாயிருந்து கழிப்பவரே கீழ்குலமெனப்படுவர்.
மனத்தை ஒருமை செய்யாமல் காவிகாம்பிரதண்டு கமண்டல விபூதி பூசினும் துவாதச நாமத் தேகத்தில் சார்த்தினும் சதா ஆலய்ம புகினும் ஐந்துகால சபதப சந்தியா வந்தனம் புரியினும் யாதொரு பயனுமிராது. தனக்குத்தானே வஞ்சகக் கள்வனாவான்.
மானிட சரீரத்தில் தசவித நாதங்களும் பகிர்முக நோக்கில்லாமல் அந்தர்முக நோக்குடையவர்க்கு விளங்கும். சத்தம் ஓசை எனப்படும். அதுவே நாதமாகும். நாதம் ஆகாயத்திலுற்பவம். சத்தம் பிறந்த இடத்தில் சகல கலையுமுதிக்கும். நாத விந்து கலை எனப் புகல்வது நாதமானது பெண் பாலினமென்றும், விந்தையென்பது புருடனிடமிருப்பதென்றும் கூறுவது சகச மாயிருந்தாலும் ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் நாத விந்திருப்பது உண்மையாயிருக்கும். இதை அனுபவிக்காமல் நிச்சயிக்கக்கூடும்..
குளவியானது கிடமாகிய புழுவை எடுத்துக் கொண்டுபோய் மண்கூட்டிலடைத்துச் சிறிய வழி விட்டு அவ்விடம் குளவியானது தன் வால் முள்ளினால் பலதரமும் புழுவைக் குத்தி ரீங்கார்மான பிராணவ நாதத்தை ஒலிக்க குளவி குத்திய துன்பத்தைச் சகியாத மகா துன்பத்துடன் நாத ஒலியைக் கேட்டிருந்த புழுவானது அந்த வடிவம் நீங்கிக் குளவி வடிவம் பெற்றது. அதுபோல மானிட தேகமுடையவரும் தமக்கு எதிரிட்டிருக்கும் மரண பாதைக்கு மிகப் பயந்து சதா ஆகாய அமுசமான பிரணவ நாதமென்னதென்று ஆசிரியரிடம் கேட்டு மனத்தை அதில் இலயப்படுத்திருக்க சூக்ஷ்ம சரீரம் சித்தியாகும்.

ஆதாரமாகிய ஆகாய அமிசத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதாயிரங் கணமான 50 நாள் 414 நாழிகை ஆயிரத்தறநூறு நொடிக் கணக்காய் புருடனிடம் சுக்கிலத்தில் அணுவுக்கணுவாய் முன் கண்ட நாளனவாகக் கீட வடிவாய் கர்ப்பமிருந்து மோகங்கொண்டு ஸ்திரீயை நினைத்துப் புணர்ந்து ஸ்திரீ சுரோணிதத்தில் சுக்கிலத்திலிருந்த கீடம் சம்பந்தமாகும் முறையான ஆண் பெண்ணும் மவுன முற்றால் மோசமில்லை. கருவங்கே தரிக்கும் பாரு. இரு மனமும் ஒருமையுடனிருக்க வேண்டும்.
அவ்வகை உத்தம புணர்ச்சியில் ஸ்திரீயின் மனமானது புருடன் வடிவமீது நோக்கமாயிருக்க வேண்டும். வேறு ரூபத்தின் மீது மனம் வைக்கலாகாது. ஒன்றான இருவரும் கூடியேயுற்று உள்ளம் கணவன்றன் மேலுறல் நன்றுதான் கணவன்றன் உருவமாம்.
நாடும் காதலிமேல் நாட்டமுறில் நின்ற தாயுருவே வடிவயுறும்.
நேசமாதுலன் போலிருந்தால் வழிவன்றியே அவள் முன்னவன் பின்னவனாகு மைந்தன் கூறாமெனு நீளமரை. இவ்வண்ணம் வடிவம் பெரும்.

புருடன் கலை சூரியனாயிருந்தால் கரு ஆண் வடிவமும் சந்திர கலையாயிருந்தால் கரு பெண் வடிவமும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு பூதியமாயிருந்தால் அவையவைகளுக்குரிய கணக்கின்படி ஆயுளமைவதாயும் இருக்கிறது. கருவானது 280 நாள் அல்லது 300 நாள் பெண் வயிற்றில் வளர்ந்து வெளிக் கண்டது. அவ்வகை சென்மித்த சிசு ஏழு விதப்பருவமடையும். அதை ஏழு பிறவி என்றும் புகல்வர். அவை
1.புருடன் ஸ்திரியை நினைத்து மோகங் கொண்டது
2.சம்பந்தமுற்றுச் சுரோணத்தில் சம்பந்தமானவை.
3.கருப்பையில் வளர்ந்தது.
4.வெளித்தோன்றிய குழந்தைப் பருவம்.
5.வாலைப் பருவம்
6.எவ்வன காமாதிகளாலலைவுறும் பருவம்.
7.நரை திரை மூப்புப் பிணி மரணப் பருவம்.
இந்த ஏழு பருவங்களிலும் வடிவமும் குணமும் நடக்கயும் பேதங்களாகவேயிருக்கும். புருடன் ஸ்திரி இருவருக்கும் மோகவுற்பவ விவரம்.

ஒன்றான விந்துவிலே விட்டகுறை வந்து கருத்தரிக்கும். அவ்வுருவே அவனும் அவளுமாவார் என்றும் தனது நலவினை தீவினையளவாகப் பெண் கர்ப்பத்தில் தானே பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டுமென்றும் அனுபவிகள் கூரியது மாகா வாக்கியம்.

பிராண வாயு பித்தம் அக்கினி சலத்தில், அபானவாயு வதம் மலத்தில் சமான வாயு அய்யம் சுழி விந்தில்

தீயும் காற்றும் மலத்தில் சார, வாத வாயுவும் அக்கினியும் காற்றும் ஆகாயத்தில் சாரப்பித்தமுறும் சகலமும் காற்றும் சுழியில் சார சிலேற்பனமுறும்.

வாசி மூலவிடம் ஐந்து
நாசிமுனை, சகஸ்திரம், பிடரி, நெஞ்சு, மூலம்.

முத்தீயின் விவரம்
குதஸ்தானத்திலொன்று, ருத்திரஸ்தானதிலொன்று, புருவ மையச் சதாசிவ ச்தானத்திலொன்”று

சந்திர சூரிய அக்கினி இடமாவன
மூலத்தில் அக்கினி, மார்பில் சூரியன், முடியில் சந்திரன்.

உலவுமிடம்
சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச் சென்று வரும்
சந்திரகலை நடக்கும்போது 312 பாகமாகிய மூளையில் சென்று வரும்
மந்திரங்கால் மதி முக்கால் என்பது மந்திரம்- சூரியன் கால், மதி-சந்திரன் முக்கால்
அங்குஷ்டப் பிரமாணமென்னும் அகத்தீசர் ஓர் அங்குலமுள்ள நேத்திரஸ்தானமிருந்து ஆயிரத்தெட்டுக் கிரணங்கள் பொருந்திய பகிர்முக நோக்காக யாவும் பார்த்தும் தான் சர்வ சாக்ஷியாய் விளங்கும்.
ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலமும் நீங்கிய ஆத்துமா அருளோடு கூடிய ஞானமாகும்.
ஒரு பாதையுமின்றி தானாயிருப்பது பிரமம்.
பிரமம் பூரணமாகிய அவித்தையிற் பிரதிபலித்தபோது சீவன்
சீவன் அவித்தையிற் கூடியபோது சுழுத்தி
சுழுத்தி அந்தக் கரணத்தில் கூடில் சொப்பனம்
சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம்
சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில் விவகாரம்.

ஆகையால் அந்தக் கரண வியாபரங்களை நீக்கி அந்தர்முக நோக்காய் பேச்சுக்கும் மூச்சுக்கும் மத்தி. கண்ணுக்கும் காதிற்கும் மத்தி, கங்குல் பகலாமிடத்திற்கு மத்தி, இரவி மதிக்கு மத்தி ஆறிவிற்கும் மனத்திற்கும் நடுநிலையில் நின்றவர்க்கே மெய்ப்போதமுதயமாகும்.

க்ஷண சிருஷ்டி பிரளயம் தின சிருஷ்டி பிரளயமாகின்ற நினைத்தலும் மறத்தலும் நித்திரையிலே தன்னையே மறத்தலாகின்றபடியால் மரண காலம் எதிரிட்டிருப்பது இன்ன நாள் என்று தெரிந்து அதற்குள் அடைய வேண்டிடும். பயனை அடையாத நமது இகபோக சுகமும் நடக்கையும் மன விகாரமும் யாது பயன் தரும்!

ஐம்புலனை வென்றவன் வீரமே வீரம்.
கடவுள் ஒன்றெனத் தெளிந்த பேரறிவே அறிவு.
பிறர் ஏவாமல் உண்பதே வூண்.
தான் சாகாமல் கற்பதே கல்வி
ஆதலால் ஆதி சிருஷ்டி கால முதல் யோனியைக் கொண்டு யோனி மூலமாகவே இச்சை கொண்டபடி சென்மித்து வருகிறோம். அவ்வகை யோனி வழியாக அளவிறந்த சென்மங்கள் எடுத்தும் இப்போதாகிலும் பிறந்து விட்டேன். இனி பிறவாதிருக்க வரந் தர வேண்டும். எனப் பட்டினத்தார் சுவாமிகள் கேட்டது போல் இனிப் பிறவி பெறாவண்ணம் வேண்டுமல்லவா! தேகம் நரை திரை மூப்புச் சாக்காடு பெற்று நசிப்பது சித்தம். தேகத்திலிருந்த சத்து எக்காலமும் நசிப்பதில்லை என்றனைவரும் புகல்வது பழமொழியாய் இருந்தாலும் அது அனுபவத்தில் சித்தாந்தமாக வேண்டும்.
இப்புவி அத்திப்பழம் போலும் பேரண்டம். அதற்குளமைந்த வித்துக்கள் போன்றவை சிற்றண்டங்கள். பேரண்டம் ஆயிரதெட்டு கூடியது ஒரு புவனம். இவ்வகைக் கொண்ட புவனம் 2214 கொண்டது ஒரு சாகரம். சாகரம் ஏழு கூடியது ஒரு பதம் இப்படி 844 பதம் கூடியது பிரபஞ்சமென மேலோர் கூறியுள்ளனர்.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் உகார நாத ரவி, மகார விந்து சந்திரன், ஓங்கார மகாமேரு சுழுமுனை ஆக அஷ்ட மூர்த்தியாயும் விளங்குபவர் கடவுளென வேதம் கூறும்.
மேலோர் முன் குறித்த வாக்கியங்கள் உண்மையென விளங்குவனயேயாம். ஐயமின்றித் தெய்வவுருத் தியானித்தால் அதுவாம். அருவுருவைத் தியானித்தால் அட்டமூர்த்தியுமாம். பொய்யா இரண்டையும் தவிர்த்துத் தானாயிருந்திடில் பூரணமாம். சீவனெதிர்ப் பொருந்துமதுவாயின் மையலுறு மனம் விடயத்தாசையுற்றே அது வாய் மரண செனனமும் விளைத்தவாறே தென்றே உணர்ந்து மெய்யறிவே தானாகப் பாவித்தால் அதுவாய் விளங்குவர். யாவரும் செனியா வீட்டைமெய்துவாரே!

வார சரம்!

ஞாயிறு, செவ்வாய், சனி வலநாசியில் சூரிய கலையாகவும், திங்கள் புதன், வெள்ளி இடநாசியில் சந்திர கலையாகவும், பூர்வபக்ஷ குருவாரம் சந்திர கலையாகவும் அமரபக்ஷ குருவாரம் சூரிய கலையாகவும் காலை 4 மணிக்கு நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் தன் காரியங்களைத்தும் சித்தியாகும். அவ்வகை நாடாமல் பேதமாய்ச் சூரியன் நடக்க வேண்டிய தினம் சந்திரனும் சந்திரன் நடக்க வேண்டிய தினம் சூரியனும் நடந்தால் அடியிற் காணும் பலன் நடக்கும்
ஞாயிறு- சந்திரன் – சளி இருமல்
திங்கள்- சூரியன் – சலதோஷம் சுற்றத்தார்க்கு கேடு
செவ்வாய்- சந்திரன் – சுரம், சண்டை, சாவு
புதன் சூரியன் –நீரேற்றம், தலைக்குத்தல் தீங்கு
வளர்பிறை வியாழன் சந்திரன் –தேக நோய்
வெள்ளி –சூரியன் –கண், காது நோய்வெளியூர்ப் பயணம்
சனி- சந்திரன் சீதள சன்னி

சந்திர சூரியர் இரு கலைகளிலும் ஐம்பூதம் நடப்பதுண்டு.
பிருதுவி நிறம் பொன்மை – தித்திப்பு, அப்பு – வெண்மை –துவர்ப்பு, தேயு – செம்மை – உவர்ப்பு, வாயு – கருமை – புளிப்பு, ஆகாயம் – படிகம் –கசப்பு
பூர்வ பக்ஷத்தில் குரு – பிருதிவி, சுக்கிரன் – அப்பு, குரு – தேயு, புதன் வாயு, சனி- ஆகாய பூதியமாகக் கொள்க.
ஞாயிறு ஆந்தையாகிய அப்பும், திங்கள் செவ்வாய், வியாழன் காகமாகிய தேயுவும், புதன் வல்லூறாகிய பிருதுவியும், வெள்ளி கோழியாகிய வாயுவும், சனி மயிலாகிய ஆகாயமும் பூதியமாக நடக்க மிக உத்தமம்.
பூதியங்கள் பிருதுவி, அப்பு நடந்தால் சத்வகுணம், தேயு ராசதமாகிய தேயுவும் புதன் வல்லூறாகிய பிருதிவியும் வெள்ளி கோழியாகிய வாயுவும் சனி மயிலாகிய ஆகாயமும் பூதியமாக நட்க்க மிக உத்தமம்.

பூதியங்கள் பிருதிவி அப்பு நடந்தால் சத்வகுணம்
தேயு ராசதமாகிய கோபாங்காரம் பெண்னிச்சை
வாயு அலைவுறும்
ஆகாயம் பர இச்சையை நாடும்

காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு எழுந்திருக்க வேண்டும். ஆகவேண்டிய காரியங்களுக்குப் போகும்போது இரவியில் பிருதிவி அப்பு நடக்கச் சென்றால் தாமதத்தில் பலன் சித்திக்கும்.
படுக்கும்போது இடக்கையை கீழ் வைத்து வலது கையை மேலாக வைத்துக் கால் நீட்டிப் படுக்க வேண்டும். அவ்வகையில் படுக்கும் போது மனத்தைப் பலவாறு சிந்தனையில் செல்லவிடாமல் சுவாசமீது செலுத்தியிருக்க வேண்டும்.. அவ்வகை அப்பியாசங்கள் செய்து வருகையில் சொப்பனாதி அவஸ்தைகள் நீங்கி அந்தர்முக விவகாரங்கள் விளங்கும். இவ்வகை நடப்பதுமின்றி வயிற்றில் ஆகாரமில்லாமலிருக்கும்போது பசி அதிகமாயிருப்பதென்று சொல்வது அப்போது மேற்கூறியபடி படுத்திருந்து பார்க்கப் பசி எழும்பிய பரமிடம் நன்றாகத் தோன்றும்.
அமாவாசைத் தினக் காலை இரவியை இராகுவும் பருவத்தின் சந்திரனைக் கேதுவும் மறைப்பது போல் நமது இரவி மதியை இராகு கேது சாயை மறைப்பதால் மனத்தை இருளாகிய மாயை மூடியது. சந்திரன் மனத் திடமும் சூரியன் நேத்திரத்திலுமிருப்பதால் இரவியிடம் மதியை செலுத்த மதிக்குக் கிரணங்கள் குறைவுபடாமல் அறிவு உதயமாகும்.
ஆகாயமும் வாயுவும் கலந்திருக்கின்றன. மண்ணும் சலமும் கலந்திருக்கின்றன. அக்கினி மத்தியமாக நின்றது. மாமிச உதிர சலம் ஒன்றாயிருக்கின்றது. சரமாகிய வாயு ஆகாய வெளியில் சம்பந்தமாய் இருக்கின்றது. அக்கினி பொது நிலையாய் நின்றது.
ஸ்துல தேகம் சத்தி சந்திரராம். இதில் உயிர்ப்பாகிய உயிர் சூரியர் சிவமாகும். பிறவிகுரு நாசியிடமாக வாசனையறிதலும் அப்புச் சுக்கிரர் நாவிடம் சுவையறிதலும் தேயு அங்காரகர் நேத்திரமிடம் ரூபமறிதலும் வாயு பதன் சரீரத்தில் பரிசமறிதலும் ஆகாயம் சனி செவியினிடம் ஆகாய சத்தமறிதலும் இராகு கேது சாயையென்றும் அவை குதம் குய்யம் இத்தானனமிட மிருப்பானவென்றும் வேதம் புகலும்.
சாக்கிர பகிர்முக விவகாரங்களிலிருந்து நித்திரை சொப்பனத்தில் அநேக விஷயங்களைக் கண்டதாயும் செய்ததாயும், சென்றதாயும், நடத்தியதாயும் அனேகமாய்க் காண்கிறோம். நித்திரை நீங்கிய பிறகு யாதொரு பயனையும் அடையாதவர்களாகின்றோம். அவைகளின்றி ஒரு பெண்ணைக் கூடிச் சம்போகம் செய்ததாகக் காண்கிறோம். அப்படிக் கண்டு நித்திரை நீங்கிய பிறகு ஸ்கலிதமான விந்தைப் பிரத்தியக்ஷமாய்க் காண்கிறோம்.
இதை புத்திமான்கள் அறிவு முன்னிலையில் யூகமாய் யோசிக்க விந்தின் செயலும் பெருமையும் அறிந்து அதில் தேறும் அனுபவ சித்தாந்த நிலையில் சதா ஆனந்த பரவசராய் விளங்குவர். இது வேத சம்பந்தமாயிருக்கும்.

மூலாக்கினி பசித் தீபாக்கினி, கோபாக்கினி, ஸ்திரீ தாபாக்கினி, யோக ஞானாக்கினி, என்னும் இவற்றுள் ஆதியந்தமும் தவிர மற்ற மூன்று அக்கினியும் உற்பவமாய்த் தோன்றலை யாவரும் சரீரத்தில் கண்டிருக்கின்றோம்.

மேலாம் பதத்தை அளிக்கும் பூரண அக்கினியை நாம் கேவலப் விடயங்களிற் செலவிட்டு வாழ் நாட்களைக் கேவலப்படுத்துகின்றோம். அவ்வகை செய்யினும் அதனால் அனேக வியாதி அனுபவிக்க நேரிடுகின்றது.
உண்ணும்போது உயிரெழுத்தால் உயிரை வாங்கி உறங்குகின்ற போதெல்லாம் அதுபோலாகும். பெண்ணின்பாலிந்திரியம் விடும்போதப்பா! பேணியுயிர் மேல்வாங்கு என்று மேலோர் செப்பியதை நான் ஏன் அனுபவத்தில் கொண்டுவரக் கூடாது!
விந்து அதிகமாகச் எலவழிப்பதில் பிணி மூப்புச் சாக்காடு எளிதிலடையக்கூடும். ஆகாரத்திற் பிரிந்த அன்னரசமானது உதிரமாய் 7-ம்நாள் சுக்கிலமாகின்றதை விரயம் செய்யாமல் மாதத்தில் இரண்டு தரம் ஸ்திரீ பூர்வ காலத்தில் பயன்படுத்தும் தினம் உபயோகிப்பதில் அவ்விதம் தரிக்கும் கருச்சிசுவானது ஆயுள் விர்த்தியும் தேக திடமும் பெற்றுப் பிணியில்லாமல் இருக்கும்.
உந்தியிலிருக்கும் உதான வாயுவால் காமம் கண்டஸ்தானக் குழியிடமிருந்து சமான வாயுவானகி கமலப் பிறை கொலிக்கும் ஸ்தானமடையுமாகில் கபால சூலையிடி, அசதி, வயிற்றிரைச்சல், பேதி, நாவுலரல் முதலிய வியாதி புருடருக்கும் ஸ்திரிக்கு வயிற்றுநோய் தேக வெளுப்பு, சூதக வாயு முதலியவும் நேரும்.
மகான்கள் வாக்கிய அனுபவத்தை பெறாமல் வாய் மதமாயப் பேசினவர்கள் பெருங்குடலும் சிறு குடலும் புரண்டு மகா துன்பமடைவார்கள். மகான்களைத் தரிசிக்க வேண்டிய அந்தர்முகமாய் அடியிற் கண்டபடி தியானிக்க அவர்கள் பிரத்தியக்ஷமாய்த் திருவருள் பாலிப்பார்கள்.
செம்மையுடன் ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஓது.

புரியட்டவாமன!

சடம் பிரமன் கூறு. உதிரம் மாலின் கூறு. இதில் சூட்சுமமாவன; சிகரம் தீ, சீவன்; வகரம் காற்று மகேசன்; யகரம், ஆகாயம் சதாசிவம்; விந்துநாதம், சத்தி சிவன்; விராட்டு, பரை, ஆக 8 இதன் மீது வெளி பாழ், ஒளி பாழ், வெளியொளி பாழ் இவைகள் கடந்து உள் மனையாளிடமென்றும் அவ்விடமிருப்பவர் சிவயோகிகளென்றும் மறை கூறும்.
இவ்வனுபவம் பெறுவது தக்க ஆசான் கிடைத்ததும் அவரது சாயைப்போல அவருடனிருந்து சதா அவரால் பெற்ற திருவருள் நோக்கத்தில் நெடுங்காலம்மிருப்பவர்களுகு அமையும் பதமாகும் ஆகிலும் அனைத்திற்கும் மனமே முன்னிலைக் கரணமாயிருக்கின்றது. மனம் அலையாதிருக்க வேண்டும். மனமானது எப்போதும் ஒன்றை நாடியே நிற்கும். அசைவற்று நிற்கும் சுபாவம் அதற்கில்லை. நன்மார்க்கத்திலேனும் துன்மார்க்கத்திலேனும் செல்லுவது மனமாயிருக்கின்றது. மனத்தசைவை நிறுத்துவதே நல்லோர் கடமை.

ஓசையில் சத்தம், முட்டையில் உயிர்ப்பு, வித்தில் சத்தாகிய முளை, பூவில் வாசம், பழத்தில் சுவை, இரும்புண்ட நீரைப் பிரித்துக் காட்ட இயலாமை போல் நிறைந்த எள்ளில்லெண்னெய், பாலில் நெய், கரும்பிற் சக்கரை, தெயுவில் அக்கினி, சொல் முடிவில் பொருள் தோன்றுதல் போல் அகநோக்குடையவர் காண்பர்.

நால்வகைத் தோற்றத்தில் மானிடமெனும் வடிவங்கொண்டும் மேற்கண்ட அனுபவங்களை அடையாமல் உலகம் மெச்சச் சரீரமீது பல வேடங்களைத் தரித்து நான் யோகி, சோகி, பரதேசி, தம்பிரான், சாமி, தவசி, தாசன், பக்தன் என்று வீண் காலங்களைப் போக்குவதனால் அருமையான பிறவி வீணாய் பிருதிவியில் இலயமாகும். தான்தான் என்பது யாது! அதைச் சூழ்ந்த கருவி க்ரணாதிகள் எவ்வாறுதித்து எவ்வாறொடுங்கும்! எனச் சித்தாந்தமுற்று நிற்பதே எம்மதச் சார்பினரும் பெறும் நிலையாகும்.

திருவருள் போகத்தை அளித்து செனன மரண துயரத்தை நீக்கி துரியாதித நிலையிலிருந்தும் குருவிற்கு உடல் பொருளாவியெனும் மூன்றையும் (சரீரத்தையும், உயிரையும், அறிவையும்) சுத்தம் செய்த மாணாக்கருள் மந்த மந்தாதர தீவிர அதிதீவிர பக்குவத்திரயங்கள் நான்கு விதமாயிருக்கின்றன.. அவருள்ளும் பிரமசரியம் கிருகஸ்தம், சந்நியாசம், வானப்பிரஸ்தம் அதிவர்ணாசிரமம் பெற்றவர்களாயுமிருக்கின்றனர்.

இருக்கு, எசுர், சாம அதர்வணமாகிய நான்கு வேதத்திலிருக்கும் ஞானகண்டத்துள் தைத்திரிய உபநிஷத்தில் பிரக்கியான பிரமமெனும் குரு வாக்கியம். அறிவே பிரமம் என்பது எசுர் வேத அயித்திரிய உபநிஷத்தில் ‘அகம் பிரம்மா அஸ்மி’ என்பது சீடன் வாக்கியம். நானே பிரமம் என்பது சாம வேதஞான கண்டத்துள் சாந்தோக்கிய உபநிஷத்தில் ‘தத்துவம் அசி’ எனும் வாக்கியம் நீயானாய் அதாவது வேத ஞான கண்டத்து மாண்டோக்கிய உபநிஷத்தில் என்னுடைய ஆத்துமாவே பிரமமாய் விளங்குகின்றது. இவ்வனுபவம் ஒரு கடாக்ஷத்தால் சுவானுபவமாக வேண்டும்.

பஞ்சாக்ஷரம்:

நகரம், அருட்சக்தி, தேகத்தை தரும் பிராரத்துவத்தை அனுபவிப்பது, மகரம்- ஆணவமலம், அசுத்த மாயை. சிகரம்- சிவம், வகரம்: அருள்: சகரம் சீவன் ஆதலால் மகா அசுத்த மாயை நீங்கில் அருட்சத்தி செய்கையான நகரச் செய்கையொடுங்கும். பிறகு யகர, சீவன் வகர அருளால் சிவத்தையடையுமெனவும் நகரமாகிய சேரியை நஞ்சென வெறுத்து மகரமாகிய மயலெல்லாம் வேரறக்களைந்து வகரமாகிய வனத்தினிலிருந்திளைப்பாறி சிகரமாகிய சிவசக்தியடைந்தனன் சீவனென்பது அனுபவிகள் வாக்கியம். ஆதலால் நகரமகாரத்தை நீக்கி மற்ற மூன்று அட்சரங்களை இருதலை மாணிக்கமாகத் தியானிக்கின்றனர். இவை ஆகமவிதிப்படி கூறியவாறிருக்கின்றன.

பிரணவ பஞ்சாசர விவரம்:

கணபதி நாசி சுவாச முன்னிலையில் 4 வித பேதங்களையறியும். அப்போதங்களாவது இடைகலை பிங்கலையும் சுழுமுனையில் கூடில் நீங்கும் ஓங்கார சித்தி பிரமன் நாவு பிருதிவியில் 6 விதச் சுவைகளறியும் அறிவது நீங்கில் நகாரம் சித்தி நேந்திரம் சலம் அப்பு 10 வித பேதங்களாகிய பஞ்சவர்ணம் உயரம் குள்ளம் சிறுத்தல் பெருத்தலாமென அறிவது நீங்கில் மகார சித்தியாகும்.

சர்மம்!
தீ தேயு இவை முன்னிலையில் சூடு குளிர்ச்சி மிருது கடினமென அறியும் பரிச பேதம் 12ம் அறிவது நீங்கில் சிகர சித்தியாகும்.

செவி வாயு ஆகாய அமிசம்:
16 வித அக்ஷர பேதங்களை அறிவதி நீங்கில் வகரம் சித்தியாகும்.

புருவமத்தி ஆகாயம்:
அவ்விடம் விருப்பம் வெறுப்புமறியும் இரண்டு தன்மை நீங்கில் யகார மனம் சித்தியாகும். இவ்வகை சத்த பரிச ரூப ரச கந்தங்களறியும் மனம் அசைவற அம்பலமாகிய உச்சிக் குழியில் சங்கல்ப மிலாததாகிய அறிவு சுயம்பிரகாசமாய் விளங்குமெனத் தவத்தினர் செப்பியிருக்கின்றனர். இதை 51 அட்சரமென்று சொல்வர்.

ஆகர்ஷ்ணம்,தம்பனம்-நகரம் மோகனம்-மகரம் மாரணம்-சிகரம் வித்வேஷ்ணம்,உச்சாடனம்-வகரம்- வசியம்-யகரம்

நகரம் ஆண் என்றும் அதற்கு மூன்றாவது சிகரம் பெண்ணென்றும் ஆண் எழுத்தைச் சுற்றிப் பெண்ணெழுத்து இருக்க அவ்வகையாக ஒவ்வோர் எழுத்திற்கும் மூன்றாவது எழுத்துப் பெண்ணெழுதாகச் சக்கரங்களிலடைகின்றன.

பிரணவமென்னும் ஓங்காரத்தில் அகார சோதி பிந்து உதித்து, இதில் நகரமகரமுதித்து உகாரவொலியால் நாதமுதித்து இதில் சிகர வகரமுதித்து மகரத்தில் யகர ஆன்மா தோன்றியதெனவும், நகரம் திரை: மகரம் மால், சிகரம் பதி, வகரம் திரை யகரம் சீவாக்ஷரமாய் விளங்கும். ஏகாக்ஷரம் திரியாக்ஷரம் பஞ்சாக்ஷரம், சடாக்ஷரம், அஷ்டக்ஷரமாகச் சிந்திப்பதெல்லாம் பகிர்முக நோக்குடையதாயிருக்கின்றது. அக்ஷரமானது அச்சரமாம் எனக் கூறுவ்தில் சரம் பார்ப்போன் பரம் பார்க்கக்க் கூடும்.

அகாரமான நேரத்தில் மனோன்மணியென்னும் மனமானது அறிவு சதாசிவமாயிருக்கும். அறிவு என்பதில் அகாரம் சூரிய கலையாகவும் உகாரம் சந்திர கலையாகவும் றிகாரம் சுழுமுனையாகவுமிருக்கின்றன. இம்மூன்றுங் கூடியது அறிவு.. இவ்வகையுடையவர் அறிவுடையவர். சிங்கார இடைபிங்கலை சங்காரவழி போகாமல் பொங்க நிறுத்தி எங்கள் குருராயன் பாதம் போற்றும்படி முத்துத் தாண்டவ சுவாமிகள் செப்பினர்.

இச்சாப் பிரார்த்துவமாக அனுபவித்து வருவதில் இவனது செயலால் யாதொரு விவகாரத்தையும் நடத்தாமல் யாவும் கடவுள் செயலாக முடிய வேண்டுமென இச்சயமுடையவரானால் அவர் அடிமை திரமாக ஆட்கொள்ளக்கூடும்.

எதிரிட்டிற்கும் மரணத்திற்குள் கொடுமையான காலனுக்கு ஏவலாளிகளாகிய 4448 வியாதிக்கும் மரணத்திற்கும் மிகப் பயந்தவர்கள் உள்ளம் அதி தீவிரமாய் நன் முயற்சியில் இருப்பார்கள்.

சந்திர கலையில்

பிருதிவி பூதம் நடக்கும்போது சிவாலயம், வீடு கட்டல், குடிபுகுதல், மரம் வைத்தல், சாந்தி கழித்தல், அப்புக்கு குழிஎடுத்தல், சோலை வைத்தல், விவாகம் செய்தல், உழவு விதை விதைத்தல்
தேயு பிணி தீர்த்தல்
வாயுகுதிரை, தேர், கப்பல் ஏறுதல்
ஆகாயம் மந்திரம் சாதித்தல்
பூரிய பிரிவு தெரியாவிட்டால் இடநாசிப்பக்கம் கலை சந்திரனாகையால் அப்படி நடக்கும்போது வஸ்திர ஆபரணம், பூணல் தூதனுப்பல், அடிமை கொள்ளல் விவாகம் செய்தல் கிணறு வெட்டல் குடிபுகுதல், அரசைக் காணல், சாந்தி தெய்வப் பிரதிஷ்டை செய்தல், சுரம் தீர்த்தல் சமாதானம் செய்தல், தனம் வைத்தல்

சூரிய கலையில்

வலநாசியில் சூரியகலையில் உபதேசம் பெறல் வணங்கல், யுத்தம், வியாபாரம், சூது வழக்குரைத்தல், சவாரி செய்தல், சங்கீதம் பாடல், நித்திரை செய்தல் பிசாசு ஓட்டல், போஜனம் செய்தல் ஒளடதம் புசித்தல் ஸ்நானம் செய்தல் உத்தமம்.

சத்தியாய் சிவமாய் தண்டவமாடும் சரீரத்தின் துடி பயன்!

அடர்ந்து கை துடிக்கின் ஒரு வருடம், கால் 6 மாதம், நெற்றி 3 மாதம், கன்னம் 10 நாள், காது கேளாவிடில் 7 நாள், பார்வை தெரியாவிடில் 5 நாள், வாசனை தெரியாவிடில் 3 நாள், நாக்குழ்றில் 2 நாள், மரணமெனக் கொளக.

வாயில் சலம் வைத்து நிழலில் இருந்து இரவியில் உமிழ அதில் இந்திர தனுசு பஞ்சவர்ணமாகத் தோன்றினால் ஒரு வருடம் வரை மராணமில்லை.. முறிந்திருக்கில் அந்த ஆண்டில் மரணம். நிறம் மாறிய பொண்ணுருவம் தோன்றில் 6 மாதத்தில் மரணமாவார்.

அமாவாசை இரவியிலாகிலும் பருவ சந்திரனிலாகிலும் உருக்கிய நெய்யைக் கிண்ணத்திலிட்டுப் பூமியில் வைத்து முன் கண்ட இரவி மதியில் ஒன்றைப் பார்க்க வெண்மை நிறமாகக் காணில் பிராண பயமில்லை.. செம்மை- வாழ்வு. பொன்மை-கேடு, பசுமை-–நோய், கருமை-சாவு, தென்புறம் வட்டம் குறைந்து காணில் ஒரு வருடம், மேற்புறம் குறைந்தால் 6 மாதம், வடபுறம் குறைந்தால்- 3 மாதம், நடுவே தொள்ளையாயிருக்கில் 10 நாளில் மரணமாம்.

இரவி நிழல் அல்லது மதி பிரகாசத்தில் தனது நிழல் பூமியில் தனது உருவ அளவாயிருக்கும்போது அந்த நிழலை தனது நேத்திரம் இமையாமல் பார்த்துக் களங்கமில்லா ஆகாயத்தைப் பார்க்கில் தனது உருவம் பெரியதாய் தோன்றும். அது பொன்னிறமாகில் செல்வம், வெண்மை நிறமாகில் ஆயுள் வளரும், செம்மை ஆயுள் குறையாம், கருமை நலி. அவ்வுருவில் கைகால் தோன்றாவாகில் 6 மாதத்தில் மரணம். தலை தோன்றாமலிருந்தால் 3 மாதத்தில் மரணம். இந்தச் சாயை வடிவமானது தனது மனமும் நேத்திரமும் ஒற்றுமையாய் தோற்றமாயிற்று சாயை மறையாதோ! தன்னுடம்பு தன் வெளிக்குள் ஓய அகத்தினிடை ஓடாதோ! என்று கூறும்படி எண்ணும் கருத்தும் ஒற்றுமை செய்த அகநோக்குடையவர்கள் இருந்தபடி சராசரங்களின் இயல்பையும் மூன்று கால வர்த்தமானங்களையும் தெரிந்து கொள்ளக் கூடும். சாயை தீப பிரகாசமிருப்பது தெரிந்த விசயம். அஃது யாரென்று கவனிப்பதில்லை. அஃது எங்கும் நிறைந்தது என்பது தெரியாமையால் சிலருக்கு சங்கை தரும்.

ஒரு வீட்டில் நால்வராகக்கூடி அந்த வீட்டில் ஒரு பொருளையானாலும் ஒரு கட்டடத்தையானாலும் நால்வரும் நினைத்துக் கொண்டு தாம் நினைத்த சங்கதியறியாத ஒருவன் நேத்திரத்தைத் துணியால் மூடி அவன் தோள்மீது நினைத்த நால்வர் கையையும் வைத்து அவன் இஷ்டப்படி போகும்படி செய்தால் அவ்விடம் விட்டு நால்வர் குறித்த இடமே போய் நிற்பான். குறித்ததைத் தன் கையால் தொடுவான்.

இதன்றியும் ஒருவனை நமது சுவாசம் உள் சொல்லும்போது நினைத்தால் அதே சமயம் அவன் நம்மை நினைக்கின்றான்.

எதிரிலிருக்கும் ஒருவனுக்கு நடக்கும் கலையையும் அதிற் பூதியமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது கலையைப் பார்த்தால் அப்போது கலையும் பூதியமும் நின்று எதிரிக்கு நடக்கும் கலையும் பூதியமும் நடந்து தெரிவித்து உடனே முன் நமக்கு நடந்ததுபோல் நடக்கும்.

கடவுள் எங்கும் வியாபகாராயிருப்பதற்கு இன்னுமனேக திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன். அனேக சமய வதிகள் பேதா பேதங்களாய் எங்கள் சாமி உயர்ந்தவர் உங்கள் சாமி தாழ்ந்தவர் என்று தர்கிப்பது சரியன்று. பார்க்கும்போது பூமி, ஆகாயம், சந்திரர், சூரியர், இடி, மின்னல், மேகமிவைகளும் மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும் பொதுவாயிருக்க நூல் விசாரனையும் நல்லோர் பழக்கமும் அவர்களால் பெற்று அடைய வேண்டிய பயனனுமடையச் சக்தியில்லாதவர் கூறும் வீண் வாதமாய் இருக்கின்றன. எம்மதச் சார்பிலுதித்தவராயிருந்தாலும் எதிரிட்டிருக்கும் மரண பயத்திற்கு அஞ்சி திகிலடைந்து உலகில் சித்து இன்னதென்றுணர்ந்து சதா எதை நாடி நிற்க வேண்டுமோ அதில் நின்று முடிவு பெறுவதே மானிடமாகும்.

சிவம், விஷ்ணு, அல்லா, பராபரன் என்பன அவரவர்கள் சார்பின்படி கடவுள் நாமம். அனேகமாய் புகன்றாலும் அப்படிப் புகலும் வஸ்து யாது! அதை இன்னதென்றுணர்ந்தால் எம்மதச் சார்பிருந்தாலும் கடவுள் ஒன்று எனத்தெளிந்த பேரறிவாளரென யாவராலும் புகழப்படுவர்.

மாயையின் கூறாகிய அசத்து, சடம், துக்கம், அனித்தியம் கண்டமிவைகளை நீக்கி சிவத்தின் கூறாகிய சத்து சித்து ஆனந்தம் நித்தியம் பூரணமாகிய இவ்வைந்தின் தாத்பரியங்களையுணர்ந்தவர் இந்த நூலை படித்த அறிஞாவார்.

சரியை கிரியை யோக ஞானமாகிய நான்கு பக்குவர்களும் மோக்ஷமகிய முத்தியடைய வேண்டும் என்பதே கருத்து. அதிலும் சரியை கிரியையுடையவர் இப்பிறவியாகிலும் அல்லது மறு பிறவி மானிடமாகத் தோன்றியாகிலும் அதிக இகபோக சுகங்களையடைய வேணுமென்கிற ஆவல் பூண்டவர்களாகவும் இருக்கின்றனர். எவரெவர் உண்மையாக எந்தவித பாவனையும் கோரிக்கையுமாயிருந்து வருகின்றார்களோ அவற்றிலே ஆத்துமா தேகத்தை விட்டு நீங்கும்போது எண்ணம் உதிக்குமென்று கோரிக்கையின்படி செனனமும் இச்சகம் பெற்று அனுபவிக்க வேண்டுமென்று ஆகமநூல் கூறுகின்றன.

ஞானி இவர்கள் முடிவு பெறும்போது 96 தத்துவங்களும் ஒன்றிலொன்று ஐக்கியமாய் அவைகளுக்கு ஆதாரமாயும் அணுவுக்கணுவாயுமிருந்ந்த ஆன்மா தேகத்தை விட்டு மகாகாயத்தில் இலயமாவதும் அல்லது அத்தேகத்தில் தானே ஐக்கியமாவதும் நமது சிற்றறிவிற்கு விளங்காது அல்லது வினைகீடாய் வேறு பிறவி எடுப்பதற்கு எவ்வகையாக ஒரு புருடன் சுக்கிலத்திலணுகினவன் ஆத்மா சீவனென்பது போய்ச் சம்பந்தமுற்றதும். உண்மை இவ்வாறென அறிந்தால் மாத்திரம் நரக மோக்ஷம் உண்மை என்பதும் அனேக பிறவிகளெடுத்து அவற்றின் புண்ணிய பலத்தால் மானிடம் பெறுவதும் கைலாய வைகுந்த பரமபதமிடமும் எமலோக நரகமிடமும் கால தூதரும் நன்றாக விளங்கும். ஆகையால் கால தாமதம் செய்து உலக் வியாபாரப் பெருந்திரை இலாழாமல் மனத்தை ஒருவாறாக நிறுத்தி நூல் விசாரணையும் சாதுக்கள் சங்கமும் பெற்று நீரதிசயானந்தப் பேரானந்த சுகம்பெற நன்னிலை பெறுங்கால் மேற்கொண்ட சங்கைகள் நிவர்த்தியாகும்.

சுக்கில சுரோணித சம்பந்த காலம் அமைந்தபடி செனனமெடுத்தும் மரணமாகும் வரையில் அனுபவிக்க வேண்டியதிருக்க நாம் மத்தியில் என்ன முயற்சி செய்தாலும் யாதும் பயன்படாது என்று சிலர் புகல்வர். அவ்வகை கருதுவது நமது அக்கியானம் அனுபவிக்க வேண்டுவதை அனுபவிக்க வேண்டுவதானாலும் கடவுள் சிந்தை சதா உடையவர்களாகில் பர இச்சா பிராரத்துவமாகச் சகல கபங்களையும் கடவுளளித்து ரக்ஷிப்பர்.

வலக்கையை முகத்து நாசிக்கு நேராக நிறுத்திக் கொண்டு கண்ணினாலும் கைந்நாடி துடிக்குமிடத்தில் இமை ஆடாமல் பார்க்க கைச் சிறு துரும்பு கனமாய்த் தோன்றும். அப்படித் தோன்றுமாகில் 6 மாதம் வரை மரணமில்லை. அல்லது கை பிரமாணகவே தோன்றுமாகில் சீக்கிரம் மரணாமென்க..

முன் கண்ட பார்வையாகப் பார்த்துக் கை சிறியதாகத் தோன்றிப் பின்பு இருளாகத் தோன்றும். அவையும் நீங்கித் தீபபிரகாசமாக வெளிச்சமுண்டாகும். அப்படி தோன்றிய பிறகு அப்படிச் செய்யும் அப்பியாசிகள் அந்தப் பிரகாசத்தில் அனேக அற்புதங்களைக் காணுவதுண்டு. பிந்தச் சாதகமாகச் சிலகாலஞ் செய்தவர்களுக்கு விளங்கும்

நிழலுள்ள தாழ்வாரத்தில் வெளியாயிருக்குமிடத்தில் உடகார்ந்து கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியை வலக்கையெலெடுத்து தனது முகத்தின் வல் நேத்திரக் கருமணியில் விளங்கும் வடிவைக் கண்னிமையாடாமலும் மனம் வேறு வழி செல்லாமலும் பார்த்திருந்த கண்ணில் இருந்து சலம் வடியும். அதற்கும் இமையாமல் பார்க்க இருளாகத் தோன்றும். அந்த இருளை அசைவறப் பார்த்திருக்க வெளி தோன்றும். அந்த வெளியினிடத்திலும் அனேக அற்புதங்களை அனுபவிகள் காண்பார்கள்.
உலகில் அஞ்ஞானமென்னும் கறுப்பு நிறமுள்ள மையைக் கையில் பொட்டுப்போல வைத்து தீப முன்னிலையில் கண்ணிமையாடாமல் மையைப் பார்த்து அதில் அனேக தேவதைகளைக் கண்டதாயும் தாங்கள் கோரிய இடம் பொருள் இவைகள் தெரிந்ததாயும் சொல்ல நாம் கேட்டிருகின்றோம். சத்த பரிச ரூப ரச கந்தமாகிய ஐந்தும் கூடியது அஞ்ஞனம். இதைப் பார்க்குமிடத்துக் கண்ணாரமுதமாய் விளக்கொளியாய் நின்றானை என்று கூறிய வாக்கியம் உண்மையாக இருக்கின்றது. மகான்கள் உரைத்த லக்ஷியங்களைப் பரிபாக பக்குவப்படிக்குச் சாதித்து அவைகளினால் முடிவு பெறும் பயனைத் தேகம் பிணமென்று புகலாமுன் அனுபவமுதிர்ந்து நிரதிசயானந்த நிர்விகல்பமாய் ஜீவன் முக்தனாக மனம் வாக்குக் காயத்தால் மகான்களைப் போற்றுவதே நமது கருத்தாகும்.

#####

Read 1351 times Last modified on சனிக்கிழமை, 06 June 2020 10:43
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

21594654
All
21594654
Your IP: 172.70.35.67
2021-06-14 20:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg