Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:32

ஆதித்த நிலை –அண்டாதித்தன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

ஆதித்த நிலை –அண்டாதித்தன்!

1975. கதிரவன் முதலான ஒளி பொருந்திய தேவர்கள் வெண்ணிற மேகம் சூழ்ந்த மேருமலையை வலமாக வருவதற்குக் காரணம் ஒளியுருவான எம் ஈசனின் இருதிருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே ஆகும். மலை வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவம் ஆகும்.

1976. கதிரவனே திருமால் ஆவான். எல்லா உயிர்களுக்கும் ஆதார்மாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவான். பகமை நீங்கி ஏழ் உலகங்களும் தழைக்கச் செய்யும் கதிரவனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருள ஆவான்.

1977. கதிரவனிடம் அன்பு கொண்டு அவனது ஆயிரம் பெயர்களையும் சொல்லி வணங்கின் சிவனின் அண்டகோசத்தில் விளங்கும் பேரொளியாய் நிற்பன். கதிரவனைக் குறித்து அந்தணர் துதிப்பதும் தேவர் தோத்திரம் கூறுவதும் சிவபெருமானின் அன்பைப் பெற்று ஒளிபெறுவதற்கே ஆகும்.

1978. ஆன்மாவின் அண்ட கோசத்தில் விளங்கும் கதிரவனே தத்துவத் தோற்றத்துக்குக் காரணம் ஆனவன். அந்தக் கதிரவனே ஆன்மாவின் சத்தியாகும் அதுவே சிவம் ஆகும் அதுவே குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகும்.

1979. மூலாதரச் சக்கரம் சுவாதிட்டானச் சக்கரம் ஆகியவற்றுடன் ஒற்றுமைப்பட்ட தூய்மையான அகரக்கலை விளங்கும் மணிபூரகச் சக்கரத்துக்கு மேல் பதினாறு இதழ்களையுடைய துன்பம் அளிக்கும் விசுத்திச் சக்கரத்தின் சந்தேகம் இல்லாது விளங்குபவன் கதிரவன்.

1980. கதிரவன் தன்னுள் விளங்கும் முக்கோண சக்கரமான மூலாதரத்தில் நின்று நல்ல கதிரவனாய் ஒளிசெய்து கொண்டிருப்பான். அவன் நான்கு ஆதாரங்களையும் கடந்து துன்பத்தை அளிக்கும் கிணற்றைப் போன்ற விசுத்திச் சக்கரத்தை எட்டினால் மூலாதாரத்தில் ஒளி செய்யும் பேரொளி மேல் எழப் பதினாறு கலைகளையுடைய திங்கள் மண்டலம் அமையும்.

1981. கதிரவனுடன் உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்னும் வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன். இப்படி அண்ட கோசத்தில் சத்தி நிலைபெற்று உணர்த்தும் வேதம் கூறும் அனுபவப் பொருளான திங்கள் விளங்கிக் கொள்வீர்.

1982. சுவாதிட்டானதினின்று மேலே வருவது கதிரவன் வருகின்ற வழியாகும். அது யோகியர் அல்லாத மற்றவரால் அறிய இயலாத அரிய பொருளாகும். அங்ஙனம் எவராலும் காணப்படாத கதிரவன் நீருக்குரிய மணிப்பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.

1983. கதிரவன் மண்ணீரலீருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் போல் அவ்விடத்தினின்று வானக் கூறான ஆஞ்ஞையையும் பிளந்து உடலுக்கு வெளியே பேரொளியாய் விளங்கி நிற்பான். ஆனந்தத்தால் துதிக்கும் உரிமைக்குரியவனாய் நின்றான்.

1984. நிலத்தை ப்பிளந்து கொண்டு கதிரவன் வரும் வழியை மிகவும் கீழ்பட்ட நூலைக் கற்ற உலகியல் அறிவுடையவர் யரும் அறியார். ஆனால் மேரு மலையைக் கதிரவன் சுற்றி வருவதாய்க் கூறுவர். ஆனால் மேரு மலையைத் தலையே என்று அறிந்தவர் உடலில் உள்ள கதிரவன் சுற்றி வரும் முறையை அறிவர்.

#####

Read 1749 times
Login to post comments