Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:16

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

#####

அவத்தை பேதம்- கீழாலவத்தை!

2142 இருபத்தைந்து கருவிகளுடன் சிவன் புருவ நடுவில் உள்ளபோது விழிப்பு நிலை ஆகும். பழகிய பதினான்கு கருவிகளுடன் சிவன் கழுத்தில் தங்கும்போது கனவு நிலையை அடையும். அழிவில்லாத புருடன் இதயத்தைப் பற்றியுள்ள போது உறக்கம் ஆகும். அழியாதவனான ஆன்மா உந்தியில் பொருந்தும்போது துரியம் ஆகும்.

2143. சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவதத்துவம் ஐந்துமாக அவற்றை அடுத்துக் கூறப்படும் கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி ஐவம் என்ற இரண்டும் துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாய் தொழிற்படும். இப்படி சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2144. ஞானேந்திரியம், கன்மேந்திரியம் பத்தும் அவற்றின் விடயங்களான சத்தாதி வசனமாதி பத்தும் மறை பொருளாக உள்ள் வாயுக்கள் பத்தும் அந்தக்காரணங்கள் நான்கும் இவற்றுடன் ஆன்மாவும் கூட முப்பத்தைந்தும் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிராவத்தையில் உள்ளனவாகும்.

2145. மண்ணின் நிறம் பசும் பொன் நிறம் நீர் வெண்ணிறம் உடையது தீ செந்நிறம் வாய்ந்தது. மேகம் போன்ற் கரிய நிறம் கொண்டது காற்று வானம் புகை நிறம் பொருந்தியது இவ்வகைப்பட்ட நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும்.

2146. ஐந்து பூதங்களும் ஐந்து பொறிகளும் உயிரைக் குற்றம்படச் செய்த புறக்கருவிகள் இவற்றுடன் சொல்லப்படும் மலம் காரணமாக விளையும் குணம் முதலாகக் கொண்ட சாக்கிராவத்தைக்குரிய கருவிகள் தொண்ணூற்றாறாகும்.

2147. சாக்கிரவத்துக்குரிய இடத்தைக் கூறுமிடத்து ஆன்ம தத்துவமான இருபத்தைந்து யானைகளும் வசனாதியாதியான காலாட்படையும் சத்தாதியான ஐந்து குதிரைகளும் புருடனும் ஆக முப்பத்தாறும் புருவ நடுவுள் பொருந்தும். வைகரியாதி வாக்குகளும் போய் அடைய நெடிய வாயில்க?ள் ஒன்பதாம்.

2148. பிராணவமய கோசமும் ம்னோமய கோசமும் அன்னமய கோசத்தைத் தழுவி நின்ற உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார் உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதார் ஆவார். அவர்கள் மடத்தின் புகுந்த நாய் அலைவது போல் மயங்குவர்.

2149. அறிவிலிகள் உடலை நெடுநாள் வைத்திருக்க அறிய மட்டார்கள். ஆனால் உள்முகமும் வெளி முகமும் ஆகச் சென்று கொண்டிருக்கும் பிராண அபானனது இயக்கங்களை மாற்றி உள்மூகம் ஆக்கி விந்து வெற்றி பெற்றுச் சுழுமுனை வழியாகச் சிவனை அடையும் வழியை உணர்ந்து ஒளி வடிவாய்ப் பெற்ற உடல் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

2150. கொப்பூழில் அடங்கியிருக்கும் அகரக்கலை சிறிது சிறிதாகப் பதினான்காவதான அநாசிருதையாக மாறும் உபாயத்தை என்னுள் சிவன் விளங்கி எனக்கு கூறியருளினான். அங்ஙனம் அளிக்கும் கலை ஞானத்தால் பொதுவான அறுபது தத்துவங்களையும் ஒளியில்லாமல் ஒன்றிய உள்ளத்தில் ஒளித்து வைத்தான்.

2151. மண் தத்துவமான சுவதிட்டான சக்கரத்துக்கு அருகில் நீரை முகமாகக் கொண்ட மணிப்பூரகம் உள்ளது. அந்த சுவாதிட்டானத்துக்கு அருகில் பொன் போன்ற மூலாக்கினியும் உள்ளது. இவ்விடத்துள்ள மூல வாயு மேலே போய் வானத்தைப் பொருத்தும். அப்போது மனம் புத்தி அகங்காரம் என்பனவற்றை நினைத்துக் கடந்தால் பூத வெற்றி உண்டாகும்.

2152. முதல் பூதமான வானுக்கு ஓசை என்ற ஒருமகன் அதினின்று உருக்கொண்ட காற்றுக்கு ஓசையும் ஊறுமான இரு மக்கள். காற்றினின்று வந்த தீயினுக்கு ஓசை, ஊறு, உருவம் என்ற மூன்று பிள்ளைகள். பின்பு நீர் என்ற பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள். கன்னியான பூமகளுக்கு ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐவர் மக்கள். இத்தகைய பிள்ளைகள் சிவத்துக்கும் சத்திக்கும் முதலில் இல்லை. அப்பெருமாட்டியே படைப்பைக் கருதியபோது ஐந்து பிரிவாய் பிரிந்து அவற்றின் வேறாயும் அவற்றின் ஊடேயும் நின்றாள்.

2153. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்?ற அந்தக்காரணம் நான்கும் ஒரு சேரக் கண்டபின்னர் பழைய மேலான விழிப்பு நிலையில் உலகமே தனாய் ஆன்மா நிற்கும்.

2154. அப்படி நின்றவன் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் பத்தையும் விட்டு ஒருமையுடைய அந்தக் கரணங்கள் நான்குடன் புருவ நடுவில் இந்தவுடலால் அனுபவித்த வாசனா ரூபமானவற்றை ஒளி மயமாகக் கழுத்துக்கு மேல் கனவாகக் கண்டான்.

2155. ஆன்மா முன் சொல்லப்பட்ட கண்ட தானத்தை விட்டுச் சித்தம் ஒன்றுடன் தனியே இதயத்தில் புகுந்த அகங்காரமும் தன் வலிமை குன்றிப் புத்தி தத்துவமும் கெட்டு ஒன்றையும் அறிய மாட்டாது மயக்கம் அடைந்து உலகத்தை அறியாத வியந்த நிலையில் உடல் தன்வசம் அற்ற நிலையில் கெடுதல் சுழுத்தியாகும்.

2156. உறக்கத்தின் நிலைக்களமான நெஞ்சத்தில் பிராணனும் சித்தமும் புருடனும் ஆகிய மூன்றும் தொழிற்படும். சித்தம் பிராணன் ஆகியவற்றால் உண்டான அறிவு நீங்க உந்திக் கமலத்தின் உள்ளே இருந்து பெருமையுடைய மூலப் பிரகிருதியுடன் புருடன் பொருந்தி இருந்தான்.

2157. கொப்பூழ்த் தாமரையை விட்டுக் கடந்து மூலாதாத்துத் துரியாதீத நிலையில் வான் மண்டல்த்துக்குப் போய் பூமியை விட்டு நாதமயமான சங்கற்ப வாசனையும் கடந்து உடலின் காரியமான அவத்தையை விட்டு ஊமனான ஆன்மா நின்றான்.

2158. பேச இயலாத எழுத்தான மகாரத்துடன் பேசும் எழுத்துக்களான அகார உகாரங்கள் பொருந்தில் ஆன்மா அதன் உறுப்புக்கள் அடங்குபவன் போல் ஐம்பொறிகளும் தொழிற்படாது அடங்கி விடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளி பெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெடும். அதனை நாம் அறியமாட்டோம்.

2159. பிரணவ யோகிகளின் துரியம் நின்மலச் சாக்கிரம் ஆகும். அங்குள்ள நீல் ஒளியில் வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரிய கன்மேந்திரிய அந்தக் காரணங்கள் செயற்படாமல் அடங்கி விடும். வேகமுடைய மூலவாயு வேகமாய் ஓடி வான் கூற்றை அடையும். இனித் துரியம் கடந்த துரியாதீத நிலை பற்றிக் கூற இயலாது.

2160 .எல்லா உயிர்களும் பக்குவம் அடையும் வரை அவற்றிடம் மறாமல் இருக்கும் ஐம்மலங்கள் சாக்கிரம் முதலிய ஐந்து நிலையை அடையும். உயிரின் வேறான மாயையால் விளைந்த உடல் கருவி முதலிய வற்றுக்கு முடிவு இல்லை. எல்லா உயிர்களும் பிறப்பு இறப்புகளில் அகப்பட்டு முடிவில்லாத வலிய வினையை துன்பம் அடைந்த வண்ணமே இருக்கும்.

2161. வினைப் பயனை நுகர்விக்கும் மாயையானது தன்னை வருத்தாதபடி சிவத்தின் அருளைப் பெற்றதே வீடுபேறாகும் வீடுபேறு அடையாது உயிர் கருவிலேயே திருவுடையவராய் பிறந்து எண்ணத்தக்க ஞானத்தினால் ஏற்படும் ஞானம்.

2162. அநாதி கேவல நிலையில் ஆணவம் சிறிதே கெட அதனால் கருவிகளுடன் கூடிய சகல நிலையில் உணர்வோன் அரிய செயல்களில் பொருந்திய நிலையான கேவல நிலைக்கு இப்படிச் சென்று மேன்மையற்ற ஐந்து அவத்தையை அடைவர்.

2163. பாடம் கற்பிக்கும்போது உறங்கும் மாணவரை அசிரியர் ஒளியுடைய பிரம்பால் தட்டி நழுப்புவர். அதை போன்று நேயப் பொருளான சிவனும் அநாதியாகவே ஆணவமலத் தொடர்புடையவரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாகி எழுப்பிவான்.

2164. மேகத்துடன் பொருதிய வான் கங்கை குடத்தில் உள்ள நீரே ஆகும். என்பது அறிவற்றவன் மிக்க அறிவுடையவன்போல் சொல்லும் கூற்று. குறைவு இல்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இந்த உடலுக்குத் தலைவனான ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும்வரை ஐந்துஅவத்தைக்கு உட்படுக்கொண்டிருக்கும்.

2165. நிலத் தத்துவத்தை இடமாககொண்ட சீவன் மூலவாயுவுடன் பொருந்தி அழகான ஊர்த்துவ சகசிரதளத்தை அடைந்த போது அதற்குக் கீழ் நிலையில் உள்ள பிரமன் முதலிய ஐவரும் அவரைச் சார்ந்தவரும் நாத தத்துவத்துடன் பொருந்தி உறக்கத்தை அடைந்தனர்.

2166. புறக் கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சத்தாவத்தையில் புலப்படும் வண்ணம் மலக் குற்றத்துக்குரிய காரணத்தை நினைத்து நின்மல சாக்கிரத்தில் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் காட்சியில் கண்டு தமது முகத்துக்கு முன் விளங்கும் சிவத்துடன் பிரியாமல் நிறபதே அழியாத நிலையாகும்.

#####

Read 1866 times
Login to post comments