Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:11

அஷ்டதள கமல முக்குண அவத்தை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

அஷ்டதள கமல முக்குண அவத்தை!

2527. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளம் ஆன எட்டு இதழ் தாமரையில் கதிரவன், தோன்றும் கிழக்கு திசையில் இந்திரன் தென் கிழக்கு மூலையில் அக்கினி, தென் திசையில் இயமன், தென் மேற்குத் திசையில் துதிக்கின்ற நிருதி மேற்குத்திக்கில் வருணன் வடமேற்குத் திக்கில் வாயு, வடக்குத் திக்கில் குபேரன் வடகிழக்கு திக்கில் ஈசானன் ஆகியவர் எட்டுத் திக்கிலும் காவல் செய்யும்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

2528. தலையைச் சூழ்ந்துள்ள சகசிரதளமான தாமரைஎட்டு இதழ்கஆளி உடையது பெருமை மிக்க இந்த மாய உடலினுள் உள்ளே சிறிய வீணாத் தண்டின் நடுவில் உள்ல சித்திரணி என்ற பெயர் உடைய சுழுமுனை நாடியில் சேர்ந்துள்ள பேரொளியை நில்னைத்து உய்யுமாறு மேல் எழுவீராக,

2529. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளமான தாமரையில் திங்கள் கதிரவன் அக்கினியாகிய கலைகள் மூன்று உள்ளன. அந்த மூன்றிலும் பேரொளியாய்ப் பாய்ந்து சகசிரதளத்தை விரியச் செய்து சுடர் ஒளியைப் பெருக்கி நின்றான். இறைவன். அங்ஙனம் எட்டு இதழ்களும் விரிவடைந்து வளர்ச்சி பெறத் திங்கள் கதிரவன் கலைகள் ஆகியவற்றில் பொருந்திக் காணும்போது சகசிரதளம் விரிவு அடைந்து மலர்வதில் உண்மைபோல் இருந்த உடல் கனவில் கண்டாற்போன்று இல்லையாகி விடும்.

2530. இந்த உடலில் ஆறு ஆதாரங்களின் வழியாகப் பாயும் உணர்வு என்னும் நீர் போய் அடையும் பிரமரந்திரம் என்ற குளம் ஒன்று உண்டு. இங்ஙனம் உள்ள ஆறு ஆதாரங்களையும் ஒருமுகப் படுத்துவதில் சிவகதி உள்ளது. இது மிகவும் நுண்மையான ஒளி நிலையாகும். இவற்றை ஒன்று படுத்துவதில் கூறப்பெற்ற குண்டலினியும் உள்ளத்தோடு அவற்றினும் வேறாகச் சிவமும் அங்கே உள்ளது.

2531. எட்டுத் திக்குகளும் எட்டுத் திக்குப் பாலகர்களும் அத்தேவதைகளின் ஊர்திகளும் எட்டு மூர்த்தமாய் நின்றவன் சிவன். அப்பொருமானைக் கன்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து மனம் புத்தியுடன் பன்னிரண்டும் பொருந்தி நிற்கில் கவிழ்ந்துல்ள எட்டு இதழ்களையுடைய தாமரை உள்ளிருந்து வெளி முகமாய் மலர்ந்து திகழ்மும்.

2532. எட்டு இதழ்களையுடைய தாமரையில் கிழக்கு முதல் வடக்கு வரையுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகள். பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது. நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை முடிவு செய்யும் பரம் அபரமான சதாசிவம் இருக்கின்றது. மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவம் அற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருக்கும் சிறப்பான நிலையாகும்.

2533. உயிர்களின் நன்மைக்காகப் பல ஊழிகளைச் செய்யும் குனம் உடையவனே சிவக்கதிரவனும் இறைவனும் ஆவான். நன்மையைத்தரும் ஊழிகளான நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளில் செய்யும் சங்காரம் சீவனின் அண்டகோசத்தின் எல்லைக்குள் செய்யும் ஊழியாகும். அந்த உழியுள்ள உழியைக் கடந்த நிலையுள்ளும் இருப்பவன் சிவனே ஆவான்.

2534. பந்த பாசங்களால் சுற்றப்பட்ட உலகத்தில் எட்டுப் பெரிய வடிவாய்த் திகழும் சிவனை எட்டுத் திக்குகளிலும் திரியும் திக்கு யானைகளுடன் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குவதற்கு இடமான வெளியும் பரமாகாயத்தில் பற்றுக் கொண்டனவாகும்.

2535. ஒளி பெருகும் ஊற்றையுடைய தலையான மலையின் மீது ஆறு இல்லாது நிரம்பும். அரிய பிரம்மரந்திரம் என்ற குளம் ஒன்று இருக்கின்றது. அங்குச் சேறு இல்லாது அருள் வெளியில் ஆதாரங்கள் என்னும் கொடியில் மலர்ந்த சகசிரதளமான தாமரை இல்லாது ஒளிக்கற்றைகளை தலையில் சூடிய பெருமான் அணிந்து கொள்ள மாட்டான்.

2536. மனம் மொழி மெய்யாகிய முக்கரணங்களின் வயப்பட்டு நின்ற காலத்து நின்றாலும் இருந்தாலும் பலவிதமாய் உலக நிலையைப் பேசினாலும் ஐம்புலன்களை இருத்தி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுவர். நடக்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் இறையுணர்வு உள்ளதால் சிவத்திருவை உடையவர் ஆவர்.

$$$$$

Read 1621 times
Login to post comments