Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:19

விசுவக் கிராசம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

விசுவக் கிராசம்!

2587. வானில் தோன்றும் நிழல் வடிவம் வானிலேயே மறைவது போன்றும் ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி அதிலேயே சிறிது நேரம் இருப்பது போல் இருந்து மறைந்து விடுவது போன்றும் உள்ள தன்மையைக் கண்டால் சுடர்விட்டு எழுகின்ற அக்கினியின் முன்னம் கர்ப்பூரத்தைப் போல் பருமையாகக் காணப்படும் இவ்வுடம்பு காணப்படாதாய் புறத்தில் கரைந்து ஒடுங்குவது புலனகும்..

2588. பருவுடன் ஒளிமயமான உயிரோடு பிரிவின்றி ஒன்று பட்டால் அப்போது அது பர நிலையை எய்திச் சிவசத்தியுடன் ஒன்று படும். உடலாகிய சிறை நீக்கப்பட்ட பின்பு உடலில் இருந்த உயிர் சிவம் எங்கும் விளங்குவது போன்று விளங்கிப் பரு பூதத்திலும் நுண்பூதத்திலும் கலந்து சிவப் பரப்பில் விளங்கும்.

2589. செவி, மெய், வாய், கண் மூக்கு ஆகிய அறிவு கருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய உட்கருவிகள் புருடன் ஆகிய ஐந்தும் பொருந்தி நிலை பெறாமல் உலக முகமாக விரிந்தும் குவிந்தும் உள்ளமையால் உலகமான அசைவனவும் அசையாதனவும் தவிர்க்க முடியாதவை ஆகும்.

2590. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு விட்ட ஆன்மா பரனின் நிலையை அடைந்து எங்கும் பொருந்தும்படி பரந்ததாய் விளங்கும். சிவச் சார்பினால் எங்கும் நிறைந்த பொருளாய் விலங்கும் எங்கெங்கும் எது எதையும் செய்யும் குற்றம் கொண்டதாய் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லதாகும். இத்தகைய சிவன்ருள் பெற்று யான் வாழ்பவன் ஆனேன்.

2591. தத்துவ ஆராய்ச்சியில் அளந்தறிந்து சிவப்பரப்பான அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையைப் பற்றி உள்ளம் நிலை பெறுவதனால் பரம் சகமுகமாய்ப்போய் உண்ட போகங்களை ஒழித்துத் தெளிந்த பரம் சிவத்தை பொருந்துகின்ற வகையினால் அணையின் நிலைபெற்று விளங்கும் சிதாகாய வடிவினன் ஆவான்.

2592. தீயிடை காய்ந்த இரும்பு தன் மீது படும் நீரை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போன்று என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ்முகமாக நோக்குவதை விட்டு வன்மையுடைய் மூன்று பாழ் வெளியையும் விழுங்கி விளங்கிய என் நந்தியெம்பெருமன் என் இதயத்தில் இருக்கின்றான்.

2593. யானை நோய உண்ட விளாம்பழம் போல் சீவனும் அதன்மேல் நிலையான பரமும் சிவன் முன் ஆகும். சீவன் துரிய நிலையில் அடையுமானால் சீவனின் இயல்பான தன்மை எல்லாம் சிவபெருமான் மாறும் வண்ணம் செய்து தன்வயப்படுத்திக் கொள்வான்.

2594. எல்லாத் தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனான சிவபெருமான் அவரவரின் மேலான பரம் என்ற நிலையில் பொருந்தியுள்ளான். அப்பொருமானிடம் நெருங்கியவ்ர்குப் பரத்தின் கீழான தத்துவங்களை உண்டு காண்பான். காட்சி பொருள் என்பனவற்றின் முடிவில் சிவபெருமான் வீற்றிருக்கும் உண்மையை நம்மால் அறிய முடியாது.


#####

Read 1601 times
Login to post comments