Print this page
புதன்கிழமை, 15 March 2023 09:13

வாழை இலையில் சாப்பாடு ஏன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!


#*#*#*#*#


21.வாழை இலையில் சாப்பாடு ஏன்!


வாழை இலையில் சாப்பிடுவது இனிமையானது. வீட்டில் இலை போட்டு சாப்பாடு பரிமாறினால், அது வரை என் தட்டில் சாப்பாடு என்று சொன்ன குழந்தைகள் எனக்கும் இலை என அடம் பிடிக்கும். இது இலையின் கவர்ச்சி. இலையின் பசுமை அதன் வளமை சாதாரணமாக உணவு அருந்துதலை விட கூடுதலாக சப்பிட வைக்கும் தன்மையுடையது. மாப்பிள்ளைக்கும் விருந்தினருக்கும் தலைவாலை இலை போட்டுத்தான் பரிமாறுவார்கள். அதிலும் இலையின் தலைப் பகுதி உணவு அருந்துபவரின் இடப்பக்கம் இருக்குமாறு போட்டு பரிமாறுவார்கள். விருதிந்தினராக வந்தர்களுக்கும் மரியாதைக்கு உரியவர்களுக்கும் எச்சில் தட்டில் இல்லாமல் இலையில் உணவு பரிமாறுவது ஓர் சம்பிரதாயம்.

இலையில் உணவின் சுவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கு ஈடுகட்டத் தேவையான உப்பை இலையில் ஓர் ஓரத்தில் மற்ற உணவுப் பொருட்கள் அதனுடன் கலக்காத வகையில் வைக்க வேண்டும். எல்லாம் பரிமாறும் வரை சில நிமிடங்கள் பொறுமையுடன் இருக்கின்ற நிதானத்தை பூடகமாகச் சொல்லிவைத்தனர். உணவு வகைகளின் சூட்டில் இலையின் மேற்புறம் மாற்றமடைந்து கருத்து விடும். ஒன்று அதிகச் சூட்டை இலை வாங்கிக் கொள்ளும். இராண்டாவது ஏற்படும் இராசயன மாற்றம் உடலுக்கு நல்லது. அதனால்தான் அந்தச் சூடு குறைந்து இராசயன மாற்றம் நிகழும் வரை சில நொடிகள் பொறுமையைக் கடைப் பிடித்து எல்லா உணவு வகைகளும் பரிமாறும் வரை உண்ண ஆரம்பிக்காதிருக்க முறைப்படுத்தினர். முதல் பரிமாறுதலில் சாதம் பின் பறுப்பு பின் நெய் என நெய்யை எல்லா பதார்த்தங்களும் பரிமாறிய பின் குழம்பு, ராசம் ஊற்றினர். பாயசத்திற்குப்பின்னரே மோர் என முறைப்படுத்தினர். தற்காலத்தில் அவசரகதியில் எல்லாம் மாறுபட்டிருக்கின்றது. பாயசத்தை ஓர் கப்பில் ஊற்றி விடுகின்றனர். பாயசம் இலையில் ஊற்றி சாப்பிட வேண்டும். அதன் சுவையே தனி. அதுவே முறை.

பருப்புக்கு ஒரு முறையும், சாம்பருக்கும் வத்தக் குழம்பிற்கு, ரசத்திற்கு தயிர்/மோருக்கு என ஒவ்வொன்றிற்கும் ஒரு முறையும் சாதம் கேட்டு சாப்பிடுபவர்கள் இலையின் மறுபாதியில் இருக்கும் கூட்டு பெரியல் வேண்டுமென்று கேட்பதில்லை. கொஞ்சம் கூட்டு கொஞ்சம் பொறியல் என சாப்பிட்டுவிட்டு சாதத்திற்கு அதிக முக்யத்துவம் கொடுக்கின்றார்கள்.

சாப்பாடு பிரமாதம் என மூக்கு முட்ட சாப்பிட்டு பின் உண்ட களைப்பு. தொண்டனுக்கும் உண்டு என இடம்தேடி ஒரு குட்டித் தூக்கம் போடுவர். சாப்பிட்ட உடன் உறங்குவது தவறு. பசி எடுக்கும் அளவிற்கு உழைத்துப் பசிஎடுத்தபின் சாப்பிடவேண்டும். பசிக்கிறது என்பதால் சாப்பிட்டு அப்படிச் சாப்பிடுவதாலேயே களைப்பு ஏற்பட்டு அந்தக்களைப்பு நீங்க தூங்கக் கூடாது.

அப்படிக் களைப்பு ஏற்படும் அளவிற்கு உணவு அருந்ததல், நமக்கு நாமே கம்பளம் விரித்து நோயை வரவழைத்துக் கொள்கின்றோம் என்று அர்த்தம். உண்மையில் யாரும் அப்படி தெரிந்து நோய்வர ஆசைப்படுவதில்லை. ‘தீதும் நன்றும் பிறர் தர வரா’- அதாவது ஒருவனுக்கு தீமையும் நல்லவையும் பிறரால் வருவதில்லை. பசிக்கும்போது புசித்து, பசி கொஞ்சம் இருக்கும்முன் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.

வயிறு புடைக்கச் சாப்பிட்டு ஒரு பத்தடி நடந்தால் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மூச்சுவிட மூச்சுக்காற்று சற்று சிரமப்படும். முதுகில் மூட்டையைச் சுமந்து செல்லும்போது எவ்வளவு சிரமம் ஏற்படுகின்றதோ அதே அளவு சிரமம் வயிற்றுக்குள் அளவு கடந்து உணவை அடைத்துக் கொண்டு நடந்தாலும் அதே நிலைதான்.
எல்லோருக்கும் உணவில் கட்டுப்பாடு தேவை. அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நினைத்ததை நினைத்தபோது சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தி தேவைபடும் போது அளவுடன் சத்தான உணவு வகைகளை சப்பிடப் பழகிக்கொள்ளுங்கள். தேவையான சத்துக்கள் காய்கறிகளிலும் கீரை வகைகளிலும் நிறைய இருக்கும்போது அதைத் தவிர்த்து வேறுவகை உணவிற்கு மாறிவிடுகின்றனர்.

சாப்பிட்ட பின் இலையை பக்கத்திலிருப்பவர் எப்படி மூடிகின்றார் என்பதைப் பார்த்து மூடும் பழக்கத்திற்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். இதே நிலையில் பக்கத்து இலைக்காரறும் இருந்தால் என்ன ஆவது. நம் பழக்க வழக்க வரைமுறைகளை கலாச்சாரத்தை நாம் தெரிந்திருக்க வேண்டாமா! சாப்பிட்ட பின் இலையை முன்னிருந்து நம்மை நோக்கி மூடவேண்டும்.

#*#*#*#*#

 

Read 306 times
Login to post comments