Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:33

வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!


#*#*#*#*#

 

36.வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!


அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியனை மந்திரத்தால் உபாசிக்க வேண்டும். எந்த மந்திரங்களாயிருந்தாலும் ‘ஓம்’ சேர்த்து சொல்வது சிறப்பான பலனைத் தரும். இரண்டு கைகளை உயரத்தூக்கி கிழக்குத் திசையில் ஆதவனை நோக்கி சூரிய கிரணங்கள் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது

சூரிய கிராணங்களின் ஸ்பரிசம் மேனியில் பட்டு தேகத்திற்கு புதிய சக்திகளைத் தரவல்லது.

ஆலயங்களுக்குச் சென்றால் அந்தந்த முறைப்படி தெய்வங்களை வழிபடுதல் வேண்டும். தூய்மை காத்து நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். தியானம் செய்ய வேண்டும்.

சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தை ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை தட்சிணாயணக் காலம் என்றும், வடதிசை நோக்கிய பயணமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலத்தை உத்ராயணக் காலம் என்றும் கூறுவர். இந்த இரு காலங்களும் சேர்ந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியாகாலமாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திரு வெம்பாவை, திருபூம்பாவை என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும்

தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

அதேபோன்று மார்கழியில் திருவாதிரை விழா நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்திலும், வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தில் திருவாரூரிலும் தரிசித்துள்ளனர்

தீப வழிபாடு ஏன்!

தீபங்கள் ஏற்றி வழிபட்டால் பல நன்மைகள் உண்டு என்று வேதங்கள் சொல்கின்றன. விஷேட நாட்களில் மட்டுமல்லாது தினமும் காலை மாலை நாம் வசிக்கும் வீட்டில் தீபம் ஏற்றிவைத்து அதை வழிபட்டால் தீய சக்திகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். மங்களங்கள் பெருகும். மகிழ்ச்சி கூடும். தீபத்தில் பலவகை உண்டு.

சித்ர தீபம்: வீட்டின் தரையில் சித்ரக்கோலம் வண்ணப் பொடிகளால் போட்டு அதன் மீது ஏற்றுவது சித்ர தீபம்

மாலா தீபம்: அடுக்கடுக்கான் தீபத் தட்டுகளில் ஏற்றுவது மாலா தீபம்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்பகுதியில் உயரமான இடத்தில் ஏற்றப்படும் தீபம் ஆகாச தீபம்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நீரில்/நதில் மிதக்கவிடுவது ஜல தீபம்.

படகு தீபம்: கங்கை நதியில் மாலைவேளையில் வாழைமட்டைமீது தீபம் ஏற்றிவைப்பதும் படகு வடிவில் தீபங்களை ஏற்றி கங்கையில் விடுவதும் படகு தீபம்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பகுதியிலும் ஏற்றி வைப்பது சர்வ தீபம்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு கோயில் கோபுரங்களிலேற்றி வைக்கப்படுவது மோட்ச தீபம்.

சர்வாலய தீபம்: கார்த்திகை தீபநாளில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபம்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரைகளில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவில்களை அலங்கரிப்பது லட்ச தீபம்.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் சேர்த்து இளநீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம்.

கோலமிடப்பட்ட வாசல்களில்-5, திண்ணைகளில்-4, மாடக்குழிகளில்-2, நிலைப்படியில்-2 நடைகளில்-2, முற்றத்தில்-4 விளக்குகள் என்று ஏற்ற வேண்டும்

பூஜையறையில்-2 அகல்விளக்கு ஏற்றி வழிபட்டால் சர்வ மங்களம் உண்டாகும்

சமையல் அறையில்- ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் அன்ன தோஷம் இருக்காது.

வீட்டின் பின்புறம்/வெளிப்பகுதிகளில் எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். மரண பயம் நீங்கி ஆயுள் விருத்தியாகும்.

பொதுவாக தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று வணங்கினால் பலன் அதிகம்.

 

#*#*#*#*#

Read 415 times
Login to post comments