Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:41

நோய்கள் வராமலிருக்க!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை
நிற்கவே வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ்
சொன்னநாள் ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர்
எழுந்தாணி தன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு


#*#*#*#*#

 

39.நோய்கள் வராமலிருக்க!

 

தூய்மை, கண்களைத் தூய நீரால் கழுவுதல், கால்-பாதங்கள், தலைக்கு எண்ணெய் தடவுதல், தினமும் குளித்தல், உடற்பயிற்சி செய்தல், சத்துள்ள ஆகாரம் உண்ணுதல், இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், நல்ல ஒழுக்கம் ஆகியன நோய்களைத் தடுக்கும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவரை அணுகி தக்க வைத்தியம் செய்து கொள்ளல் வேண்டும். வருமுன் காத்தல் என்பதற்கு ஏற்ப நோய்கள் வராமலிருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கைப் பாதையை சீரக்கிக் கொள்ளவேண்டும்.

தினமும் தியானம் செய்ய வேண்டும்.

தூய்மை காத்து, நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நம் உடலில் தொண்ணூற்றாறு வகையான வேதியல் தொழில்கள் நடை பெறுகின்றன. இந்த தொண்ணூற்றாறு தந்துவங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் உடலில் நோய்க்கு காரணம். உடலில் ஐம்பூதங்களின் இயக்கம் சரிவர இருக்க வேண்டும். அப்பு வாகிய நீர் அதிகம் உடலிருந்து வெளியேறக்கூடாது, நெருப்பு என்கிற அக்னி அளவுடன் இருக்க வேண்டும், நாடிகள் சரிவர இயங்க வேண்டும். மூச்சுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும். உடல் கழிவுகள் அவ்வப்போது உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். இதுபோன்ற பஞ்ச பூத செயல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் விளைவாக உடலில் பலவித நோய்கள் தோன்றும் என்பதை அறிக!

நம் உடலில் உள்ள நிணநீர்-இரசம்-சாரம், ரத்தம்-உதிரம்-செந்நீர், தசை-மாமிசம்-ஊன், கொழுப்பு-மேதஸ், எலும்பு-அஸ்தி-என்பு, மஜ்ஜை-மூளை, வெண்ணீர்-ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் ஆகிய தாதுக்கள் ஏழையும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் யோகம் செய்து கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் சித்தர்கள். எனவே யோகம் செய்வீர்!

நம் முன்னோர்கள் ஆண்டின் முதல் நாள் சித்திரை விஷு- தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஆண்டு முழுவதும் நன்மையும் மங்களமும் தங்கிட இறைவனை வணங்குவதை மரபாக்கியுள்ளனர். அன்று பஞ்சாங்க படனம் கேட்பர். அதாவது பஞ்சாங்க விவரங்களை வேதம் கற்ற ஒருவர் அந்த ஆண்டின் முழுமையான விவரங்களைப் படிக்கக் கேட்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பண்டிகை விரதங்களை அனுஷ்டிக்கவும் உதவுவார். அடுத்ததாக எந்த பண்டிகைக்கு என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும் என்றும் வரையறுத்துள்ளனர். சித்திரை அடுத்து வரும் கோடையில் அம்மை, வைசூரி போன்ற நோய் தாக்காமல் இருக்க கிருமி நாசினியான கசப்பு மிகுந்த வேப்பம் பூவை சித்திரை விஷுவன்று உணவில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கரிப்பு ஆகிய சுவைகளையும் சேர்த்து உணவு தயாரித்து பண்டிகையன்று இறையை வழிபட்டு விருந்து படைக்க வலியுறுத்தியுள்ளனர்.

 

#*#*#*#*#

Read 360 times
Login to post comments