Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:58

கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

 

#*#*#*#*#

 

46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!

 

கிரகங்கள் அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், மழை வளம் என அனைத்தையும் தருபவன. எனவே அவைகளை ஆராதிக்க வேண்டும். வேள்வி செய்யலாம். கிரகங்களை ஆராதித்து வழிபடுவதால் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். கிரகங்களின் மூல மந்திரம் தெரியாவிடினும் அந்தந்த கிரகங்களின் காயத்ரி மந்திரத்தை சொல்லி பயன் பெறலாம்.

சூரியன், சந்திரன், அங்காரகன் எனும் செவ்வாய், புதன், பிரகஸ்பதி என்ற தேவ குருவாகிய வியாழன், சுக்கிரன் என்ற வெள்ளியாகிய அசுர குரு, சூரியனின் மகனான சனி, ராகு-கேது என்ற நிழற் கிரகங்கள் ஆகிய ஒன்பதும் நவகிரகங்கள்.

ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் சஞ்சரித்தல் திடீரென அசம்பாவிதங்கள் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும்.

சூரியன் சில காலம் தெரியாவிட்டாலும் புகையுடன் தெரிந்தாலும், வானில் தூமகேது, எரிநட்சத்திரம் தெரிந்து விழுந்தாலும் இவைகள் எல்லாம் துர் நிமித்தங்கள்.

ஒவ்வொரு நட்சத்திரதிற்கும், கிரகங்களுக்கும் துர் நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தைக் குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்கு வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும்.

அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

 

#*#*#*#*#

Read 360 times
Login to post comments