Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:28

மரம் ஏன் வளர்க்க வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!


#*#*#*#*#

 

55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!

 

மரம் என்றால் எதாவது ஒரு மரத்தை நிழலுக்காக அல்லது கட்டிடத்தின் முன் அழகு படுத்த வளர்க்கலாம். ஆனால் இங்கே சொல்லப்படுவது ஒருவருடைய நட்சத்திரத்திற்குரிய மரத்தை தன் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். அதன் பலன்கள்- அந்த மரம் வளர வளர அவருடைய வாழ்வு வளம் பெரும். மரம் வளர்ப்பவருடைய பாவக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் ஒப்பற்ற அற்புதமான ஆன்மீகத் தொடர்பை செய்ய வல்லது. அவருடைய தோஷங்களை அந்த மரம் ஈர்க்கும் தன்மையுடையது. அந்த மரம் பூத்துக் குழுங்கும்போது அவரின் வாழ்வு செழிப்பான நிலையில் இருக்கும். கர்ம வினைகள் குறைந்து விடும்.

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பன்னீர் மரக்கன்றையும், வெண்குஷ்டத்தால் பதிக்கப் பட்டவர்கள் புளிய மரக்கன்றையும், ஆஸ்மாவினால் பதிக்கப் பட்டவர்கள் முசுக்கொட்டை மரக்கன்றையும், தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வேப்ப மரக்கன்றையும், மூலநோயால் பாதிக்கப் பட்டவர்கள் நாவல் மரக்கன்றையும், இதயநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அரச மரக்கன்றையும், வயிறு சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் புன்னை மரக்கன்றையும், காதுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் கடுக்காய் மரக்கன்றையும், சிறுநீரகக் கோளாறு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பனை மரக்கன்றையும், தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் பூவரசம் மரக்கன்றையும் நட்டு வளர்த்து வருவது நோய்கள் விரைவில் நீங்கி நலம் பெறலாம் என விருட்ச சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

#*#*#*#*#

Read 1148 times
Login to post comments