Print this page
புதன்கிழமை, 11 December 2019 07:03

செல்வம் நிலையாமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

செல்வம் நிலையாமை!

168. அருளைச் செய்யும் அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், பொருட் குவியலும் பிறர் கவர்ந்து கொண்டு போவதற்கு முன்பு அறிவு நிறைந்த உயிருடன் நிலையான செல்வத்தை உடைய இறைவன் திருவடிகளை அடைந்து விடின் மயங்கும் உயிர்க்கு பினையாக மாதவம் செய்பவன் இருப்பான்.

169. ஒளியுடைய வானத்து சந்திரன் ஒளிகுன்றி இருளாய் ஆவதைப்போல் தளர்ச்சியடைந்து குறைந்து போகும் செல்வத்தை யாரும் கூறிக்கொண்டிருக்காமல் பொருள் மயக்கம் நீங்கி நாடுங்கள். தேவர் தலைவனான சிவபெருமானை அவர் மழை மேகம்போல் பெருஞ்செல்வத்தை உண்டாக்குவார்.

170. ஒருவருடைய நிழல் யாருக்கும் பயன்படுவதில்லை. இதை அறிந்தும் அறிவற்றவர்கள் தம்மிடம் உள்ள செல்வம் அயலானது என்று நினையாமல் தமக்கு உதவும் என நினைக்கின்றனர். உடலுடன் ஒன்றாய் பிறந்த உயிர் உயிர் போகும்போது உடலைவிட்டு செல்கின்றது. அகக்கண்ணில் உள்ள நிலையான ஒளியை உடல் இருக்கும்போதே கண்டுகொள்வாய்!

171. மலரின் மணத்தைக் கண்டு தேனை சேகரிக்கும் வண்டு அதை பாதுகாப்பாக மரக்கிளையில் ஓர் அடையில் காக்கும், அந்த வண்டிற்கு கெடுதல் செய்து ஓட்டிவிட்டு அந்த தேனை அபகரிப்பர் வேடர். அதுபோல் செல்வத்தைக் கவர்ந்து செல்பவர் செல்வம் உடையவனுக்கு தீமை செய்வர்.

172. நிலையற்றது செல்வம் என நன்றாக அறிந்து தெளியுங்கள். அதனால் அச்சம் கொள்ளாதீர். ஆற்றின் வெள்ளம்போல் பெருகி வளரும் செல்வத்தை கண்டு மயங்காது செல்வப்பற்றை நீக்கி மேன்மையான அருள் செல்வத்தை பெறுங்கள். உயிரை உடலினின்று பிரிக்கும் இயமன் வரும்போது அச்செல்வத்தை விட்டு நீங்கமுடியும்.

173. மகிழ்வுடன் அடைகின்ற பரம்பரைச் செல்வமும் தானே முயன்று ஈட்டிய செல்வமும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்று கவிழும் படகைப் போன்றவை. அழியும் நிலை கொண்ட உடலுக்கு ஒரு பேறாகச் சேர்த்து வைத்துள்ளதை நினைத்து அதனை பெருக்கிக்கொள்ள அருள் நிறைந்தார் எண்ணமாட்டார்.

174. மனைவியும் மக்களும் உயிர்க்குதவாத பொருளை எமக்கு எவ்வளவு எனக்கேட்பர். இதை தவிர்த்து உற்ற இடத்தில் உதவும் ஒளிப்பொருளான சிவத்தை நினைவில் கொண்டு அதைப் பெருக்கிக் கொள்பவர் கூவி அழைக்கும் துணையை பெறுவர்.

175. உலக வாழ்வில் ஆசை விருப்பமுடன் அதிகமானது. உண்மைப் பொருளை அறிவார் யாருமில்லை. உடலின் இயக்கத்தை நிறுத்தும் தறியான சுழுமுனை செல்லும் வழிகள் ஒன்பது உள்ளன. உறவு முறைச் சொன்ன தாயாரும், உறவினரும் வந்து வணங்கியபின் சுடுகாட்டை காட்டிக் கொடுத்து விட்டு சென்றுவிடுவரே!

176. உயிர் உடலை விட்டுச் செல்லும்போது வெல்வதற்கு வேறு எதுவும் இல்லையாதலால் அண்ணல் சிவபெருமானை நினையுங்கள். உயிரை உடலிலிருந்து வேறுபடுத்த எமதூதர்கள் மரண வேதனை படுத்துதல் இயல்பு. அந்த மரண வேதனையை தடுப்பது இறைவனின் எண்ணமே!

திருச்சிற்றம்பலம்

#####

40. சிவன் திருவடியில் மிக்க விருப்பம்கொண்டு கழலணிந்த அவன் திருவடியை வணங்கி அத்திருவடியை அடைய விரும்புவர் அடியார். செம்பொன் ஒளியைப்போல் நிறைந்த ஒளியை உடைய சிவன். வஞ்சனைகளால் மறைத்து குறும்பு செய்யாமல் வழிபடும் மெய் அன்பர்களின் உடலை புறக்கணியாது அவ்வுடலில் புகுந்து நிற்பான்.

41. பாற்கடலில் எழுந்துவந்த ஆலகால நஞ்சை உண்டு அருளிய தேவர்களின் தலைவன் சிவபெருமானை, திருத்தப்பட்ட விளைநிலம் போன்ற மனதில் கொண்டு வணங்க வல்லாருக்கு நாத ஒலியைக் காட்டிய உமையொருபாகன் அடியார் மனதில் பெண்மானைக் கண்ட ஆண்மான் போல் கூடி நிற்பவன்.

42. அரன் சிவனை புகழ்ந்து வழிபாடு செய்பவர் பெறுவது, நான்கு தலைகளையுடைய நான்முகன் படைத்த வண்ணம் இறந்து பிறக்கும் மாயையுடன் கூடிய இல்லற பந்தத்தில் உழழும் உயிர்கள் உடலில் திரண்ட தோள்களுடைய உமையின் கணவன் வந்து பெருந்துவது இயற்கைதானே.

43. திருஐந்தெழுத்தை நல்ல தூய்மையான மனத்துடன் தொடர்ந்து துதித்து ஆற்றல் பெற்று அவன் தாழினையே நினைவாய் கொண்டு வீடுபேற்றைத் தரும் அத்திருவடியில் அடங்கி ஒடுங்குபவர்க்கு சிவன் தன் திருவடியை நல்கி அந்த அடியவருடன் வேறுபாடின்றி நிலைத்து நிறைந்து நிற்பான்.

44. தேவர்கள் சுழுமுனையில் இருக்கும் இறைவனை வாழ்க என்றும், அசுரர்கள் பெருமானை வாழ்க என்றும் மனிதர்கள் அவன் திருவடி வாழ்க என்றும் வாழ்த்துவர். அடியேன் அப்பெருமானை வணங்கி என் அன்பினுள எப்போதும் நிலைப்பெற்று இருக்குமாறு செய்வேன்.

45. ஆழிகடல் சூழ் இவ்வுலகம் இறைவன் விதிமுறைக்கு உட்பட்டு நடப்பதல்லாமல் வேறு முறையில் இயங்கக் கூடாது. இவ்விதி முறையால் உயிர்கள் அடையும் இன்பம் மாறுபாடு அடையாது. ஒளிவடிவான இறைவன் தினமும் துதிகள் வழியாய் வீட்டு நெறிகளை அருளும் கதிரவன் ஆவான்.

46. மனம் திருந்தி எப்போதும் சிந்தனையில் சிவபெருமானை எண்ணிக் கொண்டிருக்கும் அடியார்கள் செம்மேனியனே, மங்கல வடிவினனே எப்பொருளுக்கும் இறைவா என்று வழிபட அந்திவண்ணன், அரன், சிவன் என்பதெல்லாம் உருவமானதால் படைப்புக்கு முந்தியகாலத்தில் ஐந்து நிறக்கதிர்களாகத் தோன்றிய் முந்திவண்ணன், முதல்வனே, யாவர்க்கும் மேலான பரனே என்று அடியேன் வழிபட சிவன் ஞானவடிவினனாய் அடியேன் மனதில் எழுந்தருளியுள்ளான்.

47. பெரும் தவத்தை உடையவர் உயிர்களின் உள்ளத்தில் சிவன் கோவில் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து உடலை பாதுகாப்பர். அப்பெருமான் நெஞ்சத்து எழுந்தருளியிருக்கும் தன்மையினாலே சிவன் அடிமேல் அன்பு கொண்டு இயங்கும் நேயத்தவர் ஆவர். அப்படி நினையாதவர்க்கு பனை மரத்தின்மேல் இருக்கும் கழுகு மரத்தில் இருக்கும் பனம் பழத்தின் சுவையை அறியாமல் நிலத்திற்கு வந்து உணவை உணுவதுபோல் திருவடி பேரின்பம் கிடைப்பது அரிது. இல்லற விவகரத்தில் உலகத்திலும் மற்ற நேரங்களில் சிவ சிந்தனையிலும் இருக்கும் உயிர்களுக்கு இல்லற வாழ்வின் பாதிப்புகள் துன்புறுத்தாது.

48. அடியவர்கள் வழிபடும் தேவர்களின் தலைவன் சிவபெருமானை அடியேன் தலை முடியால் வணங்கி வழிபட்டு அவனை உளமாற நினைத்து உலக உயிர்களுக்கு அருளும் மேலான பெருந்தகையான எம் தலைவன் அவனை இரவு பகல் என்ற நிலையில்லமல் ஒளிரும் அணையாத விளக்கு என நினைத்து மகிழ்ந்திருந்தேன்.

49. பழமையான உயிர்கள் பாசம் ஆகியவற்றிற்கு தலைவனாகிய பெருமானை நினைத்து உயிர் மற்றும் தளை என்று சொல்லப்படும் பாசம் ஆகியவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்றாய் கலக்க வல்லமையுடையோர் திரை கடலில் வரும் அலைபோல் பசுக்கள் செய்த பாவத் தளைகளை தாண்டி நீந்தி பசு பாசங்களைக் கடந்து முத்தி என்ற கரையை அடையலாம்.

50. இறைவனின் திருவடியை அடியவனின் தலையில் சூடிக் கொள்வேன். உள்ளத்தில் வைத்து போற்றுவேன். தலைவன் எனப் பாடி பல மலர்களால் அர்ச்சனை செய்து கூத்தாடி வணங்கி வழிபடுவேன். அவனே தேவர்க்கு எல்லாம் தேவன் என நம்புவேன். அடியேன் அவனைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டதன் விளைவே இதுவாகும்.

திருச்சிற்றம்பலம்

#####

 
Read 2584 timesLast modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 06:37
 
 
 
 
 
 
Read 1748 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:08
Login to post comments