Print this page
புதன்கிழமை, 11 December 2019 07:10

கொல்லாமை!,புலால் மறுத்தல்!,

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

கொல்லாமை!

197. இறைவனைப் பற்றியுள்ள நல்ல ஆசான் பூசைக்கு பலவகை மலராக உள்ளது மற்ற உயிர்களைக் கொல்லாமையே. கண்மலர் ஒளியே மாலையாகும். நல்லறிவு கொண்ட உயிரின் அசைவில்லா மனமே நல்ல தீபமாகும். இவை கொண்டு பூசித்தால் உயிர் விளங்கும் இடம் தலை உச்சியே.

198. கொல் என்றும் குத்தென்றும் கூறும் விலங்கை ஒத்த உயிர்களை இயமதூதர் உறுதியான கயிற்றால் கட்டி செல் என்றும் நில் என்றும் அதட்டி தீயையுடைய நரகத்தில் நீண்டகாலம் நிற்க என்று நிறுத்துவர்.

திருச்சிற்றம்பலம்

#####

புலால் மறுத்தல்!

199. பொல்லாத தீய உணவான புலாலை உண்ணும் புலயரை எல்லோரும் பார்க்கும் படியாக இயமதூதர்கள் செல்லை பற்றி எடுத்துக் கொண்டு போவது போல் தீப்பொருந்திய நரகத்தில் முதுகை கீழ்பக்கமாகக் கிடத்தி வைப்பர்.

200. கொலை, களவு, காமம், பொய்பேசல், கள் ஆகிய ஐந்து பாவங்களை விலக்கி சிரசில் இறைவன் திருவடியைக் கண்டு இன்பம் அடைபவரை அப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கி அவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1489 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:18
Login to post comments