Print this page
புதன்கிழமை, 11 December 2019 07:22

மன்னன் குற்றம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#####

மன்னன் குற்றம்!

238. கற்க வேண்டியதை கல்லாத மன்னனும் காலனாகிய இயமனும் ஒன்றே. ஆனால் கல்வி அறிவு இல்லா மன்னனைவிட காலன் மிகவும் நல்லவன். கல்வி அறிவில்லா மன்னன் ஆரய்தலின்று கொல் என ஆணையிடுவான். காலன் நல்வழியில் நிற்பாரின் அருகில் செல்ல மாட்டான்.

239. நாள்தோரும் தன் நாட்டில் தவ நெறியின்றி நன்னெறியை முறைப்படி ஆராயாமல் மன்னன் நீதி முறையை செலுத்தினால் நாடு வளம் குன்றும். நாட்டு மக்களிடை நாள்தோறும் அறியாமை வளரும். மன்னனின் செல்வம் குறைந்து கொண்டே இருக்கும்.

240. வேடத்திற்கு ஏற்ற நெறியில் உள்ளும் புறமும் நில்லாமல் வேடம் மட்டுமே புனைந்து கொள்வதில் பயன் ஏதுமில்லை. வேடத்திற்குரிய நெறியில் பொருந்தி நிற்கும் வேடமே உண்மையான வேடம். வேடத்திற்குரிய நெறியில் நில்லாதவரை வலிமை மிக்க மன்னன் தண்டனை அளித்து வேடத்திற்கு ஏற்ற நெறியில் நிற்கச் செய்தலே அவனுக்கு வீடுபேற்றைத் தருவதாகும்.

241. அறியாமை நீங்காமல் குடுமி, பூணூல் இவற்றை அணிந்தவரால் உயிர்கள் வருத்தமுறும். பெருவாழ்வுடைய மன்னனும் பெருமை யில்லாதவன் ஆவான். வேடத்தின் உண்மைதனை அறிந்து ஆடம்பரத்திற்காக அணியும் பூணுலையும் குடுமியையும் களைவது மன்னனுக்கும் மற்றவருக்கும் நல்லதாம்

242..ஞானத்தை அடையாமல் குடுமி, பூணூல் மற்றும் சடை ஆகியவற்றை பெற்ற ஞானியர் போல் நடக்கும் உயிர்களை ஞானியரைக் கொண்டு சோதித்து ஞானம் பெறுமாறு செய்தலே நாட்டிற்கு நன்மையுண்டாகும்.

243. பசு, பெண்டீர், அறநெறி நிற்பவர், தேவர்கள் போற்றும் திருஉருவான உண்மையான வேடம் உடையவர்களையும் மன்னன் என்பவன் காக்க வேண்டும். அன்றில் மன்னனுக்கு மறுபிறவியில் நிச்சயம் நரகமே கிட்டும்.

244. சிறப்பான மறுமைக்குரிய முத்தியும் இப்பிறவிக்குரிய செல்வமும் வேண்டும் அரசன் எப்போதும் அறநெறியே நிலை நாட்ட வேண்டும். கடல் நீரால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் செய்யும் நல்வினை தீவினை யாவும் சொல்லப்போனால் நன்மையுடன் ஆறில் ஒரு பங்கு தீமை அரசனுக்கே உரியதாகும்.

245. மன்னன் உலகை காப்பது திறமையுடன் இருக்கின்றது. மக்கள் மன்னனைப் போன்றே இருப்பர். பகமையினால் இவர் நாட்டை அயலான் கைப்பற்றுவதும் பிற நாட்டை இவன் கைப்பற்றுவதும் விளைவை அறியாது பாய்கின்ற புலியை போன்ற கொடிய மன்னன் ஆவான்.

246. காற்றின் இயக்கத்தால் மூலாதாரத்தில் உள்ள மூலக் கனலைச் சிரசின் மேல் செலுத்தி அங்கிருக்கும் பால் போன்ற ஒலியினால் சந்திர மண்டலம் அறிந்து அங்கு உண்டாகும் அமுதத்தை பருந்தாமல், ஆனந்தம் உண்டாகும் என நினைத்து கள்ளை உண்ணும் மயக்க முடையவரை தண்டித்து அப்பழக்கத்தை நிறுத்துவது வேந்தன் கடமை.

247. அவரவற்குரிய சமய நெறியில் நில்லாதவர்களை சிவன் அருளிய ஆகம முறைப்படி மறுபிறப்பில் எத்தகைய தண்டனை கொடுத்து திருத்துவார். இப்பிறவியிலே தகுந்த தண்டனை கொடுத்து திருத்துவது மன்னனின் கடமையாகும்..

திருச்சிற்றம்பலம்

#####

Read 1549 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 11:35
Login to post comments