Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:26

எலும்பும் கபாலமும்! அடி முடிதேடல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

எலும்பும் கபாலமும்!

371. எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திய சிவபெருமான் மணிமுடி தரித்த திருமால் மற்றய தேவரின் வடிவான எலும்பையும் அறிவு என்ற மண்டை ஓட்டையும் சூக்குமமாகத் தாங்கவில்லை என்றால் பிரளயத்திற்குப்பின் பிறவிக்கு மக்களது வடிவமும் அறிவும் தொடர்பில்லாமல் இருக்கும்.

#####

அடி முடிதேடல்!

372. பிரமனும் திருமாலும் தங்கள் அறியாமையால் தாங்களே தலைவன் என்று அகங்காரம் கொண்டனர். சிவபெருமான் பேரொளிப் பிளம்பாக காட்சி கொடுக்க அவர்கள் அப்பெருமானின் அடிமுடி காணாது தேடத்தொடங்கினர்.

373. ஏழு உலகங்களுக்கும் பொருந்தும்படி உயர்ந்த சிவபெருமான் ஏழு உலகிலும் அக்னி வடிவாய் பரவி விளங்குபவன். வானத்து ஏழ் உலகிலும் விளங்கும் அந்த நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டு பிரம்ன் திருமால்களால் காண முடியாத அவனை நான் கண்டேன்.

374. உடலாக, உயிராக, உணர்வாக, அக்னியாக, பிரமனும், திருமாலும் அறியாத காலத்துப் பொருளாக, வான் அளவு ஓங்கி நின்ற பேரொளியாய், அண்டங்களுக்கு ஆதாரமான தம்பமாகவும் அதைச் சுற்றி வருகின்ற சந்திரன் மற்றும் அண்டங்களாகவும் நிற்பவன் சிவபெருமானே.

375. நிறைந்து நிற்கும் சிவன் எல்லா அண்டங்களையும் தனக்குள் அடக்கி உயர்ந்து நிற்பவன். அவன் பேரொளியாய் நீண்டு நிறபோது அத்திருமேனி கண்டு அச்சம் கொண்டு அதை ஆராய சென்றனர் திருமாலு,ம் பிரமனும்.. ஆராய உணர்வு கொண்டு மேலேயும் கீழேயும் சென்றவர்கள் நன்மை அளிக்கும் அடிமுடியை அறியாது நாணம் கொண்டு திரும்பினர்.

376. செம்மையான திருவடியைப் புகழும் தேவர் கூட்டமும், மூன்றடி நிலம் கேட்ட திருமாலும், முனிவரும், இசைவடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாம் என்ற பிரமனும் எப்படி செய்தாலும் அப்பெருமானை பொருந்த இயலாது!

377 .சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரமனும் மணிப்பூர சக்கரத்தில் உள்ள கரிய கடலில் வாழும் திருமாலும் ஊன் பொதிந்த உயிர்போல் உணர்கின்ற பின்மூளை முன்மூளை எனற இடங்களில் விளங்கும் சதாசிவமூர்த்தியின் தன்மையை பெறுவாரோ. பெறமாட்டார்.

378. எல்லாவற்றிலும் கலந்து எழும் மேலானச் சுடர்பொருளை ஆன்மாக்களின் உய்வின் பெருட்டு வைக்கப்பட்டுள்ள உண்மையை அறிந்து எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் விளங்கும் பஞ்ச சதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.

379. ஒளியைத் தந்த பெருமானை வணக்கிய தேவர்கள் தங்களை இறைவனுக்கு அடிமையாய் தந்து என்னைப் போல் இறைவனை அறியவில்லை. இறைவன் தன்னையே ஆளாகக் கொடுத்து சிவபோகத்தை அருளி தாங்கள் உய்யும் வண்ணம் திருவடி தந்தருளிய இறைவனை பொருந்தாதவர் ஆயினர்.

380. ஊழியைச் செய்யும் உருத்திரனை ஆராய்ந்திருப்பவன் சிவன். பிரம பட்டத்துடன் வாழ்கின்ற பிரமன் வெளிப்பட்டு விருப்பப்படும் என் தலையில் தாங்கள் விதிக்கும் ஆணையை அளித்தருள்க என வேண்டினன். ஊழியைச் செய்யும் சிவன் பேரொளிப் பிழம்பாய் படைப்புத் தொழிலைச் செய்ய பிரமனுக்கு அருளினான்.

#####

Read 1663 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:12
Login to post comments