Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:41

அருளல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

அருளல்!

441. எண் திசைகளிலும் வீசும் காற்றுடன் வட்டமாய்ப் பொருந்தியிருக்கின்ற கடல், தீ, பூமி, ஆகாயம், என்ற பூதங்களை ஒன்றாய்ச் சேர்த்து உயிர்கள் இருக்கும் இடமான உடம்புடன் உயிரையும் சேர்த்தும் பிரித்தும் வைப்பான்.

442. சிரசில் பிரம்ரந்திரத்தில் நீங்கி விளங்கும் நாதத்தை விரும்பி இன்பத்தை அனுபவிக்கும் உயிர்களுக்கு இறப்பு இல்லை. விரிந்த சுடர் அக்னி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றையும் உயிர்கள் உய்வதற்கு தந்து அருள்பவன் சிவனே.

443. குயவன் தன்னுடைய் தண்ட சக்கரத்தில் ஏற்றிய மண்ணை தன் விருப்பிற்கு கலயமாக செய்வான். சிவன் எண்ணினால் அசையாத தனமை கொண்ட உலகம் அசையாத தன்மையை விட்ட ஆன்மாவாய் மாறும்.

444. சிவன் ஒளியை ஊர்தியாய் உடையவன். மாறுபட்ட செயலை உடையவன். பூதப்படையை உடையவன். அவன் தன் விருப்பப்படி உயிர்களை படைத்து அருள்வான். வேண்டியவர் வேண்டியதைக் கொடுக்கும் கொடையாளான். அவன் குணங்கள் எட்டு .சடாமுடியை உடைய அவன் அடியவரின் சிந்தையில் நின்றிருப்பான்.

445.. உயிர்கள் வாழ் வேண்டும் என்று ஏழு உலகங்களையும் படைத்தருளினான் இறைவன். அதற்காக பல் உயிர்களை படைத்தருளினான். ஐந்து பூதங்களையும் படைத்தனன், விருப்பத்துடன் உயிரிலும் உடலிலும் பொருந்தி நின்று அருளினான்.

446. ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை உடமையாக கொண்டவன் சிவன். பல தேவர்களையும் படைத்து ஆட்கொண்டான். பல உயிர்களைப் பாடைத்து தேவர்களுடன் தொடர்பு படுத்தி ஆட்கொண்டான். அவனே தலைவனாக விளங்கின்றான்.

447. ஆதி சக்தியுடன் கூடி ஐம்பெரும் பூதங்களைப் படைத்தனன். குற்றம் இல்லாத ஊழிகளைப் படைத்தனன். கணக்கில்லத தேவர்களைப் படைத்தனன். இவ்வாறு படைத்தாலும் அவர்களின் ஆதாரமாகவும் இருக்கின்?றான்.

448. அகன்ற இடங்களை உடைய ஏழு உலகங்களுடனும் பொருந்தியும் அவற்றை கடந்தும் உள்ளான். இப்படியிருந்தும் சிவன் எளிமையாய் இருப்பான். பலவகையான உயிர்களிடமும் பரவிக் கலந்து அவ்வுயிர்களிடம் பொருந்தி உபதேசம் செய்தருள்வான்.

449. உடலின் உள்ளே நிற்கும் சோதியானது உயிர் பொருந்திய உடலாகவும் வான் தேவர்கள் விரும்பும் சிறப்பான பொருளாகவும் பூவுலகில் பக்குவம் பெற்றவர் புகழும் திருமேனியாகவும் கண்ணின் மணியாகவும் ஞானமாகவும் விளங்கும்.

450. யாராலும் அறிய முடியாத அண்டத்து திருவடியைப் பூமி முதலாகப் பொருந்திய உடலில், நீரில் பால் கலந்து நின்ற நேர்மையைக் கண்டு, சோர்வு அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அடைந்தேன்.

#####

Read 1628 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:17
Login to post comments