Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:48

பாத்திரம்! அபாத்திரம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

பாத்திரம்!

501. சிவ ஞானிஅய்ர்க்கு எள் அளவு பொன்னைத் தந்தால் அதன் பயன் கொடுத்தவர்க்கு இப்பிறப்பில் இன்பமும் சித்தியும் மறுமையில் முத்தியும் கிட்டும். அஞ்ஞானம் உள்ளவர்களுக்கு பூமி அளவு பொன்னைக் கொடுத்தாலும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் இல்லாது போகும்.

502. உரிய காலம் வரை எதிர்பார்த்திருந்து உயிரைக் கவரும் காலனை அணுப்பும் எண்குணநாதனும் உயிர்க்கு உயிரான தன்மையை அறிந்தவர்க்கு அருளும் தலைவனும் ஆன சிவனை அவன் இருக்கும் நாதம் விந்து மண்டலங்களை அடைந்து உணர்ந்தவர் ஒளி மண்டலத்தினுள் வாழ்பவர் ஆவர்.

503. அன்னை வயிற்றில் இருந்தபோதே அடியேன் சிவஞானத்தை பற்றியிருந்தேன். உடலுடன் கூடியபோது திருவடியை நீங்காது இருந்தேன். பொய்யான உடலை விட்டு ஒளிமயமான திருவடியை நாடுவேன். நெய்வார்த்து எரியாத தூண்டா அகல் விளக்காகும்..

504 வரவேண்டிய இன்பப் பொருள்கள் வரும். அவற்றில் நீங்க வேண்டியன நீங்கும். கழிக்கப்பெறும் வினைகள் கழிக்கப்பெற்று அனுபவிக்க வேண்டிய வினைகள் மீதம் இருக்கும். இறைவன் இதைக் காட்டியருளக் கண்டவன். அவன் ஆணையின் படி செயல் ஆற்றும் முதல் தகுதி கொண்டவன் ஆவான்.

####

அபாத்திரம்!

505. ஒழுக்கமும் நோன்பும் இல்லாவர்க்கு கொடுப்பது என்பது,. அழகிய மலட்டுப் பசுவிற்கு குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டுப் பாலைக் கறந்து குடிப்பது போன்றது ஆகும். அது பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்று பயன் அற்றதாகும்.

506. மன ஒடுக்கத்திற்கு தவிர்க்க வேண்டியதையும் பெற வேண்டியதையும் அறிந்த அன்புடையவர்க்கே தானம் செய்தல் சிறப்பு. நிலை அறிந்து அன்பு கொள்ளாதவர்க்கு தானம் செய்தல் பெரும் பிழையாகும் என்பதை உயிர்களே அறிந்து கொள்ளுங்கள்.

507. ஐந்து பாதகங்களை செய்பவன் நல்லவர்க்கு கொடுப்பதன் பயனை அறியாது கெடுவர். குற்றமற்ற ஞானகுருவிற்கும், தூய்மையுடைய பெரியவர்களுக்கும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய நீக்கியவருக்கும் தந்து அவர்கள் நிலையில் நிற்கச் செய்து ஞானத்தை பெற்றவன் ஐந்து குற்றங்களைச் செய்தவர் விழும் நரகத்தில் விழமாட்டான்.

508. மண் மலைபோன்று அத்தணை பொருள்கள் தந்திடினும் சிவனே முன் நின்று கொடுக்கின்றான் என்ற நினைவு கொண்டு வணங்கிப் பெறாதவர்க்கு கொடுத்தவரும் அதை பெற்றவரும் ஏழு வகை நரகங்களில் ஆழ்ந்து துன்பப்படுவர்.

#####

Read 1713 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:19
Login to post comments