Print this page
திங்கட்கிழமை, 20 April 2020 16:11

ஆசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஆசனம்!

558. பத்மாசனம் முதலிய பல ஆசனங்களில் எட்டு மிக முக்கியமானவை. சொங்கு-சேர்வு இல்லாமல் இருக்கும் சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தக்கவன் தலைவன்.

559. ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிகவும் இழுத்த நிலையில் வலப்பக்கத் தொடையில் இடக்காலையும் இடப்பக்கத் தொடையில் வலக்காலையும் வைத்து கைகளை மலர்ந்தி தொடையின்மீது வைப்பது பார் புகழும் பத்மாசனம் ஆகும்.

560. குற்றமில்லா வலக் காலை இடப்பக்கத் தொடையின்மீது இருக்குமாறு வைத்து முழங்காலின் மீது கைகளை நீட்டி தளரும் உடலை நேர் செம்மையாக இருக்கச் செய்து சிறப்படைவது பத்திராசனம் ஆகும்.

561. பத்மாசனம்போல் கால்கள் இராண்டையும் தொடையின் மேல் வைத்து கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையில் கைகளை நுழைத்து தரையில் ஊன்றி உடலின் சுமை கைகளில் தாங்குவதற்கான சமநிலையில் தெரிந்து அசையாதபடி நிறுத்துதல் குக்குட ஆசனம் ஆகும்.

562. பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி காலை மடித்தமர்ந்து முழங்காலில் கைகளை நீட்டி வாயைப் பிளந்துகொண்டு கண்களை புருவ நடுவை பார்த்தவாறு இருப்பது சிம்மாசனம் ஆகும்.

563. பத்திரம், கோமுகம், பத்மாசனம், கேசரி, குக்குடம், வீரம், சுகாசனம் ஆகிய ஏழும் மேலானவை. பழமையான நூற்றி இருபதாறில் இந்த ஏழும் உள்ளன.
வலப் பக்கம் பின் பகுதியில் வலக்கால் பரப்பையும், இடக்கால் பரப்பையும் சேர்ப்பது கோமுகாசனம். வலப்பக்கத் தொடையின்மீது இடக்கால் பரப்பைச் சேர்த்து இருத்தல் வீராசனம்.

#####

Read 1454 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:08
Login to post comments