Print this page
திங்கட்கிழமை, 20 April 2020 16:18

தியானம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

தியானம்!

598. முன்பு தாரணையில் இரண்டும் எட்டும் கூடிய பத்தாம் மந்திரத்தில் புத்திய்ம் புலனும் நீங்கியிருக்கும் தியானம் சொல்லப்பட்டது. அது வடிவுடன் கூடிய சக்தியை மேலாக எண்ணுதலான சக்தி பரத்தியானம். ஒளியை உடைய சிவனை நினைப்பது சிவத்தியானம். இவ்வண்ணம் யோகத்தில் இரண்டுள்ளது..

599. மெய், கண், நாக்கு, மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில் நாதத்தை எழுப்பும் அண்ணாக்குப் பகுதியில் எல்லையில்லா பேரொளியைக் காட்டி மனம் வெளியில் செல்லாது தடுத்து பிழக்கச் செய்வது இந்த அண்ணம்.

600. ஞானக்கண்ணில் பொருந்திய சோதியில் கண்களைப் பொருத்திப் பார்த்து சலனம் இல்லாமலிருந்தால் வான் கங்கை புலப்பட்டு சிதகாயப் பெருவெளியில் பெருந்தியுள்ள சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலாம்.

601. உடலுடன் பொருந்தியுள்ள உயிரை நினையாமலும், உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை நினையாமலும், சிவன் வீற்றிருக்கின்ற சிந்தயையும் நினைக்காமல், சந்திர மண்டலத்தில் விளங்குகின்ற நாதமயமான சக்தியை எண்ணாமலும் இருப்பவர்களின் அறியாமையை என்னவென்பது.

602. உள்ளத்தில் விளங்கும் சிவ சோதியை மேலேச் செலுத்தி சினம் என்ற தீயை நீங்குமாறு செய்து எல்லாவற்றிலும் நிற்கும் சிவ ஒளியை சுழுமுனையில் தூண்டி இருக்கும் மனத்தில் சிவன் மங்காத ஒளியாக இருக்கும்.

603. எண்ணாயிரத்தாண்டு யோகத்தில் இருந்தாலும் கண்ணுள் மணியும் அதனுள் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டறிய முடியாது. மனதில் ஒளி பொருந்தும்படி காண்பவர்க்கு கண்ணாடியில் உருவத்தைப் பார்பது போல மனத்தில் காணலாம்.

604. இரு கண்களின் பார்வையை நடு மூக்கின்மேல் பொருத்தி வைத்திடின் சோர்வு இல்லை. உடலுக்கு அழிவில்லை. மனதின் ஓட்டமும் அடங்கும். அறியும் இயல்பான தன்மையும் நான் என்ற முனைப்பும் இல்லாதுபோம். வெளியே செல்லும் அறிவு இல்லாது அவனே சிவன் ஆகலாம்.

605. இரு கண்களின் பார்வையை நாசியின்மேல் வைத்து உய்ர்வினின்று தாழாத பிராணனை உள்ளே அடக்கத் துன்பம் தரும் மனம் முதலியவற்றை நீக்கி யோக நித்திரை செய்பவர்க்கு பிறந்த உடல் பய்னைத் தரும். கூற்றுவனால் ஏற்படும் அச்சம் இல்லை.

606. மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுட்பமான ஒலிகளை தியானத்தை மேற்கொள்பவரால் மட்டுமே அறிய முடியும்.

607. கடல், மேகம், யானை ஆகிய வற்றின் ஓசையும் கம்பியின் இறுக்கத்தால் வீணையில் உண்டாகும் நாதமும் வானத்தில் ஏற்படும் மறையொலி சுருங்கிய் வாயை வுடைய சங்கு என்பதன் ஓசையும் திடமாய் அரிய வல்ல யோகியர் தவிர மற்றவருக்கு தெரியாது..

608. இறைவனின் இயல்பும் தேவர்களின் சேர்க்கையும் பாசத்தின் இய்க்கமும் பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமே. இதை உணரும் வல்லமை உடையவர்க்கு பூவில் வெளிப்படும் நறுமணம்போல் நாதத்தில் இறைவன் இருப்பான் என்பது புரியும்.

609. நாத தத்துவம் குடியும் இடத்தில் பராசக்தி. அங்கேதான் யோகத்தின் முடிவு உள்ளது.. நாதம் முடியும் இடத்தில் நம் மனம் பதியும். அங்குதான் நீலகணடர் இருப்பார்.

610. மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்னி, கதிரவன் அக்னி, திங்கள் அக்னி ஆகிய ஐந்து அக்னியையும் பயிலுபவர் இந்த ஐந்து தீயையும் ஆறு ஆதாரங்களில் அறிந்து தியானம் செய்து துதிக்கக்கூடிய நீலஒளியை இய்க்குகின்ற சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய தன் மாத்திரைகளில் ஒடுங்க பொன்னொளியில் விளங்கும் சிவன் திருவடியைச் சேரலாம்.

611. ஐம்பொறிகள் ஒய்வு எடுக்கும் பள்ளி அறையில் பகல் இரவு இல்லை. ஒளிமட்டும் விலங்கும். ஒளிமட்டுமே இருப்பதால் வேறு அக்னி கொளுத்தாமல் காக்கலம். இந்நிலையை அறியின் அது நான்கு காத தொலைவுடையது. நியமனத்தால் அடையப் பெறுவது. இருள் என்பதே இல்லை என்பதால் விடிவு என்பதில்லை.

612. சந்திரமண்டலம் அமைக்க வேண்டும் என்பதற்கு குந்தகம் ஏற்படாமல் ஒன்றுபட்டு சுழுமுனை நாடிவழி மேல் நோக்கிச் சென்ற யோகிக்கு அக்னி மண்டலம், கதிரவன் மண்டலம், திங்கள் மண்டலம் மூன்றும் ஒத்த வகையில் வளர்ந்து பின் எடுத்த உடல் உலகம் இருக்கும்வரை சீவனை விட்டகலாது.

613. அந்த மண்டலங்களின் தனமை என்ன வென்றால் அக்கினி, கதிரவன், திங்கள் என்ற மண்டலங்களின் அதிபதிகள் நான்முகன், திருமால், உருத்திரர் ஆகியோரின் ஆட்சி அம்மண்டலத்தில் இருப்பின் அது மற்ற மண்டலத்தார்க்கு உதவி செய்யும் தன்மையாகும்.

614. இயங்கும் உலகில் மயங்கித் தவிக்கின்ற உள்ளம் என்ற இருட்டறை தோன்றும் மூன்று மண்டலங்களில் பொருந்தி உச்சித்துளை வழியாக அதிக அன்பு கொண்டு ஆராய்ந்து மேலே சென்றால் துன்பம் நீங்கி சிரசில் மார்கழி விடியல் போல் வெளிச்சத்தைக் காணலாம்.

615. தாமத, இராச, சாத்துவிக ஆகிய முக்குணங்களின் இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேல் எழுப்ப வல்ப்புறக் கதிரவன் கலையை இடப்பக்கம் உள்ள திங்கள் கலையுடன் பொருந்தும் வண்ணம் தினம் காலை ஒரு நாழிகை செய்தால் உடம்பில் உயிர் அழியாது வைப்பான் சிவன்

616. அசைவை ஏற்படுத்தும் கொப்பூழ் சக்கரத்திற்கு நான்கு விரல்மேல் மேல் செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழே இருக்கும் அநாகதச் சக்கரத்தின் கட்ல் ஒலிபோல் பொங்கி எழும் ஒலியைத் தியானம் செய்ய வல்லவர் உடலின் ஆன்மாவை அறிவர்.

617. அறிவு எனும் ஆன்மா அழிவற்ற முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி மாயையை அருளால் கொடுத்துச் சிவனுடன் நீங்காமல் இருக்கும் அருள் சக்தி. என்பதை சிவநெறியில் பொருந்திய அன்பரே அறிவர்.

#####

Read 1567 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:11
Login to post comments