gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
வியாழக்கிழமை, 30 April 2020 10:29

திருவம்பலச்சக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#####


திருவம்பலச்சக்கரம்!

914. பன்னிரண்டு கோடுகள் குறுக்காவும் நெடுக்காவும் வரைக். அப்போது கட்டங்கள் 121 ஆகும் அங்ஙனம் அமைந்த சக்கரத்தின் நடுவில் இருக்கும் அறையில் சிவன் வீற்றிருக்கின்றான்.

915. சிவனாகிய பெருமான் வீற்றிருக்கும் இடம் சி என்ற எழுத்தாகும். அவர் பொருந்துவதற்கு மற்ற வ, ய, ந, ம நான்கும் திருப்பெயரை உ?ணர்த்தும் எழுத்துக்கள். சிவம் பொருந்தி இருக்கும் அமைப்பில் நாற்கோணத்திலும் சூழ் இருப்பவை. மற்ற எழுத்துக்கள் அவைகளுடன் பொருந்தி இருக்கும். நடுவில் சி இருக்க அதைச் சுற்றி உள்ள கட்டங்களில் மற்ற எழுத்துகள் ஆன வயநம விளங்கும்.

916. அரகர என்ற திருவெழுத்தை உச்சரிப்பவர்க்கு அரிய செயல் ஒன்றில்லை. எல்லாம் எளிமையாய் முடியும். இச்சிறப்புடைய அப்பெயரை ஓதிப் பய்னை அடைய பலர் அறியவில்லை. அரகர என்று தியானம் செய்தால் ஒளி உடலைப் பெறலாம். அரகர என்பதால் வினையின்மையால் பிறவி உண்டாகாது.

917. சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் சக்கரத்தில் நான்கு திசைகளிலும் நான்கு கோணங்களிலும் இருக்கின்றது. எட்டு இடங்களில் திருவைந்தெழுத்து பொருந்தும். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி என்பன சிவனின் வடிவங்கள். இதை வழிபட்டால் சிரசின் விந்து நாதம் பொருந்தி மந்திரமாகி வாக்கு ரூபினியால் கூடும்.

918. தேன் சிந்தும் தாமரையான முலாதரத்தில் இருக்கும் குண்டலியுடன் இருக்கும் சிவன் தன்மையை அறியாதவர் சிலர். சூரியன், சந்திரன் கலைகளைன் செயல்களை மாற்றிட அறிந்தவர் உடலின் உயிரை நிறுத்தும் இயல்பு உடையவர் ஆவார்.

919. திருவைந்தெழுத்து கோவிலாக விளங்கும். கோவிலாக இருக்கும் பருநிலை மாறிக் கோயிலாக எண்ணும் ஒளியை முதலாக விளங்கும் நுண்ணுடலில் சிவன் கோவில் கொண்டுள்ளான்.

920. ஆறு கோடுகளை உடையதாக இருக்கும் சக்கரத்தில் கட்டங்கள் ஐந்தாகும். அவற்றில் ஐந்து கட்டங்கள் இருபத்தைந்தாக நடுக்கட்டத்தில் அ பொருந்தும்,

921. கொப்பூழ் தாமரையில் சுருண்டு வளைந்து இருக்கும் குண்டலினி சக்தியை கீழ் செல்லாது அச்சக்தியை ஓங்காரம் இருக்கும் புருவ நடுவிற்குச் செலுத்தி அகரம் என்ற சிவம் அறிவு மயமாய் இருக்கும் இடம் சிரசாகவும் அதன் அனல் தன்மையை வெளிப்படுத்தும் இரண்டு கண்களில் விளங்கி சுவாதிட்டானத்தில் உள்ள அபானனான நகரமும் கண்டத்தில் வகாரமும் நாதத்தை உண்டாக்கும் சுழுமுனையை அடையுங்கள்.

922. பிரணவ மந்திரத்தை ஆக்ஞையின் இரண்டு பக்கமும் உள்ள சிவாக்கினியான ஒளியை நோக்கினால் அது அசைவினை ஏற்படுத்தி வாயில் பொருந்தி நிற்கும். அண்ணாக்கில் உள்ளே உண்டாவது நமசிவய ஆகும் அதுவே வெளியிலும் தலையைச் சு?ற்றியுள்ள பகுதியிலும் சிவயநம என விளங்கும்.

923. சிவாயநம என்பதை நான்கு முறை மாற்றி அமைக்கலாம். சிவயநம, மசிவாயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என்னும் மந்திரம் சிகாரம் தொடங்கி சிகாரம் இறுதியாக சக்கரம் அமையும்.

924. க்ஷ் என்ற எழுத்தைத் தவிர ஐம்பது எழுத்துக்களையும் அறை ஒன்றிற்கு இரண்டு எழுத்துக்கள் என் அடைத்து பிரணவ வட்ட மகாரத்தில் க்ஷ் என்பதை வைத்தால் ஐம்பத்தொரு எழுத்துக்களும் முறையாக அடைக்கப்படும்.

925. அச்சக்கரத்தின் வெளிப்பகுதி அரகர என்வும் அடுத்த உளவட்டத்தை அரிகரி எனவும் அடுத்த வட்டத்தில் அம்சம் என்ற அசபையும் முடிவில் சூலமும் இட வேண்டும்

926. சூலத்தின் முடிவில் சக்தி எழுத்து ஹ்ரீம் என்பதை எழுதி சூலத்தைச் சுற்றி ஒ என்பதை எழுதி சூலங்களுக்கு இடையில் ஐந்தெழுத்தை எழுதுவதே சிவனுக்கு பொருந்திய இடமாகும்.

927.திருவைந்தெழுத்து அ, இ, உ, எ, ஒ ஆகும் இவற்ரை சக்கரவட்டம் இடைவெளிமீது எழுதவேண்டும். அதைச் சுற்றி நம் பெயரான சிவசிவ என்ற எழுத்தை வட்டமாய் சூழ்ந்திருக்க் அமைக்க வேண்டும். சூலங்களில் இடைவெளியில் அ, இ, உ, எ, ஒ எழுதி அவற்றை சூழ ஒரு வட்டம் இட்டு சிவசிவ அமைக்கவும்.

928. உயிர் குற்றெழுத்துக்கள் வருத்தம் அடைந்த பின் புகழ் மிக்க மகா மதுவாகிய சிவசிவ என்பதை அடைக்கவேண்டும். இடைவெளி இல்லாமல் மேல்வட்டத்தில் அமைத்திட சக்கரம் முறையான அமைப்புடன் அமையும் சம்பத்தை தரும் சக்கரம் இதுவே ஆகும்.

929. அமைக்கப்படும் திருவ்மபலச் சக்கரத்தில் நிலம் முதல் வான் வரை செல்லப்படும் பூதங்கள் ஐந்தினுக்கும் உரிய ல, வ, ரம், ய, அ ஏற்ற இடத்தில் அமைக்க வேண்டும்.

930. ஸ காரத்தை ஊ காரத்துடன் சேர்த்து விந்துவும் நாதமும் பொருந்த அமைத்து மேலே செல்லும்படி செய்து சிவயநம என உச்சரித்தால் உடலில் உள்ள ஆனவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் அகன்றுவிடும்.

931. ஸௌ என்பதில் சிவனும் இருப்பான். உமையும் சிறப்புடன் விளங்குவாள். சிவசக்தி ஈசானத்தில் விளங்குவதை புண்ணியர் நாதமாக விளங்குவதை அறிவார்கள்.

932. ஈசான திசையை அடைந்து ஹர என்ற சிவாக்கினியைத் தூண்ட ஹரி என்ற ஞானலிங்கம் தோன்றும். ம என்ற சக்கரத்தினின்று சுழுமுனைவழி தொண்டைக்குமேல் பிராணவாயு போவதை உணரலாம். அப்போது தொம் தொம் என்று கூத்து இடும் ஒளி வடிவினையுடைய கூத்தன் தோன்றுவான்.

933. சிவலிங்கம் அமைவதில் ஹம்சம் என்ற எழுத்து குறிக்கும் சிவசக்தி விளைவாக உலகப் பொருள்கள் யாவும் நுண்மையாய் அமைந்திருக்கும். இப்படி காரண வடிவாய் கலந்து நிற்பதை அறிபவர் இல்லை. அவ்வாறு அறிபவரிடம் சக்தியை அடக்கி நிற்கும் சதாசிவன் திகழ்வான்.

934. நந்தியெம்பெருமான் ஐந்தெழுத்தின் வடிவாய் இருக்கின்றான். ஐந்து சொற்களின் முதல் எழுத்தால் ஆனது திருவைந்தெழுத்து. இந்த ஐந்து எழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படுகின்றன. அவைகளினுள் நுட்பமாய் சிவன் வீற்றிருக்கின்றான்.

935. கூத்தனின் பெருமை சொல்லி அடையாளங்களைப் பற்றிச் சொன்னால் கூத்தனின் பெயரின் முதல் எழுத்தை ஓதியவர் அந்தச் சிவத்துடன் பிரிவில்லாது நிற்பர் என்பதுவே கூத்தனைக் காணும் நெறியாகும்.

936. அகரக் கலையின் திசையான மூலாதாரத்தில் இருக்கும் மூலக்கனலை எழுப்பி அத்திசையில் இருக்கும் ந காரத்த்தை அறிந்து செபித்தால் அந்த திசையில் ம/றைந்து கிடக்கும் சிவனை நினைத்து உறவாக்கிக் கொண்டேன்.

937. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பினால் அது அருளை வழங்கிச் சகசிரதளத்தில் பொருந்தச் செய்யும். அங்கே அருளால் உதித்த நாதத்தையும் அறிய்த் தானே உருவாகும் ஒளி சிரசில் பொருந்தும்.

938. சிவன் ஒளிமண்டலத்தின் வடக்குத் திசை அதாவது சிரசின் இடப்பக்க மூளையில் எழுந்தருளியபோது இந்திரத்திசையான கிழக்கிலும் ஒளி விளங்கும். தலையின் மேல் விளங்கிய ஒளியில் அக்னி நிறமுடைய சிவன் மணியின் ஒளிபோல் தோற்றம் கொளவார்.

939. உயிர்களால் வேண்டப்படாமல் சிவம் தனிமையானபோது குளிர்ந்த சந்திரகலையில் இருக்கும். யாராலும் அறிவிக்கப்படாமல் தானே அறிவுடன் இருக்கும். சொல்லப்போனால் எல்லா நற்குணங்களும் பொருந்தி இருக்கும். அவனைச் சிந்திப்பவர்க்கு தன் மறைபினின்?று வெளிப்பட்டு அருள் புரிவான்.

940. சிவத்தின் தன்மையைக் காணவேண்டும் என அளிக்கப்பட்ட பிறவியில் மற்றவர்கெல்லாம் மதிப்பு ஏற்படும் வகையில் சிவதன்மையைப் பெறுவர். நாத வடிவினனான சிவனின் ஐந்தெழுத்தில் அடங்கியிருக்கும் நாத வடிவினனான சிவன் திருவைந்தெழுத்து வடிவம் பெறும்.

941. மந்திரத்தில் சொல்லிய வண்ணம் பாதம் ந காரமாய் இருக்கும். கொப்பூழ் சக்கரத்துள் ம அமையும். வ என்ற சக்தியை வாயாய்க் கண்டபின் அமையும் அச்சுடர் சிவத்தின் தனமையுடையது.

942. இரண்டாகவும் ஒன்றாகவும் உள்ள பஞ்சாக்கரத்தின் இயலபை அறிந்தவர்களிடம் சொல்லப்பட்ட இயல்புகளுடன் பரம்பொருள் சிவம் இருக்கும். ஓ என்ற பிராணவமாய் உணர்ந்து ஒளி பொருந்தத் தியானித்தால் சக்கரங்களால் ஆன நாதமய்மாய் எங்கும் விரிந்து இருக்கும்.

943. பிரணவ நாதம் பரவி விரிந்து எல்லா உயிர்களுக்கும் விரும்பியவற்றை அளிக்கும் அம்மந்திரம் நல்ல வாய்ப்பு ஏற்படும்போது சுற்றியிருக்கும் பகையான இருளை நீக்கும். அது ஓம் என்பதாகும்.

944. ஓம் என்று பிரணவ யோகத்தை எழுப்பி அந்த ஒளி மண்டலமே தான் என்றறிந்து சுழுமுனையிலே இருக்கும் ஒளியே நந்தியெம்பெருமான் என அறிபவர்கள் திருச்சிற்றம்பலத்தைப் பார்த்து மகிழ்ந்திருப்பவர்கள் ஆவார்.

945 திருவம்பலச் சக்கரத்தினுள் ஐந்து எழுத்தும் அழகாக ஐந்து அறைகளில் பொருந்தும். உயிர்மெய்யான ஐம்பத்தோர் எழுத்துக்களும் அவற்றுள் பொருந்தி இருக்க மேன்மையுடைய சிவன் அங்கு பொருந்துவான்.

946. எல்லா மந்திரங்களிலும் முதலாவதான ஐந்தெழுத்தில் நடுவில் இருப்பது ய ஆகும். ஐந்தெழுத்தை யநவசிம, மவயநசி, சியநமவ, வசிமயந என நான்கு வகையாக செபிக்க வேண்டும். எழுத்துக்களை நிலைமாற்றி செபித்தால் பொருள் உண்மை நன்கு புலனாகுவதற்காகும்.

947. திருவைந்தெழுத்துக்களாய் நின்றவையே பஞ்ச பூதங்களை இயங்கச் செய்யும். அந்த எழுத்துக்கள் திரு ஐந்தெழுத்தின் வடிவினைப் புலப்படுத்தும். சக்கரத்தில் எழுத்துக்கள் மு”றையாக நின்றால் ஐந்தெழுத்தின் வடிவமான சிவமும் அங்கு சிறந்து விளங்கும்.

948. பெருவெளியில் இருக்கும் நாதமயமான சக்கரம் உலகம் முழுவதும் பரவும் தன்மையுடையது. சித் விளங்கும் திருவம்பலத்தை இடமாகக் கொண்டு மறைவாக உள்ள தலைவன் சிவன். ஒரு கன்றானது பசுவின் மடியில் ஊட்டியபோது அப்பசு பாலை அளிப்பதுபோல் குருமண்டலத்திலிருக்கும் சிவனும் சிரசின்மீது நின்று அமுதத்தை அளிப்பான்.

949. திருவம்பலச் சக்கரத்தின் ப்யன்கள் நிறைய உண்டு. நான்முகன், திருமால் உருத்திரன் மகேசுவரன், சதாசிவன் என்ற ஐவரும் உள்ளனர். கூத்தனை உணர்த்தும் திருவைந்தெழுத்தான நமசிவய என்பதும் அங்கு உள்ளது, இறைவனின் திருக்கூத்து இங்கிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது.

950. சிதகாயப் பெருவெளியில் சந்திரக்கலை உள்ளது. பெருவெளியில் உள்ள சகசிரதளத்தில் உ காரத்தால் சூழப்பட்ட அக்கினிக்கலை உள்ளது. மூடியிருக்கும் சகசிரதளத்தை நெகிழச் செய்து அசைக்கும்படி உள்ள கொம்புவினால் விந்துநாதம் உண்டாகும். அதை தெளிந்து பெறும் முறையில் சக்கரம் அமைந்துள்ளது.

951. கண்களுக்கு இடையே புருவ நடிவில் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை மூலவாயுவினால் மாற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து சிவக்கினியிலிருப்பவனை தியானம் செய்தால் பிரணவத் தலைவன் சதாசிவம் விருப்பமுடன் அங்கு எழுந்தருள்வார்.

952. உடலைக் கடந்து சென்றால் அ காரமான சந்திரக்கலை இருக்கும் சிதகாயப் பெருவெளியில் உரிய பொருளை அறிய உயிர்களிடையே உள்ள குற்றமான இருளை மாற்ற ஒளியான சிவம் தோன்றும். அது உயிர் குற்றத்தைப் போக்கும் பொன் போன்று ஒளிரும் குளிகையாகும்.

953. அ காரக்கலையான சந்திரன் இடக்கண்ணில் தோன்ற உ காரக்கலையான சூரியன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் மாறி ஈசான திக்கில் அ உ ம என பொருந்தினால் உ காரத்தால் உணர்த்தப்படும் ஒளி மறைவிலிருந்து வெளியாகும். ம ஆகிய அக்னி உடலில் வழிபட்ட குரு மண்டலத்தில் உள்ள இறைவனின் இயல்பான பெருமையை சொல்ல முடியாது.

954. உலக உயிர்களின் அறிவு நீரில் எழுதிய எழுத்தைப்போல் நிலைத்து நில்லா இயல்பை உடையது. சிதகாயத்தில் இருக்கும் ஓர் எழுத்தை கண்டு அறிபவர் இல்லை. அப்படி அறிந்தவர்க்கு நான்முகனால் சிரசில் எழுதப்படும் எழுத்தால் பிறவி மீண்டும் ஏற்படாது.

955. சுழுமுனையில் இருக்கும் சிவன் இடைகலை பிங்கலையாய் ஐம்பது எழுத்துக்களாய் விரிந்து இருக்கின்றான். உயிரானது மயக்கத்தை அடைந்து சந்திரனைப் பற்றியபோது ஐம்பது எழுத்துக்களும் விளங்கி இருக்கும். சிரசின் மீது இருக்கும் சிவன் வேதத்தால் புகழ்ந்து சொல்லப்பட்ட பிரணவத்தை எழுப்பி சசிகரதளத்தின் நடுவில் நிறுத்தியவர்க்கு வீடுபேற்றை அளிப்பான்.

956. மணிபூரகத்தின்கீழ் உள்ள சுவாதிட்டான சக்கரத்தில் நல்ல எழுத்தாகிய ந காரம் உள்ளது. அந்த எழுத்தின் பயனை பாவிகள் அறியவில்லை. நான்முகனாலும் அதை அறிய இயலாது. அந்த எழுத்தில் சக்தியும் சிவனும் மகிழ்வுடன் இருப்பர்.

957. அம்சம் என்பது மூலாதாரத்தில் விளங்கும் மந்திரம் அந்த அம்சம் மந்திரத்தை அறிபவர் இல்லை. அம்ச மந்திரத்தை அறிந்தவர் உடம்பினது தோற்றத்திற்கு முன்பே தோன்றிய்து என்பதை அறிவார்

958. சந்திரக்கலை உடம்பில் மூலாதாரத்திலிருந்து தோன்றுவதாகும். அது உடம்பின் தீ யால் தோன்றுவது. அந்தியும் சந்தியும் சந்தியா வந்தனம் செய்பவர் சூரியன் சந்திரன் சேரும் நேரத்தை அறிந்தவர் இல்லை. சந்தியா தேவியை வணங்குவதாக் கூறி வீண் ஆரவாரம் செய்பவர் அவர்கள்.

959. அம்ச மந்திரம் உபாசனையால் உடலினுள் எங்கும் பரவும் ஆற்றல் பெற்றது. மூலாதாரத்தில் தொடங்கி மற்ற ஆதாரங்களை ஊடுருவிச் செல்லும் உயிர் தன்மையுடையது. ஒளிமயமாய் இருப்பதால் போவதும் வருவதும் கிடையாது. ஒளியை நினைத்து நெகிழும் மனிதர்களின் உயிரில் பொருந்தி ஐம்பொறிகளை நடத்தும் அங்குசமாக திகழும்.

960. கண்ணுக்குத் தெரியாத பர வெளியில் தோன்றும் நாதம் அந்த ஒலியில் தொன்றிய ஒளியான விந்து ஆன்மாவான ய வை இருகண் பார்வைக்கும் நடுவாய்க் கொண்டு தியானிக்க பிரணவம் சிறப்புடன் விளங்கும்.

961. தலையின் வடக்குத் திசையான இடப்பக்கத்தில் ஒளியும் ஒலியும் பொருந்துமானால் பரமாகாயத்தில் ஒளி பெருகும். இயற்கையாக ஒலித்துக் கொண்டிருக்கும் பிரணவம் வேள்விப்பொருள் ஆகும்.

962. ஆறு எழுத்து மந்திரத்தை ஓதும் அறிவுடையவர்கள் இதனால் அமையும் நிலையை அறியமாட்டார்கள். ஐந்தெழுத்தை செபித்தால் ஓர் எழுத்தான பிரணவத்தை தோன்றச் செய்யவில்லை. பிரணவத்துடன் வேறு எழுத்தைச் சேர்க்காமலே பிரணவ வித்தையை அறிவார்க்கு பிரணவத்தாலாயே உயிரின் விளக்கத்தைக் காணலாம்.

963. எழுத்துக்கள் எல்லாம் வாய் திறத்தலால் பிறக்கின்றன. அப்போது அகரத்துடன் உயிர் எழுத்துக்கள் பதினைந்தும் மெய்யெழுத்துக்கள் முப்பத்தைந்தும் கூடி எழுத்துக்க?ள் ஐம்பத்தொன்/றாகும். சோதியை உருவாக்கும் அகரக்கலையில் ம?ற்ற எழுத்துக்கள் நுட்பமாக இடம் பெற்றுள்ளன. நாத எழுத்தான் உ வை அதனுடன் சேர்ந்து அறிவீர்.

964. அகரமான விந்து விரிந்தும் சுழன்றும் வான்மண்டலத்தில் தொடர்பை உண்டாக்க அப்பந்தத்தை தரும் குண்டலினி அகரம் முதல் உன்மனி வரை பதினாறு கலைகளாக விளங்குகின்றாள். அவளே கழுத்து கை கால் உடம்பாய் ஐம்பத்தோர் எழுத்துக்காளாகவும் ஆவாள்.

965. பிரணவம் நீங்கிய ஐம்பது எழுத்துக்கள் வேதங்களும் ஆகமங்களும் ஆகின. அந்த ஐம்பது எழுத்துக்களால் தெரிவிக்கப்படுவது பிரணவமேதான் என தெரிந்தபின் அந்த எழுத்துக்களைக் கடந்து பிரணவத்தை அறிந்து சிவ சொருபமாய் நிற்பர்.

966. நமசிவய என்ற ஐந்தெழுத்துக்கள் மண், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என ஐந்து பூதங்களையும் தோற்றுவித்தது. அருவமான உயிர்கள் இந்த ஐந்து பூதங்களுடன் பொருந்திவாழ் ஏற்ற் யோனிகளைப் படைத்து அருளினான். பரந்த இந்த உலகை ஐந்து பூதமயமாய் இருந்து தாங்குகின்றான். இந்த ஐந்து எழுத்தாலே உயிர்களின் இடையிலும் திகழ்கின்றான்.

967. படைக்கப்படாத இறைவனின் பெயரை மனச் சோர்வு இன்றி செபித்தால் இன்ப மயக்கத்திலிருந்து தெளிந்து எழுவர். சடைமுடியுடைய சிவனின் அருள் ஆன்மாக்களைச் சார்ந்துள்ள வினைகளையும் அவ/ற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்க ஏன்னுடன் வாருங்கள் என் பெருமான் அழைப்பான்.

968. சிவன் அனுபவிக்கும் ஒளிப் பொருளாகவும், காலதத்துவம் கடந்த நித்தியப் பொருளாகவும், இசையுடன் கூடிய வேதப் பொருளாகவும், பாடலாகவும் இருப்பான். வான் தேவர்கள் வழிபட அதை ஆராயந்தால் ஐந்தெழுத்து வடிவான நமசிவய அது என்பதும் தெரியும்.

969. பரந்த உலகத்தில் காட்சி தருவது நமசிவய என்ற ஐந்தெழுத்து பெருமையே. கோவில்கள் இருப்பதும் ஐந்தெழுத்து பெருமையாலே ஆகும். அறநெறியில் நீதி நிலைபெறவதும் ஐந்தெழுத்தின் பெருமை. பெருமான் ஐம்பூதங்களிலும் இருந்து அவற்றிற்கு காவலாய் உள்ளான்,

970. அகரமாகவும் வானமாகவும் அதற்குமேல் உள்ள நாதமாகவும் இருக்கும் சிவன் ம காரமாகவும், ந காரமாகவும், பெருமைமிக்க சி காரமாய் தீயாய் உயிரான ய காரமாக உள்ள பிரணவ உடம்பான சிவன் ஒளிமிக்க சுடராகும்.

971. ஐந்தெழுத்தின் நான்காம் எழுத்து வ காரம், இதுவே உலகை உருவாகக் கொண்டு இயங்குவதாகும். அதனுள் உலகம் அடங்கி அதன் ஆணையின் வழி நடக்கும். நான்காம் எழுத்தை முதலாகக் கொண்டு நமசிவய எனச் செபிப்பவர்கள் நல்ல நெறியில் நடக்கும் செல்வர் ஆவர்.

972. சகதி ஆன்மாவான என் உள்ளத்தை விரும்பிப் பற்றினள். அந்த உள்ளத்தில் விரும்பி அமர்ந்தாள். நாம் சிவனுக்கு அடிமை அன்பதை ஆய்ந்து தெளியுங்கள். பிரணவம் என்ற மந்திரத்தைப் பற்றுங்கள். உலகப் பற்றை நீக்கி மற்றப் பற்றுகளையும் விட்டொழித்தேன். தெளிந்த ஞானம் பெற்றேன்.

973. உயிர்வாழத் தானியத்தில் பொருத்தி அன்னமயமாகச் செய்ததை ஓம் குண்டமான வயிற்றுத் தீயில் ஆகுதி செய்யும் சக்தி நாமம் நமசிவ என இருப்பவ்ர்க்கு செயலைத் தூண்டும் குண்டலினி சக்தியாக விளங்குவாள்.

974. நல்வினையால் கிடைத்த பரிசே சிவயநம் என்ற ஐந்தெழுத்து. பகல் வர உயிர்களின் விருப்பிற்கு ஏற்ற்வாறு இரவுபகலாக நடுவே இடம் கொண்டு நடிப்பவன். அவன் வான், மண் நீர், தீம், காற்று சூரியன், சந்திரன் ஒளி ஆகிய எட்டுப் பொருளாகவும் இருக்கின்றான்.

975. அ பிரணவம் உயிராகவும் உ பரமாகவும் ம மலமாகவும் மூன்று பதங்களில் வரும்.. சி சிவமாய் வ வடிவுடைய சக்தியாய் ய உயிராய் சொல்லப்படும்.

976. ந காரம் நெற்றியில் இரண்டு கண்களுக்கு நடுவிலும் ம காரம் கழுத்திலும் அசபை சக்தியை உசுவாச நிசுவாசத்தில் பொருத்தி பிரணவத் தலைவனை சுழுமுனையில் இருக்கும்படி செய்தால் அக்னிக் கலைக்குரிய் உள்ளத்தை விட்டு நீங்காதிருப்பான்.

977. உடல் என்ற காட்டில் ஐந்து யானைகளாக ஐம்பொறிகள் இருக்கின்றன். அந்த யானைகளை அடக்க ஐந்தெழுத்தான் நமசிவய அங்குசம் ஆகும்.அந்த ஐந்தையும் ஐந்தெழுத்தைக் கொண்டு அடக்க வல்லார் ஐந்துக்கும் முதலான ஆன்மாவிடம் சேர முடியும்.

978. ஐந்து கலைகளில் மேதை முதலிய சந்திரக்கலை பதினாறில் கொப்பூழில் உள்ள் ம காரம் பிருதுவியாய் குறியில் காமக் கழிவு செய்வதை மாற்றி ந வைப் புருவத்தின் நடுவில் பொருந்தி அங்கு இருக்கும் ஒளியுடன் சேர்க்க தெரிந்தவர்க்கு உடலால் செய்ய வேண்டிய செயல் வேண்டியதில்லை.

979. சி என்ற சிவத்துடன் வ என்ற சக்தியுடன் உயிர்பொருந்தியிருப்பதே சிவயோக அறிவு./ அது அரிய ஞானம். மல கன்மத்திலினின்று நீங்கித் தெளிவு பெற்ற உயிர்கள் மேலே சொன்ன அளவில் திருவருளில் இருந்து சிவமே ஆவது என்பது வீடுபேறே ஆகும்.

980 அதிகமான இன்பத்தை தரும், ஐந்தெழுத்தின் குணத்தை அறிந்து மனத்தையே இடமாகக் கொண்டு இருந்தால் பரமும் அபரமும் ஆன சதாசிவ்ர் அல்லது சிவசக்தி விளங்குவர். வஞ்சகம் இல்லாத உண்மை. உடலுக்கு அழிவு இல்லை. சிவத்திடம் அடைக்கலம் ஆவதே சிவத்தை அடையும் வழி.

981. சந்திரக்கலை அறிந்து சிவய என்பதை தெளிந்து நினைக்க சந்திரக்கலையால் சிவன் வடிவைப் பெறுவர். சிவகலையையும் சிவய என்ற மந்திரப் பொருளையும் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் சிவவடிவாய் சந்திர மண்டலத்தில் இருப்பர்.

982. சிவாயநம என்பதில் ய இடையில் உள்ளதை அறிந்து பிரணவமாக சுழுமுனையில் ஒலியைக் கண்டால் அசபையின் தலைவன் சிவன் வெளியில் காட்சி தருவான்.

983. விரும்பும் செயல்கள் நிறைவு அடைய நமசிவய மந்திரத்தை நாடுங்கள். முதல்வரான உருத்திரர் வலிய வினைகளைச் செய்வார். சி காரத்தை அறிய வல்லார்க்கு சதாசிவரே முதல்வனான உருத்திரனை தொழில்படச் செய்வார்.

984. நட்பாக சிவத்திடம் பொருந்தினால் உயிரானது பரமாகும். சிவத்தை நட்பால் அடைய உடலை வருத்தி தவங்கள் செய்யாது இருக்க ஆன்மா சிவத்துடன் சார்ந்து பரமான தன்மையை அடையும். சிவத்திடம் பொருந்தி உணர்பவர்க்கு அந்தச் சிவமே தான் என்ற தெளிவு ஏற்படும்.

985. இரு கண்களான சந்திரக்கலை, சூரியக்கலைகளைச் சேர்த்து பார்த்தால் தோன்றும் சிவமான ஒளியை தீயாக குரு மண்டலத்தில் பார்த்தால் அசைந்து கொண்டிருக்கும் ஐம்புலன் அறிவும் அவற்றைத் செயல் படுத்தும் நான்முகன் முதலான ஐவரும் அம்மண்டலத்தில் இன்பம் அடைவர் என்பதால் குருவைத் தேடி அவர் அருளைப் பெருக.

986. எட்டும் இரண்டும் இன்பம் அளிகும் நெறி என்பதை அறிவிலாதார் அறியவில்லை. எட்டும் இரண்டும் ஆறையும் நான்கையும் கூட்டினால் வருவது எனச் சித்தாந்த சன்மார்க்க நெறி உறுதியாக கூறுகின்றது.

987. எட்டுக் கோடுகளின்மேல் எட்டுக் கோடு வரைந்தால் நாற்பத்தொன்பது கட்டங்கள் அதன் நடுவில் சி பொருந்தினால் சுற்றிலும் உள்ள நாற்பத்தெட்டு கட்டங்களிலும் மற்ற எழுத்துகளை நிரப்பி திருஐந்தெழுத்தை உச்சரிப்பாயாக.

988. நிருதி முதலிய அட்டதிக்பாலகர்கள் எட்டு பைரவர், நந்தி முதலிய சிவகணங்கள் எட்டு ஆகிய மூவகையினரும் நல்வழிப்படுத்துபவர்கள். அ கரம் முதல் உயிர் எழுத்துக்களும் விந்து நாத எழுத்துக்களும் எல்லாம் சேர்ந்து சிவ சக்கரம் ஆகும்.

989. ஆறு ஆதாரங்களும் ஒன்று பட்டு பராபரம் ஆவது பெரிய தவம். இதை அறிந்தவர் தம்மைச் சிவ அடிமை எனக் கண்டு தற்போதத்தைக் கைவிடுவர். அவருடன் கூடி சிவன் அருளைப் பற்றி எல்லா செயலிலும் பேசுவேன். வேறொன்றும் அறியேன்.

990. சிவன் மூவராகவும் ஐவராகவும் திருச்சிற்றம்பல அறையில் இருப்பார். அந்தச் சபை ஆறு ஆதாரங்களும் மகேசுவர சதாசிவம் பொருந்திக் க்விழ்ந்துள்ள் சகசிரதளம் ஆகும். அங்கு விந்து நாதமும் இருக்க அந்த நிலை சங்கரன் எனப் பெயர் அடையும்.

991. விந்து மயமான சந்திரக்கலையை பிருதிவியிலிருந்து கணக்கிட்டு சந்திரக்கலை பதினாறையும் நிலைப்படுத்தி மறுபகுதியான பன்னிரண்டு கலைகளில் இருக்கும் சூரியனைச் சேர்க்க பத்தாம் கலையான அக்னி அமையும்.

992. சகசிரதளத்தில் இறைவனைக் கண்டேன். அகத்தினுள் சிவத்துடன் ஒன்றி நின்றபோது உடம்பை விட்டு அழியாத சிவசக்கரத்தின் வழியே சென்று எனக்கும் சிவனுக்கும் உள்ள அடிமை உறவு அறாமல் சிவயநம் என செபித்துக் கொண்டிருந்தேன்.

993. புண்ணிய செயலால் வான் உலகம் சென்று அங்கு பூவால் சிவனை அர்சித்து சிவ மந்திரத்தை கணித்து நிறபர். சிவனுக்கு அடிமை என்று நன்றி உணர்வுடன் கூறுவர். இறைவன் பெயரை கண் போல் கணித்து அவருடன் கலந்து நிற்பர்.

994. ஆறு எழுத்துக்களும் ஆறு எல்லைகளை உடையது, ஆறை நான்கால் பெருக்க இருபத்திநான்காகும். சாவித்திரியின் முதல் எழுத்து பிரணவமான எழுத்து. இதை அறிந்து வடிவத்தை மாற்ற அறிந்தவர் பிறவியற்றவராவார்.

995. எட்டு அறைகள் வெளியிலும் ஒன்று உள்ளேயும் இருக்க அமைத்து பொருந்திய சி காரம் என்ற அக்கினியை எட்டு அறைகளிலும் சுர வடிவாய் பரவியுள்ளது என கருதி பிரணவத்தால் சூழ இந்த எல்லைக்கு உட்பட்டு நினைக்கும் உயிர்கட்கு உமையின் கணவன் வெளிப்படுவான்.

996. நமசிவய என்ற பரு ஐந்துடன் தியானம் செய்து அ முதலாகிய எட்டு அறைகளை அறிந்து அவற்றினிடையே பொருந்தி உ காரத்தை முதல் கொண்டு உணர்பவரின் உச்சியில் உ காரமாகிய சக்தியின் தலைவன் பொருந்துவான்.

997. அரசம் பலகைமீது நேராகப் பொருந்தி ம காரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையிலும் அடைத்து வினைசெய்பவன் தேன் மெழுகை ஒலையில் பூசி சுடரில் சிறிதே வெப்பப்படுத்த அது தம்பன கன்மமாக அமையும்.

998. கொன்றை மரப்பலகை கருவியாகக் கொண்டு அதை யமன் திசையான தெற்கில் அமைக்கவும், தீமையான பகையை ஒழிப்பதற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் ம கரம் மட்டும் எழுதவும். மறைப்பற்ற ஐங்காயத்தை அதன்மீது பூசி அடுப்பில் அதை தலைகீழாக புதைத்தால் மோகன சக்தி ஏற்படும்.

999. வடமேற்குப் பக்கமான வாயு திசையில் ஐயனார் கோவிலில் தொழுமாறு புரசப் பலகையிலே காரியத் தகட்டில் நஞ்சைப்பூசி விந்து என்ற வட்டம் அமைத்து அதன் மேல் ஓங்காரம் சூழ உச்சாடனம் செய்க.

1000 நண்பகல் வேளையில் ஒளியுடைய தென்கிழக்கு மூலையில் பச்சைப் பனை ஓலையில் ஐங்காயத்தைப் பூசி முச்சத்தி அல்லது சுடுகாடு ஆகிய இடம் ஒன்றில் புதைத்து வைத்தால் பகையை அழித்து மரணமாகவும் அமையும்.

1001. மகரம் முதலாக வரையப்பட்ட ஐந்தெழுத்து ஏட்டின் மீது அரிதாரத்தைப் பூசி அதன்மேல் அ கார உ காரங்களை எழுதி வசியத்திற்கு நினைக்கப்படும் பொருந்திய வில்வ பலகையில் வைத்து எண்பதாயிரம் உரு ஏற்றவும்.

1002. ஆகர்ஷண முறையானது ஓலையில் ய கார முதலாக மாறி அமைத்து அந்த ஐந்தெழுத்தை எழுதிப எண்ணுவதற்குரிய வியாழக்கிழமையில் வேள்ளிப் பொடி பூசி வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்குத் திக்கை நோக்கி அமர்ந்திருந்து எண்ணாயிரம் பிரணவ தியானம் செய்க.

#####

Read 1820 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25555864
All
25555864
Your IP: 44.200.101.84
2023-09-26 15:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg