gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

இரண்டாம் தந்திரம்! (20)

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:03

பெரியாரைத் துணைக் கோடல்!

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

#####


பெரியாரைத் துணைக் கோடல்!


.543. யாத்திரை செய்பவருடன் சேர்ந்து நானும் நடைப் பயணம் செய்வேன். பாடுபவரின் ஒலியைச் செவி வழி கேட்டு இன்புறுவேன். உள்ளத்தில் இறையை தேடி அடையவல்லார்க்கு அருளும் மகாதேவர் பிரானோடும் பொருந்தும் வல்லமை உடையார் திருவடியை நானும் பொருந்தி நிற்பேன்.

544. படரக் கொம்பு இல்லாமல் துவண்டு விளங்கும் தளிரைப் போல் வாட்டம் அடையினும் மன உறுதி உடையவர் உள்ளத்தில் அன்பு வைத்து அந்த வழி செல்வதில்லை. நெஞ்சமே! தனித்து துயரப்பட்டிருந்து என்ன செய்யப் போகின்றாய்! பெரியாரை நாடி நான் செல்லும்போது உடன் வருவாயாக!

545. உண்மையை விரும்பும் சான்றோர் தேவதேவனை விரும்பி அவனுடன் பொருந்துவர். அவர் எல்லாவற்றையும் கடந்து சிவ தத்துவத்தில் நிற்பர். நல்ல நெறியில் ஒழுகி அடைந்தவர்க்கும் உபதேசம் செய்கின்ற பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பமாகும்.

546. பெரியோருடன் கூடியவர் சிவனின் உறவினராய் உலகநடையில் ஒழுகுபவர்களால் புகழப்படாதவனான எம்பெருமான் திருவடியை அடைவர்.. அமைதியாய் ஆன்மாவின் சிவனைத் துதிப்பவர்க்கு அருள் செய்கின்ற பெருமானை அடைந்து அந்நெறியில் இரண்டறக் கலந்து நிற்பதும் பெரியார் கூட்டத்தில்தான்.

547. எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்க்கு அடியாராய் உள்ளவர்களுடன் கூடி சோதியில் கலந்து சிவபுரத்தில் பொருந்தி நிற்பவர் என்னைக் கண்டு பெருமானிடம் விண்னப்பம் செய்ய, சிவன் என்னை அழைத்து வருமாறு பணிக்க கடைவாயிலில் உள்ளவர் அடைக்கல முத்திரை காட்டி அழைத்தனர்.

548. சன்றோரைக் கூட வல்லபவன் அருமையானவன். பெருமையுடைய ஞானம் வாய்க்கப் பெற்றவனோ பிறவிச் சூழலிருந்து நீங்க பெறுவான். உரிமையுடன் பழகும் தன்மையிலே வல்லான் சிவனை உள்ளத்தில் உணர்ந்து அழிவில்லாமல் வாழ்வான்.. அருமை பெருமையுடைய பெரியோரின் துணையைப் பெறுவது பெறும் பேறு ஆகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:01

மயேசுர நிந்தை! பொறையுடைமை!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

மயேசுர நிந்தை!

537 சிவனடியார்கள் உலக இயல்பிற்கு மாறுபட்டவர்கள் பசி வந்தபோது இரந்து உண்டு வழ்வர். அந்த அடியார்களை வெறுக்கத்தக்க பேசியவர்கள் மிகவும் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவர் ஆவார்.

538. ஞானியரை நிந்திப்பவனும் நல்லவர் எனப் போற்றுபவனும் முறையே தீவினையையும்   நல்வினையையும்  நீங்கிடுவர்.. அச்சிவ ஞானியரை அடைந்தார்க்கு சிவபோகம் கைகூடும்.

\#####

பொறையுடைமை!

539. மெய்யான நெறியைப் பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளுடன் கூட வேண்டும் என்ற அவா ஆன எண்ணமாகிய பல்லி இருக்கின்றது. அது மூக்கு, நாக்கு ஆகியவற்றின் செயலை நீக்கும். அப்பொது சிதைகின்ற சிந்தையில் மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பொழியும். அது பொறுமையாகும்.

540. பால் நிறத்தை ஒத்த சிவனின் திருவடியை வணங்கி அவனிருகும் மண்டபத்தை சூழ்ந்த அழிவற்ற தேவர்களிடம் பொறுமயையுடைய இந்த ஞானி திருமாலுக்கும், பிரமனுக்கும் தலைவன். உலக உயிர்களில் சிறப்புடையவன் என்று சிவபெருமான் கூறி அருளினான்.

541. மெய் ஞானம் கைகூடப் பெற்றவரை தம்முடைய படைசூழ சென்று அவர்க்கு ஏவல் செய்வார் மன்னன். அவரின் உடலை மாற்றி அமைக்கும் தேவ தேவனை மற்ற வழிகளை நீக்கி ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.

542. உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அவர் உடலிலும் உள்ளத்திலும் பலவகையான இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து பக்குவம் செய்பவன் சிவன். மூலாதாத்திலிருந்து எல்லா ஆதார நிராதாரங்களில் கூத்து ஆடும் பிரானுக்கு அதன் பயனாக எல்லையில்லாத ஒருமைப்பாடு ஏற்படும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:59

குரு நிந்தை!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

குரு நிந்தை!

530. கயவர்கள் ஞானம் பெற்றவரை பேண மாட்டார்கள், உடனிருப்பவரை வருந்தும்படி செய்வர். கற்று அறிந்தவரிடம் பொருந்தியவரே ஞானம் அடைந்தவர். இவரன்றி வேறு யாரும் இப்பேற்றைப் பெறுதல் முடியாது.

531. ஓர் எழுத்து மொழியான ஓம் என்ற பிறணவத்தின் பொருளை மாணவன் உணருமாறு செய்த பெருமை கொண்ட நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் வருந்தும்படிச் செய்தவர் ஊர் சுற்றித் திரியும் நாய் பிறவியாய் பிறப்பர். பின் ஒரு யுகம் பூமியில் புழுவாய் கிடப்பர்.

532. இல்லறத்து ஞானிகளும் துறவறத்து ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி கேட்டைச் செய்தவரின் பொருளும் உயிரும் ஓர் ஆண்டில் மறையும். சத்தியம். இது சதாசிவத்தின் மீது ஆணை.

533. ஓர் எழுத்து மொழியான பிரணவத்தை உபதேசித்த பெருமானை குருவை உள்ளம் வருந்தும்படி தீமைகள் செய்தவர் இழிவான நாயாய் பிறந்து நூறு பிறவிகள் எடுப்பர். பின்பு தாழ்ந்த பிறவியினராய் பூவுலகில் மடிவர்.

534. அடியவர்கள் மனம் கலங்கினால் தேசமும் நாடும் மற்ற சிறப்புகளும் அழிந்துவிடும். இந்திரன், பெரு மன்னர்களின் ஆட்சி பீடம் ஆகியவை நாசமாகி விடும். இது சிவபெருமான் மீது ஆணை.

535. நல்ல நெறிகளைப் புகட்டிய குருவின் முன் பெருமை பேசினால் இதற்கு முன் செய்திருந்த தவம் கெடும். ஆசிரியர்களிடம் பெற்ற ஞான உபதெசம் நிலைக்காது. பழைமையாய் உபதேசிக்கப்பட்ட நெறி முறைகள் மறந்து ஆன்ம வளர்சிக்கான வழிகளும் போய் வறுமையில் வாடுவர்.

536. கையில் கிடைத்த மாணிக்கத்தை விட்டு காலில் அகப்பட்டக் கல்லை எடுத்துச் சுமப்பவனின் செய்கையைப் போல் கையில் உள்ள நெய், பால், தயிர், ஆகிய உணவு இருக்க நன்மை அளிக்காத கையளவு பிட்டு உண்பான் போலாகும்
ஞானியரோடு ஞானத்த்டை விட்டு கிரியை செய்பவன் நிலையாகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:57

சிவ நிந்தை!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

சிவ நிந்தை!

526. தெளிந்த ஞானத்தை உடையவர் சிந்தையின் உள்ளே உள்ள தேவர்களின் தலைவனான சிவபெருமானை நாடி அருள் பெறுவர். சிவபெருமான் எளிமையானவர் என்று கீழோர் இகழ்வாராயின் அது கிளியானது பூனையிடம் அகப்பட்டு அழிவது போல் ஆகும்.

527. கல் போல் முரட்டுத் தன்மையுடைய தேவரும் அசுரரும் காமத்தினால் கெட்டுப் போனவர்கள். அவர்தம் உடம்பில் அதோமுகத்தில் விளங்கும் உண்மைப் பொருளை உணரமாட்டார்கள்.. அன்பால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் பெருமானை உடல் எங்கும் தாங்கியவர்கள் அல்லாமல் மற்றவர்கள் தாங்க இயலாதவர்கள்.

528. அசுரர்களும் தேவர்களும் இறைவனை நிந்தித்து தீராத பகைமை கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் அழிந்தனர்.. இறைவனிடம் எந்த வகையில் பகை கொண்டாலும் அவனை அடைவது இயலாது. இறைவனிடம் போலியாக பகை கொண்டாலும் தீமை ஒன்றுக்கு பத்தாக மாறும்.

529. அந்தணராய் பிறந்தும் பெண் இன்பத்தையும் ஊடலையும் நினைத்து மர்பிலும் சிந்தையிலும் கலந்துள்ளவராதலாலும் தான் பிரமம் என்ற அறத்தில் உள்ளவராதலும் இறைவன் பற்றிய எண்ணத்தை உள்ளத்தில் கொள்ள மாட்டார்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:55

அதோ முக தரிசனம்!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

அதோ முக தரிசனம்!

520. எம் தலைவா இறைவா! இது முறையோ! என்ற வானவர்கள் அசுரனின் வலிமையைச் சொல்லி முறையிட்டனர். அழகிய பவழம்போல் மேனி உடைய ஆற்முகனே! நீ போய் தேவர்களின் பகைவனான அசுரர்களை கொன்றுவா என்றருளிய் இறைவனான சிவன்.

521 .வெண்ணிற தலை மாலையை அணிந்திருக்கும் சிவனுக்கு அண்டங்களையும் எட்டுத் திக்குகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்து கருத்த நிறமுடையதாய் இருப்பதை அறிவார் எவருமில்லை.. நஞ்சை உண்டதனால் கருப்பானது என்று சொல்பவர் அறிவற்றவர்.

522 .கரிய நிறமான கழுத்தை உடைய சிவன் கடல் சூழ்ந்த உலகில் பொய் உரைத்து மகிழும் உயிர்கள் உண்மையான தத்துவத்தை பற்றிப் பேசுவார்களானால் தேவர்களும் தொழும் தகுதியை அவர்களுக்குத் தருவான். உலகைப் படைத்தவன் பொய்யும் உண்மையும் அறிவான்.

523. மூலாதாரத்தில் விளங்கும் உருத்திரன் சுழுமுனை வழியாக மேலே எழுந்து சிரசில் உள்ள செவ்வொளியுடன் கலந்து சிவன் என விளங்கும். மற்ற புவனங்களில் இயல்பை மாற்றி வலம் வந்து வெற்றி பெற்று மேல் எழுந்து நிற்பது சிவனின் அதோமுகம் ஆகும்.


524. அதோமுகம் என்பது கீழ் உள்ள பிரணவம் என்று பழைமையாக அண்டத்தில் உள்ளது. நுண்ணுடலில் எல்லா இடத்திற்கும் செல்லும் ஆற்றல் உடையது. ஓம் எனும் பிரணவ வடிவமாய் ஒளியுடைய பராசகதியுடன் கூடிய இறைவன் அதோ முகமாகவும் ஊழியைச் செய்பவனாகவும் விளங்குகின்றான்.

525. பெரிய மலரான கவிழ்ந்த முகமுடைய அதோமுகத்தின் விந்தை என்ன வென்றால், சிரசில் கவிழ்ந்துள்ள சகஸ்ரதளத்திலிருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து செல்லும் நாடித் தொகுதிகளில் உள்ள அழிவற்ற சக்திகளுடன் அதோமுகமாக சிவனும் திகழ்கின்றான்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:53

திருக்கோயில் இழிவு!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

திருக்கோயில் இழிவு!

515. நிலைபொருத்தப்பட்ட கோவிலில் உள்ள இலிங்கத்தை பெயர்த்து வேறிடத்தில் வைத்தால் அந்நாட்டு ஆட்சி அழியும். பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன் தொழு நோயால் பீடிக்கப்படுவான்.. காவலனாகிய நந்தி இதை உரைத்துள்ளான்.

516. நன்றாக கட்டப்பட்ட மதில் சுவரின் ஒரு கல்லைப் பெயர்தெடுக்கும் தீமை முடி சூட்டு விழா நடந்த மன்னனை வெட்டி வீழ்த்தும். தவம் முற்றுப் பெறாமல் முனிவர்கள் தடுமாறுவர். கல்லைப் பெயர்த்தவன் அந்தணன் ஆனாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும். இது சிவனின் ஆணை.

517. காலனை உதைத்த பெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் மறைகளின் விதிப்படி பூசைகள் தொடர்ந்து நடைபெறாமலிருந்தால் நீக்க முடியாத நோய்கள் மிகுந்து காணப்படும். மழை பெய்யாது. பெரிய மன்னரும் போர் ஆற்றலில் குறைந்து காணப்படுவர்.

518. சிவன் கோவில்களில் பூசைகள் நடைபெறாமல் தடைபட்டால் மன்னருக்குத் தீமைகள் உண்டாகும். நாட்டில் மழை வளம் குறையும். கன்னக்கோல் கொண்டு செய்யும் களவு மிகும். இது எம்பெருமான் நந்தி உரைத்தது ஆகும்.

519. தகுதியில்லா பார்ப்பான் கோவிலில் பூசை செய்தால் போர் தொடுத்துச் சென்ற மன்னருக்கு பொல்லாத நோய்கள் உண்டாகும். எங்கும் பரவியுள்ள நாட்டிற்கு பஞ்சம் ஏற்படும் என் நந்தியெம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:52

தீர்த்தம்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

தீர்த்தம்!

509. மண்டலங்களாய் உள்ள உடலில் மூலாதரம் முதல் சகஸ்ரதளம் வரை ஏழு நீர்கள் உள்ளன். உயிர்கள் செய்த வினைநீங்க இந்த இடங்களில் பொருந்தி தீர்த்தம் ஆடவேண்டும். அப்படிச் செய்யாதவர் நேர்மை உள்ளம் இல்லாத அறிவற்றவரே. அவர் பூமியில் உள்ள பள்ளத்தின் தீர்த்தங்களையும் மலையின் உள்ள சுனைகளையும் தேடித் திரிவர்.

510 தெளிந்த ஞானம் உடையவரின் உள்ளத்தில் வீற்றிருப்பவன் சிவன். வழிபாடு செய்பவர்களுக்கு குளிர்ச்சி தன்மையுடன் விளங்குவான். காம நெறியில் ஈடுபடுபவார்க்கு அடைய முடியாதவானாய் இருப்பான். பிராணாயம் பயிற்சி செய்பவர் ஒரு நாள் அவனை அடையக் கூடும்.

511. மனதில் ஒளிரும் ஒப்பில்லாத சிவபரம் பொருளை வேண்டாத ஒழுக்க முடையவர் கலந்து உணர முடியாது. நீர்ப்பகுதியை விரும்பி செல்கின்றவரின் தீய செய்லானது பள்ளத்தில் உள்ள நீரை நீர் பிடிக்கும் ஓட்டைப் பாத்திரத்தில் மூலம் மேட்டுக்கு இறைப்பதைப் போன்றதாகும்.

512. ஒளி மண்டலத்தில் வாழ்கின்றவர்கள் வான் மண்டலத்தில் செரிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதி சிவனை அடைவர். காமக்கலையை தடுத்து வெற்றி பெற்று பொருந்தும் பிரணவ ஒலியுடன் வரும் கங்கை நீர் வெள்ளத்தில் பொறிகளை உடைய அடியார்கள் நீராடிப் புனிதர்கள் ஆவார்.

513. கடலில் ஒருபொருளைத் தொலைத்துவிட்டு அதைக் குளத்தில் தேடுபவர் நீர்ப்பையான கடலில் விந்து நீங்குவதைக் கெடுத்து அதை நெற்றிப் பகுதியான குளத்தில் ஒளியாகப் பெறுபவரை ஒத்து இருக்கமாட்டார். அவர் வான் பூத நாயகர் நந்தியின் அருளால் உடலில் புகுந்து மேல் செல்வதை அறியர்.

514. உடம்பில் கலந்த நீரானது சிவனின் தாமத குணத்தால் கீழ்நிலையில் கருமையாக விளங்கும். அது இராசத நிலையில் கீழே உள்ள மூலவாயு நெற்றிக்கு வரும்போது மாதுளம் பூப் போன்ற சிவந்த ஒலியாய் விளங்கும். அது சாத்துவீக நிலையில் பெருவெளியை அடைந்தபோது வெண்மையான ஒளியாய் விளங்கும். இவ்வாறு கலந்த நீரானது தீயின் ஒளியும் காற்றின் இயக்கமும் கொண்டு இருக்கும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:48

பாத்திரம்! அபாத்திரம்

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

பாத்திரம்!

501. சிவ ஞானிஅய்ர்க்கு எள் அளவு பொன்னைத் தந்தால் அதன் பயன் கொடுத்தவர்க்கு இப்பிறப்பில் இன்பமும் சித்தியும் மறுமையில் முத்தியும் கிட்டும். அஞ்ஞானம் உள்ளவர்களுக்கு பூமி அளவு பொன்னைக் கொடுத்தாலும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் இல்லாது போகும்.

502. உரிய காலம் வரை எதிர்பார்த்திருந்து உயிரைக் கவரும் காலனை அணுப்பும் எண்குணநாதனும் உயிர்க்கு உயிரான தன்மையை அறிந்தவர்க்கு அருளும் தலைவனும் ஆன சிவனை அவன் இருக்கும் நாதம் விந்து மண்டலங்களை அடைந்து உணர்ந்தவர் ஒளி மண்டலத்தினுள் வாழ்பவர் ஆவர்.

503. அன்னை வயிற்றில் இருந்தபோதே அடியேன் சிவஞானத்தை பற்றியிருந்தேன். உடலுடன் கூடியபோது திருவடியை நீங்காது இருந்தேன். பொய்யான உடலை விட்டு ஒளிமயமான திருவடியை நாடுவேன். நெய்வார்த்து எரியாத தூண்டா அகல் விளக்காகும்..

504 வரவேண்டிய இன்பப் பொருள்கள் வரும். அவற்றில் நீங்க வேண்டியன நீங்கும். கழிக்கப்பெறும் வினைகள் கழிக்கப்பெற்று அனுபவிக்க வேண்டிய வினைகள் மீதம் இருக்கும். இறைவன் இதைக் காட்டியருளக் கண்டவன். அவன் ஆணையின் படி செயல் ஆற்றும் முதல் தகுதி கொண்டவன் ஆவான்.

####

அபாத்திரம்!

505. ஒழுக்கமும் நோன்பும் இல்லாவர்க்கு கொடுப்பது என்பது,. அழகிய மலட்டுப் பசுவிற்கு குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டுப் பாலைக் கறந்து குடிப்பது போன்றது ஆகும். அது பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்று பயன் அற்றதாகும்.

506. மன ஒடுக்கத்திற்கு தவிர்க்க வேண்டியதையும் பெற வேண்டியதையும் அறிந்த அன்புடையவர்க்கே தானம் செய்தல் சிறப்பு. நிலை அறிந்து அன்பு கொள்ளாதவர்க்கு தானம் செய்தல் பெரும் பிழையாகும் என்பதை உயிர்களே அறிந்து கொள்ளுங்கள்.

507. ஐந்து பாதகங்களை செய்பவன் நல்லவர்க்கு கொடுப்பதன் பயனை அறியாது கெடுவர். குற்றமற்ற ஞானகுருவிற்கும், தூய்மையுடைய பெரியவர்களுக்கும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய நீக்கியவருக்கும் தந்து அவர்கள் நிலையில் நிற்கச் செய்து ஞானத்தை பெற்றவன் ஐந்து குற்றங்களைச் செய்தவர் விழும் நரகத்தில் விழமாட்டான்.

508. மண் மலைபோன்று அத்தணை பொருள்கள் தந்திடினும் சிவனே முன் நின்று கொடுக்கின்றான் என்ற நினைவு கொண்டு வணங்கிப் பெறாதவர்க்கு கொடுத்தவரும் அதை பெற்றவரும் ஏழு வகை நரகங்களில் ஆழ்ந்து துன்பப்படுவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:46

மூவகைச் சீவ வர்க்கம்!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக் களிப்பாம்.

#####

மூவகைச் சீவ வர்க்கம்!

492. சக்தியும் சிவனும் சேர்ந்து விளையாட்டாக உயிர்களை உடலில் புகுத்தி சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையுடன் சேர்த்து சுத்தமான மேல் பகுதியை அடையச் செய்து உயிகளின் உள்ளத்தில் விளங்கி துரிய நிலையில் சிவரூபம் காட்டி அருள் செய்வர்.

493. தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞான கலர் நால்வகையினரும், பேருழிக் காலத்தில் ஞானத்தைப் பெறும் பிரளயகாலத்தவர் மூவரும் உலக வாழ்வில் பொருந்தி அறியாமையை உடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞான கலர் முதலிய மூவகைப் பட்டவரும் மொத்தம் பத்து பிரிவாக உள்ளார்கள்.

494. விஞ்ஞான கலர் ஆணவத்தை மட்டும் உடைய தன்மை நீங்கிய வரும், ஆன்ம ஞானம் உடைய அட்டவித்தியே சரபதம் சார்ந்தவரும், உயர்ந்த ஞானம் உடைய ஏழுகோடி மந்திரேசுவரரும், உண்மையான ஞானம் பெற்றுள்ள ஆணவ மல வாசனையை விட்டவரும் என நால்வகையினர் ஆவர்.

455. விஞ்ஞான கலரில் பக்குவம் குறைவு பொருந்தியவர் உடம்புடன் கூடியிருக்கின்றபோது ஜீவன் முக்தியடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். இரண்டாம் நிலையினரான பிரளயகலர் இரு பிறப்புகளில் நூற்றெட்டூ ருத்திரப் பதம் அடைவர். மாயையினது வலிமையால் பினைக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது இருப்பர்.

496. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களை உடைய சகலரில் சிலர் சித்துசிவனைப் பேணி ஞான வடிவமாயினர். ஞானம் கிரியை என்பவை ஒத்து சதாசிவ நிலையைப் பற்றி நிற்பவர் ஆணவம் கன்மம் மயைகளைக் கடந்து மேலே நிற்பவர் ஆவார். ஞானம் கிரியை என்பவை ஒத்து நிறக ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கமாட்டாதவர் சகலர் ஆவர்.

497. சிவமாகி ஐந்து (ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி) மலங்களை வென்றவர் சித்தராய் வீடுபேற்றை அடைந்து அழிவில்லாத நிலையில் இருப்பர். பசு பாசத்தன்மை நீங்கியவரான அவர் பிறவி நீங்கினவர் ஆவார். சிவனது தத்துவங்களை (சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ம்கேசுவரம், உருத்திரம், திருமால், நான்முகன்,) விரும்பி அறிந்தவர் ஆவார்.

498. விஞ்ஞான கலர் ஆணவம் என்ற மலத்தை மட்டுமே கொண்டுள்ளது. விஞ்ஞான கலரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயகலர் இரண்டு மலம் உடையது. கருவி கொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவற்றவர் ஆவார். இந்த மூவகை உயிர் இனங்கள் உத்தமம், மத்திமம், அதமம் என்றுள்ளதால் ஒவ்வொரு பிரிவும் சேர்ந்து ஒன்பதாய் இருக்கின்றன.

499. விஞ்ஞான கலர் ஞான கன்மத்தால் உயிரின் உள்ளே நின்று உணர்த்தப் பெற்றும் பிரளயகலர் உள்நின்று உணர்த்தப்படாமையினால் வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானத்தை படிப்படியாய் பெற மாயா உடலைக் கொண்டு திரும்ப திரும்ப பிறந்து உண்மையான ஞானத்தை அடைந்து சிவசாயுச்சிய பதம் அடைவர்.

500. ஆணவம் கொண்டுள்ள அஞ்ஞானத்தை கனவிலும் நீங்கியவர் விந்து நாதம் ஆகியவற்றை சகல நிலையில் உடம்புடன் காண முடியும்.. ஆணவம் ஆகிய மலங்களைப் பொருந்திய சகலரோ சிவதத்துவ மண்டலங்களை மலங்கள் நீங்கிய பின்பே அடைவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:44

கர்ப்பக் கிரியை!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

கர்ப்பக் கிரியை!

451. இறப்பின் போது பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களை தோற்றுவித்து உயிர் தத்துவங்களுடன் சேர்க்கின்றான். அன்னையின் கருப்பையில் பொருந்தி உயிருக்கு உதவி செய்கின்றான். உடல் வளர்ச்சிக்குத் தேவையனவற்றை அறிந்தே யாவற்றையும் செய்தருள்கின்றான்.

452. ஞானிகள் உணரும் மூலாதாரத்தில் மேல் நீரும் நெருப்பும் பொறிந்துள்ளன. ஞான பூமியில் திருவடி பதித்து பொறுமையுடன் இனிய உயிரை கருவில் புகும்படி செய்து கருவிலிருந்து வெளிவர பத்துமாத எல்லையை இறைவன் வகுத்து அருளினான்..

453. ஆணும் பெண்ணும் இன்புற்றபோது ஜீவன் விட்டுச் சென்ற வினைதனை அனுபவிக்க துயரம் பொருந்திய உடலில் பக்குவம் அடைய வேண்டிய காலத்தையும் உலகத்தில் தங்க வேண்டிய காலத்தையும் இருவரும் கூடிய அந்த தருணத்திலே நியமித்தான்.

454. ஞானியர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடலில் தங்கி உருப்பெற்றதை மற்றவர் அறியமாட்டார். அக்கரு பின்பு பெண்ணின் கருவை நாடி அடைந்த ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாய் ஓடி கருவில் விழும்.

455. யோனி விரிந்து லிங்கத்திலிருந்து சுக்கிலம் விழும். புருடன் என்ற தத்துவத்தில் ஞானேந்திரம், கன்மேந்திரியம் பூதங்கள் ஆக பதினைந்து தத்துவங்களுடன் பொழிந்த சுக்கிலத்துடன் மற்ற தன்மாத்திரைகள் அந்தக் காரணங்க்கள் ஒன்பதும் புருவ நடுவிலும் உச்சியிலும் பொருந்தும்.

456. மலரின் நறுமணாத்தை கொண்டிருக்கும் காற்று எங்கும் பரவியிருப்பதுபோல் கருப்பையில் உள்ள தனஞ்சயன் என்ற வாயு குறிபிட்ட காலத்திற்குள் ஜீவனின் விந்துவுடன் பெண் கருவில் நுழையும்.

457 .உருவம் அற்ற புரியட்ட உடலுலின் உள்ளே புகும் பத்து வாயுக்கள், காமம் முதலிய எட்டு விகாரங்கள், ஆகியவற்றில் மூழ்கும் புருடன் உடலின் ஒன்பது துளைகள், குண்டலியாகிய நாதம், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணன் என்ற பிறவியும் இறைவன் என்ற பாகன் செலுத்தாவிட்டால் பன்றியைப் போன்ற இழிவான பிறப்பாகி விடும்.

458. ஆண் பெண் இனைப்பில் வெளிப்படும் சுரோணிதக் கலப்பில் ஆணின் சுக்கிலமானது எதிர்த்துச் சென்றால் குழந்தை உருத்திரைப் போல் இருக்கும். பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால் திருமால் போலிருக்கும். சுக்கிலம் சுரோணிதம் இரண்டும் சம்மாகப் பொருந்தினால் அது பிரம்மனைப் போல் இருக்கும். மூவரின் தன்மை ஒத்த குழந்தை பேரரசனாய் வாழ்வன்.

459. பல உலகங்களில் பிறப்பெடுத்து வருந்திய ஆண் பெண் இருவரது வண்ணத்தில் கரு உருவாகும். பல பிறவிகளில் பல உடலில் பொருந்திய அக்கரு நன்றாகப் பதிந்த பின்பு மயக்கம் பொருந்திய இருவர் மனமும் ஒன்றாயின.

460. அறியாத நிலையில் உள்ள சிசுவிற்கு மாயை தத்துவங்களைச் சேர்ப்பாள். அத்னால் அக்குழந்தை பேருறக்கத்திலிருந்து விழித்து நினைவு அடையும். வலிமை மிக்க மாயையின் எட்டு குணங்களும் சுத்த மாயையின்று தோன்றி நான்கு வகை வாக்கிலிருந்து சொல்லும் உண்டாகும்.

461. எலும்புகளால் கூடுகட்டி நரம்புகளால் வரிந்து கட்டீ இரத்துடதுடன் கூடிய இறைச்சியால் திருத்தமாக உடல் என்ற வீட்டை அமைத்து இன்பம் பெற அருளினான் இறைவன். அவன் மேல் உள்ள நட்பால் அவனை நாடி நிற்கின்றேன்.

462. பால் போன்ற நிறம்கொண்ட சூரியன் உடல்களைப் பக்குவம் செய்ய ஒளியின் மேனியனான சிவன் உடலில் நீக்கம் இல்லாது நிறைந்து நின்று நன்மை செய்வான். குதத்திலிருந்து செல்லும் அக்னியின் வேகத்தை தணிப்பதற்காக இன்பம் பெறும் முறைகளை வைத்தான்.

463. பழி பொருந்திய பல வினைகளைச் செய்யும் பாசத்திற்கு கட்டுப்பட்ட கருவைப் பல வினைகளிலிருந்தும் அழியாமல் காப்பான். சிசுவைத் தூய்மை செய்து வினைகளை நீங்குமாறு செய்து துன்பம் அடையாமல் காப்பான்.

464. சுக்கில நாடியில் தோன்றிய வெண்மையுடைய சுக்கிலமும் யோனியிலிருந்து தோன்றும் சிகப்பு நிற சுரோணிதமும் எட்டு விரல் அளவிற்கு நகர்ந்து நான்கு விரல் அளவிற்கு உள்ளே செல்லும். அப்போது பஞ்ச பூதங்களும் நாதமும் மாயையும் சேர்ந்து எட்டுசான் அளவு உடல் சிசுவுக்கு உண்டாகும்.

465. ஆண் பெண் இன்பத்தில் பொருந்திய இறைவன் கருவில் உடலைத் தந்து அதனுடன் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து இருவரின் மய்க்க நிலையில் ஒரு கருவான முட்டையைத் தருவான்.

466. பிண்டமான உடலில் அறியாமையான புலன்கள் ஐந்தும் தோன்றி உடல் அழிந்த போது அவை செயலற்றுப் போகும். அண்டத்தில் உடலைச் சுற்றியுள்ள அண்டகோசத்தின் உள்ளே இருக்கும் உயிரும் பக்குவம் பெற்றபோது செயலற்று நாத தத்துவத்தில் அடங்கும்.

467. மாயையால் உண்டாக்கிய உடலை செலுத்தும் சிவ தத்துவமான அகர உகர மகர, விந்து, நாதம் ஆகிய பிராணவத்தால் கருவை இயக்குவான். உயிரை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்திநான்கும் புருட தத்துவம் அல்லாத வித்யா தத்துவம் ஆறும் உயிரின் இயல்பிற்கு ஏற்றவாறு கூட்டி உடல் பொறியில் ஒன்பது துவாரங்களை வைப்பான்.

468. இன்பத்தில் திளைத்திருந்த ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வைத்த மண்ணால் ஆன குடத்துள் சேர்பவன் ஆன்மா ஒருவனே. அதனுடன் ஒன்பது வாயிலாகிய நீர்ச்சால் கலசங்களும் சூக்ம உடல் எட்டும் கன்மேந்திரியங்கள் ஞானேந்திரியம் ஆக பதினெட்டு குடங்களும் கருப்பையான சூளையிலே விளைந்து பக்குவம் ஆயின.

469. உடம்பில் தோன்றும் ஆறு துன்பங்களை அறியாது இருக்கின்ற உயிர்கள். மனதில் பெருகிக் கொண்டிருக்கும் தாமச சாத்வீக ராசத குணங்களின்று பிரியாமல் இருக்கின்றது. சித்திகள் அமைவதை பொருந்தாவிட்டால் பத்து மாதங்களில் உருவாகிய இது பிண்டம் ஆகும்.

470. மாயையினின்று உடலைத் தோன்றுவித்த விதமும் உடலில் உயிரை அமைத்த விதமும் உணர்ந்து தாழ்ப்பால்களுடன் கூடிய ஒன்பது வாயிலை அமைத்து ஆயிரம் இதழ்களை உடைய சிரசின் அக்னியில் இறுதி நிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் சேர்ந்தேன்.

471. நுட்பமான அறிவுடையாரை ஓதும் முறைபற்றி கேட்டு அறிந்தேன். பேரொளியாய் எங்கும் நிலைத்து நிற்கும் இறைவன் கேடில்லாத உயிர்களை வினைக்கீடாக உடல்களில் பொருந்தி வினைக்கு முதற் காரணமாகின்றான். குழம்பை போன்ற கருவைக் கூட்டி வைக்கின்றான். அதை உருவாக்கி வளர்க்கின்றான். அதனுடன் கலந்து நிற்கின்றான். இவ்வாறு சேர்ந்திருக்கும் தன்மைக்கு நேர்படல் என்றாகும்.

472. மலரைப் போன்ற யோனியும் மொட்டைப் போன்ற இலிங்கமும் பொருந்தி மலரும், மலர்ந்தபின் சுக்கில சுரோணிதங்கள் கலக்கும். அதில் ஒளிமயமான ஜீவ அனுக்கள் உண்டாகும். நீரில் எங்கும் பறவி நின்ற குழிழியின் உடலில் உள்ள ஜீவ அனு உடலில் கலந்துவிடும்.

473. நுண்ணுடலில் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளும் அவற்றுடன் தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்?ற மூன்று அந்தகாரணங்களும் உண்டாகி அவற்றுடன் விருப்பு வெறுப்பிற்கு எற்றவாறு உண்டாகும் உடலை முதலில் நெற்றிக்கண்ணுடைய சிவனே சேர்த்து பின் பிரித்து அவிழ்த்து விடுவான்.

474. சிவனின் திருப்பெயரான பிரணவத்தை கலந்து உடலில் நாதம் விளங்கும்படி செய்து பசுத்தன்மை பாசத்தனமை இரண்டும் நீங்கிடச் செய்வான். நான்கு இதழ் மூலாதாரச் சக்கரத்தின் பரப்பு முழுமையும் மண் முதலான தத்துவங்களிலிருந்து தொடங்கும் நியதியை வைத்திருக்கின்றான்.

475. சக்தி இலாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தி இல்லை. சிறப்பான உயிருக்கு உடலைத் தரும்போது இரு செவிலித் தாயார் தன்மேல் வைக்கும் அன்பை தந்தருளினான்.

476. அவரவர் வினைக்கு ஏற்ப அமைத்து செய்யப்பட்ட உடலின் பிறவியில் நல்ல சக்தியும் சக்திக்கேற்ற முறையில் இருளைப் போக்கும் பேரொளியாய் இறைவனும் எல்லா வகையான உணர்வுமயமான பல உயிர்களுக்கும் வகை செய்யும் விதமாக அவைகளின் உயிர்க்கு உயிராய் நிற்கும் சிறந்த பொருளே சிவன்.

477. பெருமைகண்டு வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ நினைப்பது கற்பனையாகும். அது தாய் தந்தையின் தன்மை கொண்டு விளங்கும். அந்த உய்ருக்கு ஏற்ற உடலைப் படைப்பது சிவனின் வல்லமை.

478. ஆண் பண்பு மிகுந்திருந்தால் ஆண் ஆகும் பெண் பண்பு மிகுந்திருந்தால் பெண் ஆகும். ஆண் பெண் பன்பு இரண்டும் சமமானால் அவ்வுயிர் அலியாகும். முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பானதாய் இருக்கும். தரணியை ஆளும். தாழ்ச்சி மனப்பான்மை கொண்டால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.

.479. ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டுகள் ஆகும். அது நான்கு விரற்கடை ஓடி விழுந்தால் அந்த உயிரின் வாழ்வு எண்பது ஆண்டுகள் ஆகும். சுக்கிலத்த்ச் செலுத்தும் வாயுவை நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு.

480. சுக்கிலத்தைச் செலுத்திய வாயு குறைந்தால் குழந்தை குட்டையாய் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். வாயு தடைப்பட்டால் கூனுடன் பிறக்கும். ஆராய்ந்தால் பாய்கின்ற வாயு பெண்களுக்கு இல்லை.

481. மாதர் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு தாயின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் அக்குழந்தை மந்த புத்தியுடைதாய் விளங்கும். வயிற்றில் நீர் மிகுந்தால் அக்குழந்தை ஊமையாய்விடும்.. மலமும் நீரும் மிகுமானால் குழந்தை குருடாகிவிடும்.

482 இன்ப நுகர்ச்சியில் ஆண்மகனிடம் உயிர்ப்பு வலது நாசியில் (சூரிய கலை) இருந்தால் ஆண் குழந்தையாகும். சந்திரக்கலை (இடதுநாசியில் உயிர்ப்பு விளங்கினால் அது பெண் குழந்தையாகும். பிராண வாயுவுடன் அபானன் என்ற மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரியகலை சந்திரக்கலை இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.

483. ஆண் பெண் இருக்கும் உயிர்ப்பு ஒத்து இருந்தால் குழந்தை அழகாக இருக்கும். இருவருக்கும் உயிர்ப்பு தடுமாறினால் கரு உண்டாக வாய்ப்பே இல்லை.

484. பெண் வயிற்றில் உருவான் குழந்தை அண்ணாக்கிலே விளங்கும் பேரொளி போன்றது. குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவைப் பெறும்.

485 கருவானது பத்து மாதம் கருப்பையில் வளரும். தக்க பருவத்தில் அக்குழந்தை உலகில் பிறந்து வளரும்.. மாயையான வளர்ப்புத் தாயிடம் பொருந்தி வளரும். அந்த உடலில் பொருந்திய உயிர் வடிவம் அற்றது என்பதை எவரும் அறியார்.

486. கருவிற்கு காரணமான தந்தை அக்குழந்தை என்ன குழந்தை என்பதை அறிய மாட்டான். அக்கருவை ஏற்றுக் கொண்ட தாயும் அறியமாட்டாள். நான்முகன் என்ற தட்டானும் அறிந்தாலும் யாருக்கும் சொல்லமாட்டான். அதை அமைத்துக் கொடுக்கும் சிவனும் அங்கே உள்ளான். மயையின் தன்மைதான் இது.

457 .இன்பத்தை அணுபவிக்கும் ஆண் பெண்ணின் புனர்ச்சியில் துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றும் உயிர் துன்பத்தில் வளர்ந்து மேன்மை பெற விருப்பி எல்லாவற்றிற்கும் முன்பு தோன்றிய பழமைக்கும் பழமையான இறைவனை பொருந்த துதிக்க வேண்டும்.

488. குயில் முட்டையை காக்கைக் கூண்டிலே வைத்தால் காக்கை ஐயம் இன்றி அதை வளர்க்கும். அது போன்று இயக்கமில்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்ற கேள்வி கேட்காமலும் ஒரு மயக்கத்தால் தாய் உடலை வளர்க்கும் முறை இதுவேயாகும்.

489. தாவரம் முதலில் கிழங்காயிருந்து முளைவிட்டு வளர்ந்து புதராய் மாறிபின் பழமாய் பயன் அளிக்கும். அது தாவரத்தின் இன்பமாய் அமைவது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்து பயன் அளிப்பதே ஆதி இறைவனுக்கு இன்பம் தரும்.

490 மற்றத் தேவர்களைவிட பெருமை உடையவனாக இருப்பினும் என் இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து நிற்கின்றான் அந்த இறைவனைத் தேவராலும் உணர முடியவில்லை. உயிர்கள் தங்கள் தவத்தினால்தான் உணரமுடியும்.

491. மேன்மை பொருந்திய இறைவனிடம் ஒடுங்கிய உடல் மீண்டும் பருவத்திற்கு ஏற்ப பயனை அடைய வேண்டி கடலில் உப்பு திரண்டு உருக்கொள்வதைப் போல் இறைவன் அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26431188
All
26431188
Your IP: 35.175.107.142
2023-12-11 17:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg