குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
இரண்டாம் தந்திரம்! (20)
ஓம்நமசிவய!
செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!
#####
சர்வ சிருஷ்டி!
381. ஆதியும் அந்தமும் இல்லாத சிறப்பான பரம்பொருள் அறிவுமயமாய் தன்னுடன் பிரியாத நிலையில் விளங்கும் பராசக்தியான பேரொளியில் பரம்-சிவன் தோன்ற தீமையற்ற பரை*பராசக்தியும் தோன்றும். அந்த பராசக்தியிடம் நாதம் விளங்கும்.
382 .நாதத்திலிருந்து விந்து தோன்றும்.. குற்றமற்ற மாயையில் தோன்றிய விந்து சிவன் சக்தி எனப்பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் ஆகும். உலகம் உருவாக வேண்டும் என்ற இச்சையினால் அனைத்தும் சுத்த மாயையில் தோன்றும்.
383. தத்துவங்கள் தோன்றும் இடமான சக்தி பராசக்தியிடம் தோன்றி நவமணியின் ஒளியுடன் உள்ளே கலந்து பரவி இருக்கும். சிறப்பாகத் தொழில் செய்கின்ற அந்த சக்தியின் ஆற்றல், பெருமைகளைச் சொல்லாமல் சொன்னால் அளவிட முடியாதது ஆகும்.
384. எண்ணங்களுக்கு வெகு தூரத்தில் சிவப் பேரொளியானவன் எண்ணங்களுக்கு உட்பட்ட சக்தியாய் இச்சை காரணமாக தோன்றிய நாதத்தைப் பொருந்தி விந்துவாய் ஐந்தொழில் பாரத்தை ஏற்றும் நடத்தும் சக்தி ஒப்பில்லாத சக்தி உடையவளாகவும் விளங்குவாள்.
385. அசுத்த மாயை வானமாகி காற்றாக வளரும். நெருப்பிலும் நீர் பொருந்தி கடினமான நிலமாகும். ஒன்றில் மற்ற நான்கு பூதங்களும் கலந்து ஐம்பூதமாய் பொருந்தி நின்றலே புவனம் ஆகும்.
386 .புவனத்தை படைப்பது சிவன் சிவசக்தியாம். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் அவர் மக்களாவர். புவனம் படைக்கும் சிவசக்தியின் சொரூபமே நான்முகனாகவும் பிரபஞ்சத்தை படைத்து செம்மையாக்கும் மூர்த்தியாகும்.
387. புண்ணியனான நந்தியெம்பெருமான் அறிவின் மயமாய் எல்லாப் பொருளிலும் பொருந்தியுள்ளான். குளிர்ச்சி பொருந்திய மாயா பொருளை காத்து அருளுகின்றான். சத்தியும் கண்ணோட்டமாக எல்லாவற்றிலும் கலந்து தாங்கும் தன்மையுடன் எல்லா உலகங்களிலும் எழுந்தருளுவாள்.
388 நீர்த்தன்மையான மணிப்பூரகத்தில் ஆணுக்கு இன்பம். ஏற்படும்.. அக்னி இருக்கும் அநாகத்தில் சோதி உண்டாகும். வாயு இருக்கும் விசுக்தியில் உயிர்ப்பு நிலை கொண்டிருக்கும். நாதம் சக்தியைத் தரந்து கொண்டிருக்க நீர் மண் இடையே உள்ள சுவாதிட்டானமே உற்பத்திக்கு உகந்த இடம்.
389. ஏழு உலகையும் உண்டு உமிழ்ந்த திருமாலுடன் எல்லா அண்டங்களிலும் வாழும் தேவர்களுக்கும் தலைவனும் முதல்வனும் ஆன சிவபெருமான் உலகைப் படைக்கும் பிரமனுக்கும் பழமையாக உலகம் படைக்கும் உண்மைப் பொருளாகும்.
390. பெருகும் நீர்ப்பகுதியான மணிப்பிஊரகத்திலுள்ள திருமாலுடன் சிரசில் வெண்ணிற ஒளியுடன் விளங்கும் சிவபெருமான் சுவாதிட்டானத்தில் உள்ள பிரமனுடன் உயிரை பொருத்தும் தன்மையை உணர்ந்திருந்தான்
391. அன்புடன் அனைத்துப் பொருளகளிலும் கலந்துள்ளவன் படைப்பிற்கு காரணமான சிவபெருமான். அவன் திருமாலாக கொப்பூழ் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்றான் .அவனே புவனங்களை படைக்கின்ற நனமுகனாக இருக்கின்றான். அவனே ஆர்ணமாகவும் உலகாகவும் இருக்கின்றான்.
392. பயன்கள் தரும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்யும் தன்மையை அளிக்க சிவபெருமான் இருக்கின்றான். அவனே நான்முகனுக்கு ஒளியை அளித்து படைப்புத் தொழிலுக்கு மூலாதாரத்திலிருந்து உதவுகின்றான். அவன் துணைகொண்டு பய்னகளை அடையும் காரணத்தை நான் அறிந்து கொண்டேன்.
393. அழித்தல், படைத்தல் காத்தலாகிய மூன்றையும் நினைக்கையில் சிரசைச் சுற்றுயுள்ள எட்டுத் திசைகளிலும் மூலாதாரத்திலிருந்து எழும் சோதி பரவியிருக்கும் அதில் அவனைக் காணலாம்.
394. குற்றமில்லா சிவன் உயிர்களிடம் பொருந்திய பக்குவம் உடையவன். என் உயிருக்கு வளம் தது உடலில் பொருந்தி முன்பு துன்பத்தைக் கொடுத்த உடலுக்குத் துணையாயிருந்து துன்பத்தைப் போக்கி உயிர்ப்பாக இன்பத்தை தந்து கொண்டிருக்கின்றான்.
395. படைப்பிற்குண்டான தன்மையையுடைய சிவன் ருத்திரம் மற்றும் கொன்றை மலர் அணிந்து சிவந்த பொன் போன்ற மேனியை உடையவனாயிருந்தும் பிறவிக்கு உயிர்வாழும் உடம்பாயும் இருக்கின்றான். அவனே உயிரை சிவமாக்கி அருள்பவன்.
396 ஒருவன் ஒருத்தியாக சிவனும் சக்தியும் விளயாடிய விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது, சூரியனின் பயணம் மாறுபாட்டிற்கு ஏற்றவாறு பருவங்கள் மாறி விளைவுகளைத் தருவது போல் இறைவன் அருள் பதிவின் மாறுபாட்டால் உருவாகும் நிலைக்கு ஏற்ப பயன்களும் மாறி மாறி விளங்கும்.
397. உருத்திரனிடம் புகுந்து அழிக்கும் செயலை அறிவான் சிவபெருமான். சக்கரப்படையை உடைய திருமாலிடம் பொருந்தி உலகைக் காக்கும் செயலை அறிவான் சுவதிட்டானத்தில் இருக்கும் பிரமனிடம் பொருந்தி படைப்புத் தொழிலை அறிவான். அவ்வாறு அறியும் சிவபெருமானின் ஆட்சிக்கு உட்பட்டே மூவரும் தொழிலைச் செய்கின்றனர்.
398. ஆணவ மலமுடைய நான்முகன், திருமால். உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரில் மேல் உள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் கூறப்படுவர். இறைவன் விருப்பப்படி ஐத்தொழிலை நடத்தி சுத்த மாயையில் தோன்றி ஆனவ மலம் நீங்காதவர் என்றே சொல்லப்படுவார்.
399. மாயை என்ற சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என மூன்றாகும் சதாக்கியம், ம்கேசுவரம், சுத்தவித்தை மூன்றும் மாயையின் காரியம். விந்தைப் பெற்ற நாதம் பரையினிறு தோன்றும். பரையுடன் சிவனது பழமையான விளையாட்டே படைப்பு தொழிலாகும்.
400. வான முதல் ஐந்து பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் மாயா சக்தியுள் பொருந்தி உடம்பிலும் உயிரிலும் தொழில் செய்கின்றனர். சதாசிவர் உருத்திரன் திருமால் நன்முகன் ஆகியோராய் வான் மண் எனும் உலகங்களை கண்பதற்குரியதாய் செய்கின்றனர்.
402. கச்சினை அணிந்த கொங்கைகளையுடைய மணோன்மணி மங்களப் பொருளாய் எல்லாவற்றிற்கும் காரணமாகவும், படைத்தல் தொழிலில் கலந்தவளாக இருக்கின்றாள். அவள் பிராண வடிவமுடையவள்., வேதத்தின் பொருளாவாள். தேவர்களை மயக்கும் ச்க்தி, முழுமையான சந்திர ஞானசக்தியும் அனுபம ஞானமும் உடையவள்.
403. மகேசுவரன் சதாசிவத்துடன் கலந்து நின்று கீழே உள்ள தொழில் செய்யும் ருத்திரனாகவும், திருமாலாகவும், ஆண்பெண் சேர்க்கைக்கு உதவும் சுவதிட்டானத்தில் உள்ள பிரமனாகவும் பொருந்தியுள்ளான்.
404 சிவனே சதாசிவன் என்றாகி ஏழு உலகங்களையும் படைக்கின்றான். படைத்து ஏழு உலகங்களையும் காக்கின்றான். அவனே எழு உலகங்களையும் ஒடுக்குபவன். அவனே உலகம், அவனே உயிர் என விளங்குகின்றான்.
405. செந்தாமரை மலர்போன்ற தீயின் நிறத்தையுடைய ருத்திரன், மேகம் போன்ற கரிய நிறமுடைய் திருமாலாய் செய்யும் மாய பந்தத்தால் பூங்கொத்துக்களை அணிந்த பூவையர் கூட்டத்தை மயக்கி வலிய உலக உற்பத்தியை உருவாக்குகின்றான்.
406. சிவன் எட்டு திசைகளிலும் தேடித்திரியும் உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படி செய்தவன். மங்கையரும், ஆடவருமாய் கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்து நின்று விருப்பை உண்டாக்கும் அருள் தன்மையை நான் அறிவேன்.
407. சிவசக்தியே ஏழு உலகங்களைப் படைத்தவர். அவரே எழு உலகங்களையும் காப்பவர் ஆகும். அவரே அவற்றை அழிப்பதும் ஆகும். அவரே உலகத்துடன் உயிரை இணைத்து வைப்பவர்
408. தலைவன் சிவபெருமானும் ஜீவர்களுக்கு நன்மையைச் செய்யும் மகேசுவரர், சதாசிவரும், சுத்தமாயை, அசுத்தமாயை என்ற இரண்டிலும் ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை உண்டாக்குவர். அந்த வழியிலே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு நிற்கும் திருமாலுக்கும் பிரமனுக்கும் சிவனே ஆற்றலை அருள்கின்றார்.
409 .அப்பன் சிவன் அருளிய ஆணையினால் நான்கு வகையான தோற்றத்தில் ஏழுவகைப் பிறப்பில் என்பத்து நான்கு நூறாயிர வேறுபாட்டுடன் கூடிய் உடல்களைப் படைதனன். இது பொய் என்று சொல்லும் மக்களை இத்தன்மையிலெ ஆணவ இருளில் ஆழ்த்துவான்.
410. சூரியன், சந்திரன், இந்திரன், அக்கினி, இய்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், நாதம் நிரம்பிய வானம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற மாத்திரைகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற அந்தகாராணங்கள் ,அனைத்தும் சொல்லப்பட்ட மகேசுவரர் விளங்கும் விந்து ம?ண்டலத்துள் மாயையாய் வைக்கப்பட்டுள்ளன.
#####
எலும்பும் கபாலமும்! அடி முடிதேடல்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!
#####
எலும்பும் கபாலமும்!
371. எலும்பையும் மண்டையோட்டையும் ஏந்திய சிவபெருமான் மணிமுடி தரித்த திருமால் மற்றய தேவரின் வடிவான எலும்பையும் அறிவு என்ற மண்டை ஓட்டையும் சூக்குமமாகத் தாங்கவில்லை என்றால் பிரளயத்திற்குப்பின் பிறவிக்கு மக்களது வடிவமும் அறிவும் தொடர்பில்லாமல் இருக்கும்.
#####
அடி முடிதேடல்!
372. பிரமனும் திருமாலும் தங்கள் அறியாமையால் தாங்களே தலைவன் என்று அகங்காரம் கொண்டனர். சிவபெருமான் பேரொளிப் பிளம்பாக காட்சி கொடுக்க அவர்கள் அப்பெருமானின் அடிமுடி காணாது தேடத்தொடங்கினர்.
373. ஏழு உலகங்களுக்கும் பொருந்தும்படி உயர்ந்த சிவபெருமான் ஏழு உலகிலும் அக்னி வடிவாய் பரவி விளங்குபவன். வானத்து ஏழ் உலகிலும் விளங்கும் அந்த நீலகண்டனை அவனது அருளால் ஒன்றுபட்டு பிரம்ன் திருமால்களால் காண முடியாத அவனை நான் கண்டேன்.
374. உடலாக, உயிராக, உணர்வாக, அக்னியாக, பிரமனும், திருமாலும் அறியாத காலத்துப் பொருளாக, வான் அளவு ஓங்கி நின்ற பேரொளியாய், அண்டங்களுக்கு ஆதாரமான தம்பமாகவும் அதைச் சுற்றி வருகின்ற சந்திரன் மற்றும் அண்டங்களாகவும் நிற்பவன் சிவபெருமானே.
375. நிறைந்து நிற்கும் சிவன் எல்லா அண்டங்களையும் தனக்குள் அடக்கி உயர்ந்து நிற்பவன். அவன் பேரொளியாய் நீண்டு நிறபோது அத்திருமேனி கண்டு அச்சம் கொண்டு அதை ஆராய சென்றனர் திருமாலு,ம் பிரமனும்.. ஆராய உணர்வு கொண்டு மேலேயும் கீழேயும் சென்றவர்கள் நன்மை அளிக்கும் அடிமுடியை அறியாது நாணம் கொண்டு திரும்பினர்.
376. செம்மையான திருவடியைப் புகழும் தேவர் கூட்டமும், மூன்றடி நிலம் கேட்ட திருமாலும், முனிவரும், இசைவடிவான மந்திரங்களைக் கொண்டு விரும்பியதைச் செய்யலாம் என்ற பிரமனும் எப்படி செய்தாலும் அப்பெருமானை பொருந்த இயலாது!
377 .சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரமனும் மணிப்பூர சக்கரத்தில் உள்ள கரிய கடலில் வாழும் திருமாலும் ஊன் பொதிந்த உயிர்போல் உணர்கின்ற பின்மூளை முன்மூளை எனற இடங்களில் விளங்கும் சதாசிவமூர்த்தியின் தன்மையை பெறுவாரோ. பெறமாட்டார்.
378. எல்லாவற்றிலும் கலந்து எழும் மேலானச் சுடர்பொருளை ஆன்மாக்களின் உய்வின் பெருட்டு வைக்கப்பட்டுள்ள உண்மையை அறிந்து எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் விளங்கும் பஞ்ச சதாக்கியத்தின் அருளைப் பெறலாம்.
379. ஒளியைத் தந்த பெருமானை வணக்கிய தேவர்கள் தங்களை இறைவனுக்கு அடிமையாய் தந்து என்னைப் போல் இறைவனை அறியவில்லை. இறைவன் தன்னையே ஆளாகக் கொடுத்து சிவபோகத்தை அருளி தாங்கள் உய்யும் வண்ணம் திருவடி தந்தருளிய இறைவனை பொருந்தாதவர் ஆயினர்.
380. ஊழியைச் செய்யும் உருத்திரனை ஆராய்ந்திருப்பவன் சிவன். பிரம பட்டத்துடன் வாழ்கின்ற பிரமன் வெளிப்பட்டு விருப்பப்படும் என் தலையில் தாங்கள் விதிக்கும் ஆணையை அளித்தருள்க என வேண்டினன். ஊழியைச் செய்யும் சிவன் பேரொளிப் பிழம்பாய் படைப்புத் தொழிலைச் செய்ய பிரமனுக்கு அருளினான்.
#####
ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!
#####
பிரளயம்!
362. கருவரையைத் தாண்டி எழும் மணிப்பூரகத்தில் உள்ள நீர்மண்டலத்தில் பிரமனும் திருமாலும் வேறுபட்டு நிற்க மணிப்பூரகத்தில் உள்ள அறிவுமயமான ஒளிமேலே எழுந்து சிவசூரியனாக உச்சிமீது அருள் செய்வான்.
363. அலைகடல் பகுதியான மணிப்பூரகத்தினினை பிளந்து கொண்டு எழுந்து அண்டத்தின் எல்லையை அடைந்து தலவர்களுக்கெல்லாம் தலைவனாய் உல்கத்து உயிர்கள் காமத் தீயில் விழாது துன்பத்தால் அலைமோதும் உலக்த்தில் அழுந்தாமல் காத்து அருள்வான் சிவபெருமான்.
364. குளிர்ந்த தன்மையுடைய மணிப்பூரகக் கடலைக் கடந்த அறிமய்மான ஒளிச்சுடரை அமரத்தன்மை பெற்றவரும், தேவர்களும் எட்டு திக்கும் கடல்போல் பரவி நிற்கும் சிவன் என வணங்குவர். வானத்தையே கடல்போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேல் சென்று அகக் கண்ணுக்கு பரவெளியாய் காட்சியளிப்பதை அறியமாட்டார்.
365. தத்துவங்களை எல்லாம் படைக்க வல்லானை படைப்பு இல்லாதவன் என்று துதித்து தம்மிடம் பரவும் முறையில் அமைத்துக் கொள்பவர் உலக உயிர்களே! பொங்கும் நீரில் கடல் ஒலி போன்ற நாதம் ஓங்கி எங்கும் பரவி காமத்தீயை மிகாதபடி சிவன் அமைத்து அருளினான்.
366. பண்பை அழிக்கும் காமச் செயல் என்று வழிபாடு செய்து சுவாதிட்டானத்தில் உள்ள நடபை அளிக்கும் பிரமனை தேடிச் சேர்ந்து நான்முகனின் சேட்டையைக் கெடுத்து வீண்பழி ஏற்படாமல் பக்குவப்படுத்தி அருளினான்.
#####
சக்கரப்பேறு!
367. மயக்கத்தை அளிக்கும் உணர்வு தத்துவத்திற்குரிய திருமால் உலக அனுபவம் நீங்கி சூழுமுனை வழியாக மணிப்பூரக வட்டத்தில் உள்ள உணர்வு தளத்தை அடைந்து வெண்மையான ஒளியில் தேவதேவனாக விளங்கி பூமி முதலிய ஏழு உலக இன்பங்களையும் படைத்து அளிப்பவனாக உள்ளான்.
368. சக்கரத்தைப் பெற்ற திருமாலான நல் தாமோதரன் தான் பெற்ற சக்கரத்தை தாங்க முடியாமல் விருப்பமுடன் சிவனை வழிபாடு செய்து சிவனனின் ஆற்றலில் ஒரு பகுதியை பெற்றனன்.
369.பகுத்துக் கொடுப்பதாக சிவபெருமான் நல்ல சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தருளினான். தன் சக்தியையும் பகிர்ந்தளித்தான். இவ்வாறு பகுத்து சக்திக்கும் திருமாலுக்கும் தன் திருமேனியை அளித்தருளினான் பெருமான்.
370. தக்கனின் வேள்வியை வீரபத்திரர் அழித்தார். அவர் சிரசுமேல் ஆணை என்ற சக்கரத்தை திருமால் செலுத்தி உணர்வைத்தூண்ட காமவாயு வேகத்தால் அக்னி சக்தியால் பயன் கிட்டாமல் ஆனது.
#####
ஓம்நமசிவய!
திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!
@@@@@
தக்கன் வேள்வி!
353. சிவபெருமானை நினையாமல் தக்கன் ஆண் பெண் கூட்டுறவான வேள்வி செய்ததால் சினம் கொண்டு காமாக்னியால் தக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டானது. அதனால் நினைத்தவண்ணம் விந்து ஜெயம் என்ற பூஜையின் பய்னைப் பெறவில்லை. சிவன் சினந்ததால் தேகாரியச் சிதைவு ஏற்பட்டு வெளியேறினர்.
354. ஆண் பெண் கூட்டுறவைச் செய்ய செருக்குடன் எழும் திருமால் உலகத்தில் படைப்பவன் சிவன் அல்லன் யாமே என்றான். அதனால் பந்தம் உண்டாக்கும் பாசக்கடல் சூழ்ந்து வருந்தியபின் சிவனை நோக்கித் தவம் செய்ய முடிவில்லாத சிவபெருமானும் வீட்டுணு தத்துவம் விளங்கும்படி செய்தனன்.
355. பிரமனும் தக்கன் வேள்விக்கு தானே தலைவன் எனச் செருக்கு கொண்டான். காமாக்கனி மூண்டெழுந்தபோது அதன் தன்மையில் பொருந்தி சிவபெருமான் முறையாய் ஆரவாரத்துடன் விளங்கி பிரமன் குற்றம் பொருத்து அவனுக்கு அருளினான்.
356. பிரம்மன், திருமால் முதலிய தேவர்கள் அத் தன்மையைப் பெற்றதற்கு காரணம் சிவபெருமானே. அந்த அக்னி கலையை உள்ளே விளங்கும் வண்ணம் அந்த அக்னி கலை நீங்காவண்ணம் சிவன் நிறைந்து விளங்கியுள்ளான்.
357. எல்லா இடத்தும் நீக்க்ம் அற நிறைந்துள்ளவன் சிவபெருமானே என்பதை உணர்ந்த தேவர்கள் துதிக்க ஆதாரங்களில் கீழ் உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கனல் சுழுமுனை வழியாக மேலே எழுந்து சிவந்த ஒளியானது சகஸ்ர தளத்தில் போய்ப் பற்ற, வழிபடும் முறை இதுவே என சிவபெருமான் அருள் செய்தான்.
358. திருமால், பிரமன், தக்கன், சூரியன், ஆகியவருடன் சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை தோள் என்பனவற்றை சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின்பு நல்லவர்கள் ஆனார்
359. காதில் கேட்கக்கூடிய உச்சரிக்கக்கூடிய மந்திரம் செல்லி சிவ அருள் பெற்ற தேவர்கள் செபிக்கத் தகாத மந்திரத்தால் பிராணவத்தை மூலதாரத்தில் உள்ள அக்னியைத் தூண்டி நாதம் ஏற்படச் செய்து பொருந்த நோக்கும் மனதை ஒருமைப் படுத்தும் செவிமந்திரம் கொடியது ஆகாது.
360 .தேவர்கள் உடலில் உள்ள ஒன்பது துவார குண்டங்களும் சிறப்பான இன்பும்பெற எங்களுக்கு அருளல் வேண்டும் என வேண்ட கொடிய அசுரர் அழிந்து போகும்படி பிரணவம் என்ற வில்லால் ஆணவம் முதலிய மும்மலங்களை எரித்து சிவன் அருளினான்.
361. சொல்பவர் கலங்கினும் நீ கலங்காதே! முன்பு சினந்து பின்பு அருள்செய்த நாதவடிவினன் சிவபெருமானே தன்னை அழைக்காது அலட்சியப்படுத்திய காமவேள்வியை அழித்தான். இன்ப வடிவான அவனை அன்பு செய்து அடைய வேண்டும். சொல்பவர் கூறும் மயக்க நெறிபற்றி கவலை கொள்ளாதே!
#####
ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
#####
இலிங்க புராணம்!
347. ஆதி சிவனை நோக்கி திருஅடி சேர்வேன் என சிரசின் இடப்பக்கம் விளங்கும் சக்தி கூறி உடலின் சிரசில் சிவசக்தியாக விளங்கும் சிவனை அடைய உறுதியான தவம் செய்து தேவர்கள் காணும்படியாக அர்ச்சித்து முறையாக வழிபட்டாள்.
348. உடலின் இயல்புபடி மும்மலக் கோட்டையை அழிக்கும் இறைவனை அடைய அருமையானவன் எனச்சொல்லி சோர்வு அடைய வேண்டியதில்லை அன்புடையவர்க்கு இறைவன் பொய்யன் அல்லன். அன்பர்களிடம் அருளுடன் பொருந்தி நின்று கருணை புரிபவன்.
349. சுவதிட்டானத்தில் இருக்கும் பிரம்மன் மணிப்புரகத்தில் இருக்கும் திருமால் ஆகிய இருவரும் முறைப்படி மூலாதர சக்கரத்தை சுற்றிவர ஒளிவடிவாய் விளங்கும் உருத்திரனும் திருமாலுக்கு சகஸ்ர தளத்தில் விளங்க அருள் புரிந்தனன். சுவாதிட்டானத்திலிருந்து உற்பத்தியைபப் பெருக்காது மேலே பிரமனுக்கு ஒளியைத் தந்தான்.
350. பொறிகளும் புலன்களும் இயங்கி இருபது தோள்களின் அகன்ற மலையை எடுக்க முயற்சித்த இராவணனது நிகர் இல்லாத வலிமையை ஒடுக்கி, அவன் தன் சிறுமை உணர்ந்து இறைவா காப்பாற்று என்று வேண்டியபோது நீங்கா பக்தியை நிலை பெருமாறு செய்தான் பெருமான்.
351. சிவனான சண்டீசன் தனக்கு நேர்வதை காரண காரியத்துடன் அறிந்து கொள்ளும் வல்லவன். வெள்ளை ஒளியான மணலைச் சேர்த்து பிறவி நீக்கும் வகையில் ஜாணேந்திரியம் மற்ற புலன்களில் மேயாமல் தடுக்க மாயையான உடலான தந்தை அதைப் பொறுத்துக் கொள்ளாமல் சினந்து ஒடுக்க சண்டீசன் அக்னி கலையான வாளினால் பிங்கலை எனும் இரண்டு கால்களை திழிற்படாமல் செய்து சிவ அருள் பெற்றான்.(சண்டீச நாயனார் வரலாறு)
352. சிவபெருமானை நோக்கி ஓடி வந்த தேவர்கள் எல்லாம் முக வாட்டத்துடன் அடைக்கலம் ஆகி இறைவா போற்றி என வணங்கினர். ஒப்பில்லாத புகழை உடைய சிவபெருமான் எழுக என அருள் செய்தார்.
#####
நாத இயல்பு, பதி வீரத்தால் வென்ற இடங்கள்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!
#####
உடம்பில் உள்ள நாத இயல்பு!
337. உலக உயிர்கள் சுழுமுனை வழியில் செல்லாது உலகமுகமாக கீழ் கிழ்நிலைப்பட்டு பிராண சக்தியை இழக்கின்றனர். மூலாதாரத்தின் நடுவில் உள்ள நாதமே விரைந்து சென்று சிரசில் சிவனின் அருகில் பொருந்தி இருப்பாயாக!
338. அக்னியின் வடிவான நாதத்தை சிரசில் முன் பக்கம் இருக்கச் செய்யும் சாதகன் அதைச் சிரசில் பின்பக்கம் பிடரியில் விளங்கச் செய்தால் அது பரவி தலையின் இடது பக்கம்மும் விளங்கும் அவர் தவமுனிவராய் தலையில் எங்கும் நிறையும் வனப்பு மிக்க ஒளியாவார்.
#####
பதி வீரத்தால் வென்ற எட்டு இடங்கள்!
339. மலை போன்ற கொடிய எண்ணங்கள் நிறைந்த அந்தகன் சூரன் இறையிடம் பெற்ற வரத்தால் உலக உயிர்களை துன்பு/றுத்த தேவர்கள் இறைவனிடம் முறையிட கூர்மையான தூய்மையான ஞானம் என்ற சூலம் கொண்டு சிவபெருமான் கொல்லும் தொழிலைச் செய்தனன். (இடம்-திருக்கோவிலூர்)
340. சுவாதிட்டானத்தில் விந்துவை நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து அக்னி காரியத்தில் ஜீவன்களின் விந்து வெற்றி பெறச் செய்து உலகம் நிலைபெற நான்முகன் வேண்டும் என நினைத்து அவர் குறும்பை நீக்கி உலக இன்பத்திற்கு பொருந்துமாறு அருள் செய்தான். (இடம்-திருப்பறியலூர்)
341. எங்கும் பரவியிருக்கும் பெரிய உலகத்திற்கு ஆதாரமாய் இருந்தும் ஒடுங்குவதற்கு இடமான இறைவன் திருவடியை உணர்ந்த பக்குவம் உடையவர்கள் போகம் செய்யும்போது பிர்மனின் குறும்பை குறுக்கி மணிப்பூரகத்திலிருந்து கவர்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் திருமாலின் கவர்ச்சியை நீக்கி ஞானியர் இடைவிடாமல் சிந்திக்க அருளினார். இடம்-திருக்கண்டியூர்)
342. உயிரின் உடலுக்கு தலைவனும் நாத தத்துவத்திற்கு உரியவனும் ஆகிய சிவபெருமானிடம் நீரை முகமாக்கொண்ட் சலந்தரன் கீழ் நோக்குதலான போரைச் செய்ய உயிர்கள் சாதனையால் மேல் நோக்கி சென்று சகஸ்ரதளத்தில் பிராணனுடன் கலந்து விரிய ஜீவர்களுக்கு உதவியாய் சலந்தரனை அழித்து அருள் செய்தான். (இடம்-திருவிற்குடி)
343. கங்கை நீரைத் தலையில் அணிந்து சிவந்த சடையை உடைய சிவன் மூன்று கோட்டைகளை அழித்தார் என்று சொல்வர். மூன்று கோட்டைகள் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அழித்தனவாகும். அவர் அவ்வாறு அழித்தலை யாரறிவார்.(இடம்-திருவதிகை)
344. மூன்று வகையானத் தீயிலிருந்து நாதத்தை வெளிப்படுத்தும் அக்னியின் செயலை கரிய யானை (கயமுகாசூரன்) போன்ற கரிய இருளை கிழித்து வெளிப்பட்ட பெருமானை யாரும் அறியவில்லை. குணம் கூடிய பலதேவர்களும் அந்த தீயின் கண் வெளிப்பட்டபோது மறைந்தனர்.(இடம்-திருவழுவூர்)
345. மூலாதாரத்திலிருந்து சுழுமுனை வழியாக மேல் எழும் மூர்த்தியை பிரமரந்திர மேல்துளையில் நோக்கி பொருந்தச் செய்தால் காலனைச் சினந்து மெல் எழும் நாதத்தை சகஸ்ரதளத்தில் பொருத்தி எக்காலமும் அழியாமல் இருக்கலாம். (இடம்-திருக்கடவூர்)
346. நன்றாக இருந்த மனதை சிவனுடன் சேர்த்து இலிங்கவழி செல்லாது தடுத்து தீமை செய்யாதபடி விந்து நீக்கம் என்ற காமனது செய்லைக் கெடுத்து வாழ்க்கைத் துணைவியுடன் பொருந்தி இருப்பது ஆகும். மனம் சகஸ்ரதளத்தில் பதிந்து பெண்னுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் விந்து நீக்கம் இராது. காமனை எரித்த செயலாகும். (இடம்-திருக்கொறுக்கை)
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.