gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நாடி சுத்தம்! (12)

நாடி சுத்தம்!

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

#####


பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த! (பற்கள் வழி உறிஞ்சும் நிலை)

நற்பயன்கள்: உடல் சூடு குறையும்.நுறையீரல் சுத்தமாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களைக் கடித்தவாறு இருக்கட்டும். கடித்த நிலையில் உள்ள இருத்தாடைப் பற்களுக்கும் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே மெதுவாக தடையில்லாமல் இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.

3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

#####

பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி! (நாக்கு வளந்த நிலை)

நற்பயன்கள்: உடலுக்கு குளிர்சியை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும். அல்சர் போன்ற குடல் புண்கள் குணமாகும். மனதை சுத்தப் படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். படபடப்பு குறைந்து மன அமைதி உண்டாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.

3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

#####

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

#####

பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி! (நாக்கு மடங்கிய நிலை)

நற்பயன்கள்: உடல் வெப்பம் தணியும். வாய்ப் புண்கள் ஆறும். பசியைக் கட்டுப்படுத்தலாம்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

3.நாக்கை பின்புறமாக மடித்து மடித்த நாக்குநுனியை மெதுவாக மேல் வரிசைப் பற்கள் பக்கம் அழுத்திப் பிடிக்கவும். நாக்கின் இரண்டு பக்கத்திலும் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ் சப்தத்துடன் (Hissing sound) காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்)

4.பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 10:05

உஜ்ஜயி!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!

இந்த ஆற்றல்மிக்க உஜ்ஜயிமூச்சை ஆங்கிலத்தில் Victorious Breath / Hissing Breath / Ocean sounding Breath) என்றழைப்பர்.

நற்பயன்கள்- மூச்சுக் காற்று வழியில் ஏற்படுத்தப்படும் தடை சுவாசிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும். ஆழ்ந்த மன அமைதியை ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். நுரையீரலுக்கு அதிக அளவில் பிராணவாயுவை கொண்டு சென்று சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யும். தைராய்டு பிரச்சனைகள் குணமாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.

3.உள்ளே காற்றை சில நொடிகள் தங்கவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் தொண்டையில் ஸ்ஸ்… என்ற சப்தத்துடன் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். காற்று வெளியில் தாராளமாக வராமல் ஓர் தடையுடன் அனுப்பவேண்டும். அதாவது வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் சப்தம் எழுப்பவும். அது வெளிவரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

எட்டாம் பயிற்சி-அக்னிசார்! (வயிற்றை மடக்குதல்)

நற்பயன்கள்: ஜீரண உறுப்புகள் சீரடையும்
1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.

3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

#####

திங்கட்கிழமை, 03 January 2022 10:02

உத்கீத்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

ஏழாம் பயிற்சி-உத்கீத்!

நற்பயன்கள்- அளவிடமுடியா ஓர் பேரானந்த, இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 10:00

பாராம்ரி! (தேனி சப்த நிலை)

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஆறாம் பயிற்சி-பாராம்ரி! (தேனி சப்த நிலை)

நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும். உடல் செல்களை குளிர்சி அடையச் செய்து செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். ஒம் என்பதில் மனதில் ஒ என நினைந்து ம் என்ற ஒலியை மட்டும் வெளியே கேட்கும்படி உச்சரித்தால் வண்டின் ரீங்கார ஓசை கேட்கும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:58

சூரியனுலோமா!

Written by

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.


#####

ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!

நற்பயன்கள்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித் (சூரிய நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். உணவு சப்பிட்ட உடன் / தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குச் மேல் செய்யக்கூடாது. இதயக் கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:57

சந்திரனுலோமா!

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!

நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:55

அணுலோம்-விலோம்!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!

நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.

3.பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.

4.உள்ளே காற்றை இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் ஒரே அளவாக இருக்கட்டும். இதை ஒரு நாடி சுத்தி எனக்கணக்கிட்டு குறைந்தது 9 முறை செய்ய ஆரம்பிக்கவும்.

5.சில நாட்களுக்குப்பின் காற்றை உள்ளே, வெளியேவிடும் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும். இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் செய்து பழகவும். பழக்கத்தில் 25 வரையும் அதற்கு மேலும் செய்யலாம்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27037878
All
27037878
Your IP: 13.59.218.147
2024-04-19 02:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg