gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 20 April 2020 16:18

தியானம்!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

தியானம்!

598. முன்பு தாரணையில் இரண்டும் எட்டும் கூடிய பத்தாம் மந்திரத்தில் புத்திய்ம் புலனும் நீங்கியிருக்கும் தியானம் சொல்லப்பட்டது. அது வடிவுடன் கூடிய சக்தியை மேலாக எண்ணுதலான சக்தி பரத்தியானம். ஒளியை உடைய சிவனை நினைப்பது சிவத்தியானம். இவ்வண்ணம் யோகத்தில் இரண்டுள்ளது..

599. மெய், கண், நாக்கு, மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில் நாதத்தை எழுப்பும் அண்ணாக்குப் பகுதியில் எல்லையில்லா பேரொளியைக் காட்டி மனம் வெளியில் செல்லாது தடுத்து பிழக்கச் செய்வது இந்த அண்ணம்.

600. ஞானக்கண்ணில் பொருந்திய சோதியில் கண்களைப் பொருத்திப் பார்த்து சலனம் இல்லாமலிருந்தால் வான் கங்கை புலப்பட்டு சிதகாயப் பெருவெளியில் பெருந்தியுள்ள சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலாம்.

601. உடலுடன் பொருந்தியுள்ள உயிரை நினையாமலும், உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை நினையாமலும், சிவன் வீற்றிருக்கின்ற சிந்தயையும் நினைக்காமல், சந்திர மண்டலத்தில் விளங்குகின்ற நாதமயமான சக்தியை எண்ணாமலும் இருப்பவர்களின் அறியாமையை என்னவென்பது.

602. உள்ளத்தில் விளங்கும் சிவ சோதியை மேலேச் செலுத்தி சினம் என்ற தீயை நீங்குமாறு செய்து எல்லாவற்றிலும் நிற்கும் சிவ ஒளியை சுழுமுனையில் தூண்டி இருக்கும் மனத்தில் சிவன் மங்காத ஒளியாக இருக்கும்.

603. எண்ணாயிரத்தாண்டு யோகத்தில் இருந்தாலும் கண்ணுள் மணியும் அதனுள் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டறிய முடியாது. மனதில் ஒளி பொருந்தும்படி காண்பவர்க்கு கண்ணாடியில் உருவத்தைப் பார்பது போல மனத்தில் காணலாம்.

604. இரு கண்களின் பார்வையை நடு மூக்கின்மேல் பொருத்தி வைத்திடின் சோர்வு இல்லை. உடலுக்கு அழிவில்லை. மனதின் ஓட்டமும் அடங்கும். அறியும் இயல்பான தன்மையும் நான் என்ற முனைப்பும் இல்லாதுபோம். வெளியே செல்லும் அறிவு இல்லாது அவனே சிவன் ஆகலாம்.

605. இரு கண்களின் பார்வையை நாசியின்மேல் வைத்து உய்ர்வினின்று தாழாத பிராணனை உள்ளே அடக்கத் துன்பம் தரும் மனம் முதலியவற்றை நீக்கி யோக நித்திரை செய்பவர்க்கு பிறந்த உடல் பய்னைத் தரும். கூற்றுவனால் ஏற்படும் அச்சம் இல்லை.

606. மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுட்பமான ஒலிகளை தியானத்தை மேற்கொள்பவரால் மட்டுமே அறிய முடியும்.

607. கடல், மேகம், யானை ஆகிய வற்றின் ஓசையும் கம்பியின் இறுக்கத்தால் வீணையில் உண்டாகும் நாதமும் வானத்தில் ஏற்படும் மறையொலி சுருங்கிய் வாயை வுடைய சங்கு என்பதன் ஓசையும் திடமாய் அரிய வல்ல யோகியர் தவிர மற்றவருக்கு தெரியாது..

608. இறைவனின் இயல்பும் தேவர்களின் சேர்க்கையும் பாசத்தின் இய்க்கமும் பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமே. இதை உணரும் வல்லமை உடையவர்க்கு பூவில் வெளிப்படும் நறுமணம்போல் நாதத்தில் இறைவன் இருப்பான் என்பது புரியும்.

609. நாத தத்துவம் குடியும் இடத்தில் பராசக்தி. அங்கேதான் யோகத்தின் முடிவு உள்ளது.. நாதம் முடியும் இடத்தில் நம் மனம் பதியும். அங்குதான் நீலகணடர் இருப்பார்.

610. மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்னி, கதிரவன் அக்னி, திங்கள் அக்னி ஆகிய ஐந்து அக்னியையும் பயிலுபவர் இந்த ஐந்து தீயையும் ஆறு ஆதாரங்களில் அறிந்து தியானம் செய்து துதிக்கக்கூடிய நீலஒளியை இய்க்குகின்ற சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய தன் மாத்திரைகளில் ஒடுங்க பொன்னொளியில் விளங்கும் சிவன் திருவடியைச் சேரலாம்.

611. ஐம்பொறிகள் ஒய்வு எடுக்கும் பள்ளி அறையில் பகல் இரவு இல்லை. ஒளிமட்டும் விலங்கும். ஒளிமட்டுமே இருப்பதால் வேறு அக்னி கொளுத்தாமல் காக்கலம். இந்நிலையை அறியின் அது நான்கு காத தொலைவுடையது. நியமனத்தால் அடையப் பெறுவது. இருள் என்பதே இல்லை என்பதால் விடிவு என்பதில்லை.

612. சந்திரமண்டலம் அமைக்க வேண்டும் என்பதற்கு குந்தகம் ஏற்படாமல் ஒன்றுபட்டு சுழுமுனை நாடிவழி மேல் நோக்கிச் சென்ற யோகிக்கு அக்னி மண்டலம், கதிரவன் மண்டலம், திங்கள் மண்டலம் மூன்றும் ஒத்த வகையில் வளர்ந்து பின் எடுத்த உடல் உலகம் இருக்கும்வரை சீவனை விட்டகலாது.

613. அந்த மண்டலங்களின் தனமை என்ன வென்றால் அக்கினி, கதிரவன், திங்கள் என்ற மண்டலங்களின் அதிபதிகள் நான்முகன், திருமால், உருத்திரர் ஆகியோரின் ஆட்சி அம்மண்டலத்தில் இருப்பின் அது மற்ற மண்டலத்தார்க்கு உதவி செய்யும் தன்மையாகும்.

614. இயங்கும் உலகில் மயங்கித் தவிக்கின்ற உள்ளம் என்ற இருட்டறை தோன்றும் மூன்று மண்டலங்களில் பொருந்தி உச்சித்துளை வழியாக அதிக அன்பு கொண்டு ஆராய்ந்து மேலே சென்றால் துன்பம் நீங்கி சிரசில் மார்கழி விடியல் போல் வெளிச்சத்தைக் காணலாம்.

615. தாமத, இராச, சாத்துவிக ஆகிய முக்குணங்களின் இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேல் எழுப்ப வல்ப்புறக் கதிரவன் கலையை இடப்பக்கம் உள்ள திங்கள் கலையுடன் பொருந்தும் வண்ணம் தினம் காலை ஒரு நாழிகை செய்தால் உடம்பில் உயிர் அழியாது வைப்பான் சிவன்

616. அசைவை ஏற்படுத்தும் கொப்பூழ் சக்கரத்திற்கு நான்கு விரல்மேல் மேல் செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழே இருக்கும் அநாகதச் சக்கரத்தின் கட்ல் ஒலிபோல் பொங்கி எழும் ஒலியைத் தியானம் செய்ய வல்லவர் உடலின் ஆன்மாவை அறிவர்.

617. அறிவு எனும் ஆன்மா அழிவற்ற முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி மாயையை அருளால் கொடுத்துச் சிவனுடன் நீங்காமல் இருக்கும் அருள் சக்தி. என்பதை சிவநெறியில் பொருந்திய அன்பரே அறிவர்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:16

தாரணை!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

தாரணை!

588. வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்ட மனதைக் கட்டுப்படுத்தி கீழ் நோக்காமல் தடுத்து நடு நாடியின் வழி போகும் மூச்சுடன் பொருத்தி வானத்தில் பார்வையை செலுத்தி எதையும் காணாத கண்ணுமாய் கேளாத செவியுமாய் இருந்தால் வாழ்நாள் அழியாது அடைக்கும் வழியாகும்.

589. மலை போன்ற தலையில் வான் கங்கை நீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும். சுழுமுனை நாடி வழியாகப் போய் நாத ஒலியுடைய சபையில் கூத்தாடிக் கொண்டிருக்கும் நீங்கா ஆனந்தத்தை அளிக்கும் பேரொளியை காண்பீர்.

590. தலையின்மேல் எழுந்தருளியுள்ள சக்தி மாற்றத்தை செய்யும் தேவியாகும், மூலாதாரத்தில் பொருந்தியிருக்கும் மூர்த்தியைத் தாரனை செய்து தலையில் எழுந்தருளி சக்தியுடன் சேருமாறு செய்தால் வயது முதிர்ந்தவனும் இளவயதுடையவன் ஆவான். நந்தி சிவபெருமானின் ஆனை இதுவாகும்.

591. மூலாதாரத்தில் உள்ள காம வாயுவை மேலே செல்லும்படி செய்துவிட்டு மைய வழியான சுழுமுனைமேல் மனதை இருத்தி நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப்போல் நாட்டமுடன் இருப்பவர்க்கு உடல் சிதையாமல் ஊழி காலம் வரை இருக்கும்.

592. உயிர் உடம்பில் பொருந்தியிருக்கும் காலத்தை கணக்கிட்டு அறிந்து கொண்டால் அக்காலஎல்லை பிராணனின் இயக்கத்தால் அமைந்திருப்பது புரியும்.
அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தை கட்டிச் சேர்த்து விட்டால் உயிருடன் கூடிய காலம் அழிவில்லாது நிற்கும்.

593. வாய் திறவாமல் மௌனத்தை மேற்கொள்பவரின் மன மண்டலத்தில் பிராணன் எனப்படும் சக்தி உள்ளது. அப்படியின்றி வாய் திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியே விட்டு வீணாக்குகின்றார். வாய் பேசாதவர் பிராணனைச் செலுத்தி சோதியை அறிவார். சகசரதளத்தை திறந்து பார்க்க ஆற்றல் இல்லாதவர்கள் கோழைத்தனம் கொண்டவர் ஆவார்.

594. மனத்திலிருந்து இறங்கி பிரிந்து செல்கின்ற வாயிவை வெளியே போகாதபடி நடுநாடியில் செலுத்தினால் கண், காது, நாசி, வாய் ஆகிய ஏழு சாளரங்களையும் கருவாய் எருவாய் என்ற இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட கோயிலான உடல் பெரும்பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம்.

595. புலன்கள் துய்த்து நிரம்பிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து வாக்கு, கை, கால், குதம், கருவாய் ஆகிய கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய பத்தில் ஞானேந்திரியம் ஐந்தும் நீங்கினால் அறிவற்றவனாகி வருந்தி ஒரு பயனுமில்லை.. பொறிக்ளின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு மனம் என்ற குரங்கை உடலில் குறும்பு செய்யாமல் இருக்கச் செய்ய முடியும்.

596. முன்னர் வந்து பிறந்தவர் எல்லாம் தாரணை இல்லாததால் அழிந்தனர். பின்னால் தோன்றுபவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம். அவ்வாறு அழிகின்றவர் நிலையைப் பற்றி பேசி என்ன பயன் இது என்ன மாயம். ஆற்றில் இடிந்து கரையும் கரை போன்று நாளுக்கு நாள் அழியும் உடம்பு அழியாமல் இருக்குமோ!

597. ஐந்து பொறிகளால் அரிக்கப்பட்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து அப்பூதங்களின் ரசம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் ஆகிய் தன் மாத்திரைகளில் போகும்படி செய்து மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய அந்த காரண நாதத்தில் ஒடுங்கி இருக்க ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருந்தால் அதுவே தாரணை,

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:15

பிரத்தியாகாரம்!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

பிரத்தியாகாரம்!

578. வெளியே செல்லும் இயல்புடைய மனத்தை உள்ளே பொருத்தும்படி செய்வதால் சிறிது சிரிதாய் இருள் நீங்கி ஒளி காணலாம். பழைய மறைபொருளான பரம்பொருளை உடலில் உள்ளே கண்டு மகிழ்ந்து இருக்கலாம்.

579. கொப்பூழுக்கு கீழ் 12 அங்குலத்தில் உள்ள குண்டலினியை மேலெழுப்பும் பிரசாதமாகிய மந்திரத்தை யாரும் அறியவில்லை. அதை அறிந்தபின் சிவன் நாதமயமாய் தலையில் விளங்குவான்.

580. மூலாதரத்திற்கு இரண்டுவிரல் மேலேயும் பார்வைவுடைய குறிக்கு இரண்டு விரல் கீழேயுமுள்ள இடத்தில் வட்டமாய் இருக்கும் குண்டலியினுள் எழும் சுடர் உடலில் கொப்பூழ் தாமரைக்கு கீழ் நான்கு விரல் அளவில் உள்ளது.

581. நாசிக்கு கீழ் பன்னிரண்டு அங்குல அளவில் உள்ள இதயத்தில் மனதை இழுத்து வைத்து செஞ்சுடரை நினைத்தால் அஷ்ட பெருஞ்சித்திகளும் அரச யோகமும் வந்துசேரும். இந்த தியானம் உடலுக்கு எப்போதும் தீமை செய்யாது.

582. மின்னல் பின்னி செல்வதுபோல் ஒளி தோன்றினால் குற்றமில்லா சிறப்பான ஆனந்தம் உண்டாகும். நேர்மையான கழுத்துப் பகுதியில் நிலவொளி தோன்றினால் பிரத்தியாகாரம் செய்பவர் உடலில் ஆனந்த பரவசம் உண்டாகும்.

583. மூலாதாரத்தை –குதத்தை மேல் எழும்படி அடைத்திருத்தலான ஆகுஞ்சன்ம் செய்யும் புருவ நடுவிலுள்ள நடுநாடித் துளையில் மனதை பதித்து வைத்து வேல் போன்ற கண்ணை வெளியில் விழித்திருப்பதே காலத்தை வெல்கின்ற வழியாகும்.

584. மலம் கழிக்கும் வாசலான குதத்திற்குமேலே இரண்டு விரல் அளவும், கருவுண்டாகும் வாயிலான கோசத்திற்கு இரண்டு விரல் அளவு கீழ் உள்ள இடத்தில் உருவாகும் குண்டலினியை நினைப்பவர்க்கு மகேசுவரன் பேரொளி வடிவாகக் கலந்து தோன்றுவான்.

585. சுழுமுனையில் மலக்காரியமான இருளால் ஏற்படும் அவத்தையும் புருவத்தின் நடுவில் விளங்கும் ஜோதியினின்று பிரிந்துள்ள நிலை மாறுதலை ஒழித்து உணர்வு மயமாய் விளங்கும் என்று எண்ணி உருகி மனதை ஒருமைப் படுத்தினால் அதுவே பெருமையுடைய பிரத்தியாகாரம்.

586. வெளியே போன வாயுவை மீளவும் புகமுடியாதபடி திறமையாக உள்ளொயில் பொருத்தி நிற்பின் உள்ளம் வலிமை அடையும். அப்போது இறைவனும் அவ்வொளியிலே புறப்பட்டு போகாதவனாய் நிலைபெற்று திகழ்வான்.

587. பிரத்தியாகாரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையில் அறியப்படும். வெறுக்கத்தக்க அறியாமையான இருளை நீக்கி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுங்கள். சிவானை விரும்பும் சிந்தையில் உறுதியாக இருந்தால் சிவஞானம் பெற்ற தேவர் ஆகலாம்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:12

பிராணாயாமம்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பிராணாயாமம்!

564. உடலுக்கும் ஐம்பொறிகளுக்கும் தலைவனான ஆன்மா உய்வு அடைந்து மேன்நிலையடைய பிராணன் என்ற குதிரை உள்ளது. அது உடலை விட்டகன்று அண்டத்தைப் பற்றி நின்றவருக்கு வயப்படும். மெய் உணர்வு இல்லாமல் கண்டத்தைப் பற்றி இருப்பவர்க்கு அப்பிராணன் வயப்படாது.

565. நல்லவனான ஆரியன் என்ற மனதில் ஒடுகின்ற அபானன் பிராணன் என்ற இரண்டு குதிரைகளையும் வெளியில்விட்டு உள்ளே நிறுத்துகின்ற திறமை வுடையவரில்லை. குருநாதரின் அருள் கிட்டினால் பிராண செயம் பெற்று பிராணன் அபானன் ஆகியவற்றைச் சேர்த்து பிடிக்கலாம்.

566. பறவைவிட வேகமாகச் செல்லும் பிராணன் வழி சிரசை நோக்கிச் செல்லும்போது கள் உண்ணாமலேயே அதைச் செய்பவனுக்கு மகிழ்வு உண்டாகும். உடலில் சேம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனம் உடையவர்க்கு இது உரித்ததாகும்.

567. உலக நினைவுகளை எண்ணாதவனுக்கு பிராணனும் மனமும் அடங்கி ஒடுங்கும்போது பிறப்பும் இறப்பும் இல்லை. பிராணான் நிலைதடுமாறி பேச்சு அறிவித்தால் பிராணன் ஒடுங்காது பிறப்பு இறப்பில் உழல்வர்.

568. இடப்பக்கத்தில் காற்றை உள்ளுக்கிழுக்கும் பூரகம் 16 மாத்திரை அளவும். இழுத்த காற்றை 64 மாத்திரை அளவு உள்ளே நிறுத்துதல் கும்பகம் பின் அக்காற்றை 32 மாத்திரை அளவு மெல்ல வலப்பக்கம் வெளியே விடுதல் ரேசகம் என்றாகும். இம்முறைக்குமாறாக வலப்பக்கம் காற்றை இழுத்து கும்பித்து மெல்ல இடப்பக்கம் வெளியே விடுதல் வஞ்சனை.

569. காற்றை இழுத்து தன்வசப்படுத்தி அடக்கி பிராணாயப் பயிற்சி செய்பவன் உடல் பளிங்கைப்போல் மாசு இல்லாத தூய்மையுடையதாய் முதுமை அடைந்தாலும் இளமைத் தோற்றத்துடன் இருப்பர். இதனுடன் குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட மென்மை உடையவனாகி எங்கும் செல்லும் ஆற்றலைப் பெற்று மேன்மை அடைவான்.

570. எங்கே இருந்தாலும் இடப்பக்க நாசி இடகலை வழியாக பூர்கம் செய்தால் அப்படி பூரித்த உடலுக்கு அழிவு என்பது உண்டாகாது. அங்கு கும்பகம் செய்து அந்தப் பிராணான் செல்லும் அளவு மேற்செல்லச் சங்கநாதம் ஏற்பட்டு மேன்மை கிட்டும்.

571. இடகலையில் ஏற்றி பிங்கலையில் இறக்கி கும்பகம் செய்து காற்றை இழுத்துப் பிடிக்கும் முறையை அறிந்தவர் இல்லை. அங்ஙனம் அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் உடையவராவர்.

572. காற்றை தொண்டை மூலாதாரம் விலா ஆகியவற்றில் நிரம்பும் வண்ணம் பூரகம் செய்து விருப்புடன் வயிற்றில் கும்பகம் செய்து இரேசகத்தினால் உறுப்புகளை சுருங்க வைத்து இருப்பின் பெருமானின திருவருளைப் பெறமுடியும்.

573. இடைகலை வழியாக 16 மாத்திரை பூரகம் செய்து பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து செய்கின்ற வேள்வியில் 64 மாத்திரை அளவு கும்பகம் செய்ய உண்மை விளங்கும்.

574. கட்டப்பட இவ்வுடல் தளர்ச்சி இல்லாமல் இரேசகம் செய்து 10 நாடிகளும் விம்மும்படி காற்றை உள்ளே இழுத்து பூரித்து நிரப்பிய பிராணன் அபானன் ஒன்று சேரப்பெற்று நேராய் நிமிர்ந்திருந்தால் இயமனால் உண்டாகும் பயம் இருக்காது.

575. உயிர்பாய் திரியும் காற்றை முறையான கும்பகத்தால் உள்ளே தூய்மை செய்வதால் உடல் உறுப்புகளில் குருதி ஓட்டம் நன்கு பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர் கறுத்து தோன்றும். ஒளிக் கதிர்களால் சூழப்பெற்ற ஆத்மா உடலில் நிலையாய் இருக்கும்.

576 உடம்பை இடமாகக் கொண்ட பிராணசக்தி குழந்தையாய் இருக்கும்போது 12 விரல் அளவு நீளம் சென்றும் புகுந்தும் இருக்கும். வயது முதிர்ந்தபோது நான்கு விரல் அளவை விட்டு விட்டு எட்டு விரல் அளவு மட்டும் செயல்படுகின்றது. விடுபட்ட அந்த நான்கு விரல் அளவையும் செயல்படுமாரு செய்பவர் ஐந்தெழுத்து வடிவத்தை பெறுவார்.

577. பன்னிரண்டு விரல் அள்வு செயல்படும் பிராணான கதிரவனுக்கு பகல் இரவு என்றுண்டு. மூக்கிலிருந்து தொண்டைவழி கீழ் நோக்கிச் சுவாசப்பைக்கு காற்று செல்லுவதை ஆன்மா அறியாது. கீழ்முகமாகச் செல்லாமல் மேல்நோக்கிச் செல்லும் பிராணானை ஆன்மா அறிந்தால் பிராணன் என்ற கதிரவன் இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் ஒளிவீசும்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:11

ஆசனம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஆசனம்!

558. பத்மாசனம் முதலிய பல ஆசனங்களில் எட்டு மிக முக்கியமானவை. சொங்கு-சேர்வு இல்லாமல் இருக்கும் சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தக்கவன் தலைவன்.

559. ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிகவும் இழுத்த நிலையில் வலப்பக்கத் தொடையில் இடக்காலையும் இடப்பக்கத் தொடையில் வலக்காலையும் வைத்து கைகளை மலர்ந்தி தொடையின்மீது வைப்பது பார் புகழும் பத்மாசனம் ஆகும்.

560. குற்றமில்லா வலக் காலை இடப்பக்கத் தொடையின்மீது இருக்குமாறு வைத்து முழங்காலின் மீது கைகளை நீட்டி தளரும் உடலை நேர் செம்மையாக இருக்கச் செய்து சிறப்படைவது பத்திராசனம் ஆகும்.

561. பத்மாசனம்போல் கால்கள் இராண்டையும் தொடையின் மேல் வைத்து கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையில் கைகளை நுழைத்து தரையில் ஊன்றி உடலின் சுமை கைகளில் தாங்குவதற்கான சமநிலையில் தெரிந்து அசையாதபடி நிறுத்துதல் குக்குட ஆசனம் ஆகும்.

562. பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி காலை மடித்தமர்ந்து முழங்காலில் கைகளை நீட்டி வாயைப் பிளந்துகொண்டு கண்களை புருவ நடுவை பார்த்தவாறு இருப்பது சிம்மாசனம் ஆகும்.

563. பத்திரம், கோமுகம், பத்மாசனம், கேசரி, குக்குடம், வீரம், சுகாசனம் ஆகிய ஏழும் மேலானவை. பழமையான நூற்றி இருபதாறில் இந்த ஏழும் உள்ளன.
வலப் பக்கம் பின் பகுதியில் வலக்கால் பரப்பையும், இடக்கால் பரப்பையும் சேர்ப்பது கோமுகாசனம். வலப்பக்கத் தொடையின்மீது இடக்கால் பரப்பைச் சேர்த்து இருத்தல் வீராசனம்.

#####

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

மூன்றாம் தந்திரம்!

அட்டாங்க யோகம்!

549. சரியாய் கட்டுப்படுத்தப்பட்ட உயிர்மூச்சான பிராணன் ஒன்று இழுக்கப் பெற்று அது பன்னிரண்டு விரற்கடை அளவு கழுத்திற்கு மேலும் கீழும் இயங்குமாறு எண்ணி அட்டாங யோகத்தை எடுத்துக் கூறி நந்தியெம்பெருமான் தீமையை போக்கவும் நன்மையை மேற்கொள்ளவும் வழிவகை செய்துள்ளான்.

550 முன் சொன்ன வண்ணம் புலடக்கத்தில் நன்றாற்றல் நெறியில் நின்று தன்னை மறந்திருக்கும் சமாதி நிலையில் இருந்து உய்வு பெறவும் முன்னால் வழிகாடி பின்னால் நிற்கும் பராசக்தியின் துணையை அடைந்து நெஞ்சு, தலை, உச்சி, கண், கை ஆகிய கருவிகளான உறுப்புகளைச் சிவனது உடமை என்றெண்ணி இருக்கும் இம்முறையில் இந்த யோகத்தை கூறிச் செல்வான்.

551. அதுவழி இது வழி என்று தடுமாறாமல் இறைவனை அடைய அட்டாங்க யோக நெறியில் சென்று சமாதி நிலையை அடையுங்கள். அப்படிப் பொருந்திய உயிர்க்கு ஞான யோகம் அடைந்து சிவப்பேறு அடையலாம். அப்படி ஞானம் கைகூடாமல் போனாலும் பிறவிற்கு என வரும் நெறியில் ஓர் உடலில் பொருந்துவது என்பது இல்லாமல் போகும்.

552. இயமம், நியமம் அளவில்லா ஆசனம் நன்மையான பிராணயாமம், பிரத்தியாகாரம் வெற்றிதரும் தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினைகள் பொருந்திய எட்டுவகை உறுப்புகளை உடைய யோக நெறியாகும்.

#####

இயமம்!!

553. தொடர்ச்சியாக எட்டு திக்குகளிலும் மழை பெதாலும் குளிர்விக்கும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள் என நந்தியெம்பெருமான் பவளம் போன்ற குளிர்ந்த சடையுடனே பொருந்திய சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், ஆகிய முனிவர் நால்வர்க்கும் அருள் புரிந்தான்.

554. எந்த உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், திருடாதவன், நல்ல குணத்தை உடையவன், தீமை செய்யாத நல்லவன், பணிவுடையவன், நீதி வழுவாதவன், தன் பொருளைப் பகிர்ந்தளிப்பவன், குற்றம் செய்யாதவன், கள், காமம் இல்லாதவன் ஆகிய இந்த இயல்புகளை உடையவன் இயமத்தை மேற்கொள்ள தகுதியுடையவன்.

#####

நியமம்!

555. நியமத்தை மேற்கொள்பவன் நாதவடிவான பழமையானவனை, பேரொளியுடன் திகழ்பவனை, மூலாதரத்தில் அக்னிமய்மாய் இருப்பவனை, சிவனிடம் பிரிவின்றி இருக்கும் சக்தியுடன் உயிர் உடலுடன் இனைந்து நிற்கும் தன்மையை உணர்ந்து ஒழுகுதல் வேண்டும்.

556. தூயதன்மை, அருள், குறைந்த உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு காமம், களவு, கொலை ஆகியவற்றைத் தீமை என ஒதுக்கி இந்த பத்தையும் மேற்கொண்டே நியமத்தினை பின்பற்றல் வேண்டும்.

557. தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை, கொடை, முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்தையும் நியமத்தினை மேற்கொள்பவன் உயர்நிலையில் கடைபிடிக்க வேண்டும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:03

பெரியாரைத் துணைக் கோடல்!

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

#####


பெரியாரைத் துணைக் கோடல்!


.543. யாத்திரை செய்பவருடன் சேர்ந்து நானும் நடைப் பயணம் செய்வேன். பாடுபவரின் ஒலியைச் செவி வழி கேட்டு இன்புறுவேன். உள்ளத்தில் இறையை தேடி அடையவல்லார்க்கு அருளும் மகாதேவர் பிரானோடும் பொருந்தும் வல்லமை உடையார் திருவடியை நானும் பொருந்தி நிற்பேன்.

544. படரக் கொம்பு இல்லாமல் துவண்டு விளங்கும் தளிரைப் போல் வாட்டம் அடையினும் மன உறுதி உடையவர் உள்ளத்தில் அன்பு வைத்து அந்த வழி செல்வதில்லை. நெஞ்சமே! தனித்து துயரப்பட்டிருந்து என்ன செய்யப் போகின்றாய்! பெரியாரை நாடி நான் செல்லும்போது உடன் வருவாயாக!

545. உண்மையை விரும்பும் சான்றோர் தேவதேவனை விரும்பி அவனுடன் பொருந்துவர். அவர் எல்லாவற்றையும் கடந்து சிவ தத்துவத்தில் நிற்பர். நல்ல நெறியில் ஒழுகி அடைந்தவர்க்கும் உபதேசம் செய்கின்ற பெரியோருடன் கூடியிருப்பது பேரின்பமாகும்.

546. பெரியோருடன் கூடியவர் சிவனின் உறவினராய் உலகநடையில் ஒழுகுபவர்களால் புகழப்படாதவனான எம்பெருமான் திருவடியை அடைவர்.. அமைதியாய் ஆன்மாவின் சிவனைத் துதிப்பவர்க்கு அருள் செய்கின்ற பெருமானை அடைந்து அந்நெறியில் இரண்டறக் கலந்து நிற்பதும் பெரியார் கூட்டத்தில்தான்.

547. எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்க்கு அடியாராய் உள்ளவர்களுடன் கூடி சோதியில் கலந்து சிவபுரத்தில் பொருந்தி நிற்பவர் என்னைக் கண்டு பெருமானிடம் விண்னப்பம் செய்ய, சிவன் என்னை அழைத்து வருமாறு பணிக்க கடைவாயிலில் உள்ளவர் அடைக்கல முத்திரை காட்டி அழைத்தனர்.

548. சன்றோரைக் கூட வல்லபவன் அருமையானவன். பெருமையுடைய ஞானம் வாய்க்கப் பெற்றவனோ பிறவிச் சூழலிருந்து நீங்க பெறுவான். உரிமையுடன் பழகும் தன்மையிலே வல்லான் சிவனை உள்ளத்தில் உணர்ந்து அழிவில்லாமல் வாழ்வான்.. அருமை பெருமையுடைய பெரியோரின் துணையைப் பெறுவது பெறும் பேறு ஆகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:01

மயேசுர நிந்தை! பொறையுடைமை!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

மயேசுர நிந்தை!

537 சிவனடியார்கள் உலக இயல்பிற்கு மாறுபட்டவர்கள் பசி வந்தபோது இரந்து உண்டு வழ்வர். அந்த அடியார்களை வெறுக்கத்தக்க பேசியவர்கள் மிகவும் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவர் ஆவார்.

538. ஞானியரை நிந்திப்பவனும் நல்லவர் எனப் போற்றுபவனும் முறையே தீவினையையும்   நல்வினையையும்  நீங்கிடுவர்.. அச்சிவ ஞானியரை அடைந்தார்க்கு சிவபோகம் கைகூடும்.

\#####

பொறையுடைமை!

539. மெய்யான நெறியைப் பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளுடன் கூட வேண்டும் என்ற அவா ஆன எண்ணமாகிய பல்லி இருக்கின்றது. அது மூக்கு, நாக்கு ஆகியவற்றின் செயலை நீக்கும். அப்பொது சிதைகின்ற சிந்தையில் மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பொழியும். அது பொறுமையாகும்.

540. பால் நிறத்தை ஒத்த சிவனின் திருவடியை வணங்கி அவனிருகும் மண்டபத்தை சூழ்ந்த அழிவற்ற தேவர்களிடம் பொறுமயையுடைய இந்த ஞானி திருமாலுக்கும், பிரமனுக்கும் தலைவன். உலக உயிர்களில் சிறப்புடையவன் என்று சிவபெருமான் கூறி அருளினான்.

541. மெய் ஞானம் கைகூடப் பெற்றவரை தம்முடைய படைசூழ சென்று அவர்க்கு ஏவல் செய்வார் மன்னன். அவரின் உடலை மாற்றி அமைக்கும் தேவ தேவனை மற்ற வழிகளை நீக்கி ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்.

542. உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அவர் உடலிலும் உள்ளத்திலும் பலவகையான இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து பக்குவம் செய்பவன் சிவன். மூலாதாத்திலிருந்து எல்லா ஆதார நிராதாரங்களில் கூத்து ஆடும் பிரானுக்கு அதன் பயனாக எல்லையில்லாத ஒருமைப்பாடு ஏற்படும்.

#####

செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:59

குரு நிந்தை!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

குரு நிந்தை!

530. கயவர்கள் ஞானம் பெற்றவரை பேண மாட்டார்கள், உடனிருப்பவரை வருந்தும்படி செய்வர். கற்று அறிந்தவரிடம் பொருந்தியவரே ஞானம் அடைந்தவர். இவரன்றி வேறு யாரும் இப்பேற்றைப் பெறுதல் முடியாது.

531. ஓர் எழுத்து மொழியான ஓம் என்ற பிறணவத்தின் பொருளை மாணவன் உணருமாறு செய்த பெருமை கொண்ட நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் வருந்தும்படிச் செய்தவர் ஊர் சுற்றித் திரியும் நாய் பிறவியாய் பிறப்பர். பின் ஒரு யுகம் பூமியில் புழுவாய் கிடப்பர்.

532. இல்லறத்து ஞானிகளும் துறவறத்து ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி கேட்டைச் செய்தவரின் பொருளும் உயிரும் ஓர் ஆண்டில் மறையும். சத்தியம். இது சதாசிவத்தின் மீது ஆணை.

533. ஓர் எழுத்து மொழியான பிரணவத்தை உபதேசித்த பெருமானை குருவை உள்ளம் வருந்தும்படி தீமைகள் செய்தவர் இழிவான நாயாய் பிறந்து நூறு பிறவிகள் எடுப்பர். பின்பு தாழ்ந்த பிறவியினராய் பூவுலகில் மடிவர்.

534. அடியவர்கள் மனம் கலங்கினால் தேசமும் நாடும் மற்ற சிறப்புகளும் அழிந்துவிடும். இந்திரன், பெரு மன்னர்களின் ஆட்சி பீடம் ஆகியவை நாசமாகி விடும். இது சிவபெருமான் மீது ஆணை.

535. நல்ல நெறிகளைப் புகட்டிய குருவின் முன் பெருமை பேசினால் இதற்கு முன் செய்திருந்த தவம் கெடும். ஆசிரியர்களிடம் பெற்ற ஞான உபதெசம் நிலைக்காது. பழைமையாய் உபதேசிக்கப்பட்ட நெறி முறைகள் மறந்து ஆன்ம வளர்சிக்கான வழிகளும் போய் வறுமையில் வாடுவர்.

536. கையில் கிடைத்த மாணிக்கத்தை விட்டு காலில் அகப்பட்டக் கல்லை எடுத்துச் சுமப்பவனின் செய்கையைப் போல் கையில் உள்ள நெய், பால், தயிர், ஆகிய உணவு இருக்க நன்மை அளிக்காத கையளவு பிட்டு உண்பான் போலாகும்
ஞானியரோடு ஞானத்த்டை விட்டு கிரியை செய்பவன் நிலையாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27078685
All
27078685
Your IP: 3.145.63.136
2024-04-25 18:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg