gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

சந்தோஷம் போதும், இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த உயிரும் இயங்குவதாக இல்லை.!
வியாழக்கிழமை, 30 April 2020 10:32

அருச்சணை!

Written by

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

அருச்சணை!

1003. இயந்திரத்தில் மந்திர வடிவில் எழுந்தருளச் செய்து தாமரை, நீலம், செங்கழுநீர், கருநெய்தல், மணம்கமிழும் பாக்குப்பூ, மகிழம்பூ, மாதவி, மந்தாரம், புன்னை, மல்லிகைப்பூ, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய மலர்களைச் சாத்துக.

1004. புனுகு, காந்தாரி சாந்துடன் சந்தனம், மணம் கமிழ் குங்குமம், பச்சைக் கற்பூரம், வயிரம்பொருந்திய அகில் இவகளுடன் அளவாய் பனிநீர் சேர்த்து குழைத்து பூசவேண்டிய இடங்களில் பூசி வழிபடுவாய்.

1005. அமுதத்தைப் படைத்து பொன்னொளி தரும் விளக்கு ஏற்றி திக்குப்பந்தனம் செய்து தூப தீபம் காட்டி வணங்குவர் இன்மைப் பேறும் மறுமை பேறும் எய்துவர்,

1006. இப்படி வழிபட்டால் தாமே பேறுகள் வந்து அடையும். இந்த வழிபாட்டால் இந்திர்ச் செல்வத்தைப் பெறலாம். எண் சித்திகளும் உண்டாகும். மறுமையில் வீடு பேறும் வந்தடையும்.

1007. இந்த வழிபாடு தானே வந்து அணையும் அயலார் மனைவியை விரும்பாதவராய் ஐம்பொறிகளை அடக்கி வென்றவர் ஆக்கும். இவர் படைத்த நிவேதனம் இடைவிடா யோகம் பொருந்திய பஞ்சாங்க வணக்க்ம் செபம் என்பவை பொருந்தும். மனம் பிராணனோடு நிலைபெறும்.

1008. இறைவன் அடிமை ஆனவர் எவ்வகை செயலாலும் வழிபடமாட்டார். எட்டுக் கன்மச் செய்கையில் இல்லாத அவர் கிரியை வழி உபாசனையை விரும்புவார். சிவயோகியர் இறையை வழிபட்டு அவரிடம் அடைக்கலமாவதால் கிரியையான வழிபாட்டை விரும்பாமல் சிவனிடம் அன்பு கொண்டு அருள்வழி நிற்பர்.

1009. சிவயோகம் என்பது அறிவு ஒன்றால் அடையக் கூடியது என்பதைக் கிரியை வழி நிற்பவர் உணர்வது இல்லை. அவர்கள் கருத்து எல்லாம் வெளியேயுள்ள மூர்த்தி, பூசைத் திரவியம், மந்திரம், செபம் ஆகியவற்றில்தான் அலையும். நியதிகுட்பட்ட உடலில் ஒரு நெறி ம்னதில் கண்டால் ஒளி பொருந்திய மணிக்குள்ளே இருக்கும் ஒளிபோல் இறைவனைக் காணலாம்.

1010. இருளும் ஒளியும் போல் இராண்டு இயல்பினை உடையது மனம். வெளியாகிய ஒளியைச் சார்ந்து அருளையும் மயக்கமாகிய இருளைச் சார்ந்து அறியாமையையும் பொருந்தும் மயக்கத்திலிருந்து மீளாமல் அறிவு மயங்கிவிடும். அம்மயக்கத்தை விட்டவர் சிவனடியவர் ஆவார்.

1011. தானே சிவன், அவனே சிவன் என இரண்டு தன்மையாகத் தன்னைக் கண்பவன் சிவத்திடம் பக்தி கொண்டு தன் அறிவை சிவ அறிவில் ஒன்று படுத்தினால் நாலம் அறிவான சாயுச்சிய்ம் அடையலாம். இந்த சித்தியைப் பெற்ற சிவஞானியர் தம்மைச் சிவம் நடத்தும் என்று தாம் ஒன்றையும் எண்ணாதவராக இருப்பர்.

1012. கொப்பூழுக்கு கீழ் உள்ள சுவாதிட்டானத்தில் இருக்கும் அனையா தீ அக்னிக் கலை. இந்த தீயை சிவாக்கினியாக்கி சிவத்தியானம் செய்தால் சீவர்களை விட்டு அகலாத குண்டலினி சக்தி கண்டத்தில் விளங்கும். அழகிய ஒளியுடன் கூடிய ந காரம் சுவாதிட்டானத்தினின்/று நெற்றியை இடமாககொண்டு இருக்கும். இங்கிருந்து விந்து நாதம் தோன்றி மேலே செல்லும்.

1013. ஆன்மாக்கள் நம என்ற எழுத்துக்களால் குறிபிடும் மறைப்புச் சக்தியான திரோதனத்தையும் மலத்தையும் இருப்பிடமாகக் கொண்டு இயங்கும். அவை பசுத் தன்மை உடையவை. அப்பசுத் தன்மையை மாற்ற சிவத்தைச் சார்ந்து சிவத்தை சிந்திக்க ந, ம உடன் கூடிய பசு சிவத்தின் இருப்பிடமாகும். ந, ம தன்மை கெட நமசிவய, சிவயநம என்று செபித்தால் உண்மைப் பொருள் அகப்படாது. உண்மைப் பொருளான சிவத்துடன் பிரணவத்தின் சாமாதி அடைதலே உண்மை வீடு அகும்.

1014. உடல் தான் அன்று என உணர்ந்த நாளில் சீவனின் அண்டத்தில் சிவஒளி ஒளிரும். அக்காலத்தில் அது சந்திரக்கலையாய் இருக்கும். ஒளிவரும்போது பிரிவுற்று இருந்த சீவனின் நிலை சிவத்துடன் ஒன்றி சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்து விளங்கும்.

#####

வியாழக்கிழமை, 30 April 2020 10:29

திருவம்பலச்சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#####


திருவம்பலச்சக்கரம்!

914. பன்னிரண்டு கோடுகள் குறுக்காவும் நெடுக்காவும் வரைக். அப்போது கட்டங்கள் 121 ஆகும் அங்ஙனம் அமைந்த சக்கரத்தின் நடுவில் இருக்கும் அறையில் சிவன் வீற்றிருக்கின்றான்.

915. சிவனாகிய பெருமான் வீற்றிருக்கும் இடம் சி என்ற எழுத்தாகும். அவர் பொருந்துவதற்கு மற்ற வ, ய, ந, ம நான்கும் திருப்பெயரை உ?ணர்த்தும் எழுத்துக்கள். சிவம் பொருந்தி இருக்கும் அமைப்பில் நாற்கோணத்திலும் சூழ் இருப்பவை. மற்ற எழுத்துக்கள் அவைகளுடன் பொருந்தி இருக்கும். நடுவில் சி இருக்க அதைச் சுற்றி உள்ள கட்டங்களில் மற்ற எழுத்துகள் ஆன வயநம விளங்கும்.

916. அரகர என்ற திருவெழுத்தை உச்சரிப்பவர்க்கு அரிய செயல் ஒன்றில்லை. எல்லாம் எளிமையாய் முடியும். இச்சிறப்புடைய அப்பெயரை ஓதிப் பய்னை அடைய பலர் அறியவில்லை. அரகர என்று தியானம் செய்தால் ஒளி உடலைப் பெறலாம். அரகர என்பதால் வினையின்மையால் பிறவி உண்டாகாது.

917. சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் சக்கரத்தில் நான்கு திசைகளிலும் நான்கு கோணங்களிலும் இருக்கின்றது. எட்டு இடங்களில் திருவைந்தெழுத்து பொருந்தும். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி என்பன சிவனின் வடிவங்கள். இதை வழிபட்டால் சிரசின் விந்து நாதம் பொருந்தி மந்திரமாகி வாக்கு ரூபினியால் கூடும்.

918. தேன் சிந்தும் தாமரையான முலாதரத்தில் இருக்கும் குண்டலியுடன் இருக்கும் சிவன் தன்மையை அறியாதவர் சிலர். சூரியன், சந்திரன் கலைகளைன் செயல்களை மாற்றிட அறிந்தவர் உடலின் உயிரை நிறுத்தும் இயல்பு உடையவர் ஆவார்.

919. திருவைந்தெழுத்து கோவிலாக விளங்கும். கோவிலாக இருக்கும் பருநிலை மாறிக் கோயிலாக எண்ணும் ஒளியை முதலாக விளங்கும் நுண்ணுடலில் சிவன் கோவில் கொண்டுள்ளான்.

920. ஆறு கோடுகளை உடையதாக இருக்கும் சக்கரத்தில் கட்டங்கள் ஐந்தாகும். அவற்றில் ஐந்து கட்டங்கள் இருபத்தைந்தாக நடுக்கட்டத்தில் அ பொருந்தும்,

921. கொப்பூழ் தாமரையில் சுருண்டு வளைந்து இருக்கும் குண்டலினி சக்தியை கீழ் செல்லாது அச்சக்தியை ஓங்காரம் இருக்கும் புருவ நடுவிற்குச் செலுத்தி அகரம் என்ற சிவம் அறிவு மயமாய் இருக்கும் இடம் சிரசாகவும் அதன் அனல் தன்மையை வெளிப்படுத்தும் இரண்டு கண்களில் விளங்கி சுவாதிட்டானத்தில் உள்ள அபானனான நகரமும் கண்டத்தில் வகாரமும் நாதத்தை உண்டாக்கும் சுழுமுனையை அடையுங்கள்.

922. பிரணவ மந்திரத்தை ஆக்ஞையின் இரண்டு பக்கமும் உள்ள சிவாக்கினியான ஒளியை நோக்கினால் அது அசைவினை ஏற்படுத்தி வாயில் பொருந்தி நிற்கும். அண்ணாக்கில் உள்ளே உண்டாவது நமசிவய ஆகும் அதுவே வெளியிலும் தலையைச் சு?ற்றியுள்ள பகுதியிலும் சிவயநம என விளங்கும்.

923. சிவாயநம என்பதை நான்கு முறை மாற்றி அமைக்கலாம். சிவயநம, மசிவாயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என்னும் மந்திரம் சிகாரம் தொடங்கி சிகாரம் இறுதியாக சக்கரம் அமையும்.

924. க்ஷ் என்ற எழுத்தைத் தவிர ஐம்பது எழுத்துக்களையும் அறை ஒன்றிற்கு இரண்டு எழுத்துக்கள் என் அடைத்து பிரணவ வட்ட மகாரத்தில் க்ஷ் என்பதை வைத்தால் ஐம்பத்தொரு எழுத்துக்களும் முறையாக அடைக்கப்படும்.

925. அச்சக்கரத்தின் வெளிப்பகுதி அரகர என்வும் அடுத்த உளவட்டத்தை அரிகரி எனவும் அடுத்த வட்டத்தில் அம்சம் என்ற அசபையும் முடிவில் சூலமும் இட வேண்டும்

926. சூலத்தின் முடிவில் சக்தி எழுத்து ஹ்ரீம் என்பதை எழுதி சூலத்தைச் சுற்றி ஒ என்பதை எழுதி சூலங்களுக்கு இடையில் ஐந்தெழுத்தை எழுதுவதே சிவனுக்கு பொருந்திய இடமாகும்.

927.திருவைந்தெழுத்து அ, இ, உ, எ, ஒ ஆகும் இவற்ரை சக்கரவட்டம் இடைவெளிமீது எழுதவேண்டும். அதைச் சுற்றி நம் பெயரான சிவசிவ என்ற எழுத்தை வட்டமாய் சூழ்ந்திருக்க் அமைக்க வேண்டும். சூலங்களில் இடைவெளியில் அ, இ, உ, எ, ஒ எழுதி அவற்றை சூழ ஒரு வட்டம் இட்டு சிவசிவ அமைக்கவும்.

928. உயிர் குற்றெழுத்துக்கள் வருத்தம் அடைந்த பின் புகழ் மிக்க மகா மதுவாகிய சிவசிவ என்பதை அடைக்கவேண்டும். இடைவெளி இல்லாமல் மேல்வட்டத்தில் அமைத்திட சக்கரம் முறையான அமைப்புடன் அமையும் சம்பத்தை தரும் சக்கரம் இதுவே ஆகும்.

929. அமைக்கப்படும் திருவ்மபலச் சக்கரத்தில் நிலம் முதல் வான் வரை செல்லப்படும் பூதங்கள் ஐந்தினுக்கும் உரிய ல, வ, ரம், ய, அ ஏற்ற இடத்தில் அமைக்க வேண்டும்.

930. ஸ காரத்தை ஊ காரத்துடன் சேர்த்து விந்துவும் நாதமும் பொருந்த அமைத்து மேலே செல்லும்படி செய்து சிவயநம என உச்சரித்தால் உடலில் உள்ள ஆனவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் அகன்றுவிடும்.

931. ஸௌ என்பதில் சிவனும் இருப்பான். உமையும் சிறப்புடன் விளங்குவாள். சிவசக்தி ஈசானத்தில் விளங்குவதை புண்ணியர் நாதமாக விளங்குவதை அறிவார்கள்.

932. ஈசான திசையை அடைந்து ஹர என்ற சிவாக்கினியைத் தூண்ட ஹரி என்ற ஞானலிங்கம் தோன்றும். ம என்ற சக்கரத்தினின்று சுழுமுனைவழி தொண்டைக்குமேல் பிராணவாயு போவதை உணரலாம். அப்போது தொம் தொம் என்று கூத்து இடும் ஒளி வடிவினையுடைய கூத்தன் தோன்றுவான்.

933. சிவலிங்கம் அமைவதில் ஹம்சம் என்ற எழுத்து குறிக்கும் சிவசக்தி விளைவாக உலகப் பொருள்கள் யாவும் நுண்மையாய் அமைந்திருக்கும். இப்படி காரண வடிவாய் கலந்து நிற்பதை அறிபவர் இல்லை. அவ்வாறு அறிபவரிடம் சக்தியை அடக்கி நிற்கும் சதாசிவன் திகழ்வான்.

934. நந்தியெம்பெருமான் ஐந்தெழுத்தின் வடிவாய் இருக்கின்றான். ஐந்து சொற்களின் முதல் எழுத்தால் ஆனது திருவைந்தெழுத்து. இந்த ஐந்து எழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படுகின்றன. அவைகளினுள் நுட்பமாய் சிவன் வீற்றிருக்கின்றான்.

935. கூத்தனின் பெருமை சொல்லி அடையாளங்களைப் பற்றிச் சொன்னால் கூத்தனின் பெயரின் முதல் எழுத்தை ஓதியவர் அந்தச் சிவத்துடன் பிரிவில்லாது நிற்பர் என்பதுவே கூத்தனைக் காணும் நெறியாகும்.

936. அகரக் கலையின் திசையான மூலாதாரத்தில் இருக்கும் மூலக்கனலை எழுப்பி அத்திசையில் இருக்கும் ந காரத்த்தை அறிந்து செபித்தால் அந்த திசையில் ம/றைந்து கிடக்கும் சிவனை நினைத்து உறவாக்கிக் கொண்டேன்.

937. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பினால் அது அருளை வழங்கிச் சகசிரதளத்தில் பொருந்தச் செய்யும். அங்கே அருளால் உதித்த நாதத்தையும் அறிய்த் தானே உருவாகும் ஒளி சிரசில் பொருந்தும்.

938. சிவன் ஒளிமண்டலத்தின் வடக்குத் திசை அதாவது சிரசின் இடப்பக்க மூளையில் எழுந்தருளியபோது இந்திரத்திசையான கிழக்கிலும் ஒளி விளங்கும். தலையின் மேல் விளங்கிய ஒளியில் அக்னி நிறமுடைய சிவன் மணியின் ஒளிபோல் தோற்றம் கொளவார்.

939. உயிர்களால் வேண்டப்படாமல் சிவம் தனிமையானபோது குளிர்ந்த சந்திரகலையில் இருக்கும். யாராலும் அறிவிக்கப்படாமல் தானே அறிவுடன் இருக்கும். சொல்லப்போனால் எல்லா நற்குணங்களும் பொருந்தி இருக்கும். அவனைச் சிந்திப்பவர்க்கு தன் மறைபினின்?று வெளிப்பட்டு அருள் புரிவான்.

940. சிவத்தின் தன்மையைக் காணவேண்டும் என அளிக்கப்பட்ட பிறவியில் மற்றவர்கெல்லாம் மதிப்பு ஏற்படும் வகையில் சிவதன்மையைப் பெறுவர். நாத வடிவினனான சிவனின் ஐந்தெழுத்தில் அடங்கியிருக்கும் நாத வடிவினனான சிவன் திருவைந்தெழுத்து வடிவம் பெறும்.

941. மந்திரத்தில் சொல்லிய வண்ணம் பாதம் ந காரமாய் இருக்கும். கொப்பூழ் சக்கரத்துள் ம அமையும். வ என்ற சக்தியை வாயாய்க் கண்டபின் அமையும் அச்சுடர் சிவத்தின் தனமையுடையது.

942. இரண்டாகவும் ஒன்றாகவும் உள்ள பஞ்சாக்கரத்தின் இயலபை அறிந்தவர்களிடம் சொல்லப்பட்ட இயல்புகளுடன் பரம்பொருள் சிவம் இருக்கும். ஓ என்ற பிராணவமாய் உணர்ந்து ஒளி பொருந்தத் தியானித்தால் சக்கரங்களால் ஆன நாதமய்மாய் எங்கும் விரிந்து இருக்கும்.

943. பிரணவ நாதம் பரவி விரிந்து எல்லா உயிர்களுக்கும் விரும்பியவற்றை அளிக்கும் அம்மந்திரம் நல்ல வாய்ப்பு ஏற்படும்போது சுற்றியிருக்கும் பகையான இருளை நீக்கும். அது ஓம் என்பதாகும்.

944. ஓம் என்று பிரணவ யோகத்தை எழுப்பி அந்த ஒளி மண்டலமே தான் என்றறிந்து சுழுமுனையிலே இருக்கும் ஒளியே நந்தியெம்பெருமான் என அறிபவர்கள் திருச்சிற்றம்பலத்தைப் பார்த்து மகிழ்ந்திருப்பவர்கள் ஆவார்.

945 திருவம்பலச் சக்கரத்தினுள் ஐந்து எழுத்தும் அழகாக ஐந்து அறைகளில் பொருந்தும். உயிர்மெய்யான ஐம்பத்தோர் எழுத்துக்களும் அவற்றுள் பொருந்தி இருக்க மேன்மையுடைய சிவன் அங்கு பொருந்துவான்.

946. எல்லா மந்திரங்களிலும் முதலாவதான ஐந்தெழுத்தில் நடுவில் இருப்பது ய ஆகும். ஐந்தெழுத்தை யநவசிம, மவயநசி, சியநமவ, வசிமயந என நான்கு வகையாக செபிக்க வேண்டும். எழுத்துக்களை நிலைமாற்றி செபித்தால் பொருள் உண்மை நன்கு புலனாகுவதற்காகும்.

947. திருவைந்தெழுத்துக்களாய் நின்றவையே பஞ்ச பூதங்களை இயங்கச் செய்யும். அந்த எழுத்துக்கள் திரு ஐந்தெழுத்தின் வடிவினைப் புலப்படுத்தும். சக்கரத்தில் எழுத்துக்கள் மு”றையாக நின்றால் ஐந்தெழுத்தின் வடிவமான சிவமும் அங்கு சிறந்து விளங்கும்.

948. பெருவெளியில் இருக்கும் நாதமயமான சக்கரம் உலகம் முழுவதும் பரவும் தன்மையுடையது. சித் விளங்கும் திருவம்பலத்தை இடமாகக் கொண்டு மறைவாக உள்ள தலைவன் சிவன். ஒரு கன்றானது பசுவின் மடியில் ஊட்டியபோது அப்பசு பாலை அளிப்பதுபோல் குருமண்டலத்திலிருக்கும் சிவனும் சிரசின்மீது நின்று அமுதத்தை அளிப்பான்.

949. திருவம்பலச் சக்கரத்தின் ப்யன்கள் நிறைய உண்டு. நான்முகன், திருமால் உருத்திரன் மகேசுவரன், சதாசிவன் என்ற ஐவரும் உள்ளனர். கூத்தனை உணர்த்தும் திருவைந்தெழுத்தான நமசிவய என்பதும் அங்கு உள்ளது, இறைவனின் திருக்கூத்து இங்கிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது.

950. சிதகாயப் பெருவெளியில் சந்திரக்கலை உள்ளது. பெருவெளியில் உள்ள சகசிரதளத்தில் உ காரத்தால் சூழப்பட்ட அக்கினிக்கலை உள்ளது. மூடியிருக்கும் சகசிரதளத்தை நெகிழச் செய்து அசைக்கும்படி உள்ள கொம்புவினால் விந்துநாதம் உண்டாகும். அதை தெளிந்து பெறும் முறையில் சக்கரம் அமைந்துள்ளது.

951. கண்களுக்கு இடையே புருவ நடிவில் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை மூலவாயுவினால் மாற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து சிவக்கினியிலிருப்பவனை தியானம் செய்தால் பிரணவத் தலைவன் சதாசிவம் விருப்பமுடன் அங்கு எழுந்தருள்வார்.

952. உடலைக் கடந்து சென்றால் அ காரமான சந்திரக்கலை இருக்கும் சிதகாயப் பெருவெளியில் உரிய பொருளை அறிய உயிர்களிடையே உள்ள குற்றமான இருளை மாற்ற ஒளியான சிவம் தோன்றும். அது உயிர் குற்றத்தைப் போக்கும் பொன் போன்று ஒளிரும் குளிகையாகும்.

953. அ காரக்கலையான சந்திரன் இடக்கண்ணில் தோன்ற உ காரக்கலையான சூரியன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் மாறி ஈசான திக்கில் அ உ ம என பொருந்தினால் உ காரத்தால் உணர்த்தப்படும் ஒளி மறைவிலிருந்து வெளியாகும். ம ஆகிய அக்னி உடலில் வழிபட்ட குரு மண்டலத்தில் உள்ள இறைவனின் இயல்பான பெருமையை சொல்ல முடியாது.

954. உலக உயிர்களின் அறிவு நீரில் எழுதிய எழுத்தைப்போல் நிலைத்து நில்லா இயல்பை உடையது. சிதகாயத்தில் இருக்கும் ஓர் எழுத்தை கண்டு அறிபவர் இல்லை. அப்படி அறிந்தவர்க்கு நான்முகனால் சிரசில் எழுதப்படும் எழுத்தால் பிறவி மீண்டும் ஏற்படாது.

955. சுழுமுனையில் இருக்கும் சிவன் இடைகலை பிங்கலையாய் ஐம்பது எழுத்துக்களாய் விரிந்து இருக்கின்றான். உயிரானது மயக்கத்தை அடைந்து சந்திரனைப் பற்றியபோது ஐம்பது எழுத்துக்களும் விளங்கி இருக்கும். சிரசின் மீது இருக்கும் சிவன் வேதத்தால் புகழ்ந்து சொல்லப்பட்ட பிரணவத்தை எழுப்பி சசிகரதளத்தின் நடுவில் நிறுத்தியவர்க்கு வீடுபேற்றை அளிப்பான்.

956. மணிபூரகத்தின்கீழ் உள்ள சுவாதிட்டான சக்கரத்தில் நல்ல எழுத்தாகிய ந காரம் உள்ளது. அந்த எழுத்தின் பயனை பாவிகள் அறியவில்லை. நான்முகனாலும் அதை அறிய இயலாது. அந்த எழுத்தில் சக்தியும் சிவனும் மகிழ்வுடன் இருப்பர்.

957. அம்சம் என்பது மூலாதாரத்தில் விளங்கும் மந்திரம் அந்த அம்சம் மந்திரத்தை அறிபவர் இல்லை. அம்ச மந்திரத்தை அறிந்தவர் உடம்பினது தோற்றத்திற்கு முன்பே தோன்றிய்து என்பதை அறிவார்

958. சந்திரக்கலை உடம்பில் மூலாதாரத்திலிருந்து தோன்றுவதாகும். அது உடம்பின் தீ யால் தோன்றுவது. அந்தியும் சந்தியும் சந்தியா வந்தனம் செய்பவர் சூரியன் சந்திரன் சேரும் நேரத்தை அறிந்தவர் இல்லை. சந்தியா தேவியை வணங்குவதாக் கூறி வீண் ஆரவாரம் செய்பவர் அவர்கள்.

959. அம்ச மந்திரம் உபாசனையால் உடலினுள் எங்கும் பரவும் ஆற்றல் பெற்றது. மூலாதாரத்தில் தொடங்கி மற்ற ஆதாரங்களை ஊடுருவிச் செல்லும் உயிர் தன்மையுடையது. ஒளிமயமாய் இருப்பதால் போவதும் வருவதும் கிடையாது. ஒளியை நினைத்து நெகிழும் மனிதர்களின் உயிரில் பொருந்தி ஐம்பொறிகளை நடத்தும் அங்குசமாக திகழும்.

960. கண்ணுக்குத் தெரியாத பர வெளியில் தோன்றும் நாதம் அந்த ஒலியில் தொன்றிய ஒளியான விந்து ஆன்மாவான ய வை இருகண் பார்வைக்கும் நடுவாய்க் கொண்டு தியானிக்க பிரணவம் சிறப்புடன் விளங்கும்.

961. தலையின் வடக்குத் திசையான இடப்பக்கத்தில் ஒளியும் ஒலியும் பொருந்துமானால் பரமாகாயத்தில் ஒளி பெருகும். இயற்கையாக ஒலித்துக் கொண்டிருக்கும் பிரணவம் வேள்விப்பொருள் ஆகும்.

962. ஆறு எழுத்து மந்திரத்தை ஓதும் அறிவுடையவர்கள் இதனால் அமையும் நிலையை அறியமாட்டார்கள். ஐந்தெழுத்தை செபித்தால் ஓர் எழுத்தான பிரணவத்தை தோன்றச் செய்யவில்லை. பிரணவத்துடன் வேறு எழுத்தைச் சேர்க்காமலே பிரணவ வித்தையை அறிவார்க்கு பிரணவத்தாலாயே உயிரின் விளக்கத்தைக் காணலாம்.

963. எழுத்துக்கள் எல்லாம் வாய் திறத்தலால் பிறக்கின்றன. அப்போது அகரத்துடன் உயிர் எழுத்துக்கள் பதினைந்தும் மெய்யெழுத்துக்கள் முப்பத்தைந்தும் கூடி எழுத்துக்க?ள் ஐம்பத்தொன்/றாகும். சோதியை உருவாக்கும் அகரக்கலையில் ம?ற்ற எழுத்துக்கள் நுட்பமாக இடம் பெற்றுள்ளன. நாத எழுத்தான் உ வை அதனுடன் சேர்ந்து அறிவீர்.

964. அகரமான விந்து விரிந்தும் சுழன்றும் வான்மண்டலத்தில் தொடர்பை உண்டாக்க அப்பந்தத்தை தரும் குண்டலினி அகரம் முதல் உன்மனி வரை பதினாறு கலைகளாக விளங்குகின்றாள். அவளே கழுத்து கை கால் உடம்பாய் ஐம்பத்தோர் எழுத்துக்காளாகவும் ஆவாள்.

965. பிரணவம் நீங்கிய ஐம்பது எழுத்துக்கள் வேதங்களும் ஆகமங்களும் ஆகின. அந்த ஐம்பது எழுத்துக்களால் தெரிவிக்கப்படுவது பிரணவமேதான் என தெரிந்தபின் அந்த எழுத்துக்களைக் கடந்து பிரணவத்தை அறிந்து சிவ சொருபமாய் நிற்பர்.

966. நமசிவய என்ற ஐந்தெழுத்துக்கள் மண், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என ஐந்து பூதங்களையும் தோற்றுவித்தது. அருவமான உயிர்கள் இந்த ஐந்து பூதங்களுடன் பொருந்திவாழ் ஏற்ற் யோனிகளைப் படைத்து அருளினான். பரந்த இந்த உலகை ஐந்து பூதமயமாய் இருந்து தாங்குகின்றான். இந்த ஐந்து எழுத்தாலே உயிர்களின் இடையிலும் திகழ்கின்றான்.

967. படைக்கப்படாத இறைவனின் பெயரை மனச் சோர்வு இன்றி செபித்தால் இன்ப மயக்கத்திலிருந்து தெளிந்து எழுவர். சடைமுடியுடைய சிவனின் அருள் ஆன்மாக்களைச் சார்ந்துள்ள வினைகளையும் அவ/ற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்க ஏன்னுடன் வாருங்கள் என் பெருமான் அழைப்பான்.

968. சிவன் அனுபவிக்கும் ஒளிப் பொருளாகவும், காலதத்துவம் கடந்த நித்தியப் பொருளாகவும், இசையுடன் கூடிய வேதப் பொருளாகவும், பாடலாகவும் இருப்பான். வான் தேவர்கள் வழிபட அதை ஆராயந்தால் ஐந்தெழுத்து வடிவான நமசிவய அது என்பதும் தெரியும்.

969. பரந்த உலகத்தில் காட்சி தருவது நமசிவய என்ற ஐந்தெழுத்து பெருமையே. கோவில்கள் இருப்பதும் ஐந்தெழுத்து பெருமையாலே ஆகும். அறநெறியில் நீதி நிலைபெறவதும் ஐந்தெழுத்தின் பெருமை. பெருமான் ஐம்பூதங்களிலும் இருந்து அவற்றிற்கு காவலாய் உள்ளான்,

970. அகரமாகவும் வானமாகவும் அதற்குமேல் உள்ள நாதமாகவும் இருக்கும் சிவன் ம காரமாகவும், ந காரமாகவும், பெருமைமிக்க சி காரமாய் தீயாய் உயிரான ய காரமாக உள்ள பிரணவ உடம்பான சிவன் ஒளிமிக்க சுடராகும்.

971. ஐந்தெழுத்தின் நான்காம் எழுத்து வ காரம், இதுவே உலகை உருவாகக் கொண்டு இயங்குவதாகும். அதனுள் உலகம் அடங்கி அதன் ஆணையின் வழி நடக்கும். நான்காம் எழுத்தை முதலாகக் கொண்டு நமசிவய எனச் செபிப்பவர்கள் நல்ல நெறியில் நடக்கும் செல்வர் ஆவர்.

972. சகதி ஆன்மாவான என் உள்ளத்தை விரும்பிப் பற்றினள். அந்த உள்ளத்தில் விரும்பி அமர்ந்தாள். நாம் சிவனுக்கு அடிமை அன்பதை ஆய்ந்து தெளியுங்கள். பிரணவம் என்ற மந்திரத்தைப் பற்றுங்கள். உலகப் பற்றை நீக்கி மற்றப் பற்றுகளையும் விட்டொழித்தேன். தெளிந்த ஞானம் பெற்றேன்.

973. உயிர்வாழத் தானியத்தில் பொருத்தி அன்னமயமாகச் செய்ததை ஓம் குண்டமான வயிற்றுத் தீயில் ஆகுதி செய்யும் சக்தி நாமம் நமசிவ என இருப்பவ்ர்க்கு செயலைத் தூண்டும் குண்டலினி சக்தியாக விளங்குவாள்.

974. நல்வினையால் கிடைத்த பரிசே சிவயநம் என்ற ஐந்தெழுத்து. பகல் வர உயிர்களின் விருப்பிற்கு ஏற்ற்வாறு இரவுபகலாக நடுவே இடம் கொண்டு நடிப்பவன். அவன் வான், மண் நீர், தீம், காற்று சூரியன், சந்திரன் ஒளி ஆகிய எட்டுப் பொருளாகவும் இருக்கின்றான்.

975. அ பிரணவம் உயிராகவும் உ பரமாகவும் ம மலமாகவும் மூன்று பதங்களில் வரும்.. சி சிவமாய் வ வடிவுடைய சக்தியாய் ய உயிராய் சொல்லப்படும்.

976. ந காரம் நெற்றியில் இரண்டு கண்களுக்கு நடுவிலும் ம காரம் கழுத்திலும் அசபை சக்தியை உசுவாச நிசுவாசத்தில் பொருத்தி பிரணவத் தலைவனை சுழுமுனையில் இருக்கும்படி செய்தால் அக்னிக் கலைக்குரிய் உள்ளத்தை விட்டு நீங்காதிருப்பான்.

977. உடல் என்ற காட்டில் ஐந்து யானைகளாக ஐம்பொறிகள் இருக்கின்றன். அந்த யானைகளை அடக்க ஐந்தெழுத்தான் நமசிவய அங்குசம் ஆகும்.அந்த ஐந்தையும் ஐந்தெழுத்தைக் கொண்டு அடக்க வல்லார் ஐந்துக்கும் முதலான ஆன்மாவிடம் சேர முடியும்.

978. ஐந்து கலைகளில் மேதை முதலிய சந்திரக்கலை பதினாறில் கொப்பூழில் உள்ள் ம காரம் பிருதுவியாய் குறியில் காமக் கழிவு செய்வதை மாற்றி ந வைப் புருவத்தின் நடுவில் பொருந்தி அங்கு இருக்கும் ஒளியுடன் சேர்க்க தெரிந்தவர்க்கு உடலால் செய்ய வேண்டிய செயல் வேண்டியதில்லை.

979. சி என்ற சிவத்துடன் வ என்ற சக்தியுடன் உயிர்பொருந்தியிருப்பதே சிவயோக அறிவு./ அது அரிய ஞானம். மல கன்மத்திலினின்று நீங்கித் தெளிவு பெற்ற உயிர்கள் மேலே சொன்ன அளவில் திருவருளில் இருந்து சிவமே ஆவது என்பது வீடுபேறே ஆகும்.

980 அதிகமான இன்பத்தை தரும், ஐந்தெழுத்தின் குணத்தை அறிந்து மனத்தையே இடமாகக் கொண்டு இருந்தால் பரமும் அபரமும் ஆன சதாசிவ்ர் அல்லது சிவசக்தி விளங்குவர். வஞ்சகம் இல்லாத உண்மை. உடலுக்கு அழிவு இல்லை. சிவத்திடம் அடைக்கலம் ஆவதே சிவத்தை அடையும் வழி.

981. சந்திரக்கலை அறிந்து சிவய என்பதை தெளிந்து நினைக்க சந்திரக்கலையால் சிவன் வடிவைப் பெறுவர். சிவகலையையும் சிவய என்ற மந்திரப் பொருளையும் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் சிவவடிவாய் சந்திர மண்டலத்தில் இருப்பர்.

982. சிவாயநம என்பதில் ய இடையில் உள்ளதை அறிந்து பிரணவமாக சுழுமுனையில் ஒலியைக் கண்டால் அசபையின் தலைவன் சிவன் வெளியில் காட்சி தருவான்.

983. விரும்பும் செயல்கள் நிறைவு அடைய நமசிவய மந்திரத்தை நாடுங்கள். முதல்வரான உருத்திரர் வலிய வினைகளைச் செய்வார். சி காரத்தை அறிய வல்லார்க்கு சதாசிவரே முதல்வனான உருத்திரனை தொழில்படச் செய்வார்.

984. நட்பாக சிவத்திடம் பொருந்தினால் உயிரானது பரமாகும். சிவத்தை நட்பால் அடைய உடலை வருத்தி தவங்கள் செய்யாது இருக்க ஆன்மா சிவத்துடன் சார்ந்து பரமான தன்மையை அடையும். சிவத்திடம் பொருந்தி உணர்பவர்க்கு அந்தச் சிவமே தான் என்ற தெளிவு ஏற்படும்.

985. இரு கண்களான சந்திரக்கலை, சூரியக்கலைகளைச் சேர்த்து பார்த்தால் தோன்றும் சிவமான ஒளியை தீயாக குரு மண்டலத்தில் பார்த்தால் அசைந்து கொண்டிருக்கும் ஐம்புலன் அறிவும் அவற்றைத் செயல் படுத்தும் நான்முகன் முதலான ஐவரும் அம்மண்டலத்தில் இன்பம் அடைவர் என்பதால் குருவைத் தேடி அவர் அருளைப் பெருக.

986. எட்டும் இரண்டும் இன்பம் அளிகும் நெறி என்பதை அறிவிலாதார் அறியவில்லை. எட்டும் இரண்டும் ஆறையும் நான்கையும் கூட்டினால் வருவது எனச் சித்தாந்த சன்மார்க்க நெறி உறுதியாக கூறுகின்றது.

987. எட்டுக் கோடுகளின்மேல் எட்டுக் கோடு வரைந்தால் நாற்பத்தொன்பது கட்டங்கள் அதன் நடுவில் சி பொருந்தினால் சுற்றிலும் உள்ள நாற்பத்தெட்டு கட்டங்களிலும் மற்ற எழுத்துகளை நிரப்பி திருஐந்தெழுத்தை உச்சரிப்பாயாக.

988. நிருதி முதலிய அட்டதிக்பாலகர்கள் எட்டு பைரவர், நந்தி முதலிய சிவகணங்கள் எட்டு ஆகிய மூவகையினரும் நல்வழிப்படுத்துபவர்கள். அ கரம் முதல் உயிர் எழுத்துக்களும் விந்து நாத எழுத்துக்களும் எல்லாம் சேர்ந்து சிவ சக்கரம் ஆகும்.

989. ஆறு ஆதாரங்களும் ஒன்று பட்டு பராபரம் ஆவது பெரிய தவம். இதை அறிந்தவர் தம்மைச் சிவ அடிமை எனக் கண்டு தற்போதத்தைக் கைவிடுவர். அவருடன் கூடி சிவன் அருளைப் பற்றி எல்லா செயலிலும் பேசுவேன். வேறொன்றும் அறியேன்.

990. சிவன் மூவராகவும் ஐவராகவும் திருச்சிற்றம்பல அறையில் இருப்பார். அந்தச் சபை ஆறு ஆதாரங்களும் மகேசுவர சதாசிவம் பொருந்திக் க்விழ்ந்துள்ள் சகசிரதளம் ஆகும். அங்கு விந்து நாதமும் இருக்க அந்த நிலை சங்கரன் எனப் பெயர் அடையும்.

991. விந்து மயமான சந்திரக்கலையை பிருதிவியிலிருந்து கணக்கிட்டு சந்திரக்கலை பதினாறையும் நிலைப்படுத்தி மறுபகுதியான பன்னிரண்டு கலைகளில் இருக்கும் சூரியனைச் சேர்க்க பத்தாம் கலையான அக்னி அமையும்.

992. சகசிரதளத்தில் இறைவனைக் கண்டேன். அகத்தினுள் சிவத்துடன் ஒன்றி நின்றபோது உடம்பை விட்டு அழியாத சிவசக்கரத்தின் வழியே சென்று எனக்கும் சிவனுக்கும் உள்ள அடிமை உறவு அறாமல் சிவயநம் என செபித்துக் கொண்டிருந்தேன்.

993. புண்ணிய செயலால் வான் உலகம் சென்று அங்கு பூவால் சிவனை அர்சித்து சிவ மந்திரத்தை கணித்து நிறபர். சிவனுக்கு அடிமை என்று நன்றி உணர்வுடன் கூறுவர். இறைவன் பெயரை கண் போல் கணித்து அவருடன் கலந்து நிற்பர்.

994. ஆறு எழுத்துக்களும் ஆறு எல்லைகளை உடையது, ஆறை நான்கால் பெருக்க இருபத்திநான்காகும். சாவித்திரியின் முதல் எழுத்து பிரணவமான எழுத்து. இதை அறிந்து வடிவத்தை மாற்ற அறிந்தவர் பிறவியற்றவராவார்.

995. எட்டு அறைகள் வெளியிலும் ஒன்று உள்ளேயும் இருக்க அமைத்து பொருந்திய சி காரம் என்ற அக்கினியை எட்டு அறைகளிலும் சுர வடிவாய் பரவியுள்ளது என கருதி பிரணவத்தால் சூழ இந்த எல்லைக்கு உட்பட்டு நினைக்கும் உயிர்கட்கு உமையின் கணவன் வெளிப்படுவான்.

996. நமசிவய என்ற பரு ஐந்துடன் தியானம் செய்து அ முதலாகிய எட்டு அறைகளை அறிந்து அவற்றினிடையே பொருந்தி உ காரத்தை முதல் கொண்டு உணர்பவரின் உச்சியில் உ காரமாகிய சக்தியின் தலைவன் பொருந்துவான்.

997. அரசம் பலகைமீது நேராகப் பொருந்தி ம காரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையிலும் அடைத்து வினைசெய்பவன் தேன் மெழுகை ஒலையில் பூசி சுடரில் சிறிதே வெப்பப்படுத்த அது தம்பன கன்மமாக அமையும்.

998. கொன்றை மரப்பலகை கருவியாகக் கொண்டு அதை யமன் திசையான தெற்கில் அமைக்கவும், தீமையான பகையை ஒழிப்பதற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் ம கரம் மட்டும் எழுதவும். மறைப்பற்ற ஐங்காயத்தை அதன்மீது பூசி அடுப்பில் அதை தலைகீழாக புதைத்தால் மோகன சக்தி ஏற்படும்.

999. வடமேற்குப் பக்கமான வாயு திசையில் ஐயனார் கோவிலில் தொழுமாறு புரசப் பலகையிலே காரியத் தகட்டில் நஞ்சைப்பூசி விந்து என்ற வட்டம் அமைத்து அதன் மேல் ஓங்காரம் சூழ உச்சாடனம் செய்க.

1000 நண்பகல் வேளையில் ஒளியுடைய தென்கிழக்கு மூலையில் பச்சைப் பனை ஓலையில் ஐங்காயத்தைப் பூசி முச்சத்தி அல்லது சுடுகாடு ஆகிய இடம் ஒன்றில் புதைத்து வைத்தால் பகையை அழித்து மரணமாகவும் அமையும்.

1001. மகரம் முதலாக வரையப்பட்ட ஐந்தெழுத்து ஏட்டின் மீது அரிதாரத்தைப் பூசி அதன்மேல் அ கார உ காரங்களை எழுதி வசியத்திற்கு நினைக்கப்படும் பொருந்திய வில்வ பலகையில் வைத்து எண்பதாயிரம் உரு ஏற்றவும்.

1002. ஆகர்ஷண முறையானது ஓலையில் ய கார முதலாக மாறி அமைத்து அந்த ஐந்தெழுத்தை எழுதிப எண்ணுவதற்குரிய வியாழக்கிழமையில் வேள்ளிப் பொடி பூசி வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்குத் திக்கை நோக்கி அமர்ந்திருந்து எண்ணாயிரம் பிரணவ தியானம் செய்க.

#####

வியாழக்கிழமை, 30 April 2020 10:26

அசபை!

Written by

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

#####

நான்காம் தந்திரம்!

அசபை!

884. புகழ்ந்து பேசப்படும் ஞானத்தைப் போற்றுகின்றேன். உள்ளத்தில் உலகத் தலைவன் சிவன் திருவடியே துணையாகும் எனத் தெளிகின்றேன். அத் திருவடியை அடையும் சிவ யோக நெறியையும் ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தையும் கூறுகின்றேன்.

885. ஓம் என்பதில் உள்ள முதல் எழுத்தான அ என்ற எழுத்தால் உலகம் எங்கும் பரவி பல் உயிர்களாக விளங்கி, இரண்டாம் எழுத்தான உ என்பதால் உடலில் பரவி சிவசத்தியாய், மூன்றாம் எழுத்தான ம என்பதால் தோன்றும் ஒளிப் பொருளை மாயையால் மயக்கத்தால் பொருந்தியது ஆகும்.

886. தேவர்கள் உறைகின்ற சிரசின் வலப்பக்கமே தேவர்கள் இருக்கும் சிற்றம்பலம். தேவர்கள உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர்கள் உறையும் அம்பலம் என்றும் கூறுவர்.

887. சொல்லப்பட்ட பொன்னம்பலத்தில் அற்புதத் தாண்டவமும் ஆனந்தத் தாண்டவமும் நிகழும். அங்கேயே அனவரதத் தாண்டவமும் நிகழும். அங்குப் பிரளாய தாண்டவமும் நிகழும். சங்காரத் தாண்டவமும் நிகழும்.

888. திருக்கூத்தான பிரணவம் ஒப்பற்ற எழுத்து. அது அருளுவதையே குறியாகாக் கொண்டு நிகழும். அக்கூத்து எல்லாவற்றிலும் மேலான தற்பர சிவநிலையாகும். அக்கூத்து பொன்னம்பலத்தில் நிகழும்.

889. தானே ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பாகும் எக்காலத்தும் அழிவு இன்றி ஒன்றிபோல் எங்கும் பரந்து நிற்கும் பெய்ப்பொருளும் தானே ஆகும். தானே அகர உகர பிரணவத்தின் உறுப்புகளாகும் த்த்துவங்களை இயக்குவதற்கு தானே ஒளியை தருவது ஆகும். பிற ஆதாரமின்றி தனக்குத் தானே ஆதாரமாய் திகழும்.

890. ஆதாரமான மூலாதாரத்தில் எழுந்தருளியுள்ள சிவம் அக்னி மண்டலத்தில் நமசிவய (நான்முகன், திருமால், தேவர்கள்) என விளங்கி மேல் ஆதாரமாகத் திகழும் ஒளிமண்டலத்தில் வசிய (சிவ, சக்தி) எனப் பொருந்தி அதற்குமேல் விளங்கும் சகசிர தளத்தில் யவசி (ஆன்மாவான ய) எனத்திகழும்

891. நான்முகனும், திருமா.லும் உயிர்களின் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்றபடி பாசத்தையும் பாச நீக்கத்தையும் அமைப்பர். ‘ ய ‘ என்ற உயிர் தத்துவங்களை உணராது சிவத்தை அடைந்தபோது தத்துவங்களை உணராது திருக்கூத்தை இயற்றுபவன் கூத்தை விட்டு மேலான அறிவுடையவனாய் விளங்குவதால் சித்தி பெற்ற இன்பம் உண்டாகும்.

892. அ, உ, ம என்ற ஆனந்தம் மூன்றும் அறிவாகிய விந்து நாதம் இரண்டும் சேர்ந்தால் பிரணவம் ஆகும். சி காரத்தை நம என்பதுடன் சேர்க்காமல் ஆன்மாவுடன் பொருந்தும் வகையில் அதன் சக்தியை மாற்றினால் சிவாய என்றால் சிவானந்தம் உண்டாகும் என்பதை அறீயவில்லை.. இதை அறியவல்லார்க்கு கூத்தனாக சிவன் இருப்பதும் அவர் நிகழ்த்தும் ஆனந்தக் கூத்தும் புலப்படும்.

893. நூல்களைக் கற்ருணர்ந்தவர் விந்து நாதம் ஆகியவற்றைப் பெறுவர்.பிரணவம் அல்லது ஐந்தெழுத்து என்பதால் விந்து நாதம் இருக்கும் குரு மண்டலத்தை அடையலாம் என்பதை விளக்குவதே சங்காரத் தாண்டவம். விந்து திரிகோணம் என்ற சகசிர தளத்தில் விரிந்து விளங்கும்.

894 .சதா சிவத்தினால் அருளப்பட்ட வேத நெறி சைவ நெறிக்கு மாறுபடாத ஆகமம். வளமைமிக்க இதை அடைந்தால் பாச நீக்கம் ஏற்படும் என்று சைவ ஆகமங்களால் சொல்லப்பட்ட உண்மை ஆகும். இது எல்லோரும் அடையும் பொதுச் சபையாகவும் அங்கு விளங்கும் குற்றமில்லாத சிவமாகவும் இருக்கும்.

895. மலம் அற்ற சிவமே பதி பாசங்களுக்கு ஆதாரம், அச்சிவமே மறைப்பிற்கும் ஆனந்தத்திற்கும் அடிப்படை. நின்மல சிவமே கூறப்பட்ட ஆணவம் கன்மம் மாயைக்கு ஆதாரம். அச்சிவம் விளங்கும் இடம் சங்காரத் தாண்டவம் விளங்கும் இடம்.

896. சிவமே சிவசக்தி பிரியாது இருப்பதால் சக்திக்குத் தலைவன் ஆவான். தான் இருக்கும் மலையாய் அப்பெருமான் விளங்குவான். மற்றவற்றினுள் கலந்திருப்பினும் தன் இயல்பில் குறையாமல் இருப்பான். தன்னை ஏவுவார் இல்லாமல் தானே தலைவாய் விளங்குவான்.

897. உயிர்களுக்குத் தலைவனாய் விளங்குவது நின்மல சிவம். உயிர்களைத் தாங்குபவனாகவும் தவைகளுக்குத் தலைவனாகவும் இருப்பது அச்சிவமே. ஞானத்தை தருவதற்கு கதிரவன் சந்திரன் ஆகியோருக்கும் அப்பெருமானே தலைவன்.

898. பெருமானின் திருவடிகளே அகரமாகிய பொருளாகும். அப்பெருமான ‘ய’ ஆன் ஆன்மாக்களில் விளங்கும். ஐம்பத்தொரு எழுத்துக்களுக்கும் அனைத்து மந்திரங்களுக்கும் தலமையாய் இருபதும் அத்வே.

899. ஏழாயிரம் எனக் கூறப்பட்ட மந்திரங்கள் இருபது முப்பது என்ற எழுத்துக்களின் சேர்க்கையில் ஆனவை. ஏழாயிரம் மந்திரங்களும் ஏழு முடிவை உடையவை. ஏழாயிரம் பிரிவில் எண்ணமுடியாத பிரிவுகளாகப் பிரிந்து ஏழு முடிவுகளைக் கொண்ட மந்திரங்கள் இரண்டான நாதம் விந்துவில் முடிவடையும்.

900. அசபை என்று கூறப்படும் பிரணவ மந்திரமே ஏழாயிரம் ஆகும். அசபை என்ற மந்திரம் பலவகையாய் உள்ளன. அசபை மந்திரமே சிவவடிவமாக உள்ளது. அதனால் அசபை மந்திரமே எல்லாவுமாய் இருக்கின்றது.

901. சிவன் யாரும் சொல்லாமலே தகுந்த கூத்தை நடத்துபவன். தானே தன்னிடமிருந்து சக்தியைப் பிறப்பு செய்வான். மகாமயையினால் நடைபெறும் ரீங்காரக் கூத்திற்கும் தானே கூத்தை மேற்கொள்வான்.

902. இரண்டு கூத்தில் சங்காரக்கூத்து அருள் பற்றி நடப்பது. எனவே அது நன்மையத் தருவதாகும், மற்றது அற்புதக்கூத்து உயிர்களைப் பிறவியில் செலுத்துவது என்பதால் இயமனுக்கு வேலை கொடுக்கும் கூத்தாகும். சங்காரக் கூத்தே உயிர்களின் பழிப்பிற்கு காரணமாகாத பிரணவ மந்திரம். இக்கூத்தினால் பயன் அடைந்த உடம்பு செம்பு பொன் ஆவதைப்போல் சிவமயமாய் விளங்கும்.

903. சிவயநம என ஐந்தெழுத்தைச் சொன்னால் செம்பின் குற்றம் நீங்கி பொன்னிறமாவது போல் உயிர்களின் மலக் குற்றங்கள் நீங்கி தூய்மை அடைந்து உயிரின் அறிவுமயமான பரம் பொருந்தும். ஸ்ரீம் க்ரீம் எனச் சொன்னாலும் உடம்பு பொன்னாகும் செம்பு பொன்னாவது போல் திருவம்பலம் பொருந்தினால் உயிர்களின் குற்றம் நீங்கி சிவமாய் திகழ்வர்.

904. திருவம்பலச் சக்கரம் அமைக்க ஆறு கோடுகள் குறுக்கும் நெடுக்கும் வரைக. அங்கு இருபத்தைந்து அறைகள் இருக்குமம் இவ்விருபத்தைந்து அறைகளிலும் திரு ஐந்தெழுத்தை முறையாக அமைத்து உச்சரித்தல் நலம்.

905. சிவயநம! சிவயநம! என்ற முறையில் உறுதியுடன் செபித்தால் பிறப்பு இல்லை. மேலும் வளர்ச்சியைத் தருகின்ற கூத்தைக் காணலாம். ஆன்மா மலம் நீங்கப்பெற்று பொன்போல் விளங்கும்.

906. சிவாயநம என்ற பொன்னான மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லக்கூடாது. பொன்னான மந்திரத்தை உதட்டளவில் ஒலியில்லாமல் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை தியானிக்கும்போது சிரசில் அக்கினி திக்கிலிருந்து ஈசான திசைப்பக்கம் பாய்ந்து பெருகி உடம்பு பொன்னாகும். திருவடிப் பேறு கிட்டும்.

907. திருஐந்தெழுத்தை எண்ணிலால் திருவடிக் காட்சியைக் கண்டு சிறந்த ஆசிரியனாக உருவாவர். பலர் மணவராக அமைவர் சிவனருளால் மாணவனின் குற்றம் நீங்கப் பெறும். பொன்னடியைக் காணத்தக்க உடலாக அமையும். திருவடிக் கூத்தை சிந்தனை செய்யுங்கள்.

908 திருஐந்தெழுத்தை கணிக்கும் செயலால் மற்ற உடலில் புகுந்து அங்குள்ள இன்பத்தை அடையலாம். அவர்கள் கவர்ச்சி தோற்றம் கொண்டவராக இருப்பதால் பெண்கள் அவரை விரும்பித் தொடர்வர். அவர்கள் சொல்வதால் உலகத்தவருக்கு பற்று பாசம் நீங்கும். இது திருக்கூத்தின் பயனாகும்.

909. அமைதியுடன் திருஐந்தெழுத்தை ஆயிரம்முறை உரு செய்தால் மேலே உள்ள சகசிர தளத்தை காணலாம். சஞ்சித, ஆகாமிய வினைகள் அழிந்து நுண்மையான சிவானந்தம் உண்டாகும்.

910. சீவன் சகசிரதளத்தை அடைந்து சிவத்துடன் ஒன்றிய நிலையைச் சொல்வது ஆனந்தம் பேரானந்தம், ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற இறையின் சமத்தன்மையும் சிவனாரின் அயல் தன்மையும் பிரித்தறிய முடியாதபடி இருக்கும் இடத்தை அடைவது அதைவிட ஆனந்தம். இந்த ஐந்தும் ஒன்றிய நாதாந்தம் அமைந்தால் ஆனந்தம். அம், ஹரீம், ஹம் க்ஷ்ம் ஆம் என்ற ஐந்து வித்து எழுத்துக்களும் சிறந்த ஆனந்தத்தைத் தரும்.

911. பருவுடல் நுண்ணுடல் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தடையாகம்ல் அவை மிகையாகி ஒளி பொருந்தி விகாரமாகாமல் நின்றால் பருவுடல் நுண்ணுடல் ஆகிய இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என நிற்கும். பின் அவை இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ என விளங்கி நிற்பது திருக்கூத்தாகும். (நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகியோர் உயிர் குற்றெழுத்துக்களாகவும் அவர்களுடைய சக்திகள் உயிர் நெடிலாகவும் கொள்ளவும்)

912. கூத்தே சிவயநம, மசிவயநம, நமசிவய, யநமசிவ, வயநமசி என்றாகும். இந்த உண்மையை கடைபிடித்தால் சந்திரயோகம் சிவயநம விளங்கி ஈ, ஊ, ஆ, ஏ, ஓம் பொருந்தும். சுரியன் யோகமான சிவயநம விளங்கி ஈ, ஊ, ஆ, ஏ, ஓம் பொருந்தும். நமசிவய கிரியை நெறி விளங்கி ஈ ஊ ஆ ஏ ஓம் ஆகி ஒளி பொருந்தும் விதம் ஆகும்.

913. ஒன்றான வான், இரண்டான காற்று, மூன்றான தீ ஆகிய மூன்றும் இறைவன் கூத்தினால் இயங்குவதால் வானில் இம்மூன்று ஒளிகளும் விளங்கி மண், நீர், தீ காற்று விந்து, நாத அணுக்கள் ஆக ஏழும் இந்த மூன்று ஒளிகளுடன் கலந்து ஆட சிவன் தனித்து ஆட சிவம், சக்தி, நாதம், விந்து , சதாக்கியம், மகேசுவரம், உருத்திரன், திருமால், நான்முகன் என்ற தத்துவங்களும் ஆட சிற்றம்பலத்தில் சிவந்த ஒளியில் சிவன் ஆடினான்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:56

சந்திர யோகம்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

சந்திர யோகம்!

851. சந்திரக்கலையானது பரு உடலிலிருந்து நுண் உடலுக்கு ஏறியும் நுண்ணுடலிலிருந்து பரு உடலுக்கு இறங்கியும் வரும். இரு பக்கத்திலும் உள்ள சந்திரன் ஒரு பக்கத்தில் ஒளிர்வதும் மறுபக்கத்தில் தேய்வதுமாக இருக்கும். சந்திரகலை செயலால் நுண்னுடல் தூய்மை அடைவதற்கு ஏற்பப் பருவுடலும் தூய்மை அடையும்.

852. உடலுக்குள் இருக்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்றிற்கும் முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்துமாக இயங்கும் கலைகள் எல்லாம் நடுநாடிவழி இயங்கச் செய்வது யோகி அறிந்த அறிவாகும்.

853. பன்னிரண்டு கலைகளை உடைய சூரியனைச் சந்திரனுடன் சேர்க்கப் பழகினால் உலகம் உவக்கும் பேறு அடைவர். பெருங்கால் என்ற சந்திர கலை பதினாறும் அக்கினிக் கலையுடன் சேரவே கதிரவன் கலை அடங்கி இருக்கும்.

854. சூரியன் கலை உய்ர்ந்து போகும் அளவு பன்னிரண்டு ஆகும்.. பால் போன்ற நிற்முடைய சந்திரக்கலை உயர்ந்த அள்வு பதினாறாகும். சூரியக்கலையும் சந்திரக்கலையும் இனைந்து அக்னிகலையுடன் சேர்ந்தால் அது அறுபத்தி நான்காகும். இந்த நிலையை அறிவீர்.

855. அக்கினி கலைகள் அறுபத்து நான்கும் பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன், விந்து நீக்கம் இல்லாத சந்திரன் ஆகியவற்றின் கலைகளாகும் மூலாதாரத்தில் கட்டுப்படும் இவை அதிலுள்ள சீவனின் ஒளிக்கு நான்கு கலைகள். இவ்வாறு கட்டப்பட்ட அக்கினி-64, சூரியன்-12, சந்திரன்-16, வின்மீன் என்கிற சீவனொளி-4 ஆக மொத்தம் 96 கலைகளாகும்.

856. அறுபத்திநான்கும், பன்னிரண்டும், பதினாறும் முறையே அக்கினி, கதிரவன், சந்திரன் ஆகியவற்றின் கலைகள். இவை சேர்க்கப்படும் மூலாதாரத்திலுள்ள நட்சத்திரத்திற்கு நான்கு கலைகள். இவ்வாறு சேர்க்கப்பட்ட தொண்ணூற்றாறும் கலைகள் ஆகும்.

857 .சந்திர, சூர்ய, அக்கினி என்ர கலைகள் எல்லாம் இடைகலை பிங்கலை நடு நாடிகள் வழியாக தொடர்பு கொண்டவை. இவைகளின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்து சிரசின்மேல் சகசிரதளத்தில் கூடும்படி செய்தால் யோகியர் சிவதியானத்தில் பொருந்தியிருப்பர்.

858. கீழே உள்ள அக்னியில் குறைவைவுடைய இடைகலை பிங்கலையின் அசைவினால் சேர்ந்து ஒளியாகும். சந்திர சூரிய் கலைகள் நாதத்தைச் செய்யும்போது பிரணவமாக மேலே சென்றால் அங்கே இருக்கும் ஒளியே பரயொளியாய் சக்கரமாய் புவியில் விளங்கும்.

859. நிலம், நீர், தீ, காற்று, சிறப்பான வான், அழகிய கதிரவன், அரிய சந்திரன், அக்கினி, மாறுபாட்டைச் செய்யும் சீவஒளி என்ற ஒன்பதும் பிரணவத்தின் நெறிகளாகும்.

860. தேய்பிறை முன்னிட்டு சந்திரன் கீழ் முகமாகப் போகும்போது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசமடையும். வளர்பிறை காலத்து சந்திரன் மேல் முகமாய் போனபோது மூலாதாரத்தில் உள்ள ஒளி பிரகாசமடையாது. மூலாதாரத்தில் உள்ள ஒளியில் எல்ல யோனிகளும் இருக்கின்றன. மூலாதாரச் சக்கரத்திற்கு கரணமான ஒளியே எல்லா சீவர்களின் வடிவாகும்.

861. சந்திர கதிர்கள் பதினைந்து நாட்களில் வளர்ந்து பெருகி முழுமை அடையும். பிற்பட்ட பதினைந்தில் சிறிது சிறிதாக தேய்ந்து பெருகிய நிலையிலிருந்து சிறுத்துவிடும். வளர்பிறையை அரிய வல்லார்க்கு அளவிட்டுச் சொல்ல முடியாத சிவபெருமானின் திருவடியை அடைய முடியும்.

862. மூலாதாரத் தீயினை எழுப்பி கதிரவன் மண்டலத்தை தாண்டி சந்திர மண்டலத்தை அடையும்போது அகர உகர மகர விந்து நாதமான ஐந்தும் விரிந்து ஒளியான பிரணவம் தோன்றும். எனவே ஐம்புலன் வழி செல்லாமல் சந்திரன், கதிரவன், அக்கினி மூன்றையும் இன்ணைகின்ற யோகம் அமையும்.

863. ஒன்றுபட்ட கலைகள் பதினாறும் உடலில் பொருந்தி நிற்கும் ஒளி நிலை கண்டும் கீழானோர் உண்மையை உணர்வதில்லை. சினம் கொள்ளும் கூற்றுவன் உடலினின்று உயிரை பிரிக்க எண்ணம் கொண்டபின் தடுமாற்றத்திலிருந்து விடுபடாமல் அவ்வெண்ணப்படியே சென்று இறப்பு என்ற குழியில் வீழ்வர்.

864. ஆண்குறியில் உள்ள சந்திரன் மூலாக்கினியுடன் பிரமந்திரம் நோக்கிச் சென்றால் கதிரவன் ஒளி கிட்டும். மூலாதாரத்தில் உள்ள அக்கினியும் மணிபூரகத்தில் உள்ள கதிரவனையும் ஒன்றாய்ச் சேர்த்தால் சந்திர ஒளி அமையும். இந்த இரண்டு ஒளியும் பிரமந்திரத்தில் ஒன்றானால் சந்திரன், சூரியன், அக்கினி கூடிய பிரணவம் நிகழும்.

865 .பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண், பதினாறு கலைகளையுடைய் சந்திரன் ஆண். இவ்விரண்டும் வெளியில் செல்லாமல் பிடித்து முகத்திற்கு முன் தோன்றும் ஒளியில் கல்க்கும்படி செய்தால் சிறப்பான் திருவடியின் இன்பம் தீராத இன்பமாய் விளங்கும்.

866. சந்திரனின் இடக்கண் பார்வையை கதிரவனான வலக்கண் பார்வையுடன் குரு காட்டிய வழியில் பொருந்தி நின்று தவறாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் உடலான ஆணி கெடாது விளங்கும்.

867. சிவகலை சகசிரதளத்திற்குச் சென்றபோது தலையில் நாதம் விளங்கும். அந்த நாதத்தில் மகிழ்வுடன் சிவபெருமான் திகழ்வார். இந்நிலைக்கு முன் கதிரவன் சந்திரன் ஆகியோர் வல்ப்பக்கம் இடப்பக்கம் சிறிய் தீப ஒளிபோல் திகழ்வர். சூரியன் புறப்படுமுன் சங்கின் ஓசை மக்களை எழுப்புவதுபோல் ஞானப்பகலவன் தோன்றுமுன் நாதம் முன்னே திகழும்.

868. சூரியன் சந்திரன் இயக்கத்தால் காலம் கணிக்கப்படும். இருவரும் ஒன்று சேர்ந்த பிரணவ நிலையில் சிவசக்தி தோன்றும். அப்போது அமுதம் பெருகும் அருள் நிலை ஏற்படும். நாத ஒசை செய்பவன் நாதத்துடன் கூடி அண்டத்தில் எல்லையான துவாத சாந்தத்திற்குச் செல்ல அங்கு ஈசனும் நேராய் எதிர்பட்டு இருப்பார்,

869. மணிப்பூரமான கொப்பூழ் தாமரையில் வெளிபட்ட பேரொளியை அடைந்து பிரணவத்தின் உண்மையை எவரும் அறியார். யாராவது பிரணவத்தை அடைந்து பிரண்வத்தை அறிந்தபின் அங்கு அவருக்கு சீவஒளிக்கு முன் சிவஒளி ஒளிர்ந்து இருக்கும்.

870 . பயன் ஏதும் அறியமாட்டாதவர் பிறர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் அறிந்து கொள்ளார். அவர்கள் அற்வில்லாதவர்கள். சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்த்து தி/றம் பெற்றால் இராகு குளிகை போல் மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கு வெளிப்படும்.

871.குண்டலினி சுவதிட்டானத்தில் பொருத்தி சந்திரகலை வளர விடாது விந்து நிக்கம் செய்யும். குண்டலியின் ஆற்றல் தீமைசெய்யும் ம/னிபூரகத்தில் உள்ள சூரியனையும் அசைத்து வெப்பமாக்கிக் கொண்டிருக்கும். குண்டலினியையும் சந்திரனையும் பகைமை நீங்குமாறு சிரசின்மேல் உடனிருக்கச் செய்தால் அருளையுடைய சிவன் யோகியை விட்டு நீங்கமாட்டான்.

872. குண்டலியுடன் சென்ற சந்திரன் சிரசின்மேல் நிற்கும் வரை உறங்காமல் கவனிக்கும். சந்திரன் கீழே இறங்கியபோது உறங்கியும் நன்மையைத் தரும் ஒளியினை மனத்தில் நிலைத்திருக்குமாறு செய்தால் விரிவைச் செய்து சந்திரன் முழுமையாகப் பொருந்தும்.

873. சந்திரன் தலையில் இருக்கும் வரை காலை எழுந்ததும் தூக்கமின்றி தியானம் செய்ய வேண்டும்,. சந்திரன் தலையில் சஞ்சாரம் செய்யும்வரை உறங்காமல் இருந்து தலையைவிட்டுக் கீழ் இறங்கியதும் இதுகாறும் ஒளியைக் கட்டி நிறுத்தியவன் உறங்கலாம்.

874. உழிக்காலத்தை பிரியாது இருக்கும் யோகியர் நாழிகை உதவியுடன் கூற்றுவரின் வாழ்நாளை சொல்லி விடுவர்.. இவர்கள் ஐந்தொழில் செய்யும் சதாசிவ மூர்த்திக்கு இனையாவர். ஆணவம் இல்லது சிவத்தை ஆதாரமாகக் கொண்டு தன் ஒளி பெற்று விளங்குவர்.

875. குளுமையான சந்திரன் உச்சியாகிய வழியில் சென்று சகசிரதளத்தில் உலகத்தவர்கள் மதிக்கின்ற இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உ/ணர்ந்து முழுச்சந்திர மண்டலத்தைக் கண்டபின் அங்கு விளைந்து இருக்கும் அமுதத்தை பருகியபடி இருப்பர்.

876. மேஷம் முதல் கன்னி வரை சூரியனின் ஆறு கலைகள் வளர்வதிலும், அகர உகர மகரம் விந்து, அர்த்தசந்திரன் நிரோதினி ஆகிய ஆறு கலைகள் குறைவதிலும் மூச்சு நான்கு விரற்கடை கழியாமல் பன்னிரண்டுக்கு விரிந்து ஓடி நின்றதை யோகியர் அன்றி யார் அறிவார்.

877. உயிர்குறையும் சந்திரன் நாளாவது விந்து கழியும் வழி. யோகியர்க்கு காமத் தொடர்பு இல்லாததால் விந்து வீனாகாது. மூலாதாரத்தில் கட்டுப்படும். எனவே பிரணவம் இருக்கும் சந்திர மண்டலத்தில் உணர்வைச் செலுத்துங்கள்.

878. சிரசில் வலப்பக்கம் மேஷ ராசி முதல் கன்னி ராசி வரை விளங்கும் சூரியன் கலைகள் ஆறுடன் கீழ் உள்ள மூலாதரத்தில் உள்ள நான்கு கலைகளுடன் கலந்து இருக்கும். அறிவுப் பொருளான சூரியன் அக்கினி கலை பத்துடன் சந்திரன் விளங்கும் துலா முதல் மீன ராசி வரை ஆறிவு பொருந்தியபோது சந்திரன் பௌர்ணமி நாளாகும்.

879. உணர்வால் ஏற்பட்ட விந்து சுரோணிதத்துடன் உறவு கொண்டால் சூரியன் மிக்க ஒளி வீசுவான். சூரியனின் ஆற்றல் குறைந்தால் புணர்ச்சியால் வெளிப்பட்ட விந்து ஒளியாய் சிரசில் விளங்கும். ஒளிமயமான உ?ணர்வும் நுண்ணுடலும் பருவுடலும் ஒன்றாகி நின்றால் ஒளிமயமான உணர்வும் நுண்னுடலும் பருவுடலும் யோகியர்க்கு என்றும் நீங்காது.

880. வெளியே செல்லாத மனம் காற்றுடன் இடப்பக்க மூளையில் பொருந்தி எல்லாவற்றையும் நடத்தும் சிவசங்கின் ஒலியைக் கேட்டு ஐம்புலன்களின் ஆசையில் அடங்கி நிற்கும். இப்படி பிரணவத்தில் கட்டப்படாத யோகியர் அமுதத்தை பருக மாட்டார்.

881. சந்திர மண்டல் ஒளிவெள்ளம் கண்ணினின்று பாய்ந்து விளங்கும் சகசிரதளத்தில் உய்ர்ந்து நிற்பதில் சிவம் சக்தி நாதம் விந்து சீவன் ஐந்தையும் ஒன்றாக்கி மூலாதாரத் தீயை வீணாத் தண்டில் செலுத்தி காண்பவர்க்கு இறப்பு இல்லை. அதனுடன் ஒளி பெருகும் காலமும் இல்லை.

882. அனுபவிக்க வேண்டிய அமுத ஊறலைத் திறந்து பிரபஞ்சக் கலப்பினால் மாற்றம் இல்லாத சூரியன் சந்திரகள் பொருந்திய சகசிரதலத்தை அடைய தெளிந்த நீரினுள் இருப்பதைப் போன்ற உணர்வுடன் சமாதியில் நிலைத்து முடிவில்லாத இன்பத்தை வழங்கும் கண்ணில் இருக்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று மூச்சின் இயக்கத்தை மாற்றலாம்.

883. கீழ் நோக்குதல் இல்லா சந்திரக் கலையை மாறுபடாமல் போற்றுங்கள். வீணாத் தண்டுடன் சக்சிர தளத்தை அடைந்தால் உடலானது அழியாது. வேண்டிய யோக உபாயங்கள் சிதறாமல் கிடைக்கும். இன்பம் பெருகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:55

அமுரிதாரணை!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####

அமுரிதாரணை!

845. உடலினின்று நீங்காமல் உறுதியாய் உணர்வை அளிக்கும் நீர், கடலின் அருகில் மண் கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைப்பது போல் இருக்கும். உடலில் வேறொறு வழியாய் கீழே செல்லாமல் மேலே போகும்படி செய்தால் உயிரை வருத்தமுறாது காக்கலாம்.

846. தெளிந்த இந்த சிவநீரைப் பருகினால் ஓராண்டுப் பயிற்சியில் ஒளியைக் காணலாம். இது கேடு இல்லாதது. காற்றுடன் கலந்து மேலே ஏறும் எட்டு ஆண்டுகளில் மனம் கீழ் நோக்குவதைக் கைவிட்டு மேலே நின்று மகிழ்ச்சியை விளைவிக்கும்.. அதனால் உடல் பொன் போன்று ஒளிரும்.

847. சிவ நீரானது கீழே உள்ள குறியை நெருக்குகின்றதாலும் பிழிதலாலும் உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிடச் சிறந்த மருந்தொன்று இல்லை. உயிர்கள் இந்த நுட்பத்தை அறிந்து தலையில் பாயச் செய்தால் நரைத்த மயிர் கருமையாகும் மாற்றத்தை அறியலாம்.

848. அறிவில்லா மக்கள் சிறுநீர் குழாய்க்கு அருகில் உள்ள சுக்கிலத்தை கழிக்க வேண்டும் என்பர். முதல் நிலையையும் முதிர்ந்த இலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு மயிர் கருத்தலும் தோல் சுருங்குதலும் ஆகிய மாற்றம் ஏற்படும். அவ்வாறு நீரை உடலில் அமைக்க வல்லார்க்கு யமபயம் இல்லை.

849. அழகிய கூந்தலையுடைய பெண்ணே. ஓர் அதிசயம் உள்ளது. உடலில் மறை முகமாய்ச் சென்று இந்நீர் சிரத்தை அடையும் காலத்து, மிளகு, நெல்லிப்பருப்பு, கத்தூரி மஞ்சள் வேப்பம் பருப்பு என்பனவற்றை அரைத்து தலையில் தேய்த்து முழுகி வந்தால் உடல் மென்மையாவதுடன் மயிரும் கருமை அடையும்.

850. வீரியத்தால் எற்பட்டதால் வீரமருந்து என்றும், வான் வெளியில் சோதியாய் இருப்பதால் தேவர் மருந்து என்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரி மருந்து என்றும் நந்தியெம்பெருமான் அருளினான். முதன்மையான மருந்து என்பதை யோகியர் அறிவர். பரந்த பேரொளிமயமான இதை சாதாரண உயிர்களுக்கு சொல்லக்கூடாது.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:53

பரியங்க யோகம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

பரியங்க யோகம்!

825. உடலில் பூசுவதை பூசிக் கொண்ட ஆடவன் மலர்ந்த மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்ணொருத்தியுடன் புணர்ச்சி செய்யும்போது உள்ளம் பிரமந்திரமான உச்சியை நினைத்திருந்தால் அவருக்கு புணர்ச்சி தளர்ச்சி அடையாது.

826. உச்சித் தொளையில் விளங்கும் பேரறிவு பொருளை நினைத்த வண்ணம் ஒருவன் புணர்ச்சியில் இருந்தால் காம வாயு விரைவாய் தொழிற்படாததால் நீரின் தன்மை கொண்ட சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காமல் திரும்பும். சூதாடும் கருவிகளைப் போன்ற முலைகளையுடைய பெண்ணும் உடலான தேரை நடத்தும் ஆணும் தங்களுக்குள் பொருந்திய கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாக மாற்றம் அடைந்து சிரசை அடையும்.

827. ஒரு ஆணும் பெண்ணும் விருப்பமுடன் புணரும்போது தீ மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் மேல் வெளியை அறிவர். உடலான வண்டியை மேன்மேலும் செலுத்துவதால் சந்திரமண்டத்தில் வான் கங்கையாகிய ஒளியைப் பெருக்கிட உடலின் தண்டு ஒருபோதும் தளர்ச்சி அடையாது.

828. புணர்ச்சியின் காரணமாக காமத் தீ உடலில் விந்துவை நீக்கம் செய்யும் புணர்ச்சியில் கெடாது பாதுகாத்து யோகத்தால் மாற்றி விந்து வெற்றி பெற்றவன் தலைவன் ஆவான்.

829. வெற்றி கண்ட தலைவன் ஆன்மாவை அறிந்தவன். அவன் விரும்பிய சிவயோகம் அவனை தானே வந்தடையும். தன்னை வயப்படுத்தி ஆள்கின்ற தலைவன் ஆவான். அவன் விருப்பப்படி பூமி முதலிய பூதங்கள் நடக்கும்.

830. ஐந்து நாழிகைக்குமேல் ஆறாம் நாழிகை பெண் ஆணுடன் பொருந்தி உறங்குவாள். ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் இனித் தேவையில்லை என்ற மன நிறைவுடன் இருக்கும்.

831. பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகை அரிதாய் இருப்பவர்க்கே அன்றி நழுவும் கை வளையலையுடைய மணம் பொருந்திய சூரிய சந்திர கொங்கைகளை உடைய குண்டலினி சக்தியைக் கடந்து எவராலும் மேலே செல்ல முடியாது.

832. அடைவதற்கு அருமையான யோகத்தை செய்து அறிவித்தவர் வான்கங்கையை முடியில் வைத்த உருத்திரன் ஆவார். நாதத்துடன் கூடிய ஒளியை ஐந்து நாழிகை வரையில் எண்ணாமல் எண்ணி அனுபவித்தவன்.

833. பரியங்க யோகத்திற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபது. ஆணுக்கு முப்பது. அப்போது பொருந்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆனந்தம் உண்டாகும். இந்த யோகத்தில் ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் இன்பம் அடையும். ஆயினும் விந்து நீக்கம் ஏற்படாது.

834. வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிறச் சுரோணிதத்தில் கலக்காமலிருக்க தட்டானான சிவன் கரியாகி அருளைத் தந்து பக்குவம் செய்தார். தீயான அக்கினி கலை உண்டாக ஊதுகுழல் ஆன சுழுமுனை வழிச் சென்று பொன் எனும் சந்திரனை செப்பாகிய உள்நாவில் இருக்கும்படி வைத்தார்.

835. விந்து நீக்கம் இல்லாமல் புணர்ந்த ஆண் பெண் இருவரும் இன்பம் அடைந்து காம வயப்படாமல் தேவ காரியமாய் எண்ணிச் செய்கையில் அவர்களுக்கு பத்து திக்குகளும் பதினெட்டு வகை தேவர்களுக்கும் தலைவனான சிவ சூரியன் விளங்குவான்.

836. விருப்பைத் தரும் கதிரவனுக்கும் பிறப்பைத்தரும் கருவாய்க்கும் இடையே பெண்ணைப் புணரும் ஆண்மகன் ஆனந்தம் அடைவான். இருவரின் புணர்ச்சியில் சுரோணித வழிச் சுக்கிலம் பாயாமல் சந்திரமண்டலத்தின் செந்நிறம் கொண்ட சத்தியான நாதத்தில் திளைத்திருப்பர்.

837. பரியங்க யோகத்தால் மனத்தை தூய்மை செய்து கருத்தழகால் அங்கு இருந்தால் பெண்ணுடன் கூடுபவர்க்குத் துன்பமில்லை. உடலில் விந்து நீக்கம் இருக்காது.

838. சுவாதிட்டானத்தில் இருக்கும் காமாக்னியை மூலாதர வழி புருவ நடுவிற்கு கொண்டு சென்றால் தீயின் முன் மெழுகுபோல் உடல் காணாமல் ஒழியும். பேரொளியைக் கண்டபின் உழுதல் செயல் இல்லை. புருவ நடுவைத் தாண்டி துவாத சாந்தப் பெருவெளியை அடைந்தவரின் உடல் உயிர் பிரிந்த பின்பு கீழே விழாது உருகி விடும்.

839. வானத்தின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் பொன் ஒளியை அறிந்ததால் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தை பெற்றுச் சிவன் அருளாலே பரமான வானத்தை அறிந்திருந்தேன் அதற்குமேல் நான் அறிய ஒன்றுமில்லை.

840. ஒன்றுக்கு ஒன்றாய் மேலாக விளங்கும் இடத்தில் இருப்பவர் யார் எனக் கேட்டால் திருமால், நான்முகன், உருத்திரன் ஆகியோர் துரிய பூமியில் விளங்கும் சிவன் பராசக்தியைவிட மேலே உள்ளது என்றனர்.

841. மின்னல் ஒளியில் விளங்கும் சக்தியும் அவளை ஆளும் சிவனையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட வானத்தில் நிலைபெறும்படி செய்து அக்கூட்டத்தில் ஆன்மாவான தன்னையும் காண வல்லவரானால் இவ்வுலகில் நெடுங்காலம் வாழலாம்.

842. காம வாயுவை உள்ளே இழுத்து சுக்கிலம் கெடுமாறு செய்து இழுத்த காம வாயுவை மேல்முகமாய் ஆக்கும் வழி அறிந்தார் இல்லை. அவ்வாறு அறிந்தவர் வளர்ச்சி பெற்ற தன்னைச் சிவத்திடம் ஓமமாய் வேள்வியில் இடும் பொருளாய் செலுத்தியவராவார்.

843. ஆன்மாவை வேள்விப் பொருளாய் செலுத்திப் பிரமப்புழையில் மேலான சகசிரதளத்தில் பொருந்தினால் மண்டையில் உள்ள மயிர் கருக்கும். சீவனுக்கு அருள வெண்டிய நன்மையை எண்ணிக்கொண்டு சிவசக்தி இருப்பாள். பக்குவத்தை உயிரிடம் அறிந்து அதனிடமுள்ள பிருதுவிச் சக்கரத்தின் செயலை மாற்றி காம வாயுவை கீழ் நோக்கிச் செல்லவிடாமல் மேல் நோக்கிச் செல்ல வைப்பாள்.

844. சசிகரத் தளமாகிய ஆயிரம் இதழ் தாமரை சிதாகாயத்தில் இருப்பதால் நீரும், பூமியும் இல்லை. இத்தாமரை மலர்ந்து பூவாக உள்ளதால் மொட்டும் வேரும் இல்லை. ஆனால் அங்கு ஒளி ஒன்று உள்ளது. அகண்டு இருப்பதால் குறிப்பிட ஓர் இடம் இல்லை. நாதத்திற்கு காரணமான இந்த சசிகரதளத் தாமரை மலர் எங்கும் பரவியிருப்பதால் அடியும் நுனியும் இல்லை.

####\#

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:52

கேசரியோகம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

கேசரியோகம்!

799. மூச்சை கீழே இறங்கமல் அண்ணாக்கில் கட்டி, பின் அபானன் குதம் அல்லது குறி வழியாக போகாதபடி குதத்தை சுறுக்கி, இரு கண்பார்வையை ஒன்றாக்கி உள்ளத்தை சுழுமுனை வழியாகப் பாயும் மூச்சில் நிறுத்தியிருக்க உடலைத் தாண்டிய நிலைக்கு சென்றமையால் காலத்தைக் கடக்கலாம்.

800. சிவயோக நாதத்தினால் மோதி முன்பக்க மூளையில் இரண்டு கண் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் ஏற்படும் எல்லைக்குள் இரண்டு கரைகளின் இடையே வானத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகசிரதளத்தை நிரப்பினால் நெற்றிக்குமேல் நிமிர்ந்து பார்க்க சிவனின் குற்றம் நீங்கி இருளின்றி தூய்மையாகும்.

801. இடைகலை பிங்கலை வழி உயிர்ப்பு இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியாக உயிர்ப்பைச் செலுத்த வல்லவருக்கு தளர்ச்சி ஏற்படாது. உறங்கும் காலத்து விழித்து பயில வல்லார்க்கு இறப்பு இல்லை. நீண்டகாலம் வாழலாம்.

802. ஆராயந்து உணர்ந்து சொன்னால் சுழுமுனை தியான சாதனையில் அமிழ்து நிலையாக ஊறி நன்கு ஒலிக்கும். ஒலித்தலைச் செய்யின் சந்திர மண்ட்லமாய் விளங்கி ஒலித்து காக்கும்.

803 .ஆசனத்தில் அமர்ந்து அண்ணாக்கின்மேல் நாவின் நுனியை உரசியிருந்தால் சிவனும் சீவனும் அவ்விடத்தில் விளங்கித் தோன்றும். மூவருடன் முப்பத்தி மூவரும் தோன்றுவர். உடல் நூறு கோடி ஆண்டுகள் மரணம் இல்லாது வாழும்.

804. ஊணால் ஆன உடல் அறியும் அறிவெல்லாம் பொருந்த இருக்கும் இடமான சிரசின் உச்சிமேல் வான்மண்டலம் அமையும் இயலபை அறியார். வான் மண்டலத்தைப் பொருத்தி அறிபவர் அமுதத்தை உண்டு தெளிவை அடைவர்.

805. மேல் அண்ணாக்கில் பிராணன் அபானன் என்ற வாயுக்களை பொருந்தும்படி செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. உச்சித் தொளை வழி திறக்கும். உலகம் அறிய நரை திரை ஆகிய உடல் மாறுபாடுகள் மாறி இளையவர் ஆவார். சிவசக்தியின் ஆணை இதுவாகும்.

806. நந்தியெம்பெருமானை முன்னிருத்தி நாக்கை அண்ணாக்கில் ஏறும்படி செய்து நடுநாடியில் உச்சியில் சந்தித்திருந்தால் உலகை ஆள்வர். உடலுடன் பின்னி இருக்கும் அறிவு நீங்க சிவனை எண்ணியிருப்பவரே உண்மையான அக்னிச் செயல் செய்தவர் ஆவார்.

807. தீவினைகள் வருத்த அறிவு மயங்கி இருக்கும் உயிர்கள் நாவினால் செய்யும் சாதனையால் யமனுக்கு வேலையில்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அதன் பயன் இன்மையை உணர்ந்து தெய்வப் பணியைச் செய்து அதன் இனிமையை உணர்ந்திருப்பர்.

808. இனிக்கும் கரும்பை போன்ற வினைகளைச் செய்பவர் சுழுமுனை நாடியான கரும்பைப் பெற நாக்கை மேலே ஏற்றி நடுநாடியின் கோணலை சீர் செய்து ஊன் உடலில் அமுதத்தை காண்பர்.

809. அண்ணாக்குப் பகுதிவழி உண்ணாக்கை மேலே ஏற்றி அதனால் ஊற்றெடுக்கும் அமுதத்தை பருகிச் சிவயநம என எண்ணியிருப்பவர்க்கு காப்பற்றுகின்ற ஒளி நீர் வெள்ளம்போல் முகத்தின்முன் பெருகும் அந்த வான கங்கையை அறிவீர்.

810. சிவனைப் பொருத்தி மனதில் வழிபாடு செய்தவர்க்கு மலத்தைச் சுட்டெரிக்கும் அருள் சக்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்படும்போது அதில் மனம் பதித்து கீழ் இறங்காமல் சாலந்த்ர பந்தனம் அமைத்து குவிந்து தியானித்தால் உடல் சிவாலயமாகும்.

811. அகக்கோயிலை இருப்பிடமாகக் கொண்டு வாழும் உயிர்கள் அனைத்து உலகிற்கும் தாயைவிட மிகுந்த அருள் உடையவர் ஆவர். இவரை யார் சினந்தாலும் நனமையே செய்வார். சினம் கொண்டவரில் தீவினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியவராய் அழித்து விடுவர்.

812. சிவன் மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் சிரசில் இருப்பார். சகசரதளத்தில் உணர்பவர்க்கு பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான். தொடர்ந்து பாவனை செய்பவர்க்கு பாவகப் பொருளாக விளங்குவான். சிவ யோகம் செய்பவர்க்கு அவரது அறிவில் நிறைந்து விளங்குவான்.

813. சந்திரனிடமிருந்து எழும் கலைகளைப்போல் பதினாறு இதழ்களையுடைய விசுக்தி சக்ரத்திலிருந்து பொருந்தியுள்ள உடலில் இருந்து மூலாதாரம் முதல் அநாதகம் ஒளிபரப்பும் இருநூற்று இருபத்தி நான்கு கதிர்களைப் பரப்பித் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபடாது சிவன் விளங்குவான்.

814. விசுக்தி சக்கரத்தில் கிரணங்கள் நடுவே பராசக்தி விளங்கி ஆன்ம தத்துவத்தில் சந்திரனாக விளங்கி அவளே தன் போகத்தில் பொருந்தி இன்பம் அளிக்கின்றாள்.

815. பராசக்தியால் சொரியப்பட்ட வெண்மையான சுக்கிலத்திலும் பொன் மயமான சுரோணிதத்திலும் பொருந்தி சுவதிட்டான சக்கரத்திலிருந்து செயல் படும் அவை ஆற்றல் கழியாது காக்கும் ஆற்றல் உடையவர்க்கு உடம்பைக் காக்கும் பச்சிலை யாகும்.

816. காம வெறியை ஏற்படுத்தும் கொடிபோன்ற குண்டலினி சக்தி வான் மண்டலத்தில் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ந்து விளங்கினால் எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்கும் ஞானம் ஏற்படும். குண்டலியின் இனமான சிற்சக்தியுடன் அறிவு மய்மான சிவனும் விளங்குவான்.

817. விசுத்தி சக்கரத்தின் கீழ் ஓடும் உயிர்ப்பு மண்டலத்திலிருந்து உள்முகமாய் மேல் நோக்கிச் செல்லும் உடலைத் தாங்கிய வீணாத் தண்டை விட்டுத் தூண்டி வானத்தை அடைந்து கவிழ்ந்திருக்கும் சசிகரதளமாக இருக்குமாறு செய்தால் சந்திர மண்ட்லம் வளர்ந்து பூமண்டலத்தில் நீண்ட காலம் வாழலாம்.

818. சந்திர மண்டலத்தினுள் மனத்தை பிணிக்கும் சசிகர த/ளத்தைக் கண்டு மனத்தை கீழே போகாமல் அங்கே நிறுத்தி பழைய ஆனந்த மய கோசத்துள் கதிரவன் ஒளி விளங்கச் செய்தால் குண்டலத்தை அணிந்த கூத்தன் அசைவில்லாமல் இருப்பான்.

819. விசுத்தி என்ற சக்கரத்தின் கீழ் சென்று ஒழியும் வாயு அண்ணாக்கின் வழி மேலே போய்த் தங்கும். அதனால் ஒளியானது நிலைபெற்று வழிகின்ற காலத்தில் சசிகரதளத்தில் விளங்கும். திருவடியைப் புகழும்போது உடல் பற்றை விட்டு நீங்கி நில்லுங்கள்.

820. உடம்பின் மூலாதரக் கதவான குதத்தை இறுக்கமாக பிடித்தால் உடல் ஒளி விளங்கும். நாடியுள் அபானன் உக்கிரமாய் மேல் எழும்போது மலங்களுடன் கூடிய சிவன் ஒளி உடையதாய் விளங்கும்.

821. மூலாதாரப் பந்தத்தால் ஏற்பட்ட வாயு மேல் எழுவதை எண்ணிக் கசக்குதலால் சுருங்குகின்ற விசுக்தி சக்கரத்தின் மீது வழிபடத் தக்க சந்திர மண்டலங்கள் சுருங்கும் தன்மையை சொல்லவும் வேண்டுமா இல்லை.

822. வான் பூதத்தில் வாயு பூதம் உள்ளது. அக்கினி, நீர், நிலம் ஆகியவையும் அங்கு இருக்கும். வான் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளிமயமாக பொருந்தியிருப்பதைக் கண்டவர் தொலைப் பார்வையை உடையவர் ஆவர்.

823. தொலைப் பார்வை பற்றிச் சொல்வதை அனுபவத்தில் அறியலாம். மேகத்தைப் போன்ற அருள் வழங்கும் ஞானத்தை உள்ளே நிறுத்தி சிவத்திடம் உள்ளத்தை வைத்திருந்தால் புவி முதல் உலகங்கள் பகலில் இருப்பது போன்றே விளங்கும்..

824. முன்னால் இருக்கும் கொப்பூழ் தாமரைக்கு பன்னிரண்டு விரல் கடை கீழேயுள்ள மூலாதாரத்தில் பள்ளி எழும் வேதம் புருடனாகிய கதிரவன் அங்கு விளங்குவதாகச் சொல்லும். குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்கு எழும் நாதமான அறிவில் பொருந்தியுள்ள ஆன்மாவிடம் எழுகின்ற கோவிலில் சிவன் விளங்குவான்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:50

வார சரம்! வார சூலம்!

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####


வாரசரம்!

790. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இடைநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வலநாடியில் இயங்க வேண்டும். வளர்பிறை வியழனில் இடைகலையிலும் தேய்பிறை வியாழனில் வல் நாடியிலும் இயங்க வேண்டும்.

791. திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு பயிற்சியின் காரணமாக வலக்கை மூக்கைவிட்டு இடைகலையில் ஓடினால் சிறந்த உடம்பிற்கு அழிவு இல்லை. இது வள்ளலான சிவன் கூறியது.

792. செவ்வாய், சனி, ஞாயிறு கிழமை மற்றும் தேய்பிறை வியாழக்கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்கம் அறியும் யோகி இறைவன் ஆவான். இந்நாட்களில் மூச்சுமாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓடும்படி செய்பவருக்கு ஆனந்தம் உண்டாகும்.

793. சந்திரகலை, சூரியகலை இரண்டும் இடைகலை, பிங்கலையில் மாறிமாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாய் ஏறி பிங்கலை வழியாய் இறங்கியும் பிங்கலை வழி ஏறி இடைகலை வழி இறங்கியும் மூச்சானது நடு நாடியில் ஊர்ந்து போகும். அதனால் மூச்சில் சிவம் இருப்பதை அறிவீர்.

794. பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மாறி ஓடும்போது ஒரு பக்கம் கனமாகவும் மறுபக்கம் இலேசாகவும் மெலிந்து ஓடும். பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கி ஒரு நாடியிலே மிகுதியாக ஓடினால் தோன்றிய இராசியை விடுத்து மிகுதியாய் ஓடும் நாடியைக் கொண்டு சந்திரன் என்றோ சூரியன் என்றோ அறியவும்.

795. சரியாக சுழுமுனையில் பொருந்தி நிற்காமல் இடம் அல்லது வலம் ஓடும் வாயுவில் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்கும் புருவ நடுவில் இனிமைதரும் குண்டலினியைச் சேர்த்தால் நடு நாடியின் உச்சியில் தீப ஒளி அமையும் என நந்தியெம்பெருமான் அருளினார்.

796. ஆராயத்தக்க பொருளான சிவன் கண்மலர்களுக்கு மேல் உள்ளான். அப்பெருமனை நினைத்து சுவாசக் கலையைச் மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும். அக்கலை வலிமையுடன் மனத்தை அழிக்கின்ற ஆதரமான ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்த காலமாய் அமையும்.

#####

வார சூலம்!

797. வார நாட்களில் சூலம் வரும் திசைப் பற்றி சொன்னால் திங்கட் கிழமையும் சனிக் கிழமையும் கிழக்கே சூலம். செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் வடக்கு சூலம். ஞாயிற்றுக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் மேற்கு சூலம்.

798. வியாழக் கிழமை சூல திசை தெற்கு சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் அமைந்திடல் பயணம் நன்மை. வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் சென்றால் பயணத்தில் மேலும் மேலும் தீமை விளையும்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:48

ஆயுள்பரிட்சை!

Written by

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####


ஆயுள்பரிட்சை!

770. தலையில் வைத்த கையானது பருத்தும் சிறுத்தும் இல்லாமல் அளவாய் தோன்றினால் நனமை. பெருத்து தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு.. அது இரண்டு மடங்கு பருத்து தோன்றினால் ஒரு மாதத்திற்குள் இறப்பு ஏற்படும்.

771 .மனதில் உண்டாகும் சூக்குமம் ஈசனுக்கு நிகரானவை. நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைத்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் மனதில் ஈசனும் ஓசையால் உணர்ந்து உணர்வாய் இருப்பான்.

772. அழிகின்ற நிலையை உடைய நான்கு அங்குல வாயுவைக் கண்டு அதை அழியாமல் பொருந்தச் செய்தால் மேல் உண்ணாக்கு மேல் அமையும் சகசிரதளம் விரிந்து நன்மை தரும். சகசிரதளாத்தில் ஞானம் நிலைபெறும். அந்த ஞானம் உலகத் தலைவராக்கும்.

773. தலைவன் எழும் இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையுடம்ன் பொருந்தும் செயல் அறிபவர் இல்லை. இடக்கண் வலக்கண்ணுடன் பொருந்தினால் சக்தி தோன்றும். இவருக்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன் வயப்பட்டமையால் அவரின் வயது நூறாகும்.

774. ஆறு விரற்கடை அளவு மூச்சு வெளியேறினால் எண்பது ஆண்டுகள் வாழலாம். ஏழு விரல் அளவு மூச்சு வெளிப்பட்டால் அவரின் வாழ்நாள் அறுபத்திரண்டாகும் என்பதை தெளிந்து நின்று அறிவாய்.

775. எட்டு விரல்கடை அளவு மூச்சு நீண்டால் அவரின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள். சிறப்பாக ஒன்பது விரற்கடை அளவு இயங்கினால் காலம் முப்பத்தி மூன்று ஆண்டுகளாகும்.

776. பத்து விரல்கடை அளவு மூச்சு நீடித்தால் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழ்வு. பதினைந்து விரற்கடை அளவு மூச்சு நீண்டால் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்வு.

777. கதிரவன் இல்லாத பகல் முப்பது நாழிகையும் திங்கள் பகுதியில் சேர்ந்து நின்றால் தலையின் ஈசான திசையில் உணர்வை உதிக்கச் செய்து சுழுமுனையில் மூச்சு போதலை செய்யலாம்.. இப்படிச் செய்தால் அகர உகர நாடிகள் செம்மையாகி பத்தான அக்னிக் கலையில் விளங்குவதை பார்க்கவும் முடியும்.

778. இரு நாள்களிலும் சுழுமுனையில் மூச்சு இயக்கங்களை கீழ் நோக்குடைய அபானனும் வியாபாகமான திங்களும் சிவனுக்கு பகையாகாமல் உதவுவர். இப்படி கீழ் நோக்கும் சக்தியை குறைத்து மூன்று நாட்கள் நிலை பெற்றால் வாழ்நாள் நீடிக்கும்.

779. அளக்கும் வகையால் நான்கு நாட்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் சிவம், சக்தி, விந்து, நாதம் காணலாம்.. செம்மையாக ஐந்து நாட்கள் இவ்வழியில் இயங்கினால் சிவம், சக்தி ஆன்மா என்ற மூன்றையும் காணலாம்.

780. பத்து நாட்கள் சுழுமுனையில் அறிவு பொருந்தியவர்களுக்கு தன்னுள் பொருந்திய சிவம் சக்தியைக் காணலாம். இப்படியே காலதன்மையில் பதினைந்து நாட்கள் சுழுமுனையில் பொருந்தி இருந்தவர்க்கு உள்ளத்தில் சிவம் ஒன்றை மட்டும் காணலாம்.

781. இருமுனைகள் சுழுமுனையில் நிலை பெற்றால் வானக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியலாம். இருபத்து ஐந்து நாட்கள் இயங்கினால் தேயு, வாயு, வானம் மூன்றும் விளங்கும். இன்னும் இருபது நாட்கள் இயங்கினால் தேயும் வானமும் சிறப்பாக விளங்கும்.

782. சுழுமுனையில் இருபத்தேழு நாட்கள் இருந்தால் சோதி வடிவான சிவத்தை பிறர்க்கு உணர்த்தலாம். இருபதெட்டு நாட்கள் இருந்தால் பத்தாம் நிலையான மேல் நோக்கிய சகசிரதளத்தில் இருக்கும் ஆன்மாவை மற்றவர்க்கு உணர்த்த முடியும்.

783. பத்து ஐந்து ஆறு எட்டு ஆகிய இருபத்து ஒன்பது நாள்களும் உலகத்தார் அஞ்சும் பகையான இந்நாட்கள் யோகியர்க்கு பத்து நாள்கள் போல் விளங்கும். அன்பை பெருக்கும் வகையில் இறையுடன் கலந்திருக்கும் முப்பது நாட்களும் ஏழு நாட்கள் கழிதல் போல தோன்றும்.

784. இறைவனுடன் இருக்கும் நாட்கள் முப்பதொன்றானால் சிறுமைதரும் நாட்கள் மூன்று நாட்களாய் தோன்றும். முப்பத்திரண்டு நாட்கள் பொருந்தியிருந்தால் உலக நடையினர்க்குரிய இரண்டு நாட்கள் செல்வதுபோல் தோன்றும்.

785. மூன்று மாதங்கள் சிவமும் ஆன்மாவும் ஒன்றியிருந்தால் சகசிரதளாத்தில் சூக்குமவாக்கு விளங்கும்படி நந்தியெம்பெருமான் செய்வான். எந்தவொரு செயலும் இன்றி பரமாகாயத்தில் நிற்பவர் தன்னுடன் பொருந்தி நின்ற சிவமே ஆகுவர்.

786. பரவெளியில் எங்கும் பரவி சூக்கும நிலையில் இருக்கும் தீயான பூதத்தை அறியார். கலந்துள்ள காற்று பூதத்தையும் யாரும் அறியார். எல்லாவற்றையும் ஒடுக்கியுள்ள சிவத்தையும் அறியார். இப்படி மற்றவர் அறிந்து கொள்ளாத அறிவை சிவத்துடன் சேர்ந்து அறிந்தேன்.

787. காற்றுடன் கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் உலகுயிர் எல்லாவற்றின் அறிவாகும். சிவத்தை பிரித்து அதனை வேறாகக் காணாமல் ஒன்றாய் காணின் சிவம் உயிருடன்கூடி நின்று எல்லாப் பொருளையும் விளக்கித் தானும் விளங்கும்.

788. சிவம் அருளிய உலகம் ஞானியர்க்கு மயக்கம் தரும். நாள்தோறும் பொது அறிவைத் தரும். இன்பத்தைச் தரும் சக்சிரதளத்தில் விளங்கும் பராசக்தி இந்த பேற்றை ஞானியர்க்கு சேர்த்து வைப்பதால் ஞானியர் சிவமே ஆவர்.

789. படைப்ப்ச் செயலை எண்ணிய பெருந்தகை நந்தியெம்பெருமானுக்கு பிறப்பு இல்லாமல் கண்பவரின் அழகிய உடல் பழமையான இடம். என்ற உண்மையை அறிந்தவர்க்குப் பற்று விலகும். ஆசைக்கு காரணமான பாசங்களை வருந்துமாறு செய்பவர்க்கு அகன்ற அறிவு உண்டாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17198710
All
17198710
Your IP: 172.69.63.213
2020-06-04 09:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg