குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#####
சற்குரு நெறி!
2049. உத்தம குரு என்பவன் சிவத்தின் திருவடியான் சிவ உணர்வைச் சீடன் சிரசில் அமையுமாறு செய்யும் ஆற்றல் உடையவன் ஆவான். அத்தகையவனே சிவத்தின் திருவடியைப் பதிப்பித்துச் சிவனின் உண்மை வடிவத்தை அறியும்படி செய்ய வல்லவன். சிவத்தின் திருவடி பதிப்பதால் முப்பத்தாறு தத்துவங்களையும் கண்டு விளங்கும் சீவனின் பாசங்களை ஞானம் அளித்துத் தணிக்க வல்லன் அவனே சிறந்த குரு ஆவான்.
2050. சத்குருவானவன் தன்னிடம் உபதேசம்பெற்ற அடியவரின் வினை தீரும்படி திருவருள் செய்தான். வினையால் தீவினை நெருங்காதபடி மாணவனின் தலையில் திருவடி சூட்டியருள் செய்தான். இயமனும் அவனது தூதரும் மாணவ்ன்பால் அனுகாமல் திருவருள் செய்தான். அதனால் பிறவித் துன்பம் நீங்கச் செய்தான்.
2051. கரிய இரும்பு இரசவாத முறையால் பொன்னாகும். அது திரும்ப இரும்பு ஆகாது. அதுபோல் பக்குவம் வந்த போதே குருவினது அருளைப் பெற்றவன் மீளவும் பிறவிக்கு வாரான்.
2052. பாசத்தைக் கெடுத்துச் சிவத்துடன் தனக்குள்ள தொடர்பை ஆராய்ந்து பாசக் கூட்டங்களை முழுவதும் அகற்றும் அனுபவம் உடையவரே குற்றம் இல்லாத சற்குரு ஆவர். சிவ அனுபவம் இல்லாது வாய் வாதம் செய்பவர் சிவஞானமுடைய குரு ஆகார்.
2053. தெய்வப் பொருளான சிவத்துடன் பொருந்தியிருக்கும் மலம் அற்றவனே மலம் நீங்கப் பெற்ற நேயப் பொருளை அளிக்க வல்லவன். அவனே நிலையானவனும் தூய்மை உடையவனும் ஆவான். அவனே ஆராய்பவரின் குணத்தை அறிந்தபோது செருகுற்ற அன்பர்க்கு உப்தேசம் செய்பவன் ஆவான். அவனே சி/றந்த குரு ஆவான்.
2054. தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மருந்து பட்ட இடம் எல்லாம் மேன்மையைத் தருகின்ற பொன்தன்மை ஆவதைப் போன்று குருவின் திருவடிபட்ட உலகத்தவர் யாவரும் ஆணவம் கனமம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நீங்கிச் சிவகதி பெறுவர்.
2055. சிவமே தானாய் எழுந்தருளிய நல்ல குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை உணருமாயின் ஆன்மாவே சிவத்தை பெருமைபெற அறிவதாகும்.. அந்த அறிவே உடலுள் இருக்கும் சிவம் என்று அறிந்து கொள்வாயாக.
2056. பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் அற்ற இறவாத நெறியைக் கரு இடுவதையே செயலாக உடையார். காம விருப்புடையவர் காணாத வழியை சிவபெருமான் பெருந்துறையாகப் பேசும் வழியை அனுபவம் மிக்க குரு உபதேச வழியில் போய்ப் பொருந்தலாம்.
2057. சிவகுரு என்பவன் வேதாகமம் கூறும் பேரின்ப வடிவு உடையவன். அவ்வடிவுடையவனாகிச் சிவயோகத்தை உயிர்க்குச் சேர்ப்பித்து அருள்வான். அவ்வுயிர் திருவடியுணர்வு வரப் பெற்றமையால் வேறோர் எண்ணமும் உண்டாவதில்லை. அதனை உயரச் செய்து பாசத்தை அகற்றி அகத்தே தோன்றும் மேலான சிவத்திடம் வருவித்துச் சேர்ப்பவன் ஆவான்.
2058. சத்தான சிவமும் அசத்தான மாயையும் சத்துடன் கூடிச் சத்தாகவும், அசத்துடன் கூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருளகளின் இயல்பை உணர்த்தி சித்தான ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்துடன் சேர்த்துச் சுத்தமயையும் அசுத்த மாயையும் அகல இன்பவடிவான பிரணவ உபதேசம் அளிக்கின்ற தலைவனே அருட்குரு எனக் கூறப்படுவான்.
2059. உயிர்களிடம் உள்ள பாச உணர்வால் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதயி என்ற ஐந்தும் பொருந்தும். சிவத்தின் திருவடியை வழிபடுவதால் அவா நீங்கும் சிவப் பற்றை ஆதாரமாய்க் கொண்டு ஆன்மாவைச் சுற்றியிருக்கும் பேத ஞானத்தைச் சீவ துரியம் சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்றாலும் கெடுத்துத் தற்பரம் என்ற மேலான சிவத்தை சார்பவார் மேலானவர் ஆவார்,
2060. அனைத்து உயிர்களும் இன்பம் அனுபவித்தற்குரிய வன்மை மிக்க புலன் உணர்வுடன் பொருந்த வரும் காலத்து இறைவன் இறைவியுடன் உள்ளத்தில் தோன்றிடவே சொல்லாமலேயே ஐம்மலக் குறுபுகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டும் வாரா நெறியை அடையச் செய்தல் இறைவனுக்கு விளையாட்டாகும்.
2061. இழிவான பிறப்பிலே செலுத்திப் பின்பு அதனின்று மீட்டு வினைப் போகத்தை அனுபவிக்கச் செய்து பதமுத்தியை அடையும்படிச் செய்து பதவிகளின் இன்பத்தைத் துய்க்கும்படிச் செய்து உயிர்களைப் பிறவிக் கடலில் ஆழ்த்துதலும் பின் சிவஞானத்தில் மீளும்படி செய்தலும் வீட்டை அடையச் செய்து மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியினைத் தரும் சிவனின் செயலாகும்,.
2062. சிவன் ஐந்தொழில்கள் செய்து விளையாடும் இடம் உடலகும். அறிவு அறியாமையை நீக்கித் தெளிவித்த சீவனை அதன் மலத்தினைப் போக்கித் தூய்மை உடையவன் ஆக்கித் தன் வயமாக்கலே ஐந்தொழில் காரியமாகும்.
2063.. இறைத் தன்மையைப் பெறுவதைப் போல் பெரும் பேறு இல்லை என்று அப்பால் ஆகி நின்ற சதாசிவ மூர்த்தியை பாசத்தில் உள்ள போதே பற்றி நில்லுங்கள். பாசத்தில் சிவன் பொருந்தியிருப்பினும் அதிலே ஒட்டாத நின்மலன் ஆவான். அவன் பொருந்தியிருக்க பாசமயமான உலகங்களை ஒளிமயமாகச் செய்தான்.
2064. சிவந்த மாணிக்க மாலையைப் போல் ஒளிவிட்டு எழும் புருவ நடுவான மண்டலத்தில் மாற்று உயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்திப் பேரின்பமான அமுதை விளையச் செய்தது. இதை அறிந்து விந்து வெற்றியால் அமுதத்தைப் பெருகும்படி செய்பவரே பிறவியற்ற நெறியை அறிந்து வாழ்பவர். இதை உணராதா விலங்கைப் போன்ற மற்றவர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர்.
2065. மலத்துடன் கூடிய ஆன்மா உயிர்த்தன்மை நீங்கவும் கூட்டப்பட்ட பாசப் பற்றுகள் அழிந்து ஒழியவும் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும் பிரண்வ உபதேசம் செய்பவனும் சிவன் ஆவான்.
2066. மூலாதாரத்தினின்று தலையை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மல இயல்பைச் சுட்டெரித்து மேலே செலுத்தலாலும் முடிவில்லாத நாத ஒலியால் இருளை நீக்குதலாலும் பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடுமாறு வாடுவதாலும் முத்தியுலகை அடையும்படி உபதேசிக்கும் சிவமே குருவாகும்.
#####
ஓம்நமசிவய!
ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!
#####
அசற்குரு நெறி!
2044. சிவசிந்தனை இல்லாத மூடனும் உண்மைப் பொருளை ஆராயதவனும் சிக்கல் இல்லாமல் வேத நெறியைக் காணாதவனும் அடக்கம் இல்லாதவனும் மற்றவரைப் பழிப்பவனும் ஆன்ம பேதம் உடையவனும் சன்மார்க்கத்தை உபதேசிக்கும் நெறியற்றவர் ஆவர்.
2045. மந்திரம் தந்திரம் யோகம் ஞானமுடன் பாசம் முத்தி என்பவனவற்றைக் கண்டு உணர்ந்திருப்பவரை உள்ளத்தால் நினைத்தும் உண்மை ஞானம் பெற வேண்டுவன செய்யாமல் வயிற்றுப் பாட்டுக்காக் குருடராய் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.
2046. பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன் அறிவற்ற செயலைக் செய்பவன் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகன் பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவன் ஆகிய இத்தன்மையை உடையவன் சிறந்த குரு ஆகமாட்ட்டார். அவன் அசற்குரு ஆவான்.
2047. உலகத்து வாழ்வைப் பற்றிய எண்னங்களை நீக்காமல் மந்திரத்தை உபதேசம் செய்தால் சிவசிந்தனை சிறந்து வெளிப்படாது சுருங்கி விடும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரணானதால் தீமை விளையும். இத்தகைய குருமார்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் மன்னனுக்கும் தீமை யுண்டாகும் என்று முன்பே சிவபெருமான் மொழிந்துள்ளார்’
2048. கண்பார்வை அற்றவர்க்கு கோலைத் தந்து வழி காட்டிச் செல்லும் கண்பார்வை அற்றவர் வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் விழுவர். அதன்பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவர். அதைப்போல் ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவுடன்கூடி முன்பின் இல்லாமல் ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவர்.
#####
ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#####
ஐந்து இந்திரியம் அடங்கும் முறைமை!
2031. சந்திரமண்டலமான குளம் ஒரு முழம் அகலமும் அரை முழ ஆழமும் உடையது. வட்ட வடிவமாய் அமைந்த அந்தக் குளத்தில் விஷய வாசனைகளாக மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானை வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அந்த வகையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிமேல் பிறவித் துன்பத்தை நீங்கினோம்.
2032. அறிவு நீங்கப் பெற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழும் பொறிகளை அடக்க வல்லவனே தேவன் ஆவான். உடம்பில் அருந்துதல் பொருந்துதல் என்னும் இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் வரையும் உடம்பில் மூச்சின் இயக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
2033. ஐந்து பொறிகளையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்பவர்கள் அறிவற்றவர்கள். அங்ஙனம் ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை. ஐந்தையும் அடக்கிவிட்டால் அரிவற்ற சடப்பொருளாகும் என எண்ணி ஐந்தையும் அடக்காமல் இயங்கச் செய்யும் உபாயத்தை அறிந்து கொண்டேன்.
2034. ஐம்பொறிகளாகிய யானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றை அடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன். ஆனால் அவை அந்தக் கோட்டையினின்று தப்பி ஓடி வெளியில் கேடு தரும் புலன்களில் மண்டி உடல் என்னும் கரும்பை அழித்துக் கொண்டு அலைகின்றன.
2035 .பிரணவமான ஐந்தில் ஒடுங்கினால் நாதந்தமான அகன்ற இடம் அமையும். இதுவே மேலான தவம் ஆகும். இதுவே சிவபதமும் ஆகும். இதில் ஒடுங்கி நின்றவரே அருள் உடையவர் ஆவார்.
2036. நிறையப் பேசுவதால் என்ன பயன். கானல் நீரைப் போன்று உலக்த்தை நினைத்தலால் என்ன பயன். பரவலாக விரிந்திருக்கும் பொருள்களுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கின்றது. உலகத்துப் பொருளை மிகுதியாய் நினைத்தால் உலகத்தைப் பற்றிய சிந்தனை பெருகி விடும். அவற்றை நினையாமல் சிவத்தை நினையில் உல்கப் பொருள் அங்கு சுருங்கி விடும். இதை ஆராய்ந்து தெரிபவர்க்கு இவ்வளவு தான் உண்மைப் பொருள் ஆகும்.
2037. பாசவழி நீங்கிப் பெருமை பெற்ற சீவன் பொறிவழிச் சென்று கெடுவதை அறிந்து இனிய உயிர்களுக்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரொடு பொருந்தியிருக்கும் இறைவனிடம் பாசத்தினின்று விடுபட்ட உள்ளத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுங்கி நிற்க ஐம்பொறியாகிய தொளை வழிச் சென்றது உச்சித் துளையின் இன்பத்தைப் பெற்று ஓயந்திருக்கும்.
2038. ஐம்பூதங்களின் தூலத்தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளியாய்ச் சார்ந்து விளங்கும் மேல் முகமான சகசிரதளமான தறியில் கட்டப்பெறும் பேற்றை அடைவாயாக. ஆனந்த சத்தி உன்னிடம் பதித்தால் இதுவே முடிவானது என்று தலையின்மேல் குடிக் கொள்வாயாக. இதுதான் பழமையான நெறியாகும்.
2039. எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயக்கும் சிவத்தை நாள்தோறும் தியானைப்பதால் எல்லாப் பொருளிடத்தும் போய்ப் பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக அடக்கித் தலையில் உள்ள இடப்பாகமான வடக்கும் வலப்பாகமான தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாகப் பொருந்தும்.
2040. முன் சொன்ன சாதனையில் சில நாழிகைகள் சில நாள்கள் பின்பு பல நாள்கள் போயின். அதனால் உல்கப் பொருள் எல்லாம் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தைப் போன்று அழியும் தன்மையவாய்த் தோன்றின. இவ்வகையே புலன்களின் வழிச் செல்லும் விருப்பத்தை விரைவாய் விட்டு விடுங்கள் பின் மலை போன்ற துன்பம் வந்தாலும் தாங்க இயலும்.
2041. சகசிர தளத்தில் விளங்குபவன் சிவன். அப்பெருமானின் திருமேனியை மனத்தில் பொருந்த்தி ஐம்புலன்கள் செல்வதினின்றும் அறிவால் மீட்டு வணங்குக. நான்கு பக்கங்களுக்குப் பின்பு எல்லாவற்றிற்கும் தலைவனை அமுதம்போல் சுரக்கும் உள்ளத்தில் ஒடுங்கி இன்பம் அடையலாம்.
2042. உடம்புள் பொருந்திய உள்ளத்தால் உடலை அரித்துத் தின்கின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் அறியவில்லை. நகைக்கும்படி உலகச் செய்திகள் சிலவற்றை பேசிக் கொண்டிருந்தால் உய்ர்ந்து விளங்கும் அண்டகோசம் கடுமையான இருளால் சூழப்பட்டு எல்லையாகவேதான் விளங்கும்.
2043. ஐம்பொறிகள் அடங்கி விட்டால் விட்டு விட வேண்டியது எதுவும் இல்லை. உள்ளத்தில் பொருந்தியிருக்கும் இறைவனை இயல்பான முறையில் வணங்குங்கள். இல்லையானால் ஐம்பொறி விருப்பத்தில் உண்டான பொய்யையே பொருந்தும் புலன்கள் ஐந்து பக்கங்களிலும் வெளியில் கவர இருக்கின்றன.
#####
ஓம்நமசிவய!
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
#####
ஐந்திரியம் அடக்கும் அருமை!
2023. மிகுந்த மதம் பொருந்திய ஐந்து பொறிகளான யானைகள் உள்ளன. அவை உடலில் களிப்பைத் தரும் சந்திரமண்டலமான சுட்டுத் தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்த பின்னர் யோக நெறியால் திருந்துவது என்பதை நான் அறியவில்லை.
2024. நல்ல கருத்துடைய நூல்களைப் பலகாலம் கற்றறிந்து பிராணனின் இயக்கத்தை ஆன்மா என்ற பாகன் மாற்றித் திருத்தினாலும் வேகமாகப் பாய்கின்ற பொறிகளாகிய குதிரைகள் திகைத்து நிற்குமே தவிர செலுத்தியவுடன் பாய்ந்து செல்ல பிடரியில் அமர்ந்து நன்கு பாகன் தூண்டினாலும் அக்குதிரைகள் முன்பு போன வழியில் செல்லாது.
2025. ஐந்து பூதங்களாகிய இடங்கள் ஐந்து ஞானேந்திரியங்களான பறவைகள் ஐந்து. அவை சென்று பற்றும் தன் மாத்திரைகாகிய புலன்கள் ஐந்து கன்மேந்திரியங்கள் ஐந்து அவற்றின் செயல்களும் ஐந்து மாயையான குலம் ஒன்று அறிவு என்னும் கோலைக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் ஒருவ்ன் உண்டு. அவன் வருந்திப்போகும் வழி உடம்புள் ஒன்பதாகும்.
2026. உடலான காட்டில் பொறிகளான சிங்கங்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தும் புறம் சென்று புறப் பொருளை பற்றி அகம் வந்து சேரும். விஷயங்களைப் பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில் ஈடுபடும் கருவிகளையும் செல்ல ஒட்டாது அடக்கி நிறுத்திவிட்டால் தவறாமல் இறைவனை அடையவும் கூடும்.
2027. ஐந்து பொறிகளாகிய அமைச்சரும் அவர்களுக்குத் தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆகிய எவலாளரும் இருக்கின்றனர்.. இந்த அமைச்சர் ஐவரும் அவர் வழி வந்த தத்துவக் கூட்டங்கள் ஆகிய பிள்ளைகளும் நம்மைக் ஆளக் கருதுவார்கள். அந்த ஐவரும் ஐவகையான உணர்வுடன் செயல்பட்டால் நம்மால் அந்த ஐவருக்கும் காணிக்கை தந்து சமாளிக்க முடியாது.
2028. நாள்தோறும் பேரொளியாய் ஒளிரும் சிவத்தைத் துதிக்கும் வல்லமை உடையவன் அல்லேன். திருவருள் அம்மையும் அங்கிருப்பதைச் சொல்ல வல்லேன் அல்லேன். ஐம்பொறிகளையும் அவற்ரின் வயப்பட்டு அலையும் உள்ளத்தையும் வெல்லும் ஆற்றல் உடையேன் அல்லேன். கொல்வதற்குக் கொண்டு போகும் குதிரைமேல் எறிய்வனைப் போல் ஆனேன்.
2029. இந்த உடல் அளவிடமுடியாத தொளைகளை உடையதாகும். மனம் எண்ணில்லாத தொளைகளையுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடினால் குற்றம் உண்டாகும். உயிரானது மனவழிச் சென்று கணக்கற்ற தொளைகளையுடைய உடல் இன்பத்தை நாடாமல் இருக்குமானால் சிந்தனையற்ற் உள்ளத்தில் ஓர் இன்பம் ஏற்படும்.
2030. கடலால் சூழப்பட்ட உலகத்தில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்வானது அமையும். சிவத்தை துதித்துப் பெருமையுடைய வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வான் உலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மக்கள் வாழ்க்கை உள்ளது. எண் பெருஞ் சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவ்ன்மையகும்
#####
ஓம்நமசிவய!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
#####
போதன்!
2017. சீவன் என்றும் சிவன் என்றும் இரு பொருள் இல்லை. சீவன் சீவத்தனமையில் உள்ளவரையில் சிவனை அறிய இயலாது. சீவன் சீவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பின்பு சீவன் என்ற பேரைப் பெறாமல் சிவன் என்ற பெயரைப் பெறும்.
2018. அறிவு ஒளியாய் விளங்கும் கூத்தப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழும் உயிர்களுக்கு எல்லாம் பல த்லைகளையுடைய பாம்பின் படத்தலையில் உள்ள மணிகளைப் போன்று உயிர்க் கூட்டத்துக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆவர்.
2019. சிவத்தைக் கொண்டு தன் அறியாமை நீங்கியவனே ஐம்பொறிகளால் சுட்டியறியும் அறிவைப் விடுத்து எங்கெங்கும் உள்ளனவற்றை அங்கங்கு இருந்து காணும் ஆற்றலைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவு வடிவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாக நின்று அறிவன். அறிவில் பொருந்தி நின்ற சிவனும் ஆவான்.
2020. முப்பத்தாறு தத்துவங்களை அறியாதிருந்த எனக்கு அவற்றின் இய்ல்பை என் ஆசான் எனக்கு உணர்த்தினான். இறைவன் அருளால் அதனை அறிந்த பின்பு அவன் அத்தத்துவங்களைக் கடந்த பொருளாய்க் காட்சி தந்தான்.
2021. சிவத்துடன் பிரிவின்றி நிற்கும் திருவருளில் நின்று அறிந்து தெளிய மாட்டார். தீமையைச் செய்யும் ஐந்து மலங்களும் எவ்வறு நம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறிய மாட்டார். உடலை வருந்தித் தவங்கள் செய்து தம் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை அறிய மாட்டார். என்னே அவர் அறியாமை.
2022. நாளும் வினை செய்பவர் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட் செயலை எண்ண மாட்டார். நாள்தோறும் தம் வினைகளுக்கு ஏற்றப் பயன்களை நளினமாய் இறைவன் ஊட்டுவதையும் அறிய மாட்டார். இறைவன் நல்லவர்க்கே நாள்தோறும் வழங்குகின்றான் இதை வினை செய்பவர் எண்ணிப் பார்க்க மாட்டார்.
#####
ஓம்நமசிவய!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
#####
சிவன்!
2011. உடம்பில் பொருந்திய சிவனின் வடிவை அளவிட்டுக் கூரினால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதனுள் பொருந்திய ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் உயிரின் வடிவம் பசுமயிரை ஓர் இலட்சம் கூறிட்டதற்குச் சமம்.
2012 எம் பெருமான் மற்றத் தேவர்களைவிடப் பெருமையுடையவன். ஆயி9னும் தன் எளிவந்த கருணையால் உடலுள் உயிராய் கலந்து விளங்கும் தன்மை கொண்டவன். தேவர்களால் அளவிட்டு அறிய முடியாத தேவ தேவன். ஆயினும் ஆன்மா தான் செய்யும் தவத்தின் அளவாகத் தானே அறியும்.
2013. யோகத்தை மேற்கொண்டு தெளிந்த குரு உபதேசம் செய்ய யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நல்ல பண்புகள் இல்லாதவராயினும் பழைய வாசனையால பயின்ற சீவன் பின்பு அனுபவத்தை தன்னுள் கொண்டு சிவ வடிவம் பெறுவர்.
2014. உயிர் மாயையின் காரணமான துன்பங்களில் தோய்ந்து தானும் அதன் வயமாகும். ஞாணமே வடிவாய் உள்ள குருவின் அருளால் சேதனத்தில் தூண்ட மாயா உபாத ஒன்றிலும் பொருந்தாது பயிற்சி வசத்தால் துரிய நிலையில் புகுந்து ஞானமே வடிவாக விளங்கும்.
#####
பசு!
2015. வேதம் ஆகமம் என்பனவற்றை நிரம்பக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவம் இன்றிப் புலம்பித் திரிந்தாலும் அரசு செல்வாக்கைப் பெற்ற உயிர்கள் தமக்குரிய விருதுகள் கட்டிக் கொண்ட தெரிந்தவர் போன்று திரிந்தாலும் முதிர்ந்த அனுபவம் உடையவரின் சிறு ஞானமே உலகத்துக்குப் பயன் அளிக்கும். மற்றையோரின் வாய் வேதாந்தமானது வறட்டுப் பசுவைப் போல உலகுக்குப் பயன்படாது.
2016. சுவாதிட்டானம் என்ற கொல்லையின் மனத்தை வைத்துக் காமச் செயலில் ஈடுபடும் உயிர்கள் என்ன செய்யக்கூடும். காம எல்லையைக் கடக்கச் செய்து அகண்டமான சிவபெருமானின் திருவடியில் சேர்த்துத் திருவருளைத் துய்க்கும் ஆற்றலை உண்டாக்கிச் சிவஞானியர் கூட்டத்தில் சேர்ந்து மதித்தபின் அன்றி அந்தப் பசுக்கள் கொல்லையில் வைத்த உள்ளத்திஅ மாற்றிக் கொள்ள மாட்டார்.
#####
ஓம்நமசிவய!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
#####
பசுவிலக்கணம்- பிராணன்.!
2005. துதித்த அளவிலே உணரப்படும் ஒருவனைப் பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் பரம் பொருளை என் மனத்தில் தூண்டா விளக்காய் உள்ளவனை அம்ச வடிவினன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
2006. சீவனின் வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. அவ்விரண்டுள் தன்னிலையில் நிற்கும் சிவமான அன்னம் தனக்கு வேறானது என்று எண்னினால் வேறுபட்ட அறியாமையுடன் கூடிய சீவனான அன்னத்துக்கு எப்பொதும் சிவப்பேறு கிட்டாதாகும்.
#####
புருடன்!
2007. வைகரி மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் வாக்குகளும் மாயை முதலிய மலங்களும் பொய்யான இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் புருடன் முதலான வித்தியா தத்துவமும் பிறப்பை ஒழிக்கும் ஞானமும் என்னும் இவற்றைச் சான்றாய் உள்ள ஈசன் உயிர்கள் உய்வு பெறும் பொருட்டு முன்பே அமைத்து வைத்தவையாகும்.
2008. அணுவுக்கும் அனுவாய் உள்ளதை ஆயிரம் கூறிட்டு அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை நெருங்க வல்லர்க்கும் அணுவுக்கு அணுவானவனும் பழமை உடையவனும் மிகச் சூட்சமம் ஆனவனும் ஆகிய பரம் பொருளை அடையவும் கூடும்.
2009. எங்கும் பரவிப் படர்ந்து வளரும் தன்மையைத் தன்னிடம் கொண்ட ஆலம் விதையைப் போன்ற ஆன்மாவைத் திருவருள் கொண்டு தன்னெறிப்படுத்த அறியாமையை உண்டாக்கித் துன்பத்தைப் பெருக்கி நிற்கும் இருளை முற்றும் கெடுத்துச் சிவன் அமைத்து தந்த சிவகதியை விரும்பவும் கூடும்.
2010. ஆன்மாவுள் சிவனும் சிவத்துள் ஆன்மாவும் பிரிவு இல்லாது கலந்துள்ளதை உணரார். ஒப்பில்லாத இறைவன் எங்கும் நிறைந்து இடையில் பொருந்தி இயங்குபவை நிற்பவை ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்திருக்கின்றனன்.
####
ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#####
ஞானாதித்தன்!
1993. விந்து ஒன்றே தூலமான அபரம் என்றும் நுண்மையான பரம் என்றும் இரண்டாக விரியும். விரிந்து அந்தத் தூல விந்துவே மேல் நோக்கும் போது பரநாதமாய் மேலான நிவிருத்தி முதலிய பஞ்ச கலைகள் வந்து ஞானக் கதிரவனின் தோற்றம் என்று சொல்லும்படி மனத்தில் மேல் எழுந்து தோன்றும்.
1994. ம்ன மண்டலத்தில் கதிரவன் தோற்றம் போல் எழும் ஒலியே தெளிந்த பரநாதத்தின் செயல். ஆதலால் வள்ளலான சிவபெருமான் அருளால் வைகரி முதலிய வாக்குகள் பரவிந்துவுடன் கூடி ஐந்து கலைகளிலிருந்து தோன்றும்.
1995. சிவம் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலும் பத்துத் திக்குகளிலும் வெளிப்படுவான். பழங்காலத்தில் வந்தவர் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நால்வருக்கும் நடுநாயகமாய் உள்ளவன் எனவும் கூறினர். ஆனால் தேவர் இவனையே தங்கள் தலைவன் என உரைப்பர்.
1996. உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனும் எந்தையுமான சிவன் கற்பனைப் பொருள் அல்லன். உண்மையில் உல்லவனே. மை போன்ற இருளை நீக்கும் திங்கள் அக்கினி கதிரவன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாய்ச் செயல் பட்டபோது ஏற்பட்ட இருளை நீக்கும் ஞானச் செம்மலான சதாசிவன் என் வீணத் தண்டின் இருளைப் போக்கக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.
1997. நிகர் அற்ற சிவ ஒளியனது நிறைந்த அண்ட கோச இருளைச் நீங்கச் செய்து பெறுவதற்கு அரிய கனியினின்றும் ஊறும் தேன் போல் இனிமையான அமுதம் சுரக்கச் செய்யும் கனிந்த சுடர் போன்று விளங்கிய சிவபெருமான் நிறைந்த சுடர் போல் என் தலையின் மீது விளங்கும் தன்மையும் உடையவன் ஆவான்.
1998. அனுபவ ஞான் வடிவாக ஆன்மாவிடம் நிர்மபியிருக்கும் பேரொளியான பிழம்பு தடை இல்லாமல் எல்லா உலகங்களிலும் பரவிக் கலந்து நிற்கும். கதிரவன் ஒளி படாத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே தன்மையானது என்பதை எவர் அறிவார்.
1999. சுவாதிட்டான சக்கரத்தினின்று மலர்ந்து எழுகின்ற கதிரவன் மன மண்டலத்துள் ஞானக் கதிரவனாய் ஒளியாய் விளங்குபவன். இருந்த இடத்திலினின்று இதனை அறியவல்ல ஞானியர்க்கு இந்த நிலையிலிருந்தே எங்கும் போய் உணர்ந்துவரும் ஆற்றல் வாய்க்கும்.
2000. உந்தி, கண், மூக்கு, புருவமத்தி, உச்சித்துளை ஆகிய இந்த ஐந்து இடங்களிலும் ஒளிரும் பேரொளியைத் தேவ இனத்தவரான உருத்திரன், திருமால், நான்முகன் ஆகிய மூவரும் உணர்ந்திருந்தனர்.
#####
சிவாதித்தன்!
2001. சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் உண்டாகும் அஞ்ஞானமும் சிவக்கதிரவன் ஒளி வீசும்போது அதனுள் ஒடுங்கும். பெரிய கதிரவன் எழுச்சிக்கு முன்பு உள்ள அருணோதயத்தால் நெருக்கமான இருள் விலகுவதைப் போல் தொலைந்து விடும்.
2002. நீர் உள்ள குடங்கள் தோறும் கதிரவன் தோன்றுவான். அவன் அதனுள் அடங்கும்படி மூடி வைத்தாலும் அக்குடங்களில் அடங்கி விடமாட்டான். அது போன்று நீல கண்டப் பெருமான் விருப்புட்ன் எழுந்தருளும் உயிரில் அடங்கி யிருக்கும் தன்மையும் அத்தன்மை போன்றதே ஆகும்.
2003. சிவமான தானே பரந்த கதிர்களை உடைய கதிரவன், திங்கள், தீ மூன்றும் பொருந்திய ஓர் ஒளியாக விளங்கும் தானே நான்முகன், திருமால் என நின்று தான் முதல்வன் என்ற தன்மையை மெய்பிக்கும். தானே அறிவற்ற உடம்பிலும் அறிவுடைய் உட்மபிலும் உயிரிலும் பிரிவின்றிக் கலந்திருக்கின்றான். அவனே வானமாகவும் அதன் ஒளியாகவும் இருப்பதுடன் இருளாகவும் இருக்கின்றான்.
2004. கடவுள் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவத் தீயும் கதிரவனும் சந்திரனும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் வானமும் என்னும் எட்டும் சிவபெருமான் உறையும் திருமேனிகள் ஆகும். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல் உயிர்களும் சத்தியோசாதர் முதலிய ஐவர்க்கும் பொருந்திய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடம் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
பிண்டாதித்தன்!
1985. நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல் என்னும் செயலைச் செய்யும் போதும் இளைய யானை வடிவுடைய பிரணவக் கடவுள் என் மனத்தில் இருந்தனன். அதனால் மலங்களை நெருக்கி வீணாத் தண்டில் உணர்வு கீழ் நோக்காமல் மேல் நோக்கி எழ வெல்லுதலைச் செய்கின்ற பரந்த கதிர்களையுடைய கதிரவன் வெளிப்படுவான்.
1986. கதிரவன் மேல் எழுந்து அடங்கும் இடமான ஈசான திக்கைக் கண்டு அங்கே இருந்து மேலே போய் மேல் முகமான சகசிரதளத்தை அடைந்து அங்கே உள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மை உணர்ந்தவர். ஆவார். இந்த உண்மையை உணராது பிதற்றும் உலகத்தவர் அனைவரும் கீழ் உள்ள கதிரவனை மேல் எழச் செய்ய வகை அறியாமல் அழிவர்.
1987. கதிரவன் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து சொருகிக் கிடக்கும் ஈசான திக்கை யாரும் அறிய மாட்டார். அங்ஙனம் அறிகின்ற அறிவுடையவர்க்கு என் உள்ளதில் உள்ள அன்பு அவரிடம் போய் உருகி நிற்கும்.
#####
மனவாதித்தன்!
1988. எரிக்கும் கதிர்களையுடைய கதிரவனும் ஒளியுடன் பனியையும் பெய்யும் ஒளிவிடும் கதிர்களையுடைய திங்களும் மாறி மாறி நின்று விளங்க அந்த இரு கதிர்களும் விரிந்து விளங்குவதில் இயங்கிக் கொண்டிருக்கும் என் உயிரும் கூடி ஒரு கதிராகப் பூரணமானால் அதற்கு முழுமதி என்று பெயர்.
1989. கதிரவனிடம் சந்திரகலை வந்து பொருந்தும் வகையிலே பொருந்தி பின்பு சந்திரகலையில் சூரிய கலை வந்து பொருந்துவது பூசனை முறையாகும். அந்த இருகலைகளும் ஒத்து இயக்கம் இல்லாமல் மேல் முகமான சசிகரதளத்தில் பொருந்தி நிற்க சிந்தை தெளிந்தவர் சிவமே ஆயினர்.
1990. திங்களும் கதிரவனும் மூலக்கனலும் பொருந்தி மதிமண்டலம் உண்டாகும், அவ்வாறான மதி மண்டல்த்தில் தாரகை என்ற ஆன்ம ஒளியிலும் கலந்து நான்கு கலைகள் உள்ளன என்பர். கதிரவன் குண்டலினித்தீ சந்திரன் என்னும் இம்மூன்றும் பொருந்த அதுவே பௌர்ண்மியாகும் என்று அறிவீர்.
1991. தீ மண்டலத்தையும் கதிரவ மண்டலத்தையும் கடந்து விளங்கிய சந்திரமண்டல ஒளி ஓர் அண்டம் என்கின்ற தீ மண்டலத்தில் காம உணர்வோடு வழ்கின்ற தனமையுடைய மக்களுக்குப் புலப்படாததாயும் தலைக்குமேல் விளங்கும் பிரமாண்டத்தில் உய்ர்ந்து போகும் ஒளியாய் நின்றது யார். அந்த நிலையை அடைந்த அவரே அந்த ஒளியை அறியக் கூடியவர் ஆவார்.
1992. மன மண்டலத்தில் உள்ள கதிரவன் பிருதிவி முதலிய ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடலால் உலகத்தை வலம் வரும். இத்தகைய ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிவார் இலர். இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தியுள்ளதாயினும் சிவபெருமானின் அருள் இல்லாதவர் இன்பம் பெறாதவராய் இருள் சூழ்ந்த அண்டாகாயத்தை அடைந்திருப்பர்.
#####
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#####
ஆதித்த நிலை –அண்டாதித்தன்!
1975. கதிரவன் முதலான ஒளி பொருந்திய தேவர்கள் வெண்ணிற மேகம் சூழ்ந்த மேருமலையை வலமாக வருவதற்குக் காரணம் ஒளியுருவான எம் ஈசனின் இருதிருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதே ஆகும். மலை வலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவம் ஆகும்.
1976. கதிரவனே திருமால் ஆவான். எல்லா உயிர்களுக்கும் ஆதார்மாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவான். பகமை நீங்கி ஏழ் உலகங்களும் தழைக்கச் செய்யும் கதிரவனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருள ஆவான்.
1977. கதிரவனிடம் அன்பு கொண்டு அவனது ஆயிரம் பெயர்களையும் சொல்லி வணங்கின் சிவனின் அண்டகோசத்தில் விளங்கும் பேரொளியாய் நிற்பன். கதிரவனைக் குறித்து அந்தணர் துதிப்பதும் தேவர் தோத்திரம் கூறுவதும் சிவபெருமானின் அன்பைப் பெற்று ஒளிபெறுவதற்கே ஆகும்.
1978. ஆன்மாவின் அண்ட கோசத்தில் விளங்கும் கதிரவனே தத்துவத் தோற்றத்துக்குக் காரணம் ஆனவன். அந்தக் கதிரவனே ஆன்மாவின் சத்தியாகும் அதுவே சிவம் ஆகும் அதுவே குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகும்.
1979. மூலாதரச் சக்கரம் சுவாதிட்டானச் சக்கரம் ஆகியவற்றுடன் ஒற்றுமைப்பட்ட தூய்மையான அகரக்கலை விளங்கும் மணிபூரகச் சக்கரத்துக்கு மேல் பதினாறு இதழ்களையுடைய துன்பம் அளிக்கும் விசுத்திச் சக்கரத்தின் சந்தேகம் இல்லாது விளங்குபவன் கதிரவன்.
1980. கதிரவன் தன்னுள் விளங்கும் முக்கோண சக்கரமான மூலாதரத்தில் நின்று நல்ல கதிரவனாய் ஒளிசெய்து கொண்டிருப்பான். அவன் நான்கு ஆதாரங்களையும் கடந்து துன்பத்தை அளிக்கும் கிணற்றைப் போன்ற விசுத்திச் சக்கரத்தை எட்டினால் மூலாதாரத்தில் ஒளி செய்யும் பேரொளி மேல் எழப் பதினாறு கலைகளையுடைய திங்கள் மண்டலம் அமையும்.
1981. கதிரவனுடன் உலக அறிவு கெட்டது. உலக அறிவைப் பற்றிய சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்னும் வாக்குகள் பிதற்றி ஓய்ந்தன். இப்படி அண்ட கோசத்தில் சத்தி நிலைபெற்று உணர்த்தும் வேதம் கூறும் அனுபவப் பொருளான திங்கள் விளங்கிக் கொள்வீர்.
1982. சுவாதிட்டானதினின்று மேலே வருவது கதிரவன் வருகின்ற வழியாகும். அது யோகியர் அல்லாத மற்றவரால் அறிய இயலாத அரிய பொருளாகும். அங்ஙனம் எவராலும் காணப்படாத கதிரவன் நீருக்குரிய மணிப்பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகத்துக்கும் இடையில் உதிப்பவன் ஆவான்.
1983. கதிரவன் மண்ணீரலீருந்து சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் போல் அவ்விடத்தினின்று வானக் கூறான ஆஞ்ஞையையும் பிளந்து உடலுக்கு வெளியே பேரொளியாய் விளங்கி நிற்பான். ஆனந்தத்தால் துதிக்கும் உரிமைக்குரியவனாய் நின்றான்.
1984. நிலத்தை ப்பிளந்து கொண்டு கதிரவன் வரும் வழியை மிகவும் கீழ்பட்ட நூலைக் கற்ற உலகியல் அறிவுடையவர் யரும் அறியார். ஆனால் மேரு மலையைக் கதிரவன் சுற்றி வருவதாய்க் கூறுவர். ஆனால் மேரு மலையைத் தலையே என்று அறிந்தவர் உடலில் உள்ள கதிரவன் சுற்றி வரும் முறையை அறிவர்.
#####
More...
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
விந்து சயம்-போக சரவோட்டம்!
1937. நம்மை விருப்புடன் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று போய் ஆராய்கின்ற மனமுருக மூலக்கனலை எழுப்பிக் கண்ணின் வழியாய்ப் போய்ப் பார்க்கும் விருப்பம் பாழாக மூலமான புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கும் யோகியே சிவம் ஆகும்.
1938. காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவயோகம் பொருந்தாது. அந்தக் காமம் முதலிய வற்றுள் பொருந்துவோனும் மனவனமை இழந்து அஞ்சுவான். உடம்பும் தன் இயல்பு கெடும். உலகில் உள்ள் தாதுக்கள் உயிரை பாதுகாக்காமல் அழிந்து விடும்.
1939. பெண்களின் வாய்ப்பட்டுச் சென்ற இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வரும் பூர்வம் அபரம் என்ற இரண்டு பக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பம் ஆகும். வளர்பிறையில் பின் ஆறு நாட்களும் சிறுமை இல்லாத தேய்பிறையில் முன் ஆறு நாள்களும் புனர்வதற்கு ஆகும்.
1940. யோக நெறியில் நிற்பவர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறை பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆகப் பதினொரு நாட்களையும் விலக்கி மற்ற நாட்களில் கூடலாம். இவரின் வேறான சரியை கிரியை நெறிகளில் நிற்பவர் மாதர் பூப்பு அடைந்த பின்பு கருப்பாயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டே வரும். இடைப்பட்ட இருபத்தொரு நாள்களில் பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப்பின் உள்ள காலத்தில் கூடலாம்.
1941. பொருந்தும் அளவில் பொழுது விடிவதற்கு முன் உள்ள நான்கு முகூர்த்தமே விந்துவை பதிப்பதற்குரிய காலம். சந்திரகலை சூரியகலையில் அடங்கியபோது கலந்து கூடிக் காமநூலில் சொல்லியபடி புனர்க. விந்துவைப் பதிப்பதாயின் வலமாகவும் இடமாகவும் இல்லாமல் சுழுமுனையில் பொருந்தி விடுக.
1942. மிக்க காதலையுடைய பெண்களிடம் ஆசையை விட்டு மூலவாயுவையும் அந்தக் கரணங்களையும் அகமுமாக்கி எழுச்சி கொண்ட இந்திரியங்களைப் போன்று சலனம் இன்றி இருப்பானும் பொறி புலன் ஒருமைப் பட்டு நிற்க விந்துவினை விடுக.
1943. மங்கையர் குணமும் நலமும் நல்ல இளமையும் பழைய வடிவமும் பகர்கின்ற பவழம் போன்ற வாயும் மிண்டும் தனமும் புனரும்போது மனம் முதலிய அந்தக் கரணம் இவற்றுடன் பதியாது அகமார்க்கமாகச் செல்லக் கண்டு விந்துவை விடுவாயாக.
1944. விந்துமை மங்கையின் கருப்பையில் விட்ட பின்பு கர்ப்ப உற்பத்தி விதியின்படி தீண்டிய காலம் முதலியவற்றை நன்கு விளக்கமாக ஆராய்ந்து உடலுடன் பொருந்திய சிசுவின் வாழ் நாள் சாகும் நாளைப் பற்றியும் குணம் இழிவைப் பற்றியும் மேன்மையான நெறியைப் பற்றியும் இது இது என்று நினைத்துப் பார்த்து அறிவாயாக.
1945. உலகத் தொடர்பின்றி கருப்பையில் வளர்ந்து உறுப் பெற்றுப் பெண்ணினின்று நீங்கியே உலகில் சேர்க்கப் பெற்று அக்குழந்தை இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கி மூப்படைந்து பின்நாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுவதற்கு ஆகும்.
1946. விதை விதைப்பவர்க்கே அல்லாமல் விதைக்காதவர்களுக்குப் பயன் ஏதும் ஏற்படுவதில்லை. அங்ஙனமே வித்தின் பயனை அறிந்து ஒளி செய்பவர்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாய் மாறுகின்றது என்று சலனம் இல்லாது உணர்பவர்க்குத் தயிரில் இருக்கும் வெண்ணெய் போல் உயிரில் உள்ள சிவக்கனியாகும்.
1947 .தலையெழுத்து எனப்படும் பிரமன் எழுத்து ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிருடன் கருத்தில் அமைத்துத் தானும் இருக்கின்றான். அவ்வாறு கருத்தில் உள்ளதே விந்தாய்ப் புறத்தில் உள்ளதைக் காரண காரியமாய்க் கருத்தில் எண்ணுவது கற்பனையாகும்.
1948. நீங்காத மனத்தின் ஒளி மண்டலம் உடலுடனே கூடி நிற்க நிற்கின்ற அழியா உயிரும் அவையற்ற ஆற்றலும் குறைவில்லாத அறிவின் அகலமும் தவம் செபம் பிரணவ சித்தியும் அழியாத எட்டுவகைச் சித்திகளும் பருவிந்து இவற்றினால் அடையத்தக்கனவாம்.
1949. பருவிந்துவற்றிப் போகும்படி மூலாதாரத்தில் உள்ள குண்டலியான தீயைப் பெருக்கி விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேல் ஏற்றுவதால் அமையும் விந்து ஞானத் தீயில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திரமண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உன்பவரே சிவயோகி ஆவர்.
1950. யோகியும் ஞானியும் உத்தமனான சித்தனும் போகியும் ஞானத்தில் உயர்ந்த பதவி வகிப்பவனும் காமம் வந்தபோதும் கூறப்பட்ட முறை அறிந்து அமுதம் உண்பவனும் என்னும் இவர் விந்துவை வென்ற வீரர் ஆவார்.
1951. சிவயோகியர்க்குச் சிவத்தின் உடலே தம் உடலாகும் சிவாக்கினியான ஒளியும் மண்ணுலகத்தின் அழிவைச் செய்யும் சத்தியான வீரியமும் மூலக் கனலுடன் சேர்ந்து உண்டால் அதுவே அமுதம் ஆகி அறிவாகும்.
1952. மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாமலே கெடுகின்றனர். அதனால் நாள்தோறும் பொறிகள் வயப்பட்டு மனம் அழிந்து உடல் அழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே வடிவாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்துடன் செறிவாகப் பொருந்தியிருக்கக் கீழ் உள்ள வீரியம் மேல் முகமாகி ஒளியாகித் தூல விந்து அழிந்துவிடும்.
1953. பெண்களைக் கொல்லும் இயமன் என்று நினைக்க காதலால் விளைவதான காமமானது விலகும்.. காமக் கழிவில்லாததால் இறப்பு இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலம் ஆகும்.
1954. விந்துவை வெற்றி கண்டவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவன். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினி சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலே எழும் இன்பத்தை அடையமாட்டார்.
1955. மங்கை ஒருத்தியுடன் புணரும் நாளுக்கு முன் நாளில் கணவன் தன்னிடம் காதலால் விளையும் இன்பத்தை அடைய வேண்டின் அந்த மங்கையின் வயிறான பாண்டத்தில் மலத்தையும் வாத பித்த சிலேத்துமத்தையும் விலக்க வேண்டிய அளவுக்கு விலக்கிப் பொருந்துவர்.
1956. ஆஞ்ஞையில் உதிக்கின்ற விந்துவும் நாதமும் கீழ்முகம் ஆகும்படி சுழுமுனைத் தியானம் செய்து பிரமரந்திரத்தின் வழியே போய்ப் பால் போன்ற வெண்மையான மதிமண்டல ஒளியில் பொருந்திக் கீழ் உள்ள பற்றை விட்டால் கீழ் முகமான மயக்கம் கெட வீரியமும் வற்றிப் போகும்.
1957. பரு விந்து விளையும் முறையும் அந்த வீரியம் முதிர்ந்து நிற்பதால் அடையும் பயன் முழுவதையும் அறியாதவர் அடையும் அழிவும் அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும் அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் என்பவனவற்றை ஆராய்ந்து அறிவார்க்கு விந்து வெற்றி உண்டாகும்.
1958. விந்து என்ற பெயரையுடைய் வித்தை அது உள்ள மூலாதரத்திலே ஓங்கி எரியும் குண்டலினித் தீயால் விரும்பி எரித்து அந்தச் சத்தியை முடிவில்லாத கதிரவ மண்டலத்தில் ஏற்றி மதி மண்டலத்தைச் சாரச் செய்தால் குலிர்ந்த அமுதாகும்.
1959 அமுதமான சந்திர மண்டலத்தில் உள்ள விந்துவில் உடலில் தோன்றிய வீரியம் கலந்து கெட உடல் முழுவதும் புனல் பரவிச் சிவத்தீயில் இலயிக்க அமுதமயமான சிவபோகம் விளையும். ஆதலால் சிவயோகிக்கு அமுதமான சித்தி பொருந்தும்.
1960. யோக நெறி கொண்டு விந்து அழியாமல் புணர்ந்து ஆணும் பெண்ணும் ஆன இரு உடல்கள் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடம் சிந்தாமல் அமையும் புணர்ச்சியே சிவயோகம் ஆகும். இங்ஙனம் நல்ல முறையில் யோகத்தில் மாதர் ஆசையைப் போக்கமாட்டாதவர் மூடர் என்னே அவர்தம் அறியாமை.
1961. யோக நெறியில் நிற்பவர் மங்கையுருடன் புணர்ந்தாலும் அந்த விந்துவைக் காதலினால் விடமாட்டார். மங்கையரோ யோகியரை உயிர் போன்று எண்ணி ஆசை கொண்டு வருத்துவர். கூறப்போமால் நீண்ட காலம் பழகிய காதலைப் போன்று அப்பொழுதே உயிர்க்காதல் செய்வர்
1962. சத்தியால் விந்து வெற்றி உண்டாகும். தூண்டிய மூலாதாரத்தில் உள்ள அனலை மேல் செல்லும்படியாகச் செய்து நான்கு பக்கமும் சிதறிப் போகாதபடி வீணாத்தண்டினூடே அசைவு உணர்ச்சியில் பொருந்தச் செய்து அமுதம் உண்ண ஒளிமண்டலம் ஆகும்.
1963. தலைமீது விந்துவும் நாதமும் உயர்ந்து பொருந்தி வந்த மூலாதாரத் தீயின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போதத்தை விட்டுச் சிவோகமப் பாவனையில் நிலைபெற உண்மையான உடலில் விந்து வற்றிப் போகும்.
1964. விதையினைக் குத்தி உண்பவ்ன் விதையால் ஆன பயனை அடைய மாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பவனைப் போன்றவனே தவிர வேறல்லன். இவ்விரண்டும் அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவான்.
1965. இந்த உடம்பு அன்னமய கோசம். இதில் விந்து வற்றும் முறையை அறிந்து பிராண சத்தியான வீரியம் கீழ் நோக்காதபடி தடுத்து மேலே பொருந்தும் வகையில் மின்னல் ஒளியுடன் கூடிய விந்து நாதாந்தத்தில் நிலை பெற்றால் பிரணவ ஒளி தோன்றும் காரணமான தூல வீரியம் வெளிப்படாமல் உடம்பில் வற்றி விடும்.
1966. மக்கள் எல்லோருக்கும் அன்ன சாரமான வீரியம் எனவும் பிராணசாரமான ஒளி மண்டலம் எனவும் இரண்டு வகையுண்டு. பிராண சார்மான ஒளி மண்டலத்தை அறிந்து அதிலே நிலைபெற்றுச் சாதிக்க வல்லார்க்குப் பொன்னொளிமயமான உடல் சித்தியும் எண்பெருஞ் சித்தியும் உடல் சித்தியும் வாய்க்கும். அத்தகைய சிவ யோகிகள் அழியாமல் நீடு வாழ்வார்கள்.
1967. திருவைந்தெழுத்தில் முதலாவதாய் உள்ள சி கரம் இருகண்களில் அக்னி தன்மையுடன் ஒளிரும் கலையாக, பிரணவத்தில் உள்ள ம கரம் தொண்டையைக் கடந்து வெளியான் போது அ, உ, ம மூன்றும் ஒன்றாக அவை பராசத்தி நிலையமான புருவத்தின் நடுவில் போய்ப் பொருந்துவதால் உண்டாகும் விந்து வெற்றியைப் பொருந்த உரைப்பதே உபதேசம் ஆகும்.
1968. ஆன்மாவான தான் அடையும் உபதேசம் என்பதும் தானே அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளவன், தன்னை அல்லாது வேறு ஒரு பொருள் இல்லை என்பதுமாம். அத்தகைய ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தில் உயர்ந்து செல்கின்ற ஒளியாய் அதனால் காரியப்படும் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக் காரணங்கள் ஆகிய பதினான்கும் வெளியே செல்வதை விட்டு உள்ளே அடங்க அதன் ஆன்ம அறிவும் அகன்ற அறிவும் ஒன்றாதல் அமையும்.
1969. நுண்மையான விந்து நாதங்கள் விளைதலால் இந்த உலகத்தில் உயிர்களுக்கெல்லாம் உடலுடன் கூடிய தோற்றம் உண்டாகியது. உயிர்களுக்கு முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும், விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன். விந்து அமைய அகண்ட சிவம் முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும் விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன. விந்து அமைய அகண்ட சிவம் அகம் ஆகும்.
1970. விந்துவை மறுபடியும் தோன்றாதபடி வறுக்கும் முறையும். எவ்விடத்தும் உலவும் உள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதால் வெற்றியைத் தரும் முறையும் அதை உயர்ந்து போகும் சகசிர தளத்தில் செலுத்திப் பக்குவம் செய்யும் முறையையும் அந்தக் கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும் .அவ்வமய்த்தில் சிவாக்கினி பக்குவமான கனியாகும்.
1971. விந்துவும் நாதமும் பொருந்தி உயர்ந்து போய்ச் சந்திரம்ண்டலத்தில் அமையும்போது பராகாயத்தில் ஒளி மண்டலம்- அமுதம் சிறந்து விளங்கும் அங்கு ஏற்படும் பிரணவ ஒளியே ஆகுதிக்குரிய மந்திரம் ஆகும்.
1972. மனத்தின் சத்துப் பாகம் வேள்விப் புலன் வழியாய் நாதமயமாய்ப் பொருந்தியவற்றை நாடி அதன் இன்பமான விந்துவில் திகழ்வர். உள்ளத்தில் அசத்துப் பாகத்தில் தோன்றுகின்ற நுண்மை வாக்கும் பரு வைகரியான வாக்கும் காம நோக்காய் இருக்குமாயின் தூல விரியம் உண்டாகிக் கெடுவர்.
1973. நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக் கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும் அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவபெருமான் இருக்கும் இடம் அதுவே என்பதையும் அறிவர்.
1974 .வன்மையான பாதம் நிலம், கொப்பூழ் நீராகும் கொப்பூழ் முதல் மார்பு வரை நெருப்பாகும். மார்பு முதல் தோள்வரை காற்ராகும். கழுத்தும் அதன்மேலும் வான் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
விந்து உற்பனம்!
1923. படைப்புக் காலத்தில் விந்துவில் உயர்வைச் செய்யும் குண்டலினியும் படைபுக்குக் காரணமான பரமாகாய மண்டலத்தில் விந்து காரியமான ஒன்பது பேதமான நான்முகன், முதலியவரும் அவர்களின் சத்திகளும் இவற்ரின் இயக்கத்தில் அந்தக் கரணங்கள் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் வைகரி முதலிய வாக்குஅளும் தோன்றின.
1924. விந்துவின் செயலால் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன், சதாசிவராகிய ஐவரும் ஐந்து உயிரில் பொருந்தித் தொழிற்படுவர்.. நாதபேத காரணத்தால் அது ஆறாகப் பிரியும். இவ்வாறு அமைவதால் உருவ விருத்திகளான நான்முகன் திருமால் உருத்திரர் மகேசுவரர் ஆகிய நால்வர் பால் மற்றத் தத்துவங்கள் பொருந்தும். இங்ஙனம் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தும்.
1925. வேறுபாடுகள் எல்லாம் பரவிந்துவால் உண்டாவன். தோற்றத்தைத் தரும் தூய மாயையும் வாக்கு சத்தியும் தற்பரையும் உயரச் செல்கின்ற பிரணவத்தில் மகிழ்வை உண்டாக்கும் குண்டலினியும் விந்துவிடம் இந்த நான்கும் பொருந்தி நிற்கும்.
1926. விளங்குகின்ற நிவிருத்தி முதலிய கலை அகராதி கலையில் பொருந்தும். வளமையுடைய உகாரம் மகரத்துள் அடங்கும். விந்து குற்றம் இல்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனம் முதலியவற்றுள் அந்தம் அடையும்.
1927. இறுதியும் முதலுமாகிய பராபரன் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள அந்த நெறியில் கிழங்கினைப் போன்ற முதற்காரணமான மாயையிலிருந்து உலகமான பிரபஞ்சத்தை தந்து ஐந்தொழிலையும் தான் செய்கின்ற விதையாகும்.
1928. விதையான விந்துவின் ஆற்றலால் ஆகின்ற் கண்டமும் அகண்டமும் விளங்கி வான் முதலிய ஐம்பூதங்களும் காரிய மாயையில் தோன்ற விந்து அவற்றின் உள்ளும் புறமுமாய் விளங்கும்.
1929. உள்ளும் புறமும் புகுந்து விளங்குகின்ற விந்துவின் நிறமானது வெண்மையாகும். நாதத்தின் நிறம் செந்நிறமாகும். அவை பொருந்துவதால் சிவசத்தி பதிதலாகும். இச் செயலால் ஆயுளும் ஆற்றலும் வீடும் அமையும்.
1930. உடலுக்கு வெளியே உள்ள ஒலி நிலையிலேயே ஆடையும் குடமும் வடிவு கொண்டு நிற்பதைப் போன்று நிலைபெற்று ஐந்து கலைகள் முதலிய காரணத்தினின்று காரியமாகிய உலகம் அனைத்துமாக விரிந்து மாயை ஆகும்.
1931. அகண்டத்தில் விதையாய் விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள இயல்பை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரின் அன்னப் பறவை வடிவாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் சிவம் ஆகும்.
1932. வித்தின்றி முளையானது இல்லை. அதனால் அம்முளை விதையினின்று தோன்றுவதே அல்லாது வேறிடத்தில் தோன்றுவதில்லை. வித்தும் முளையும் ஒன்றை விட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அதைப் பொலவே விந்துவும் சிவமுமாகும்.
1933. உண்ட உணவுகள் பொருந்தும் உடல் உயிர் பொருந்துவதற்குரிய உடல் மனம் கழியும் மலம் என மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இரண்டு பகுதியும் கூடி முன்னாள் உண்ட உணவின் சாரத்தால் அமைத்து இருந்தன.
1934. ஏழுவகையான தாதுக்களின் உணவு சாரம் இரத்தம் சுக்கிலம் என்னும் மூன்றால் உரிய நாளில் சாரம் குருதியாகி குருதி சுக்கிலமாக மாறி ஒரு புல்லின் முனையில் உள்ள பனித்துளி போல் அரிய விந்துவாக அமையும் இவ்வாறாய விந்து இருபத்தொரு நாள்கள் உடலில் வளரும்.
1935. உடலில் விந்துவானது மூன்று நாட்கல் கலந்திருக்கும். உடம்புள் மன மண்டலமாகிய ஒளி மண்டலமாகும் திருவடியில் ஒன்றி நின்றவர்க்கு ஒளி மண்டலம் நீங்காமல் நிலையாய் அமையும். அவ்வாறின்றி மாயா காரியமான உலக இன்பத்தில் ஈடுபடுவர்க்கு மனத்துடனே ஒளி மண்டலம் அழியும்.
1936. அழியும் விந்துவின் அளவை அறியமாட்டார். இருந்து அழியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் அறியமாட்டார். அழியும் உடலில் அழிந்து தளர்ந்தவர் அழியும் தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் நீங்க மாட்டார்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
சமாதிக் கிரியை!
1910. அழிவில்லாத சிவஞானிகள் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். கவனிப்பார் இல்லாமல் அழுகி நரி அவ்வுடலைத் தின்னுமாயின் நுண்மையான பகை மூண்டு நாட்டில் உள்ளவர் அழிந்து நாய் நரிக்கு இரையாவர்.
1911. ஞானியின் உடல் தீயில் இடப்பட்டு வெந்தால் சிவன் வீற்றிருக்கும் சிவன் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தியதைப் போன்றதாகும். அந்த நாட்டில் மழை பெய்யாது. உலகத்தில் பஞ்சம் உண்டாகும். நினைத்தற்கு அரிய மன்னர் பதவியை இழப்பார்.
1912. சிவஞானியின் உடலைப் புதைப்பது புண்ணியமாகும். அவர்தம் உடலை நெருப்பை இட்டுச் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவு ஏற்படும், அந்த உடலைப் புதைக்காமல் மண்ணில் கிடந்து அழியும்படி விட்டால் உலகத்திலே அழகு அழியும். உலகம் எங்கும் தீ பிடித்துக் கெடும்.
1913. அழிவில்லாத ஞானி அருளைப் பெற்றபின் உடலை விட்டால் அந்த உடம்பைக் குகை ஒன்றைக் கட்டி அதில் வைக்க வேண்டும். அங்ஙனம் செய்தால் அழகிய மன்னரும் பழைய குடிமக்களும் அள்வில்லாத இன்பத்தை விளைக்கும் இறைவனின் அருளைப் பெறுவர்.
1914. ஒன்பது சாணுக்குக் குறையாமல் ஆழமாய்க் குழியைத் தோண்டி அங்ஙனம் தோண்டிய மண்ணைக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டித் தவம் மிக்க குகையை முக்கோண வடிவமாய் பக்கம் மூன்றுக்கு மூன்று சாண் அலவுள்ளதாய்ச் செய்து பிறவியை நீக்கும் நல்ல குகையில் ஞானியின் உடலைப் பதுமாசனம்போல் இருத்திடுக.
1915. சிவஞானியின் மேனியினை நல் அடக்கமான குகை அமைக்கின்ற இடங்கள்: சமாதி செய்யவிருப்பவன் வீட்டின் பக்கம், நடை பாதையின் பக்கம், குளக்கரை, ஆற்றிம் நடுப்படுகை, பூஞ்சோலை, நகரத்தில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு உயர்ந்த மலைச் சாரல் என்ற இடங்கள் ஆகும்.
1916. நெருக்கமாக உள்ளவர் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்து அடி அகலமும் உயரம் ஒன்பது அடி நேராக அமைய அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக செய்யும் முறையாகும்.
1917. ஐந்து வகை உலோலங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையினில் பரப்பி மிகுதியாய் இடவேண்டும். அதன்மீது இருக்கையை அமைத்துத் தருப்பையைப் பரப்பி திருவெண்ணீற்றை நிறைய இட வேண்டும். அதன் மீது பொற்கண்ணப் பொடியைப் போடவும் வேண்டும்.
1918. குகையின் நடுவில் நான்கு சதுரமாய் செய்து அதன் மீது தேன் ஒழுகும் மலர் சந்தனம் கத்தூரி அகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் என்பனவற்றை சேர்த்து தெளியுங்கள். ஒளி பொருந்திய தீபத்தை அக்குகையில் காட்டுங்கள்.
1919. வெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு ஞானியின் உடலை இருக்கை மீது அமர்ந்தி பூ அறுகம்புல் நறுமணப் பொடி வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குகையின் மீது வைத்து நான்கு பக்கமும் மண்ணை விரித்து சமம் செய்யுங்கள்.
1920. வெண்ணீறு முதலியன விரித்தபின் நான்கு பக்கங்களிலும் பரப்பி பொரிக்கறி உணவு இளநீருடன் குருவின் திருவடியையும் இட்டு காதணி முகம் கண் முதலிய வற்றைச் சாத்தியபின் மேலே மேலாடை சாத்துங்கள்.
1921. திருநீற்றையும் நறுமணப் பொடியையும் மேலே சொரியும் தர்ப்பையையும் விலவ மலர் கொண்டு பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் தந்து நிலத்தின் மீது மூன்றுக்கு மூன்று அடி மேடை அமையுங்கள்.
1922. மேடை மீதில் அரசமரக்கன்று அல்லது சிவலிங்கம் எண்ணும் இவற்றுள் ஒன்றை நிறுவி சமாதியின் மேன்மையான சந்நிதிக்கு வடக்குத் திக்குப் பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் ஆகியவற்றுள் ஒன்ரு அமைய அன்புடன் பதினாறுவகை உபசாரம் செய்வீராக!
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
பூரணக் குகைநெறிச் சமாதி!
1902. சிவயோகி வினைப் போகத்திற்காகத் தாங்கிய இவ்வுடலை விட்டானாயின் அவனது ஆன்மா வளர்பிறையானால் தேவர்களுடன் தங்கி ஓளியில் நின்று பழகினவன் ஆனால், கதிரவ மண்டலத்தில் சிலநாட்கள் தங்கி தளர்ச்சி இல்லாத பிதுர் உலகில் சில நாட்கள் தங்கியிருந்து சந்திர மண்டலத்தைப் போய்ச் சேரும்.
1903. சமாதி கை கூடாமல் உடலை விட்டவர் போக வேண்டிய இடத்துக்குப்போய் அங்கு நியதி முடிந்தபின்பு புவியில் பிறந்து பிரார்த்துவ வினைகளைத் தூய்த்து மீண்டும் பிறவாத பெரிய யோகத்தை திருவருள் துணையாக நிறைவு செய்வர்.
1904. புவியில் பிறந்த யோகி மற்ற் உலகத்தார் போல் உண்டு உடுத்து உறங்கி வாழ்ந்து எல்லாவற்றுக்கும் மேலான சிவயோகத்தில் தலைப்பட்டு முயலும் போது ஆகும் அந்த ஒளியில் ஒளிவடிவம் பெறுவதற்கு முன் உடல் சித்தி பெற்று மதிக்கத்தக்க உடலை அடைவர்.
1905. சிவயோகியான ஞானியர் யோகம் நிறைவுறாமல் உயிர் நீங்கி உடலை விட்டால் தவ உலகத்தை அடைந்து பின்பு பிறந்து சிவயோக வாயிலாகச் சிவஞானம் நிலை பெற்று விளங்குவார். அவர்கள் ஒளியுலகத்தவரால் போற்றப்படும் புண்ணியர் ஆவார்.
1906. குறைவில்லாத சிவ ஞானியான நல்ல யோகி உடலை விட்டுப் பிரிந்தால் தான் என்ற நினைவில்லாது மோன நிலையில் இருந்து சிவமான தன்மையை அடைவர். அன்னார் வேறொரு உடலில் புகாமல் நின்மல் முத்தராய் விளங்கி உலகத்தில் மீண்டும் பிறவிக்கு வரமாட்டார்.
1907. இறந்தவர் அடையும் பயன் எதுவென்றால் இறந்தபின் நீங்கள் அடைவது சித்தியாகும். அது கூடுமானால் இறந்தவர் உலகில் இருந்தவரே ஆவார். அந்தச் சித்தர் மும்மலங்களையும் அழித்தவர் ஆவார்.
1908. பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய எல்லா வல்லமையுடைய சிவத்தின் அருளைப் பல முறையும் சிந்திக்கப் பரசிவமே அந்த ஞானியர்க்குச் சத்தியின் கூட்டத்தை அருள்வாள். அங்ங்னம் தாம் பெற்ற அருளை எத்தகைய பக்குவம் வாய்த்தவர்க்கும் வேண்டி அளிப்பவன் ஞானி. அவனவன் விருப்புக்கேற்ப மாணவனை ஈசன் வடிவாக அமைத்தருள்வான்.
1909. நீக்கம் இல்லாமல் எங்கும் விளங்கும் சிவத்தின் அருள் நடுவில் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவமே தோன்றும். அங்கங்கே உள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்துள்ள வானம் போன்று ஈசன் வடிவு பெற்ற ஞான உடல் உணர்வு விட்டு எல்லாவற்றிலும் கலந்திருக்கும்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.