gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 29 December 2022 11:28

இ,ஈ,உ,எ,ஏ,ஐ,ஒ,ஓ!

Written by

ஓம் நமசிவய!

 

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்

பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை

அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை

வருத்த எண்ணுகின்ற மலம்!

$#$#$#$#$#

,,,,,,,ஓ-                                                            

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

இடபுரேசர்

ஆப்புடையார்கோவில்

இடைச்சுரநாதர்

திருஇடைச்சுரம்#

இரத்தினகிரீஸ்வரர்

பெசண்ட்நகர்

இராமணதீஸ்வரர் .

இராமனதீச்சரம்

இராமநாதஈஸ்வரர்

போரூர்#

இராமநாதசுவாமி

இராமேஸ்வரம்#

இராமலிங்கேஸ்வரர்

இராமேஸ்வரம்#

இருதயகமலநாதேஸ்வரர்

வலிவலம்

இலங்கைநாதர்

அரச்சலூர்

இலந்தையடிநாதர்(சு)

பிரம்மதேசம்.அயனீஸ்வரம்

இன்மையில்நன்மைதருவார்

மதுரை

ஈசானேஸ்வர்

அம்பிகாபுரம்,கீழாம்பி, திருவேள்விக்குடி, பூரி,

ஈரோடையப்பர்

ஈரோடு#

உச்சிநாதசுவாமி

திருநெல்வாயில்

உசிரவனேஸ்வரர்

திருவிளநகர்

உடும்பீசர்

மாகறல்#

உடையநம்பீசுவரர்

கடம்பூர்

உத்தமநாதர்

கீரனூர்

உத்தமலிங்கேசுவரர்

பெருமாநல்லூர்

உதயகிரிநாதர்

மாவூத்து

உத்ரநாதர்

திருப்பாதிரிப்புலியூர்#

உத்ரவைத்தியநாதர்

காட்டூர்

உத்ராபதீஸ்வரர்

திருச்செங்காட்டாங்குடி

உத்வாகநாதசுவாமி

கீழ்திருமணஞ்சேரி#

உதவிநாயகர்

திருமாணிக்குழி#

உமாசகிதர்

காஞ்சி,புத்தேரித்தெரு#

உமாசந்திரசேகரர்

சந்திரசேகரபுரம்

உமாபதீசர் ,

தக்கோலம்#

உமாமகேசுவரர்

இளம்பிள்ளை,சித்திரைச்சாவடி,திருநல்லம்,வடக்கநந்தல்,

உமையாட்சீஸ்வரர்

அச்சரப்பாக்கம்#

உமையொருபாகர்

சாயமலை

உருமநாதர்

பெருங்களுர்

உலகநாதர்

பொன்பேத்தி

உலகவிடங்கர்

ஒலகடம்

உனக்கோடீஸ்வரபைரவர்

ஹைலாஷாஹரி(tதிரிபுரா)

எட்டீசர்

எட்டயபுரம்,பையனூர்

எமதருமேஸ்வரர்

காஞ்சிபிள்ளையார்பாளயம்#

எமனேஸ்வரர்

எமனேஸ்வரம்#

எரிச்சாண்டாவர்

அம்பாசமுத்திரம்

எழுத்தறியும் பெருமாள்

திருவெற்றியூர்#

எறும்பீசுவரர்

ஆலத்தூர்

ஏகலிங்கநாதர்

ஏக்லிங்க்-ராஜஸ்தான்

ஏகபுஷ்பபிரியநாதசுவாமி

திருத்தியமலை(முசிறி)

ஏகாம்பரநாதர்

திருக்கச்சிஏகம்பம்#

ஏகாம்பரேசர்

மானந்தகுடி

ஏகாம்பரேசுவரர்

கும்பகோணம்#, செங்கல்பட்டு, திருக்கச்சிஏகம்பம்#, திருக்கவித்தலம்#, திடாவூர், பூங்காநகர்#,

ஏடகநாதேஸ்வரர்

திருஏடகம்

ஏழுகடலைஅழைத்தஎம்பிரான்

மதுரை

ஐந்தெழுத்துநாதர்

கூகையூர்

ஐநூற்றீஸ்வரர்

வீரபாண்டியபுரம்.

ஐய்யம்பொழில் ஈஸ்வரர்.

ஆமூர்(திருவாதாவூர் அருகில்)

ஐமுக்தீஸ்வரர்

பெரியபாளையம்

ஐயாறப்பன்

மயிலாடுதுறை#

ஐராவதீஸ்வரர்

கோட்டாறு, தாராசுரம்#

ஐராவதேசுவரர்

அத்திமுகம், எதிர்கொள்பாடி, ஐராவதநல்லூர், பெரியகாஞ்சி#, மதுரை, மருத்துவக்குடி,

ஒட்டீசுவரர்

ஒட்டியம்பாக்கம்

ஒராயீசுவரமுடையார்

தர்மபுரி-தகடூர்#

ஒளஷதீஸ்வரர்

திருவாண்மியூர்#

ஓணேஸ்வரர்

காஞ்சிஓணகாந்தன்தளி#

ஓதவுருகீசர்

திருக்கச்சிமேற்றளி#

ஓம்காரேஸ்வரர்

மமலேஸ்வரம்-ம.பி.

ஓம்காளிசுவரர்

குத்தாலம்#

புதன்கிழமை, 28 December 2022 11:44

அ,ஆ !

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே

கழியவரும் பொருளே, கண்ணே - செழிய

கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை

அலாலயனே, சூழாதென் அன்பு!

$#$#$#$#$#

, -                                                                          

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், திருத்தலங்கள்.

அக்கினிபுரீஸ்வரர்

திருப்புகலூர், திருவன்னியூர்

அகத்தீசுவரர்

அகஸ்தீஸ்வரம், அமராவதி, அருங்குளம், அனகாபுத்தூர், எட்டியதளி, ஏம்பல், ஐயப்பட்டி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, காங்கயம்பாளயம்#, கிளியனூர், கூழையூர்சிவபாதசேகரநல்லூர், சூணாம்பேடு, தாராபுரம், திருச்சுணை, திருப்பூண்டி, நயினார்வயல், நாகர்கோவில், நாப்ளூர், நுங்கம்பாக்கம்,  பஞ்சட்டி#, பனங்குடி, பிரதாபராமபுரம், புத்திரன்கோட்டை, பொழிச்சலூர், மணப்பாறை, மாகறல்#, வளசரவாக்கம்#,

அக்னீசுவரர்

கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருக்கொள்ளிகாடு, திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு

அகோரவீரபத்ரசாமி

ஒத்தக்கால்மண்டபம்

அங்கநாதர்

மடவளாகம்-திருப்பத்தூர்.

அங்குரேசுவரர்

ஆதிகுடி

அசலதீபேசுவர்

மோகனூர்

அட்சயபுரீஸ்வரர்

விளங்குளம்

அட்டாளசெக்கநாதர்

மேலப்பெருந்துறை, பரமக்குடி

அடியார்க்கு நல்லான்

பரமக்குடி

அடைக்கலநாதர்

மாகறல்#

அண்ணாமலையார்

முடியனூர், பழனி#, மன்னார்குடி

அணைத்தெழுந்தநாயகர்

திருவாவடுதுறை

அத்யாபகேசர்

தேரழுந்தூர்#

அதிகைநாதர்

திருவதிகை#

அந்திசம்ரஷணீஸ்வரர்

திருக்கடைமுடி

அந்துகொண்டேசுவரர் 

திருத்தேர்வாலி

அபராதரட்சகர்

கொல்லாபுரம்

அபிமுகேஸ்வரர்

கும்பகோணம்#

அபிராமேசுவரர்  

காஞ்சி,பாடகம்

அபிஷேகச் சொக்கன்

பரமக்குடி 

அம்பலக்கூத்தர்

சிதம்பரம்#

அம்பலவாணர்

சிதம்பரம்#, முடுக்கன்குளம்

அம்பைநாயகர்

அம்பாசமுத்திரம்

அம்மணீசுவரன்

அவலப்பம்பட்டி, கஞ்சம்பட்டி,குறும்பபாளயம், சங்கம்பாளயம், திம்பாம்பட்டி, தேவனாம்பாளயம், தேவாம்பதி,

அம்மையப்பர்

அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி,படவேடு#

அமரநந்தீசுவரர்

நாகப்பட்டிணம்/நாகை

அம்ருதேஷ்வரர்

அன்னிகெரி-(கர்நாடகா-பதாமி அருகில்)

அமரபணீஸ்வரர்

பாரியூர்#

அமராபதீஸ்வரர்

சிறுகளத்தூர்

அமரேசுவரர்

பெரியகாஞ்சி#

அமிர்தகடேசுவரர்

திருக்கடம்பூர், திருக்கடையூர்#, தச்சூர், லால்குடி#,

அமிர்தகலசநாதர்

சாக்கோட்டை#

அமிர்தலிங்கேஸ்வரர்

அருப்புக்கோட்டை#, கோவில்பட்டி#, திருக்கடையூர்#, வெள்ளோடு#,

அமுதேஸ்வரர்

கும்பகோணம்#

அயவந்தீஸ்வரர்

திருசாத்தமங்கை

அரங்குளநாதர் .

திருவரங்குளம்

அர்ச்சுனேசுவரர்

ஒசூர்-ராம்நகர், மீமிசால்

அரசிலீஸ்வரர்

ஒழிந்தியாபட்டு#

அர்த்ததியாசர்

திருவாவடுதுறை

அர்த்தநாரீசுவரர்

எட்டுக்குடி, திருச்செங்கோடு, நங்கநல்லூர், ரிஷிவந்தியம்

அரதானசலேஸ்வரர்

ஐயர்மலை#

அரப்பளீஸ்வரர்

கொள்ளிமலை

அரவநீள்சடையான்

நாகர்கோவில்

அரியநாதசுவாமி

அரியநாயகிபுரம்

அருட்காளீசுவரர்

மலையக்கோவில்

அருணாசலேசுவரர்

ஆரணி, கீழையூர், கூத்தகுடி, செஞ்சி, தண்டையார்பேட்டை

அருணேசுவரர்

காரிமங்கலம்,திருமீயச்சூர்

அருள்சோமநாதேஸ்வரர்

திருநீடூர்

அருள்வள்ளல்நாதசுவாமி

கீழ்திருமணஞ்சேரி#

அல்லாலேஸ்வரர்

ஈங்கூர்

அவிநாசிநாதர்

அவிநாசி#

அவிநாசியப்பர்

அவலப்பம்பட்டி

அழகியநாதர்

திருப்பனையூர், நாகப்பட்டிணம்

அழகேசுவரர்

அத்திமுகம், செலம்பராயம்பாளையம், பேரனக்காவூர், மணிக்கிராமம், லக்கமணநாயக்கன்பட்டி,

அளகேசன்

பவானி#

அறம்வளர்த்த ஈசுவரர்

அணைக்கட்டு

அனந்தபத்மநாபேஸ்வரர்

காஞ்சி,லிங்கப்பர்தெரு#

அனந்தேசுவரர்

ஆத்தூர்,கறம்பக்குடி,பதஞ்சலீஸ்வரம்

அனவரத தாண்டேஸ்வரர்

அரடாப்பட்டு

அன்ன விநோதன்

ஆப்புடையார்கோவில்

அன்னபுரீசுவரர்

அன்னவாசல்

அனுமீஸ்வரர்

முகாசிஅனுமன்பள்ளி#

அனேகதங்காவதேஸ்வரர்

காஞ்சி,அனேகதங்காவதம்#

அஸ்வத்தநாதர்

ஆவூர்பசுபதீச்சுரம்

அஸ்வத்தேஸ்வரர்

ஒழிந்தியாபட்டு#

அஷயநாதர்

திருமாந்துறை.#

அஷயலிங்கேஸ்வரர்

கீழ்வேளூர்

ஆசுதோஷி

பக்தர்கள் வேண்டுதலுக்கு உடனுக்குடன் அருள்

ஆட்சிகொண்டநாதர்

அச்சரப்பாக்கம்#

ஆடலீஸ்வரர்

காயார், முன்னூற்றுமங்கலம்,

ஆத்திவனநாதர் .

திருச்செங்காட்டாங்குடி

ஆத்மநாதர்

ஆவுடையார்கோயில்#, திருவிடைமருதூர்#

ஆதி அனந்தீஸ்வரர்

சிக்கல்

ஆதி ஈசுவரன்

கிழவனேரி(அருப்புக்கோட்டை அருகில்)

ஆதிகம்பட்டவிசுவநாதர்

கும்பகோணம்#

ஆதிகாயாரோகணர்

நாகப்பட்டிணம்/நாகை

ஆதிகும்பேஸ்வரர்

கும்பகோணம்#

ஆதிகைலாதநாதர்

வடக்கூர்#

ஆதிசிவசைலநாதர்

சிவசைலம்

ஆதிசொக்கநாதர்

மதுரை, உத்ரஆலவாய்#

ஆதித்தவர்ணேசுவரர்

துப்பாகுடி, மேலச்செவல்

ஆதித்தேசுவரமுடையார்

பெரியகளந்தை

ஆதித்தேசுவரர்

பேராவூர்

ஆதிதீச்சரமுடையார்

தேவூர்

ஆதிநாதேஸ்வரர்

அத்தியபாடி(மங்களூர்)

ஆதிபுராணர்

நாகைக்காரோணம்

ஆதிபுரீஸ்வரர்

சிந்தாதிரிப்பேட்டை, திருவெற்றியூர்#,

ஆதிரத்னேஸ்வரர்

திருமாந்துறை#

ஆதிவைத்தியநாதர்

சேரன்மாதேவி

ஆதீசுவரர்

கீரனூர், பெரியகளந்தை

ஆபத்சகாயேசுவரர்

ஆடுதுறை#, கந்தர்வகோட்டை, கொங்கராயநல்லூர், கொத்தவாசல், திருஅன்னியூர், துக்காட்சி, புதுப்பட்டு, ருத்ரகங்கை,

ஆப்பனூரீசுவரர்

ஆப்புடையார்கோவில்

ஆப்புடையார்

ஆப்புடையார்கோவில்

ஆம்ரவனேஸ்வரர்

திருமாந்துறை#,கூகூர்

ஆம்லகவனேஸ்வரர்

திருநெல்லிக்கா

ஆரண்யவிடங்கர்

திருபைஞ்சிலி#

ஆர்த்தகபாலீஸ்வரர்

பாமிணி

ஆருத்ரகபாலீஸ்வரர்

ஈரோடு#

ஆலடீஈசுவரர்

ஈஞ்சார்(சிவகாசி அருகில்)

ஆலந்துறையார்

அன்பில்#, அரியலூர், திருப்பழுவூர், நல்லாத்துக்குடி

ஆலவாயண்ணல்

திருஆலவாய்#

ஆலிங்கனசந்திரசேகர்

சந்திரசேகரபுரம்

ஆவூருடையார்

ஆவூர்பசுபதீச்சுரம்

ஆளுடையார்

கோவை.கோட்டைமேடு

ஆனந்ததியாகர்

திருவெற்றியூர்#

 

 

 

 

 

புதன்கிழமை, 28 December 2022 11:34

சிவநாமங்கள்- தலங்கள்!

Written by

ஓம்நமசிவய!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்

கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்

பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்    

பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

 $#$#$#$#$#

சிவ நாமங்கள்- தலங்கள்!

கோவில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ன்றார்கள் நம் முன்னோர்கள். அதனால் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் சிவன் கோவில்களை கட்டினர். அந்தந்த ஊரில் நடந்த நிகழ்விற்கு ஏற்ப இறையின் பெயரை வைத்தார்கள். சிவ நாமங்கள் அகர வரிசைப்படியும், அந்த நாமம் விளங்கும் ஊரின் பெயரும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த எழுத்தில் தொடங்கும் இறையின் பெயர் வேண்டுமோ அந்த எழுத்துப் பகுதியுள் சென்று பார்க்கவும்.

$#$#$#$#$#

 1.அ,ஆ- அகரவரிசை!

2.,,,,,,, -அகரவரிசை!

3.,கா,கி,கீ,கு,கூ,கே,கை,கொ,கோ,கௌ-அகரவரிசை!

4.,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சொ,சோ,சௌ-அகரவரிசை!

5.ஞா,ஞீ,டா-அகரவரிசை!

6.,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ-அகரவரிசை!

7.,நா,நி,நீ,நூ,நெ,நே-அகரவரிசை!

8.,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ-அகரவரிசை!

9.,மா,மி,மு,மூ,மெ,மே,மொ

10.,யா,யோ,,ரா,ரி,ரு,,லி,லோ-அகரவரிசை!

11.,வா,வி,வீ,வெ,வே,வை-அகரவரிசை!

12.ஜ்,,ஜெ,ஜு,ஸ்,,,ஹே-அகரவரிசை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாவம்! யார் கணக்கில் எழுதுவது?

Written by

பாவம்! யார் கணக்கில் எழுதுவது?

ஒரு செல்வந்தர் யார் பசி என வந்தாலும் அவர் பசியை போக்கி வந்தார். ஒரு திருவிழாவன்று நிறைய பேருக்கு சமையல் செய்து வந்தனர். அப்போது வானில், ஒரு பாம்பை கவ்வி சென்ற கருடனின் பிடியில் தவித்த பாம்பு துன்பம் தாளாது விஷத்தை கக்க அது கீழே தயாராகும் சாம்பாரில் விழுந்தது. அதை யாரும் பார்க்கவில்லை. எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. சப்பிட்ட அனைவரும் இறந்து போயினர். சாம்பாரில் எப்படி விஷம் கலந்தது என யாருக்கும் தெரிய வில்லை. காலம் கடந்தது. சொல்வந்தர் சில நாட்கள் துயரத்திலிருந்து விட்டு சிவன்மீது பாரத்தை போட்டுவிட்டு மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார்.

இந்த அன்ன தானத்தில் எத்தனை உயிர்கள் இறந்துவிட்டன. இந்தப் பாவக்கணக்கை யார் மீது எழுவது என்ற சந்தேகம் சித்திர குப்தனுக்கு. இறைவனிடம் கேட்க இறைவன் நீ யாரை சந்தேகிக்கின்ராய் எனகேட்க, பாம்புதானே விஷத்தை கக்கியது…. என்றபோது அது கருடன் பிடியிலிருந்த அவஸ்தையால் கக்கியது அதற்கு கீழே இருப்பது பற்றி எப்படித்தெரியும் அது வேண்டாம் எனச் சொல்ல.. அப்படியானால் கருடன் மீது எழுதிவிடட்டுமா எனக் கேட்க... கருடன் தன் இறையை கொண்டு சென்றது. அது என்ன செய்யும் எனச் சொல்ல.. அப்படியானல் இந்த அன்னதானத்திற்கு மூலகாரணமான செல்வந்தரின்மீது எழுதி விடட்டுமா என்றான். அவர் பாவம். கொஞ்சநாள் பொருத்திரு, இந்தக் கணக்கை யார் மீது எழுதுவது என்பதை நான் உனக்கு காண்பிக்கின்றேன் என்றார் இறைவன்.

சொல்வந்தர் அன்ன தானத்தை தொடர்ந்து நடத்தி வர வெளியூர் வழிப்போக்கர்களெல்லாம் வந்து உண்டு மகிழ்ந்தனர். ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒரு கூட்டம் அன்னதானம் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியை அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டனர். அந்த அம்மாள் அன்னதானம் நடைபெறும் இடத்தை சொல்லி விட்டு, வீணாக ஒரு உண்மை வதந்தியை சொல்லி புலம்பிவிட்டாள். அதாவது சென்ற வருடம் நடந்த விருந்தில் உணவு அருந்திய அனைவரும் இறந்துவிட்டனர். நீங்கள் உணவு உண்டு திரும்பி வருவீர்களோ இல்லையோ என வதந்தியை கிளப்பிவிட்டாள். எப்போது நடந்த செயலின் காரண காரியங்களை சரியாக அறியாமல், நன்றாக நடைபெறும் ஒர் அன்னதானத்தை மாசுபடுத்தும் வகையில் குறை சொல்லிய அப்பெண்ணின்மீது அந்த பாவக்கணக்கை எழுதும் படி இறைவன் சித்திர குப்தனுக்கு ஆலோசனை வழங்கினார்.

உண்மை தெரியாமல் பழியை யார்மீதும் சுமத்தாதீர்கள். அது உங்கள் பாவக்கணக்காகி விடும்.

#####

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

#####


பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த! (பற்கள் வழி உறிஞ்சும் நிலை)

நற்பயன்கள்: உடல் சூடு குறையும்.நுறையீரல் சுத்தமாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களைக் கடித்தவாறு இருக்கட்டும். கடித்த நிலையில் உள்ள இருத்தாடைப் பற்களுக்கும் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே மெதுவாக தடையில்லாமல் இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.

3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

#####

பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி! (நாக்கு வளந்த நிலை)

நற்பயன்கள்: உடலுக்கு குளிர்சியை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும். அல்சர் போன்ற குடல் புண்கள் குணமாகும். மனதை சுத்தப் படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். படபடப்பு குறைந்து மன அமைதி உண்டாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.

3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

#####

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

#####

பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி! (நாக்கு மடங்கிய நிலை)

நற்பயன்கள்: உடல் வெப்பம் தணியும். வாய்ப் புண்கள் ஆறும். பசியைக் கட்டுப்படுத்தலாம்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

3.நாக்கை பின்புறமாக மடித்து மடித்த நாக்குநுனியை மெதுவாக மேல் வரிசைப் பற்கள் பக்கம் அழுத்திப் பிடிக்கவும். நாக்கின் இரண்டு பக்கத்திலும் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ் சப்தத்துடன் (Hissing sound) காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்)

4.பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 10:05

உஜ்ஜயி!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!

இந்த ஆற்றல்மிக்க உஜ்ஜயிமூச்சை ஆங்கிலத்தில் Victorious Breath / Hissing Breath / Ocean sounding Breath) என்றழைப்பர்.

நற்பயன்கள்- மூச்சுக் காற்று வழியில் ஏற்படுத்தப்படும் தடை சுவாசிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும். ஆழ்ந்த மன அமைதியை ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். நுரையீரலுக்கு அதிக அளவில் பிராணவாயுவை கொண்டு சென்று சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யும். தைராய்டு பிரச்சனைகள் குணமாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.

3.உள்ளே காற்றை சில நொடிகள் தங்கவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் தொண்டையில் ஸ்ஸ்… என்ற சப்தத்துடன் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். காற்று வெளியில் தாராளமாக வராமல் ஓர் தடையுடன் அனுப்பவேண்டும். அதாவது வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் சப்தம் எழுப்பவும். அது வெளிவரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

எட்டாம் பயிற்சி-அக்னிசார்! (வயிற்றை மடக்குதல்)

நற்பயன்கள்: ஜீரண உறுப்புகள் சீரடையும்
1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.

3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

#####

திங்கட்கிழமை, 03 January 2022 10:02

உத்கீத்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

ஏழாம் பயிற்சி-உத்கீத்!

நற்பயன்கள்- அளவிடமுடியா ஓர் பேரானந்த, இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879869
All
26879869
Your IP: 54.227.136.157
2024-03-19 11:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg