gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஆனாயநாயனார்

Written by

5. ஆனாயநாயனார்

மழவநாட்டின் ஒருபகுதியான திருமங்கலம் லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு நல்ல நீர் பருகச் செய்து கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது எம்பெருமானை துளைக்கருவியான புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.

உள்ளம் ஒன்றிய இசையால் பெருமானோடு தினமும் ஒன்றிப்போவார் ஆனாயர். தினமும் ஆநிரைப்பணியும் குழல் வழிபாடும் இனிது நடந்தது. ஒருநாள் கொன்றை மரம் ஒன்றைப் பார்த்து அவ்விடம் சென்றார். கொன்றைமலர் ஐந்து இதழ்களைக் கொண்டது. அதன்மேலிருக்கும் மலர்குழல் ஓங்காரம் போலிருக்கும். அது கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கியிருப்பதை பார்த்த ஆனாயர் அந்த மரத்தை சிவமாகக் கருதினார்.

தான் சிவமாக கருதிய கொன்றை மரத்தின் முன் நின்று ஒன்றிய மனத்துடன் தன் அன்பையும் இசையையும் இணைத்து மடைதிறந்த வெள்ளம்போல் புல்லாங்குழலால் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். அப்பகுதி எங்கும் இசை வெள்ளம் பரவியது. வலியவரும் மெலியவரும் தம் முன் பகை விடுத்து அன்புடன் நட்பு பாராட்டியது. அப்பகுதி உயிரினங்கள் தன்னை மறந்தன. அந்த இசை எம்பெருமான் செவி அருகேயே செல்ல பெருமான் விடைமீதேறி அவ்விடம் வந்து சேர்ந்தார். “இந்நிலையிலேயே நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

லால்குடி- திருமங்கலம்-சிவன் கோவிலில் ஆனாயநாயனார் புல்லாங்குழல் வாசிப்பதுபோல்.

                                         ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

இசைஞானி நாயனார்

Written by

6. இசைஞானி நாயனார்

திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

இடங்கழிநாயனார்

Written by

7. இடங்கழிநாயனார்

கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்,

அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசைசெய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பண்டாரத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத்தவிர  வேறில்லை என்ற நிலையில் நடுஇரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.

வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். உம்மைப் பார்த்தால் திருடுவதை தொழிலாகக் கொண்டவன் போல் இல்லை, எதற்காக இவ்வாறு செய்தீர் என்றார், அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் இவரல்லவா எனக்கு பொக்கிஷம். வேறு பொக்கிஷம் எதற்கு என தன் பண்டாரத்தை திறந்து உங்களுக்கு எவ்வளவு நெல், பொன் பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். மற்ற அடியவர்களும் வேண்டியது பெற பறையறிவிப்பு செய்தார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

இயற்பகைநாயனார்

Written by

8. இயற்பகைநாயனார்

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர்.

இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து காமுகன் வேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். இயற்பகையாரே நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்கினும் இல்லை எனக் கூறாது வழங்கும் உம் வள்ளல் தன்மை பற்றித் தெரிந்தபின் உன்னிடம் ஒன்று வேண்டி வந்தேன் என்றார். அடியவரே என்ன தயக்கம். யாதாயிருந்தாலும் என்பக்கம் இருந்தால் அது எம்பிரான் அடியவர் உடமை. வேண்டியது கேள் என்றார்.

அடியவர் நீங்கள் தரலாம் என்றால் நான் கேட்கலாம் என்றவரிடம் கேளுங்கள் என்றார். ‘காதல் உன் மனைவியைத் தா’ என்றார் அடியவர். தன்னிடம் இருப்பதைக் கேட்டார் என மகிழ்வுற்று நான் தந்தேன் என்ற இயற்பகை, மனையிடம் சென்று ‘இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு கொடுத்தனம்’ என்றார். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அம்மையார் கணவன் சொல்லைக் காக்க முனைந்து தன் கணவரை வணங்கினார். அடியார் இவளை அழைத்துபோக பயமாயிருக்கின்றது ஊர் எல்லைவரை வழித்துணையாக வர இயற்பகையாரிடம் வேண்டு கோள் விடுத்தார். அவ்வறே வருகிறேன் என உடைவாளை எடுத்துக் கொண்டு துணைக்குச் சென்றார்.

இச்செயலை அறிந்த சுற்றத்தாரும் ஊர் மக்களும் அதை தடுக்க முடிவு கொண்டனர். தன் முடிவை சொன்ன இயற்பகையார் ஏற்றுக் கொள்ளாமல் தடுத்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியவரிடம் நீங்கள் புறப்படுங்கள் என்றார். அடியவரும் அம்மையாரும் ஒரு திசையிலும் இயற்பகையார் ஒருதிசையிலும் சென்றனர். எந்தவிதக் கவலையோ துன்பமோ இன்றிப் போகின்ற இயற்பகையாரைக் கண்ட அடியவர் வியந்து சொன்னார். ‘பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான், அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகிறார்.

இயற்பகை முனிவா நீவா என குரல் கேட்டுத் திரும்பினார் இயற்பகையார். பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

                                  ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

இளையான்குடி மாறநாயனார்

Written by

9. இளையான்குடி மாறநாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் பாலிப்பு செய்வதை தன் பெருந்தொண்டாக கருதினார். ஆண்டவன் வழிபாடு ஆராதனை. அடியவர் வழிபாடு சமாராதனை என்பர். சம்-நன்றாக. விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.

பெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு  மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.

தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட பெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார்,

நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவருக்கு உணர்த்த அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குழிநிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார்.

அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.

******  

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

உருத்திரபசுபதி நாயனார்

Written by

10. உருத்திரபசுபதி நாயனார்

சோழநாட்டில் திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. 51 வரியில் ‘சிவாய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும். இவ் உருத்திரத்தை ஜெபித்ததால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார். அந்த ஊரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் இந்த உருத்திர ஜபம் செய்து சிவ புரியை அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

எறிபத்தநாயனார்

Written by

11. எறிபத்தநாயனார்

அமராவதியாற்றின் கரையில் உள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர். அங்குள்ள ஆநிலைக் கோவிலின் பசுபதீசுவரரை நாளும் மூன்று முறை வணங்கி வந்தார். இத்தலப்பெருமானை வழிபடின் மீண்டும் ஒரு கருவில் பிறக்க வாய்ப்பு ஏற்படாது. எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார்.

அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற அடியர் வைகறைப்பொழுது எழுந்திருந்து நீரில் மூழ்கி குளித்து திருநீறு அணிந்து வாயினைக் கட்டி நந்தவனத்தில் மலர் பறித்து ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு மலர்களை மாலையாக்கி தினமும் இறைவனுக்குச் சூட்டி மகிழ்வார். ஒருநாள் அப்படி அவர் துய்மையுடன் மாலையை இறைவனுக்குச் சூட்ட எடுத்து வரும்போது மன்னனுக்கு பிரியமான பட்டத்துயாணை பட்டவர்த்தனத்துக்கு மதம் பிடித்து ஓடிவந்து சிவகாமி ஆண்டாரின் கையிலிருந்த மாலையை வீசி எறிந்து நாசம் செய்தது. பூக்கள் புழுதியில் பட்டு நாசமாயின. தன் மலர்த் தொண்டுக்கு ஏற்பட்ட சோதனை கண்டு கதறினார். தரையின் மீது விழுந்து ‘சிவதா சிவதா’ என அழுது பெருமானிடம் முறையிட்டார்,

அப்போது அங்கு வந்த எறிபத்தர் சிவகாமி ஆண்டவரின் முறையீட்டைக் கேள்விபட்டு கோபத்தினால் கொதித்து எழுந்தார். எம் அடியார்க்கு இவ்யானை பகையா எனக் கூறி யானை சென்ற வழியில் சென்று அந்த மதம் பிடித்த யானையின் துதிக்கையை வெட்டினார். பாகர்களையும் வெட்டினார்.

கேள்விப் பட்ட மன்னர் யானையை வெட்டிய பகைவரை எதிர்பார்த்து அவ்விடத்தே அடியார் ஒருவர் இருப்பதைக் கண்டார். நடந்தவற்றை அறிந்தார். சிவபக்தி மிக்க மன்னன் அடியவரே சிவத் தொண்டுக்கு இடையூறு செய்த யானையும் பாகனையும் வெட்டியது சரி. இவற்றை சரியாக நிர்வகிக்காத தானும் குற்றவாளியே, என்னை தாங்கள் என் வாளினால் தண்டியுங்கள் எனத் தன் வாளினை எடுத்து தந்தான்.

எறிபத்தர் புகழ்ச்சோழரின் பக்தியைக் கண்டு என்னால் இவ்வடியவரின் மனம் எவ்வளவு புண்பட்டு விட்டதே. நான் இருப்பதில் பயன் இல்லையென்று தன்னை வெட்டிக்கொள்ள முயன்றார். புகழ்ச் சோழர் பதறிப்போய் தடுத்தார். வானிலிருந்து ‘அன்பர்களே உங்கள் இருவரது அன்பினையும் உலகறியச்செய்யவே நாம் இவ்வாறு செய்தோம்’ என்று ஒலித்தது. யானையும் பாகரும் உயிர் பெற்றனர். சிவகாமி தொண்டர் மலர் தொண்டினை தொடர்ந்து செய்து வந்தார். எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகணத் தலைவராக ஆனார்.

                                  ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஏயர்கோன் கலிக்காமநாயனார்

Written by

12. ஏயர்கோன் கலிக்காமநாயனார்

திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பிஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.

இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.

ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர்மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல்சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ள போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.

                                         ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஏனாதிநாதநாயனார்

Written by

13. ஏனாதிநாதநாயனார்

கும்பகோணத்திற்கு தென் கிழக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள எயினனூர் தற்போது ஏனநல்லூர் என்ற ஊரிலே ஏனாதிநாதர் பிறந்தார். ஏனாதி என்றால் படைத்தளபதி என்றாகும். மன்னர்களுக்கு போர் பயிற்சி தரும் பணியை மேற்கொண்டார் ஏனாதிநாதர். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடியவர்கட்கு வேண்டியவற்றை வழங்கி வழிபடுவது அவர் கொள்கையாகும்.

ஏனாதிநாதர் வாள் வலிமையும், தோள் வலியும் அஞ்சா நெஞ்சமும் உடையவராய் திகழ்ந்தார். ஊரில் வாட்படைப் பயிற்சிக்கூடம் அமைத்துப் பயிற்சி கொடுத்து வந்தார். திறமையான பயிற்சியால் செல்வமும் செல்வாக்கும் பெருகியது. அவர் பெற்ற செல்வம் எல்லாம் அடியவர்கட்கே பயன் பட்டது. அவர் புகழ் அதிகரித்தது. பகைவர்கள் உட்பட அனைவரும் அவர் திறமையைப் புகழ்ந்தார்கள்.

அவ்வூரில் வாழ்ந்த வாட்பயிற்சி தரும் அதிசுரன் அவர்மேல் அழுக்காறு கொண்டான். அவனது திறமையின்மையால் அவனால் பெயர் பெற முடிவில்லை என்பதை உணர முடியாதவன் ஏனாதி நாதர்மேல் பொறாமை கொண்டான். ஒருநாள் அதிசூரன் ஏனாதிநாதர் இருக்கும் இடம் தேடிவந்தான். நான் பயிற்றுவித்தவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன், நீங்கள் பயிற்றுவித்தோரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். இருவரும் சண்டை யிடுவோம். யார் வெற்றி பெறுகிறோமோ அவரே இனி இவ்வூரில் பயிற்சி  கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு ஏனாதி நாதரும் உடன்பட குறித்த நாளில் போர் தொடங்கியது. ரத்தக் களாமாகிய இடத்திலிருந்து அதிசூரன் ஆட்கள் ஒடி ஒளிந்தனர்.

தோற்ற அதிசூரன் போரில் ஏனாதிநாதரை வெல்வது கடினம் என உணர்ந்தான். வஞ்சனையால் வெல்ல நினைத்தான். மீண்டும் ஏனாதி நாதரைச் சந்தித்தவன் நம்மால் ஏன் பலர் மடியவேண்டும். நாமிருவரும் வாட்போர் செய்யலாம். வெற்றி பெற்றவர் பயிற்சி சொல்லித்தரலாம் என்றார். அதற்கு இசைந்தார் ஏனாதிநாதர். போர் குறிப்பிட்ட நாளில் நடந்தது.

தோற்கும் நிலையடைந்த அதிசூரன் தான் திட்டமிட்டபடி தன் நெற்றியில் உள்ள திருநீற்றை மறைத்திருந்த மறைப்பை விலக்க, நெற்றியில் திருநீற்றை கண்ட ஏனாதிநாதர் அடியவரைக் கொல்வதா என வாளை எறிந்துவிட எண்ணினார். அதனால் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்தார். அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்ற மண்ணில் சாய்ந்தார்.

நெற்றியில் திருநீறு கண்டமைக்காக அடியவர் என நினைத்து கொல்லாமை தவிர்த்து தன் உயிரைக் கொடுத்த ஏனாதிநாதருக்கு அருள் வெளியில் பெருமான் காட்சி கொடுத்து அருளினார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

Written by

14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும், கலியையும் பகைவரது வலியையும் அடக்கி சைவநெறியை எங்கும் பரவச் செய்து நீதி நெறி தழுவாது அரசு புரிந்தார். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் வல்லவர், காலக்கிரமத்தில் உலகத்தை அரசு புரிவது துன்பம் எனக் கருதினார், மனம் சிவனடியார்கள்பால் லயித்தது. உலகயியலில் மனம் ஒட்டவில்லை. எனவே அரசாட்சியை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு திருத்தொண்டு செய்வதில் ஈடுபட்டார்.

பெருமான் கோவில்கள் தோறும் சென்று பல பணிகள் செய்து உள்ளம் உருக வெண்பா பாடல் பாடி வழிபட்டு வந்தார். பூமாலையை விட பாமாலை உயர்ந்தது. ஞான வாசனை வீசுவது. உள்ளத்தை உருக்கி அன்புத்தேனை பெருக்கி நம்மை உய்விப்பது. ஒரு கோவிலுக்கு ஒரு வெண்பா என யாரும் எளிதில் உய்யும் பொருட்டு பாடும் நியமம் கொண்டிருந்தார். பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு தன் தேக யாத்திரையையும் முடித்து இறையடி சேர்ந்தார்.

காஞ்சி- ஏகாம்பரநாதர் திருக்கோவில்- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சிலை.

                                  ****** 

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26933559
All
26933559
Your IP: 34.201.37.128
2024-03-29 04:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg