gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

சங்கிலி உதவி!

Written by

        ஒரு பையன் படிக்கும் பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் திட்டம் ஒன்றினை தயாரித்து விளக்க அவர்தம் ஆசிரியர் கூறுகிறார். எல்லோரும் அவரவர் கற்பனைக்கேற்ப கூறுகின்றனர். ஒருவன், நாம் முகம் தெரியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்லவேண்டும்.
       அவர்கள் இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால், இரண்டு வாரங்களில் 47லட்சத்து, 82ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். என்பதாகும். இந்த திட்டத்தை மாணவர்கள் கேலி செய்ய, ஓரு ஆசிரியர் பாராட்டுகின்றார். அந்த மாணவன் இதை செயல்படுத்த முயற்சிக்கின்றான். உதவும் கரங்களின் சங்கிலி உருவாகின்றது. அம்மாவிற்கு இந்த செயல்கள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி பல துன்பங்களுக்கு ஆளாகின்றான்.
       ஆனால் இந்த சங்கிலி அமைப்பினால் பலனடைந்த பத்திரிக்கையாளன் ஒருவன் எளிமையான இந்த திட்டத்தை புகழ்ந்து எழுதத் தொடங்க, திட்டம் வெற்றிபெற ஆரம்பிக்கின்றது. ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்பதே என்பதே இதன் கருத்து. இந்தமுறையில் உதவிகள் அனைவருக்கும் கிடைத்தால் அதன் செயலாக்கம் சிறப்பல்லவா!

இளமை-ஆசை-பேராசை!

Written by

     ஆசை பூர்த்தியாவதற்காக நம் செயல்கள் நம்மை ஆட்டிவைக்கின்றது. ஆனந்தம் வேண்டும் என்பதற்காக நம் செயல்கள் இருந்தாலும், அது ஒரு துக்கமில்லா சந்தோஷமாக இருத்தல் வேண்டும். அந்த சந்தோஷங்களும் தற்காலிகமாக மறைந்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது.
    மகாபாரத நிகழ்வில் யாயாதி மன்னன், சுக்ராச்சார்யாரின் மகள் தேவயாணையை மணந்தான். இல்வாழ்வில் தேவயணையின் தோழியுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சாரியார் இளமையில் கிழட்டுத்தன்மை என சாபமிட்டார். கிழட்டுத்தன்மையை இளைஞர் ஒருவருக்கு அளித்து இளமை பெறலாம் என்ற விமோசனத்தின் பேரில், தன் மகன்கள் நால்வரும் மறுத்தபின், கடைசி மகன் பூருவிடமிருந்து இளமை பெற்றான். இன்பத்தின் வகைதேடி, எல்லைதேடி வகை வகையாக அனுபவித்தும் அவனின் ஆசை அடங்கவில்லை.
       விரும்பியதை தேடித் தேடி அனுபவித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் ஆசை அதிகமாக ஆவதை உணர்ந்தான் மன்னன் யாயாதி. அனுபவித்து ஆசையை தீர்ப்பது என்பது முடிவில்லாதது, அது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் செயல் என புரிந்து, தன் மகன் புருவை அழைத்து அவனிடம் பெற்ற இளமையை மீண்டும் அவனுக்கு அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
      துன்பத்திற்கு தீர்வு ஆசையை அனுபவிப்பது இல்லை, அதை அடியோடு ஒழித்து மறந்துவிடுவதுதான் சிறப்பு. எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். ஆசைகள் இயல்புதன்மையுடன் அடங்கவேண்டும். அடக்கலாகாது. அடக்குதலின் விளைவு பேராசையே! வாழ்வில் உனக்கு தேவையானவற்றின் மீது ஆசை வை. பேராசை கொள்ளாதே!

திசை மாற்றிய ஆசை!

Written by

        அரசராயிருந்தபோது எதிரியை வென்று திரும்பிய விசுவாமித்திரர், குல குரு வசிஷ்டரை வணங்க ஆசிரம் சென்றார். அங்கு அவரது படைகளுக்கும் சேர்ந்து விருந்து படைக்கப்பட்டது. அந்தக்காட்டில் அப்படிஒரு விருந்தை எதிர்பார்க்காதவர் அதன் காரணத்தை கேட்டார். வசிஷ்டர் காமதேனுவின் சிறப்பு அது என்றார். அதை தனக்கு அளித்தால் அன்றாடம் அதைப் பயன்படுத்தலாம் எனக்கருதி குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குரு காமதேனு விரும்பினால் அழைத்துப்போ என்றார். காமதேனு மறுக்கவே, குருவிற்கு மனமில்லை எனக்கருதி அவரிடம் போர் தொடுத்தார். போரில் தோற்ற விசுவாமித்திரர் அவரை தவபலத்தினால் வெல்ல வேண்டும் என முடிவெடுத்தார்.
      விசுவாமித்திரர் வாழ்க்கை திசைமாறக் காரணமாயிருந்தது அவரின் பேராசையே! அரசு துறந்து தவம் இருந்து முனிவரானார். ஆசைகளை எல்லையுனுள் வைத்துக் கொள்ள வேண்டும். விளைவுகளை ஆராயாமல் செய்யும் செயலின் முடிவுகள் வாழ்வின் போக்கை மாற்றும். இன்னொன்று ஆசையை வளர்த்தால் பிறவிகள் வளரும். ஆசையை ஒழித்தால் முக்தி நெருங்கும்.

பேராசை!

Written by

        நேர்மையான வழியில், செயலினால் கிடைக்கும் ஆனந்தத்தை அடைந்து அதிகம் ஆசைப்படாமல் மகிழ்வுடன் வாழப் பழகுங்கள். “ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பன் மாலகன். கிருஷ்ணனிடம் அனைத்து வித்தைகளையும் கற்றவன். கண்ணனிடம் அனைத்தும் கற்றதனால் அகந்தையும், மமதையும் அடைந்து மதியிழந்து இருந்ததன் காரணமாக அவனுள் ஓர் பேராசை புகுந்து கண்ணனிடமிருந்த சக்ராயுதத்தை பிரயோகிக்க ஆசைப்பட்டான்.
        கண்ணன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அந்தக் கலையைக் கற்றான். கற்றுத் தேர்ந்தவன் அதை விண்ணில் பிரயோகித்தான். அப்போது அவன் மனதில் தானும் கண்ணனைப்போல் சமபலம் உள்ளவன் என நினைத்தான். அந்த அபரிதமான எண்ணத்தினால் கைவிரலை கன்னத்தில் வைத்து மகிழ்ந்திருந்தான். அவன் பிரயோகித்த சக்ராயுதம் திரும்ப அவன் விரல்களுக்கு வரும்போது கழுத்து அறுபட்டு இறந்தான்,” என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        இது மாலகனின் அளவில்லாமல்போன ஆசையின், பேராசையின் அளவு. அதுவே அவனின் முடிவு. எனவே ஆசை கொள்ளுங்கள். ஆசையின் பலனை அளவான வெற்றியாக காணுங்கள். பேராசை கொள்ளாதீர்கள்! பேராசை இல்லா மனம் ராஜயோகத்துடன் எல்லா செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வில் பயணிக்கும்.

மனப்பக்குவம்!

Written by

       பல ஆண்டுகள் தவம் செய்த ஞானி ஆன்மீக கேள்விகளுக்கு பதிலலித்துக் கொண்டிருந்த போது ஒருவர் ஆன்மிகத்தை கேலிசெய்யும் விதமாகப் பேசவே மிகுந்த கோபமடைந்தார். சினம் தனிந்த போது தன் செயலுக்கு வருந்தினார்.  எத்தனை தவம் விரதம் இருந்தும் என்ன பயன். என்னிடம் மாற்றம் இல்லையே என வருந்தினார். தனது தவம் பூரணத்துவம் அடையவில்லை, மனம் பக்குவம் பெறவில்லை, சினத்தை அடக்க அதற்கு தெரியவில்லை என்று அந்த ஆசிரமத்தைவிட்டு வெளியேறி, மீண்டும் மனதை ஒர் நிலைப்படுத்த தவம் மேற்கொள்ள சென்றார்.

பழிவாங்குதல்!

Written by

       தர்மரின் மாளிகையின் தரையில் நீர் இருப்பது பொன்ற நிலை தோன்ற துரியோதனன் தன் ஆடைகள் நனையாமலிருக்க தூக்கிபிடித்து சென்றான். இதைக் கண்ணுற்ற திரௌபதி சிரிக்கக் கண்ட துரியோதனன், தான் அவமானம் அடைந்ததாகக் கருதி, அவளை பழிவாங்கத் துடித்தான். அதன்முடிவு துச்சாதனன் துகிலுரிப்பு, மகாபாரதப் போர், துரியோதனின் அழிவு. எப்போதும் ஓர்வேகத்தில் வெறியில் தோன்றும் பழிவாங்குதல் எண்ணங்கள் நன்மை பயத்ததாக சரித்திரத்தில் கூறப்படவே இல்லை.

தெய்வபலம்!

Written by

     பாண்டவர்கள் வேட்டைக்கு சென்றபோது திரௌபதியை, ஜயத்ரதன் கடத்திசெல்ல, அறிந்த பாண்டவர்கள் அவனை வழிமறித்து படைகளை அழித்து அவளை மீட்டனர். ஜயத்ரதனை தலைமுடி அகற்றி அவமானப்படுத்தினான் பீமன். தவம் செய்து அர்ஜுனனைத்தவிர மற்றவர்களை கொல்ல வரம் பெற்ற ஜயத்ரதன், போரில் அபிமன்யு இறக்க காரணமானான். போரிலிருந்து வீடுதிரும்பிய அர்சுனன் செய்தி கேட்டு ஜயத்ரதனை அழிக்க சபதம் மேற்கொண்டான். இதை அறிந்த துரோணர் வியூகம் அமைக்கையில் அர்சுணன் பார்வைக்கு படாத நிலையில், ஜயத்ரதனை ஒளித்து வைக்க, கண்ணன் இருள் சூழ்ந்த நிலையை மாயமாக உருவாக்க, அந்தி சாய்ந்ததாக நினைத்து வெளிவந்த ஜயந்திரனை, கண்ணன் அடையாளம் காட்டி தலையைக் கொய்து அவன் சபதத்தை நிறைவேற்றக் கூறினார்.
        மேலும் அந்த தலை அவன் தந்தையின் மடியில் விழச்செய் என்றார். கண்ணனின் வழி காட்டுதலின்படி அந்த தலை விருத்தக்ஷத்திரர் மடியில் திடிரென்று விழ, அவர் பதறி எழுந்ததால் அது மடியிலிருந்து மண்ணில் விழுந்தது. விருத்தக்ஷத்திரருக்கு மகன் பிறந்தபோது மகன் தலை அறுந்து பூமியில் விழும் அழிவுக்கு காரணமாணவனின் தலை சுக்கு நூறாகும் என்று சபித்தார். அதன்படி அறுந்து அவர்மடியில் விழுந்த தலையை அவர் கீழே போட்டதால் அவரின் தலையும் சுக்கு நூறாகியது. அர்ச்சுணனின் சபதம், நிறைவேறவும், அதேசமயம் ஜயத்ரதனின் தந்தை சாபத்திலிருந்து அர்சுணனை காப்பற்றவும் கண்ணன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அதுவே தெய்வ பலம்.

மரண முயற்சி!

Written by

        பறைவைகளில் கழுகு தன் வாழ்நாளில் எல்லா திறமைகளும் எப்போதும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தன் வயதின் பாதியில், வலிமை குன்றிய அலகை பாறையில் மோதி உடைத்துவிட்டு, மீண்டும் உறுதியாக புதிய அலகு வளரும் வரை காத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. அதன்பிறகு அந்த புதிய வலிமை மிகுந்த அலகினால் தன் கால் நகங்கள் மற்றும் இறக்கையின் சிறகுகளை பிய்த்து விட்டு, புதியன வளர பொருத்திருந்து மீண்டும் புதிய பிறவிபோல் பலவருடங்கள் வலிமையுடன் வாழ்கிறது.
        தானே தனது பிறவியை வலிமைப்படுத்தும் கழுகின் இந்த கடுமையான முயற்சி போற்றத் தக்கவையே. அந்த பிறவியில் அது எவ்வளவு கஷ்டங்களை தானே சந்தித்து வெற்றி அடைகிறது. எதிர்காலம் வலிமையுடையதாக இருக்க நாமும் அது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முயற்சி!

Written by

       ஓர் இளவரசி தன் அறிவுக் கூர்மையினால் அறிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட, பாதிக்கப்பட்ட அவர்கள் இளவரசிக்கு பாடம் புகட்டும் வகையில் ‘நுனிக் கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டிய’ ஓர் சர்வமுட்டாளை, தங்களது திறமையால் மணம் முடித்தனர். உண்மை தெரிந்ததும் இளவரசி அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றினாள்.
      மனம் வெதும்பிய அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, தண்ணீர் இறைக்கும் போது மேலும் கீழும் சென்றதால் கயிற்றின் தாரைகள் சுவற்றில் பதிந்திருக்கக் கண்டு, நாமும் ஏன் தெடர்ந்து முயற்சி செய்து அறிஞனாகக் கூடாது என நினைத்தார். தொடர்ந்து முயற்சிகள் செய்தார். கல்விமான் ஆனார். காளிதேவியின் அருளும் கிடைத்தது. வாழ்வில் உலகம் புகழும் வெற்றி கண்டார் ‘கவிகாளிதாஸ்’ என்றழைக்கப்பட்டார்.

பொறாமை!

Written by

       கர்ணணைப் போல் தான தருமங்கள் செய்து தானும் கொடையாளி என்றபெயரை, புகழை அடைய நினைத்த துரியோதனன், தன் அரண்மனை வாயிலில் “இங்கு யார் வந்து என்ன கேட்டாலும், ‘இல்லை’ எனச் சொல்லாமல் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தான். அவன் உளமார தர்மம் செய்ய முன்வராமல் வெறும் பெயரை அடையவே இவ்வாறு செய்கிறான், அதை அவனுக்கு உணர்த்த கிருஷ்ணர் எண்ணங் கொண்டார். நல்ல மழைக்காலம் அது. அப்போது அந்தணர் வேடமேற்று சென்ற அவரை வரவேற்ற துரியோதனனிடம், தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அப்போது உணவு தயாரிப்பதற்காக காய்ந்த விறகுகள் 1000 வண்டிகள் தந்து உதவ வேண்டும் எனக் கேட்டார். கேட்ட துரியோதனன் பேய்மழையில் எப்படி காய்ந்த விறகுகள் அதுவும் 1000 வண்டிகள் எனச் சலித்துக் கொண்டான். கிடைக்குமா என விசாரித்து விறகு இல்லை என்று கூற அந்தனர் வாயிலில் உள்ள தகவல் பலகையை சுட்டிக் காண்பித்து அதை அகற்றிவிட வேண்டினார். இருப்பதைத்தானே கொடுக்கமுடியும், இல்லாததைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும், இந்த சூழலில் காய்ந்த விறகை யாரேனும் கொடுத்தால் பலகையை அகற்றி விடுகிறேன் என்றான் துரியோதனன்.
       அடுத்து கர்ணனின் அரண்மனைக்கு சென்ற அந்தணருக்கு அங்கும் விறகு இல்லை எனத் தெரியவந்தது. அப்போது கர்ணன் அந்தனரை பக்கத்தில் உள்ள ஓர் வீட்டிற்கு சென்று பேச அழைத்தான். சிறிது வேளையில் அந்தணர் கேட்ட 1000 வண்டிகள் நிறைய காய்ந்த விறகுகள் தயாராக இருந்தன. எங்குமே காய்ந்த விறகு இல்லா நிலையில் கர்ணா உன்னால் எப்படி முடிந்தது இது என அந்தணர் கேட்க, நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான். அங்கிருந்த கர்ணனின் அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தேக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் விறகாகி இருந்தன.
      அந்த 1000விறகு வண்டிகளுடன் துரியோதனின் அரண்மனைக்குச் சென்று சந்தித்தார் அந்தணர், வெட்கத்தால் தலைகுணிந்த துரியோதனன் உடன் தகவல் பலகையை நீக்கினான். போட்டி, பொறாமையின்றி உள்ளார்ந்த நினைவுகளுடன் தர்மம் செய்தல் சிறப்பாகும். புகழ் வேண்டி செய்த தர்மங்கள் பலன் தராது.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911784
All
20911784
Your IP: 198.41.230.250
2021-04-13 09:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg