gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

இலக்கில்லா பயணம்!

Written by

        இரயில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூட்டம் நிரம்பியிருந்தது. அடுத்த இரயில் நிலையத்தில் சீட்டு பரிசோதகர் ஏறினார். எல்லாருடைய சீட்டுகளையும் பரிசோதித்துக் கொண்டு வந்தார். ஒவ்வெருவரும் தங்களது சீட்டுகளை காண்பித்த வண்ணம் இருந்தனர். ஒருவர் மட்டும் அதைத் தேடிய வண்ணம் இருந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். வேறு சீட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றனர். நான் அதற்காக அழவில்லை. எங்கு போகவேண்டும் என்று அந்த சீட்டில் தான் எழுதியிருந்தார்கள் என்றார். பல மனிதர்களின் பயணங்கள் இப்படி இலக்கில்லாமல் எங்கு செல்ல வேண்டும் எனத்தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றது.

எங்கே போகப்போகிறோம்!

Written by

          அந்த சர்வ அதிகாரியிடம் வந்த சிறை அதிகாரி, சிறையில் கைதிகள் தொலைக்காட்சி வசதி கேட்டு போரட்டம் செய்வதை தயங்கி தயங்கி சொன்னார். கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். சிலநாட்கள் கழித்து சிறை அதிகாரி, கைதிகள் வாரம் ஒர்நாள் விடுமுறை வேண்டி போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார். அதையும் கொடுக்கச் சொல்லி ஆனை பிறப்பித்தார்.
     இப்படி சிறைச்சாலையிலிருந்து எந்தக் கோரிக்கைகள் வந்தாலும் உடனடியாக உத்தரவு பிறப்பித்து நிறைவேற்றுவதைக்கண்ட ஆலோசகர், நாம் சலுகை காட்டவேண்டியது கல்விச் சாலைகளுக்குத்தான், சிறைச்சாலைகளுக்கு அல்ல என்றார். ஆனால் சர்வ அதிகாரி, ஆலோசகரரைப் பார்த்து, பதவியில் இருந்து இறக்கப்பட்டால் நாம் செல்லவேண்டியிருப்பது கல்விச்சாலைகளுக்கு அல்ல, சிறைச்சாலைக்குத்தான் என்றார். அவர் தனக்கு எதிர்காலம் என்ன என்பதை புரிந்து செயல் பட்டுள்ளார். சராசரி மனிதனுக்கு இது புரியாததால் ஆட்டம் போடுகின்றான்.                                                                                                                                    நிகழ்காலத்தில் தவறு செய்பவன் எதிர்காலத்தை இழந்துவிடுகிறான். எதிர்காலத்தை சரியாகக் கணிக்காமல் செயல்படுபவன் நிகழ்காலத்தை இழந்து விடுகிறான்.

அறம், கொடை, அன்னதானம் மீது பற்று!

Written by

     ஒரு மன்னன் கடவுளிடம், செல்வத்தையோ, அஸ்டமா சித்திகளையோ, மோட்சத்தையோ வேண்டாமல், உயிரனங்கள் உள்ளத்திலிருந்து அவைகளின் இன்னல்களை ஏற்று அவைகளுக்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும் என்ற நினைவில் மக்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக செயல்படுத்தி ஏழ்மையிலிருந்து விடுபட உதவி செய்தான். இதனால் அவன் ஏழ்மை நிலையடைந்தான்.
      ஓர்நாள் ஏழையாகிவிட்ட அந்த மன்னனுக்கு அறுசுவை உணவு அளித்தான் ஒருவன். உணவு அருந்த முற்படும்போது பசியுடன் ஒருவன் யாசகம் கேட்க, ‘பசித்தவனுக்கு அன்னம் அளிப்பது சிறந்த அறம், உயிரினங்கள் வயிற்றில், அக்னி வடிவாக ஸ்ரீஹரி குடியிருப்பதால் நான் அளிக்கும் இந்த உணவு கடவுளை திருப்திபடுத்தி, அந்த உடலின் பசியை ஆற்றும்’ என்று கொஞ்சம் உணவு அளித்தான்.
      மீதமுள்ளவற்றை குடும்பத்துடன் உண்ண முற்பட்டபோது வேறுஒருவன் பிச்சைக் கேட்க அவனுக்கும் அளித்தான். அப்போது ஓர் நாய் அங்குவர அதனிடமும் ஸ்ரீஹரியைக்கண்டவன், அதற்கு தன்னிடமிருந்த மீதிஉணவைப் போட்டான். தண்ணீர் மட்டுமே மீதமிருந்த நிலையில் தாகமாயிருக்கின்றது, நீர் இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டவனுக்கு, அவனுக்கு நீர் கொடுத்தால் அவன் மகிழ்வான் அந்த மகிழ்வில் எனது பசி பறந்தோடிவிடும் என்று அதையும் கொடுத்து விட்டான்.
       தன்னைப்போலவே பிற உயிர்களையும் பார்க்காதவன் கண்கள் இருந்தும் குருடனே என்ற தர்மசாஸ்திரத்தின் வார்த்தைகளுக்கு ஏற்ப மற்றவரது துயரம் களைவதையே சிறந்த அறமாக கருதி செயல்பட்ட அந்த மன்னன் தனக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கியமைக்கு இறைவனுக்கு நன்றி கூற, அவன்முன் மும்மூர்த்திகளும் தோன்றி, அறத்தின் மீதான உனது பற்று உலக மக்களுக்கு உதாரணமாகும், தர்மசாஸ்திரத்திற்கு செயல் வடிவம் கொடுத்து நீங்கா புகழடைந்து விட்டாய் என வாழ்த்தினர்.

அநாதை- ஒரே துணை!

Written by

          விடுமுறையில் வீட்டிற்கு வந்த தன்மகனிடம் தங்களையும் அழைத்துப்போகச் சொல்லிய பெற்றோர்களிடம் நாங்கள் சுற்றுலா சென்று அப்படியே செல்ல இருக்கின்றோம். நீங்கள் அப்புறமாக வாருங்கள் எனக் கூறிச் சென்றுவிட, தங்களின் செல்ல மகள் வீட்டிலாவது சென்று தங்கலாம் எனக் கிளம்பினர். நாட்கள் செல்லச் செல்ல மகளின் பேச்சுகளும், உபசாரங்களும் திசைமாறவே, ஆண் என்ற முறையில் வேலைத்தேட ஆரம்பித்தார். ஒரு கல்யாண உதவி அமைப்பில் பணியாளராக வேலை கிடைக்கவே, அங்கு கிடைக்கும் எல்லா வேலைகளையும் தலைமேற்கொண்டு கிடைக்கும் பணத்தை தன் மகளிடம் கொடுத்துவந்தார். வேலையில்லா நாளில் ஒன்றும் கிடைக்காமலும் இருப்பதுண்டு. அப்படி ஓர்நாள் வேலையின்றி மனம் வருந்தி வீடுசென்றவருக்கு அவரின் மகள், மனைவியிடம் பேசியது கேட்கவே சிறிது தயக்கத்திற்குப்பின் உள்ளே சென்றார். சோர்ந்து படுத்தார்.
           அடுத்தநாள் காலை வேலைதேடிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பலநாட்கள் சென்றும் அவரைப்பற்றிய தகவல் ஏதுமில்லை. ஒரு வருடம் சென்றபின் பக்கத்து ஊரின் ஆசிரமத்திலிருந்து உடன் வரச்சொல்லித் தகவல் வரவே அங்கு சென்ற அந்த அம்மாளுக்கு அவரின் கணவரின் பெயரைச் சொல்லி அவர் இறந்து பலநாட்கள் ஆகிவிட்டன எனக்கூறினர். இங்கு வரும்போது நான் அநாதை எனச் சொல்லித்தான் சேர்ந்தார். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆசிரம அன்பர்களே காரியங்கள் அனைத்தும் செய்யச் சொல்லி கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் இறந்ததும் அடக்கம் செய்துவிட்டோம். பின்னர் அவர் பெட்டியை திறந்து பார்த்தபோது ஒரு டைரி இருந்தது. அதில் உங்கள் பெயரும் விலாசமும் இருந்தது. ஆகவே உங்களுக்கு தகவல் அனுப்பினோம். இந்தாருங்கள் அந்த டைரி எனக் கொடுத்தனர்.
          அன்புள்ள மனைவிக்கு, நான் உன்னை விட்டு ஓடி வந்துவிட்டேன் என நினைக்காதே! அன்று நம் மகள், அம்மா நீ சமையல்வேலை, துணி துவைத்தல் என வீட்டு வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருக்கின்றாய், ஆனால் உங்களிருவருக்கும் சேர்த்து எங்களால் செலவு செய்யமுடியவில்லை, அப்பாவை எங்காவது ஆசிரமத்தில் சேர்ந்துக்க சொல், என்ற வார்த்தைகளைக் கேட்டபின், நீயாவது அங்கு நன்றாக இருப்பாய் என்ற எண்ணத்தில்தான் இப்படி வந்துவிட்டேன். என்னை மண்ணித்துவிடு.  நமக்கு மகன், மகள் என்ற ஆதரவு அற்றுப் போய்விட்டது. நமது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிதான் உனக்கு துணை. உன்னிடம் ஒர் வேண்டுகோள். இதைப் படித்தப்பின் எனக்காக ஒன்றுசெய். அந்த அம்மையின் வாயிலில் பிச்சை எடுத்தாவது ஜீவி. பிள்ளைகள் வாசலை மிதிக்காதே. என எழுதியதைப் படித்தபின் மனம்பிசைந்தது. அழுகை நிறைந்த கண்கள் குளமாயின.
        கணவரின் விருப்பப்படி அந்த அம்மாள் கோவிலின் வாயிலில் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார். ஓர் நாள் அவரது மகன் அந்த கோவிலுக்கு வந்து சென்றபோது காலத்தின் கோலத்தால் சிதைந்து போயிருந்த அந்தமூதாட்டியை அடையாளம் தெரியாமலே, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரும் பிச்சையிட்டு சென்றனர். அந்த அம்மனே இறுதிவரை துணை என வாழ்ந்து இறந்தார். அவர் யாருமில்லா அநாதையா!

ஆன்மீகமழை!

Written by

       தலைமைத் துறவி ஓர் சிலையை எடுத்து தன் சீடர்களிடம் கொடுத்து, இது சாதாரண சிலை என நினைத்துவிடாதீர்கள், மிகவும் சக்தி வாய்ந்தது. பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போது திருடர் தொல்லை அதிகம் இருந்ததால் அவர்களால் சிலை சேதப்படமல் இருக்க, சீடர்கள் முழு முயற்சி எடுத்து அதை பாதுகாத்தனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமும் இருந்தது.
      அந்த சிலையை வைத்திருந்த இடத்தில் மழைநீர் வழிந்து, கூரையிலிருந்து ஒழிகி களிமண் கரைந்து விடவே அச்சிலை பொற்சிலையாக காட்சி தந்தது. மண்சிலை பொன்னாகவே தங்கள் குருவிடம் சென்று விபரத்தை கூறினார்கள். உண்மையில் அது பொன் சிலைதான், திருடர்களிடமிருந்து காப்பாற்றவே அதற்குமேல் களிமண் பூசிவைத்தேன் என்றார்.
       வெளியே உள்ளமண் கரைய உள்ளே உள்ள பொன் தெரிந்தது, மனித உயிரின் உடல்களும் களிமண் சிலைபோலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளே உள்ள அவர்களின் பொன்ஆன்மாவை அடையாளம் தெரியாமல் பயணித்து கொண்டிருக்கின்றனர். பயம், ஆசை, பேராசை, கோபம், ஆணவம், கர்வம், பொறாமை இவைகளிலிருந்து விடுபட்டால் வெளிச்சம் உள்ளே வரும், அப்போது உள்ளே இருக்கும் உண்மைகள் புரியும். அது ஆன்மீக உணர்வுகளினால்தான் தோன்றும்.

கடவுள் இருக்குமிடம்!

Written by

        கடவுள் தான் உருவாக்கிய உலகம் அழகாகவும் அமைதியாகவும் இருக்கவே இங்கேயே தங்கலாம் என முடிவெடுத்து தங்கினார். ஆண்டுகள் செல்லச் செல்ல மனிதர்களின் ஆசை அதிகமாகவே அவர்கள் கடவுளிடம் சென்று தங்களுக்கு இது வேண்டும் அது வேண்டும் என வேண்டுதல்களை வைத்தனர். ஒருவர் வெண்டுகோளை நிறைவேற்றினால் அது அடுத்தவர் வேண்டுகோளுக்கு பதிப்பு வரும் நிலையில் இருந்தது. தவறு செய்பவர்கள் கடவுளை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு உண்டியலில் போட ஆரம்பித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றினால் வேண்டுதல் பலித்தன என காணிக்கை என்ற பெயரில் பொருள்களை அளித்தனர்.
       மனிதர்களின் வேண்டுதல்கள் பொறாமை போட்டி மிகுந்து மனிதநேயப் பண்பு இல்லாமல் இருக்கவே, மனம் நொந்த கடவுள் மனிதர்கள் காணா இடமாகிய இமயமலைக்கு செல்ல அங்கும் மனிதர்களின் தொல்லை தொடர தீவிர யோசனை கொண்டு மனிதர்கள் கண்டு பிடிக்க இயலா இடத்தை தேர்வு செய்தார். மனிதன் அடைய முடியாத இடம். கடவுள் நிம்மதியாக இருக்கும் இடம். மனிதர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்!
      அவர் மறைந்து இருக்குமிடம் மனிதா ‘உன்னுள்ளே’ தான் இருக்கின்றது. கண்டுகொள்!

தர்மத்தின் வழி-நீதிமான்!

Written by

       ஒரு விவசாயி விநாயகப் பெருமானிடம் வந்து 'பகவானே, மழையை நம்பி பயிர் விதைத் திருகின்றேன். மழை பெய்யச் செய்யுங்கள். மழை பெய்தால் தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினார். சிறிது நேரத்தில் இன்னெருவர் வந்து 'பகவானே செங்கல் சூளை போட்டிருக்கின்றேன், மழைபெய்தால் என் வியாபாரம் கெட்டு விடும், ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடாது, மழை பெய்யாவிடில் உங்களுக்கு தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினான்.
       இருவிதமான வேண்டுகோள்கள். பிள்ளையார் யாருக்கு சாதகமாகச் செய்வார். அவர் மனைவி சித்தி, புத்தி இருவருக்கும் கருத்துவேறுபாடு. ஆளுக்கு ஒருவரை சார்ந்து பேசினர். பிள்ளையார் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எனக்கு எப்படியும் தேங்காய் கிடைத்து விடும் எனச் சிரித்து, 'எல்லோரையும் வாழ்விக்க ஒருபொது நியதி உண்டு, விவசாயி சம்பாதிக்க மழைக்காலம் உள்ளது. சூளைக்காரன் சம்பாதிக்க வெய்யில் காலம் உள்ளது. அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன்படுத்தாமல் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற கடவுளின் துணை நாடுவது சரியன்று, எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள்' என்றார்.

விவேகம்-புத்திசாலித்தனம்!

Written by

         சிலருடைய சமயோசித செயல்களால் பல நன்மைகள் நடந்துள்ளதாக புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. தன்னுடைய விபரீத ஆசையால் இராவணன் நவக்கிரகங்களை சிறைப்பிடித்து தன்னுடைய சிம்மாசனத்தின் படிக்கட்டுகளாக அவர்களை உபயோகிக்க இதை அறிந்த நாரதர் இராவணனால் உலகில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகாண அவனிடம் வந்தார். என்னப்பா இப்படி? இது உன் வீரத்திற்கு அழகா? அவர்கள் முதுகு மீது நடந்து அரியாசணம் ஏறலாமா? அவர்களைத் திருப்ப படுக்க வைத்து மார்பின் மீது உன் கால்களை வைத்து ஏறி ஆசனத்தில் அமர்ந்தால் அதுதான் வீரமான செயல் என்றார்.
        இந்த யோசனை இலங்கை வேந்தனுக்கு மிகவும் பிடித்தது. எல்லா நவக்கிரகங்களையும் திருப்பிப் போட்டான். சனிபகவான் மார்புமீது முதன் முதலாக தன் காலை வைக்க அவர் உக்கிரப்பார்வை இராவணன் மீதுபட பீடித்தது சனி. சீதையை சிறைப் பிடித்ததிலிருந்து இராவணன் மரணகாலம் வரை தொடர்ந்தது. விவேகி நாரதரின் புத்திசாலித்தனமான சிறிய ஆலோசனையில் நல்லவர்களுக்கு நன்மையும் தீயோர்களுக்கு துயரும் தரும் நிகழ்வுகள் பல நடந்தேறியது.

பற்றற்ற துறவி!

Written by

        கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டு யாத்திரை புறப்பட்டனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் ஒரு வைரக்கல் கிடப்பதைப் பார்த்து மனைவி காணநேர்ந்தால் அவளுக்கு ஆசை வந்திடும் என்றென்னி அதை புதக்க குழி தோண்டினான். அதை புதைக்கும் போது அங்கு வந்த மனைவி என்ன புதைக்கின்றீகள் எனக் கேட்டு மண்ணைத் தோண்டி வைரத்தைக் கண்டாள். தான் பார்த்தால் ஆசைகள் திருப்பி வந்து விடும் என்று கணவன் நினைத்தது புரிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அன்பரே, வைரத்துக்கும் சாதாரண கல்லுக்கும் வித்தியாசம் தெரிவதாய் இருந்தால் ஏன் உலகத்தை துறந்து வந்தீர்கள் என்றார். தன்னைவிட தன் மனைவி பற்றற்ற துறவியாக மாறிவிட்டது கண்டார்.

நீயே பொக்கிஷம்!

Written by

        ஓர் இடத்தில் தூரத்திலுள்ள பொருளை பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஓர் பொக்கிஷம் உள்ளது எனக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு காலை நேரத்தில் வந்தான் ஒருவன். அவன் நிழல் அவனுக்குப் பின்னால் நீண்டு வீழ்ந்தது. நிழல் பகுதியை மணதில் கொண்டு தோண்ட ஆரம்பித்தான்.
         நன்பகலில் சூரியன் மேலெழுந்து அவன் நிழலை சுருக்கியது. நிழல் காலுக்கடியில் சென்றது. நிழலே இல்லை .அவன் காலையிலிருந்து தோண்டிய களைப்பினூடே ஏமாற்றம் சேர வருத்தமுற்று அழுகை வந்தது. அப்போது அங்கு வந்த பெரியவரிடம் அவன் விபரம்கூற அவர் 'நீ கேள்விபட்டது சரியே..  உன் நிழல் உன் காலடியில் உள்ள பொக்கிஷத்தை சரியாக கான்பிக்கின்றது. நீயே அந்த பொக்கிஷம், அது உன்னுள்ளே இருக்கின்றது என்றார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911773
All
20911773
Your IP: 198.41.230.250
2021-04-13 09:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg