gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

கண்பார்வையற்றவர்கள்!

Written by

      மன்னர் அக்பருக்கு உலகில் பார்வையற்றவர்கள் அதிகமா? குறைவா! பார்வையுள்ளவர்கள் அதிகமா? குறைவா! என்ற தன் சந்தேகத்தைக் கேட்க பீர்பால் அரசவையில் ஒரு துணியை எடுத்து தலையில் கட்டிக் கொண்டு இது என்ன என்றார். அனைவரும் 'தலைப்பாகை' என்றனர். பின் அதே துனியை தோளில் போட்டார். அனைவரும் 'துண்டு' என்றனர். பின் அதே துணியை எடுத்து இடையில் கட்ட அனைவரும் 'கோவணம்' என்றனர். உடனே பீர்பால் மன்னரே இவர்கள் அனைவரும் குருடர்கள். துணி என்று சொல்லாமல் வேறு பெயர்களை கூறியுள்ளனர். உலகில் குருடர்கள் அதிகமா? பார்வையுள்ளவர்கள் அதிகமா? என்ற கேள்விக்கு இதுதான் பதில் என்றார்.            நீங்கள் எப்படி! கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்காதீர்கள்!

அந்த இன்னொன்று! கற்பனை பயம்!

Written by

       மாடிப்பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா அலர்ஜி. மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன். காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலனிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் என விழுந்தது. விட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்பா ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே? என்றார். ஒ... மன்னிச்சிருங்கள்.. பழக்கதோஷம்.. இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார். மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலனியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சென்னது ஞாபகம் வந்தது. ஆகா.. தப்பு செய்துவிட்டோமே.. இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலனியை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சப்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான். விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான். ''என்னப்பா..ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலனியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதை பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார். இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில் பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம். வீணான கற்பனைகளால் குழப்பம் அடையாதீர்கள்!

எண்ண அலைகள்! பிரதிபலிப்பு!

Written by

      வீதி உலா வரும் மன்னரை அனைவரும் வணங்கினர். சந்தன மர வியாபாரியும் வணங்கினான். ஆனால் மன்னனுக்கு வியாபாரி வணங்கும் போது திடுக் என்ற உணர்வும் எரிச்சலும் ஏற்பட்டது. நீதிமான் அரசர், காரணமின்றி யாரையும் கோபிக்கக் கூடாது என நினைத்து பின்னர் அமைச்சரிடம் இது பற்றிக் கூறினார். நாளை சரியாகிவிடும் என்ற அமைச்சரின் கூற்றுப்படி அடுத்தநாள் சந்தன வியாபாரி கொலுமண்டபத்தில் அரசனை வணங்கினான். அரசனுக்கு இப்போது கோபம் வரவில்லை. புன்முறுவல் வந்தது. இது எப்படி என அமைச்சரைக் கேட்க அவர் மன்னா, வியாபாரி நிறைய சந்தன மரங்களை வாங்கி வைத்துள்ளான். விற்பனை ஏதுமில்லை. மன்னர் இறந்தாலாவது அவரை எரிப்பதற்கு நிறைய மரங்களை வாங்குவர். ஆனால் மன்னர் திடகாத்திரமாய் இருக்கிறாரே என வருந்திக் கொண்டு வணங்கியிருக்கின்றான். அன்று நீங்கள் எரிச்சல் அடைந்தீர். அவனிடமிருந்த மரங்களை அரசர் பிறந்தநாளுக்கு யாகத்திற்கு என வாங்கிவிட்டேன். இனி ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இது போன்று வியாபாரம் ஆகும் என நினைத்து நீங்கள் பல்லாண்டு வாழ்க என இன்று வாழ்த்தியது உங்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. நம்மை பற்றிய பிறரது நல்லெண்ணெங்கள் நமக்கு மகிழ்வையையும், தீயஎண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும். அந்தளவுக்கு எண்ணங்கள் மனதை பாதிக்கின்றன என்றார். நீங்களும் நல்ல எண்ணங்களோடு செயல்படுங்கள்!

மனிதாபிமானம்!

Written by

        போதனை முடிந்ததும் தன் மாணவர்களிடம் யார் என் போதனையை சரியாக நடைமுறைப் படுத்துகின்றாரோ அவரே என் சீடர் என்றார். சில நாட்களுக்குப் பின் மாணவர்களை ஓர் இடத்திற்கு வரச் சொன்னார். வழியில் முட்புதர்கள் கிடந்தன, முதல் மாணவன் யாரோ முட்டாள் வழியில் முள்ளை போட்டுவிட்டு போய்விட்டான், எனக்கு நேரமாகிவிட்டது என கடிந்து விலகிச் சென்று விட்டான். இரண்டாம் மாணவன் எத்தனை முள் இருந்தால் என்ன அப்படியே தாண்டிச் சென்று விடுவேன், என அப்படியே செய்தான். மூன்றாமவன் பின் வருபவர்களுக்கு தொந்திரவு என் நினைத்து, முட்களை அப்புறப்படுத்திச் சென்றான். மற்றவர்கள் ஞானி முன்னிருக்க தன் தாமத்திற்கு காரணம் சொல்லி வருத்தம் தெரிவித்தான். உன் தாமதம் மனிதாபி மானத்தால் ஏற்பட்டது என்று கூறி அவனே தன் சீடன் என்றார். பிற உயிர்கள்மேல் கொண்டிருக்கும் மனிதாபிமானமே மனிதனின் சிறப்பு!

முயற்சிக்கு உரியபலன்!

Written by

ஒர் ஞானியிடம், தான் எத்தனை முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை என சொல்லி வருந்தினான் ஒருவன். அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்று அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லி வீட்டினுள் சில பெருட்களை இடம் மற்றி வைத்தார் அந்த ஞானி. பின் அவனை வீட்டினுள் வரச் சொல்லி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்கு இருட்டவே அவனிடம் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். வீட்டினுள் வழக்கமாக தான்வைத்த இடத்தில் பெருள்கள் இல்லாததால் தடவி தடவி கண்டு பிடித்து விளக்கை ஏற்றினான். அப்போது அந்த பெரியவர் நீ எப்போதும் வைக்குமிடத்தில் பெருள்கள் இல்லையெனினும் வீட்டில் கண்டிப்பாக இருக்கிறது என்ற உறுதியில் முயற்சி செய்து விளக்கை ஏற்றினாய். எதை நோக்கி போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டால், நீ எடுக்கும் சிறிய முயற்சி கூட, இருள் போன்ற தடைகளைமீறி பலன் கொடுக்கும். இதை புரிந்து செயல் படு. வெற்றி நிச்சயம் என்றார். முயற்சித்தவர் இகழ்ச்சி அடையார்!

தமிழ் வள்ளல்!

Written by

தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம்பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக் கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார். பொறுமையிழந்த கவி தன் பரபரப்பை உணர்த்த, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர் 'கொக்கு பறக்கும். புறா பறக்கும். குயில் பறக்கும். நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார். பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாலை இலை போட பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அது பசியை போக்குமா! விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்தி விட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து வழி அனுப்பினார். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது ஓர் வழக்குமொழி!

குறை காண்பது!

Written by

வடகலைப் பிரிவினர் ஆங்கில 'யு'வடிவத்தில் திருநாமம் இட்டிருப்பார்கள். தென்கலைப் பிரிவினர் அதன்கீழே ஒரு கோடு இழுத்து திருநாமம் இட்டிருப்பார்கள். வடகலைப் பெரியவர் ஒருவர் இரண்டு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உடம்பின் வலது பக்கம் வடகலை நாமத்தையும், இடது பக்கம் தென் கலை நமத்தையும் இட்டுக் கொண்டார்.       எதிரில் வந்த தென் கலைப்பிரிவினர் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் 'உன் வடகலை நாமத்தை மட்டும் வலது பக்கம் ஜம்மென்று போட்டுக் கொண்டாய், எங்களுக்கு இடப்பக்கம்தானே கொடுத்திருக்கின்றாய்' என்றனர். அதிர்ச்சியடைந்த பெரியவர் 'நண்பர்களே! நான் உங்கள் தென்கலை நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கையால் இட்டுக்கொண்டேன்! எங்கள் வடகலை நாமத்தை இடது கையால் இட்டுக் கொண்டேன்! புரிந்து கொள்ளுங்கள். எதற்கும் எப்படியும் குறை கண்டு துவேஷத்தை வளர்க்கும் மனப்பான்மை கொள்ளாதீர் என்றார். நீங்களும் அந்த குணம் அற்றவர்தானே!

உருவ வழிபாடு!

Written by

ஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிகையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையை கண்டித்து பேசினார் அரசர். பொருமையாக கேட்டார் பக்திமான். மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்றுகேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமிழுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி, உருவற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.

தன்னம்பிக்கை!

Written by

மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. கடவுள் நம்பிக்கையுடன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.

இருக்கும் இடத்தைவிட்டு...!

Written by

சீட்டுக் கம்பெனி நடத்தும் ஒருவன் ஒர் ஊருக்கு சென்று அங்கிருப்பவர்களிடம் அந்த மாதத்திற்குரிய சீட்டுத் தொகையை வசூலித்துவிட்டு திருப்பும் வழியில் இருட்டிவிட அங்கிருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான். அச்சத்திரத்தில் ஒர் திருடன் இவனிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு இவன் உறங்கியதும் அபகரிக்க திட்டமிட்டான், சீட்டு பணம் வசூலித்தவனுக்கு அந்த நபரைப் பார்த்து சந்தேகம் வர என்ன செய்வது. எப்படி பணத்தை பாதுகாப்பது என நினைத்தான்.     சிறிது நேரத்தில் அசதியில் அயர்ந்தான். காலையில் கண் விழித்தபோது திருடன் இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன பார்க்கிறாய்? என கேட்க அதற்கு, 'நீ பணம் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நீ அசந்து தூங்கும்போது உன் சட்டைப்பையில், வேஷ்டியில், நீ கொண்டுவந்த பையில் எங்கும் காணவில்லை. பணம் கைக்கு கிடைக்க வில்லை. அதை நீ எப்படி எங்கு ஒளித்து வைத்தாய்' என்ற நினைவில் நான் அதிசயத்துக் கொண்டிருக்கின்றேன் என்றான்.   பணம் வசூலித்து வந்தவன் அது பத்திரமாக உன் தலையனைக்கு கீழ் இருக்கிறது என்றும் இரவு எனக்கு பாதுகாப்பாக இருந்ததிற்கு நன்றி எனக் கூறிப் பணத்தை எடுத்துச் சென்றான்.
நீ தேடுவது உன்னிடமே இருக்கின்றது, அறியாமல், புரியாமல் தேடிக்கொண்டிருக்கின்றாய் மனமே!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911707
All
20911707
Your IP: 172.68.168.134
2021-04-13 09:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg