gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

 

#*#*#*#*#

 

46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!

 

கிரகங்கள் அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், மழை வளம் என அனைத்தையும் தருபவன. எனவே அவைகளை ஆராதிக்க வேண்டும். வேள்வி செய்யலாம். கிரகங்களை ஆராதித்து வழிபடுவதால் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். கிரகங்களின் மூல மந்திரம் தெரியாவிடினும் அந்தந்த கிரகங்களின் காயத்ரி மந்திரத்தை சொல்லி பயன் பெறலாம்.

சூரியன், சந்திரன், அங்காரகன் எனும் செவ்வாய், புதன், பிரகஸ்பதி என்ற தேவ குருவாகிய வியாழன், சுக்கிரன் என்ற வெள்ளியாகிய அசுர குரு, சூரியனின் மகனான சனி, ராகு-கேது என்ற நிழற் கிரகங்கள் ஆகிய ஒன்பதும் நவகிரகங்கள்.

ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் சஞ்சரித்தல் திடீரென அசம்பாவிதங்கள் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும்.

சூரியன் சில காலம் தெரியாவிட்டாலும் புகையுடன் தெரிந்தாலும், வானில் தூமகேது, எரிநட்சத்திரம் தெரிந்து விழுந்தாலும் இவைகள் எல்லாம் துர் நிமித்தங்கள்.

ஒவ்வொரு நட்சத்திரதிற்கும், கிரகங்களுக்கும் துர் நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தைக் குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்கு வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும்.

அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!


தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!


#*#*#*#*#

 

45.தானம் ஏன் செய்ய வேண்டும்!

 

தானம் செய்வதை நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது.

நீச்சமான நடத்தை உள்ளவர்களிடம் தானம் பெறக்கூடாது. தன்னுடைய ஆச்சாரியர், குரு மற்றும் வேலைக்காரன் ஆகியோரிடமிருந்து தானம் பெறக்கூடாது.

நல்வழியில் ஈட்டிய பொருட்களையே தானம் அளிக்க வேண்டும்.

தானம் கொடுப்பவன் கிழக்கு நோக்கியும் வாங்குபவன் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும்.

பூதானம் என்பது மிகவும் உன்னதமானது. வேதம் விதித்த கர்மங்களை விதிமுறைப்படி அனுஷ்டித்து வரும் ஒரு நல்ல அந்தணனுக்கு தனக்குள்ள பூமியில் சாணளவாவது தானமாகக் கொடுப்பவன் சிவலோகத்தை அடைவான். பயிர்கள் விளைந்திருக்கும் பூமியைத் தானம் செய்பவன் அந்த பூமியில் எவ்வளவு அணுக்கள் உண்டோ அவ்வளவு காலத்திற்கு சொர்க்கத்தில் வாழ்வான்.

தேவதைகள பூஜித்து முன்னோர்களை வணங்கி தானம் அளிக்கவேண்டும். தானம் கொடுப்பவர், வாங்குபவர் ஆகிய இருவரின் கோத்திரம், தகப்பனார், பாட்டனார், முபாட்டனார் ஆகியோரின் பெயரைக்கூறிச் செய்தால் இரு சாராரின் ஆயுள் பெருகும்.

குறிப்பறிந்து செய்யும் தானமும் தர்மமும் பலமடங்கு புண்னிய பலனைத் தரும். பசி என ஒரு உயிர் யாசித்தலுக்குமுன் உணவளித்தல் உத்தமம். உணவு கேட்டபின் அளிப்பது மத்திமம். கேட்டும் கொடுக்காமல் இருப்பது அதர்மம். ஏழ்மையின் பிடியில் ஒரூஉயிர் துன்பப்படும்போது வலியச் சென்று உதவுவது பிறவியில் ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும். வசதியின்றி நோயால் துன்பப்படும் உயிர்க்கு செய்கின்ற உதவி அந்த உயிர்க்கு பல பிறவிகளுக்கு ஆரோக்கிய ஆனந்தத்தைக் கொடுக்கும்.

தானம் கொடுப்பது பெருமைக்கு அல்ல. தானம் பெற்ற பொருளை சரியாக உபயோகிக்க வேண்டும். உதாரணமாக பசுக்களைப் பெறுபவன் அதை விற்கவோ பட்டினி போடவோ கூடாது. நன்கு பராமரிக்க வேண்டும். உரியவர் பார்த்து தானம் அளித்தல் சிறப்பு. தகுந்தவனுக்கு தகுந்த காலத்தில் நல்ல ஷேத்திரத் தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

நல்ல ஞானம் உடையவன், நற்குணங்களை உடையவன், தரும சிந்தனை உடையவன், எந்த பிராணிக்கும் இம்சை செய்யாதவன் ஆகியவர்களே தானம் பெறத் தகுதியுடையவர்கள்.

திருமணத்தின்போது மணமகனுக்கு பெண்ணுடன், சொர்ணம், எள்ளு, யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம், சிவப்பு நிறப்பசுக்கள், குதிரைகள், பட்டாடைகள் வழங்குவது தசமகா தானம் எனப்படும்.

பசு(கோதானம்), தங்கம்(சொர்ணதானம்), எள்(திலதானம்), உப்பு(லவணதானம்), தான்யங்கள்(தானியதானம்), காலணி, சந்தனக் கட்டை, நீர்ப்பாத்திரங்கள், உணவருந்தும் பாத்திரங்கள், நிலம்(புவிதானம்), குடை, விசிறி, கட்டில், ஜோடியான ஆடைகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். புடவை கொடுக்கும்பொது இரவிக்கையுடனும் வேஷ்டி கொடுக்கும்போது துண்டும் கொடுக்க வேண்டும்.

தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்போது தானமாகக் கொடுத்தல் உலகத்தில் நல்ல வாழ்கையுடன் முக்தியையும் தர வல்லது.

கோதானம் செய்தால் ஒருவன் இப்பிறவியில் வளமான வாழ்வையும், நீண்ட ஆயுளையும் பெறுவதுடன், மரணத்துக்குப்பின் சொர்க்க வாசம் பெறுவான்.

பூணூலுக்கும், மங்கல சரட்டிற்கும், ஆடைக்கும் பருத்தியே சிறந்தது. எனவே பருத்தி ஆடையைத் தானம் செய்வது –வஸ்திர தானம் சிறப்புடையதாகும்.

பலவகையான தானங்கள் அளிப்பவர் இப்பிறவியில் உலக சுகங்களைப் பெற்று அடுத்த பிறவியில் முக்தியடைவர்.

கிருத யுகத்தில் ஒருவனைத் தேடிச் சென்று தானம் அளிக்கப்பட்டது.
திரோதயுகத்தில் அந்தணர்களை வரவழைத்து திருப்தியாக தானம் அளிக்கப்பட்டது.
துவாபரயுகத்தில் தானம் கேட்பவர்களுக்குத் தானம் அளிக்கப்பட்டது.
கலியுகத்தில் தானம் அளிப்பவர்களைத் தேடிச் சென்று தானம் பெறப்படுகின்றது.

கயை, பிரயாகை, கங்கை போன்ற புண்ணிய இடங்களில் தானம் பெறுபவர்களைத் தேடிச் சென்று தானம் அளிக்க வேண்டும்.

இஷ்ட தானங்கள்(அக்னி ஹோமம், தவ விரதங்கள் கடைப்பிடிப்பது, வேத நெறியில் நடப்பது, உண்மை பேசுவது, கர்மாக்கள் செய்வது),

பூர்த்தி தானங்கள்(நீர் நிலைகள் உண்டாக்குதல், அன்னசத்திரம் அமைத்தல், யாத்திரிகர் தங்குவதற்கு சத்திரம் கட்டுதல், பழமரங்கள் நடுதல்),

பருத்தி தானம் மகாதானம். பருத்தி தானம் மரித்தபின் சிவலோகம் வாசம் கிடைக்கும்.

மேலும் கன்யாதனம், சிரார்த்த தானம், ஹிரண்ய கர்ப்ப தானம், கோதானம், லவணதானம் (உப்பு), குளாத்ரிதானம் (வெல்லப்பாகு), திலதானம் (எள்ளு), ஸ்வக்ணதானம், பூதானம் (பூமி) ஆகிய தானங்கள் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

தன் மகளை கன்னிகா தானம் செய்துகொடுப்பதால் அவளது தந்தை சிரேஷ்ட பலன்களை அடைவார். அவருக்குப் பதில் வேறொருவர் கன்னிகா தானம் செய்தாலும் அவர் அப்பலன் பெறுவர்.

எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம். வறுமையில் வாடுபவர்களுக்கும், பசியால் தவிப்பவர்களுக்கும் அன்னமளிக்கும் இந்த இணையற்ற தானத்தில் பதினாறில் ஒரு பங்கு அளவுகூட மற்ற தானங்கள் பலனளிப்பதில்லை.

ஒரு ஜீவன் மரிக்கும் சமயம் திலம் (எள்) லவணம் (உப்பு), பருத்தி, தான்யம், இரும்பு, பொன், பசு, பூமி என தானம் தரலாம்.

எள், இரும்பு தானம் யமனை மகிழ்ச்சியடையச் செய்யும். லவண தானம் யமபயத்தைப் போக்கும். தானிய தானம் யம தூதர்களை மகிழ்விக்கும். செர்ணம், கோ தானங்கள் பாவங்களைப் போக்கும்.

சாஸ்திரப்படி யாகங்கள் செய்தாலும் யாகம் நடத்தியவருக்கு தட்சினை கொடுக்க வேண்டும். அப்போதுதான் யாகத்தின் முழுப்பலன் கிட்டும்

தானம், தட்சினை என்பதைப் பிறர்வாழக் கொடுப்பதாகக் கருத வேண்டும்.

வறியோர் வாழ வளத்தைக் கொடுப்பதுதான் உண்மையான தவம். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான் உடம்பு மட்டும் இருந்தால் போதும் என நினைக்கக்கூடாது.

அறவழியில் நில்லாதவர்கள் தானம்பெறத் தகுதியில்லாதவர்கள்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:53

வணங்கும்முறை!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

#*#*#*#*#

 

44.வணங்கும்முறை!

 

1.ப்ரதுதானா- எழுந்து நின்று வணங்கி வரவேற்பது.

2.நமஸ்காரா- நமஸ்தே / வணக்கம் என்று கூறி வணங்குதல்.

3.உபஸங்க்ரஹன்- பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதங்களை தொட்டு வணங்குதல்.

4.அஷ்டாங்க / ஸாஷ்டாங்க- இறைவன் மற்றும் பெரியோரின் முன்னே கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, நெற்றி மற்றும் கைகள் நிலத்தில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். ஆண்களுக்கு மட்டுமே உரியது. எட்டு அங்கங்கள் தரையில் படும்படி வணங்குவதாகும்.

5.ப்ரத்யபிவாதனா- பிறர் வணக்கத்திற்கு பதிலாக வணக்கம் கூறுதல்.

6.பஞ்சாங்கநமஸ்காரம்- இது பெண்களுக்குரியது. இறைவன் மற்றும் பெறியோர்களை நெற்றி, முழங்கால்கள் இரண்டு, பாத நுனிகள் இரண்டும் பூமியில் படுமாறு வணங்குதல்.
7.உத்தம நமஸ்காரம்- லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மந்திரங்களை உச்சரித்து இறைவனை மனதார வணங்குதல். மனிதன் தன் ஆத்ம இருப்பிடமான இதயத்திலிருந்து வணங்குவதாக ஐதீகம்.


#*#*#*#*#

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


#*#*#*#*#

 

43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!

 

ஓர் ஆணின் இரத்தம் Rh+ ஆக இருந்து அவர் மனைவியின் இரத்தம் Rh- ஆக இருந்தால் அவர்களின் குழந்தைக்கு அப்பா இரத்தத்துடன் ஒன்றி Rh+ ஆக இருக்கும் அல்லது அம்மாவுடன் ஒன்றி Rh- ஆக இருக்கும். குழந்தை அம்மா வயிற்றில் வளர்வதால் அம்மாவின் இரத்தத்தைப்போல் Rh- ஆக இருந்தால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் Rh+ ஆக அப்பாவினுடையது போலிருந்தால் அது அம்மாவின் Rh- இரத்தத்துடன் கலக்கும்போது இரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகி குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அப்பாவின் இரத்தமும் அம்மாவின் இரத்தமும் ஒன்றாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

சரி இதை ஏன் இந்தப் பகுதியில் சொல்லியிருக்கின்றேன் என்றால் நமது முன்னோர்கள் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு செவ்வாய் தோஷமுடைய பெண்தான் வேண்டுமென்று கண்டிப்புடன் சொல்லிவைத்தனர். பொதுவாக செவ்வாய் தோஷமுள்ளவர்கள் ஆணாக இருந்தாலும்/ பெண்ணாக இருந்தாலும் அவர்ளில் 90% பேர் Rh- இரத்தம் உடையவர்களே என தற்போது ஆராச்சியில் கண்டு பிடித்துள்ளார்கள்.. எனவே மேலே சொன்னது போல் ஆணின் இரத்தமும் பெண்ணின் இரத்தமும் Rh- ஆக இருந்து இணைவது அவர்களின் குழந்தைக்கும் குடும்ப வாழ்விற்கும் உகந்தது என அறிந்து அதை நடைமுறைப் படுத்திவைத்துள்ளது விஞ்ஞான வியப்பாகும்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!


#*#*#*#*#

 

42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!

 

சாந்த்ர-சுக்லபக்ஷம் பிரதைமுதல் அமாவாசை வரை சாந்த்ர மாதம் எனப்படும். சிரார்த்தம், திதி போன்ற தர்ம காரியங்களுக்கு சாந்த்ர மாதம் பயன்படும்.

சௌர-சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு போகும் வரையில் சௌர மாதம். விவாஹம் போன்ற சத் காரியங்களைச் செய்ய பயன்படும்.

சாவனம்-சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம்வரை சாவனம். 30 நாட்களைக் கொண்டது. வருடம் பூராவும் சாவன மாதம் வருகிறது. பிராயசித்தம், அன்னப்ராசனம், மந்திர உபாசனை, ராஜகிரஹம் போவதற்கு, வேள்வி ஆகியவற்றைக் கணிக்க சாவன மாதம் பயன்படும்.

நட்சத்திர- அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம்வரை நட்சத்திர மாதம். பித்ரு கணங்களின் காரியங்களைச் செய்ய நட்சத்திர மாதம் பயன்படும். பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகின்றதோ அதைக் கொண்டு அந்த மாதத்தின் பெயர் வைக்கப்படும்.

30 நாட்கள் முழுமையாக அமையாத மாதம் மல மாதம் எனப்படும். மல மாதங்களில் பிண்டம் கொடுக்கலாம். விவாகம், வேள்விகள் செய்யக் கூடாது. தீர்த்த யாத்திரை, தேவதரிசனம், விரத உபவாசம், சீமந்தம், ருதுசாந்தி, ராஜ்யாபிஷேகம் போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். பொதுவாக ஆடி, மார்கழி தவிர மற்ற மாதங்கள் விவாகம் நடத்திட ஏற்றவை. விரத ஆரம்பம், பிரதிஷ்டை, உபநயனம், மந்திரோபாசனை, விவாஹம், புதுமனை புகுவிழா, ஆகியவை தவிர்த்தல் நலம்.

30 க்கும் மேற்பட்ட நாட்கள் 31 / 32 இருந்தால் அந்த மாதம் புருஷோத்த மாதம் எனப்படும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒரு முறை 32 நாட்கள் வரும்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.


#*#*#*#*#

 

41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!


ஒவ்வொரு பருவகால மாற்றத்திலும் அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப வழிபாடு முறைகளை ஏற்படுத்தி உடல் நலத்தைக் காத்துக் கொள்ள வகை செய்துள்ளனர் முன்னோர்கள்.

உஷ்ணகாலத்தில் வழிபட வேண்டிய தெய்வங்கள்: ஜுரதேவர், சீதளாதேவி, மாரியம்மன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்கள். வெம்மை நோயிலிருந்து காத்து ஆரோக்கிய ஆயுளை அருள்பவர்கள்.

சீதளாதேவி: தேவலோகப் பெண் ஒருத்தி பிரம்மனிடம் மற்ற தெய்வங்களைப் போல் தன்னையும் வணங்க வரம் கேட்க அவள் தகுதியை பரிசோதிக்க உலக மக்களுக்கு வரக்கூடிய நோய்களை எல்லாம் ஒன்று திரட்டி அதை உளுந்தம் பருப்பாக மாற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதை கீழே சிந்தாமல் நான் குறிப்பிடும் காலம் வரை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்ல, பூலோகத்தில் அவளது கவனம் திசை திரும்பி உளுந்து சிந்த, பிரம்மன் அந்த உளுந்தில் அடக்கி வைத்திருந்த பிணிகள் எல்லாம் வெளிப்பட்டு பரவி மக்களை வாட்டி வதைக்க, தன்னால்தான் இந்நிலை என வருந்தியவள், மக்களை காப்பாற்ற பிரம்மனிடம் சென்று தன் செய்த தவறை ஒப்புக்கொண்டு தன்னை தண்டித்து மக்களை நோய்களிலிருந்து காக்க வேண்டினாள்.

செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொண்டு மக்கள் படும் அவஸ்தையை கண்டு மனம் வருந்தும் தகுதியால் பூவுலகில் உன்னால் பரவிய நோய்களைத் தீர்க்கும் தெய்வமாக நீ விளங்குவாய் என அருளினார். சீதளாதேவி எனும் பெயருடன் உஷ்ணத்தால் ஏற்பட்ட மக்களின் வெம்மை நோய்களை தன்னை வணங்குபவர்களுக்கு நீக்கி அருள் புரிகின்றாள்.

ஜுரதேவர்: சீதளாதேவியின் சகோதரர் ஜூரதேவர். தன் தங்கையை பூவுலகில் பார்த்துவிட்டு வரும் வழியில் மக்கள் விஷஜுரத்தால் பாதிக்கப்பட்டு தவிப்பதைப் பார்த்து பிரம்மனிடம் சென்று மக்களின் துயரத்தைப் போக்க வேண்டினார். தங்கையைப் பார்த்த சந்தோஷத்தைவிட மக்களின் துயரத்தை நினைக்கும் உனக்கு அந்த விஷ ஜுரத்தைப் போக்கும் ஆற்றலை அளிக்கின்றேன் என்றார். உன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிவாய் என்றார்.


மாரியம்மன்: கோடைக்காலதில் அனைத்து உயிர்களையும் தன் அருள் மழையினால் குளிர வைப்பதால் மாரி. அம்மை நோய் கண்டு தன்னை வணங்குபவர்களின் இன்னலைத் தீர்ப்பவள். தான் தங்கிட குளிர்ந்த நிழலும் காற்றும் தந்த வேப்ப மரமும் அதன் இலைகளுமே கோடையில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற அருள்.

திருச்செந்தூர் முருகன்: தன்னை வழிபட்ட மக்களுக்கு பன்னீர் இலையில் அளிக்கப்படும் பிரசாதம் வெப்ப மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளை நீக்க வல்லது.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:42

மூச்சுகள்!

Written by

ஓம்நமசிவய!

கூர்வாமரோ. முருகார் மலர்த்தாம் முடியானை அடியார்
முயற்சித்திறம் திருகாமல் விளைவிக்கும் தயானைவதனச்
செழுங்குன்றினைப் பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி
புத்தேளிரும் ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.


#*#*#*#*#

 

40.மூச்சுகள்!

 

மூச்சு விடும் அளவிலும் ஒழுக்கமுறை வேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்னிக்கை 21600 என்ற அளவில் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பவர்கள் 120 ஆண்டுகள் வாழலாம். ஒரு மானிட உடம்பு தினந்தோறும் நிமிஷத்திற்கு பதினைந்து மூச்சுகள் என மூச்சு விடுகின்றது. மூக்கின் வலது இடது துவாரங்கள் வழியாக நம் சுவாசம் நடக்கின்றது. உள்ளுக்கும் இழுக்கும் மூச்சுக்கு நிஸ்வாஸம்(பூரகம்)- நிச்சுவாசம் என்றும் வெளிவிடும் மூச்சுக்கு உஸ்வாஸம்(ரேசகம்)- உச்சுவாசம் என்றும் பெயர். உள்ளே இழுத்த மூச்சை நிறுத்துவது அதாவது கட்டுவது, மற்றும் வெளியே விட்டு மூச்சை நிறுத்துதல் அதாவது அசைவுற செய்தல் என்பதை கும்பகம் என்பர். முன்னது உள்கும்பகம், பின்னது வெளிக்கும்பகம் எனப்படும். பூரக, ரேசக மூச்சுகளை யோகவலிமையால் நிறுத்திவைக்க முடிந்தவருக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் விகாரங்கள் ஒடுங்கிவிடும். இதை லயம் என்றும் கூறலாம். யோகாப்பியாசன சித்தி பெற்றவர்களுக்கே இந்த லயம் ஏற்படும். உள்ளே வாங்கும் நிஸ்வாஸ(பூரக), வெளியே விடும் உஸ்வாஸ(ரேசக) மூச்சுகள் ஹம்ஸ என்றும் சொல்லப்படும்.

இந்த பூரக ரேசக மூச்சுகள் ஒவ்வொரு ஜீவனின் உடம்பிலும் உள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞேயம் என்பதிலும் மற்றும் ஸகஸ்ராரம் என்பதிலும் சுற்றி சுற்றி வந்து அந்த ஜீவனின் ஆயுள் பிரமாண காலத்தை நடத்திக் கொண்டிருக்கும். இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்களின் அந்தக் கரண வியாபாரத்தால் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளை க்ஷீணப்படுத்தி நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்யும். ஆனால் தற்போது ஜீவன்கள் ஓடுவதனாலும் நடப்பதனாலும் தூங்குவதனாலும் போகம் செய்வதனாலும் சுவாசம் அதிகரித்து உடலின் ஜீவசக்தி குறைந்து 120 ஆண்டுகள் என்பது குறைந்து விடுகின்றது. ஜீவன் விடும் சுவாசம் குறைந்தால் வயது ஏறும். அதற்காண பயிற்சிகளே பிரணாயாமம், வாசியோகம். எனவே இதிலிருந்து விடுபட்டு நலமுடன் இருக்க பிரணாயாமம் செய்ய வேண்டும்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை
நிற்கவே வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ்
சொன்னநாள் ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர்
எழுந்தாணி தன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு


#*#*#*#*#

 

39.நோய்கள் வராமலிருக்க!

 

தூய்மை, கண்களைத் தூய நீரால் கழுவுதல், கால்-பாதங்கள், தலைக்கு எண்ணெய் தடவுதல், தினமும் குளித்தல், உடற்பயிற்சி செய்தல், சத்துள்ள ஆகாரம் உண்ணுதல், இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், நல்ல ஒழுக்கம் ஆகியன நோய்களைத் தடுக்கும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவரை அணுகி தக்க வைத்தியம் செய்து கொள்ளல் வேண்டும். வருமுன் காத்தல் என்பதற்கு ஏற்ப நோய்கள் வராமலிருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கைப் பாதையை சீரக்கிக் கொள்ளவேண்டும்.

தினமும் தியானம் செய்ய வேண்டும்.

தூய்மை காத்து, நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நம் உடலில் தொண்ணூற்றாறு வகையான வேதியல் தொழில்கள் நடை பெறுகின்றன. இந்த தொண்ணூற்றாறு தந்துவங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் உடலில் நோய்க்கு காரணம். உடலில் ஐம்பூதங்களின் இயக்கம் சரிவர இருக்க வேண்டும். அப்பு வாகிய நீர் அதிகம் உடலிருந்து வெளியேறக்கூடாது, நெருப்பு என்கிற அக்னி அளவுடன் இருக்க வேண்டும், நாடிகள் சரிவர இயங்க வேண்டும். மூச்சுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும். உடல் கழிவுகள் அவ்வப்போது உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். இதுபோன்ற பஞ்ச பூத செயல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் விளைவாக உடலில் பலவித நோய்கள் தோன்றும் என்பதை அறிக!

நம் உடலில் உள்ள நிணநீர்-இரசம்-சாரம், ரத்தம்-உதிரம்-செந்நீர், தசை-மாமிசம்-ஊன், கொழுப்பு-மேதஸ், எலும்பு-அஸ்தி-என்பு, மஜ்ஜை-மூளை, வெண்ணீர்-ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் ஆகிய தாதுக்கள் ஏழையும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் யோகம் செய்து கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் சித்தர்கள். எனவே யோகம் செய்வீர்!

நம் முன்னோர்கள் ஆண்டின் முதல் நாள் சித்திரை விஷு- தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஆண்டு முழுவதும் நன்மையும் மங்களமும் தங்கிட இறைவனை வணங்குவதை மரபாக்கியுள்ளனர். அன்று பஞ்சாங்க படனம் கேட்பர். அதாவது பஞ்சாங்க விவரங்களை வேதம் கற்ற ஒருவர் அந்த ஆண்டின் முழுமையான விவரங்களைப் படிக்கக் கேட்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பண்டிகை விரதங்களை அனுஷ்டிக்கவும் உதவுவார். அடுத்ததாக எந்த பண்டிகைக்கு என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும் என்றும் வரையறுத்துள்ளனர். சித்திரை அடுத்து வரும் கோடையில் அம்மை, வைசூரி போன்ற நோய் தாக்காமல் இருக்க கிருமி நாசினியான கசப்பு மிகுந்த வேப்பம் பூவை சித்திரை விஷுவன்று உணவில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கரிப்பு ஆகிய சுவைகளையும் சேர்த்து உணவு தயாரித்து பண்டிகையன்று இறையை வழிபட்டு விருந்து படைக்க வலியுறுத்தியுள்ளனர்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!

 

காலை உறக்கத்திலிருந்து எழும்போது இந்நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் எனக் கடவுளைத் தியானிக்க வேண்டும். இரவு உறங்கும்முன் இந்நாள் நன்றாகக் கழிந்ததற்கும் இறைவனைத் தியானித்தல் அவசியம்.

காலைக் கடன்களான பல்துலக்கி, மலம் ஜலம் கழித்து, நீராடி, கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழிமொழிப்படி- தூய ஆடை உடுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் காலைக் கடன்கள் எல்லாவற்றையும் தினசரி கட்டாயம் செய்ய வேண்டும்.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சுத்தமாய் விநாயகர், குலதெய்வம், மற்றும் விருப்பான தெய்வங்களை வழிபட்டு பின் வாழ்க்கைக்குத் தேவையான தினசரி செயல்களில் ஈடுபட வேண்டும்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் என செயல்படும்போது பிறர் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

செல்வம் சேர்க்கும் ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அச்செல்வத்தை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் எனச் சிந்திக்காமல் தர்ம வழிகளில் சேர்க்க நினைவு கொண்ட செயலாக்கம் வேண்டும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதிகமான இருள் சூழ்ந்த பகுதியில் செல்லும்போது கையில் ஒளிதரக்கூடிய விளக்குகளின்றி பயனித்தல் கூடாது.

வஞ்சகர்களுடன் உறவோ, நட்போ வைத்துக் கொள்ளக்கூடாது. குருகிய வழியில் வெற்றி பெறலாம், நிறைய பொருள் சேர்க்கலாம் என ஆசைக்காட்டி மோசம் செய்யும் தீயோர் சாகவாசம் கூடாது. அவ்வகைச் சேர்க்கை ஆரம்ப காலத்தில் நன்றாக வளமிக்கதாகத் தெரியும். பின்நாளில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும்.

ஒருவர் பேசும் போது அவர் என்ன சொல்கின்றார் என்பதை முழுவதையும் கேட்க வேண்டும் குறுக்கிட்டுப் பேசுதல் கூடாது.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:37

யாத்திரை எதற்கு!

Written by

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.


#*#*#*#*#

 

37.யாத்திரை எதற்கு!

 

தீர்த்த யாத்திரை நம் கலாசாரத்தின் அரிய உயரிய பண்பாகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள புனிதமான தீர்த்தங்களில் நீராடி இறைவனைத் தரிசிக்கவேண்டும். தீர்த்த யாத்திரைகளின்போது இயன்ற அளவு தானம் செய்ய வேண்டும்.

புஷ்யம், அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு-புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், ரேவதி, ஆகிய நட்சத்திரங்கள் எல்லா வகையிலும் பிரயாணத்திற்கு உகந்தது. இந்த நட்சத்திரங்களில் ஆரம்பித்த யாத்திரை க்ஷேம லாபங்களுடன் இனிது முடியும்

பொதுவாக சுக்லபக்ஷ காலம் யாத்திரைக்கு விசேடமானது

சஷ்டி, அஷ்டமி, துவாதசி இவையல்லாத திதிகளில் பிரயாணம் சுபம்.

தனுஸ், விருஷபம், கடகம், சிம்மம், துலாம் ஆகிய லக்ண காலங்கள் சுபமானது.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, பூராடம், ஆருத்ரா-உத்திரட்டாதி, பூரட்டாதி, ஜன்மத்ரேயம், சித்திரை ஆகிய நட்சத்திர காலங்களை தவிர்த்தல் நலம்.

சுபமான அனுகூலமான லக்கினத்தில் புறப்பட்டு பந்துக்கள் வீட்டிலோ, சிநேகிதர்கள் வீட்டிலோ தங்கி பிறகு பிரயாணம் மேற்கொள்ளலாம். இது முடியாவிட்டால் எடுத்துச் செல்லும் பொருள்களை சுப வேளையில் அனுப்பிவிட்டு பின்னர் புறப்படலாம்.

சகுனமாக கன்னிகை, பசு, பூர்ண கும்பம், பாற்குடம், தயிர், பழம், புஷ்பம், சங்கநாதம், மங்கள வாத்தியம், பல்லக்கு, இரட்டைப் பிராமணர்கள், குதிரை, விருஷபம், சவம் எதிர்பட்டால் சுபசகுனம்.

மோர், எண்ணெய் தலையன், வஸ்திரமில்லாதவன், விதவை, விறகுசுமை, பன்றி, சன்னியாசி எதிர்பட்டால் அபசகுனம்.

திங்களும் சனியும் கிழக்கில், வியாழன் தெற்கில், ஞாயிறு, வெள்ளி மேற்கில், செவ்வாய், புதன் வடக்கில் வாரசூலை.

 

#*#*#*#*#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27424164
All
27424164
Your IP: 44.211.26.178
2024-06-22 14:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg