gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:47

காலச்சக்கரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

காலச்சக்கரம்!

740. சந்திர மண்டலத்தில் உள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் குணங்கலை அறிந்து அவற்றை நீக்கி சிரசின்மேல் துவாத சாந்தப் பெரு வெளியில் அமர்ந்து சிவசக்தி அருளும் முறையும் ஆளுகையை விட்டுக் கடக்கும் முறையையும் தெரிந்தேன்.

741. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அறிவு, இந்த ஐவகை அறிவை தனியாக இருந்து ஆராயும் ஆறாம் அறிவு, பொருள்களின் நன்மை தீமைபற்றிய ஏழாம் ஆறிவு, கல்வியால் ஏற்படும் எட்டாம் அறிவு, அதனால் தம் அனுபவம் பற்றிய ஒன்பதாம் அறிவு ஆகிய இந்த ஒன்பது அறிவுக்கும் சிவசக்தியே காரணம் என்பதை அறிந்து பலவகையான அறிவின் இயல்பிற்கு ஏற்றவாறு நடக்காமலிருந்து உயிர்கள் காலம் வரையறை செய்தலுக்கேற்ப அழிகின்றனர்.

742. உயிர்கள் அழியும் காலம் இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு, முப்பது ம்தல் முப்பத்தி மூன்று, அறுபதுமுதல் அறுபத்திரண்டு, நூறு என வாழ்நாள் நான்கு கண்டங்களாக உள்ளது.

743. உயிரின் திருந்திய பிறந்தநாள் அதனுடன் சேர்ந்து நிற்கும் பிறவி விண்மீன் கூடிய நாள் ஒன்று, பின் பிறவி விண்மீன் நாளுடன் பதினாறு நாட்கள் கூட்டப் பதினேழாம் நாளும் ஆறு நாட்கள் கூட்ட ஏழாம் நாளும் ஆகியவை தவிர பொருந்திய நாட்களை ஆராய்நது வருத்தம் இல்லாமல் யோகப் பயிற்சி தொடங்குவதற்கு ஏற்ற நாள்.(ஜன்ம நட்சத்திரம் 3, 5, 7, 10, 14, 19, 22, 27 என்ற நாட்கள் விலக்கப்பட வேண்டியவை)

744. மனம் விரும்பி ஞான யோகம் செய்பவர்கள் இருபத்து ஐந்து தத்துவங்களும் பன்னிரண்டு ராசிகளில் செல்லும் கதிரவன் அறிவால் உண்மையை அறிந்து பக்குவப்பட்டு சிவபெருமான் இருக்கும் ஆறு ஆதாரங்கள் செயல்படும் வழிகள் என்பதை அறிந்து அவற்றைக் கடக்கும்போது சிவம், சக்தி, நாதம், விந்து, என்பதை உணர்வர்.

745. நான்முகன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரையும் கடந்து அருவுருவம், அருவமாகிய விந்து, நாதம், சக்தி, சிவன் நான்கும் ஆகமொத்தம் ஒன்பது வடிவங்களாக நெற்றியைக் கடந்து இருபத்தைந்து தத்துவங்களால் விளங்கும் குறியை கடந்ததால் நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டும் ஆறு ஆதாரங்களை தாண்டும் ஆன்மா என்ற கதிரவனை யார் அறிவார்.

746. ஆறு ஆதாரங்களிலுள்ள தாமரை இதழ்கள் மொத்தம் நாற்பத்தி எட்டு. இரண்டாவதாக கதிரவன் இருபத்தாறில் அமைவதாய் இருக்கின்றது என்பதைக் கூறும் சந்திர வட்டம் இருபத்தேழு. வேறு முறையாகவும் நாட் கணக்கை அமைத்துள்ளனர்.

747. இருபத்தெட்டு என்ற இலக்கத்தை அக்கினி, சந்திரன், கதிரவன் என்ற முன்று கண்டங்களில் அறிவீர். அதில் முப்பத்து மூன்று தத்துவங்களையும் தொகுத்து ஒன்றாக அறியலாம். பத்து எட்டு ஆகியவற்றை புவி முதலாகப் பொருத்தி அறியலாம். அவை நான்கு, மூன்று, இரண்டாய் இருப்பதையும் அறியலாம்.

748. குருவின் உபதேசப்படி முயற்சிக்காவிட்டால் இறைவனை தொடர்பு கொள்ளுதல் அரியதாகும். மறைவாகச் சொன்னது உபதேச முறைப்படி பெற வேண்டும் என்பதற்க்காகத்தான். மறை பொருளை மறையைப்போல் வெளிப்படுத்தாது பெற்று வாழ்நாளைப் பெருக்குக.

749. உடலை நிலைத்திருக்கச் செய்யும் முறைகளை மறைத்து வைத்துள்ளமையை அறியாது இருப்பவர் மூர்க்கர்கள். உடல் நிலைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மூலாதாரத் தீயை அடக்குதலே நிலையில்லா உலகில் நிலைத்து நிற்பதற்கான வழியாகும்.

750. சிறு விரலை கயிராக (ஒரு கையிலுள்ள சிருவிரல், அணிவிரல், நடுவிரல் என்ற மூன்று விரல்களுடன்) மற்றொறு கையில் உள்ள மூன்று விரல்களையும் கண்கள் புருவங்களை நெறித்துப் பிடித்தால் பிரணன், அபானன் என்பவை மார்பில் சம்மாய் நிற்கும்.

751. உயிர்ப்பு அடங்கிய ஒவியமாய் இருக்கும் நிலையை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறியார். தீவினைக்கு காரணமான இந்த உடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனையில் பொருந்தி சகசரதளத்தில் விளங்கும்.

752. முதுகுத் தண்டுடன் இணைந்து சென்று பிரமந்திரத்தை அடைந்த யோகிக்கு சந்திரன், கதிரவன், அக்னி மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடலில் மகிழ்வு ஏற்படும்படி அமையும். இந்த வண்மையைக் கண்டவர்கள் ஞானிகள். உண்மையை அறியாதவர்கள் உடல் வினையால் அழியும்படி விட்டு விடுகின்றனர்.

753. கதிரவனான அறிவு குண்டலியின் வழி காமச் செயல் செய்வதால் வண்க்கத்திற்கு உரிய வாழ்க்கை கெட்டு, நாயானது மலத்தை உன்பதில் ஆசை கொள்வதைப்போல் காமச் செயல்களில் விருப்பம் கொண்டு உடல் அழியும்.

754. காமத்தின் வயப்பட்டு அலைந்தால் சகசரதளத்துக்கு மேல் விளங்கும் ஈசன் திருவடியை உணரமுடியாது. தன்னொளியில் மேல் நிலைக்காமல் கீழ் அக்னி மண்டலத்தில் உயிர்கள் அழிகின்றன. இறைவன் சிலம்போசை கேட்டு அதன் வழி செல்பவர்க்கு சுழுமுனையில் கூத்தன் தென்படுவான்.

755. கூத்தனின் நாதம் கேட்பதால் ஏற்படும் பய்ன்களை அறிந்தவர் மெய்நாற்பொருளை உணர்ந்து நிற்பர். அப்படி உள்ளே தியானம் செய்வது தொடர்ந்தால் யோக்கியரும் தானும் வேறுபாடின்றி ஒருவராக இருப்பதை உணர்வர்.

756. இறைவனுடன் பிரிப்பு இல்லாமல் பொருந்தியிருப்பவரின் வாழ்நாள் அதிகரிக்கும்.. அழிவும் இருக்காது. உலக நலம் கொண்ட பூரகம் இரேசகம், கும்பகம் ஆகியன இல்லாமல் முப்பது நாழிகை சமாதி செய்யின் சகசரதளத்தில் உள்ள கூத்தன் பொன்னொளியுடன் விளங்குவான்.

757. உடலில் கூத்தை நிகழ்த்தும் பிராணன் நுண்ணியமாக அடங்கும் நிலையை அறிந்து அந்தவிடத்து பத்து எழுத்துக்கள் கூடும் அநாகத்தில் அட்டதள கமலத்தைப் பொருத்தி அதில் விளங்கும் சிவனை கண்டு மகிழ்ந்த் இருப்பவர்க்கு எடுத்த உடல் நூற்றாண்டு காலம் வாழ்வர்.

758. சொல்லிய நூராண்டு காலம் வாழ்பவர் உடலை ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் காப்பார்கள். ஆயிரம் ஆண்டு வாழப்பெற்றவர்கள் அறிவால் முதிர்ந்து பல யுகம் வாழலாம்.

759. நீண்டகாலம் கண்டவர் தளர்ச்சியின்றி இருப்பர். உள்ளத்தால் சிறந்த பொருளான சிவனை எண்ணி இடைவிடாது தியானித்து சிவம் என்றும் தாம் என்றும் இரண்டாய் அறியாமல் ஒன்றே என உணர்ந்து நீண்டகாலம் வாழ்ந்து உயர்வை அடைவர்.

760. சிவம் என்ற தன்மையை அடைந்து உயர்ந்தவர் உலகத்துடன் கூடி பயன் அடைந்தவர் என்ற உண்மையை பலர் அறிந்து கொள்ளாமல் கன்மங்களை மேலும் ஈட்டுவர். சிலர் அந்தப் பேற்றை அடைய வேண்டும் என்ற விருப்பமின்றி மீனைப்போல் எப்போதும் இமைக்காத கண்ணையுடைய பராசக்தியை அறியாதவர் ஆவர்.

761. பேரொளியைக் காண முடியாதவர்கள் பிறவிப் பய்னை அடையாமல் வீணே கழிவர். வெட்கமின்றி சாத்திரங்களின் நயங்களைப் பேசி கழிவர். பராசக்தியின் ஒளியைக் காணாதவர்கள் தத்துவப் பொருளை அறியாமல் தொண்டு செய்யாமல் கழிந்து போவர்.

762 .பிணைப்புகளை ஏற்படுத்தும் உலகப் பொருளை புறக் கண்ணால் பார்க்காதவர் நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் பார்க்கலாம். நீங்கும் பொருளின் உள்ளே உள ஒருமையுடன் பார்த்தால் எப்பொழுதும் நீங்கா சிவனை உணரலாம்.

763. மூன்று கண்களையுடைய பிறப்பு இல்லா நந்தியெம்பெருமானை மனத்துள் ஆரய்ந்து கண்டால் பத்து திசைகளிலும் இருப்பதுடன் தனித்து இருப்பதும் புலப்படும். உறுதியைத் தருகின்ற சிவசக்தியைக் காணலாம். தேடும் யோகியர் அடையும் பயன் இதுவே.

764.. நந்தியெம்பெருமானை அறிய வல்லாரின் வாழ்நாள் அகன்று விடுவதால் அழிவில்லை. அவ்வாறு அறிந்தபின் அவர் உயிர்களின் தலைவராவார். யோகியர் கண்ட உண்மை இது. சிவனைக் கூட வேண்டும் என விருப்பமுடையவர்க்கு இந்த உண்மையைச் சொல்வர்.

765. தக்கவருக்கு உணர்த்த வேண்டிய பொருள் அகர உகாரங்கள். அகர உகாரங்கள் மனத்துள் நிலை பெற்றால் மகாரம் சுழுமுனை வழி உயர்ந்து சென்று நாதமாய் அமைந்து மாயையின் ஆறு ஆதாரங்களிலும் குறும்புகள் அற்றுச் சிவம் விளங்கித் தோன்றும்.

766. சிவன் இருக்கும் இடத்தை எவரும் அறியார். ஒளிமயமாய் வீற்றிருக்கும் இடத்தை அறிபவர் உள்ளத்தை விட்டு அகலாது நிற்பான் சிவன். அப்போது அவன் சிவமாகி விடுவான்..

767. தான் சிவன் ஆகும் இயல்பை அறிவார் எவரும் இல்லை. சிவன் ஆகும் தன்மையை கேட்பாயாக!. சிவன் ஆன்மாவின் நுண்மை வாக்கிலும் நுண்ணிய ஒளியிலும், ஆகாய கூற்றாகி வான் கூற்றில் விளங்குவான்

768. ஆதாரச் சக்கர வட்டங்கள் ஏழும் உன்னுள் மலர்ந்து. மேனமையுடைய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறிவீர்! உபாயம் செய்து சிவனுடன் பொருந்துக. கரும்புக் கட்டியைப் போன்று இன்பம் இருக்கும் இடத்தை அப்போது அறியலாம்.

769. ஆதார சக்கரங்களில் நான்முகன், திருமால் என்பவர்களையும் நீலகண்டன், மகேசுவரன் என்பவர்களையும் காணலாம். உன் உடல் உயிர் என்பன்வற்றில் இவர்கள் பொருந்தியிருப்பதை அறியலாம்.

#####

Read 1624 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:16
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928427
All
26928427
Your IP: 18.234.165.107
2024-03-28 15:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg