gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

2-1.மனப் பூக்கள்!

Written by

மனப் பூக்கள்!


உயிர்கள் தனது கர்ம வினைகளுக்கு ஏற்ப வடிவமும் குணமும் பெறுகின்றன. அந்த குணங்கள் சத்வம்-சாந்தம், ரஜோ-கோபம்/மூர்க்கம், தமஸ்-மந்தம் என மூவகைப்படும். உலகில் தோன்றிய அனைத்தும் இந்த மூன்றுவகைகளில் அடங்கும். இந்த குணங்களில் ஒன்று அதிகமானால் மற்றதை அடக்கியாளும் தன்மை கொண்டவை. மனம் இந்த மூன்றின் கலவை. நாம் சமநிலை தவறுவதற்கு இது ஒரு காரணம்.

ஒவ்வொருவரும் நமது உடலையும், மனதையும் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருத்தலை ‘ஷௌச’ எனக்குறிப்பிடுகின்றது மனுதர்ம சாஸ்திரம். ஆரோக்கியத்துடன் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டாலும், ஆரோக்கியமில்லா உணவை உற்கொண்டால் உடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.                                                                            உடலை தாக்கும் நோய்களிலிருந்து காக்க நல்ல முறையான உணவை உட்கொண்டு உடல் சுத்தத்தை பேண நினைக்க வேண்டும். முறையான தேகப்பயிற்சி, நல்ல சீராண உணவு, போதுமான ஓய்வு கொண்டு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
இரண்டு நண்பர்கள். ஒருவர் எப்போதும் எதையாவது உண்ணுபவர்- குண்டானவர். இன்னொருவர் தேவைபடும்போது அளவாக உண்ணுபவர்-ஒல்லியானவர். இருவரும் பயணம் மேற்கொண்டனர். யாத்திரை சென்றபோது உளவாளிகள் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். உணவின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். உண்மை விபரம் தெரிந்து விடுவிக்க வந்தபோது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் ஏதுமின்றி சில நாட்கள் இருந்ததால் இறந்து விட்டார். தேவைப் படும்போது அளவாக உண்ணுபவர் உயிருடனிருந்தார். உணவில் ருசியை சீராகத் தேடி அளவாக உண்பவர்கள் வாழ்வில் சலிப்படைவது இல்லை.
அதற்கு நம் மனத்தை செம்மையாக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உனது மனம்தான் உனக்கு எதிரி, நண்பன் எல்லாம். நல்ல மனம் கொண்டவன் பார்ப்பது செய்வது எல்லாம் நன்மையானதாகவும் தீய மனம் கொண்டவன் செயல்கள் தீமை நிறைந்ததாகவும் தோன்றும். மேலும் நம் கர்மாவால், தீய எண்ணங்கள், அதன் செயல்களால், மற்றவர்களுக்கு தீங்கு இழைத்தலாலும் ஏற்படும் தாக்கங்கள் உங்கள் உடலுக்கு பலவித தீங்கு விளைவிக்கும். தீய எண்ணங்கள் மனநோய்க்கு அடிப்படையாகும்.
ஒரு பலூனுக்குள் கற்றை நிரப்பினால் அது நிலத்தைவிட்டு உயர்கின்றது. அதே பலூனில் நீரை நிரப்பினால் அது நிலத்துடன் இருக்கும்.  இரும்பு கப்பலாக வடிவமைக்கும்போது அதன் வடிவமைப்பு அதை நீரில் மிதக்கச்செய்கின்றது. இதைப்போன்றே நம் மனதையும் வடிவமைக்கவேண்டும். நல்ல எண்ணங்கள் உங்களை உயர்த்தும். தீய எண்ணங்கள் உங்களின் நலனுக்கு உதவாது. எதிர்மறையான செயல்கள் நடைபெறும்.
எதிர் மறை எண்ணங்கள் இல்லா மனமாகவும், நேர்மறை எண்ணங்கள் நிரம்பிய மனமாகவும் இருத்தல் சிறப்பு. மனதில் தோன்றிய தீய எண்ணங்களை, நம்மைவிட மேலானவர்கள், அறிஞர், ஞானியர் உதவியுடன் அழிக்க முயற்சிக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளை படித்தோ, கேட்டோ மனம் தெளிவுறச் செய்யலாம்.
கண்ணபிரான் ஒர் சமயம் துரியோதனன், தர்மர் இருவரையும் நல்லவன் ஒருவரையும், தீயவன் ஒருவரையும், அழைத்து வரச்சொன்னார். சில நாள் கழித்து அவர்கள் கிருஷ்ணரைச் சந்தித்தபோது துரியோதனன் கூறினான், “இவ்வுலகில் நல்லவன் ஒருவன்கூட அகப்படவில்லை, எல்லோரும் ஒருவகையில் தீயவரே!” என்றான், தருமர், “ஒரு தீயவர்கூட தெரியவில்லை, எல்லோரும் ஒரு வகையில் நல்லவரே!” எனக் கூறியதாக புராணம் தெரிவிக்கின்றது.
இதிலிருந்து தீய எண்ணம் கொண்ட துரியோதனனுக்கு, எல்லோரும் தீயவராகவும், நல்ல எண்ணம் கொண்ட தருமருக்கு, எல்லோரும் நல்லவராகவும் தெரிகின்றனர் என்றால் அது உண்மையில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் தருமருக்கும், துரியோதனனுக்கும் எப்படி அவ்வாறு தோன்றியது என்றால் அது அவர்தம் மனநிலையைப் பெறுத்த எண்ணங்கள்.
உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி தன் முன்னே உள்ள உருவத்தைப் பிரதிபலிப்பது போல உங்கள் மனம் நல்ல எண்ணம் உடையவராக நீங்கள் இருந்தால் அதில் உலகில் நீங்கள் சந்திக்கும், மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் தெரிவர்!
உங்கள் மனம் தீய எண்ணங்கள் நிறைந்தவையாக இருந்தால் அதில் இவ்வுலகில் நீங்கள் சந்தித்த, சந்திக்கப்போகும் மனிதர்கள் எல்லாம் உங்களுக்கு சந்தோஷம் தந்து உங்கள் தீயசெயல்களுக்கு உதவி செய்யும் நல்லவர் (கொடியவர்) களாகவும், நன்மை(தீமை) செய்பவராகவும் தெரிவர்! அவையெல்லாம் சந்தோஷம் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் கர்மபலன். அதிலிருந்து விடுபட முயற்சியுங்கள்.
தரமான விதையை வளமான நிலத்தில் விதைத்து விட்டோம் என எந்த விவசாயியும் சும்மா இருந்துவிடுவதில்லை. அவ்வப்போது உரமிடுதல், களை எடுத்தல், பாதுகாப்பாக வேலியிடுதல் போன்று செய்து கொண்டேயிருந்தால்தான் விளைச்சலில் வெற்றி காணமுடியும். அதேபோல் மனதில் தோன்றும் வேண்டாத தீய எண்ணங்களை களையெடுப்பதுபோல் அவ்வப்போது களைந்துவிட்டால்தன் மனம் வெற்றிக்கு வழிகாட்டும்.
மனதில் துவேஷமும், சுயநலமும் நிறைந்திருந்தால் உங்கள் மனம் என்றும் சுத்தமானதாக இருக்காது, உடலும், உள்ளமும் தூய்மையுடனிருந்தால் மனமும், உடலின் ஆன்மாவும் இசைந்து வாழ்தல் இனிதாகும். உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே ஓர் அதிசய உறவு உண்டு. சரியாக கவனித்தீர்களானால் உங்கள் மனதிற்குள் எதிர்மறை செய்திகள் புகும்போது உடலிருந்து ஓர் அதிர்வலை உண்டாகி அந்த செய்திதனை ஏற்க மறுக்கும்.
உடலின் இந்த சக்தி ஒன்றை எதிர்க்கும்போது உங்கள் உணவுகூட ஜீரணமாகமல் போகும் வாய்ப்புண்டு. உடலுக்குள் ஆரோக்கியமான சக்திகள் தடம் புரண்டு இடம் மாறி ஏற்றதாழ்வுகளுடன் செயல்பட்டால் உடலில் எந்த பகுதியிலும் எந்த கோளாரும் ஏற்படும். உடல் நலமும் மனநலமும் ஒன்றினைந்து பேனப்படல் வேண்டும்.
பெரும்பாலான மனிதர்கள் தங்களின் பிறவியின் பயனை புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தானாக செயல்பட முடிவதில்லை. பெற்றோர்கள், சுற்றத்தினர் அவர்களை அலைக்கழிப்பதால், அவர்கள் வாழ்வில் ஒர்ப்பிடிப்பின்றி அடுத்தவர் போக்குக்கு செயல்பட பழகிவிடுகின்றனர்.
அதனால் இப்பிறவியில் அவர்கள் யாராக இருக்கின்றார்களோ அதில் அவர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றது. அப்பிறவி நினைத்தபடி வாழ விடாமல் இந்த சமூகம் சுற்று சூழலுக்கு அவரை மாற்றுவதால் அதற்கு சுயசந்தோஷம் இருப்பதில்லை. இந்த வெறுப்பு அவர்மீதும், சமூகத்தின்மீதும் விழுகின்றது. அதனால் அவர்கள் ஜடமாக உலவுகின்றனர். மனதில் எந்த அமைதியும் இல்லை. சந்தோஷமும் இல்லை. எனவே ஆன்மாக்களை சுயமாக செயல்பட அனுமதியுங்கள்.
அலைமோதும் கடலில் எப்படி அல்லி வளரமுடியாதோ, அதைப்போல அலைபாயும் மனதில் அமைதி நிலவாது. தீய, பிறருக்கு தீமை விளைவிக்கும் கொடிய எண்ணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தாது. அந்த எண்ணங்களின் கொந்தளிப்பில் நல்ல எண்ணங்கள் அமுங்கிவிடும். நம் மனதை சுத்தப் படுத்தி, தூய்மையாக வைத்திருங்கள். அங்கு நிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி வழிய மிகமிக அதிக வாய்ப்புண்டு. மனதில் தோன்றும் கவலைகளும் வருத்தங்களும் பறவைபோல நம் மனத்திலிருந்து பறந்துவிட வேண்டும். அவைகளை அங்கே தங்கவிட்டால் பறவைகள்போல கூடுகட்டி குஞ்சு பொறித்துவிடும்.
மனத்தில் தோன்றிய வேண்டாத எண்ணங்களை வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது. அதற்கு முயற்சி செய்தால் அந்த எண்ணங்களே அதிகமாகி அளவில் பெருக வாய்ப்புண்டு. அது வீண்முயற்சி. ஒன்றை நீக்கின் புதியதாய் ஒன்று சேரும். எனவே வேண்டாத எண்ணங்களை நீக்கவேண்டும் என்பதற்காக சிந்தித்து காலத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து, முற்றிலும் புதிய நல்லெண்ணங்களை, உயர்ந்த ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.
பழையது முற்றிலும் மறந்து காணாமல் போய்விடும். மனிதனின் இயல்பான மனநிலை இது. செயலில் முழுக்கவனம் இருந்தால் மற்றது மறக்கப்படும். உற்சாகமோ சலிப்போ எதுவாக இருந்த போதும் அது மனதின் பிரதிபலிப்பேயாகும்!
பொதுவாக ஒருவர்மேல் மற்றவர் கொண்ட பொறாமைகள், தோஷங்கள் நீங்க திருஷ்டி சுற்றி போடுகின்றோம். அது சுண்ணம்பு மஞ்சள் கலந்த சிகப்பு நிறமாக இருக்கும். அந்த நிறம், அதனுடன் சேர்ந்த மற்றபொருட்கள் ஆன்மாக்களின் மனத்தில் ஓர் கலவரமான எண்ணத்தைத் தோற்றுவிக்கும். அந்த எண்ணமானது இதற்குமுன் அவர்பால் கொண்ட பொறாமை எண்ண அதிர்வுகளை பின்னுக்குத் தள்ளிவிடும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துவிடும். நமக்கும், காவல் தெய்வங்களுக்கும் தோஷம் நீங்கவே நாம் பலி கொடுக்க நினைக்கின்றோம்.
வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என நினைக்கும் ஆன்மாக்களே! அதுபற்றிமட்டுமே உங்கள் மனம் சிந்திக்கட்டும்! செயல்படட்டும்! வெறுப்பு, போராசை, கோபதாபங்கள் இன்றி மனம் சுத்தமாக இருக்கட்டும்! மனம் ஆசை குப்பைகள் நிறைந்து கனமாகிவிட்டால், நீரில் மூழ்குவதுபோல வாழ்வின் துயரங்களில் மூழ்கும். தெளிவுடன் இருந்தால் கணமின்றி நீரில் நீச்சலடிப்பதைப்போல் வாழ்வில் வெற்றிகரமாக முன்னேறலாம்.
வேதங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அறிந்திருந்தாலும் மனதும் மனதின் எண்ணங்களும் பெரியது. மனதால் நினைத்துதான் செயலில் இறங்குகின்றோம். மனமே நம் உலகம். அதை நேசியுங்கள். சுத்தமாக வைத்திருங்கள். ஓர் ஆன்மாவின் உடல் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது, சிறந்தது மனத் திருப்தி.
எங்கே மனம்:  நாம் மனதை நம்பி வாழ்கிறோம். அதுசரி! அந்த மனம் எங்கே இருக்கின்றது? உடலில் எந்த உருப்பு மனம் எனச் சொல்லப்படுகின்றது? நம் எண்ணங்கள் தோன்றும் இடமா? தோன்றிய எண்ணங்களை அலசிப்பார்க்கும் இடமா? மனம் என்பது என்ன? நினைவுகளைத் தக்கவைக்கும் இடமா? இல்லவே இல்லை? மூளையின் பதிவுகளால்தான் இந்த மனம் என்பது உருவாக்கப்படுகின்றது. புலன்களால் உந்தப்பட்ட விசயங்களை புத்தியால் நினைவுகூறி மனம் வாழ்கின்றது.
நினைவுகளை நீக்கிப் பார்க்கும் போது மனம் என்ற சொல்லுக்கு பொருளே கிடையாது. அது வெற்றிடமாகிறது. ஆன்மாவின் மறைவிடமாகி நினைவுகளின் சொரூபமாகிறது. உடம்பின் அசைவுக்கு இதயம். இதயத்தின் அசைவுக்கு உயிர்துடிப்பு. மூளையின் அசைவே மனம். சூட்சமம் மிக்கது. மிக்காருமில்லை!  ஒப்பாருமில்லை! எனலாம், மனம் ஆன்மாவின் உறைவிடம் உடல் செயல் பாடுகளுடன் இருக்கும்வரை.
எவ்வளவு சிறப்பாக அழகாக பெரிதாக அரண்மனை போன்ற வீட்டைக்கட்டினாலும் நாம் உபயோகிப்பது அதனுள்ளே உள்ள வெற்றிடங்களைத்தான். அறைகள் சுத்தமில்லாவிடில் வெளிஅழகினால் பிரஜோனமில்லை. அதுபோலவே நமது உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அழகாக இருந்தாலும், நமக்கு ஆற்றல், நம்பிக்கைத் தருவது உள்ளிருக்கும் மனம்தான். அதில் தோன்றுகிற எண்ணங்கள், அதன் மூலம் நடைபெறும் செயல்களைப் பொறுத்தே நம் குணம் எடைபோடப் படுகின்றது. சமூகத்தால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.  
அந்த மனம் எங்கே இருக்கின்றது. நம் உடலில் இல்லாத ஒன்று. முளையின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஓர்மாயத்திரை. அது ஓர் அறை. மூளையின் நினைவுப்பகுதியில் தோன்றும், உருவாகும் எண்ணங்களுக்காக, உருவாக்கப்பட்ட ஓர் மாயஅறை. நாம், என் மனது கேட்கமாட்டேன் என்கிறது என்றும், என்மனது சொல்கின்றது என்றும் கூறுகிறோம். ஆனால் மனம் என ஒன்று நம் உடலில் இல்லை. இல்லாத உறுப்பைத்தான் நாம் பிரதானப்படுத்திச் சொல்கின்றோம். அழகிய வீட்டின் உள்ளே சுத்தமாக வைத்திருப்பதுபோல் நம் உடலின் மனதை சுத்தமாக்கி செயல்படவேண்டும் அதுவே நன்மைபயக்கும்.
மனம், ஆன்மா இரண்டும் உடலின் எங்கும் யாராலும் காணமுடியாதது. உணர்ந்துதான் கொள்ளமுடியும். ஆனால் உடல் உறுப்புகளைப்போல் பயிற்சி மூலம் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். அந்தக் கட்டுப்பாடு நம் விருப்பத்திற்கு ஏற்ப மனதை செயல் படவைக்கும். ஆனால் நம் கட்டுப்பாட்டில் உள்ள மனம் தறிகெட்டு ஓடும் காளையைப் போன்றது. எப்போதும் சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மனதின் எண்ண ஓட்டங்களை எப்படி கையாள்வது என புரியாத ஓர் ஆன்மாவின் உடலுக்கு உணரமுடிவதெல்லாம் சந்தோஷமற்ற நிலைதான். மனம் பல அற்புதங்களைச் செய்விக்க வல்லது. அது வேதனைகளையும், துயரங்களையும், துன்பங்களையும் தோற்றுவிக்கிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் நீங்கள்தான்.
மனித வாழ்வு என்பது தென்றலில் மட்டுமல்ல, காற்றில் கூட வரும் மலர்களின் வாசம் போன்று சுகந்தமானது. அதை ரசித்து அனுபவிக்க வேண்டும். அதை விடுத்து காற்றில் மிதக்கும் நாற்றங்களைப் போல் வேதனைகள மட்டும் அனுபவிக்கத் தெரிந்தவர்களாக இருந்து என்ன பயன்! வேதனை நீக்கி விழிப்புடன் செயலை எதிர்கொண்டால் ஆனந்தத்தை ருசித்து உணர்வீர்!
எண்ணங்கள்: இந்த மனம்தான் ஓர் ஆன்மாவை, ஆன்மா கூடிய உடலை, நம்மை எண்ணங்கள் கொண்டு நல்லவனாகவும், கெட்டவனாகவும் நமக்குள்ளே சிக்கலை ஏற்படுத்தி, நம்முள்ளே ஓர் குருஷேத்திரத்தை உருவாக்கி நம் வாழ்வில் போராட்டங்களை சந்திக்க வைக்கின்றது. ‘தானே தனக்கு பகைவனும் நண்பனும்’ என்கிறார் திருமூலர். கோபம், துக்கம், பொறாமை, போட்டி, சிரிப்பு, மகிழ்வு, சந்தோஷம், ஆனந்தம் ஆகிய எல்லாவற்றிற்கும் இதுதான் காரணம். எண்ணங்கள் ஆரம்பிக்கின்ற, உதிக்கின்ற இடத்தில் மனது உருவாகின்றது. அதற்கென்று ஓர் இடமில்லை.
மனதில் கருணை, அன்பு, அடக்கம், பொறுமை, தூய்மை, பற்றற்றல் முதலான நல் எண்ணங்களுடன் கோபம், குரோதம், பொறாமை, பேராசை, அறியாமை போன்ற தீய எண்ணங்களும் செழித்து வளர்ந்த பயிர்களைடையே களைகள் தோன்றுவதுபோல் தோன்றினால் அவற்றை களைஎடுத்து பயிர்களைக் காப்பதுபோல் நல்லெண்ணங்களை பாதுகாக்க பழகவேண்டும்.
பச்சை நிறப்பேனாவில் சிகப்பு மையிட்டு எழுதலாம். எழுத்தின் நிறத்தை பேனாவோ அதன் நிறமோ நிர்ணயிப்பதில்லை. அதில் ஊற்றும் மையின் நிறம்தான் உணர்த்துகின்றது. அப்படித்தான் நாம் செய்யும் செயல்களும் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நல்லவை என்றும் தீயவை என்றும் நிறமாகிறது.
நிலையான மனம் என்பது நிலையான உறுதியான எண்ணங்கள். எண்ணங்களில் உறுதியின்றி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த சலனம் செயல்களில் பிரதிபலிக்கும். எதைத் தொலைத்தோம், எனத் தெரியாமல் தேடுவீர். எதை அடைய வேண்டும் என்பதும் அரியாதவராகிவிடுவீர். தேடுதலில் உங்கள் காலம் விரையமாகும். உறுதியான திடமான இறுதியான எண்ணங்களே வேண்டும் அதற்கு மன அமைதி மிக மிக உதவி புரியும்.
நம் உடலில் உறுப்பாக இல்லாத மனமும், அதில் தோன்றும் எண்ணங்களும், நம்பிக்கைகளும் ஒன்றோடு ஒன்றாக இனைந்தால்தான் நன்மை பயக்கும். நடக்காது என்ற நம்பிக்கையுடன் எண்ணங்களை வளரவிட்டு பயனில்லை. நடக்கும். நடக்கவேண்டும் என்ற உறுதியுடன் எண்ணங்களை கோர்த்து செயல்படுத்தத் துவங்கினால் காற்றாடி போன்று உயரப்பறக்கலாம்.
வெறும் காகிதம், நூல், குச்சி இவைகள் காற்றடித்தால் சிறிது தூரம் நகர்த்தப்படும். ஆனால் இவைகளை ஒன்றாக்கினால் பட்டமாகி உயரப்பறக்கும். அதுபோன்றே நமது நம்பிக்கையும் எண்ணங்களும், சொல்களும், இதைப்புரிந்து கொண்டார் வெற்றி கொண்டவராவர். வாத்தியங்களையும் இசைக்கருவிகளையும் யார் தட்டினாலும் ஒலி எழும்பும். ஆனால் அந்த ஒலியை இனிய இசையாக மாற்றத் தெரிந்தவனே கலைஞன். அப்படித்தான் மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி செயலாக்கம் கொள்ளும்போதுதான் அதன் சக்தி தெரியவரும். வெற்றிக்கனி கிட்டும்.
உலகில் நமது தெளிவான சிந்தனை அறிவினால் தான் எல்லாவற்றையும் புரிந்து பிர்ச்சனைகளை கடந்து வாழமுடிகின்றது. அப்படிப் புரிதல் இல்லாதவர்கள் பிரச்சனைகளில் சிக்கி வாழ்வின் போராட்டத்தில் தவிக்கின்றார்கள். ஒர் மனித உடலில் அறிவு எனப்படுவது அவனின் சிறந்த எண்ணங்களாகும். அதனால் அதன் வெற்றியுமாகும். அதை ‘ தீ ’ அறிவின் தூய்மை என்கிறது மனுதர்ம சாஸ்திரம். அது நமக்குள்ளே இருக்கும் தீயாகும். ஓர் ஒளியாகும். அது நம்மின் பெரிய சக்தியாகும்.
அந்த சக்தியை ஆசை, கோபங்கள் சூழாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் உலகின் எல்லவற்றையும் விரைவாக புரிந்து, தெளிவாக செயல்படமுடியும். தோன்றும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். செய்யமுடியாது என நினைத்ததை இலகுவாக செய்யமுடியும். அறிவுடன் தூய்மையும் இனைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் மனதின் எண்ணங்கள் அமைதிடன் இனைந்து பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்ந்து செயல்படும்.
ஒரு கண்ணாடி ஜாடியில் கொஞ்சம் மணலைவிட்டு, பின் கற்களைப் போட்டு பின் நீர் ஊற்றினால் அது நிரம்பிவிடும். ஆனால் கொஞ்சம் யோசனை செய்து செயல்பட்டால் இன்னும் கொஞ்சம் மணல், கற்கள், நீர் ஆகியவைகளை அந்த ஜாடி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் சிறப்பு. இது எப்படி சாத்தியமாகும்.
முதலில் பெரியகற்களையும் பின் சிறியகற்களையும் அதன்பின் மணலைபோட்டு குலுக்கினால் குறுகிய இடைவெளிகளில் மணல் நிரம்பும். பின் நீர் ஊற்றினால் மணலும் கற்களும் முடிந்த அளவு நீர்கொள்ளும். இப்போது அளவிட்டால் முதலில் செய்ததைவிட இரண்டாம் முறையில் மணல், நீர், கற்கள் அதிகம் பிடித்திருக்கும். இதன்மூலம் ஓர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.
நம் உள்ளே தோன்றும் எண்ணங்களை வரிசைப்படுத்தி அதில் முதலில் எதை செய்வது என முறைப்படுத்தி தீர்மானத்துடன் செயல்பட்டால், நம் எண்ணங்கள் செயலாக்கத்தில் சிறப்பான வெற்றியை காணும். அது நமக்கு மனநிறைவு தந்து மகிழ்ச்சிதரும். மகிழ்ச்சியை அடைவதுதான் நம் வாழ்வின் குறிக்கோள். ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி நன்முறையில் செயல்பட்டு வெற்றி கொண்டு மகிழ்வது உங்களின் செயல்களில்.
எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு. எண்ணங்கள் அலைகளாக மாறி நம் உடலிருந்து வெளியேறி நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து அப்படியே எங்கும் பரவி விடுகின்றது. யாரைப்பற்றி நினைத்தோமோ, சிந்தித்தோமோ, திட்டினோமோ, மகிழ்வுற்றோமோ அனைத்தும் அந்தந்த நபரின் ஆன்ம உடலைச்சுற்றி பரவிக்கிடக்கின்றது. அந்த ஆன்ம உடல் சமநிலையடையும்போது அது தன்னைச்சுற்றியுள்ள அலைகளை கிரகித்து அந்தந்த அதிர்வுகளுக்கு ஏற்ப தாக்கம் கொள்கின்றது. உணர்வு பூர்வமாக இதை உணரமுடியும்.
“மன்னன் ஒருவன் வீதியுலா வரும்போது மக்கள் அனைவரும் வணங்கினர். சந்தன வியாபாரி ஒருவனும் வணங்கினான். அவனிடம் நிறைய சந்தனமரங்கள் விற்பனையின்றி இருந்தன. அந்த வருத்தத்தில் யாராவது பெரியமனிதர்கள் இறந்தால்கூட எரிப்பதற்கு சந்தன மரங்கள் வாங்குவர் என வருந்திக்கொண்டே வணங்கினான். அதன் தாக்கம் அவன் வணங்கியபோது மன்னருக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்த்து எரிச்சலடைந்தார்.
ஓரு நீதிமான் காரனமின்றி கோபம், எரிச்சல் கொள்ளக்கூடது என்ற நினைவிலிருந்து, இது பற்றி அமைச்சரிடம் கூறினார். உண்மைகளை விசாரித்து அறிந்த அமைச்சர் வியாபாரியிடமிருந்த சந்தனமரங்களை அரசரின் பிறந்த நாள்விழா யாகத்திற்கு என வாங்கினார்.  

மகிழ்வுற்ற வியாபாரி அடுத்தநாள் அரண்மனைக்கு சென்று, அரசரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தனமரங்கள் விற்பனையாகவேண்டும் என்ற நினைப்பில், அரசர் பல்லாண்டு வாழ்க! என வணங்கினான். அன்று அவனைப் பார்த்ததும் அரசருக்கு எரிச்சலுமில்லை, கோபமும் வரவில்லை. இனிய புன்முறுவல் கொண்டார். இது பற்றி அமைச்சரைக் கேட்டபோது அவர் நடந்ததைக் கூறினார்.”
எனவே நம்மைப்பற்றிய பிறரது நல்ல எண்ணங்கள் நமக்குள் மகிழ்ச்சியும் தீய எண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும். அந்தளவிற்கு எண்ணங்களின் அலைகள் நம் மனதை பாதிக்கின்றன. மற்றவர்களையும் பாதிக்கும். சொற்களில், செயல்களில் வன்முறையுடன் வாழ்பவர்கள் தாங்கள் சைவம் என்று சொன்னால்கூட பின்னாளில் அவர்கள் கூறிய சொற்களை அவர்களே உண்ண வேண்டி இருப்பதால் அவர்களும் அசைவம்தான். சைவம் அசைவம் என உணவில் இல்லை. சிகப்பு நிறம் கொண்ட இரத்தம் ஓடும் உயிரினங்கள் மற்ற உயிர்களைப் பிடித்து தின்ன ஆர்வம் காட்டுகின்றன. அது வக்ர எண்ணங்களை அதிகம் தூண்டுகிறது.
மான், குரங்கு, முயல் போன்றவைகள் சிகப்பு ரத்த ஓட்டத்துடனிருந்தாலும் அவை சைவ உணவுகளை அதாவது சிகப்பு இரத்தம் இல்லா பொருட்களை உணவாக கொள்கிறது. ஆனால் மரம், செடி, கொடிகளுக்கும் இரத்த ஓட்டம் கொண்டுதான் அவைகள் உயிர்வாழ்கின்றன. ஆனால் அந்த இரத்தம் வெண்ணிறமுடையது.
பொதுவாக இரத்த ஓட்டங்கள் வெள்ளை அல்லது சிகப்பு நிறம் கொண்டுள்ளது, அவ்வளவுதான். உயிர் உள்ள இரத்தம் ஓடும் மரம், செடி, கொடிகளின் பொருட்களை சைவம் எனக்கூறினாலும் அதுவும் அசைவம்தான். அவை உயிர் உள்ளவற்றின் அங்கங்கள். அந்த பொருட்களும் வக்ர எண்ணங்களைத் தூண்டுபவையே! அதனால் மனிதன் உண்ணும் உணவில் ஏதுமில்லை. அவன் எண்ணும் எண்ணங்கள், அது நடைபெற முயற்சிக்கும் வழிமுறைகள்தான் வக்கிரமானவையாக இருக்கின்றது.  
அதனால் நல்ல வக்ரமில்லாத எண்ணங்களுக்காக மனதை பக்குவப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதற்காக மனதை காலியாக வைக்க வேண்டும். தீய எண்ணமின்றி நல்லெண்ணங்களை நிரம்பி வழியச்செய்வோம். நல்லவண்ணம் வாழ உன்னை உன்னுள் தேடு.
தன் எதிர்கால பலன் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தவன் ஓர் ஜோசியரிடம் சென்று தன் ஜாதகத்தினை கொடுத்தான். அதைப் பார்த்த ஜோதிடன் திகைத்து, நான் உன் ஜாதகத்தைக் கணித்து வைக்கிறேன். நீ இரண்டு நாள் கழித்து வா. எனக்கூறி அனுப்பினான். வேலைத் தேடி சென்றவன் வேலை ஏதும் கிடைக்காததால் சலிப்புடன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
புழுதிக்காற்று வீசவே அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் சென்று ஒளிந்தான். அங்கு ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டவன், அடடே, ஒரு கோவில் இப்படி பாழடைந்து விட்டதே. என்னிடம் பணம் வசதியிருந்தால் இந்தக் கோவிலை சீர்படுத்துவேன் என எண்ணினான். மனதில் கோவிலை சீரமைக்க திட்டம் போட்டான். அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. மின்னலடித்தது.
அப்போது மண்டபத்தின் மேல் பகுதியில் பாம்பைப் பர்த்து பயந்தவன் நிலை தடுமாறி வெளியே விழுந்தான். எதிர்பாரா விதமாக மண்டபமும் சரிந்தது. இவன் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து ஓர் கொடிய நாகம் ஊர்ந்து சென்றது. ஒருகணம் நிலைகுலைந்து போனான். இன்னும் சிறிது நேரம் இருந்தால் பாம்பு கடித்தோ, அல்லது மண்டபத்தின் இடிபாடுகளில் சிக்கியோ மரணம் அடைந்திருக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்து அகன்றான்.
மறுநாள் இவனைக்கண்ட ஜோதிடருக்கு பேயைக்கண்டது போலாயிற்று. இவனிடம் நேற்று நடந்தது என்ன எனக் கேட்டார். விளக்கமாக கேட்டவர், உனக்கு நேற்றுடன் ஆயுள் முடிந்துவிட்டது. அதை எப்படி உனக்குச் சொல்வது என்பதால்தான் உன்னை இன்று வரச்சொன்னேன். நீ ஒளிந்திருந்தபோது உண்மையாகவே கோவிலை கட்ட நினைத்த நல்ல எண்ணங்களே உன்னை காப்பாற்றியிருக்கின்றது என்றார். நல்லது நினைத்தாலே போதும் நன்மை பெறுவீர்.‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.
நீலகண்ட தீட்சதர் சிறந்த சிவபக்தர். எப்போதும் எந்நிலையிலும் சிவநாமம் சொல்ல விரும்பினார். அந்த எண்ணம் அவரை முற்றிலுமாக ஆட்கொண்டது. அதை பரிட்சித்து பார்க்க, சிந்தையை கலக்கும் ஊமத்தங்காயை உட்கொண்டதன் விளைவாக, மனநலம் பாதித்து சுய நினைவின்றி இருந்தபோதும் சிவ நாமத்தை சொல்லும் பழக்கத்தைவிட வில்லை. அந்நிலையில் சிவதுதி ஒன்றை இயற்றியுள்ளார்.
அவர் மேல் அன்பு கொண்டவர்கள், மாற்று மருந்து கொடுத்து சிந்தை தெளியவைத்துள்ளனர். எதற்காக இந்த நிகழ்வு என்றால் உங்களை ஆட்கொள்ளும் சிந்தனை எண்ணங்கள் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் உங்களை செயல்படவைக்கும். இது போன்றதே மனநிலை பாதிக்கப் பட்டோரின் செயல்கள், அவர் அடிமனதில் பதிந்த எண்ணங்களின் வெளிப்பாடேயாகும்.
நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் வலிமையடைந்து பதிந்து விட்டால், அது என்றும் அந்த ஆன்மாவை, ஆன்மாவின் உடலை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27424169
All
27424169
Your IP: 44.211.26.178
2024-06-22 14:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg