
ஊர்:திருபாண்டிக்கொடுமுடி#கொடுமுடி. கறைசை. தி.த-264+அ-87+மு. அங்கவர்த்னபுரம். பிரம்மபுரி, மேல்கரையநாடு, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், பரத்வாஜசேத்திரம்,
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகுடேஸ்வரர்(சு), ஸ்ரீகொடுமுடிநாதர், ஸ்ரீமலைக்கொழுந்தீஸர்
இறைவி: ஸ்ரீமதுரபாஷிணி, ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீவடிவுடைநாயகி, ஸ்ரீபண்மொழிநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகுஞ்சிபாதநடராசர், ஸ்ரீபிஷாடனர், ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீதிரிபுரசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீவீரநாரயணப் பெருமாள்-மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி. ஸ்ரீதிருமங்கை நாச்சியார். ஸ்ரீபிரம்மா-3முகங்கள். ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீமுருகன்ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன், மயில்மீது,
த.வி: காவிரி கண்ட விநாயகர்
5நிலை3ராஜகோபுரம்.
மரம்-வன்னி.
தீர்-தேவ,பிரம,காவிரி,பரத்வாஜ்
4காலபூஜை. தி.நே.0600-1230,1500-2000
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-0424-222375
ஆதிசேடன்-வாயு போட்டியில் மேருவின் 1000 சிகரங்களில் சிகப்புமணி- திருவண்ணா மலையாகவும், மரகதமணி ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் இரத்தினகிரி மலையாகவும், நீலமணி திருப்பொய்கை மலையாகவும் சிதற வைரமணி இங்கு-லிங்கம் சிகர வடிவில்- கொடுமுடி. பெருமாள் சயன கோலம். பிரமனும் திருமாலும் மகுடேஸ்வரரின் திருமணக் கோலத்தைக்காண வந்து அமர்ந்த மும் மூர்த்திகள் எழுந்தருளியதலம். ஆவணி பங்குனி மாதத்தில் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மேல். பிரமன், கருடன், திருமால், கண்மாடன், பரத்வாஜர், அகத்தியர், வழிபட்டது. ஆடிப்பெருக்கு சிறப்பு. துலா ஸ்நானம் இங்கு செய்வது கங்கா ஸ்நானத்திற்கு சமம். திருமால் பூசித்ததால்- ஹரிஹரபுரம். கருடன் பூசித்து அமுதம் கொண்டுவந்ததால்- அமுதபுரி. கன்மாடன் பூசித்து வயிற்றின் கலங்கம் நீங்கியதால்- கன்மாடபுரம். கறையூர், கறைசை. மலையத்துவச பாண்டியன் திருப்பணி- திருபாண்டிக் கொடுமுடி. பாண்டிய மன்னனின் மகன் குறை நிறைபெற்றதால்- அங்கவருத்தனபுரம். பாண்டு மன்னன் பெரு நோய் நீங்கியதால்- பாண்டுநகரம். பரத்வாசருக்கு நடனக்காட்சி- பரத்துவாச சேத்திரம். சித்திரைபெருவிழா. பரிகாரத்தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
